-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
படத்தில் இருப்பது சூடான் நாட்டிலுள்ள ஒரு மண் கட்டிடம். இது போன்ற மண் வீடுகள் இருப்பிடமாகவோ அல்லது தானியங்களை சேமிக்கவோ பயன்படுத்தப்படுகின்றன
-
*ஆப்பிரிக்காவில் ஒரு தமிழ் பேசும் கிராமம்*அன்பார்ந்த தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். ஆதித் தமிழினத்தின் தொன்மைக்கான அடையாளங்கள் உலகம் முழுக்க விரவியுள்ளது. ஆனால் அதைத் தமிழன் தொலைத்துவிட்டு நிர்கதியாய் நிற்கின்றான் பல நூறாண்டுகளாய். தொலைத்துவிட்ட இடங்களில் மீண்டும் தமிழை துளிர்க்கச் செய்யும் முயற்சியை ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம் முன்னெடுக்கிறது. அதுமட்டுமின்றி நமது உற்ற நண்பர்களும் சகோதரர்களுமான ஆப்பிரிக்க உறவுகளுக்கு தமிழையும் தமிழ் நாட்டையும் திறந்துவிட்டு அவர்களை தமிழர்களுடன் கலக்க வைக்கும் முதல் முயற்சியாக ஆப்பிரிக்காவில் ஒரு தமிழ் பேசும் கிராமத்தை உண்டாக்குவதை ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம் முன்னெடுக்கிறது. ஏற்கனவே வணக்கம் ஆப்பிரிக்கா இயக்கம் மூலம் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் வணக்கம் என்கிற சொல்லின் மூலம் தமிழை அறிமுகப்படுத்துவதை ஒரு இயக்கமாக முன்னெடுத்திருந்தோம். அதன் தொடர்ச்சிதான் ஆப்பிரிக்காவில் ஒரு தமிழ் பேசும் கிராமத்தை கட்டமைக்கும் முயற்சி. தமிழ் பேசும் கிராமம் என்பது ஆப்பிரிக்காவில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள பள்ளிக்குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் அவர்களுக்குள் ஊடுருவச்செய்து ஒரு ஆப்பிரிக்க கிராமம் முழுவதையும் தமிழ் பேசும் கிராமமாக அவர்கள் விருப்பத்துடன் கட்டமைப்பதுதான். இதற்காக அந்த கிராமத்தில் ஒரு தமிழ் பள்ளிக்கூடம் முதற்கொண்டு அங்குள்ள குழந்தைகளுக்கான பள்ளிச் செலவுகள் மற்றும் அவர்களை தமிழ் நாட்டிற்கு கூட்டிவந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் அறிமுகப்படுத்துவது வரையிலானா எல்லா ஏற்பாடுகளையும் ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம் முன்னெடுக்கும். இது ஒரு மொழித்திணிப்பு முயற்சி அல்ல மாறாக இதுவொரு கலாச்சார பரிமாற்றமேயாகும். ஆப்பிரிக்காவில் தமிழ் கிராமம் அமைப்பதைப்போலவே தமிழ் நாட்டில் ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்புகள் ஆப்பிரிக்க கிராமம் அமைப்பதற்கும் முத்தமிழ்க்கூடம் துணை நிற்கும் என்பதையும் அறிவித்துக்கொள்கிறோம்.ஆப்பிரிக்காவில் தமிழ் பேசும் கிராமம் அமைப்பதன் முதல் முயற்சியாக நைஜீரியாவில் அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு ஒரு தமிழ் கிராமம் அமைக்கும் பணியை இந்த ஆண்டிலேயே முடுக்கிவிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். எப்படிப்பட்ட கிராமம் அமைய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் அறிவுரைகளும் உலகத்தமிழர்களுடமிருந்து வரவேற்கப்படுகிறதுஆப்பிரிக்காவில் தமிழ் கிராமம் மட்டுமின்றி மொரிசியஸ் மற்றும் ரீ யூனியன் தீவுகள் போன்ற தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் தமிழ் மக்களை உள்ளடக்கிய ஆனால் தமிழ் மொழியை மறந்த பிற நாடுகளிலும் தமிழ் மொழியை மீண்டும் துளிர்க்கச் செய்யும் முயற்சிகளையும் தமிழறிஞர்களின் துணைக்கொண்டு ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம் முன்னெடுக்கும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துக்கொள்கிறோம்அன்புடன்அதியமான் கார்த்திக்நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம்