Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செம்பாட்டான்

  1. ஏன் பிராவோவப் போக விட்டவை. நல்ல ஒரு ஆலோசகராக இருந்திருப்பாரே. இலங்கை அணிக்கு பத்திரான தேவையா இல்லையா என்பதைப் பொறுத்து, அவர்கள் உதவிக்கு வருவார்கள். நான் நினைக்கிறேன் அவர்களுக்கு பத்திரானாவில் அவ்வளவு நம்பிக்கை இல்லையென்று. அவர் உள்ளூர்ப் போட்டிகளிலும் பெரிதாக விளையாடுவதில்லை. சென்னைக்கு விளையாடினதுதான் அதிகம்.
  2. எனக்கென்றால் அவருக்கு முறையான ஒரு பயிற்சியாளர் தேவை என்று நினைக்கிறேன். அத்தோடு உடற்தகுதியையும் பேணவேண்டும். அவரின் பந்துவீச்சு முறைமையால், அடிக்கடி காயம் வரும். மலிங்க இல்லாட்டி பும்ரா இல்லை. அதேபோல் ஒருவர் பதிரானவுக்கும் வேண்டும். அவரின் கை சுழற்சியிலேயே ஒரு ஒழுங்கு இல்லை. தட்டையாக கையை நீட்டி வீசுவது இலகு இல்லை. வேகம் எடுப்பதற்கு எத்தனிக்கும் போதுதான் அதிகமான அகலப்பந்தை வீசுவார். பிராவோ எல்லாம் அதில வின்னன். எப்ப மெதுவாக வீசவேண்டும் தெரியும். இப்போ எல்லாம் வேகத்துக்கு மதிப்பில்லை. துல்லியமான வீச்சுதான் முக்கியம்.
  3. ஓ... அப்பிடியா. உங்கடை கதையைக் கேட்டா நீங்கள் 90களின் பையன் போல. 1996க்கு முன் எவ்வளவோ நடந்திருக்கு. இப்போ அப்போதிருந்த வீரர்கள் இருந்தால், தூள் கிளப்புவினம். அவர்கள் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் எப்படிப்பட்ட மைதானத்திலும் விளையாடக்கூடிய வீரர்கள். கிரிக்கெட்டில் Golden era என்று சொல்ல முடியும். இப்போது இருக்கும் வீரர்கள் அப்படி என்று சொல்ல முடியவில்லை. கிரிக்கெட் என்றால் என்ன என்று அறிந்தது அந்தக் காலகட்டத்தில் தான். இலக்கங்களையோ, தரவுகளையோ வைத்து ஒரு வீரையோ அல்லது ஒரு அணியையோ அனுமானிக்க கூடாது என்பது அன்றைய காலகட்டத்தில் நான் அறிந்தது, படித்தது
  4. அதுவும் சரிதான். அன்றைய காலகட்டத்தில், இந்தியா கூட அவ்வளவாக வெல்வது கிடையாது. இப்போ எல்லாம் தலைகீழ். மாற்றிவிட்டேன். நன்றி சுட்டிக் காட்டியமைக்கு.
  5. அது ஒரு அதிர்ச்சிகரமான போட்டி. இப்பிடி, ஏதாவது ஒன்று, ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் நடைபெறும். பல உலகக் கிண்ணத்தில் இலங்கையும் அப்பிடித்தான். 1996 வரையும், இலங்கை 4 போட்டிகளைத்தான் வென்றிருந்தது. பாக்கிஸ்தான் வென்ற 1992ல், இலங்கை ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. 1996ல் எல்லாம் மாறியது. ஒரு போட்டியையும் தோற்காமல், கோப்பையைத் தூக்கியது.
