என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்புப் பழக்கம். பயங்கரமாய் விதண்டாவாதம் பண்ணுவான்.நித்திரை கொள்ளும் போத கதை சொன்னாத்தான் நித்திரை கொள்ளுவான்.கதை சொல்ல வெளிகிட்ட உடனேயே 100 கேள்விகள் கேட்பான்.முதல் கேள்வியிலேயே கதை சொல்லிற மூட் போயிடும்.கதை சொல்லும் போது குறுக்குக் கேள்விகள் கேட்கப்படாது என்று நிபந்தனை போட்டால் நீங்கள் தானே தமிழ்பாடத்தில் சொன்னீர்கள். கேள்வி கேள் கேட்டுத்தெளி என்று மடக்குவான்.எல்லாம் சமாளித்துக் கதை சொன்னால் இது ஏற்கனவே சொன்ன கதை என்பான். சரி கதைக்கு எங்கே போக என்று கேட்டால் நிங்களே கதையை உருவாக்கிச் சொல்லுங்கள் என்பான். தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகக் கதைப்பார்.