Everything posted by Elugnajiru
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
I'm நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன் வடமாகாணத்தின் பொறுப்புள்ள அரச பதவியில் இருக்கும் ஒருவரது மகள் புருஷன் திருமணத்துக்கு முன்பு கஞ்சா போதை வஸ்து பாவித்தது நான் அறிவேன். யாழ் கூடாநாட்டில் போதை மற்றும் ரவுடிகளை பணத்துக்காக வெளியில் எடுத்துவிடும் பெண் வக்கீலின் மகளை அதே ரவுடிக்கும்பல் அப்பெண் காதலித்தவனையே கல்யாணம் செய்யச்சொல்லி தெருவில் மிரட்டப்பட்டார் பெண்ணின் தந்தை நீதிவான் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இதில் தலையிட மாட்டார்கள் காரணம் எல்லா கட்சிகளுக்கும் ரவுடிக்கும்பல் தேவை
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
எனக்குச் சிரிப்பாய் இருக்கு இந்தக்கருத்தை வாசிக்கும்போது காரணம், கூறியது யாழ் வைத்தியசாலையின் அதிகாரி வருபவர்கள் அநேகமாக குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்னும்தெரியாத பாப்பாக்கள் சிங்களம் திட்டமிடுகிறதாம். எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கத் தெரியாதாம் அப்பன் ஆத்தை சரியில்லை வளர்ப்பு சரியில்லை.
-
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
வடக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட என் பி பி உறுப்பினர்கள் வெட்கம் மானம் இருந்தால் பதவியை விட்டு விலகவும். செத்தவன் கையில் வெத்திலைபோல ஒப்புக்குச் சப்பாணிகள்
-
நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
அகலமான தட்டை பாத்திரத்தில் கடல் தண்ணீரை நிரப்பி ஒரு வாரம் வெயிலின் வைத்தால் உப்பு ரெடி. யாழ் குடாநாட்டில் குடியிருப்புக்கும் கடலுக்கும் இடையிலான தூரம் எங்கிருந்து பார்த்தாலும் ஏழு கிலோ மீட்டர்கள்.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
தமிழரசுக் கட்சியில் சிவஞானம் வந்ததே அபத்தம் இவரது திருமணம் நடந்தது நல்லூரில் தற்போது உள்ள மாநரசபைக் கட்டிடம் கலியாண மண்டபமாக துரையப்பாவால் கட்டப்பட்டு முதலாவது திருமணம் இவரது திருமணமே ஆரம்பத்தில் அல்பிரட் துரையப்பா விசுவாசி. இவர் நல்லூர் தொகுதி தமிழரசுக்கட்சியின் பொறுப்பில் இருக்கிறார். யாழ் மாநகரசபையின் 15 ம் வட்டாரத்தின் உறுப்பினர் அம்மன்வீதியில் உள்ள யாழ்பாடி விருந்தகத்தில் அழகு நிலையம் நடத்துகிறான் என்று சொல்லி விபசாரவிடுதி நடத்தியவர். அவரது மருமகன் இப்போது நல்லூரடியில் மாமிசம் விக்கும் உணவகத்துக்குச் சொந்தக்காரன். அந்த உணவகத்தில் முதல் உரிமையாளர் இப்போ நடாத்துபவரது மைத்துனர் அவர்தான் போனமுறை நல்லூர் திருவிழாவுக்க போதைப் பொருளை பொட்டலம் கட்டி வித்து பிடிபட்டு சமூகவலைத்தளங்களில் அடிபட்டவர். இப்ப வழக்கு வம்பு என வர கனடாவுக்கு ஓடிவிட்டார். ஊருக்கு ஊர் இப்போ தமிழரசுக்கட்சியில் சுகிர்தன்கள் உலாவுகிறார்கள். சுமந்திரன் இவ்வாறானவர்களை ஏன் உள்வாங்கியுள்ளார் என்றால் பலவீனமானவர்கள் முதுகில் அளிக்கிறுப்பவர்களே பணிந்து போவார்கள். இப்படி ஒரு பிரச்சனையில் சுமந்திரனும் தெரியாத்தனமாக மாட்டுபட்டவர் அது தனது கார் சாரதியின் மைத்துனர் கஞ்சா கடத்தி பிடிபட ரணில்வரைக்கும் விடையம் சென்று வெளியில எடுத்து விட்டவர். அந்த விடையத்தில் சுமந்திரனின் குடும்பி ரணில் கையில் மாட்டுப்பட்டது