Everything posted by nilmini
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ஓம் சிறி எல்லாமே மாற்றிவிட்டது. இயற்கையாக அமைதியாக இருந்த இடம். நான் அடிக்கடி போய்வருவதால் பழகிவிட்டது
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
சிறி இந்தக்காணொளியை பார்த்தீர்களா? எமது வீடுகளுக்கு கிட்டவெல்லாம் எடுத்திருக்கிறார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எல்லோருக்கும் ஒருமித்த நியாயம் தானே கு சா அண்ணா? எமது வாலிப பருவத்தில் இருந்து ரசித்து மகிழ்ந்த ராஜாவின் இசை இன்று எம் மனதில் சில கேள்விகளை எழுப்புகின்றன என்றால் அதற்கு அவரின் மனப்பாங்குதான் காரணம். இசை புலமையை கொடுத்த இறைவன் தன்னடக்கத்தை கொடுக்க்கவில்லை.அது அவராக உருவாக்கி இருக்கவேண்டியதொன்று.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான் மனுஷன் கதைத்தே கெடுகிறான்.இருக்கும் கலைத்திறமைக்குரிய பணிவு இல்லை
-
தையல்கடை.
நல்ல யதார்த்தமான கதை. நன்றாக இருக்கிறது. இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இன்னும் என்ன தைக்கப்போகிறார்களோ. எல்லாரும் சேந்து....🙄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மரியா வேர்த் என்னும் ஜெர்மனிய (இப்ப இந்திய சைவப்பெண்) கூறியபடி 55 வீதமான ஜெர்மானியர் மதத்தை விட்டு வெளியேறிவிட்டார். நியூசிலாந்தில் 1990 லேய தேவாலயங்கள் வெறிச்சோடி இருந்தன. அமெரிக்காவில் ஒரு பகுதி வெள்ளைக்காரர் இன்னமும் பணமும் கொடுத்து தேவாலயத்துக்கு செல்லகிறார்கள். கறுப்பர் பாடுதான் கவலைக்கிடம். அவர்கள் செல்லும் தேவாலயங்களில் ஏழை கறுப்பர்களிடம் இருந்தும் பணம் பறிக்கிறார்கள். அது நடக்கும் காலமும் விரைவில் வரலாம்
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
அந்த நேரத்துக்கு புட்டும் மீன் குழம்பும் யோசனை சிறி . இந்த கொம்பினேஷனும் நல்ல இருக்கும். இது அக்கா செய்து தந்தது. எப்படியும் உங்கள் குடும்பத்தை ஒருமுறையாவது சந்திக்க வேணும் வெள்ளைக்காரர்களுக்கு எல்லாத்திலயும் கலை உணர்வும் ரசனையும் அதிகம். நல்ல தகவல் கு சா அண்ணா
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
இல்லை அண்ணா. நண்பியும் தங்கச்சியும் நடக்க வரமாட்டார்கள். நானும் நாயும் தான் நடை.
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
கு சா அண்ணா மிகவும் அழகான வீடுகள். ரோடுகளை பார்த்தால் ஜப்பான் போல இருக்கு என்று மகன் சொன்னார்.நானும் மகனும் 2018 இல் ஜெர்மனி வந்து ஒரு காரை எடுத்துக்கொண்டு பிராங்பேர்ட், முன்சின். பாவேரியா என்று ஜேர்மன் கிராமங்களுக்கூடாக பிரயாணித்தோம்.மகன் ஜேர்மன் மொழி கற்றுள்ளபடியால் ஓரளவு கதைப்பார். அழகான இடம். ஒரே ஒரு இலங்கை நண்பியை தான் பார்த்தேன். சிறி, நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தால் வந்து நல்ல மீன் குழம்பும் புட்டும் சாப்பிட்டிருக்கலாம்
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
இந்த வீடுகள் ஆகக்கூடியது 200வருடங்கள்தான் இருக்கும்.ஏனென்றால் அமெரிக்காவுக்கு வெள்ளையர்கள் குடியேறியது 245 வருடங்கள் முதல்தானே. ஜெர்மன்கார்கள் குடியேறிய இடங்களில் டென்னெர்சியும் ஒன்று.