  6. நீங்கள் என்ன பதில் வைத்திருக்கீர்கள் என்டு ஊகிக்க முடியுது. அவர்கள் தலைவர் ஒடும்பெ, போட்டிகளை விட்டுக் கொடுக்கும் ஊழளில் சிக்கிய பிறகு, அங்கு எல்லாமே மாறிவிட்டது. அவர்களிடம் பணமே இல்லை. ICC கொடுத்த பணத்தையும் அரசியல்வாதிகள் எடுத்தால், எப்படி சம்பளம் கொடுப்பது. எப்படி வீரர்களை உருவாக்குவது. அப்போது விளையாடிய நிறையப் பேர், போட்டியில் உள்ள ஆர்வத்தினால்தான் அணியிலேயே இருந்தார்கள். விளையாடிப் போட்டு, சந்தையில தக்காளி விற்கப் போய்விடுவார்கள். சுழல் பந்து வீச்சாளர் ஒபுயா அப்படித்தான் இருந்தார். மூன்றாம் உலக நாடுகளில் உள்ள எல்லா பிரச்சினைகளும் அங்கும் உண்டு. அந்த நாட்டில் எல்லா அணி விளையாட்டுகளிலும் ஊழல். உதைபந்து, கரப்பந்து, கிரிக்கட்..... இப்பிடியே அடுக்கிக் கொண்டு போகலாம்.
  7. T20 போட்டிகளை முதலில் உருவாக்கினது மறைந்த முன்னால் நியுசிலாந்து தலைவர் மார்டின் குரோ. அவர்தான் இங்கிலாந்து வாரியத்துடன் சேர்ந்து விளையாட்டு முறைமையை உருவாக்கினார். முதலில் இது கேளிக்கையாட்டம் என்ற வகையில்தான் ஆடப்பட்டது. முதலாவது சர்வதேசப் போட்டி அவஸ்திரேலியாவுக்கும் நியுசிலாந்திற்கும் இடையே நடைபெற்றது. வீரர்கள் எல்லாம் 80 ஆண்டு உடைகளுடன் ஒரு முசுப்பாத்தியான போட்டியாகத்தான் ஆடினார்கள். நியுசிலாந்து வீரர்கள் இப்படித்தான் வந்தார்கள். தலையில விக் வைத்து... இந்தியாவிற்கு இதில் பெரிதாக ஆர்வமில்லை. பெருந்தலைகள் எல்லாம் பெரிதாக ஆடவிரும்பவில்லை. முதலாவது உலகக் கிண்ணத்துக்கு, 2007ல், பெருந்தலைகள் ஒருவரும் போகவில்லை. தோனி தலைமையில் இளவீரர்களைக் கொண்ட அணியே சென்றது (ரோகித் எல்லாம் அப்போ வளர்ந்துவரும் இளம் வீரர்). இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றதிலிருந்து T20யின் எழுச்சி ஆரம்பித்தது. IPL பிறந்தது. மிச்சமெல்லாம்தான் இப்போ நீங்கள் பார்ப்பது.
  8. Cricinfo ஒரு தனியாரின் தளம். இதுக்கும் BCCI க்கும் ஒரு தொடர்புமில்லை. Samit Bal என்பவர்தான் அதன் தலைமை ஆசிரியர். முன்னர் விஸ்டன் வைத்திருந்தது. இப்போ ESPN வைத்திருக்கு. என்ன, கூட இந்திய துதிபாடும் ஒரு தளம். எனக்கு இங்கிலாந்தின் County Championship தான் கூடப் பிடிக்கும். டெஸ்ட் போட்டிகளின் ரசிகன் நான்.
  9. Playoff போட்டிகள் எங்கு நடைபெறும் என்று பின்னர்தான் அறிவிப்பினம். சென்னைக்கு வந்தாலும் வரும். ஏனென்றால், இப்போ ஒரு போட்டிகளும் அங்கு நடக்கப் போவதில்லை. ஆகவே சென்னைக்குக் கொண்டுவாறது பொருத்தமாக இருக்கும். இது எனது ஊகம்தான். நான் இப்போ cricbuzz தளத்தையும் பார்க்கிறது. இப்போ எல்லாம் Cricinfo அடிக்கடி வேலை செய்யாமல் இறுகிப் போய் நிற்கும். கடுப்பாய் இருக்கும்.