சிங்களத் தலைமைகளுக்கு நிறையபேர் கடன் பட்டிருக்கினம் அதுதான் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் பம்முகினம். இதே பாணியைத்தான் சுமந்திரனும் கடைப்பிடித்து ஒரு அடிமைகள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நக்குண்டார் நாவிழந்தார். ஒரு பேச்சுக்காக சொல்லுறன் இந்த அடிமைகளிடம் நாம் கேட்டு எமது தேவைகளை நிறைவேற்றுவதை விட நேரடியாக ஒற்றையாகவோ ஒருமித்தோ சிங்களவனிடம் போய்க் கேட்கலாம்.
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
இல்லை நமல் கொதிக்கமாட்டார் சந்தோஷப்படுவார் காரணம் கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்க்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது என.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
Monument நினைவுச் சின்னத்துக்கும் நினைவகத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தமிழர் உரிமை பெற்றுத்தரப்போகிறார்கள். நம்பிட்டம்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சுமந்திரன் இல்லாத ஒரு தமிழர் அரசியல் களம் எதிர்காலத்தில் வருவதற்கான சூழல் இப்போது உருவாகி இருப்பதை சுமந்திரன் உணர்ந்துள்ளார், அதன் வெளிப்பாடே இவரது இந்த அறிக்கை. நான் நினைக்கிறேன் விசையம் சுமந்திரனது கையை மீறிக்கொண்டு போகிறது. இப்படி இருந்தால் சுமந்திரனை எல்லோரும் மறந்துவிடக்கூடியநிலை வரும் என அவர்நினைக்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது தேர்தல்க் கணக்கு, தமிழரசுக் கட்சி 63327 + சங்கு 22513 மாம்பழம் 7496 --------------- 93336 --------------- இவைகளுடன் சுயெட்சை கட்சி 17 க்குச் (ஊசிச்சின்னம்) சென்ற வாக்குகள் சேர்ந்தால் ஊசி + 93336 121322 வாக்குகள் மேற்கூறிய 121322 வாக்குகளுடன் சைக்கிள் கட்சி பெற்ற வாக்குகள் சேர்த்தால் 149308 வாக்குகள் இந்த வாக்குகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் தமிழ்த்தேசிய அரசியலை நல்ல நேர்மையான முறையில் கடைப்பிடித்தால் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 149308 வாக்குகளைப் பெறலாம். இலங்கைத் தேர்தலில் விகிதாசார நடைமுறையின்மூலம் தேசியக்கட்சிகள் பெற்றுக்கொள்ளக்குடிய வபாராளுமன்ற உறுப்புரிமையை ஒன்றுடன் மட்டுப்படுத்தியிருக்கலாம். தவிர இமூறை எதிர்கொண்ட அனுர அலையை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கலாம். அனுர தரப்புக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அதாவது அங்கஜன் டக்ளஸ் மற்றும் விஜயகலா ஆகியோர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைலிருந்து இம்முறை அங்கஜன் டக்ளஸ் ஆகிய இருவரும் பெற்ற வாக்குகளைக கழித்து வரும் வாக்குகளின் கூட்டுத்தொகையே இம்முறை அனுர தரப்புப் பெற்றுக்கொண்டது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேர்தல் கணக்கு 2020 ம் ஆண்டு, டக்லஸ் 45927 அங்கஜன் 49373 விஜயகலா 6522 மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344. இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள். இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே. இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000. யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள். இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
