Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Elugnajiru

  1. குமரவேலு குமரகுருபரன் அவர்களிடம் இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். உங்களது உறவினர் யாராவது யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்களிடம் சொல்லவும் நேரடியாகப்போய்க் கதைக்கச்சொல்லி. ஒப்புகை கொடுக்கும்போது வரையறுக்கப்பட்ட உரிமையையும் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடியதானதாகக் கொடுக்கலாம் எனக்கு வெளிநாட்டு குடியுரிமைதான் முதலில் இருந்தது இப்போது இரட்டைக்குடியுரிமை ஆனால் நான் ஒரு சொத்து வாங்கும்போது வெளிநாட்டுக்குடியுரிமைதான் இருந்தது ஆனால் எனது மனைவி இலங்கைக்குடியுரிமையை இதுவரை இழக்காததனால் அவரது பெயரையும் இணைச்சு உறுதி முடித்ததால் எதிர்காலத்தில் சிக்கல் எதுவும் வராது.
  2. ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான். பார்க்க சட்டத்தரணி தவராஜா அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு. இப்போதான் சுமந்திரன் சரியான முகவரிக்குப்போன கடிதமாக அங்க இங்க எண்டு திரிஞ்சு செல்லிடம் சென்றிருக்கிறார். மாகாப்பிரபு இங்கையும் வந்திட்டியளோ எனச் சிங்களவன் தலையில கைவைக்கப்போகிறான். ஆமை புகுந்தவீடும் ஆமினா புகுந்தவீடும் உருப்படாது எனச்சொல்வது சுமந்திரன் விடையத்தில சரியாகப்படுகுது. அதுசரி நீதிமன்றில் குட்டையை குழப்பிவிட்டு கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏன் போனவராம் கடவுளே கண்பியூஸ் ஆகப்போகிறார். இந்த மேதாவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரெல்லோ. அப்ப இவர் தனது இனத்துக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமயத்துக்கும் விசுவாசம் இல்லாதவரா?
  3. முதல் புலம்பெயர்ஸ்களைத் திட்டுவதை விடுத்து உங்கட பிரச்சனைகளைப்பற்றி முதலில் பொதுவெளியில் பேசுங்கோ. புலிகளது புலம்பெயர் முதலீடுகளை ஆட்டை போட்டவர்கள் மற்றும் சுரேன் செரேந்திரன் கோஸ்டியை விமர்சிப்பதைத் தவிர இவர்கள் யாரைக்குறிவைக்கிறார்கள். தமிழர்பகுதியில் போதைப்பாவனை விபச்சாரம் அதிகரிப்பு இவைகளைப்பற்றிபேசாது புலம்களை விமர்சனம் செய்வது அவர்களுக்கும் தாயகத்துக்கும் இடயிலான சிறிதளவான தொடர்பையும் அறவே இல்லாதொழிப்பதற்கான முயற்சி இந்துக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் யார் நகரின் முதல்தரப் பாடசாலையில் படிப்பதற்காக அரசாங்கத்தால் ஒழுங்குசெய்யப்படும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் ஏழை மாணவர்களுக்கான வாய்ப்பைத் தடிப்பறித்து அதன் வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணி அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பணம் படைத்தவர்களுடன் அந்த ஏழை மாணவர்களைப் போட்டிபோடப்பண்ணி அவர்களுக்கான சந்தர்ப்பங்களை மறுதலித்த ஒரு கூட்டம் யாழ் குடாநாட்டில் வாழ்கிறது அந்தக்கூட்டத்தின் அங்கத்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கல்லூரியில்தான் படிக்கிறார்கள். அதுதவிர இந்துக்கல்லூரியில் அனுமதி பெற கையூட்டுப்பெற்ற அதிபர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்ட கதை இன்னும் நினைவிலிருந்து போகவில்லை. அப்போ அங்கே கையூட்டுப்பெற்று பாடசாலை அனுமதி பெற்றவர்களும் படிக்கிறார்கள் ஏழை மாணவர்களது வாழ்வில் விளையாடி வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணியவர்களும் இருக்கிறார்கள். தவிர யாழ்ப்பாணத்தில் இப்போது ஆவாகுழு என இயங்கும் வன்முறைக்குழு சன்னா குழு எனும்பெயரில்தான் இயங்கியது அதன் வன்முறைத்தலைமை படிச்சது யாழ் இந்துக்கல்லூரியில்தான் அவனது பெயர் பிரசன்னா இப்போ சுவிஸ் நாட்டில் வாழ்கிறான் அவனது எடுபிடிகளாகத் திரிந்தவர்களில் பலர் யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்கள். அதைப்பற்றியும் ஒருக்கால் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் பட்டிமன்றம் நடாத்தலாம்தானே. ஏன் கடந்த பத்துவருடத்துக்கு மேலாக மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழரசுகட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்தமாதம் நடந்த தலைமைக்கான தேர்தலில் முறைகேடுகள் நடந்தன யாப்பு விதிகளின்படி இத்தேர்தல் நடைபெறவில்லை என வழக்காடினார்களே அப்போதுதான் அந்த யாப்பில் என்ன எழுதி இருக்கு எனப்பொதுவெளிக்குத் தெரிந்தது. அதில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் இரண்டுவருடத்துக்குமேல் பதவி வகிக்க முடியாது. பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை நூத்தி அறுபதுபேர்தான் ஆனால் வாக்களித்தவர்கள் அதைவிட அதிகம். ஆனால் நீதிமன்றம் சென்றவர்கள் என்ன சொன்னார்கள் எனத்தெரியுமா நாம் தெரிவுசெய்த செயலாளரை ஏற்று நடைமுறைப்படுத்தினால் சிறீதரன் தலைவராக முடியும் என. அப்படியாகில் தங்களுக்குச் சார்பாக நடந்தால் யாப்புவிதிகள் தூக்கிவீசப்படும் . இதைபத்தியும் யாழ் இந்து பேசலாமே. ஏன் புலம்பெயர்களை நஞ்சு குடித்துச்சாகச்சொல்லுறியள். தமிழர் பகுதியிலிருந்து மேல்படிப்புப்படித்து வெளிநாடுகளுக்குப் புறப்படுபவர்களில் இந்த முதல் நிலைப்பாடசாலைகளில் படித்தவர்களே அதிகம் அதைப்பற்றியும் பேசலாமே காரணம் கணக்கெடுத்தல் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து வெளியேறியவர்களே அதிகமாக இருக்கும். அதுசரி யாழ் இந்துக்கல்லூரி எனப்பீத்திக்கொள்கிறார்களே இவர்கள் என்ன அப்பாடசாலையின் அசிரியர்கள் படிப்பித்ததுடன் போய் பரீட்சை எழுதிப் பாசாகினவயளோ யாழ்ப்பாணத்தில் மூலை முடுக்குகளில் உள்ள ரியூட்டரிக் கொட்டில் வாங்கில் தேய்க்காமலா இருக்கினம்.
  4. இப்போ யாழ் களத்தில் எந்தக்கருத்துக்களையும் பகிரமுடியாது. அப்படி ஏதாவது கருத்தெழுதினால் சாணி கரைச்சு முகத்தில அடிக்க நிறையப்பேர் ஒரு கைபார்ப்பம் வரட்டும் என வரிசைகட்டி நிற்கிறார்கள். கொஞ்சக்காலத்துக்கு யாழ் களத்தைவிட்டு விலகி இருப்பது நல்லம் என நினைக்கிறன். அங்க என்ன மாதிரி?
  5. நன்றி, இது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தைவிட அதிகமாக இருக்கலாம் (ஏன் இருக்கலாம் எனக்கூறுகிறேன் எனில் பதின்மூன்றைபற்றி இப்படி மேலே குறிப்பிட்ட பொதிபோல் எவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை) நிச்சயமாக மேலே கூரிப்பிட்ட விடையங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்து அவை அனைத்தும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாம் பல விடையங்களில் முன்னேற்றமடைந்திருப்போம். இதைத்தான் ஜெகத் கஸ்பார் சொன்னாரோ "தமிழர்கள் தட்டையான மனநிலையுடையவர்கள்" என காலம் கடந்துவிட்டது. இப்போ வீட்டுக்கட்சி யாருக்கு என அடிபடுகிறோம்.
