Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆரம்பக் கட்ட பந்து வீச்சின் பிரகாரம், பந்து பெரிதாக மேல் எழவில்லை. முன்னங்காலில் வந்து விளையாட வேண்டும். இத சுழலளர்களுக்கு மிகவும் வாய்ப்பாக அமையப்போகின்றது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை களத்தடுப்பைத் தெரிவு செய்திருக்கினம். ஹார்டிக் வந்துவிட்டார். சுழல் பந்தாளர்களின் ஆட்சி இன்று இருக்கும் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழில் நிறைய இடத்தில் அந்த மண் உள்ளது. சில ஊர் பற்றிய பொதுவான அபிப்பிராயங்கள் நிறைய உண்டு. அதில் இதுவும் ஒன்று.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றிகள். செம்பாடு ஒரு அழகான சொல். மண், ஊர், பழம், நிறம்..... இப்பிடியாகப் பல. வலிகாமத்தில் இருப்பவர்களை அவர்களின் குதிப்பாதங்களை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுகின்றவை. நீங்கள் அவ்விடத்தில் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடிச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. விளையாட்டில் எல்லாரும் வீரர்களே. அவர்களின் திறமையால்த்தான் அவர்கள் அணியில் இருக்கிறார்கள். ஏலத்தில் எடுக்கும்போது அவர்களின் திறமை மற்றும் பெறுமதியை வைத்து, அவர்கள் எப்படி அணியில் பொருந்திப் போவார்கள் என்றுதான் பார்ப்பார்கள். வடக்கன் என்ற சொற்பதம் என்னைப் பொறுத்தவரை மிகவும் தவறானது. இவ்வாறு சொல்வதிலும், இவ்வாறு சொல்லப்படும் இடத்தில் இருப்பதற்கும், எனக்கு உடன்பாடில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குருட்டு சாத்திரி மாதிரிதான். எட்டுப் போட்டிகள்தான் முடிஞ்சிருக்கு. இன்னும் 62 போட்டி இருக்கு. இந்த குருட்டு சாத்திரம் எவ்வளவு காலத்துக்குப் போகும் என்று பார்ப்பம். இந்தக் களத்தினாற்தான், நானும் இப்போது ஆர்வமாக ஜபில் பார்க்கிறேன். உங்களுக்கு இல்லாததா வசி. எடுத்துக்கங்க. எல்லாம் நமதே. அதுதான் உண்மையாக நாம் பார்த்தது. சென்னை எப்போதும் தளக்கடுப்பிலும் பந்தை ஏந்துவதிலும் சிறப்பாகச் செயல்படுவர். நேற்று அதில் கோட்டைவிட்டதால் RCB அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். தனிப்பட்ட வீரர்களைக் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாங்க சேர்ந்தே போவம். மழையால் குழம்பினால் No Result. களத்தில் ஒருவரும் அதைத் தெரிவுசெய்யவில்லை. நம்நிலையில் மாற்றம் வராது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்ப்போம் இன்னும் எத்தனை நாட்களுக்கென்று. புவியீர்ப்பத் தத்துவத்தின் படி, மேலே போன எல்லாம் கீழே வந்துதான் ஆகவேண்டும். என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என் கண்முன்னே அப்பிடியே தெரிகிறது. ஏற்றி விட்டு தலைகீழாக விழுவது. பயம்மா இருக்கு. நீங்க வேற. உண்ணாவிரதம் இருக்காதது மட்டும்தான் குறை இல்லையா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது யார். அது யார் என்று களம் அல்லோல கல்லோலம் படப்போகுது. நீங்கள் வேறை கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டு. சுமைதாங்கியே நின்று அலைகின்றது - பாவம் சுமைதாங்க முடியாமல் அழுகின்றது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். எனக்கென்றால் சென்னை ஒரு தயாரிப்பும் இல்லாம வந்த மாதிரிக் கிடக்கு. மூன்று பத்துகளை ஏந்தாமல் தவற விட்டிச்சினம். ஒருவர் கூட அதிரடியாக அடிச்சு ஆடவில்லை. RCBயும் தொடர்ந்து வீரர்களை இழந்து கொண்டு இருந்தினம். ஆனாலும் அவர்கள் ஓட்ட விகிதத்தை குறையாமல் அடித்த படியே இருந்தார்கள். அதுவும் அந்த கடைசி சில பந்துகளில் அடித்த ஆறு ஓட்டங்கள் மிகவும் பெறுமதியான ஓட்டங்களாக அமைந்தன. அந்த ஆறுபேரைப் பத்தியும் ஒருவார்த்தை சொல்லலாமே. 