இசைத்துறையில் வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.
இசை கேட்டால் புவி அசைந்தாடும்….!
இசையால் வசமாக இதயமுண்டோ….!
அந்தவகையில், இசை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள்…!
v பியானோ இசைக்கருவியில் மொத்தமாக 88 விசைக்கருவிகள் உண்டு. இதில் 52 வெள்ளைவிசைக்கருவிகளும், 36 கறுப்பு விசைக்கருவிகளும்அடங்கும்.
v உலகில் மிகப்பழமையான இசைக்கருவியாககருதப்படுகின்ற கழுகின் எலும்பினால்தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல் தென்மேற்குஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும். இது 35,000 ஆண்டுகள்பழமைவாய்ந்தது என ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.
v இசை மீதான பயம் மெலோபோபியா (Melophobia) எனப்படுகின்றது.
v அயர்லாந்து நாட்டு குற்றி நாணயத்தில் உள்ளஇசைக்கருவி யாழ் (Harp) ஆகும்.
v 1877ம் ஆண்டு ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்தஇசையமைப்பாளர் ஜொகன்னஸ் பிராம்ஸ்அவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கெளரவபட்டமளிக்க முன்வந்தது, ஆனால் படகு பயணபயத்தின் காரணமாக தனக்கானகெளரவமளிப்பினை அவர் நிராகரித்தார்.
v முதன்முதலாக தொலைபேசி இணைப்பினூடாகஇசையானது 1876ம் ஆண்டுஅனுப்பப்பட்டது. 1876ம்ஆண்டு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.
v உலகில் அதிகளவில் விற்பனையாகும் இசைக்கருவிஹார்மோனிகா ஆகும்.
vஅண்மைய நாட்களில் DJ (Disc Jockey)என்கின்றவார்த்தை மிகப்பிரபலமானதொன்றாகவிளங்குகின்றது. இவ்வார்த்தை முதன்முதலில் 1937ம்ஆண்டு பயன்படுத்தப்பட்டது.