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
உண்மையில் ஞாயிறுக்கிழமை காலமய் என்று எழுதிவிட்டு பிறகு எந்த விடிய வெள்ளனவும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். இங்கு ஒவ்வொரு ஊர்,சிற்றி என்று சன நடமாட்டம் மாறுபடும்.மெம்பிஸில் காலை 6.30 மணிக்கு மேல் தான் கொஞ்ச நடமாட்டம் தொடங்கி 9 மணிவரை ஒரே திருவிழாதான். நல்ல தகவல் சிறி. அப்ப ஒரு மெடிக்கல் டிஸ்ட்ரிக்ட் என்று அழைக்கலாம். நிச்சயம் இங்க உள்ள வீட்டை படம் எடுத்து பதிவிடுகிறேன். அது தனி வீடில்லை. என்றபடியால் கிருபா அண்ணா பயப்படுத்தினமாறி துவக்கு வராது😂
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
எல்லாம் பெரிய வீடுகளும் ஆள் நடமாட்டமும் அவ்வளவு இல்லை. யூனிவெர்சிட்டிக்கு அண்மையில் என்பதால் அநேகமானவை மாணவர்கள் தான் இருக்கிறார்கள். என்றபடியால் துவக்கோட வரமாட்டார்கள் என்று நினைக்கிறன். உண்மைதான் இந்த பெரிய நிலப்பரப்பில் இல்லாத சுவாத்தியங்களே இல்லை. புளோரிடா, ஹவாய் போனால் எங்கட சனம் பனை, தென்னை, பாக்கு, வாழை என்று வச்சிருக்கினம் எங்க ரதியை காணவில்லை?
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
உங்கட வீட்டுக்கு கிட்ட இந்தப்படங்களை எடுத்தீர்களா சிறி? எனக்கும் இப்படி முந்திய காலத்து மர, செங்கல், கருங்கல் கட்டிடங்களை பார்க்க நல்ல விருப்பம். நல்ல அழகான படங்கள் சிறி. படங்களை விடிய வெள்ளண எடுத்திருப்பீர்கள். சரியா? ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் யூரோப்பில் அல்லது அவரவர் இடங்களின் காலநிலை எப்படியோ அந்தமாதிரியான இடங்களை தெரிந்தெடுத்து குடியேறினார்கள். மிகவும் குளிர் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மினசோட்டா மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் அங்கு உள்ளமாதிரியே கட்டிடங்கள் வீடுகளை கட்டி, தமது தனிப்பட்ட பண்டிகைகள், கலாச்சாரங்களை தொடர்ந்து வந்தார்கள். 75 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களை பார்த்தே அவர்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்கள் என்று சொல்ல முடியுமாம். இப்ப எல்லாமே மாறிவிட்டது. ஆனால் பழைய கட்டிடங்களை பார்த்து ஓரளவுக்கு சொல்லலாம். இன்று வழமையை விட கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வந்தேன். இந்த மாதிரி வீடுகள் ( மூன்றாவது படம்) வீடுகளை பார்த்துவிட்டு மிகவும் அழகாக மற்ற வீடுகளில் இருந்து வேறுபட்டு இருக்கிறதே என்று யோசித்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் சிறி போட்ட படங்களில் அதே மாதிரி இருக்கு. ஒரு coincidence மாதிரி இருந்தது. நாளைக்கு ஒரு படம் எடுத்து இணைக்கிறேன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நான் இதனை ஒரு பிற்போக்கான சிந்தனை என்று