-
Posts
929 -
Joined
-
Last visited
-
Days Won
14
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nilmini
-
நான் இவரது சில காணொளிகளை பார்த்திருக்கிறேன். மிகவும் பிரயோசனம் ஆண விடயங்களை பற்றி பேசுவார்
-
கு சா அண்ணாவின் இந்த கேள்விக்கு மறுமொழி போடுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கொஞ்சகாலம் மறந்து விட்டேன். பிறகு ஞாபகம் வந்தது ஆனால் கேள்வி என்னவென்று மறந்துவிட்டேன். இன்று இந்த பதிவை பார்க்க நேரிட்டது. நான் பார்த்தவரையிலும், கேள்விப்பட்டவரையிலும் அமெரிக்க டொக்டர்கள் தான் அனாவசியமாக மருந்துகள், மற்றும் டெஸ்டுகள் எடுக்கும்படி சொல்லி அவர்கள் சிபாரிசு செய்யும் சில மருந்துகள் மூலம் அந்த மருந்து கம்பெனி அல்லது முகவர்கள் மூலம் மருத்துவர்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். அத்ததுடன் நிறைய பேருக்கு அப்படி வைத்தியர்கள் செய்வது, தாங்கள் நன்றாக் கவனிக்கப்படுகிறோம் என்ற நிலைமையும் இருக்கு. இந்தக்காரணங்கள் ஓரளவு இருந்தாலும், நான் நினைக்கிறன் முக்கிய காரணம், அநேகமான வைத்தியர்களுக்கு எமக்குள்ள பிரச்ச்னைகளை ஓரிரு டெஸ்டுகளுடன் diagose பண்ண தெரியாது. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு வகுப்பில் குறைந்தது 160 மாணவர்கள் இருப்பார்கள் அதில் முதலாவதாக தேறும் மாணவரும் டொக்டர் தான் கடைசியும் டொக்டர் தான். ஏனெனில் மருத்துக்கல்லூரியில் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரிபடிப்பதும் இல்லை. எப்படியோ இழுபட்டு 99 வீதமானவர்களும் மருத்துவாராகத்தான் வெளியில் வருவார்கள். மருத்துவருக்கே உரிய அந்த instinct, dedication எல்லோருக்கும் இருப்பதும் இல்லை. அத்துடன் எல்லா மருத்துவர்களும் தமது patientsஐ முழு அர்ப்பணிப்போடு கவனிப்பதும் இல்லை. இப்படி நடப்பதை நான் பார்த்திருந்தாலும், அண்மையில் எமது அம்மா 10 நாட்கள் அவசர சிகிச்சையில் இருந்து பிறகு சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு வீட்டுக்கு வரும் வரையில் நான் பார்த்த தெல்லாம் ஒரு அதிசயம் போல் இருந்தது. மருத்துவர்கள், தாதிகள், சாப்பாடு கொண்டு வருவோர், கழிவுத்தொழிலாளிகள் எல்லோரும் கடவுள் போல தோன்றினார்கள். அதிலும் ICU வில் அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தமது அம்மாவுக்கு செய்வதை போல் ஓடி ஓடி விரைந்து அளித்த முதலுதவியால் தான் அம்மா பிழைக்க முடிந்தது. என்றபடியால் அடிப்படையில் இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தாலும், உயிரை காப்பாற்ற என்ற ஒரு நிலை வரும்போது அவர்கள் தம்மை தொழிலுக்காக அர்ப்பணித்து செய்வதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. நான் போகும் டொக்டர் அலுவலகத்தில் இரண்டு டொக்டர்மார் உள்ளார்கள். நடுத்தர வயது மிகவும் அன்பாக ஆனால் இரண்டு நிமிடம் மட்டுமே கதைத்து நிறைய மருந்து எழுதுவார். மற்ற வயதானவர், 15 நிமிடம் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கதைத்து மருந்தே எழுத்தமாட்டார். அடுத்த இரண்டு கிழமைக்கு நடந்து, சாப்பாடு பழக்கங்களை மாற்றி தான் சொன்னபடி செய்துவிட்டு மீண்டும் வரும்படி சொல்லுவார். ஏனெனில் நிறைய பிரச்சனைகளை சரியான உணவு மற்றும் உடல் பயிற்சியினால் எமது