  6. எப்படி இருக்கும் இவர் ஜி எல் பிரிசுடன் சேர்ந்து தயாரித்த தீர்வுப் பொதி அது எப்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டது ? அதனது பிரதி ஏதாவது யாரிடமாவது இருக்குதா? அல்லது கிட்டர் சுவிஸில இருந்து கப்பலில் வரும்போது ஒரு சமாதனப்பொதியைக் கொண்டுவந்ததாக புலிகள் சொன்னார்களே அதுபோல பொய் புளுகா? ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா? சுத்தமான பொய்
  7. புலிகளது பிரசன்னம் இலங்கைத்தீவின் அரசியல் களத்திலும் போராட்ட களத்திலும் தவிர புலம்பெயர் தேசம்க்களிலும் 2009 பின்பு படிப்படியாக அற்றுப்போய்விட்டது. அதன் பின்பு இலங்கைத் தீவில் தமிழர் அரசியல் பேசுபவர்கள் ஜனநாயக வழியிலேயே நாம் தமிழர் உரிமையைப்பெற்றுக்கொள்ளப்போராடுகிறோம் என புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு எனும் மிகப்பெரிய செல்வாக்கான அமைப்புக்குள் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர் அவர்கள் இதுவரை காலமும் நடாத்திய போராட்டம் அதன்மூலமாகப் பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை இவைகளைப்பற்றி கணக்கில் எடுத்தால் எதுவுமே இல்லை. இதில் ஒருசில தலைவர்கள் சொல்லுகிறார்கள் சிங்களவரது மனதை வெல்லவேண்டுமென அதற்காக ஒரு தலைவர் சிங்களத் தலைவர் ஒருவரது கைகளிலிருந்த சிறீலங்காவின் தேசியக்கொடியை யாழ்ப்பாணத்தில் பறித்துக்கூட அசைத்துக்காட்டினார்.இன்னுமொருவர் நான் எனது சிறுவயதில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து விளையாடி படித்து மகிழ்ந்ததை எனது வாழ்வின் பெரும்பேறாகக் கருதுகிறேன் என சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார். தவிர புலிகள் முஸ்லீம் மக்களை யாழ் குடாவிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு எனக்கூறினார். தவிர புலிகள் பல சந்தர்ப்பங்களில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனவும் கூறினார் ஆனால் இவைகள் அனைத்தும் செய்தும் சிங்களவர் மனம் இன்னமும் மாறவில்லை. ஆக இப்போது கடந்த 2009 ல் இருந்து புல்கள் அகற்றப்பட்ட தமிழர் அரசியல் பரப்பில் விரும்பியபடி அரசியல் செய்து தமிழர் உரிமையைப்பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை அதுவும் ஜனநாயக வழிமுறைகளில் தழ்க்கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ளது. புலிகளதும் ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களது காலமும் கிட்டத்தட்ட முப்பதுவருடமாகும் இதில் புலிகளைத் தவிர ஏனைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் புலிகளது அச்சுறுத்தல் அல்லது போர்க்கால ஜனநாயக விதிமீறகளால் இல்லாதொழிக்கப்பட்டார்கள். ஆனால் புலிகளது இராணுவ மற்றும் அரசியல் (சிலர் நினைக்கலாம் அவர்களிடம் என்ன அரசியல் நிலைப்பாடு இருந்த்தது என அப்படி எண்ணுபவர்கள் அவர்களும் ஏதோ அரசியல் என காமடி செய்தார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்) ஆகியவற்றின் உச்சம் எனப்படுவது 1994 ந் பின்னதான காலப்பகுதியாகும் அதில் அதி உச்சம் எனப்படுவது ஆனையிறவின் வீழ்ச்சி அதன்பின்னதான ஒரு சில போர்முனைகள் அரசியலில் பல சர்வதேசநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகள். அவை அனைத்தும் 2009 டன் இல்லாதொழிந்துவிட்டது ஆக ஒரு பதினைந்து வருடத்துக்குள்ளான புலிகளது காலம் விலகி 2009 ல் இருந்து 2023 வரைக்குமான தமிழர் அரசியல் கட்சியினரது ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டம் எதையாவது பெற்றுத்தந்ததா? மாறாக போதைவஸ்துப்பாவனை அதன் விற்பன சர்வதேச சந்தைக்குக் கைமாற்றிவுடும் தளம் ஆகியனவற்றின் சொர்க்கபுரியாக இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதி மாறியிருக்கிறது. வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் நீங்கள் நாடாளுமன்றில் தமிழர் இனப்பிரச்சனையை