Everything posted by புலவர்
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
சுமத்திரனா? சிறிதரனா ?என்றால் எனது தெரிவு சிறிதரன்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இந்தத் தேர்தலில் சுமத்திரன் வென்றால் அடுத்த 2 வருடங்களில் கட்சியை சுக்குநூறாக உடைத்து விடுவார். தோற்றால் தேசியக்கட்சிகளில் தனை;னை இணைத்துக்கொண்டு தன் வழக்கறிஞர் தொழிலைப் பார்ப்பார். அரசியல் பலமில்லாவிட்டால் அவருடைய வழக்கறிஞர் தொழில் எடுபடாது. சிறிதரன் தோற்றால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சுமத்திரன் பாலா அண்ணை போல ஒரு விண்ணன். தமிழ்மக்களுக்கு சுமத்திரன் தேவை என்று சுமத்திரன் புராணம்பாடுவார். தொண்டர்கள் காறித்துப்புவாங்களே என்று சொன்னால் துப்பினால் துடைச்சுக்குவேன் என்று சொல்லுவார். பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது.
-
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : இலங்கை பிடித்த இடம் எது ?
நாட்டாமைகள் எல்லாம் கீழேதான் பெோல இருக்கு!!!!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னுடைய மின்னஞ்சல் பயன்பாட்டில் இல்லை என்று வருகிறது. (This account has been deactivated due to inactivity, )அந்த மின்னஞ்சலை யாழுக்காக மட்டுமே உருவாக்கியிருந்தேன் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாததால் அதை நிறுத்தி விட்டார்கள். பயன்பாட்டில் உள்ள வேறு மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் மாற்றலாமா. அப்படி மாற்றும் போது யூசர் நேம் மாற்றத் தேலையில்லையா?
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொன்னா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நோர்வே செய்வது பிரிட்டிஸ்காரருக்கு கடுப்பேத்தும் செயல்தான்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
படங்களை கொப்பி பேஸ்ட் முறையில் இணைக்க முடியாமல் இருக்கிறது. மேலும் கைத் தொலைபேசி மூலம் இணைய முடியாமல் உள்ளது. கணணிணியில் பயனாளர் பெயர் கடவுச்சொல் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய முடிகிறது.
-
நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி
ரணில் 13 வது திருத்தத்தத்தின் அதிகாரங்களைப் பயன் படுத்தச் சொல்லுகிறார். எங்கட தமிழ் எம்பிமார் 13 வது திருத்தத்தை அமுல்படுத்தச் சொல்லி இந்தியாவுக்கு கடிதம் எழுதுகினம். எனக்கு ஒன்றுமே புரிவில்லை. ரணில் இனப்ரிரச்சினை என்ற ஒரு விடயம் இருப்பதையே கவனத்தில் எடுக்காமல் இருப்பது பொருளாதாரப் பிரச்சினைதான் அதை தீர்ப்பதற்காக வடக்கு கிழக்கை ம காற்றாலைளை அமைப்பதற்காக இந்தியாவிற்கு விற்பதற்கு பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் நாடகமாடுகிறார்.
-
ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது? நிலாந்தன்.
ஒரு பலமான வெளிநாடொன்றின் பூரணமா ஆதரவின்றி தமிழ்மக்கள் சிறிலங்காவின் தேர்தல்கள் மூலம் வெளிக்காட்டும் முடிவுகள் சர்வதேச அந்தஸ்தைப் பெறாது.தமிழ்மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதும். ஒட்டு மொத்த தமிழ்க்கட்சிகளும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பமதும் ஒரே செய்தியைத்தான் சர்வதேசத்துக்குச் சொல்லும். 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது.தமிழக்காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் நின்று கணிசமான தமிழ்வாக்குகளைப் பெற்றிறிருந்தார்.இப்பொழு தமிழ்க்காங்கிரஸ் தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்து வருவதால் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. ஏனைய தமிழ்க்கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றன?
-
ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது? நிலாந்தன்.