உடல் தானாகவே திருத்தி விடும். எமது முன்னோர்கள் காட்டில் வேட்டையாடி, பின்பு தோட்டம் செய்து, மிகக்குறைவாக உண்டு, குறைந்த நேர நித்திரை கொண்டவர்கள். அந்த genes உடன் பிறந்த எமது உடல்களும் அதையேதான் எதிர்பார்க்கும். முடிவு என்னெவென்றால் ஒரு வைத்தியரிடம் மட்டும் போகாமல் அனுபவம் வாய்ந்த, அல்லது எல்லோராலும் விரும்பபப்படும் வைத்தியர் மாரிடம் ஆலோசனை கேட்பது நல்லது இப்ப சரி வந்திட்டுது சிறி. நன்றி
-
உங்கட வீட்டுக்கு கிட்ட இந்தப்படங்களை எடுத்தீர்களா சிறி? எனக்கும் இப்படி முந்திய காலத்து மர, செங்கல், கருங்கல் கட்டிடங்களை பார்க்க நல்ல விருப்பம். நல்ல அழகான படங்கள் சிறி. படங்களை விடிய வெள்ளண எடுத்திருப்பீர்கள். சரியா? ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் யூரோப்பில் அல்லது அவரவர் இடங்களின் காலநிலை எப்படியோ அந்தமாதிரியான இடங்களை தெரிந்தெடுத்து குடியேறினார்கள். மிகவும் குளிர் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மினசோட்டா மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் அங்கு உள்ளமாதிரியே கட்டிடங்கள் வீடுகளை கட்டி, தமது தனிப்பட்ட பண்டிகைகள், கலாச்சாரங்களை தொடர்ந்து வந்தார்கள். 75 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களை பார்த்தே அவர்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்கள் என்று சொல்ல முடியுமாம். இப்ப எல்லாமே மாறிவிட்டது. ஆனால் பழைய கட்டிடங்களை பார்த்து ஓரளவுக்கு சொல்லலாம். இன்று வழமையை விட கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வந்தேன். இந்த மாதிரி வீடுகள் ( மூன்றாவது படம்) வீடுகளை பார்த்துவிட்டு மிகவும் அழகாக மற்ற வீடுகளில் இருந்து வேறுபட்டு இருக்கிறதே என்று யோசித்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் சிறி போட்ட படங்களில் அதே மாதிரி இருக்கு. ஒரு coincidence மாதிரி இருந்தது. நாளைக்கு ஒரு படம் எடுத்து இணைக்கிறேன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
nilmini replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
நான் இதனை ஒரு பிற்போக்கான சிந்தனை என்று நினைக்கவில்லை. ஒரு கலாச்சார நடைமுறை என்றே நினைக்கிறேன். சில விடயங்களை இங்கு எழுதமுடியாது. ஏனென்றால் அது பலவிதமாக பார்க்கப்பட்டு விவாதம் சொல்லவந்த கருத்தில் இருந்து விலகி வேறு கோணத்தில் செல்லும். எங்கிருந்தாலும் மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே குணம்தான். கலாச்சார வேறு பாடு, கல்வி, பணம், பழகும் உறவினர், நண்பர், சேர்ந்து வேலை செய்பவர்களை பொறுத்து அவரவர் பழக்கவழக்கங்கள், பழகும் விதங்கள் மாறுபடும். -
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
எமது நிறைய ஊர் பெயர்கள் எம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களினால் வைக்கப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். அதில், வாழ்நாள் முழுவது படிக்கும் மக்கள் வாழும் ஊர் எழுதுமட்டுவாழ் என்று பெயரிட்டதாக போட்டிருந்தார்கள். அதே மாதிரி, கிழக்கிலங்கையில் ஒரு வெள்ளைக்காரன் சிறுமியுடன் நடந்து சென்ற தாயிடம் "இந்த ஊர் எதற்கு பிரபலம்" என்று கேட்டபோது. அந்தப்பெண் கதைக்க கூச்சப்பட்டு, சிறுமியை பார்த்து " ஓட்டமா வாடி" என்று கூறினாராம். அதுதான் ஓட்டமாவடி. -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