மண்டையன் குழுத் தலைவருக்கு இன்னமும் குசும்பு குறையவில்லை
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
ஒரு விடையம் சிலவேளை எல்லோருக்கும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம், தாயகத்திலிருந்து வரும் செய்திகள் அவ்வளவு நல்லதாக இல்லை தவிர புலம்பெயர்தேசங்களிலிம் தமிழர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். முதாலவ்து தாயகத்தில் எங்களது அரசியல்வாதிகளது தகிடிதித்தங்களால் வெறுப்படைந்தோர் குறிப்பாக இளையோர் அனுரவுக்கு வாக்களித்தல் என்ன எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இரண்டாவது புலம்பெயர் சிங்களவர்களது ஒன்றுபட்ட நிலைப்பாடு அனுரவர பெரிதும் உதவியது அதை தாயகத்தில் உள்ள அவர்களது உறவுகளும் ஆமோதித்தனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களது உறவுகள் கூறும் அபிப்பிராயங்களுக்கு தாயகத்தில் வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் உதாரணமாக படிப்பிப்பாட்டைவிட்டு வெளிநாட்டுக்குக் கழுவப் போனவர்கள் எங்களுக்குப் புத்தி சொல்லக்கூடாது எனும் சிந்தனை எல்லா அரசியல் தலைவர்களிலிருந்து அடிமட்ட வாக்காளன் வரைக்கும் இருக்குது என அறிய வருகிறது. அனேகமாக இனிமேல் தமிழ் அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவருவதாகில் அனுரவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதே தாயகத்து மக்களது அபிப்பிராயம்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எங்கையிருந்து இந்தக்காசு வந்தது? ஏன் குவாடரையும் கோழிப்புறியாணியையும் மறந்துவிட்டார்கள்? வெற்றிலையை வைத்து குழதைமேல் சத்தியம் வாங்கினார்களா? இனிமேல் தமிழ்நாட்டு மக்களை விமர்சிக்க எவருக்கும் யோக்கியதை இல்லை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்தரப்பின் ஒருசாரரால் கொண்டுவரப்பட்ட பொதுவேட்பாளர் விடையத்தில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருந்தது இதில் இந்தியாவின் நேரடி கைத்தடியாக இருக்கும் மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேமச்சந்திரனது பிரசன்னம் இருக்கும்போதே அவதானித்த ஒன்றுதான். எனினும் யாழ் கருத்துக் களத்தில் வேறு ஒரு திரியில் "பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது வரலாற்றுப்பிழை" எனக்குறிப்பிட்டிருந்ததாக நினைவு. வடக்குக் கிழக்கிலிருந்து வரும் தேர்தல் முடிவு நிலைகளின்படி அரியனேந்திரன் அவர்கள் பெற்ற வாக்குகள், தெற்கின் ஏனைய முண்ணணி வேட்பாளர்கள் வடக்குக் கிழக்கில் பெற்ற வாக்குகளின் கூட்டுத்தொகையைவிடக் குறைவு என்பது புலப்படுகிறது. இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் வடக்குக் கிழக்கின் தமிழ் மக்கள் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வைக்கும் கோரிக்கை எதுவும் மக்களின் ஆதரவுடன் இல்லாதது என சிங்களத்தரப்பு, இந்தியா, சர்வதேசம் ஆகியன நேரடியாகக் கூறாதுவிடினும் அதை எடுகோளாக வைத்தே அரசியல் காய்களை நகர்த்தும். இக்கட்டான சூழலில் எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதுபோல் பாவனை செய்தாலும் மேலும் மேலும் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி தமிழர் கோரிக்கைகளை மலினப்படுத்துவதற்கான முன்னேற்பாடே