Everything posted by nilmini
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பச்சைச்சத்தண்ணியில குழைச்ச இடியப்ப மாவுக்கவு முன்னம் ஒரு தண்ணியும் செல்லுபடியாகாது.😎 போனகிழமை பசியில் வேலையால வந்து கிழிஞ்ச நீத்துப்பெட்டியில புட்டு அவிக்க வெளிக்கிட்டு, புட்டுப்பானையை திறந்து பார்த்தால் பானைக்குள் களிதான் இருந்தது.பசியில் கொஞ்சத்தை மாசி சம்பலுடன் சாப்பிட்டேன்.😂
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
அம்மாவின் கைப்பக்குவதுடன் மிகவும் ருசியாக இருந்திருக்கும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தங்கச்சி மரக்கறிக்காரி ( நான் கடலுணவு சாப்பிடுவேன்). அவதான் இது இல்லாம நல்லா சமைப்பா. சாப்பிட்டுப்பார்க்கிறேன். இந்த செய்முறை நல்லதா சிறி ? ரெண்டு கோப்பை சாப்பிட்டால் குண்டம்மாவாகத்தான் வரவேணும். சிறி ஒருநாளைக்கு மட்டும் சாப்பிட்டு பார்க்க சொல்லி இருப்பார்😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இந்தியாவில் சிலமுறையும் இங்கு வந்து பொரித்து தான் சாப்பிருக்கிறேன் சிறி. கத்தரிக்காய் பொரியல் போல இருக்குது.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
நானும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு கு சா அண்ணாவுக்கு ரசிய புட்டினில் ஏன் இவ்வளவு அக்கறை என்று பார்த்தேன் 🤣 அப்படியா புட்டு என்ற பெயர் வந்தது😂
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
https://www.tamilkadai.ca/ இந்தக்கடையில்தான் ஓடர் பண்ணி எடுப்பிக்கிறானான் நிலாமதி. டொரோண்டோ டெலிவரி என்றால் தூரத்தை பொறுத்து இலவசம் அல்லது மிகவும் குறைந்த ஒரு கட்டணம். இலங்கையில் இருந்து வரும் பொருட்கள் என்று வரும் முக்காவாசி பொருள்களும் இந்திய, தாய்லாந்து, வியட்நாம், கரிபியன் போன்ற நாடுகளில் இருந்துதான் வருகுது. விலை, தரம் ருசி சரியாக இருந்தால் எங்கிருந்து வந்தால் என்ன என்று அவ்வளவு மினக்கடவில்லை. இரண்டு வருடுடங்களுக்கு முன்புவரை சென்னையில் தான் பொருட்கள் வேண்டி கப்பலில் மாளிகாவத்தைக்கு அனுப்பி அங்கு ரம்பை போன்றவற்றை போட்டு மிளகாய் தூள் செய்து 30 நாட்களுக்குள் திரும்ப சென்னை கொண்டுவந்து பக் பண்ணி புலம் பெயர் தேசங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். 30 நாட்கள் என்றால் கட்டின வரியை கொழும்பு துறைமுகத்தில் திரும்ப பெறலாமாம். இப்பவும் தொடருதா என்று தெரியவில்லை. யாழில் இருந்து நியாயமான பொருள்கள் வருக்குதுதான். ஆனால் ஒப்பீட்டளவில் அது மிகவும் குறைந்த விகிதம்தான். நானும் அப்படி நினைத்து புட்டினை பற்றி வாசித்து எனக்கென்ன பிரயோசனம் (நான் ரசியாய் போரை பற்றி வாசிப்பதில்லை. எனது அனுபவத்தில் ரசியர்களோ, உக்கிரேனியர்களோ மிகவும் பொல்லாதவர்கள். அதனால் இந்த போர் செய்திகளில் நாட்டம் இல்லை. முந்தி பிரெஸ்னேர்வ் இருந்த காலத்தில் விருப்பம்.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
சண்டை பிடிக்கும்போதும், மற்றவர்களை குறை சொல்லும்போதும் பாவிக்கும் சொல்😂இப்ப நினைத்துப்பார்த்தால் சிரிப்பாக இருக்கு.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும். சரியான அறணை வியாபாரிகள் போல இருக்கு சிறி 😁. தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு இந்தியன் கடைகளை frozen section இல் இருக்குமே. Oriental ( Thailand, Vietnaam, China, Japan) ஆக்கலும் விட்ப்பார்கள் தகவலுக்கு நன்றி நாதமுனி.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
கேரளா புட்டும் கடலைகறியையும் சாப்பிட்டால் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். அது செய்யும் முறை வித்தியாசமானது. ஒருமுறை சாப்பிட்டதோடு சரி.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
அவர்களிடம் இல்லாட்டி ஒருமுறை முயன்று பார்க்கும்படி கேட்கலாம் சிறி.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
நானும் முதல் தரம் கேள்விப்படும்போது அப்படிதான் யோசித்தேன் சிறி. முந்திகேள்விப்படாத பெயர். ஆனால் நல்ல தரமான மா. https://www.tamilkadai.ca/addakari-roasted-red-raw-rice-flour-8Lb-Kalappadam
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
உண்மையிலேயே நல்ல மா. பொய்க்கு கலர் எல்லாம் போடாம நல்ல வாசமும் கூட.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இடியப்பத்தைக்கூட ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியாது. ஆனால் புட்டு ஒருநாளும் அலுக்காது. நான் இன்று கூப்பன் மா புட்டு சாப்பிட்டேன். பாரை மீன் குழம்புடன். கனடாவில் இருந்து ஆட்டக்காரி அரிசி மா பார்சலில் வர பிந்தி விட்டது.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