மட்டும் கதையுங்கோ அது தீர்ந்துவிட்டால் தமிழ்ர் பகுதியில் பாலாறும் தேனாறும் ஓடத்தொடங்கும் எனச்சொல்லியா அனுப்பிவிட்டவர்கள். சரி அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தாலும் இவர்கள் யாருக்காக உரிமை எடுத்துத் தரப்போகிறார்கள் மூளை மந்தமாக்கப்பட்ட இளையோரை உள்ளடக்கிய ஒரு சந்ததிக்கான உரிமையையா எடுத்துத் தரபோகிறார்கள்? நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப்பிரச்சனையில் போதைப்பாவனைப் பிரச்சனை மதன்மையாக இருக்கின்றது இந்தப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக்கட்சிகளும் வேற்றுமை சுயநலம் பாராது மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இந்தப்போதை அரக்கனிடமிருந்து இலையோரையும் எதிர்காலச்சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் இல்லாத தமிழர் அரசியல்வாதிகள் எமக்கான தீர்வுக்காக நேர்மையாகப் பொராடுவார்கள் என எப்படி உறுதிகூறமுடியும். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனையை வீரியமாக எதிர்கொண்டு போராடி வெற்றிபெற்றால் நீண்டகாலமாக இருக்கும் தமிழர் உரிமைதொடர்பான பிரச்சனைக்கான போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுபவம் கிடைக்கும் மாறாக சிங்களம் இவர்களது போராட்டம் வலிமையானது இதனை நாம் தட்டிக்கழிகமுடியாது எனப்பயப்படும் தவிர நாம் கையேந்தி நிற்கிறோமே எமை அழித்த இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது போராட்ட அணுகுமுறைகளுக்கு நேர்மையான முறையில் முகம்கொடுக்கும். அதைவிடுத்து ஒரு கட்சியின் தலைவர் செயலாளர் பதவிக்காக காலை வாரிவுடும் நிகழ்ச்சியில் எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிகளை உள் இழுத்து உங்களது வக்கிரத்தை வாந்தி எடுக்காதீர்கள் புலிகள் ஜனநாயக விரோதிகளாக போர்க்குற்றவாளிகளாக இருந்துவிட்டுப்போகட்டும் அத்வே உண்மையாகவும் இருக்கட்டும் சர்வதேச விசாரண என வரும்போது உங்களது ஜனநாஜகத்தின்மீதான கரிசனையை விசாரணை ஆணையத்தின்முன்பு வையுங்கள் அதுவரை அந்தக்குற்றச்சாட்டுகளுக்கான சாட்சிகளைச் சேகரியுங்கள் நிரல்படுத்துங்கள். உண்மை காலம் கடந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.
  8. சில வேளைகளில் இவர்களை நினைத்தால் சிரிப்பாய்த்தான் இருக்கு. பாகிஸ்தானிலிருந்த வந்த ஏ கே 47 ஆயிரம் ரவைகள் அது எப்படியப்பா பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ஒரு ஈ காக்க கூட உள்நுளையமுடியாது உண்மையும் அதுவே. அப்படி இருக்கையில் எப்படி அது கேரள விளிஞ்சியம் வரைக்கும் பயணம் செய்யுது? சரி அதைவிடவும், விடுதலைப்புலிகள் அமைப்பு சிறு கைத்துப்பாக்கி முதற்கொண்டு கனரக ஆயுதங்கள் வரைக்கும் பெருந்தொகையாகக் கையாண்டவர்கள் அதைவைத்தே அவர்கள் எதிரிகளைத் தோற்கடிக்க முடியவில்லை ஒரேயொரு ஏ கேயை வைத்து இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்? இப்போது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டத்தின்மீது அறவே நம்பிக்கை இல்லை என இந்தியாவுக்குத் தெரியும் உண்மையும் அதுதான். அப்படி ஒரு ஆயுதப்போராட்டம் வருமாகில் அது ஒன்றும் ஏ கே 47 தூக்கிப்போராடும் போராட்டமாக இருக்காது ஏ ஐ தொழில்நுட்பத்துடனான மிகவும் திறன்வாய்ந்த துல்லியமான போராட்டமாக அது இருக்கும். உதாரணமாக உக்ரைன் நாட்டுடன் சண்டையும்போது ரஸ்யா ஈரானில் தயாரித்த ட்றொணைப் பயன்படுத்தியது ஆனால் அது வினைத்திறன் குறைந்தது அதேவேளை இப்போது உக்ரைன் உள்ளூர் தொழில்நுட்பத்துடனேயே அதைவிட வீரியம் நிறைந்த ட்ரோனைப் பயன்படுத்துகிறது. துல்லியம்கூட ஓரளவுக்கு முன்னேற்றமானதாகும். முள்ளிவாய்க்காலுக்கு சிறிது முன்னைய காலத்தில் புலிகளிடம் இவை கிடைத்திருந்தால் யுத்தத்தின் போக்கே மாறியிருக்கும். ஆக இந்த ஏ கே 47 புலுடாவெல்லாத்தையும் இந்தியா ஏறக்கட்டி வைப்பதைத்தவிர வேறு வழியில்லை.