ஒரு பலமான வெளிநாடொன்றின் பூரணமா ஆதரவின்றி தமிழ்மக்கள் சிறிலங்காவின் தேர்தல்கள் மூலம் வெளிக்காட்டும் முடிவுகள் சர்வதேச அந்தஸ்தைப் பெறாது.தமிழ்மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதும். ஒட்டு மொத்த தமிழ்க்கட்சிகளும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பமதும் ஒரே செய்தியைத்தான் சர்வதேசத்துக்குச் சொல்லும். 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது.தமிழக்காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் நின்று கணிசமான தமிழ்வாக்குகளைப் பெற்றிறிருந்தார்.இப்பொழு தமிழ்க்காங்கிரஸ் தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்து வருவதால் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. ஏனைய தமிழ்க்கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றன?
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
விஜயகாந் ஒரு நல்ல மனிதர். ஈழத்தமிழர்கள் பால் அதிக கரிசனை கொண்டவர். ஒரு மனிதனின் சாவு எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியவர். அனைத்து மக்களும் இரங்கலைத் தெரிவிக்கிறார்கள்;. தமிழ்சினிமாவுக்கே பொருத்தமில்லாத கநறப்பு நிறத்தில் சினிமாவில் சாதித்துக்காட்டியவர். ஜெயலலிதா கருணாநிதி அரசியலில் உச்ச நிலையில் இருந்தபொழுதே துணிவாக அரசியலுக்கு வந்து குறகிய காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர். தன:னடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு சமமான உணவை கொடுத்துத மனித நேயம் படைத்தவர். ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். உல்லாவற்றுக்கும் மேலாக தமிழக ஊடகவிபச்சாரிகளுக்கு நேராக காறித்'துப்பியவர். தமிழினத்துரோகி கருணாநிதி போல பக்கா அரசியல்வாதியாக இருக்காமல் நல்ல மனித நேயத்தோடு கூடிய மனிதன். கருணாநிதி இறந்த பொழுது ஈழத்தமிழர்கள் மகிழ்சியடைநதார்கள். கப்டனின் இழப்புக்கு எல்லோரும் இரங்கல் தெரிவிக்கிறார்கள். இதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. நஜவாழ்வில் நடிக்கத்தெரியாத மனிதன்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உரம் விக்கிற விலையில மாட்டுச்சாணியை இவர்களுக்கு வேஸ்ட் பண்ணக்குடாது வேணுமெண்டால்......
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
எனக்கு நல்லா வாயில வருது.
-
ஐரோப்பிய பிளிட்ஸ் சாம்பியன் தொடரை வென்ற தமிழ்ச் சிறுமி
https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604 இப்பதான் பிபிசி செய்தியைப் பார்த்துவிட்டு யாழைத்தட்டினேன். செய்தியை இணைக்கலாம் என்று அதற்குள் கோஷான் செய்தியைப் பகிர்ந்து விட்டார்.செஸ் விளையாட்டில் தொடர்ந்து தமிழர்கள் முன்னிலை வகிப்பதற்கு ஏதோ ஒரு காரணம். இருக்க வேண்டும். அவர்கள் மரபணுவில் ஊறியிருக்கிறது.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Ftenor.com%2Fview%2Fvadivel-memes-gif-20634850&psig=AOvVaw0dkYowK-LvTdEZ3L6g_PQ7&ust=1702754157837000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBEQjRxqFwoTCPj6-euTkoMDFQAAAAAdAAAAABAD உனக்குத் தொடர்பில்லை ஓக்கே....ரணிலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னா பாரு!!!
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
என்னையா இது?பெளத்த சாசன அமைச்சுக்கே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இமாலயப் பிரகடனம் பற்றி ஒன்றுமே தெரியாதாம்!!!!!!!
