Everything posted by nilmini
-
நான் ரசித்த விளம்பரம் .
எது தசை பிடிப்பு, மூட்டு நோ, தசை- எலும்பு பொருந்தும் இடம், விளையாட்டின் போது வரும் சின்ன அசௌகரியங்கள் இவற்றிற்கான உடனடி நோவை குறைக்கும் மருந்து. இது உடனடி நிவாரணத்துக்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் தசை, மூட்டு சம்பந்தமான காயங்கள் ஆறுவதை துரிதப்படுத்தும். ஐரோப்பா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பது ஸ்ட்ரோங் மிகவும் குறைந்தது (இறக்குமதி கட்டுப்பாடுகளினால்) இத வேண்டி பாவித்தால் நல்ல பலன் கிடைக்கும் (Menthol formula by Leung Kai Fook, Singapore.) எனது மகனுக்கு விலா எலும்புகள் நெஞ்சில் சேரும் இடத்தில் நோ இருக்கிறது. அடிக்கடி சிங்கப்பூர் தான் பூசுகிறார். ஆர்தரைடிஸ் நோ, நிணநீர் போக்கு இவற்றுக்கு இந்த கல்லால் - Guesha stone கோடாலித்தைலம் சேர்த்து உருவலாம்.
-
நான் ரசித்த விளம்பரம் .
நாங்கள் எல்லோரும் இப்பவும் பாவிக்கிறோம். சிங்கப்பூரில் வாங்குவது மிகவும் விசேஷமாக இருக்கும்.
-
நான் ரசித்த விளம்பரம் .
அய்யய்யயோ நாங்கள் கந்தர்மடம் காப்புரிமை எடுக்க முதல் சுவி வீட்டில் இருந்து யூரோப் முழுவதும் பிரபல்யம் ஆகி விட்டதே (தோட்டுரிமையோட😂) ஆனால் உண்மையிலேயே உடையார் ஒழுங்கை நாவலர் குடும்பம் எல்லோரும் சேர்ந்து அப்பம்மாவின் வளவில் ஆறு மாதத்துக்கு போதுமான தூள் சம்பல் இடிப்பித்து எல்லாக்குடும்பக்களிடையும் பிரித்து எடுத்ததைப்போல நான் வேறெங்கும் பார்க்கவில்லை. நாலு மா இடிக்கும் பெண்கள் விடியவே வந்து கடலைப்பருப்பு, உளுந்து, பயறு, செத்தல் மிளகாய், கருவேப்பிலை எல்லாம் வறுத்து கல்லுரலில் அருவல் நெருவலாக இடிப்பார்கள். நிறைய தேங்காய் துருவி கருக வறுத்து கொஞ்ச தூள் சம்பலுக்கு அதையும் சேர்த்து செய்வார்கள். இது,தென் இந்தியாவில் செய்யும் இட்லி தோசை பொடி மாதிரி இருக்கும். தோசை, சோறு, பால் சோறு எண்டு எல்லாத்துக்கும் அதையும் சேர்த்து சாப்பிடலாம்
-
நான் ரசித்த விளம்பரம் .