nilmini replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
இப்ப இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பார்ட்டி என்று சொல்லி நிறைய தமிழ் பெண்கள் குடிப்பது வழக்கமாக இருக்கு. என்ன இருந்தாலும் எமது கலாச்சாரத்தில் பெண்கள் அப்படி செய்வது வழக்கம் இல்லைதானே? அவரவர் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ குடிப்பது அவர்களது விருப்பம்.நாங்கள் கொழும்பில் வளர்ந்துமே நண்பிகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஆட்ட்டம் பாட்டம் ஒன்றும் இருக்காது. அப்படி ஓரிருவர் பார்ட்டி வைத்தால் உடனே இது என்ன சிங்கள அல்லது பரங்கிகள் மாதிரி ஆட்டம் என்று சொல்லுவார்கள். சிங்கள பிள்ளைகள் வீட்டு பார்ட்டி ஒரே அமர்க்களமாக இருக்கும். எனது அக்கா சிங்கள மீடியத்தில் படித்ததால் பெரும் பிரச்னை. அப்பா அவாவை போக விடமாட்டார். ஆனால் இப்ப காலம் மாறிவிட்டது. நாங்களும் ஊரை விட்டே வெளியில் வந்து வெள்ளக்கார கலாச்சாரத்துக்கு மத்தியில் இருக்கிறோம். அவர்களது கலாச்சாரம் ஒன்றும் குறைந்ததல்ல. வேறுபட்டது. எனக்கு தெரிந்த நிறைய வெள்ளைக்காரர் குடிப்பதே இல்லை. வீட்டுக்கு வீடு வாசல்படி. -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
nilmini replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.... #ஒரு மரத்துக் #பனபதநீர் குடித்தால் அடி மரமாய் உடம்பு வரும் ! #பனை மரத்துக் #பதநீர் குடித்தால் கட வெலும்பும் இரும்பாகும் ! பதநீர் நமக்குச் சுகமளிக்கும் ! வெள்ளை ரத்தம் – அந்தக் #கரும்பனையும், தென்னையும் நம் கழனித் தெய்வம் ! #பதநீர் குடித்துக் #கெட்டாரைக் கேட்ட துண்டா? பதநீர் குடித்துச் #செத்தாரைப் பார்த்த துண்டா? #எலும்புறுக்கி நோய் தீரும் தென்னங் #பதநீரால் ! எரிசூட்டு நோய் தீரும் #பனையின் பதநீரால் ! அதிகாலைக் #பதநீர் குடித்தால் அச்சம் போகும் ! அந்தி #பதநீர் குடித்தால் ஆயுள் நீளும் ! #தாகம் எடுக்கையிலே தமிழ்க்கிழவி அவ்வை #பதநீர் அருந்தித்தான் களிப்போடு வீற்றிருந்தாள் ! கடையேழு #வள்ளல்களும் கவிஞர்கள் எல்லோர்க்கும் #பதநீர் விருந்து கொடுத்தன்றோ கௌரவம் செய்தார்கள் ! வில்வேந்தர் வேல்வேந்தர் வீரவாள் வேந்தர் #பதநீர் அருந்தியன்றோ கட்டுடம்பு வளர்த்தார்கள் ! #சித்தர்கள் நமக்குச் சீதனமாய் கொடுத்த முத்தனைய பதநீர் வேண்டி முழக்கம் செய்திடுவோம் ! விருந்தாகி #மருந்தாகி விடிகாலை உணவாகி #விவசாயி வாழ்க்கையிலே வருமானம் வழங்குகிற வரம் கொடுக்கும் தேவதைகள் ! அளவான #போதை அளிக்கும் பொருளென்றால் அருந்தலாம் என்று அரசியல் சாசனமே அதிகாரம் தருகிறது! #போதை இல்லாத அளிக்கின்ற #பதநீரை ஏனருந்தக் கூடாது! ஏனிறக்கக் கூடாது! - கவிஞர் மேத்தா -
அநாதரவாக காட்டில் தனித்துவிடப்பட்ட யானைகள், இயற்கையிலே மார்க்க குணகண்கொண்டு காடுகளில் இருந்து வெளியே வந்து அழிவுகளை செய்யும் யானைகளை கும்கி யானைகளாக்கி கோவிலில் வளர்க்கலாம். அத்துடன் நல்ல யானைப்பாகன் களை தெரிந்தெடுத்து அடிக்கடி பாகங்களை மாற்றாமல் இருக்கவேணும். இவற்றையெல்லாம் வனவிலங்கு துறையினர் மேற்பார்வையிட வேண்டும்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