பொதுவேட்பாளர். காலம் காலமாக அதிகாரத்தில் வருபவர்கள் இரன்டு முக்கிய கட்சியிலிருந்து வந்தாலும் அவர்கள் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி அவர்களது கோரிக்கைகளைச் சிறுக்கச்செய்யும் மூலோபாயத்துடன் நடந்துகொண்டது வரலாறு. இதன்மூலம் சிங்களத் தலைமைகளில் எவரும் தமிழர்க்கான உரிமை விடையத்தில் ஒரேமாதிரியான கொள்கையுடயவர்கள் என உலகம் அறிந்தாலும் தமிலர் தரப்பின் மீதான பிரித்தாளுகையின் காரணமான பலயீனம் எம்மை உய்யவிடாது. மாறாக இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து இன்னுமொரு தரப்பு அதிகாரத்தில் வந்தாலும் அத்தரப்பும் எமக்கான உரிமைபற்றி கவனத்தில் எடுக்காது என்பதை நிரூபிக்கக்கூடிய சந்தர்ப்பமாக ஜே வி பியின் அனுரகுமார தேர்தலில் வந்துள்ளார். ஆனால் அப்படியான் ஒரு நல்ல வாய்ப்பையும் தமிழர்தரப்பு இல்லாதொழித்து சயித் அல்லது ரணில் எனும் தெரிவிலிருந்து மாறாது மாறி மாறி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண் அல்லிப்போட்டது மட்டுமன்றி, "அரகலயவைத்" தொடர்ந்து ராஜபக்சேக்களைச் சிங்களவர்களது கோபத்திலிருந்து தப்பவைத்த ரனில் மேலிருந்த கோபத்தின் வெளிப்பாட்டின் காரணமாக முண்ணணிப்போட்டியாளராக வந்த அனுரவைத் தொற்கடிக்கக் காரணமாகி, சிங்கள இனம் இத்தீவில் வாலும் இன்னுமொரு இனம் எனினும் அவர்களது அபிலாசைகளிலும் மண் அல்லிப்போட்டுவிட்டார்கள். கூடிய விரைவில்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுவெளியில் நாம் இப்போது விமர்சிக்கும் தமில் அரசியல்வாதிகளை அகற்றி தமில் மக்கள் ஜனநாயக முறையில் தங்களது பிரதிநிதிகளை தேர்வுசெய்து நாடாளுமன்றம் அனுப்பக்கூடிய சந்தர்ப்பத்தையும் இழந்து நிற்கிறது. ராஜபக்சேக்களது அரசியலை முறியடித்து அவர்களைக் களத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடிய பழிவாங்கும் சந்தர்ப்பம் தமிழர்க்கு இருந்தும் அதைக் கோட்டைவிட்டுவிட்டதும் இத்தேர்தல்மூலம் நடந்துள்ளது. ரணில் அல்லது சஜித் யாராவது பதவிக்கு வரவேண்டுமென்பது தமிழர்களது அடிப்படைப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நல்நோக்கத்துக்காக இல்லை, மாறாக குறுகியகாலநலஙளுக்கானதேயாகும். இங்கு புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் எவ்வளவு குத்திமுறிந்தாலும் அவர்களது நடைமுரை அரசியலை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதே நியாயமானதும் நிதர்சனமானதுமாகும். எனினும் தொலைபேசிக்கும் கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாத வாக்களர்களையும் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை பியதாசாவே நினைத்துக் கவலைப்படுவார். எம்மால் எழுத்துக்களில் மீது விரல்களால் குத்தி எமது ஆதங்கத்தை மட்டும் தெரிவிக்கலாம். தீர்மானம் செய்யவேண்டியவர்கள் அவர்கள், நாம் அவர்களிலிருந்து விலத்தியிருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி. எமது வளம்பெற்ற வாழ்க்கைக்கு உதிரம் சொரிந்த மாவீரநினைவேந்தலுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயக அரசியல் தமிலர் விடிவு ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதே தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளுக்கு நாம் செய்யக்கூடிய உதவி. ஆகவே இது ஒன்றும் பெருய விடையம் இல்லை.
