நக்கல்,நையாண்டி,சமூகத்தைப்பற்றிய பார்வை என்று பின்னி எடுத்த பெர்னார்ட் ஷா வின் வாழ்க்கை வெகு சுவாரசியமானது.
ஜோன் ஆஃப் ஆர்க் எனும் வீரப்பெண்மணியை இங்கிலாந்து தேசத்தவர் திட்டமிட்டு கொன்றதாக வரலாறு சொன்ன பொழுது அவரவரின் பார்வையும் சரியே என்கிற தொனியில் நாடகம் எழுதினார். அது அவருக்கு நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருதை வாங்கித்தந்தது. இன்றைக்கும் அது ஒரு சாதனைநோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கால் செய்தார்கள்,”உங்களுக்கு நோபல் பரிசு ஷா ” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்கு கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை ;”அது போன வருடம் எழுதியது,உயிருக்கு தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்கு கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ள போகவே இல்லை.
வந்த பணத்தை இலக்கிய பணிகளுக்கு கொடுத்து விட்டார்
“ஷேக்ஸ்பியரை விட எனக்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் அதிகம் தெரியும் “என்றார் அவர். அது உண்மையே;அதே போல அவரை விட என் எழுத்து மேலானது என்றும் சொல்வார். பல ஷேக்ஸ்பியர் காதலர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரு விழாவுக்கு அழைத்தார்கள். ஷா பல வரிகளை சீரியஸ் ஆன முகத்தோடு சொல்ல யாரும் கைதட்ட வில்லை. முடிந்ததும் ஷா,”இதுவரை நான் பேசியவை ஷேக்ஸ்பியரின் வசனங்கள்” என்று விட்டு கம்பீரமாக இறங்கினார்.
“என்னுடைய புத்தகங்களை பாடமாக வைத்து பிள்ளைகளை சாகடிக்காதீர்கள்,அப்புறம் ஷேக்ஸ்பியர் போல என்னையும் அவர்கள் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்ற நல்லவர்