Everything posted by தப்பிலி
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
வீரவேங்கை பன்னீர் இரத்தினம் பன்னீர்ச்செல்வம் கல்முனை, அம்பாறை. வீரச்சாவு: 13.08.1986 இரா. பன்னீர்ச்செல்வம், இளைஞர் பேரவையின் முக்கிய உறுப்பினர். சிறந்த பேச்சாளர். சிறிய வயதிலேயே அமிர்தலிங்கத்துடன் கூட்டணி மேடைகளில் பேசுவார். நல்ல கவிஞரும் கூட. சில காலம் சிறையில் இருந்தவர். அந்தக் காலத்தில் அம்பாறையில் விடுதலை தொடர்பாக வெளியிடப்படும் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் எல்லாவற்றிலும் இவரது எழுத்துக்கள்தான். இன்பம் செல்வம் போன்றோருக்கு நெருக்கமானவர். இவரது சகோதரியும் ஒரு ஆரம்ப கால பெண் போராளி. நல்ல அரசியல் அறிவுள்ளவர். இயக்கப் பிளவுகளை வெறுத்தவர். எல்லா இயக்கத்தவருடனும் வேறுபாடின்றிப் பழகுவார். 84 இல் இயக்கங்களின் மிதமிஞ்சிய வளர்ச்சியைப் பார்த்து 'சரியான செயல்திட்டங்களின்றி பிரிந்து நின்று போராடினால், செகுவராப் புரட்சியில் பத்தாயிரம் சிங்கள இளைஞர்களின் உயிர்களும் வீணாகப் போனது போல தமிழ் இளைஞர்களின் உயிர்களும் வீணாகிப் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்' என்று இவர் கவலைப்பட்டுச் சொன்னதை மறக்க முடியவில்லை. ஆரம்ப காலங்களில் அம்பாறைப் பகுதியில் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவராக இருந்தாலும், இவரை ஒரு சிறந்த அரசியல் போராளியாக அடையாளப்படுத்த முடியும். லெப்டினன்ட் சைமன் கனகரத்தினம் ரஞ்சன் பொத்துவில், அம்பாறை வீரச்சாவு: 13.02.1985 ரஞ்சன் கனகரத்தினம், புலிகளால் (பிரபாகரன், உமா மகேஸ்வரன் பிரிவின் முன்) சுடப்பட்ட பொத்துவில் எம்பியின் மகன். பரமதேவாவுடன் சேர்ந்து தனிக்குழுவாக இயங்கி செங்கலடி வங்கிக் கொள்ளையில் பிடிபட்டு சிறை சென்றவர். சிறையிலிருந்து வந்த பின் குடும்பத்தினர் இவரை கனடா அனுப்ப முயற்சிக்க, கனடா போவதாக போக்குக் காட்டிவிட்டு இந்தியா சென்று புலிகளில் இணைந்து கொண்டார். பண்டிதரின் மறைவிற்கு பதிலடியாய் நடத்தப்பட்ட கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலில் இவர் வீர மரணமடைந்தார். புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முதன் முதலில் அதிகளவு புலிகள்(16) பலியானார்கள். அத்துடன் புலிகளின் பலம் குறித்து இலங்கையரசை விழிப்படைய வைத்த தாக்குதல்.
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
நன்றி இசைக்கலைஞன், விசுகு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, மீண்டும் தெரிந்தவற்றை எழுதுவேன்.