-
12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
மேற்குலகில் இப்போது ஸ்பீட் எனும் வாகனங்களில் வேகத்தை அதிகரிப்பதற்கு பெட்ரோலுடன் மேலதிகமாகச் சேர்க்கும் ஒரு திரவத்தை போதைக்காக இழுக்கிறார்கள். அதன் வெற்றுச் சிலின்டர்கள் தெருவோரம் எங்கும் பரவிக்கிடக்குது. அரசாங்கம் அதைப்பற்றிக் கண்டுகொள்வதில்லையோ எனக் கேள்வி எழுகுது.
-
அரியம்: பாக்கியமா, பலியாடா?!
சிறீலஙாவின் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தியது தமிழர் அரசியலின் வரலாற்றுப்பிழை. அனைத்து தமிழர் அரசியல் கட்சிகளும் ஒன்று சேராது இப்படியான முடிவை எட்டியது, பொது வேட்பாளர் ஓரிரு பத்து விகித வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் தமிழர் அரசியல் செய்வோரது நிலைப்பாட்டை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என அனைவரும் கூறும்நிலைக்குத் தள்ளப்படுவர். இந்தியா, ரணிலை பதவியில் வரவிடாது இராஜபக்சவுக்குப் பதுலாக அனுரகுமாரவைக் கொண்டுவர நினைக்கிறது, ஆனால் அனுர குமார ஒருபக்கம் சீன ஆதரவுநிலையை உடையவர் எனிலும் அனுரகுமாரவை எதிர்காலத்தில் சரிக்கட்டலாம் எனநினைக்கிறது.
-
சம்பந்தர் காலமானார்
நான் சிலவேளை உங்களைவிட வயது முதிர்ந்தவனாக இருக்கலாம் தவிர சுமந்திரன் உங்களைவிட வயது முதிர்ந்தவராக இருக்கலாம், அப்படி இருப்பதே எனது விருப்பமும்கூட, எனக்கு நன்றாகத் தெரியும் சுமந்திரனது சாவுச்செய்திய நான் அறியப்போவதில்லை ஆனால் நீங்கள் அவர் முதுமையுற்று இருக்கும்போது பின்பு அவர் மறையும்போது இருக்கக்கூடும் அப்போது பார்த்துக்கொள்ளுங்கள் நான் குறியதில் ஏதாவது நடந்தால். தவிர சிலவேளை நீங்களும் காலப்போக்கில் இதை உணர்வீர்கள். அபோது யாழ் கருத்துக்களம் உங்கள் நினைவில்வரும். மற்றப்படி ஒன்றுமில்லை.
-
சம்பந்தர் காலமானார்
புலிகளது சமாதான காலத்தில் அப்போதைய கூட்டமைப்பினது நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனேகமாணோர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள். அந்தக் காலத்தில் சம்பந்தன் ஐயா அவர்கள் பின்லாந்துக்குச் சக உறுப்பினர்களுடன் வந்திருந்தார். அசாத்திய நினைவாற்றல் உதாரணமாக எந்தவிதக் குறிப்புகள் இல்லாமல் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் சொல்லுவார். நாங்கள்தான் அவர்கூறும் தொலைபேசி இலக்கங்களை அழுத்திக்கொடுப்பது. அந்தவேளை சுமந்திரன் அவருடன் தாயகத்தில் பணியாற்றியிருந்தார் என நினைக்கிறேன். அதாவது சட்டத்தரணியாக. சம்பந்தன் ஐயா அடிக்கடி சுமந்திரனுடன் தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைப்பார் அந்த வேளையில் இலகுவான வாட் அப்போ வைபரோ இருப்பதில்லை நேரடி அழைப்புத்தான் அனைத்தையும் புலிகளது கிளைதான் ஏற்பாடு செய்திருந்தது. அவர் பலமுறை சுமந்திரனுடன் பேசும்போது உடனிருந்திருக்கிறேன் மரியாதை