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இந்த இமாலய பிரகடனம் பற்றிய விடயம் யஸ்ரின் ஒருவரைத்தவிர இங்கே கருத்தெழுதிய யாருக்கும் இந்தித்திரி உருவாகும் வரை தெரிந்திருக்கவில்லை. இது தமிழர்களுக்கான தீர்வு முயற்சி என்றால் சம்பந்தப்பட்வர்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கு என்ன தயக்கம்?ஏன் ஒரு தமிழ்பத்திரிகையிலோ இணயத்தளத்திலோ இன்று வரை இதூன் இமாலயப் பிரகடனம் என்று குறிப்பிடக்கூடிய அளவில் செய்திகள் வரவில்லை.பிரிஎவ் அமைப்பே தங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறது.உலகத்தமிழர் அமைப்பால் ஒரு 50 பேர் கொண்ட கூட்டத்தையாவது கூட்டி விடயத்தைத் தெரிவிக்க முடியாத கையறு நிலையில்தான் காணப்படுகிறது.இது போலித்துவாரகாவின் மாவீரர்நாள் உரை போல இந்த இமாலயப் பிரகடனும் பிசுபிசுத்துப் போகப் போகின்றது.இப்படி ஒரு பிரகடனத்திற்கு புத்த பிக்குகள் எ பிரதான எதிர்கட்சிகள் ஆதவளிப்பதில் இருந்தே சந்தேகம் மேலும் வலுக்கிறது. இந்த பிரகடனத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்தாகக் கூறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கறிவைத்து ரணில் போடும் குள்ளநரித்திட்டம்தான் இது.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
சஜித் பீரேமதாசாவின் தேர்தல் விஞ்ஙாபனத்தில் மூன்றில 2 பங்கு இமாலயப் பிரகடனமாம் என்றால் யோசித்துப் பாருங்கள் தீர்வுத்திட்டம் எவ்வளவு பலவீனமானதென்று. அதனால்தான் இந்தத்தீர்வுத்திட்டத்தை பிக்ககள் எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்க். அதுமட்டுமல்லாமல் தமிழர் அடையாளத்தை அழிக்கச் சொல்லி சஜித் சொல்கிறார் அது படிப்படியாக நடைபெறும் என்று சுரேன் சொல்கிறார். இது தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் இல்லை. தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் குள்ள நரி ரணிலின் தீர்வுத்திட்டம்.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
ஆனால் இந்த இமயமலைப் பிரகடனத்தை யாரும் சிலாகித்துப் பேசியதாகத் தெரியவில்லை. துவாரகாவின் மாவீரர் உரை அளவுக்குக் கூட தமிழ் ஆய்வாளர்களோ அல்லது பத்திரிகையாளர்கனோ அது பற்றிப் பேசவில்லை. நாட்டுநடப்புகளை நீண்டகாலமாக அவதானித்து வரும் எனக்கு உலகத்தமிழ்ப் பேரவை சரேன் சிறிலங்காவுக்குச் சென்ற பின்னர்தான் இந்த இமயமலைப் பிரகடனம் தெரிய வந்தது. திம்புப் பிரகடனம் இந்தோ சிறிலங்கா பிரகடனம்>ஒஸ்லோப்பிரகடனம் எல்லாம் உடனே தெரிய வந்த மாதிரி என் இந்தப் பிரகடனம் தெரியவில்லை. இந்த இமயமலைப்பிரகடனம் ஏதாவது தமிழ்ப்பத்திரிகையிலோ அல்லது தமிழ் இணையத்தளத்திலோ வந்திருப்பதாக நான் அறியவில்லை.வேறுயாராவது அறிந்திருக்கிறீர்களா?.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
அதென்னப்பா!இமயமலைப் பிரகடனம். மகாநாயக்கர்களுக்கும் அதுபற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கிறதாம். ஆனால் தெரிய வேண்டிய தமிழ்மக்களுக்குத் தெரியவில்லையே. இமயமலைப் பிரகடனம் என்றால் இந்தியா இதற்குள் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதானே பொருள். யாரெல்லாம் இந்தியாவுக்குகாவடி தூக்குகின்றனரோ அவர்கள் பங்கெடுக்கும் பேச்சுவார்தைகளால் எந்தப் பயனும் கிடையாது . ஆகவே அவர்கள் பங்குபெறத்தேவையில்லை. இது பட்டறிவு.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இந்த சுரேன்தான் சோனியா அம்மையார் கருணையோடு பேசினார். அவர் முகத்தில் கருணையைத்தன்னதால் பார்க்க முடிந்தது என்று அறிக்கை விட்டவர்.இனப்படுகொலைைப் பங்காளிக்கு வக்காலத்து வாங்கின ஆள் பேச்சுவார்ததைக்குப் போனால்என்ன நடக்கும்?. மேலும் உலகத்தமிழர் பேரவையில் இம்மானுவல் அடிகளாரையும் சுரேன் என்ற 2 பேரையும் கொண்ட அமைப்பு. வேறுயாராவுது மக்களுக்கு அறிமுகமானவர்கள் இருக்கின்றார்களா?
-
துவாரகா உரையாற்றியதாக...