அம்மா செய்யும் மூலிகை கோப்பி: கொத்தமல்லி, சீரகம், ஓமம், மிளகு, வேர்க்கொம்பு, ஓரிரு கராம்பு, ஏலக்காய் எல்லாம் கருக வறுத்து, விரும்பினால் கொஞ்ச கோப்பியையும் வறுத்து நன்றாக அரைத்து ஆறவைத்து போத்தலில் போட்டு வைத்தால் 6 மாசம் வரை இருக்கும். கருப்பட்டியுடன் குடிக்கலாம். அல்லது தேன் சேர்க்கலாம்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
எல்லாவித வளங்களும் பெரிய வளர்ச்சியொன்றும் இல்லாமல் அப்படியே வெள்ளைக்காரன் விட்டுட்டுபோனமாதிரி இருக்கு. புதுசு புதுசாக கட்டப்படும் சுற்றுலாத்துறையை கட்டிடங்கள் எல்லாம் எமக்கு பார்க்க அழகாகவும், பெருமையாக இருந்தாலும், அவை அனைத்தும் அரசியல் சம்பந்தப்பட்டவர்களினால் கட்டப்பட்டவை. அதனால் நாட்டுக்கு பெரிய வருமானம் இல்லை.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
வாசிக்க நல்ல சுவராஸ்யமாக இருக்கு சிறி. இலங்கையின் அழகுக்கும் வளத்திற்கும் எங்கேயோ இருக்க வேண்டிய நாடு. இப்போது நிறைய வெள்ளைக்காரர் மரக்கறிக்காரராக மாறுவதால், இணையத்தளத்தில் இருந்து இலங்கை இந்திய உணவு செய்முறைகளை பார்த்து பொருட்கள் வேண்டி சமைக்கிறார்கள். பிலாக்காய், சோயாமீட், பன்னீர் போன்றவற்றை தேங்காய் பால் சேர்த்து சமைக்கிறார்கள். நானும் பார்த்தவரையில் வெள்ளைக்காரருக்கு யாழ்ப்பாணம் நன்றாக பிடிக்கிறது.
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
மிகவும் அருமையான கவிதை உதயன். இளமைக்கால நினைவுகள் கண்முன்னே வந்து போனது.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இந்த பாட்டை நான் அடிக்கடி கேட்பேன். பாட்டு, குரல், ஹனிபாவின் இயல்பு , எனது சிறு பிராயம் எல்லாவற்றுக்குமாக.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
ஓம் கிருபன், இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. பல்கலைக்கழகத்தின் மூலமாக போனதால் தான் இப்படி கல்வி சார்ந்த எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்து, பல வகையான சரணாலயங்கள், ஆராய்ச்சி கூடங்கள் இன்று பார்க்கக்கூடியதாக இருந்தது.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
கிடுகுக்கொட்டில் ஒன்றை போட்டிட்டால் போச்சு😂
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நன்றி நிலாமதி. எனக்கு பழமையை பேணிப்பாதுகாப்பதில் மிகுந்த விருப்பம். மனதுக்குள் நினைத்த மாதிரி செய்வதில் சில தடங்கல்கள். என்றாலும் அம்பது வீதமாவது செய்யக்கூடியதாக இருக்கு. அரச மரமே வேண்டாம். சில மாதங்களில் போ ய்ய பினிஷிங் செய்யலாம் என்று இருக்கிறேன். அரசமரம் இருந்தால் தறிக்க வேண்டியதுதான். கு. சா அண்ணாவும் நுணாவிலா? எழுதுமட்டுவாள் தேத்தண்ணி அந்த தண்ணீருக்கு மிகவும் சுவையாக இருக்கும்
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நுணாவில் உறவினர்களிடம் அவர்களை தெரியுமா கேட்டுப்பார்க்கிறேன். திலகா டீச்சர் அவ்வளவு வடிவா? பெயரும் அழகாகத்தான் இருக்கிறது. உண்மைதான் PIRA. நான் போட்ட பிளானின் படி வேலைகள் முடிந்து விட்டது. இற்கு முதலே செய்ததால் செலவு பரவாயில்லை. மீண்டும் சந்தித்ததில் சந்தோசம் ஏராளன். நலமாக இருக்கிறீர்களா? தொடர்ந்து ஏதாவது சுவாரசியமான , பிரயோசனமான விடயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன்.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
சாப்பாட்டு வகைகளை கேட்கவே நல்ல ருசியாக இருக்கு சிறி.எலும்பு சரியாக பொருந்துவது, நரம்பு சதைகள் மீண்டும் தொடர்பு கொள்வதெல்லாம் எமது உடல் கச்சிதமாக செய்தாலும், ஒரு தவறும் நடக்காமல் எல்லாம் சரிவந்து , சமநிலயையும் எடுத்துவிட்டது பெரிய ஒரு விடயம்தான்.பழையபடி வேலைக்கும் போகத்தொடங்கியதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. வேலைக்கு போனால் உடல் நிறை விரைவாக குறையும்
-
மடகஸ்கார் பயண அனுபவம்
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பல வகையான லெமூலர் விலங்குகள் வாழ்விட அழிவு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக அழியும் அபாயத்தில் உள்ளன. அதனால்மடகாஸ்கர் தீவிலுள்ள பல காடுகளையும் சரணாலயங்களாக மாற்றி இந்த லெமூர் விலங்குகள், பச்சோந்திகள் மற்றும் தாவர விலங்கினங்களை பாதுகாக்கிறார்கள். எலி மாதிரி காதுகளும், நீண்ட அகண்ட வாலும், வவ்வால் மாதிரி கால்களும் கொண்ட அய்யி அய்யி என்னும் இனம் (மேலே படத்தில் உள்ளது) தன்னுடைய கூர்மையான பார்வை மற்றும் கேட்கும் திறனைப் பயன்படுத்தி உணவின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது. இதனுடைய அடர் பழுப்புநிற விநோதமான உருவ அமைப்பு கெட்ட சகுனமாக கருதப்படுவதால் அதிகளவு அழிக்கப்பட்டு அரிய விலங்கினத்தினுள் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது. இந்த விலங்கை பற்றிய ஒரு சுவாரசியமான செய்தியை அண்மையில் படித்தேன். இந்த இணைப்பில் உள்ளது https://www.bbc.com/tamil/science-63427908 நன்றி. படங்களுக்கு இடையில் சில விளக்கங்களும் எழுதி வருகிறேன். பார்க்கவில்லையா நிலாமதி?
-
மடகஸ்கார் பயண அனுபவம்
பதிவுகள் இடும்போது மற்றவர்கள் போடும் கமெண்ட்ஸுக்கு லைக்குகள் போட முடியாமல் இருக்கிறது. ஐந்து லைக்குகள் தான் நேற்றைக்கு காலையில் இருந்து போட விடுகிறது.எல்லோருக்கும் அப்படிதானா?
-
மடகஸ்கார் பயண அனுபவம்
உண்மைதான். அங்கு பயணிக்கும்போது திடீரென ஸ்ரீலங்கா பெயர் பலகைகளை பார்த்ததும் வியந்து போனேன். மாணிக்கக்கற்களை புராதன முறையில் தண்ணீரில் அகல்வதை படம் எடுத்தேன். கண்டுபிடித்து அதையும் பகிர இருக்கிறேன். மாணிக்கக்கற்கள் இருக்கும் ஒரு இடத்துக்கு போனோம். அங்கு இலங்கையர்களையும் சந்தித்தேன்.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
- மடகஸ்கார் பயண அனுபவம்
மனிதர்களை நம்பும் விலங்கினகளுக்கு அதுதான் முடிவு. நம்பாவிட்டாலும் மனிதர்கள் விடப்போவதில்லை. இந்த லெமூர் இனங்களை பாதுகாப்பதற்கு முதன் முதலில் ஆர்வம் காட்டியவர் ஒரு அமெரிக்க பெண் விஞ்சானி. அந்த முயற்சி இப்ப நல்ல பலன் அளிக்கிறது. கணணி தான். முயன்று பார்க்கிறேன். நன்றி ஏராளன்.- மடகஸ்கார் பயண அனுபவம்
எல்லோருடைய கொமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி. எப்பவோ எழுத நினைத்தது. அங்கு வாழும் மக்களில் 95 வீதமானோர் 500 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை தான் வாழ்கின்றனர். மிகவும் வறுமை. வரும்போது அநேகமான கொண்டுபோன பொருட்களை அங்கு விட்டுட்டு அழகான கலை பொருட்களை வாங்கி வந்தோம். இந்த சிறுமிகள் மாலையில் பவோபாப் என்னும் ராட்சத மரத்தில் இருந்து பெறும் மணிகளை கொண்டு செய்த மாலைகளை