Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட இரண்டு பேர் தானா. பிறகென்ன, RCB வெல்வது உறுதி. எல்லாருக்கும் வணக்கம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை RCB vs PBKS போட்டி. எத்தினைபேர் RCBயத் தெரிவு செய்திருப்பினம். PBKSஅ ஒருத்தரும் தெரிவு செய்யேலை. ஒருத்தரின் பட்டியலிலும் PBKS இல்லையே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பல முக்கிய வெளிநாட்டு வீரர்கள் playoffக்கு இல்லையாம். பஞ்சாபுக்கு மாக்கோ ஜென்சன் மும்பைக்கு வில் ஜாக்ஸ் குஜராத்துக்கு ஜொஷ் பட்லர் பெங்களூருக்கு லுங்கி எங்கிடி இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருக்கு ஜொஷ் ஹேசுல்வுட் திரும்ப வந்திருக்கிறார். அவர்களுக்கு இது பெரும் பலம். மற்றவர்களுக்கு அந்த அந்த வீரர்கள் இல்லாதது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடாவடி இல்லாமல் இருக்கவேணும் என்று வாத்தியாரே சொல்லிப் போட்டார். ஒன்றும் சொல்லாமலே இருக்கவேண்டும் போல. ஊரில சொல்லுலினம். எவ்வளவு அமைதியான பிள்ளை என்று.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நமக்கு நடந்ததும் அதேதான். குருடன் யானை கீறினமாதிரி கீறி விட்டது. சென்னைதான் களத்தைக் கவிட்டுவிட்டுது. இல்லாவிட்டால், நாமெல்லாம் கீழையிருந்து இதே நிலைமில் இருந்திருப்போம். தோனியின் காலம் முடிந்தது என்ற ஒரு எண்ணத்தோட செய்த தெரிவுகள் நம்மளோடது. RCB எதிர் MI இறுதிப்போட்டி எப்படி இருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடியாங்க. அப்ப சரி.😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தனுக்குக் கோபம் வந்து பார்த்ததில்லை போல. போன கிழமை நடந்ததப் பார்த்தீங்கள் என்றால் தெரியும். அவரின் தெரிவுகள் எல்லாம் இம்முறை அந்தமாதிரி. என்ன மாயமோ மந்திரமோ 41 போட்டிகளைச் சரியாக தெரிவு செய்திருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதச் சொல்ல வேற வேணுமா. இக்களத்தில் எத்தினை பேரின் மனது புண்பட்டிருக்கும். கடைசி என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Playoff Qualifier - தெரிவாகும் அணி - RCBயா PBKSஆ Eliminator - நீக்கப்படும் அணி - MIயா GTயா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வசி... என்ன பின்னால வந்து நிக்கிறியல். நல்ல வேளை, இன்றோடு, போட்டிகள் முடிஞ்சுது. இனி இடக்கு முடக்கு கேள்விகள்தான் பதில் சொல்ல வேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பாடா. இன்றைக்கு ஒருநாள்த்தான் நமக்கு புள்ளி கிடைக்க வேணும் என்றதுக்காக, முழு அணியும் சேர்ந்து அடிச்சாங்கள். அணித்தலைவன் ஜித்தேஷு. அடிச்சான் பாரு ஆறு ஆறா. மொத்தமா 30 நான்குகளும் 7 ஆறுகளும். யார் சொன்னது ஆறு ஆறா அடிக்க வேணும் என்று. நாலு நாலா அடிச்சே வெல்லுவோம் என்று காட்டிவிட்டாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அரைவாசிக் கிணறு தாண்டியாச்சு. ஆனால், மூன்று பேரை இழந்துவிட்டார்கள். கோலி முடிச்சு வைப்பாரா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி. 228 அடிக்க வேணும். அடிச்சால் RCB குறைந்தது இரண்டாவதா வரலாம். நமக்கும் புள்ளி கிடைக்கும். நமக்கு புள்ளி கிடைப்பதற்காக, யார் அடிக்கப் போறான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
100 அடிச்சான் பாந்த். தலைகீழா சுழன்று குதிச்சான் பயல்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாரும் எதிர்பார்த்த பாந்த் இன்றைக்கு வந்துவிட்டார். போட்டு இந்த அடி அடிக்கிறான். இம்முறை, தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். மீண்டும் நமக்குப் புள்ளி கிடைக்கக் கூடாதென்பதற்காகவே போட்டு அடிக்கிற மாதிரிக் கிடக்கு. ஏன் இப்பிடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்பிடி. என்ன ஆச்சு. எல்லாருக்கும் அலுத்துப் போச்சா. இன்றுதானே கடைசிப் போட்டி. ஒரு சிறு பயணம் போகவேண்டி வந்ததால், இந்தப் பக்கம் வரமுடியவில்லை. இன்றும் ஒரே அலுப்பாக் கிடக்கு. என்றாலும், குப்பையைக் கொட்டுவம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ அப்பிடியா. நீங்கள் ஒரு ஜபில் விக்கிப்பீடியா. உங்களுக்கு ஜபில் அவ்வளவு பிடிக்குமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தன்தான் கொஞ்சம் கடுப்பாயிற்றார் போல. இன்றைக்கு அவருக்குப் புள்ளிகள் இல்லை. உங்கள் பயணத்தை இனிதே முடித்து வாருங்கள். புள்ளிகளை எப்பவும் போடலாம். நாங்கள் மிச்சத்தைப் பார்த்துக் கொள்கிறோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலாவது தொடரிலேயே 300 ஓட்டங்கள் அடிச்சவர். ஆனால் அதன் பின் வாய்ப்புகள் குடுக்கப்படவில்லை. அவரின் துடுப்புப்பாணி சிறப்பாக இல்லை. சில குறைபாடுகள் இருந்தன. அதோடு, இந்திய அணியில் அவரை விடச்சிறப்பான வீரர்களும் இருந்தார்கள். அதன் பின் அவர் பயிற்சிகள் எடுத்து, சிறப்பாக விளையாடத் தொடங்கினார். போன வருடம் முழுக்க ஒரே அடிதான். அதன் பின் ஒரு திறந்த மடல் ஒன்று எழுதினார். Dear Cricket, give me one more chance என்று அவர் எழுதியது வெகுவாக சிலாகிக்கப் பட்டது. அவரை அணியில் சேர்க்கவேண்டும் என்ற விருப்பம் கூடியது. தெரிவாளர்களும், சரி பார்ப்பம் என்று, இம்முறை வாய்ப்பு வழங்கியிருக்கினம். இங்கிலாந்து மைதானங்களில் எப்படி ஆடப்போகிறார் என்று பார்ப்போம். ஒன்றோ இரண்டோ போட்டிகள் ஆடுவார் என்று நினைக்கிறேன். ஓட்டங்கள் குவித்தார் என்றால் தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கனநாளைக்குப் பிறகு, அவர்களின் தெரிவு தவறியிருக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன... உங்களுக்கும் கவலையா. உங்களைப் பிடிக்கத்தான் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிறம். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிறப்பா முடிச்சு விட்டாங்கள். சமீர் ரிஷ்வியும் கருணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கருண் நாயர் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார். இந்திய டெஸ்ட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட புளுகம் போல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்டொய்னீஸ் போட்டு அடிச்சுவிட்டான். மீண்டும் ஒரு 200 ஓட்டம். துரத்தல் எப்பிடி இருக்கப் போகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் போற போக்கில, தோக்கும் போல கிடக்கு