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
வீரவேங்கை விஸ்வம் முத்துலிங்கம் கருணாநிதி கல்முனை, அம்பாறை. வீரச்சாவு: 18.03.1985 கருணா (விஸ்வம்) ஆரம்பகால உறுப்பினர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தவர். சிறந்த ஓவியர். வர்த்தக விளம்பரப் பலகைகள் வரைபவர். ஆயுதப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது தோள்பட்டை மூட்டை விட்டு விலகும் பிரச்சனை இருந்தது. அதனால் தாக்குதல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இயக்கத்தை விரிவு படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுவந்தார். இந்த நேரத்தில் பிரித்தானிய SAS மற்றும் இஸ்ரேல் பயிற்சி முடித்து வந்த முதற்தொகுதி சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடியில் முகாம் அமைத்துக் கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஈபிஆர்எல்எப் , டெலோ, புளொட் இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு அழிக்கப்பட்டார்கள். போராளிகளிடம் இருந்து தகவல்களை பெற்றுக் கொண்டபின், அவர்களின் கழுத்தில் டயரை போட்டு தீயிட்டுக் கொளுத்திவிடுவார்கள. அதிரடிப்படையுடன் வரும் முகமூடி அணிந்த ஒருவரே எல்லோரையும் துல்லியமாக அடையாளம் காட்டினார். போராளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டார்கள். ஒருநாள் கருணா துவிச் சக்கர வண்டியில் பயணிக்கையில், ஒழிந்து இருந்த அதிரடிப்படையின் ட்ரக்கில் இருந்த அந்த முகமூடி தலையாட்டி விட்டான். கருணாவை பிடிக்க முயற்சிக்கையில், கருணா அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டு பிடிக்க வந்த அதிரடிப்படையினனின் M16 துப்பாக்கியை பறித்து மற்றவர்களை சுட முயற்சித்தார். அந்த கைகலப்பில் அவரது தோள்மூட்டு விலகியதால், பலவீனமான நிலையில் அதிரடிப்படையியானரால் வாகனத்திற்குள் தூக்கி எறியப்பட்டார். சயனைட் அடித்துக் கொண்டு, அங்கிருந்த காட்டிக் கொடுக்கும் முகமூடியின் முகத் துணியை கிழித்து, அந்த முகமூடியின் பெயரைச் சொல்லிக் கத்தினார். அந்த முகமூடி மத்திய வயதுடைய ஒரு குடும்பஸ்தர். வன்னிப் பக்கம் அரச பதவியில் இருந்தவர். அதிரடிப்படையினர், தாங்கள் முதன் முதலாக ஒரு உண்மையான புலியை பிடித்துள்ளதாகவும் அவனை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்றும் கத்திக் கொண்டு பல முயற்சிகள் செய்து அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
மாவீரர்களுக்கு வீரவணக்கம். இணைப்பிற்கு நன்றி மின்னல். விடுபட்டுப்போன சிலரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்
நன்றி அகூதா. இந்த வீடியோவின் மூலப் பிரதிகள் (hard copy) உண்டா? அவற்றை தனித்தனியே pdf எடுத்தால் நல்லம். போராளிகளின் விவரங்களை பார்க்க முடியவில்லை.
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு. ஜீவாவிற்கும் காலம் தாழ்த்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
பெயரை தமிழில் மாற்றியதிற்கு மிக மிக நன்றிகள் மோகன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Imageshack இணையத்தில் உங்கள் படத்தை தரவேற்றி பின் அதனுடைய direct link ஐ, யாழ் இணையத்தில் எழுதும் பகுதியில் உள்ள image ஐ கிளிக் பண்ணி அதில் ஒட்டிவிடுங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில வேலைத் தளங்களில் சகல மென்பொருட்களையும் தரவிறக்க அனுமதியளிக்கப் படாது. நான் google இல்தான் தட்டச்சு செய்து ஓட்டுவேன். 'eகலப்பை' ஐ தரவிறக்க ஏதும் தடைகள் உண்டா?
-
பெயர் மாற்றங்கள்.
சிரமமில்லாவிட்டால் எனது பெயரை தப்பிலி என்று தமிழில் மாற்றி விடவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமியண்ணைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்ப இனி கொஞ்சம் போட்டுட்டுத்தான் யாழை வாசிக்கலாம் போல.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்தின் கடைசிப் பதிவை பார்க்க முனைகையில், Today என்பதை அழுத்தும் பொழுது சிலவேளை கடைசியாகப் பதிந்தவரின் Profile இற்கு போகிறது. எழுத்துக்களின் அளவு பெரிதாகவும் அருகிலும் இருப்பதால் அப்படி நடக்கிறதோ தெரியாது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கும் நாட்டாண்மைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதரவு இல்லாதவர்கள், கைவிடப்பட்டவர்கள் எல்லாம் அனாதைகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாயக அனாதைகளுக்கு உதவும் சாந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருணாநிதி மகன் ஸ்ராலின் மோசடி வெற்றி.
58 வயதெல்லாம் சின்னப் பெடியன்ர வயதா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய தோழன் புரட்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.