Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செம்பாட்டான்

  1. என்ன சுவி. ப்ரீத்தின்ர படத்தக் காணேல. இன்றைக்கு அவ வந்த விதம் பார்த்து சமுகவலைத்தளம் முழுக்க பத்தி எரியுது. ஏன் அவ உங்களுக்குப் படம் அனுப்பேலோயோ. 😁
  2. மூன்று அணிகள் playoff க்குத் தெரிவாகி விட்டினம். மும்பையும் டெல்லியும் நான்காவது இடத்துக்குப் போட்டி போடினம். அவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் விளையாடினம். அதில் தெரியும் யார் போறது என்று. நான் தெரிவு செய்த மூன்று அணிகள் playoffக்குப் போகினம்.
  3. குஜராத் ஏன் புள்ளிப் பட்டியலில் மேல என்பதற்குச் சாட்சி இதுதான். பட்லர் ஓட்டப்பட்டியலில் ஆறாவதாக. இதுக்கு மேல் என்ன வேண்டும்.
  4. என்னே ஒரு விளையாட்டு. ஒரு வித தடுமாற்றமும் இல்லாத தரமான துரத்தல். சுதர்சா நீ ஒரு வீரன்டா. இத்தொடரில் 600 ஓட்டங்களைக் கடந்தான் பையன். இப்பிடி முன்னரும் நடந்திருக்கா. ஒரு விக்கட்டும் இழக்காமல் 200 ஓட்டங்களைத் துரத்தி அடிப்பது சாதாரண விடயமில்லை.
  5. ஆறெல்லாம் சும்மா பறக்குது. இவங்கள் இரண்டு பேருமே முடிச்சுடுவாங்கள் போல. இவர்கள் இருவருக்கும், யார் அந்த செந்நிறத் தொப்பியை எடுக்கிறது என்ற போட்டி வேற. சுப்மான் சுதர்சன் போட்டுத் தாக்குங்கடா. தரமான குடுவை.
  6. குஜராத் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கினம். அடுத்த கட்டத்துக்குப் போக டெல்லியின் நிலைமை கவலைக்கிடம் போல.
  7. அவை உறுதியா நிக்கிறபடியா, நடந்திடுமோ என்ற யோசினைதான்.
  8. இதென்ன விளையாட்டு. இருவரும் மிக உறுதியாக நிற்கினம். எல்லாத்தையும் விட்டுட்டு போகவேண்டியதுதான். நாம தெரிவு செய்தா, அது கஷ்டப்பட்டு தோற்குது.
  9. நானும் அந்த 94 போட்டிகள் பற்றி முன்னரே பதிந்திருந்தேன். அப்போது இரண்டு போட்டிகள் நடத்தியே ஆகவேண்டும், குறைந்தது கிழமைக்கு மூன்று நாள் என்டாலும்.
  10. நானும் அதையேதான் நினைத்தேன். கனநாளைக்கு அவர்களைப்பத்தி கதைக்க வேணுமாம். நம்மளப் பத்தி யார் யோசிக்கிறா. என்ன கவலை என்றால் நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் குறைந்து கொண்டே போகுது. உலகக் கிண்ணம் தான் பிரதானமாக விளையாடப் போகினம். அதிக அணிகளைக் கொண்டு வாறது என்றால், இந்த முறையை மாத்தித்தான் ஆகவேணும்.
  11. நல்ல முயற்சி @goshan_che . அதிஷ்டம் இங்கே உச்சக்கட்டத்தில இருந்தால் மட்டுமே வெல்லமுடியும். எட்டுக் கேள்வி. டாக் டீக் பொட்டுத்தான் பாக்கவேணும். வாறன் பதிலோட. நீங்கள் @வீரப் பையன்26 வெற்றியாளர் என்று அறிவிச்சுப் போட்டு, போட்டியத் தொடங்கலாம். முதலாவதா பதிந்ததாலேயே அவர் வெற்றிப்படியில் மேலே நிற்கிறார்.
  12. அதேதான். முடிக்கிறாங்கள் இல்லையே. இரண்டு இரண்டு போட்டியா வைத்தா ஒரு கிழமையிலேயே முடிச்சிருக்கலாம். அவங்கள் அதை மாற்றுவதாகவே இல்லை. இரண்டு போட்டி வைத்தாலும் வருமானத்தில் ஒரு குறைவும் வராது. வேற என்ன காரணம் என்று புரியவில்லை. அங்கால திறந்த கடை எப்பிடி ஓடுது. வந்து பாக்கிறன்.
  13. அப்போ யார் என்பதுதான் போட்டியே. நமக்கு இரண்டு புள்ளியா இல்லையா. அதுதான் நமது கணக்கு. இவ்வளவு நாளும் தோனிய வைத்து கல்லா கட்டிச்சினம். இனி யாரையாவது பிடிக்கவேணும்
  14. மூன்று முறை வென்றவையும் ஜந்து முறை வென்றவையும் வெளியில. அப்பிடி என்றால் ஜந்து முறை வென்ற மும்பாயும்..... நடக்கலாம்.
