Jump to content

nilmini

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    929
  • Joined

  • Last visited

  • Days Won

    14

Everything posted by nilmini

  1. எழுதுமட்டுவாளில் இருந்து எமது உறவினர் பலர் நுணாவிலில் கலியாணம் செய்திருக்கிறரார்கள்
  2. மிகவும் நன்றி கு.சா அண்ணா. மடகாஸ்கர் என்று புதுசா ஒரு திரி தொடங்கியுள்ளேன்.
  3. 2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள் பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம். இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றன. மேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர்.
  4. நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள். வீட்டு வேலை நான் நினைத்தது போல் இன்னும் முடிக்கவிலை. ஜூலை மாதம் செய்யலாம் என்று இருக்கிறேன்.
  5. அதுதானே இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஐடியா தருவதால் கட்டாயம் ஒருக்கால் ட்ரை பண்ணலாம்🤣. எமது வீட்டிலும் இதே கதைதான். ஓட்டை உடைக்குது என்று மாமா அருமந்த மாமரத்தை தறித்துப்போட்டார் . நின்றது ஒரே ஒரு பனை. அதையும் ஆண் பனை என்று தறிச்சாச்சு. வேப்பம் மரம் எப்பவோ இல்லாமல் போய்விட்டது. எனது முயற்சியால் தான் இப்ப 10 கமுகு, 3 தென்னை, ஒரு விளாட்டு நட்டிருக்கு.
  6. என்ன ஈழப்பிரியன் , கு. சா அண்ணாக்கள் எல்லாரும் ஒரே கள்ளுக்கொட்டில் கதையா கிடக்கு? அப்பத்துக்கு கலக்கும்போது அம்மம்மா கள்ளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து கொண்டுவந்து வைத்ததுதான் ஞாபகம் வருகுது. கள்ளில் ஒரு after taste இருக்கு என்று சொல்ல்கிறார்கள் உண்மையா? இப்பதான் கு .சா அண்ணா ஆர் என்று தெரியுது. உண்மையிலேயே நல்ல ஐடியா. மேலும் விளக்கம் தர முடிந்தால் பகிரவும். ஆடி மாதம் போய் வேலைகளை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.
  7. நன்றி நிலாமதி. சின்னனில பிளா வில் கூழ் குடிக்க ட்ரை பண்ணினான். ஆனால் பெயர் தெரியவில்லை. சிரட்டையில் குடித்திருக்கிறேன் நன்றி நுணாவிலான். கட்டாயம் ஒருக்கா செய்து பார்க்கவேணும். உங்கள் புனை பெயர் எமது அய்யாவின் (அம்மாவின் அப்பா) ஊரை ஞாபகப்படுத்துகிறது (எழுதுமட்டுவாள்).
  8. புழுதி மண்ணுக்குள்ள தென்னங்குத்தி. சூப்பர் ஐடியா. அது என்ன பிழா? கேள்விப்படேல. கிணத்துக்கு துலா செய்து தோய்க்கிற கல்லு, வக்குகள் எல்லாத்தயும் நல்லா பொலிஷ் பண்ணலாம் என்று இருக்கிறன்.
  9. குடிலை கொஞ்சம் பெருப்பிச்சு வாங்கு or கதிரை போடலாம் என்று இருக்கிறன் கு.சா அண்ணா.
  10. இவர் தொலைக்காட்சியில் பத்து வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் நடத்துபவர். உறவுப்பாலம் என்னும் நிகழ்ச்சி மூலமாக நிறைய காணொளிகளை பார்த்திருக்கிறேன்.. நெதர்லாந்தில் லிபரா தொலைபேசி கொம்பனி நடத்துகிறவர்
  11. தோட்டம் 1 பரப்பில் தான் செய்திருக்கு. ஆனால் நல்ல டிசைன் பண்ணி செய்திருக்கிறர். அது அம்பரல்லா காய் அண்ணா. சம்பல் சொதி செய்யலாம். சிங்களவர் அச்சாறும் செய்வார்கள்.
  12. சுந்தரம் பிரதேர்ஸ் இன்னும் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். 2019 இல் போயிருந்தேன். மாமா இன்னும் அங்கு மருந்துகள் வேண்டுகிறவர். அண்ணாச்சி கடை, ராசா கடை எல்லாம் இல்லாமல் போய்விட்டது.
  13. வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான். மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்
  14. சிலை வைத்த நோக்கம் எதுவோ அது கட்டாயம் நாடாகும் சிறி ( உண்டியல் உற்பட). இலங்கையிலும் அப்படி சட்டங்கள் இருக்குது. உள்ளூர் ஆட்சியாளர்கள்தான் கவனிக்கவேணும். மிகவும் நன்றி சுவி
