-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
-
அந்த ஊர் ஜமீனின் மூன்றாம் தலைமுறை குடும்பத்தில் வாக்க பட்டு போனதிலிருந்து அத்தை இப்படி தான்.காலையில் குளித்துவிட்டு அடுப்படியில் நின்றால், இரவு வரை வேலை. கடைசியில் பாத்திரம் கழுவி கவிழ்த்துவைத்து விட்டு உறங்க செல்ல வேண்டும்.மாமனார், மாமியார், கணவன் பிள்ளை, நாத்தனார் குடும்பங்கள் என அனைவர்க்கும் சமைக்க வேண்டும்.மூன்று வேளையும் சமைக்கவேண்டும். அப்பொழுது எல்லாம் விறகு அடுப்பு தான்..இதற்கிடையில் பாட்டியின் தொந்திரவு வேறு, கைவலி, கால் வலி என்று.. இதற்கு தனியாக கஷாயம் காய்ச்சி தரவேண்டும்... போதும் போதும் என்றாகிவிடும் அத்தைக்கு..உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் வேறு....மாமாவிற்கு அவர் தொழிலிற்கே நேரம் சரியாக இருந்தது. உடல்நிலை சரி இல்லாத நேரம் கூட அத்தை அடுப்படியில் வேகாத குறையாக வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்...ஜமீன் பரம்பரை என்பதால், நல்லது கேட்டது என சொந்தம் வந்தவாறே இருக்கும் எந்நேரமும். ஓய்வும் இல்லை விடுமுறையும் இல்லை. மாமாவும் பெரிதாக எதையும் கண்டுகொள்வதில்லை...திடீரென ஒரு நாள் அத்தையை காணவில்லை... சொல்லாமல் கொள்ளாமல் அம்மா வீடு சென்றுவிட்டாள் உடல் நிலை சரியில்லாமல். மாமாவிற்கு அத்தை என்ற ஒரு மனுஷி இருப்பதே அப்போதுதான் லேசாக உரைத்தது.பாட்டியே இப்போது எல்லா சமையல் வேலை பார்த்து கொண்டிருந்தார், ஆயிரம் வசவுகளோடு. வசவு சொல் தாங்காமல் கிளம்பினார் மாமா, அத்தையை அழைத்துவர,..வீட்டு வேலை செய்ய ஆள் இல்லையாம்...
-