இதைத்தான் அசல் பகிடி எண்டு சொல்லுறது. நில்(மினி) ஓடி(மினி) ஆகிய இடம் மடகஸ்கார். பி கு: அப்பா இருந்தா கவலைப்பட்டிருப்பாரே? அவரது நீல மாணிக்கத்தை (Nilmini) எல்லோரும் பகிடி பண்ணுகிறார்கள் என்று ☺️ நன்றி சுவி. நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு. கட்டுரை தொடரும்.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
ஓம் சிறி. லெமூர்களை பார்க்கவும் நல்ல வடிவு. பஞ்சு போல பாதங்கள். ஒருவிதத்தில் அப்பாவி மிருகங்கள் 😁ஆத்தில எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால ஒருவரும் படம் எடுக்கவில்லை. படகில் இருந்து குறுக்க இருந்த மரத்துக்கு மேல ஏற வேண்டி இருந்ததால் கமெரா போன் எல்லாம் பையில வச்சிட்டம். படமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால் அந்தக்காட்சி மனதில் மட்டும்தான் இருக்கு சிறி.🤔
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
திரு கருணைநாயகம். போன கிழமை பரி யோவான் 200 ஆம் ஆண்டு நிகழ்வும் புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.சந்தோசம். அம்மாவின் உறவுகளின் வீடுகள் எங்கு இருந்தன என்று அறியத்தர முடியுமா? எமது அப்பா நல்லூர் ( நாவலர் பரம்பரை) அம்மம்மா உரும்பிராய் அம்மப்பா எழுதுமட்டுவாள். கந்தர்மடத்தில் 1920 களில் குடியேறி அயல்களில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வாழ்ந்தவர்கள். எமது பூர்வீக வீடு இன்னும் அங்கு உள்ளது.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
நிச்சயம் தொடருவேன் Pira பிரா. பதின்மூன்றுநாள் தான். ஆனால் தொடர்ந்து இரவு பகலாக பயணித்ததால் ஒரு வருட அனுபவமும் போல இருந்தது.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல் நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர், நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள். எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள். அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம். தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
சீ சீ கு சா அண்ணா இல்லாமல் யாழ் வெறிச்சோடிப்போடும். சும்மா இளையராஜாவை பற்றி ஒரு சிறு விவாதம்தான். இன்றுடன் முடிந்து விட்டது.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
வருது வருது. வெள்ளிக்கிழமை வரும். கு ச அண்ணாவோட விவாதத்தால் கொஞ்சம் பிந்திவிட்டது😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் அதையும் அழிக்கவில்லையே கு ச அண்ணா. இன்னும் இரண்டு வரிகள் சேர்த்துதான் விட்டேன்.எனது கமெண்ட் மேலே இருக்குது. இங்கே திரும்ப கொப்பி பண்ணிருக்கிறேன். " எனக்கென்னவோ இளையராஜாவின் கதைகளும் போக்கும் சில சமயங்களில் அவரது ஆளுமைக்கு ஒத்து போகாமல் இருக்கிற மாதிரி கிடக்கு. நான் நினைப்பதுபோல் பலரும் சொல்லியபோதுதான் அவர் அப்படி எடுத்தெறிந்து கதைப்பது மட்டுமல்ல வேறு சில வெளிநாட்டு பாட்டு ப்ரோக்ராம்களையும் கடைசி நேரம் ரத்து செய்திருக்கிறார். உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா தமிழர் ஒருவர் வீட்டையே விற்று நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டி வந்தது. இதனால் மற்றவர்கள் எல்லோரும் அப்பழுக்கற்ற கனவான்கள் என்று சொல்லவில்லை. இங்கு இளையராஜாவை பற்றி மட்டுமே எனது கருத்தை தெரிவித்திருந்தேன். தன்னடக்கம், அவையடக்கம் மனிதனை இன்னும் மேன்மை படுத்தும். அது அவருக்கு தேவை இல்லையென்றால் அவர் நடப்பதுபோலவே தொடரட்டும். நாங்களும் வழமைபோல அவரது இசையை தொடர்ந்து ரசிப்போம். அதில் மாற்றம் ஏதும் இல்லை."
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
புதைந்துபோன மரங்களுக்குள் மண்ணில் இருக்கும் சிலிகா ஊடுருவி நீருடன் கலந்து ஓப்பல்(Opal) என்னும் கல்லை உருவாக்கும். அப்படி நடப்பதற்கு மரத்தின் உற்பகுதிகள் அழுகாமல் இருக்கவேணும். அரிஸோனாவுக்கு Grand Canyon பாக்க போனேன். இதை தவற விட்டுவிட்டேன். இயற்கை இறைவன்- இரசித்த.... புகைப்படங்கள்.
அழகு பாசம் அன்பு- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
சைவப் பிரகாச வித்தியாசாலையில் சேரப்போகிற மாணவ மாணவிகள் பதிவுசெய்துகொள்ள இங்கு ஒன்றுகூடவும். - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.