ஒரு லோயருக்கு 3 இலட்சம் ஈயூரோக்கள் தேவை என்டுறது நம்பக் கூடியதாக இல்லை. அதுவும் ஓரேயடியாக செலுத்துவதென்பது முடியாத காரியம். 300 யூரே 400 யூரோ என்றால் நம்பலாம். இது சேர்க்கும் காசை ஒரேயடியாகச் சேர்க்க வேண்டும் என்று நினைத்துச் செயற்பட்டவர்களின் வேலையாக இருக்கலாம். ஆனால் இந்தத் தொகை ஒருவர் வாழ்நாள் பூராவும் உழைத்தாலும் சேர்க்க முடியாத தொகையாக இருக்கிறது. நிராஸ் டேவிட் அதிகமாக அறுப்பதை விட்டு விட்டு சம்பந்தப்பட்டவர்களைக் கதைக்க விடுவது நல்லது.
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
முதல்ல மழைக்காலங்களில் வீதியில் எனு; தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை நிலத்ததை செய்யுங்கைய்யா!!!
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்தியா மீட்பரே கிடையாது. தமிழுழு விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அமெரிக்க சார்பு நிலை எடுத்த சிறிலங்காவை தட்டி லவக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதனால் பேராளிகளுக்குப் பயற்சிகளை வழஙக பிரதமர் இந்திராகாந்தி முன்வந்தார்.அப்போது பனிப்போர்காலம். அணிசேரா நாடு என்று இந்தியா சொல்லிக்கொண்டாலும் ரஸ்யாவுடனான நெருக்கம் அதிகமாக இருந்தது. வெளியுறவுச்செயலராக தமிழரான பாரத்த சாரதியை நியமித்தார். பார்த்தசாரதி கடும் அழுத்தம் காரணத்தால் 87 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பொழுது பாரத்தசாரதியை நுpக்குமாறு ஜேஆர் விடப்பிடியாக நின்றார். அதனால் தமிழர்களின் விரோதியான மலையாளி தீக்சிற் உள்ளே கொண்டுவரப்பட்டார். அரசியலில் பழுத்த அரசியல்வாதியான ஜேஆர் ராஜீவ் காந்தியை எளிதாகக்கையாண்டார்.87 ஒப்பதத்தந்துடன் அனைத்து இயக்கங்களும் இந்தியாவின் கட்டளைக்கமைய ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் கலந்தனர்.ஆனால் இந்தியாவின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவுடனேயே மோதும் நிலைப்பாட்டுக்கு வந்தார். 87 நிலமை இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.அன்று அமெரிக்கா இருந்த இடத்தில் இன்று சீனா மிம மிக ஆழமாகக் கால்பதித்து விட்டது.அதற்கான செயற்பாடுகள்தான் போலித்துவாரகா வின் வெளிப்படுகையும் இந்தியாவின் துணையுடன் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்ற காசியானந்தனின் அறிக்கை.அன்று தலைவர் இந்தியாவை நம்பவில்லை அனால் தமிழ்மக்கள் நம்பினார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களும் இந்தியாவை நம்பத்தயாரில்லை. அத்துடன் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்திற்கும் மக்கள் இந்தியாவையோ உலகநாடுகளையோ நம்பத்தயராக வில்லை. துவாராக விடயம் பிசுபிசுத்துப் போனதால் இந்தியா நேரடியாக சிறிலங்கா அரசுடன் பேசவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டார்கள்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நிலாந்தனின் மீட்பர் இந்தியாதான்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இவரும் சரி>>நேசக்கரம் சாந்தியும் சரி இந்திய உளவுத்துநறக்கு இதில் சம்பந்தமில்லாதது மாதிரி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இந்த உரை இந்தியத்தமிழர் அல்லது அங்கு நீண்ட காலம் வாழந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த உரையில் வரும் சில சொற்பதங்கள் காட்டிக் கொடுக்கின்றது.இவரகள் ஏன் இந்த விடயத்தில் இந்திய உளவுத்துறையின் பங்களிப்பை வெளியில் சொல்வதைத் தவிர்க்கின்றன. சுவிசில் பொலிசுக்குத்தான் பவர். கூட்டாட்சி முறை என்பதால் அந்த அந்த மாநிலங்களின் பல முக்கிய முடிவுகளை அவர்கள் எடுக்கலாம். அதுவும் இந்த அரசியல் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவர்களின் பவர் மிக மிக அதிகம்.