Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பகலவன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,900
 • Joined

 • Days Won

  22

Everything posted by பகலவன்

 1. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் போராளிகள் என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர் என முன்னாள் தமிழீழ அரசியல் துறை நிர்வாகப் பொறுப்பாளாரும் கேடயச் சின்னத்தில் பாராளுமன்ற தோ்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான மணியண்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார். உதயநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் மிக்க வாழ்வை நாம் பெற வேண்டும். கிளிநொச்சியில் அதற்கான அடித்தளத்தை இட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்காக நுற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எங்களது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் வைத்து அரசியல் செய்யுவம் இவர்கள் என்றும் முன்னாள் போராளிகளின் நலன்களில் அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டது கிடையாது. வாரத்தைக்கு வார்த்தை மாவீரர்களின் தியாகத்தையும், விடுதலைப்புலிகளின் வீரத்தையும் வைத்து அரசியல் செய்யும் இவர்கள் ஒரு காலமும் எங்களை மதித்தது கிடையாது, எங்கள் உணர்வுகளை புரிந்தது கிடையாது. இதனால்தான் கிளிநொச்சியில் பலநூறு முன்னாள் போராளிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் சமத்துவக் கட்சியோடு அணிசேர்ந்துள்ளோம். சொற்களால் விபரிக்கமுடியாத தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த போராளிகளையும் மக்களையும் வியாபாரப் பொருளாக்கி, போலித்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் கடந்த பத்தாண்டுகளாக தம்மையும் சுற்றத்தையும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர். இழப்புக்களைச் சந்தித்த சமூகம் முடிவுறாத அவலத்துக்குள்ளும் துன்பத்துக்குள்ளும் தான் தவிக்கின்றது. இந்த படுபாதக நிலையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காகக் களத்தில் நின்று செயற்பட்ட முன்னாள் போராளிகள் பலநுறு பேரும் மருத்துவர்களும் ஒன்று சேர்ந்துள்ளோம். இதுகால வரையும் எம்மை தமக்குத் தேவையான கச்சாப் பொருளாகப் பாவித்த அரசியல்வாதிகளை நிராகரித்து புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவோம். சுயேட்சைக் குழு -5இல் கேடயம் சின்னத்தில் போட்டியிடும் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகவே எமது இலக்கினை அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.pagetamil.com/137550/
 2. பிந்திய செய்தி.... குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி நேர விசாரணைகளின் பின்னர் ஷானி அபேசேகர நீதிமன்றில் ஆஜர்! கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கம்பஹா நீதவான் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால், குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டிருந்தரார். இந்நிலையில் அவர் 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். https://www.tamilwin.com/community/01/252395?ref=home-latest
 3. நிர்வாகிகளின் கவனத்துக்கு முதற்பக்கத்தில் இருக்கும் காப்புரிமை ஆண்டை மாற்றிவிடவும். காப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
 4. முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அவர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமருக்கும், தேர்தல் ஆஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடித்தல் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, (2020 ஜூலை 28) அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி வியப்புக்குரியது. யாழ்ப்பாணம் குருநகரில் இரவு 8 மணியளவில் நான் தேர்தல் பிரச்சார மேடையில் இருந்த போது, முழுக் கறுப்புச் சீருடை அணிந்த 14 இராணுவத்தினர் (கறுப்புப் பூனைகள்?) மோட்டார் சைக்கிள்களில் வண்டிக்கு இருவராக கூட்ட அரங்கிற்குள் தடதடவென்று பெரும் சத்தத்துடன் நுழைந்தனர். வாகன எஞ்சின்களை அலறவிட்டுத் தொல்லை கொடுத்தனர். நான் புறப்படும் வரை காத்திருந்தனர். பிறகு என் கார் புறப்பட்ட போது 14 ஆட்களுடன் 7 மோட்டார் சைக்கிள்களுடன் என் காரைச் சுற்றிச் சுற்றி வந்தனர். கொஞ்ச நேரம் ஓரத்தில் நின்றுவிட்டு என் கார் செல்லும் பாதையில் குறுக்கிட்டனர். பிறகு ஒரே வரிசையில் சென்று ஒரு பக்கச் சந்தில் போய் மறைந்தனர். என் காவல் போலீசார் என்னுடன் காருக்குள்ளேயே இருந்தனர். இந்த இராணுவத்தினர் எனக்கு எதையாவது உணர்த்த விரும்பினார்களா என்று தெரியவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் என்னைப் போன்ற வயதான ஒருவரை மிரளச் செய்து விட மாட்டா என்று போதிலும் மக்களுக்குத் தவறான செய்தியை வழங்கி வாக்களிப்பு நடைமுறையை பாதிக்கக்கூடும். இந்த சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். வட மாகாணத்தில் 2020 நாடாளுமன்றத் தேர்தல் இராணுவத்தின் இருப்பினால் பாதிப்பு ஏற்படாமல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என நம்புகிறேன். https://www.pagetamil.com/137631/#