  10. கிருபன், உங்களுக்குக் கொஞ்சம் சிரமத்தைக் குடுத்துட்டாங்கள் போல. ஒரு போட்டியைத் தவிர, மீதமுள்ள போட்டிகள் எல்லாம் பழைய ஒழுங்கிலேயே வருகுது.
  11. முழு அட்டவணை. இடை நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி போட்டி 24ஆம் திகதி மீண்டும் நடைபெறும். CSK, SRH, PBKS - மிகுதிப் போட்டிகளை இனி சொந்த மைதானத்தில் விளையாட மாட்டினம்
  12. ராஜத்துக்கு இந்த இடைநிறுத்தம் தேறி வருவதற்கு நல்ல சந்தர்ப்பம்தானே. திரும்பி வந்தாலும் வந்திடுவார். கோலிக்கு தலைவராக வருவதற்கு விருப்பமேயில்லை. அவர் அதை விட்டு விலகி நீண்ட நாட்கள் ஆகிறது. ஆகவே நீங்கள் சொன்னமாதிரி, விக்கட் காப்பாளர்தான் இடைநிலைத் தலைவர் என்று நினைக்கிறேன். RCBக்கு இப்போதைய பெரும் பிரச்சினையே பந்து வீச்சுத்தான். ஹேசுல்வூட் தேறாவிட்டால், அவர்கள் கதி என்னமோ. அவர்களுக்கு எப்போதும் இதே தடங்கள்தானே.
  13. பாவம்ல RCB. அதுக்குள்ள இந்த யுத்தம் வேற. அவங்கள் வெல்லவே போறதில்ல போல
  14. தொடருங்கள். நீலம் சிறிய புத்தகம். ஆனால் கனக்க தத்துவங்கள். சிலவேளை வாசிக்க சிரமமாக அல்லது சலிப்பாக இருக்கலாம். நீலம் வெகுவாக சிலாகிக்கப் பட்ட புத்தகம் கூட. ரசிகர்களின் விருப்பமான, fan favorite, புத்தகம்.
  15. எனக்கு மகாபாரத்திலே பிடித்ததே போர்தான். சின்ன வயதில், முதன் முதலில் படித்த போதே, அந்த வெறி தொற்றிக்கொண்டது. பிறகு வெண்முரசு தொடங்கவே அதற்காக எவ்வளவு ஆர்வமாகக் காத்திருந்தேன். அவர் எழுத எழுத ஒவ்வொருநாளும் விடாமல் போர் அத்தியாயங்களை வாசித்தேன். வெண்முரசை நித்தம் வாசித்ததால், அவர் முடிக்கும் போதே முடித்துவிட்டேன். இடையில் பல அத்தியாயங்கள் வாசிக்காமல் விட்டதுண்டு. இப்போ புத்தகமாக வாங்கி வாசிக்க விருப்பம். திரும்பத் தொடங்கவேணும். விட்டதெல்லாவற்றையும் வாசிக்க வேண்டும்.