  15. வரமாட்டார்கள். மோடிக்கு பின் வருபவர்களும் இதே கொள்கையுடன் செயல்பட வேணும்
  16. மோடி ஆட்சி இருக்கும்வரை கை வைக்க முடியாது. பிறகு என்னென்னமாதிரியோ.
  17. அதென்றால் மெத்த சரிதான். புத்தர் குடியேற முன் எங்கெங்கு சிலைகள் வைக்கலாம் என்று பார்த்து பார்த்து வைத்துவிடவேணும். நிச்சயம் கள்ளக்குடியேற்றம் என்று சாட்டு சொல்லுவான். வீடு மற்றும் தோட்டம் படங்கள் கொஞ்சம் இணைக்கலாம் என்று இருக்கிறேன். இவ்வருடம் போய்த்தான் நான் நினைத்தமாதிரி பினிஷிங் செய்து முடிக்கவேணும்.
  18. வேலைக்கு போக தொடங்கி இருப்பீர் என்று தெரிந்தாலும் இந்தப்பதிவை இன்றுதான் பார்த்தேன் சிறி. வீட்டில கவனிப்பு பலமாக இருந்திருக்கு. வேலையில் ஓடியாடி பிசியாக இருக்கும்போது உடல் நிறை விரைவாக குறைந்து விடும். உமது அனுபவங்களை தொடர்ந்து பதிவிடும். பிகு: அது எப்படி Qtexபற்றி கேட்காமல் இருக்கமுடியும்?
  19. உண்மையில் நான் சிலையை வடிவாக பார்க்கவே இல்லை. கருங்கல் மற்றும் உலோகங்களால் சிற்பிகள் செய்த சிலைகள் தான் எனக்கு விருப்பம். தகவலுக்கு நன்றி
  20. இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.
  21. நல்லபடியா முடிந்தால் சந்தோசம். மோடியின் சிவசேனா, ருத்ரசேனா என்று சந்திக்கு சந்தி சிவபெருமானுடன் கொடிகளும் பறக்குது. சிலைகளின் தரமும் (முகவெட்டு, நிறங்கள்) குறைவு. இந்த சாந்தி தான் ஆலடி சந்தி (எமது வீடு, சிறியின் வீடுகள் இருக்கும் பலாலி வீதி, பழம் வீதி சந்தி)சிறி சொன்னமாதிரி பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஆலமரத்தை கவனிப்பார் இல்லை. கன நாள் படங்கள் பதிவேற்றாமல் இருந்து எப்படி பண்ணுவது என்று மறந்து விட்டேன். யாரவது எப்படி என்று கூறமுடியுமா?
  22. THE ELEPHANT WHISPERERS - ஒரு பார்வை. பல இடங்களில் கண் கலங்கி. மனம் உளறியது. காட்டில் வழி தவறி விடும் யானை குட்டி அடுத்தடுத்து இரண்டு காட்டிலாகா அதிகாரிகளால் பொம்மன் பெல்லி இணையரிடம் தரப்படுகிறது. அவர்கள் அதை வளர்த்து ஆளாக்கி அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்பது தான் நடைமுறை. ஆனால் சொந்த குழந்தைகளாகவே ஆகி விடும் அவைகளை பிரிய முடியாமல் அந்த இணையரின் ஆற்றாமை காடதிரும் மௌனம். யானை.... உருவத்தில் தான் அத்தனை பெரிதாக இருக்கிறது. உள்ளம் ரொம்ப இலகு. அதற்கு பேசுவது புரிகிறது. கேட்கறது. பதில் கூட பேசுகிறது. அழுகிறது.. சிரிக்கிறது.. பசிக்கையில் பசிக்கிறது என்று கேட்கறது. அதன் மொழி நாம் அறியவில்லை என்பதற்காக அதற்குப் பேச வராது என்று முடிவுக்கு வரக்கூடாது. அதற்கு அதன் மொழி தெரிகிறது. அதை தெரிந்து கொண்ட பொம்மனும் பெல்லியும் அளாவுகிறார்கள். அன்பு செய்கிறார்கள். பார்த்து பார்த்து உணவளிக்கிறார்கள். குளிக்க வைக்கிறார்கள். பொட்டு வைத்து சடை போட்டு விடுகிறார்கள். மூத்தவன் ரகு. இளையவள் அம்முக்குட்டி. குட்டியில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தடுமாறும் யானை குட்டி ஒரு குழந்தை. அதற்கு விவரம் தெரிவதில்லை. பெல்லியின் கையை பற்றிக் கொண்டு தாயின் அரவணைப்பில் தன்னை தக்க வைத்துக் கொள்வதில் கிடைக்கும் ஆசுவாசத்தை அப்பப்பா மனம் சிலிர்ப்பதை.... மௌனம் சிரிப்பதை உள்ளூர உணர முடிகிறது. அவைகளோடு பந்து விளையாடுவதும்.. நீரில் குளிக்க வைக்கையில்... ஒத்துழைத்து தானும் நீருக்குள் மூழ்கி எழுந்து....