 5. 40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன். எமது இளமைகாலத்தை தொலைத்து விட்டோம். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார். பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பொறுப்பாளராக செயற்பட்டு, தற்போது இராணுவப்பிடியில் உள்ள கே.பி என அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன். கொழும்பு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்திருந்தார். கேள்வி: இயல்பு வாழ்வைப் பாதிக்கும் பல சிறிதளவிலான முயற்சிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனப்படும் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் இவற்றுக்குப் பின்னால் இருக்கலாமென நீங்கள் கருதுகிறீர்களா? பதில்: வட, கிழக்கிலுள்ள, இளைஞர்கள், பெரும்பான்மையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இப்படியான முயற்சிகளில் இறங்குவதை விரும்புவதில்லை. தமது வாழ்நாள் முழுவதும் , முற்றிலும் பலனற்ற ஒரு விடயத்துக்காக அவர்கள் போராடி நொந்துபோயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வேலையின்மை காரணமாகவும், வறுமை காரணமாகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் பொறிக்குள் வீழ்ந்து இப்படியான முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். இப்படியான சம்பவங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் சட்டபூர்வ இருப்புக்கு உதவி செய்யலாம். வடக்கில் இன்னும் வன்முறை நிகழ்கிறது என்பதை காட்டி, இலங்கைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர்கள் தமது அரசாங்கங்களுக்குக் காட்டவேண்டும். ஆனால் இந்த முயற்சிகள் பயனற்றவை. ஏணெனில், அதற்கான ஆதரவோ அல்லது போதுமான சக்தியோ மக்களிடம் இல்லை. இப்படியான முயற்சிகளில் இறங்காமலிருப்பதற்கு இங்குள்ள இளைஞர்களுக்கும், இதர மக்களுக்கும் போதுமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களில் இதுவுமொன்று. இன்னொரு வகையில், ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சியில், விடுதலைப் புலிகள் மீளுருவாவதற்கான வெளி இல்லை. ஏனெனில் அவர் மிகவும் திறமையோடு கட்டமைத்திருக்கும் பாதுகாப்பு அமைப்பு எதிர்கால ஆபத்துக்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும். கேள்வி: விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிருடன் வைத்திருப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் நோக்கமாக இருப்பின், அவர்களுக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்னவாகவிருக்கும்? பதில்: அவர்களது முயற்சிகள் வெற்றிபெறப் போவதில்லை. அவர்கள் வாழும் நாடுகளில் அவர்களின் சுய இருப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இவை. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்பவர்கள் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் ரகசியமல்ல. இலங்கையில் குழப்பங்களை விளைவிக்காமல் அவர்களால் ஐரோப்பாவில் தொடர்ந்தும் வாழ்வதற்குச் சந்தர்ப்பங்களில்லை. வடக்கு கிழக்கு மக்களின் பரிதாப நிலையை விற்பதனால் தான் அவர்களால் அங்கு சீவிக்க முடிகிறது. அங்கு வாழும் மக்களுக்கு வடக்கு கிழக்கின் கள நிலவரம் தெரியாது. அதனால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்களுக்குத் தானம் செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு நான் தரும் செய்தி, அவர்கள் உண்மையிலேயே வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற விரும்பினால், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை உரிய வழிகளில் தானம் செய்யுங்கள். போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களது தானங்களைச் செய்யலாம். பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தனிப்பட்ட முறையில், நான் பலருக்கு விளங்கப்படுத்தியுள்ளேன். போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கோ அல்லது இளையவர்களுக்கோ நல்ல கல்வியைக் கொடுத்தலும், வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு சமூக நல, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்கி அம் மக்கள் தங்கள் கால்களில் நிற்க வழிசெய்தலுமே புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போதைக்குச் செய்ய வேண்டியது என்பதையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன். மக்கள் ஆதரவளிக்காதபோது இன்னுமொரு ஆயுதப்போராடம் பற்றிச் சிந்திப்பது பலனற்றது. கேள்வி: சென்ற வருடம் இந் நாடு தீவிரவாதத்தின் மிரட்டலை ஒரு தடவை சந்தித்தது. மிகவும் சிரமப்பட்டு இந்நாடு பெற்றுக்கொண்ட சமாதானத்தை அது சீரழித்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில்: நாங்கள் அது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் மட்டும், இந் நாட்டின் பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்துவார். அப்படியான படுகொலைகள் இனிமேல் நடாதவாறு அவர் பார்த்துக்கொள்வார். அது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ இலங்கை என்ற இந்தத் தாய்நாட்டில் ஒருவருக்கும் தீங்கு இழைக்கப்படமாட்டாது. அவர் மீது நம்பிக்கை வையுங்கள். கேள்வி: நீங்கள் ஏன் அவர் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? அவர் உங்கள் உயிரைக் காப்பாற்றியவர் என்ற வகையிலா? பதில்: ஆம். நான் அவர் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். மக்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவர் செய்து முடிப்பார். நான் அவரை அவ்வப்போ சந்தித்திருக்கிறேன். எங்கள் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அவர் அடிக்கடி பேசுவார். இந் நாட்டுக்குச் சரியான தலைவர் அவர் தான். சரியான பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட சரியான தலைவர் அவர். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார். அவருக்குப் பயப்படும் அரசியல்வாதிகளால் அவரைப் பற்றிய பொய்யான விடயங்கள் பரப்பப்படுகின்றன. இருப்பினும், அக் கதைகளினால் ஏமாற வேண்டாம், அவர் எல்லா சமூகங்களுக்கும் தலைவர் என நான் எனது மக்களுக்குக் கூறி வைத்துள்ளேன். அவர் இந் நாட்டை மிகவும் ஆழமாக நேசிக்கிறார். புதிய வழிகளில் இந்நாட்டை அபிவிருத்தி செய்து இந்நாட்டு மக்களின் வாழ்வை முன்னேற்ற நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கேள்வி: வடக்குக்கு புதிய அரசியல் தலைமை தேவை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிகம் இளையவர்கள் அரசியலில் பங்குபெறவேண்டுமெந்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா? பதில்: பல வித்தியாசமான தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள். அதே போன்ற மாற்றங்களை நாம் வடக்கிலும் எதிர்பார்க்கிறோம். பல தசாப்தங்களாக, வடக்கில், தமிழ் மக்கள் ஒரே அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. வடக்கு கிழக்கில் புதிய அரசியல் தலைமைக்காக பாரிய வெற்றிடமொன்று இருப்பதாக நான் நம்புகிறேன். இப் பிரதேசங்களில் இப்போது மக்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அரசியல் விளையாட்டுக்களை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். இதுவரை செய்துவரும் தமிழ்நாட்டு அரசியல் இனிமேலும் இலங்கையில் எடுபடாது என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் அறிந்துவைத்திருக்க வேண்டும். கேள்வி: கடந்த தசாப்தத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணைகள் செய்யப்படவேண்டுமென ஐ.நா. தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறது. இப்படியான குற்றச்சாட்டுகளி விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்று அவசியமென்பதை நீங்கள் நம்புகிறீர்களா? பதில்: பூகோள அரசியல் தளங்கள் மாற்றமடையும்போது இப்படியான் குற்றங்களை அவர்கள் வித்தியாசமான வடிவங்களில் கொண்டு வருகின்றார்கள். போர்க் குற்றங்கள் இலங்கைக்கு எதிரானவை மட்டுமல்ல. உலகப் போர்களில் ஈடுபட்ட நாடுகளுக்கு எதிராகவும் அவை கொண்டுவரப்பட்டன. எனவே, போர் என்று ஒன்று முடிவுற்றதும் இப்படியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. எந்தவிதமான விடயமாகவிருந்தாலும் இலங்கை தனது பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தவறான புரிதலும், நம்பிக்கையீனமும் எங்கள் சிறுபான்மையித்தவரின் மத்தியில்தான், சர்வதேசங்களிடையே அல்ல. ஒரு உள்நாட்டுப் பிரச்சினையி வெளியார் தலையீடு அவசியமற்றதும், காரணமற்றதும் எனவே நான் கூறுவேன். கேள்வி: வட மாகாணத்திலுள்ள இராணுவத்தைக் குறைக்கும்படி வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன? பதில்: வடக்கில் இராணுவ – பொதுமக்கள் உறவு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. இராணுவம் சமூகத்தின் ஒரு பங்காக மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள், தமது அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி கேட்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் தமது பாதுகாப்புக்காக இராணுவம் தேவை என்ற நிலையில் இருக்கிறார்கள். மக்கள் அதிகம் வேலை வாய்ப்புகளைப் பெறும் வரை, புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படும்வரை, அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்வரை, இராணுவம் அங்கு இன்னும் சில வருடங்கள் இருக்கவேண்டுமென்பதையே நானும் விரும்புகிறேன். கேள்வி: நீங்கள் உங்கள் முற்காலத்தை மீள்நோக்கிப் பார்ப்பின், 1970 இளையோர் எழுச்சியில் உங்கள் இடம் என்னவாக இருந்திருக்கும்? பதில்: வட கிழக்கு மாகாணங்களில் 1970 களில் எழுந்த மாணவர் எழுச்சியில் பங்கெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. எங்கள் அரசியல் தலைவர்கள் இளையோரை நகர்த்தி அதன் மூலம் எழுந்த குழப்பத்தைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்தினார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து வடக்கில் வன்முறையை ஆரம்பித்தார்கள். இளையோர் இவர்களைத் தலைவர்களாகவும் பார்த்தார்கள். நான் அவரைச் (பிரபாகரனை) சந்தித்தபோது, பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அவர் தான் தங்கத்துரையையும் குட்டிமணியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தேன். கேள்வி: நீங்கள் முன்னர் வழங்கிய பேட்டியொன்றின்போது, “நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு பொலிஸ் அதிகாரியாக வர விரும்பியிருந்தேன்” எனக் கூறியிருந்தீர்கள்? பதில்: ஆம், நான் எனது க.