  16. ஓ அது வேறையா. அப்ப அந்த அரவிந்தன் எங்கே. ஒரு ஆள் எத்தனை கணக்கு வச்சிருக்கீங்க. கனக்க இருக்கு. ஆனி மாதம் இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் போகுது. ஜந்து டெஸ்ட் கொண்ட தொடர். IPLஅ இந்த மாதத்துக்குள் முடித்தால்தான் நல்லது. இல்லாவிட்டால் புரட்டாசி மாதம் தான் நடத்த முடியும். நீங்கள் சொன்ன மாதிரி வேறு நாட்டில் தொடர்வினமோ தெரியல. இலங்கையில கூட வைக்கலாம். IPL போட்டிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று என்று வைத்தாலே வெகு சீக்கிரமாக முடித்து விடலாம். எல்லாம் பணம் செய்யும் வேலை. அவர்கள் உண்மையிலேயே இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
  17. ஓ அப்பிடி வேற நடந்திருக்கா. அந்த வரலாறு தெரியாமப் போச்சே. இதெல்லாம் ஒரு ஜென் நிலை. எவ்வளவு உழைப்பு. ஒவ்வொருநாளும் புள்ளிகளை அறிவிக்க வேணும். அன்ளைய போட்டியைப் பற்றி சாராம்சம் ஒன்று எழுதுகிறார் கிருபன். பிறகு அடுத்த நாள் தெரிவுகள். அதிலேயும் கீழ ஒரு கார்ட்டூன் போடுவார். அதைச் சழைக்காமல் ஒவ்வொரு நாளும் செய்கிறார். அன்றைக்கெல்லாம் கேம்பிறிச் போட்டு வந்து அதைச் செய்தார். அவ்வளவு தூரம் ஓடி களைத்திருப்பார். ஆனாலும் விடவில்லையே. ஜென் நிலை இல்லாமல் வேற என்ன. கந்தப்புவும் அதைச் செய்தார் என்று நினைக்கும் போது..... பணிவன்புடன்.
  18. இப்பத்தான் நிம்மதியா இருக்கு. நான் நினைச்சன் இப்பிடி போட்டி நிப்பாட்டுப்பட்டால் புள்ளி இல்லையென்று. Playoffக்குப் போறதுக்கு அந்த ஒரு புள்ளி எவ்வளவு முக்கியம். பஞ்சாப் இன்னும் ஒரு போட்டி வென்றால் காணும் என்று நினைக்கிறன். டெல்லி இருக்கிற இரண்டையும் வெல்லவேணும். குஜராத்தும். மும்பையும். வெல்லுவினமா.
  19. நாம ஒரு கட்சி வசி. எனக்கும் இப்ப அந்த இரண்டு பேரோடையும் ஒன்றாகச் சேராதபடியா கொஞ்சப் புள்ளிகள் வருது. ஆனாலும் ஆராவது ஒருவர் சோடியாத்தான் வாரார். 😁
  20. இல்லைங்க. அங்கேயும் அதேமாதிரித்தான் தெரியுது. பஞ்சாப் 15 புள்ளிகளுடனும் டெல்லி 13 புள்ளிகளோடும் நிற்கினம். அந்த ஒரு புள்ளி முக்கியமெல்லோ. ஒருக்கா என்ன என்டு கேளுங்க.
  21. ஓ அப்பிடி வேற நடக்குதா. அப்பிடி என்டா அவங்கள் ஏன் கூப்பிடப் போறாங்கள். உங்களுக்கு IPL தலைகீழாத் தெரியும் போல. எல்லாத்துக்கும் பதில் சரியா வைத்திருக்கிறீர்கள். மேற்குப் பக்கமா இருக்கிற இடங்கள்தான் இப்போதைக்கு ஆபத்து. வேற இடங்களில போட்டிகளை நடத்தாலாம் தானே. எல்லாப் போட்டியையும் சென்னையிலோ ஹைதராபாத்திலோ நடத்தலாமே.
  22. ஓ அப்பிடியா. Cricinfo வர வர மோசம். இந்தியாவத்தான் தூக்கிப் பிடிப்பாங்கள். இந்தியாவில ஏதேன் என்டா கப்சிப்.
  23. என்ன புலவரே. இப்பிடிக் கவி பாடிவிட்டீங்களே. மக்கள் நாம் என்ன செய்வோம். 😄
  24. மற்றநாட்டு வாரியங்கள் வாய் திறவாது என்றே நினைக்கிறேன். இதில் விளையாடுபவர்களை வாரியங்கள் அவ்வளவுக்குக் கட்டுப் படுத்துவதில்லை. அதோட BCCIன் கரம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.