விற்றுத்தான் பள்ளிக்கூடம் போகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கடிகாரம் நான் குடுத்தது. இந்த மரம் நெடுந்தீவு மற்றும் மன்னாரில் போர்த்துக்கீசரால் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்து நடப்பட்டது. இந்த இலைகள் தண்ணிப்பிடிப்பானவை. அரேபியார்களுக்கு குதிரை விற்கும் காலத்தில் குதிரைகள் இந்த மரத்தின் கீழ் இளைப்பாறி தண்ணிக்காக இலைகளையும் சாப்பிட்டதாக நெடுந்தீவு சென்றபோது சொன்னார்கள். யாழ்ப்பாணத்தில் செய்யும் பனை சார்ந்த கைவினை பொருட்களின் தரம் பத்தாது. இந்த வறிய மக்கள் செய்து வைக்கும் பொருட்கள் மிகவும் உறுதியான நல்ல தரமானவை. ஏனெனில் அதை செய்வதற்கு பயிட்சியாளர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அப்படி செய்தா நல்லம். அகப்பைகள் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான் பாவிக்கலாம். நான் ஒவ்வொரு முறையும் வேண்டும்போது அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். தரமானதாக செய்தால் எல்லோரும் நிறைய வேண்டுவார்கள் (வெள்ளைக்காரர் உற்பட) யாழ் சந்தையில் எனக்கு சில வெள்ளைக்காரர்கள் அப்படி அவர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். நிறைய எழுத இருக்கு. நான் பாவிக்கும் கூகிள் மொழி பெயர்ப்பு அவ்வளவு நல்லம் இல்லை. நீங்கள் எல்லோரும் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
தகவலுக்கு மிகவும் நன்றி மீரா. நாற்சார் வீட்டின் கால் பகுதியை அப்படியே வைத்துக்கொண்டு இரன்டு அடுக்காக கட்டினது. மிகுதியை பழையமாதிரியே இருக்கத்தக்கதாக சீலிங் அடித்து, நிலத்தையும் திருத்த வேணும். பாசையூர் கட்டிட்டா என்ஜினீயர் ஒருவர்தான் இதுவரை செய்து தந்தவர். வேலை நல்லம் ஆனால் ஸ்லோ.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வணக்கம் புங்கையூரான், இது பொன்னொச்சி மரம் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. போனமுறை கேதீஸ்வவரம் போய்த்தான் முதல் தடவையாக கொன்றை பூவை அடையாளம் கண்டேன். உண்மைதான் சிட்னி கோவில்காரர் கண்டுபிடித்து விட்டால் உங்கள் நினைவு மீட்டல்களையும் குழப்பி விடுவார்கள். எனது தோட்டத்தில் நான் முதன்மையாக கேட்டது பாக்கு மரம் தான்.அப்பாவுக்கு விருப்பமானது. மிச்சம் எல்லாம் lanscaperரே தெரிவு செய்தது.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
தகவலுக்கு மிகவும் நன்றி மீரா. வீட்டின் கால்வாசி பகுதிதான் புதிதாக காட்டியது. மிகுதியாய் பழைய நாட்சார் அமைப்புடன் மெருகு படுத்த முடியுமா என்று Hari Engineering இடம் கேட்டு பார்க்கிறேன்,- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
எழுதுமட்டுவாளில் இருந்து எமது உறவினர் பலர் நுணாவிலில் கலியாணம் செய்திருக்கிறரார்கள்- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
மிகவும் நன்றி கு.சா அண்ணா. மடகாஸ்கர் என்று புதுசா ஒரு திரி தொடங்கியுள்ளேன்.- மடகஸ்கார் பயண அனுபவம்
2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள் பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம். இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றன. மேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர். - மடகஸ்கார் பயண அனுபவம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.