கருதி அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால் அவர் சுமந்திரனை விளிக்கும்போது முழுப்பெயரும் சொல்லி அழைப்பதில்லை சமன் சுமன் என ஒரு குழந்தைப்பிள்ளையை கூப்பிடும் பாசத்துடன் அழைப்பார். ஏதோ கடிதங்கள் மற்றும் வழக்குகள் சம்பந்தமாகக் கதைக்கிறர் என நான் நினைப்பதுண்டு. பிற்காலத்தில் அந்தாளது புகழுக்குக் கொள்ளிவைக்கும் ஒரு ஆளாகக் கட்சிக்குள் சுமந்திரன் என்பவர் நுளைவார் என்பதை யார் கண்டது. சம்பந்தன் ஐயாவது பிற்காலத்தில் அவரது அனைத்துச் செயல்களுக்கும் பின்னாடி நின்றது சுமந்திரந்தான் அறிக்கை விடுவதிலிருந்து அரசியல் முடிவுகள் எடுப்பதுவரை தன்ர எண்ணத்துக்கு அவரது பெயரைச்சொல்லி அந்தாளை நாசமாக்கிப்போட்டார். சம்பந்தன் ஐயா ஒரு அரசியல்வாதியாக இருந்து தமிழர்கள் விடுதலைக்காக இறுதிவரை நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் அவரது பூதவுடலை பொகழுடலாகத் தமிழினம் தாங்கியிருக்கும். தந்தை செல்வா எனும் ஒரு நேர்மையாளனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் நேற்றுவரை உயிருடன் இருந்த மூத்த தலைவர் எனும் மிகப்பெரிய பெருமை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கு, ஆனால் அதை எல்லாம் அவர் பெருமைப்படும்விதத்தில் தமிழர் மனங்களில் விதைக்காது வெறுப்பினை விதைத்துவிட்டார். ஆனால் இனிவரும் காலங்களில் மூன்று சந்ததிகள் கண்ட ஒரு அரசியல்வாதியைக் காண்பது அரிது. சுமந்திரனுக்கும் சாவு வரும் அது இதைவிடக்கேவலமானதாக இருக்கும் என்பதை இன்று அவர் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் திருந்தமாட்டார். சம்பந்தன் ஐயா யாழ் களத்தின் உறுப்பினர்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பதிவிடுவது வேதனையின் வெளிப்பாடே ஒரு அங்கலாய்ப்பே. இனிமேலாவது உங்களைப்போன்ற தலைவர்கள் தமிழர் உரிமை, தமிழர் விடுதலை, தமிழர்களது கண்ணியம் இவைக்காகப் பாடுபடவேண்டும் எனும் போரவாவினாலேயே, அதை விடுத்து எங்களுக்கு உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் இல்லை. நாம் ஒரு நேர்மை மிக்க தலைவனை எமது வாழும் காலத்தில் கண்டுள்ளோம் சரி பிழைகளைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் தனை தவறுகளையும் ஏற்றுத்தான் அத்தலைவன் தனக்குத் தானே தீர்ப்பை எழுதிக்கொண்டான். அதில் ஒருவிகித உண்மையாவது எம்முடன் அரசியல் செய்வோரிடம் நாம் எகிர்பார்ப்பது தவறில்லையே. சம்பந்தன் ஐயா உங்களுக்கு எங்கள் "இறுதி வணக்கங்கள்"
-
சம்பந்தர் காலமானார்