  15. ஓ ஜெராட் கிம்பரா. அப்படீன்னா பாக்கத்தான் வேணும். பஞ்சாப் நாளைக்கு வெல்லவேணும். தோற்றால் பிறகு கடினம். டெல்லிக்கு கடைசிப் போட்டி பஞ்சாப்போட. நான் நினைக்கிறேன், இதுதான் யார் மேலே கீழே என்று முடிவு பண்ணும் என்று. சுவாரஸ்யம் இப்பத்தான் கூடுது. இவர்கள் இருவருக்கும் மும்பாயோட போட்டிகள் இருக்கு. இருவரும் மும்பாய்க்கு அடிச்சா, மும்பாய் வெளியில. இம்மூவரும் தங்களுக்குள் விளையாடும் போட்டிகள் மிகச் சுவாரஸ்யமா இருக்கப் போகுது.
  16. அட கடைசியா மழை வென்றது. அப்ப KKR வெளியில. திரும்பத் திரும்ப சொன்னேனே.
  17. நீங்கள் இவ்வளவு எழுதியும். ஒரு வரியில KKR க்கு சங்கு என்டு முடிச்சிருக்காலம். நாளைக்கு அவர்களுக்கு வாய்ப்பே இல்லை. 😄
  18. இங்கின கனபேர் இருக்கினம். நாம எப்பவும் கத்துக்கிறதுதான். ஜயையோ. நீங்கள் இணைத்த காணொளியப் பார்க்கிறதா வேண்டாமா என்றே இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தமாதிரி ஊகங்கள் எல்லாம் எனக்கு ஒத்துவராது. இதுவும் என்ன...சும்மா வாயில வாறத அடிச்சு விடுற காணொளியா.
  19. ஒண்ணுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டு, செய்யிர வேலை என்ன: நந்தனையும் புலவரையும் கலைக்கிறது.
  20. பத்து அணியில், கீழே இருக்கும் ஜந்து பேருக்கும் சங்கு ஊதியாச்சு. மேலே உள்ளவர்களில், டெல்லிக்குத்தான் கடின பாதை. பஞ்சாப் - டெல்லி போட்டி யார் மேலே என்பதைத் தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன். மற்ற மூவருக்கும், அவர்கள் பாதை இலகு.
  21. மீள் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலேயே. இடைவெளி விட்டதால, இப்போட்டியில வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை. RCBக்கு கட்டாயம் வெல்ல வேண்டும் என்று இல்லை. வென்றால் அடுத்த போட்டிகளை இலகுவாக அணுகலாம். 13 பேர் RCBக்கு மணி கட்டியிருக்கிறம். கவலை என்ன என்றால், அந்த இருவரும் மீண்டும் என்னோட. பார்ப்போம் இந்த இடைவேளை அதையும் மாற்றுகிறதா என்று.
  22. என்னங்க நீங்கள் பிரீத்தி படத்தையும் போடுறியல். மாறன் மகள் படத்தையும் போடுறியல். அதோட கழுதையையும் போடுறியல். நீங்கள் ஆரு. 😁
  23. அதுதானே. ஜரோப்பாவில இருந்துகொண்டு உதைபந்த எப்பிடி பார்க்காமல் விடுறது. அபச்சாரம் அபச்சாரம். 😄 டென்மார்க்கும் பெரிய அணியுமில்லை. அதனால பெருசா ஆர்வம் வராது இல்லையா. ஒருக்கா உலகக்கிண்ணப் போட்டியில், காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவை. அடுத்த உலக்ககண்ணத்துக்கு தெரிவாகி இருக்கினம். பாத்துக்கங்க.
  24. மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி நாங்களும் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். தல கிருபனையும் இந்த பக்கம் காணேல. அதோட பார்த்தீங்களா. கடைசியா உங்களையும் ஒரு கருத்து சொல்ல வைத்து விட்டோம். இனி என்ன போட்டிகள் தொடங்குது. இன்னொரு இரண்டு மூன்று கிழமைக்கு உருட்டுவோம். அணிகள் எல்லாம் தலைகீழாக மாறி வரும் போல் உள்ளது. எத்தனை வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் வரப் போகின்றார்களோ தெரியவில்லை. அந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வீரர், பிரேசர் மக்கூக், மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றாராம். அவரினால் கடைசி நாள் நடந்த நிகழ்வுகளை ஜீரணிக்கவே முடியவில்லை. 23 வயது. வாழ்க்கையில் அடி பட்டிராத ஆள் போல. பாவம். வரவே மாட்டன் என்று சொல்லிப்போட்டாராம்.
  25. அதுசரி. இப்போ இந்தியன்தானே கனக்க T20 கழகங்களை வைத்திருக்கினம். கரிபியன். தென்னாபிரிக்கா, அமெரிக்கா. நான் பெரிதாக போட்டிகளைப் பார்ப்பதில்லை. செய்திவாயிலாக அறிந்தது மட்டும்தான். உண்மையிலேயே பெரிய ஈர்ப்பில்லை. பணத்துக்காக போட்டி. இதைவிட, நான் கூடுதலாக உதைப்பந்துக் கழகங்களைத்தான் பார்ப்பது. பார்சிலோனா எனது விருப்புக்குரிய அணி. அங்கு விளையாட்டின் இதம் குறையவில்லை. கிரிக்கட்டில் எல்லாவற்றையும் மாத்தி வைத்திருக்கினம். நாலும் ஆறும் பறக்க வேணும் என்றால், ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.