Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுப்மான் கில் இந்திய டெஸ்ட் அணித்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாந்த் உபதலைவர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்க படங்களக் காணேல என்று பார்த்தன். இது ப்ரித்தியா. இல்லையே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் கனநாளா playoffக்குப் போகேலையாமே. 2014,ல கடைசியாப் போனவை. இப்போ முதலாவதா வாறதுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கு. அவர்களின் முதல் ஜந்து துடுப்பர்களும் 270 ஓட்டங்களுக்கு மேல அடிச்சிருக்கினம். தொடர் வெற்றிகளின் பின்னால், அவர்கள்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்போ கொஞ்ச நாளா அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கு. நமக்குப் புள்ளி கிடைக்கக் கூடாது என்பதற்காகவே நிண்டவன் போறவன் எல்லாம் அடித்து வெளுக்கிறான். இப்போ மழை காற்று புயல் எல்லாம் உங்கட காட்டுல தான். நாளையோட உங்களையும் பிடிக்க முடியாது போல இருக்கு. அது சரி .... என்ன கனக காலமா காணேல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அன்றைக்கு கைவிடப்பட்ட போட்டி, நாளை மீண்டும் நடக்கிறது. அன்று பஞ்சாப் நல்ல ஒரு தொடக்கத்தைக் குடுத்திருந்தவை. 10.1 பந்து பரிமாற்றங்களில் 122 ஓட்டங்கள். இப்போ அது எல்லாவற்றையும் கடந்து, மீண்டும் மோதுகிறார்கள். அன்று நீயாநானா என்ற போட்டி. வெல்பவருக்கு அடுத்த கட்டத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. இப்போ எல்லாம் மாறிவிட்டது. பஞ்சாப் உள்ளே. டெல்லி வெளியே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தங்களே தங்களுக்கு ஆப்படித்துக் கொண்டனர். என்னடா RCB பசங்களா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தரமான ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கினம். மாயாங் செய்தது சரியே. அங்கால கோலி நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது, கோலிக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே இருந்தார். இருவரும், 22 பந்துகளில், 40 ஓட்டங்கள் அடித்தனர். அதுதான் அவ்விடத்தில் முக்கியம். அவர் ஆட்டமிழந்தது துரதிஷ்டம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அரைவாசிக்கிணறு தாண்டியாச்சு. இரண்டு பந்து பரிமாற்றங்களைத் தவிர, இதுவரை ஒவ்வொரு பந்துப் பரிமாற்றத்திலும், பத்து ஓட்டங்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். அவர்களின் அணுகுமுறை சரியாக சென்று கொண்டிருக்கின்றது. கணக்கெடுத்து அடிப்பது என்பது இதுதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல தொடக்கம் குடுத்திருக்கினம். இவ்வாறான பெரிய ஓட்டங்களை துரத்தும் போது, இவ்வளவு அடித்தாலும் இன்னும் நிறைய ஓட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். அந்த அழுத்தமே போட்டியின் திசையை மாற்றும். கோலி ஆடிக்கொண்டு இருக்கிறார். அதுதான் இந்த நிலையில் முக்கியம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB என்ன செய்யப் போகிறது. கோலியின் விளையாட்டைப் பார்ப்போம். இந்தப் பந்துவீச்சை வைத்துக் கொண்டு எப்பிடி கோப்பையைத் தூக்கிறது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கேயும் அதே தான். 18 வருசத்தில, முதல்முறை எல்லாப் போட்டியையும் பார்க்கிறேன். பணத்துக்காக விளையாட்டு என்றால் ஏத்துக் கொள்ள முடியேல. சும்மா ஒரு படம் பார்க்கிற மாதிரித்தான் இதுவும். நாம வேடிக்கை பார்ப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எந்தத் தொடரைச் சொல்லுறியல். போட்டு அடி அடி என்டு அடிச்சானே. அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றது அவன்தான். 