தமிழர்கள் அனுபவத்தில், இப்படி இறந்த ஒருவரை துக்கிப்போட்டு மிதித்ததை நான் அறியவில்லை. கடந்த ஒரு பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன் "அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவுடன் தமிழர்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவோம் எனக்கூறியதாகவும் ஆனால் அவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் எனவும் கூறியிருந்தார். உண்மையில் சம்பந்தன் தரப்பு போர்க்குற்ற விசாரணையை சர்வதேசத்திடம் வலியுறுத்தாத காரணமும் இதுதான். அப்படி வலியுறுத்தி, போர்குற்றவிசாரணை வரும்போது தானும் சாட்சி சொல்ல வேண்டிவரும் என அமெரிக்காவும் இந்தியாவும் பயமுறுத்தி வைத்ததே. இந்த மனிசன் இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருக்கலாம் சிலவேளைகளில் அப்படி ஒரு விசாரணை வருமாகில்? அவரையும் ஏத்தியிருக்கலாம். செத்துப்போயிட்டார் இனிமேல் சுமந்திரன் ஏற்கனவே அறிக்கை விடப்பாவிக்கிறன் எண்டு சில வெள்ளைப்பேப்பரில கையெழுத்து வாங்கி வைத்திருகிறார். சுமோ அந்தப்பேப்பரில சம்பந்தரின் உவர்மலையில் உள்ள சொத்துப்பத்துக்களை எழுதி உயில் முடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே ரவிராஜ் அவர்களது மனைவியிடம் இப்படிக் கையெழுத்து வாங்கித்தான் பாராளுமன்றக்கதிரையை ஆட்டையைப்போட்டவர். மற்றப்படி சம்பந்தர் "செத்துப்போனது" பற்றி எதுவும் சொல்லத்தேவை இல்லை.
-
கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி: விமான நிலையத்தில் பரபரப்பு
அப்படி ஒரு காயமும் இல்லை முகத்தில் பட்டி டிங்கரிங் செய்த பெயின்ற் எல்லாம் அடிச்சவரின் விரலில அப்பிப்போட்டுது.
-
மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
இவர் நாட்டின் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் குஜராத்திலோ அல்லது உ பியிலோ சரியாகத் தெரியாது பூசாரிகள் ஆடு மேய்க்கப்போன தலித் சிறுமியை கோவிலுக்குள்ள கூட்டிக்கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்தவயள். ஆனால் ப ஜ க ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என அமித் ஸா சொல்லுறார். இதில் என்ன வேடிக்கை என்றால் இப்பவும் பஜ க தான் ஆட்சியில இருக்கு என்பதை அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் என்பதை இலகுவாக மறந்துவிட்டினம். ஒடிசாவில போய் தமிழ்நாடு வடநாட்டை வஞ்சிக்குது என மேடியில் பேசியதற்கு தமிழக ப ஜ க ஒத்தூதிகள் எதுவும் சொல்லாமல் கதைவை அடிச்சுச்சாத்திவிட்டு கொல்லையில ஒழிச்சிட்டினம்.
-
மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
யாரோ கிரவுட் எண்டு சொன்னாங்கள் ஆனால் யாரையுமே காணோம்.
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
திரு கபிதான் அவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமெனில் யாராவது எதையாவது எடுத்துவிடுங்கோப்பா. இந்திய அமைதிப்படையின் தோல்வியும் ராஜீவ் காந்தியின் சாவுமே முள்ளிவாய்க்காலின் முகவுரையாகும். ஆனால் இந்தியா முள்ளிவாய்க்கால்மூலம் புலிகளை வெற்றிகொண்டிருக்கலாம் ஆனால் தமிழர்களையோ இல்லையேல் சிங்களவர்களையோ வெற்றிகொள்ளவில்லை என்பதே நடப்பு நிலமை.