பொ.த. உயர்தரக் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, நான் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தபடியால், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டராக வர விரும்பியிருந்ததுண்டு. அதற்கான விணப்பத்தையும் நான் அனுப்பியிருந்தேன். திடீரென்று நான் மனதி மாற்றி அரச் நிர்வாகத் துறையில் சேர விரும்பினேன். பின்னர் இந்தியாவுக்கு ஓடவேண்டி வந்துவிட்டது. கேள்வி: ஏன் பொலிஸ் சேவையில் சேர விரும்பினீர்கள்? பதில்: எனது நோக்கம் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமென்பது. பொலிஸ் சேவை, இராணுவ சேவையைப் போன்றது. அப்போது எனது சகோதரர்கள் சிலர் இராணுவத்தில் கடமை புரிந்தார்கள். அவர்களது சீருடைகளினால் கவரப்பட்ட நானும் ஒருநாள் சீருடை தரிக்கும் ஒரு வேலையில் சேர வேண்டுமென விரும்பினேன். கேள்வி: ஏன் உங்கள் நிலைப்பாட்டை மாற்றினீர்கள்? பதில்: அக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் அரசியல் நிலைமை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததும், இளையவர்களிடையே அமைதியின்மை இருந்ததுமே காரணம். கேள்வி: உணர்ச்சிகரமான நிலைமை என்று எதைக் குறிப்பிட்டீர்கள்? பதில்: தமிழ் அரசியல்வாதிகள் இளையவர்களை ஊக்கப்படுத்தியமையால் இளையவர்கள் அவர்களை நம்பத் தலைப்பட்டார்கள். நாங்கள் அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டோம். அவர்கள் உணர்ச்சி எழும் வகையிலான விடயங்களைப் பேசினார்கள். தமிழ் ஈழத்தைப் பற்றி அவர்கள் விளக்கமாகப் பேசினார்கள். இதனால் அவர்களால் வட மாகாண இளையவர்களின் மனங்களையும், இதயங்களையும் தொட முடிந்தது. இறுதியில் இதுவே ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. இதே காலப்பகுதியில் தான் ஜே.வி.பி. தலைவர் றோஹன விஜேவீர தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இளையோராக இருந்தபோது, அரசியல்வாதிகளின் போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலையில் நாம் இருக்கவில்லை. நாங்கள் குருட்டுத் தனமாக அவர்களை நம்பிப் பிந்தொடர்ந்தோம். கேள்வி: நாட்டிற்குச் சேவை செய்யவேண்டுமென்று விரும்பிய நீங்கள் ஏன் நாட்டை விட்டு சென்றீர்கள்? பதில்: நான் பொன்னம்மானுடனும் வேறு இரு நண்பர்களுடனும் மதுரைக்கு (இந்தியா) போனேன். இந்தியாவில் பொருட்கள் வாங்கும் பொறுப்பைப் பார்க்கும்படி பிரபாகரன் என்னிடம் கேட்டிருந்தார். நாங்கள் ஒரு வீடில் தங்கி, சிறிதளவில், பொருட்கள் வாங்கும் விடயங்களைக் கவனித்து வந்தோம். பின்னர் சென்னையில் நிரந்தரமாக இருக்கவேண்டி வந்துவிட்டது. பின்னர் இலங்கையில் சில சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக, சிங்கப்பூரில் சில தொலைத் தொடர்பு சாதனங்களை வாங்கிவருமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பணி புரியும் சில புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட படியே அச் சாதனத்தை நான் வாங்கி அனுப்பினேன். படிப்படியாக, ஐரோப்பாவிலுள்ள தனது தொடர்புகளை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்து விடுதலைப் புலிகளின் வலையமைப்பை விஸ்தரிக்க உதவி செய்தார். 25 வருடங்களாக நான் விடுதலைப் புலிகளின் கொள்வனவு வேலைகளைச் செய்துவந்தேன். 2003 இற்குப் பிறகு அரசியல் தீர்வொன்றை நோக்கி செல்லுமாறு நான் பிரபாகரனைக் கேட்டேன். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாரிய மாற்றங்களைக் கண்டுவந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் செய்துவந்த கொள்வனவு போலத் தொடர்ந்தும் என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்களும், உறுப்பினர்களும் கணிசமான தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டதால் அவர்களும் விரக்தி நிலையை அடைந்திருந்தார்கள். அதே வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போன்றோரின் செயற்பாடுகளால் மக்களிடையே பிரபலமாகி வந்துகொண்டிருந்தது. அந்த நிர்வாகம் மிகவும் சுயநம்பிக்கையுடன் செயற்பட்டது. ஏனைய அரசுகளைப் போலல்லாமல், இந்த அரசு, விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதைகளை உடைத்தது. அதுவே விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம். கேள்வி: விடுதலைப் புலிகள் போரில் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா? பதில்: ஆம். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை என நான் உணர்ந்தேன். அவர்கள் தமது திட்டத்தை மாற்ற வேண்டிய தேவை வந்திருந்தது, ஆனால் அவர்கள் மாறவில்லை. கேள்வி: போராட்டத்தை நிறுத்துவது உங்கள் திட்டமானால், அதற்கடுத்தான உங்கள் திட்டம் என்ன? பதில்: நாங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செந்றிருக்க வேண்டும். மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் நான் நல்ல உறவைப் பேணி வந்தேன். அதனால் அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்து அவரது சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்திலிருந்து நான் விலகிச் செல்கிறேன் என அவர்கள் நினைத்தார்கள். பிரபாகரனைச் சூழவிருந்தவர்கள் அவரைப் பிழையான வழிகளில் நடத்திக்கொண்டார்கள். புதிய உலகப் போக்கை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கேள்வி: விடுதலைப் புலிகள் இளம் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அது பற்றி நீங்கள் பிரபாகரனிடம் கூறியது என்ன? பதில்: 2003 இலிருந்து 2008 வரை பிரபாகரனுடனான எனது தொடர்பு மிகவும் அந்நியமானது. நான் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் இருக்கவில்லை ஆனால், குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என நான் அவருக்குக் கூறியிருக்கிறேன். கேள்வி: போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. வடக்கின் நிலைமை பற்றிய உங்கள் கருத்து என்ன? பதில்: போர் முடிந்து 5 வருடங்களில் எனக்கு நல்ல திருப்தி. வடக்கில் பல துரித அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவும் 12,500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் இதர வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஆனால் அந்த முன்னேற்றம் ஆட்சி மாற்றத்துடன் சடுதியாக நிறுத்தப்பட்டு வடக்கு மாகாணத்தவர் கடுமையான சூழலில் கைவிடப்பட்டனர். அங்கு அபிவிருத்தி எதுவும் நடைபெறவில்லை. பலர் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். கேள்வி: நீங்கள் இலங்கையில் வந்திறங்கியபோது சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவையும், தற்போதுள்ள ஜனாதிபதி ராஜபக்சவையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில்: நான் மலேசியாவிலிருந்தபோது அவரை ஒரு கடுமையான இராணுவ அதிகாரியாகவே பார்த்தேன். அவர் என்னைத் தூக்கிலிடுவார் என்றே எதிர்பார்த்தேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது வாழ்வின் கடைசி நிமிடங்களை நான் அனுபவிக்கிறேன் எனவே நான் எண்ணினேன். அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றபோது, அவரின் பின்னால் ஒரு சாந்தமான புத்தர் சிலை இருப்பதைக் கண்டேன். அது எனக்கு ஒருவிதமான அமைதியைத் தந்தது. பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச என்னை வரவேற்று கைகளைக் குலுக்கினார். ஒரு மணித்தியாலம் பேசிய பின்னர், அவர் என்னை வரவேற்ற முறையிலிருந்து நான் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன் என உணர்ந்தேன். இலங்கையின் ஜனாதிபதியாக, அவர் நாட்டிற்குப் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவார். உதாரணமாக, லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவைக் கட்டீயெழுப்பியது போலவும், அவர் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவார். பல நாடுகளில் பல பிரபலமான தலைவர்கள் அவ்வப்போது பொற்காலங்களைப் படைத்திருக்கின்றனர். ஜனாதிபதி ராஜபக்ச, இலங்கையை ஒரு சிங்கப்பூர் மாதிரி மாற்றுவார் எனவே நான் நம்புகிறேன். கேள்வி: உங்களைப் பாதுகாக்கவென நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைப் பற்றிய உங்களது ஆரம்ப அபிப்பிராயங்களென்ன? பதில்: என்னிடம் பயம் குடிகொண்டிருந்த படியால், நான் அவர்களைச் சந்தேகத்துடனேயே பார்த்தேன். ஆனால் படிப்படியாக அவர்கள் என்னுடன் நல்ல உறவை அபிவிருத்தி செய்ததுடன், என்னை மிகவும் கண்ணியத்துடன் நடத்தினர். இந்த இளம் இரானுவ அதிகாரிகள் விடுமுறைக்குப் போய் வரும்போது, அவர்கள் வீட்டில் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களைக் கொண்டுவந்து தருவார்கள். நாங்கள் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக்கொண்டுள்ளோம். இப்போது நாங்கள் ஒரு குடும்பம் மாதிரி. கேள்வி: வடக்கில் தற்போதுள்ள அரசியல் நிலமை எப்படி இருக்கிறது? பதில்: எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்களையும் இருப்பையும் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அரசியல்வாதிகள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உதாசீன்ம் செய்துவிட்டனர். அவர்களது இரட்டை வேடம் கலைந்துகொண்டு போவதால் அவர்களால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. கேள்வி: மூன்று தசாப்தங்களாக நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டிருந்தீர்கள். தமிழரது குறைகள் என்னவென்று கருதுகிறீர்கள்? பதில்: இனப்பாகுபாடுகளுக்கு அப்பால், வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் சிறந்த பொருளாதார, கல்வி அபிவிருத்தியையும், வேலை வாய்ப்புக்களயுமே எதிர்பார்க்கிறார்கள். வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் அதே வேளை, வறுமை ஒழிப்பு அத்தியாவசியமானது. புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி ராஜபக்ச மீது அவர்கள் அளப்பரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள். வடக்கிலும், கிழக்கிலும் பல படித்த அரசியல்வாதிகள் வருகின்றபோது அங்கும் கல்வி, பொருளாதாரத் துறைகளில் எதிர்கால பிரகாசமானதாக மாறும். கேள்வி: திரும்பிப் பார்க்கில், நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றிக் கவலைப் படுவீர்களா? பதில்: ஆம். நான் கவலைப்படுகிறேன். எனக்கு இப்போது 64 வயது. எனது வயதின், ஏறத்தாள, 40 வருடங்களைப் பிரயோசனமற்ற பாதையில் தொலைத்து விட்டேன். ஜனாதிபதி ராஜபக்சவின் தயவில், இப்போதாவது நான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறேன். நம்பிக்கையை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் உன்னதமான பாதையில் அவர் என்னைப் பயணிக்கச் செய்திருக்கிறார். நாங்கள் இளமையாக இருக்கும்போது எதையும் எங்களால் மாற்ற முடியும் என நாம் நம்புகிறோம். அதனால் தான் இளம் பராயத்தில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தோம். அப்போது எங்கள் பாதை வெற்றிபெறக்கூடிய ஒன்று என நம்பினோம். ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல, 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் போராட்டத்தை விட்டு ஒரு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமெனவே நான் விரும்பினேன். நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நாங்கள் எங்கள பாதையை மாற்றிக்கொள்ளாமையால் எல்லோரும் வருந்துகிறார்கள். கேள்வி: சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செஞ்சோலை அனாதைகள் இல்லத்தைக் கிளிநொச்சியில் ஆரம்பித்தீர்கள். இப் பெண்கள் இல்லத்தின் முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது? பதில்: பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கைது செய்யப்பட்டபோது நான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போவதாக உத்தேசித்துள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச கேட்டார். 2009 இல் போர் முடிவிற்கு வந்த பிறகு, வன்னியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவித பாதுகாப்பும், எதிர்காலத்துக்கான எந்தவித திட்டங்களும் இல்லாது இருந்தனர். நான் அவர்களுக்கு உதவப் போகிறேன் என அனது திட்டத்தைக் கூறி அதற்கான ஆதரவையும் அவரிடம் கேட்டேன். அவரின் உதவியினால் கிளிநொச்சியில் இந்த ஆதரவற்றவர்கள் இல்லத்தைத் தொடங்கி நடத்தி வருகிறேன். கடந்த 8 வருடங்களாக நான் கிளிநொச்சியில் இருந்துகொண்டே இக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறேன். வறுமையான குடும்பங்களிலிருந்து வந்த, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாம் பராமரித்து வருகிறோம். பெரும்பாலான குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திருந்தே வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவது முதலாவது கடமை. போரின்போது தந்தையையோ அல்லது தாயையோ இழந்த பிள்ளைகளே அநேகமாக இங்கு உள்ளார்கள். தந்தையை இழந்த குடும்பங்களில் இருந்து, தாயாரின் வறுமை காரணமாகப் பிள்ளைகளை இங்கே கொண்டுவந்து விடுகிறார்கள். வீடுகளில் இப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை. தாய்மார் சில வேளைகளில் கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். தற்போது நாங்கள் நான்கு சிறுவர் இல்லங்களைப் பராமரித்து வருகிறோம். கிளீநொச்சியிலுள்ள செஞ்சோலை அனாதைகள் இல்லம், முல்லைத் தீவிலுள்ள பாரதி சிறுவர் இல்லம், முல்லைத்தீவிலுள்ள அண்ட்றூ சிறுவர் இல்லம், கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை ஆண்கள் இல்லம் ஆகியவற்றை நாங்கள் பராமரித்து வருகிறோம். இந்த நான்கு இல்லங்களிலும் 300 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளார்கள். பாடலைக் கல்வியோடு, பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்கைகளையும் நாம் வழங்குகிறோம். சிலர், கராத்தே, குத்துச் சண்டை, உதைபந்தாட்டம் போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் எமது மாணவர் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சியால் கடந்த 6 வருடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிகவும் நம்பிக்கையுடன், சமூகத்தை எதிர்கொள்ளும் வாழ்வுத் தகமைகளுடன் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் உயர் கல்வியை நோக்கிப் பயணிக்கிறார்கள். சிலர் கிளிநொச்சிக்கு வெளியே வேலை வாய்ப்புகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். சிலர் சுய தொழில்களை மேற்கொண்டு சிறப்பாக வாழ்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. உயர் கல்வியை முடித்தவர்கள் சரியான தொழில்களைப் பெறுமட்டும் நாம் அவர்களுக்கான ஆதரவை வழங்குகிறோம். உயர் கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் எங்கள் திட்டங்களில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் அளிக்கிறோம். செஞ்சோலை இல்லங்களில், குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நாங்கள் வழங்கினாலும், அவர்களது கல்வி வளர்ச்சியே எங்கள் முக்கிய குறிக்கோள். சர்வதேச தரத்தில் ஒரு ஆங்கில மொழியிலான கல்விக்கூடமொன்றை ஆரம்பிக்கும் திட்டமொன்று என்னிடம் உள்ளது. எதிர்காலத்தில் எங்களுக்கு அதிக நிதி தேவைப்படும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அக்கறையானவர்கள், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் பயனற்ற திட்டங்களில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை விரயம் செய்யாது, இந்த உன்னதமான பணிக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். https://www.pagetamil.com/137610/#
 6. வெற்றிசெல்வி நீங்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் இருந்து செய்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். உங்களை முதன் முதலில் சந்திச்ச போது இருந்த மகிழ்ச்சி உங்களை கடைசியாக சந்திச்சபோது இருக்கவில்லை.