nilmini replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
மிகவும் நன்றி PIRA அவர்களை எப்படி தொடர்பு கொள்வது? -
இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றமைதான். அங்கிருந்த 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து நள்ளிரவு வரை காடு மேடு வனாந்திரம் எல்லாம் ஒரே ஹைக்கிங் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போவதானல், கிட்டஎன்றால் van அல்லது நேரத்தை வீணாக்காமல் சிறிய ரக விமானத்தில்தான் பயணித்தோம். ஒரு ஆபத்தான விலங்குகளும் மடகஸ்காரில் இல்லாதால் இரவிரவாக காடுகளில் நடமாட பயப்படத்தேவை இல்லை. பாம்புகள் இருக்கு ஆனால் நச்சுப்பாம்புகள் அல்ல. உலகில் சிங்கம், புலி, யானை, கரடி, மலைப்பாம்பு மாதிரி மிருகங்கள் கூர்ப்பு அடைந்து தோன்ற முன்னமே, மடகாஸ்கர் ஆபிரிக்க பெரும் நிலப்பரப்பில் இருந்து பூமித்தட்டுகளின் அசைவு காரணமாக தனியே விலகி சென்றுவிட்டது. அதனால் தான் உலகின் மற்ற இடங்களில் இருந்த லெமூர் மாற்று ராட்சத பச்சோந்திகள், பறவைகள் எல்லாவற்றையும் பின்பு தோன்றிய வேட்டையாடும் விலங்குகள் கொன்றழித்து விட்டன. மற்ற மிருகங்களை காட்டிலும், மிகுந்த அழிவை தரும் மனித விலங்குகளால் தான் பல விலங்கினங்களும் அழிந்து போய்விட்டன. மடகாஸ்கரும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அங்கு மனிதர்கள் குறைவாக இருந்ததாலும், குடியேறச்சென்ற மனிதர்கள் புலி, சிங்கங்களை கொண்டு போகாமல் நாய் பூனைகளை கொண்டு சென்றதால் ஓரளவுக்கு இந்த லெமூர் உற்பட மிகப்பழைய விலங்கினங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன. ஆனாலும் நாய்கள் பெருகி காட்டுக்குள் சென்று இந்த அரிய வகை மிருகங்களை கொல்வதும், மடகஸ்காரின் அரசியல், பஞ்சம் என்பவற்றால் நிறைய அழிவுகளை சந்தித்திக்கொண்டு இருக்கிறது. காடுகளை சட்ட விரோதமாக அழித்து எரிபொருள், கட்டடம் கட்ட என்றும் ஒரு பக்கத்தால் அழிவு. பொதுவாக அமெரிக்கர்களை ஒருவருக்கும் பிடிக்காது. ஒன்றில் பொறாமை அல்லது அவர்கள் எல்லோரிடமும் சண்டை போடுபவர்கள் என்பதால். அது அவர்களுக்கும் தெரியும். தாம் உலகில் எங்கு சென்றாலும் ஒருவித சந்தேகத்துடன் தான் பயணிப்பார்கள். ஆனால் மடகஸ்காரில் அமெரிக்கர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ஏனென்றால் பட்ரிசியா ரைட் என்னும் பெண் விஞ்ஞானி 1960 ஆண்டுப்பகுதியில் அங்கு சென்று இந்த லெமூர் மற்றும் விலங்குகளை பாதுகாக்க பெரும் பாடு பட்டு, அங்கு ஒரு ஆய்வு நிலையமும் அமைத்து இன்று அது மிகப்பெரும் உதவிகளை செய்து வருகிறது. https://www.stonybrook.edu/commcms/centre-valbio/. அதானல் எமது குழுவினருக்கு பெருமிதமும் மகிழ்ச்சியும். இன்னும் தொடரும்……
-
பார்ஸல் வந்திட்டுதா? 🤣
-
எழுதிவைத்திருக்கிறேன் இன்று வீட்டுக்கு போய் இன்னும் கொஞ்சம் கூட எழுதி பதிவிடுகிறேன் சிறி. நீங்கள் எல்லோரும் ஆவலாக வாசிப்பதால் நிறைய புதினங்களை சேர்த்து எழுதுகிறேன்.
-
கு சா அண்ணா, கோடாலித்தைலத்தை பற்றி பதில் போட்டுவிட்டு, வேலைக்கு வந்து பார்த்தால் என்ர மேசையில உங்கட ஊர் ICE Eau de Colongne இருக்கு.
-
நன்றி அண்ணா.