நினைக்கவில்லை. ஒரு கலாச்சார நடைமுறை என்றே நினைக்கிறேன். சில விடயங்களை இங்கு எழுதமுடியாது. ஏனென்றால் அது பலவிதமாக பார்க்கப்பட்டு விவாதம் சொல்லவந்த கருத்தில் இருந்து விலகி வேறு கோணத்தில் செல்லும். எங்கிருந்தாலும் மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே குணம்தான். கலாச்சார வேறு பாடு, கல்வி, பணம், பழகும் உறவினர், நண்பர், சேர்ந்து வேலை செய்பவர்களை பொறுத்து அவரவர் பழக்கவழக்கங்கள், பழகும் விதங்கள் மாறுபடும்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
எமது நிறைய ஊர் பெயர்கள் எம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களினால் வைக்கப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். அதில், வாழ்நாள் முழுவது படிக்கும் மக்கள் வாழும் ஊர் எழுதுமட்டுவாழ் என்று பெயரிட்டதாக போட்டிருந்தார்கள். அதே மாதிரி, கிழக்கிலங்கையில் ஒரு வெள்ளைக்காரன் சிறுமியுடன் நடந்து சென்ற தாயிடம் "இந்த ஊர் எதற்கு பிரபலம்" என்று கேட்டபோது. அந்தப்பெண் கதைக்க கூச்சப்பட்டு, சிறுமியை பார்த்து " ஓட்டமா வாடி" என்று கூறினாராம். அதுதான் ஓட்டமாவடி.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்ப இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பார்ட்டி என்று சொல்லி நிறைய தமிழ் பெண்கள் குடிப்பது வழக்கமாக இருக்கு. என்ன இருந்தாலும் எமது கலாச்சாரத்தில் பெண்கள் அப்படி செய்வது வழக்கம் இல்லைதானே? அவரவர் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ குடிப்பது அவர்களது விருப்பம்.நாங்கள் கொழும்பில் வளர்ந்துமே நண்பிகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஆட்ட்டம் பாட்டம் ஒன்றும் இருக்காது. அப்படி ஓரிருவர் பார்ட்டி வைத்தால் உடனே இது என்ன சிங்கள அல்லது பரங்கிகள் மாதிரி ஆட்டம் என்று சொல்லுவார்கள். சிங்கள பிள்ளைகள் வீட்டு பார்ட்டி ஒரே அமர்க்களமாக இருக்கும். எனது அக்கா சிங்கள மீடியத்தில் படித்ததால் பெரும் பிரச்னை. அப்பா அவாவை போக விடமாட்டார். ஆனால் இப்ப காலம் மாறிவிட்டது. நாங்களும் ஊரை விட்டே வெளியில் வந்து வெள்ளக்கார கலாச்சாரத்துக்கு மத்தியில் இருக்கிறோம். அவர்களது கலாச்சாரம் ஒன்றும் குறைந்ததல்ல. வேறுபட்டது. எனக்கு தெரிந்த நிறைய வெள்ளைக்காரர் குடிப்பதே இல்லை. வீட்டுக்கு வீடு வாசல்படி.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.... #ஒரு மரத்துக் #பனபதநீர் குடித்தால் அடி மரமாய் உடம்பு வரும் ! #பனை மரத்துக் #பதநீர் குடித்தால் கட வெலும்பும் இரும்பாகும் ! பதநீர் நமக்குச் சுகமளிக்கும் ! வெள்ளை ரத்தம் – அந்தக் #கரும்பனையும், தென்னையும் நம் கழனித் தெய்வம் ! #பதநீர் குடித்துக் #கெட்டாரைக் கேட்ட துண்டா? பதநீர் குடித்துச் #செத்தாரைப் பார்த்த துண்டா? #எலும்புறுக்கி