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
15வது பந்துப் பரிமாற்றத்துக்கு முதலே அவை கை விட்டுட்டினம். தோனி செய்யிறதெல்லாம் படு கேவலமான வேலை. அஸ்வினுக்கு முதலே அவர் வந்திருக்கனும். ஏலாது என்டா பேசாம ஒதுங்கிறது நல்லது. பழைய விளையாட்டெல்லாம் இப்போ எடுபடாது. RCBயும் கடைசி பந்துப் பரிமாற்றத்த சுழல் பந்தா போட்டு அவர இரண்டு ஆறுகள் அடிக்க வைச்சினம். CSKக்கு அது காணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கணக்கு சரியா வைத்திருக்கிறீர்கள். ஒண்ணு ஒண்ணா உடைச்சு காப்பி போடுவோமா. எல்லாரும் வரிசையில வாங்க. முட்டைக் காப்பி ரெடியாகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரபாடா நம்மாளு. நான் சொன்ன அதையேதான் அவரும் சொல்றார். நமக்கென்ன. அவங்க என்ன செய்தாலும், நமக்கு இங்க புள்ளியா இல்லையா என்பதுதான் பிரச்சினை. அந்த ஆறு சுமைதாங்கிகளின் நிலைமை என்ன என்பதுதான் எங்கள் கவலையே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றிங்க. தனிய மேல நிற்க பயம்ம்ம்மாக் கிடக்கு. கோசானுக்கு உதவியா இன்னும் ஜந்துபேர் இருக்கினம். அவர் தனிய தாங்கத் தேவையில்லை. வாய்ப்பில்லை ராசா என்று எப்போதும் தமிழன் வருவார் பாருங்க. முட்டை படத்தைப் போட்டா சரியா. முட்டை வரும்போது நாமளும் பொரிச்ச முட்டையாக் குடுப்பம். இப்ப எத்தினை தொடர் முட்டை வாங்கினேல். உங்களுக்கு நீங்களே குடுத்துக் கொள்ளுறீங்கள் போல. படத்த அழிக்காம வைத்திருங்க. அடிக்கடி பார்த்துக்கலாம். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பூரான் புரட்டி எடுத்தார். என்னா அடி. ஆறெல்லாம் பறபற என்று பறக்குது. இறுதியில் மிக இலகுவான வெற்றியாக முடிந்தது. 10 புள்ளிகளிலேயே தங்கி விட்டேன் போலிருக்கிறது. இனி எல்லாரும் முன்னே வரலாம் போல. நாம ஒதுங்கியே இருப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒருவாறு 190 அடித்துவிட்டினம். வந்த எல்லோரும் அடித்து துவைப்பதற்காக வந்து, உருப்படியாக ஒரு உடுப்பையும் தோய்க்கவில்லை. ஒரே ஒருவர் கடைசி பந்து பரிமாற்றம் வரையும் நின்று இருந்தாலும் ஒரு 220 அடித்து இருக்கலாம். பார்ப்போம் LSG எப்படி துரத்த போகிறார்கள் என்று. சர்துல் இப்போது ஊதா தொப்பியை பெற்றுக் கொண்டுள்ளார். அடி விழுந்தாலும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். நான்கு விக்கெட் அவரின் கணக்கில். இந்த முறை எல்லா சர்மாவும் அடித்து வெளுக்கினம். இவரும் ஏதேனும் செய்வார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திருவாளர் வசி அவர்களே, தன்னடக்கம் இருக்கலாம் அதற்காக இவ்வளவு அடக்கம் தேவை இல்லை. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நுட்பமாக அலசக்கூடியவர் நீங்கள். அதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். குப்பை கொட்டுவதற்கு நாங்கள் கொஞ்சம் பேர் இங்கே இருக்கின்றோம். நாங்கள் அந்தத் திணைக்களத்தைப் பார்த்துக் கொள்கின்றோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் இல் இது நடக்கவே நடக்காது. எட்டு போட்டிகளை ஒரே நாளில் வைத்தால், யார் போட்டிகளை பார்ப்பது. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை எப்படி சந்தைப்படுத்துவது. பணத்தை எப்படி அள்ளுவது. இது இப்போது ஒரு இரண்டு மாத திருவிழா. எங்கட நல்லூர் திருவிழா போன்று. ஒரே ஒரு நல்ல விடயம், வீரர்கள் எல்லாரும் நன்றாக சம்பாதிக்கின்றார்கள். நன்றாக வாழ்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் இதற்கு தகுதியானவர்களே. விளையாட்டு வீரனுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மைதானங்களை விட இந்த ஐபிஎல் போட்டிகளே பணத்துக்காக தான். ஆறுகளும் நான்குகளும் பறந்தால் தான் மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொண்டாட்டம். அதிகமான விதிகள் மட்டையாளர்களுக்குச் சாதகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் நான் ஜபிலை பெரிதாகப் பார்ப்பதில்லை. இந்தக் களத்தில் கலந்து கொண்ட பின்னர் தான் கூடுதலாக பார்த்திருக்கின்றேன், பார்த்துக் கொண்டிருக்கின்றேன், தொடர்ந்தும் பார்ப்பேன் போல தான் உள்ளது. ஏனென்றால் இந்தக் களம் கொடுக்கும் போதை. இந்த முறை எந்த அணி 300 ஓட்டங்கள் அடிக்கும் என்று அடிக்கடி கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நோக்கமே இப்படி உசுப்பி விட்டு பணம் பார்ப்பது தான். கிரிக்கெட் என்ற விளையாட்டின் அடிப்படையே காணாமல் போய்விட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கொஞ்ச நாளைக்கு இப்பிடியே இருக்கும் போல. காத்து நம்ம பக்கம். அவர்களின் பயிற்சியாளரும் அதையேதான் சொன்னார். ஹசரங்கவ அனுப்பியது வேலை செய்யவில்லை. சிம்ரன கடைசி பந்து பரிமாற்றத்துக்காக வைத்திருந்தார்கள் போல. அதுவும் வேலை செய்யவில்லை. அவர்களும் நேற்று உப்புவிக்க போனா மழை பெய்தது. அவர்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. அந்தக் காத்து நம்ம பக்கம் வீசுது. நாங்கள் அந்த மாவையும் உப்பையும் படுத்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றோம். உருண்டு பிரண்டு சிரித்தபடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் போட்டி பார்க்கிறேல போல. Scorecard முழுக் கதையும் சொல்லாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போறபோக்கில் 170 அடிச்சாலே பெரிது. 12வது பந்துப் பரிமாற்றத்தில் உள்ள ஓட்டத்தை இரட்டிப்பாக்க முடியும். யாராவது ஒருவர் நின்று ஆடவேண்டும். ஆனால் ஒருவருக்கும் அந்த நினைப்பே இல்லை போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன ரொம்ப அடக்கி வாசிக்கிறியல். இது தெரிந்ததுதான். எந்த விளையாட்டிலும் எதுவும் நடக்கலாம். இப்ப என்ன.... ராஜஸ்தான் வெல்லுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னமோ சொல்லுங்க. ரண்டு பக்கமும் கதை விடலாம். என்னிலைமைதான் கவலைக்கிடம். தொடர்ந்து 5 போட்டியில் வென்றபடியால், புள்ளிவிபரப்படி, அடுத்த போட்டியில் புள்ளி இல்லாமல் போவதற்கு வாய்ப்பு மிக அதிகம். இதன்படி RR தோற்றுத்தான் ஆகவேண்டும். ஜயகோ. என்னவெல்லாம் நடக்கப் போகுதோ.