2023 உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலிருந்து இந்தியாவுக்கு அவனின் தலைவலி தீரவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தியாவுக்கு எதிராக என்றால் போட்டு வெளுப்பான். மற்றம்படி ஆள் கொஞ்சம் தடுமாற்றம்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRHக்கு இன்னொரு சந்தர்ப்பம். 300 அடிக்கிற அணி என்று சொல்லிக்கொண்டு திரிஞ்சாங்களே. இன்று அந்த நாளா. RCBக்கு ஒரு பரீட்சார்த்தமான நாள். ஹேசுல்வூட் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போறார்கள். எப்போதும் அவர்களின் பிரச்சினையே பந்து வீச்சுதான். இப்போ முக்கியமான நேரத்தில் ஹேசுல்வூட்டை இழந்திருக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கலக்கிறீங்க வாத்தியார். சேர்ந்தே பயணிப்போம். இன்னும் ஒரு பன்னிரண்டு நாட்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரஷீத்கானுக்கு அடி விழுந்ததுதான். இங்கதான் துடுப்பாட்டம் எப்படிப் போனது என்று பார்க்கவேணும். அவர்கள் 100 க்கு மேல அடித்து, மார்ஸ் 50க்கு மேல அடிச்சு, மிகவும் உறுதியான நிலையில் இருந்தார்கள். அந்த இடத்தில எந்தப் பந்துவீச்சாளர் வந்திருந்தாலும், மார்ஸ் போட்டுப் பிளந்திருப்பான். ரஷீத் வந்து மாட்டுப்பட்டார். அதுக்கு முதல் பந்து பரிமாற்றத்தில், கிஷோருக்கும் அடி விழுந்திருந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத்தான் சிறந்த பந்துவீச்சு அணி. அவங்களுக்கே இந்த அடி விழுந்தால், லக்னோ பந்து வீச்சாளர்களுக்கு என்ன அடி அடிச்சிருக்க வேணும். அதுவும் குஜராத்தின் முதல் மூன்று பேரும் இருக்கிற formக்கு. கூடுதலா அடிக்கிற போட்டியில இதுதான் கரைச்சல். துரத்தலை எப்படி கட்டமைப்பதுதான் முக்கியம். எந்த பந்து வீச்சாளரை அடிக்கிறது போன்ற விடயங்களை யோசிச்சு வரவேணும். கோலி இதில ராட்சசன். எல்லாரும் அவனைப்போல் இல்லைதானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல ஒரு இணைப்பாட்டம். போட்டிய விறுவிறுப்பாக்கினாங்கள். இப்போ சாருக்கான் என்ன செய்யப் போகிறார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் மூவரும் போட்டினம். இனி தெரிந்த முடிவுதான். நம்ம மூவரின் power அப்பிடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அங்கால இங்கிலாந்து சிம்பாப்வேயைக் கூப்பிட்டு வைத்து அடி அடி என்று அடிக்கினம். டெஸ்ட் போட்டிய T20 மாதிரி விளையாடுறாங்கள். முதல் மூன்று பேரும் நூறு அடிச்சு, 70வது பந்துப் பரிமாற்றத்திலேயே 400 ஓட்டங்களைத் தாண்டி விட்டினம். இன்றைக்கே 500 அடிச்சிடுவாங்கள் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ஸ்ப்பா.... ஒரு மாதிரி முடிஞ்சுது. 235 ஓட்டங்கள். என்ன, குஜராத்திடமும் இவ்வாறு அடிக்கக் கூடிய துடுப்பர்கள் இருக்கினம். லக்னோவின் பந்தாளர்களால் அவர்களை நிறுத்த முடியுமா. குஜராத் பந்தாளர்களுக்கே இந்த அடி என்றால்....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் அதைத்தானே நேற்றே சொன்னேன். இரண்டு பேராக இருந்தது இப்பொழுது மூன்று பேரும் சேர்ந்து..... கொஞ்ச நாளாக நமக்கு புள்ளிகள் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே, அணிகள் எல்லாம் போட்டு தாக்குறாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரஷீத் கான் தாக்கப் பட்டார். லக்னோவ் 200க்கு மேல அடிப்பினம் போல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் துரத்த முடிவெடுத்திருக்கினம். போன போட்டியில 10 விக்கட்டால வென்றவை. இன்று எப்பிடி நடக்கப் போகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் தோனியின் பலமும் பலவீனமும். வெல்லும் போது எல்லாம் நல்லாயிருக்கும். மும்பை இந்த வருடம் முழுக்க அப்பிடித்தான். சொல்லி வைச்சு ஆக்கள் ஆட்டமிழக்கச் செய்வினம். பந்து வீச்சாளர்களும் துல்லியமா வீசினம். போல்ட், பும்ரா, சான்ட்னர் எல்லாம் பயங்கர ஒழுங்கு. சொன்ன இடத்தில பந்து விழும். அப்பாடியான வீரர்களுடன் என்னமாதிரியான மாற்றங்களையும் செய்யலாம். மும்பை சரியான நேரத்தில பயங்கர formக்கு வந்திருக்கினம்.