நோய் தீரும் தென்னங் #பதநீரால் ! எரிசூட்டு நோய் தீரும் #பனையின் பதநீரால் ! அதிகாலைக் #பதநீர் குடித்தால் அச்சம் போகும் ! அந்தி #பதநீர் குடித்தால் ஆயுள் நீளும் ! #தாகம் எடுக்கையிலே தமிழ்க்கிழவி அவ்வை #பதநீர் அருந்தித்தான் களிப்போடு வீற்றிருந்தாள் ! கடையேழு #வள்ளல்களும் கவிஞர்கள் எல்லோர்க்கும் #பதநீர் விருந்து கொடுத்தன்றோ கௌரவம் செய்தார்கள் ! வில்வேந்தர் வேல்வேந்தர் வீரவாள் வேந்தர் #பதநீர் அருந்தியன்றோ கட்டுடம்பு வளர்த்தார்கள் ! #சித்தர்கள் நமக்குச் சீதனமாய் கொடுத்த முத்தனைய பதநீர் வேண்டி முழக்கம் செய்திடுவோம் ! விருந்தாகி #மருந்தாகி விடிகாலை உணவாகி #விவசாயி வாழ்க்கையிலே வருமானம் வழங்குகிற வரம் கொடுக்கும் தேவதைகள் ! அளவான #போதை அளிக்கும் பொருளென்றால் அருந்தலாம் என்று அரசியல் சாசனமே அதிகாரம் தருகிறது! #போதை இல்லாத அளிக்கின்ற #பதநீரை ஏனருந்தக் கூடாது! ஏனிறக்கக் கூடாது! - கவிஞர் மேத்தா
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
எல்லாமே நாம் செய்துள்ள காபுரிதிகளின் படிதான் எமக்கு கிடைக்கிறது - ஜென்மஜென்மத்துக்கும்
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
மிகவும் நன்றி PIRA அவர்களை எப்படி தொடர்பு கொள்வது?
-
மடகஸ்கார் பயண அனுபவம்
இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றமைதான். அங்கிருந்த 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து நள்ளிரவு வரை காடு மேடு வனாந்திரம் எல்லாம் ஒரே ஹைக்கிங் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போவதானல், கிட்டஎன்றால் van அல்லது நேரத்தை வீணாக்காமல் சிறிய ரக விமானத்தில்தான் பயணித்தோம். ஒரு ஆபத்தான விலங்குகளும் மடகஸ்காரில் இல்லாதால் இரவிரவாக காடுகளில் நடமாட பயப்படத்தேவை இல்லை. பாம்புகள் இருக்கு ஆனால் நச்சுப்பாம்புகள் அல்ல. உலகில் சிங்கம், புலி, யானை, கரடி, மலைப்பாம்பு மாதிரி மிருகங்கள் கூர்ப்பு அடைந்து தோன்ற முன்னமே, மடகாஸ்கர் ஆபிரிக்க பெரும் நிலப்பரப்பில் இருந்து பூமித்தட்டுகளின் அசைவு காரணமாக தனியே விலகி சென்றுவிட்டது. அதனால் தான் உலகின் மற்ற இடங்களில் இருந்த லெமூர் மாற்று ராட்சத பச்சோந்திகள், பறவைகள் எல்லாவற்றையும் பின்பு தோன்றிய வேட்டையாடும் விலங்குகள் கொன்றழித்து விட்டன. மற்ற மிருகங்களை காட்டிலும், மிகுந்த அழிவை தரும் மனித விலங்குகளால் தான் பல விலங்கினங்களும் அழிந்து போய்விட்டன. மடகாஸ்கரும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அங்கு மனிதர்கள் குறைவாக இருந்ததாலும், குடியேறச்சென்ற மனிதர்கள் புலி, சிங்கங்களை கொண்டு போகாமல் நாய் பூனைகளை கொண்டு சென்றதால் ஓரளவுக்கு இந்த லெமூர் உற்பட மிகப்பழைய விலங்கினங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன. ஆனாலும் நாய்கள் பெருகி காட்டுக்குள் சென்று இந்த அரிய