  9. உங்களுடன் பயணம் செய்த சக தொழிலாழனை நண்பனாக ஏற்று அவரை எங்களுக்கு அறிமுகமாக்கி உருவகம் கொடுத்து இறுதியில் எம்மையும் அவருக்காகப் வேண்டுதல் செய்ய வைத்துவிட்டீர்கள் அவரது ஆன்மா வீடுபேறடைய மனமார வேண்டுகிறேன். யாரோ கண்காணாத ஒருவருக்காக மனங்கலங்கினால் அங்கு மனிதம் வெல்கின்றது என அர்த்தப்படும்.
  10. இந்தப் பெர்யமனிதனுக்கு இது வேணும் காரணம் இவருக்கு 2021 ல விசம் வைத்துச் சாக்கட்டப்பார்த்து ஜேர்மனியில வைத்து வைத்தியம் செய்து காப்பாத்திவிட ஆற்ரையோ கயித்தை விழுங்கிப்போடு ரஸ்யாவுக்குத் திரும்பினால் போய்ச்சேரவேண்டியதுதான். முள்ளிவாய்க்கலுக்குள்ள கடைசிவரைக்கும் முண்டுபிடிச்சுக்கொண்டு நிண்டதா கேள்விப்பட்டன் அது உண்மையாக இருந்தால் அதைப்போலதான் இதுவும். கொஞ்சம் அந்தப்பக்கம் போய் தூர நிண்டு என்ன நடக்குது எண்டு பார்த்தால் இதுகளுக்காகவோ.... என இருவரும் காறித்துப்பியிருப்பினம்.
  11. ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவர் எனக்குக் கூறியிருந்தார் முப்பது இலட்சத்துக்கும் ஐம்பது இலட்சத்துக்கும் இடையில் செலவு செய்தால் சட்டத்தை படிக்காமலேயே படித்ததாக தராதரப் பத்திரம் எடுக்கலாமாம் அதுவும் ஒரிகினலாக. ஆனால் ஒரு விடையம் இவர்களால் நீதிமன்றில் வழக்காடமுடியாதாம் மற்றப்படி உள்ளூருக்குள்ள சில விடையங்களையோ அல்லது சில நிறுவனங்களிலோ வேலை செய்யலாமாம். நானும் இதை முழுதாக நம்பவில்லை அங்கிருந்து சொன்னவரது கருத்துத்தான் அதுக்காக என்னை அட்ச்சுத் துவைக்காதையுங்கோ.
  12. கடந்த காலங்களில் இவர்களது தகிடுதித்தங்களை வெளியே இருந்து விமர்சித்தவண்ணமே இருந்தனர், அவர்களது கருத்தை உண்மையாக்குமாப்போல் செய்யும் சுத்துமாத்தால் இப்போ இவர்கள் நடுத்தெருவில் மானங்கெட்டு நிற்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என விமர்சித்துக்கொண்டிருந்த இவர்களே ஒரு ஜனநாயகப் பொதுவெளியில் யாப்பு மற்றும்ம் சட்ட வரையறைகளுக்குள் ஒரு நிர்வாகக்குழுவைத் தெரிவுசெய்யும் விடையத்தில் எந்தவித இங்கிதமும் இல்லாது நடந்துள்ளார்கள். இந்த வழக்கை நீதித்துறைக்கு யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை வெளியே சொல்ல எந்தவொரு வெகுஜன ஊடகத்துக்கும் துணிவில்லை.