-
சர்வதேசம் ஏற்றுக் கொள்ளாத தீர்மானம்! வருந்ததக்க விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும் சுமந்திரன்
அடுத்து என்னுடைய திட்டம் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகி வேலை வெட்டி இல்லாமல் சும்மா வீட்டில இருக்கிற ஒரு புரக்கிராசியைப் பிடித்து தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுக்கூடம் நிர்வாகக் குழுக்கூட்டம் இவை போன்றவை நடக்கவிருந்தால் நீதிமன்றில் ஒரு இடைக்காலத் தடை வாங்கி இவங்களை ஓட ஓட விரட்டுவத்துதான். தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகளின்படி ஒரு தலைவர் ஆக்கக் கூடியது இரண்டு வருடத்துக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது என்பதாகும் ஆகவே இனிமேல் எது நடந்தாலும் புதிய தலைவர் செயலாளர் தெரிவின் பின்பேதான் கூட்டமோ கும்மாளமோ நடக்கவேணும் எனக் கட்டையைப் போட்டல் ஆனந்த சங்கரியர் கூட்டணியை முடக்கினதுபோல தமிழரசுக்கட்சியும் முடங்கிப்போயிடும் இதை எவர் வேண்டுமானாலும் பொது நல வழக்காக நீதிமன்றில் வாதிடலாம் அதுக்குபின்பு எல்லாம் ஒழுங்கா நடுக்குதா பார்க்கலாம்
-
தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்
இனிமேல் எவர் வந்து எமக்கு அரசியல் நடாத்தினாலும் எடுபடாது, அனைத்துலகத் தொடர்பகம் மற்றும் தமிழர் ஒருங்கமைப்புக்குழு ஒரு சில கோமாளிகளால் நடாத்தப்படும் பஜனைக்கோஸ்டி இவர்களால் தாம் ஒரு காகிதப்புலிகள் எனத் தம்மை நிரூபிப்பதைவிட வேறு எதுவும் செய்ய முடியாது. புலிகளது காசை அடித்தவர்களைப் பார்த்து வடை போச்சே எனக் கொட்டாவி விடுபவரும், புலிகளது காசை அடித்தவர்களைச் சனம் கேட்டால் இப்படி அமைப்புகளுக்குப் பின்னால் நிண்டால் கேக்கிற சனம் பயப்பிடும் எனவும் உலவும் இரண்டும் கெட்டான் கூட்டங்களது கூட்டணிதான் இவர்கள். அதுக்காக தலைவருக்கு திவசம் செய்யுறன் என இவ்வளவு நாளும் இருந்திட்டுப் புறப்பட்டவர்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை. அவர்களுக்கும் ஏதோ ஒரு தேவை இருக்கு, காணொளிகளில் தனது நேர்காணல் தொடர்ந்து வந்ததில பயபுள்ளை புளகாங்கிதம் அடைந்து அகலக்கால் வைக்கிறார். மேற்கூறியவர்களுடன் கனகாலம் பயணம் செய்தவயளில கனபேர் விட்டுட்டு ஓடிப்போயிட்டினம் இப்ப மிஞ்சி இருக்கிறவையள் தேவையில்லாமல் மாட்டுப்பட்டுட்டம் என முளிச்சுக்கொண்டு நிக்கினம், இவையளை உசுப்பேத்திவிடுகிறது பழைய காசடிக்கூட்டம் தங்கட பாதுகாப்புக்கு புலிகள் பெயரில ஒரு முகாம் தேவை இல்லையெண்டால் கண்டவன் நிண்டவன் எல்லாம் தெருவில போக விடமாட்டாங்கள் என்பது இந்தக் கள்ளக்கூட்டத்துக்குத் தெரியும். ஆனால் அண்ணன் மகனும் தேவையில்லாது இதுக்குள்ள மாட்டுப்பட்டு நிக்கிற கள்ளஙள் அங்கையும் ஒளிஞ்சு விளையாட மடம் கட்டுகிறார். இல்லாதுவிடில் பதினைந்து வருசம் இல்லாது சித்தப்பா பாசம் இப்ப எங்க வந்தது. நாலு காணொளியோட தம்பிக்கு மண்டைக்குப் பின்னால ஒளிவட்டம் தெரியுது என யாரோ உசுப்பேத்திவிட்டுட்டாங்கள். பையன் டென்மார்க்கில ஒரு பாடசாலை வைத்து நடாத்திறதாக் கேள்வி கவனம் "கட்டியிருக்கும் கோமணமும் பறிபோயிடும்"