யானைகளின் சேட்டைகளை பார்க்க பார்க்க முக்தி பெறுகிறோம் நாம். மேல படுத்தீன்னா பாரு... தள்ளி படு என்று அதனிடம் பேசும் பெல்லி ஒரு முதிர்ந்த சிறுமி. எப்போதும் சிரித்த முகத்தில் தாய்மை பூக்கிறது. அதனிடம் விளையாட்டு காட்டி தூங்க வைத்து... அவர்கள் அதன் தலையோடு தலை வைத்து தடவி கொடுத்தபடியே பேசுவதும் கொஞ்சி கொள்வதும்... பார்க்க கண்கள் துளிர்க்கும். ரகுவை பிரிய நேருகையில் அந்த அந்த இணையரோடு அம்முக்குட்டியும் தவித்து போவதை பார்க்க முடியவில்லை. அம்முக்குட்டி அங்கும் இங்கும் அலைந்து கத்தி கூச்சலிடும் காட்சி கலங்கடித்து விடுகிறது. பொம்மன் இது பற்றி பேச பேசவே அழுகிறார். நாமும் அவரோடு விசும்புகிறோம். பிரிந்த சென்ற பிறகும் காட்டுக்குள் எங்காவது பார்க்க நேரிட்டால்.. ஓடி வந்து உடன் நின்று கொள்ளும் ரகு... பாசக்காரன். பிடிக்காத உணவை வாய்க்குள் வைத்து தள்ளினாலும்.. கொஞ்ச நேரம் வாய்க்குள் வைத்து விட்டு பிறகு துப்பி விடும் சிறு பிள்ளையாக இருக்கும் யானைகளையா.... யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என்று செய்தி வாசிக்கிறோம் நாம். அவைகள் உலகம் வேறு. அதற்குள் நாம் போகாமல் இருந்தால் அவைகள் நம் உலகத்துள் நிச்சயம் வராது. அம்முக்குட்டி இவர்களிடம் வந்து சேர்க்கையில் எலும்பும் தோலுமாக இருக்க அதற்கு ஓட்டம் கொடுத்து.. சோறு கொடுத்து... பால் கொடுத்து வளர்த்து பலப்படுத்திய இந்த இணையரை சுற்றுவட்டாரத்தில் யானையின் அப்பா அம்மா என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அது எங்களுக்கு பெருமை தான் என்று கூறும் இவர்கள்... வேறு வேறு கணவன் மனைவி என்பதும்... இருவருக்கும் இணையர் இல்லை என்பதும்... இந்த யானைகளின் வழியே அவைகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் காட்சியும் நம்மை நெகிழ்த்தி விடுகிறது. அதுவும் திருமணம் முடிந்து நால்வரும் வரிசையாக நின்று மாலையும் கழுத்துமாக போட்டோ எடுத்துக் கொள்ளும் காட்சி பேரழகு. பேரன்பின் தத்துவம் பிறக்கும் இடமாக இவர்கள் வாழ்விடத்தைக் காண்கிறேன். சிறு குழந்தைகளைப் போல தான் எது கிடைத்தாலும் எடுத்து வாய்க்குள் ...போடுவதும். அப்படி முள்ளோடு சேர்ந்த புல்லை அம்முக்குட்டி வாய்க்குள் போட்டு விட அதை பார்த்து விட்ட ரகு... மெல்ல தும்பிக்கையை அதன் வாயில் விட்டு எடுத்து வெளியே போடுகிறது. யாருக்கு அறிவில்லை என்று கேட்க தோன்றும் காட்சி இது. இதற்கிடையே மூங்கிலால் ஆன வீட்டு வாசலில் சாவகாசமாக நடந்து போகும் ..பன்றிகள். இந்த பக்கம் யானை விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் குரங்கு குடும்பங்கள்... அவைகள் தின்னாமல் போட்டவைகளை இவைகள் எடுத்து தின்பதும்... என பார்க்கவே அத்தனை அழகு. கேமராவுக்கு போஸ் கொடுக்கும் மான்கள்.... மயில்கள் என்று காடென்பது கவிதை. கருணை உள்ளோருக்கு வாசிக்க வாய்க்கிறது. தேவைக்கு தான் காட்டில் இருந்து எடுப்போம். எங்களுக்கு உரிமை உண்டு. கால காலமாக காட்டைக் காப்பாற்றும் எங்களை காடு தானே காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் இந்த இணையர்... தென்னிந்தியாவில் முதல் முறையாக தனித்து விடப்பட்ட இரு யானைகளை வெற்றிகரமாக வளர்ந்த இணையர் என்ற பெருமைக்கு உள்ளானவர்கள். வணங்குவோம். Director: Kartiki Gonsalves Distributed by: Netflix Language : Tamil - கவிஜி
  23. இவர்கள் அமெரிக்காவில் நல்ல பிரபல்யம் பெற்றவர்கள். புளோரிடாவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் மலைப்பாம்பு குட்டிகளை வளர்ந்ததும் யாருக்கும் தெரியாமல் வெளியில் விட்டுவிடுவார்கள். இதனால் நிறைய மலைப்பாம்புகள் உலாவுவுதை தடுக்க இருளர் இங்கு வந்து பாம்புகளையும் பிடித்து இங்குள்ளவர்களுக்கு பயிற்சியும் கொடுத்தார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.