  13. இக்காணொளியில் விடுதலைப்புலிகள் பாவிக்காத ஒரு சொல்லை பலதடவை பாவிச்சிருக்கிறார் அதாவது ஒரே சொல்லை அதுவும் விடுதலைப்புலிகள் தங்கள் உரையில் பாவிக்காத சொல்லைப் பலதடவைகள் பாவித்ததால் துவாரகா என்று சொல்லி உரை நிகழ்த்தும் இவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறோம். அந்தசொல் என்னவெனில் நாம் என்று தேசியத்தலைவர் பாவிக்கும் சொல்லை நான் எனப் பல இடங்களில் இவர் பாவிக்கிறார் அதாவது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடும் கொள்கை விளக்க உரையை எப்போதும் நான் தெரிவித்துகொள்கிறேன் எனச்சொல்வதில்லை அதாவது "நாம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றே உரைப்பது வழக்கம். ஆனால் மிகவும் அருவருக்கத்தக்கதும் புலிகளது ஈகத்தை மலினப்படுத்துவதும் தலைவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதும் தவறு எனச்சொல்லிக்கொண்டு போரில் மரணித்துவிட்ட ஒரு உயிரை கண்டவர்கள் எல்லாம் நக்கல் நையாண்டி செய்ய திட்டமிட்டே நாடகமாடிவிட்டது "தமிழர் விரோததேசமாகிய இந்தியா" இந்தியா நாசமாகிப்போகும் காலம் மிகவிரைவில் வரும். கொசுறாக இந்தியாவின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலைப்புலிகளது படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் தடை செய்து அதனை வெளியிட்டவர்களது கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்யும் முறைமையை இப்போது முகப்புத்தகம் தவிர்த்திருக்கிறது. இதன்மூலம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்னுமாப்போல் இந்தியா தனது கபடமுகத்தைத் தோலுரித்துக்காட்டி மிகவும் அசிங்கமாகச் சிரிக்கிறது.
  14. இப்படியான தாக்குதலுக்கு எங்கட ஊரில உள்ளூரிலேயே தயாரிக்கக்கூடிய சிறிய ரக ட்ரோன் போதுமா அதை வடிவமைக்கவும் முதல் பிரதியை உருவாக்கி சோதனை செய்ய வெற்றியடைந்தபின்பு பல்லாயிரக்கணக்கில் உருவாக்க ஒரு சில சி என் சி மிசினும் கண்ணாடி இழை மூலப்பொருளும் சின்னச்சின்ன இலத்திரனியல் சிப்ஸ்சும் அதனுடன் கொழுத்திப்போட ஒரு ட்ரோனுக்கு ஒரு கிலோ வெடிமருந்தும் அதன் தொழில் நுட்பமும் இருந்தால் ஒரு ஆட்டு ஆட்டலாம் தவிர இதை சரியான திசையில் அனுப்ப எங்களுக்கே உரிய ஒரு ஜி பி எஸ் தொழில் நுட்பமும் தேவை அடுத்த கட்ட யுத்தம் இப்படித்தான் இருக்கும் இலங்கைத்தீவில். காலப்போக்கில் இது சர்வ சாதாரணமாகும்.
  15. மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது. எனினும் மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது. ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள் கூறுங்களேன் எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர் உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த் ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.