வகை மிருகங்களை கொல்வதும், மடகஸ்காரின் அரசியல், பஞ்சம் என்பவற்றால் நிறைய அழிவுகளை சந்தித்திக்கொண்டு இருக்கிறது. காடுகளை சட்ட விரோதமாக அழித்து எரிபொருள், கட்டடம் கட்ட என்றும் ஒரு பக்கத்தால் அழிவு. பொதுவாக அமெரிக்கர்களை ஒருவருக்கும் பிடிக்காது. ஒன்றில் பொறாமை அல்லது அவர்கள் எல்லோரிடமும் சண்டை போடுபவர்கள் என்பதால். அது அவர்களுக்கும் தெரியும். தாம் உலகில் எங்கு சென்றாலும் ஒருவித சந்தேகத்துடன் தான் பயணிப்பார்கள். ஆனால் மடகஸ்காரில் அமெரிக்கர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ஏனென்றால் பட்ரிசியா ரைட் என்னும் பெண் விஞ்ஞானி 1960 ஆண்டுப்பகுதியில் அங்கு சென்று இந்த லெமூர் மற்றும் விலங்குகளை பாதுகாக்க பெரும் பாடு பட்டு, அங்கு ஒரு ஆய்வு நிலையமும் அமைத்து இன்று அது மிகப்பெரும் உதவிகளை செய்து வருகிறது. https://www.stonybrook.edu/commcms/centre-valbio/. அதானல் எமது குழுவினருக்கு பெருமிதமும் மகிழ்ச்சியும். இன்னும் தொடரும்……
-
நான் ரசித்த விளம்பரம் .
பார்ஸல் வந்திட்டுதா? 🤣
-
மடகஸ்கார் பயண அனுபவம்
எழுதிவைத்திருக்கிறேன் இன்று வீட்டுக்கு போய் இன்னும் கொஞ்சம் கூட எழுதி பதிவிடுகிறேன் சிறி. நீங்கள் எல்லோரும் ஆவலாக வாசிப்பதால் நிறைய புதினங்களை சேர்த்து எழுதுகிறேன்.
-
நான் ரசித்த விளம்பரம் .
கு சா அண்ணா, கோடாலித்தைலத்தை பற்றி பதில் போட்டுவிட்டு, வேலைக்கு வந்து பார்த்தால் என்ர மேசையில உங்கட ஊர் ICE Eau de Colongne இருக்கு.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
நன்றி அண்ணா.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
வணக்கம் நிழலி. உண்மையில் இந்த பயண கட்டுரை எழுத வெளிக்கிட்டதே உங்களுக்குதான். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அது நிழலியா என்று ஒரு சந்தேகம். பழைய மெசேஜ்களை தேடிப்பார்த்தேன் கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படியும் பயண கட்டுரையை பார்த்து விட்டு கொமெண்ட்ஸ் போடுவீர்கள் என்று பார்த்தேன். காணவில்லை. இன்று தற்சமயமாக தான் பார்த்தேன். எல்லா notification களும் வருவதில்லை. அதனால் சிலரது பதில்கள் நான் பார்க்காமலே போக நேருடுகிறது. அரசியல்தான் காரணமாக இருக்கும். மிக மிக வறுமையான நாடு. 95 வீதமான வருமானம் 5 வீதமான மக்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் பார்த்த சில காட்சிகள் மக்கள் எப்படி 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்திருப்பார்கள் என்பதை மனக்கண் முன் கொண்டு வந்தது. கட்டுரை மேலும் தொடரும் ஓம் புங்கையூரன். இலங்கை நியூசிலாந்து போன்ற நாடுகளும் அப்படிதான். பெரும் நிலப்பரப்பில் இருந்து எப்பவோ பிரிந்து போனதால் ஆதி காலத்து விலங்குகள் தாவரங்கள் எல்லாம் அழியாமல் இன்னமும் வாழ்கின்றன (ஓரளவுக்கேனும்)