-
வணக்கம் நிழலி. உண்மையில் இந்த பயண கட்டுரை எழுத வெளிக்கிட்டதே உங்களுக்குதான். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அது நிழலியா என்று ஒரு சந்தேகம். பழைய மெசேஜ்களை தேடிப்பார்த்தேன் கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படியும் பயண கட்டுரையை பார்த்து விட்டு கொமெண்ட்ஸ் போடுவீர்கள் என்று பார்த்தேன். காணவில்லை. இன்று தற்சமயமாக தான் பார்த்தேன். எல்லா notification களும் வருவதில்லை. அதனால் சிலரது பதில்கள் நான் பார்க்காமலே போக நேருடுகிறது. அரசியல்தான் காரணமாக இருக்கும். மிக மிக வறுமையான நாடு. 95 வீதமான வருமானம் 5 வீதமான மக்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் பார்த்த சில காட்சிகள் மக்கள் எப்படி 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்திருப்பார்கள் என்பதை மனக்கண் முன் கொண்டு வந்தது. கட்டுரை மேலும் தொடரும் ஓம் புங்கையூரன். இலங்கை நியூசிலாந்து போன்ற நாடுகளும் அப்படிதான். பெரும் நிலப்பரப்பில் இருந்து எப்பவோ பிரிந்து போனதால் ஆதி காலத்து விலங்குகள் தாவரங்கள் எல்லாம் அழியாமல் இன்னமும் வாழ்கின்றன (ஓரளவுக்கேனும்)
-
எது தசை பிடிப்பு, மூட்டு நோ, தசை- எலும்பு பொருந்தும் இடம், விளையாட்டின் போது வரும் சின்ன அசௌகரியங்கள் இவற்றிற்கான உடனடி நோவை குறைக்கும் மருந்து. இது உடனடி நிவாரணத்துக்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் தசை, மூட்டு சம்பந்தமான காயங்கள் ஆறுவதை துரிதப்படுத்தும். ஐரோப்பா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பது ஸ்ட்ரோங் மிகவும் குறைந்தது (இறக்குமதி கட்டுப்பாடுகளினால்) இத வேண்டி பாவித்தால் நல்ல பலன் கிடைக்கும் (Menthol formula by Leung Kai Fook, Singapore.) எனது மகனுக்கு விலா எலும்புகள் நெஞ்சில் சேரும் இடத்தில் நோ இருக்கிறது. அடிக்கடி சிங்கப்பூர் தான் பூசுகிறார். ஆர்தரைடிஸ் நோ, நிணநீர் போக்கு இவற்றுக்கு இந்த கல்லால் - Guesha stone கோடாலித்தைலம் சேர்த்து உருவலாம்.
-
நாங்கள் எல்லோரும் இப்பவும் பாவிக்கிறோம். சிங்கப்பூரில் வாங்குவது மிகவும் விசேஷமாக இருக்கும்.
-
அய்யய்யயோ நாங்கள் கந்தர்மடம் காப்புரிமை எடுக்க முதல் சுவி வீட்டில் இருந்து யூரோப் முழுவதும் பிரபல்யம் ஆகி விட்டதே (தோட்டுரிமையோட😂) ஆனால் உண்மையிலேயே உடையார் ஒழுங்கை நாவலர் குடும்பம் எல்லோரும் சேர்ந்து அப்பம்மாவின் வளவில் ஆறு மாதத்துக்கு போதுமான தூள் சம்பல் இடிப்பித்து எல்லாக்குடும்பக்களிடையும் பிரித்து எடுத்ததைப்போல நான் வேறெங்கும் பார்க்கவில்லை. நாலு மா இடிக்கும் பெண்கள் விடியவே வந்து கடலைப்பருப்பு, உளுந்து, பயறு, செத்தல் மிளகாய், கருவேப்பிலை எல்லாம் வறுத்து கல்லுரலில் அருவல் நெருவலாக இடிப்பார்கள். நிறைய தேங்காய் துருவி கருக வறுத்து கொஞ்ச தூள் சம்பலுக்கு அதையும் சேர்த்து செய்வார்கள். இது,தென் இந்தியாவில் செய்யும் இட்லி தோசை பொடி மாதிரி இருக்கும். தோசை, சோறு, பால் சோறு எண்டு எல்லாத்துக்கும் அதையும் சேர்த்து சாப்பிடலாம்
-
அம்மா செய்யும் மூலிகை கோப்பி: கொத்தமல்லி, சீரகம், ஓமம், மிளகு, வேர்க்கொம்பு, ஓரிரு கராம்பு, ஏலக்காய் எல்லாம் கருக வறுத்து, விரும்பினால் கொஞ்ச கோப்பியையும் வறுத்து நன்றாக அரைத்து ஆறவைத்து போத்தலில் போட்டு வைத்தால் 6 மாசம் வரை இருக்கும். கருப்பட்டியுடன் குடிக்கலாம். அல்லது தேன் சேர்க்கலாம்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
nilmini replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
எல்லாவித வளங்களும் பெரிய வளர்ச்சியொன்றும் இல்லாமல் அப்படியே வெள்ளைக்காரன் விட்டுட்டுபோனமாதிரி இருக்கு. புதுசு புதுசாக கட்டப்படும் சுற்றுலாத்துறையை கட்டிடங்கள் எல்லாம் எமக்கு பார்க்க அழகாகவும், பெருமையாக இருந்தாலும், அவை அனைத்தும் அரசியல் சம்பந்தப்பட்டவர்களினால் கட்டப்பட்டவை. அதனால் நாட்டுக்கு பெரிய வருமானம் இல்லை.