  16. சரி இன்னுமொரு விடையம் கிரிப்டோவில் காசு போட்டால் போட்டது போட்டதுதான் அது யூ எஸ் டி டியில் வரவு வைக்கப்பட்டிருக்கும் அதைக் காசாக்கவேண்டுமானால் யாருக்காவது யூ எஸ் டி ரியை விற்கவேண்டும் அதைவிட ஒரு நல்ல விடையம் இருக்கு Revolut bank கில் ஒரு கணக்கைத் திறந்து அதற்கு நீங்கள் வேண்டிய கரன்சியில் உங்களது USDTயை மாற்றலாம்.பிரச்சனப்பிடவேண்டியதில்லை. அபரா, SHIBA/USDT வை நான் ஆரம்பத்தில் வாங்கி அது 0.00005400 வரை ஏறியது நல்ல காசு பாத்திட்டேன் இப்போ அது இறங்குமுகம். ஆனால் பைனான்ஸ் இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது சீபா இனு ஆறு இல்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால் "bainance" இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது SHIBA/USDT ஆறு மில்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. சரி விடையத்துக்கு வருகிறேன் பைனான்ஸ்சில் இப்போது இலாபமீட்டும் காயின் எனப் பட்டியலிடுவார்கள் அதில் இருபத்து நாலு மணிநேர உயர்வு / தாழ்வு என வரும் அதைக்கவனித்தால் மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம் ஆனால் ஆக அடிமட்டத்திலிருந்து திடீரென உயரும் காயினில் முதலீடு செய்யவேண்டாம். அடிச்சுக்கொண்டு போயிடும். இப்போ NU/USDT எனும் காயின் சிலநேரம் ஏறும்போல இருக்கு ஆனால் அவதானம். TRX/USDT இப்போது ஏறுது விருப்பமானால் வித்துக்காசு பாக்கலாம்
  17. கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என. சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம் இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும். முக்கிய தகவல் இன்னுமொருதர் ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன். மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது.
  18. இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம் எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும். வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்
  19. எங்கள் தேசத்தில் எம் ஆளுகைக்குள் இருந்தபோது நாம் புதைகுழிகளில் விதைத்த வீரப்பரம்பரைகளது வித்துடலை வெட்டியெறிந்து வீசியதே சிங்களம் அத்துடன் நாம் இன்னுமொரு விதிசெய்ய முனைந்துள்ளோம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை தமிழின எதிரிகள் இப்படி இடித்தழிக்காதுவிடினே நாம் வியப்புறல்வேண்டும். மீண்டும் காலம் எமக்கு எதிரி யார் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டியிக்கின்றது. இதில் வியப்பேதுமில்லை. தமிழகத்தின் அரசியற்களத்திலிருந்து அழித்தொழிக்கப்படவேண்டியது கருனாநிதியும் காங்கிரசும் இல்லை அத்தோடு தன்னையும்தான் என ஜெயலலிதா தானாகவே அடையளம் காட்டியிருக்கிறார். தவிர முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இப்போது தமிழகத்தின் கடைக்கோடிவரை தன்னை அடையாளப்படுத்தியிருக்கின்றது, தஞ்சையில் பெரியகோவில் பார்ப்பதற்கு அடுத்ததாக இதுவே எதிர்காலத்தில் அனைவரது தேர்வாகவும் இருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு தமிழின விரோதிகள் முயல்வதற்குமுன்பு எந்தவித சேதாரமும் இல்லாது அதைப் பெயர்த்தெடுத்து நாம் வாழும் புலம்பெயர்தேசத்தில் எங்காவது நிறுவுவதே நல்ல முயற்சி ஆகும். அவைகள் எமது சொத்துக்கள் அவற்றைக் காப்பது எமது கடன். மேலும் எஜமானர்கள் வீசிய எலும்புத்துண்டுக்காய் இங்கு பல விசுவாச வாலை ஆட்டுகின்றன, விழுங்கிய எலும்புகள் ஜீரணிக்காது பேதியாக்கி வெளியேறும்போது வால்களிலும் ஒட்டிக்கொண்டு, அவை விசுவாச வலாட்டும்போது எமது முகங்களிலும் தெறிக்கின்றன ஆகவே தூர விலகி இருங்கள் இல்லையேல் அசிங்கம் எமக்குத்தான். தேர்தல் காலத்திலும் சில வந்தது பின்பு போனது அதுபோல இவைகளும் வரும் போகும் அதுகளை அதுபாட்டுக்கு விடுங்கோ.
  20. அப்போ திருக்குவளை முத்துவேலர் கருனாநிதி அவர்கட்குக் கடைசிகாலத்திலை சென்னை மரீனா கடற்கரையில் இடம்கிடையாது கண்ணம்மாப்பேட்டைதான் என்கிறீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.