 7. இது தேர்தல்காலம். அரசியல்வாதிகளும், தொண்டர்களும் பரபரப்பாக இருப்பதற்கு ஈடாக- இன்னும் சொல்லப் போனால் அதைவிடவும் அதிகமாக- பரபரப்பாக பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மக்களை பரபரப்பாகவும், சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வைத்திருக்க வேண்டியவர்கள் அவர்களல்லவா. ஆகவே செய்திகளை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக, அவர்களின் காலடி தேடியே செய்திகள் வந்து கொண்டிருக்கும் காலம். இவர்கள் ஒரு வகை பத்திரிகையாளர்கள். இன்னொரு வகை பத்திரிகையாளர்களும் இருப்பார்கள். அவர்கள் கல்லாப் பெட்டியை நிறைப்பதில் குறியாக இருப்பார்கள். சாம,தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமிருந்து பிடுங்குவதில் குறியாக இருப்பார்கள். எப்படியோ, ஒரு தேர்தலின் முடிவில் பெட்டியை நிறைத்து, சிறிது காலத்திற்கு செட்டில் ஆகிவிடுவது இலக்கு. அரசியல்வாதிகள் தேர்தல் விளம்பரம் தரவில்லையென்றால், அவ்வப்போது ஒரு அடி கொடுக்க வேண்டும்… ஓடிவந்த விளம்பரம் தருவார்கள் என்பது அறப்பழசான ஒரு ஊடக உத்தி. இன்றைய காலைக்கதிர் பத்திரிகையை படித்தபோது, இதை எழுத வேண்டுமென தோன்றியது. உண்மையில் காலைக்கதிர் பத்திரிகை தமிழ் சூழலில் செல்வாக்கு செலுத்தவதாகவோ, வெற்றிகரமானதாகவோ அமையவில்லை. அப்படியானால், எதற்காக அது பற்றி எழுத வேண்டுமென தோன்றும். தன்னை ஊடக ஜாம்பவான் என சொல்லிக்கொள்ளும் வித்தியாதரன் அங்கிருக்கிறாரே! ஆகவே சில விடயங்களை பேச வேண்டும். தனக்கு அடையாளம் ஏற்படுத்தி தந்த உதயன் பத்திரிகை பற்றியும், அதன் உரிமையாளர் பற்றியும், தனக்கு ஆசனம் வழங்க மறுத்த மாவை சேனாதிராசா பற்றிய விமர்சனங்களையும் மட்டுமே செய்யும் பத்திரிகையாக தனது ஊடகத்தை மாற்றியிருந்தார். ஊடகவியலாளர்கள் பேனா போராளிகள் என்ற கருத்துருவாக்கத்தை வித்தியாதரனும் அங்கம் வகித்த உதயன் குழுமம், தமிழ் சமூகத்தில் அதிகம் உருவாக்கியது. ஆனால், வித்தியாதரன் போராளியாக இருக்கிறாரா என்பதே இதிலுள்ள சுவாரஸ்யமும், முரண்நகையும். அரசியல் பற்றியும், அரசியல் ஒழுக்கம் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் ஊடகத்தின் வாயிலாக விளாசும் வித்தியாதரனின், மறுபக்கம் தூயதா என்ற கேள்வியை இன்று எழுப்ப வேண்டியிருந்தது. இன்றைய காலைக்கதிர் பத்திரிகையில், அவரது பத்தியில் வேட்பாளர் சரவணபவனின் உரையொன்றை முன்னிறுத்தி அவர் எழுதியுள்ள விடயமே இந்த கேள்வியை எழுப்புகிறது. சரவணபவன் நேற்று பேசிய பேச்சொன்றை மையமாக வைத்து வித்தியாதரன் தனது கருத்துக்களை எழுதியுள்ளார். யுத்தகாலத்தில் அரசுடன் இருந்த தரப்புக்களிற்கு வாக்களிக்கப் போகிறீர்களா என சரவணபவன் எழுப்பிய கேள்விதான் விவகாரம். சரா எந்த தரப்பையும் குறிப்பிடாத போதும், அவர் ஈ.பி.டி.பியை குறிப்பிடுவதை போல புளொட்டை அடிக்கிறார் என சொல்லி, தனது கற்பனை குதிரையையும் தட்டிவிட்டு, மானே தேனே போட்டு எழுதியுள்ளார். விடுதலைப் புலிகள் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை இணைத்தபோதும் புளொட்டை இணைக்கவில்லையென ஒரு தவறான தகவலை எழுதியிருந்தார். தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் என குறிப்பிடுபவர்களின்- விடுதலைப் புலிகள் பற்றிய மிகப்பெரிய பலவீனமே இதுதான். அவர்கள் நினைப்பார்கள் விடுதலைப் புலிகளை பற்றி தாமே அதிகமாக தெரிந்திருப்போம் என. ஆனால், புலிகளின் கட்டமைப்பை புரிந்தவர்களிற்கு, அவர்கள் சிறு துளியென்பது தெரியும். புலிகளின் அரசியல்துறை பிரமுகர்களிற்கு இயல்பாக விழுந்த ஊடக வெளிச்சம் காரணமாக, அவர்கள் அமைப்பின் முடிவெடுக்கவல்ல பிரதிநிதிகள் என பொதுப்புத்தியில் அபிப்பிராயம் தோன்றும். ஆனால், அமைப்பின் கட்டமைப்பு ரீதியாக- உள்ளார்ந்த விபரங்களை அறிந்தவர்களாக- இருக்க மாட்டார்கள். வன்னியிலிருந்த அரசியல் ஆய்வாளர்களிற்கும், வன்னிக்கு வெளியிலுள்ள பத்திரிகையாளர்களிற்கும் நேர்ந்த விபத்திது. அதில் வித்தியாதரனும் விதிவிலக்கல்ல. அவர் தனது விடுதலைப் புலிகள் தொடர்பு பற்றி பேசிவது, சீமானிற்கு அடுத்ததாக புலிகளை பற்றி அடித்து விடுவது அவராகத்தான் இருக்கும் என தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, புளொட்டையும் இணைக்க புலிகள் முயன்றார்கள். ஆனால் புளொட் அப்போது அதற்கு சம்மதிக்காததற்கு வேறு காரணமிருந்தது. விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகள் என்ற கோசத்தை முன்னிறுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பை புளொட் கோரியது. ஒருவகையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்தடைந்துள்ள இடமும் அதுதான். அப்படிப் பார்த்தால் இன்றைய கூட்டமைப்பில்- புத்திசாலித்தனமான- நடைமுறை சாத்தியமான அணுகுமுறையை கையாண்ட தரப்பாக புளொட் இருந்தது என்பதல்லவா உண்மை! அதன் பின்னரும் புளொட் அமைப்பிற்கும், புலிகளிற்குமான பல்வேறு தொடர்புகள் இருந்தன. அதையெல்லாம் “விசயமறிந்தவர்கள்“ அறிவார்கள். இப்பொழுது, புளொட் ஏன் கூட்டமைப்பிற்குள் வரவில்லை, புளொட் என்ன செய்தது என்பதை விளக்குவதல்ல நமது நோக்கு. அந்த தேவையும் நமக்கில்லை. அதைச் சொல்ல வித்தியாதரனிற்கு தகுதியுண்டா என்பதே கேள்வி! நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புளொட் சார்பில் போட்டியிட ஆசனம் தருமாறு, அந்த கட்சியினரை விரட்டி விரட்டி கேட்டார் என்பதை பொறுப்புடன் பதிவு செய்கிறோம். கலாநிதி ஆறுதிருமுருகனிற்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனிற்கும் நல்ல உறவுண்டு. அதை பயன்படுத்தி, ஆறுதிருமுருகனை அணுகி, புளொட்டில் தற்போது கஜதீபனிற்கு வழங்கப்பட்டுள்ள ஆசனத்தை தனக்கு ஒதுக்கித் தருமாறு வித்தியாதரன் கேட்டார். வெற்றியடைந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி மாறி தமிழ் அரசு கட்சியிடமோ அல்லது வேறு கட்சிகளிடமோ போக மாட்டேன் என்றும் உத்தரவாதம் கொடுத்தார். ஆறு திருமுருகனும் அந்த கோரிக்கையை சித்தார்த்தனிடம் தெரிவித்தார். எனினும், கட்சிக்குள்ளிருந்த வளர்க்கப்பட்ட கஜதீபனிற்கு ஆசனம் வழங்குவதில் உறுதியாக இருந்தார் சித்தார்த்தன். வித்தியாதரன் அத்துடன் நிற்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இயங்கும் முக்கிய ஊடகமொன்றின் முதலாளியிடம் ஓடினார். (அவரது பெயரை அவர் விரும்பாமல் வெளியிடுவது முறையல்ல என்பதால் முதலாளி என்பதுடன் நிறுத்தி விடுகிறோம். ஆனால், அந்த முதலாளி யாரென்பது வித்தியாதரனிற்கு தெரியும்) புளொட் அமைப்பின் இரண்டாவது ஆசனத்தை தனக்கு தருமாறு சித்தார்த்தனிடம் பேசிப்பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். இவையெல்லாம் 90களில் நடந்ததல்ல. 3,4 மாதங்களின் முன்னர் நடந்தது. புளொட் மீது வித்தியாதரன் வைத்த விமர்சனங்கள் எல்லாம் அந்த 3,4 மாதங்களின் பின்னர் நடந்ததா? வித்தியாதரன் அரசியல் பதவியொன்றை பெற ஆலாய் பறக்கும் துயர வரலாறு நெடியது. அது கிட்டாத மனக்கிலேசம் அவது எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு பத்திரிகையை அச்சிட்டு, தனது மனக்கிலேசங்களை கொட்டிக் கொண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கு நல்லதல்ல. வித்தியாதரன், தனது நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் வாய்ப்பை சரவணபவன் தட்டிப்பறித்து விட்டார் என கூறுவது உண்மையில்லாதது. அதை அண்மையில் மாவை சேனாதிராசாவே பகிரங்கமாக தெரிவித்திருந்தார். “மச்சானை வேட்பாளராக போடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை“ என வித்தியாதரன் தன்னிடம் சொன்னதை மாவை சேனாதிராசா பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். சரவணபவனிற்கும்- வித்தியாதரனிற்குமான பிரச்சனை எம்.பி ஆசனமல்ல. அப்படி வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையதுவல்ல. 2010ஆம் ஆண்டு சரவணபவன் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியபோது, வித்தியாதரன் அதை ஆதரித்தார். சரவணபவன் அரசியலுக்குள் நுழைந்தால், உதயன் நிறுவனம் தன்னிடம் வருமென ஒரு கணக்குப் போட்டார். அது நடக்கவில்லை. அதுதான் இரு தரப்பிற்குமான மோதல். தனிப்பட்ட விவகாரங்களை எழுதுவது முறையல்ல. ஆனால், குடும்பரீதியாக சரவணபவன் செய்த உதவிகளும், கடமையும் மிகப்பெரியது. உதவி செய்வதையும் சரியானவர்களிற்கு செய்ய வேண்டுமென்பதை சரா இப்பொழுது புரிந்திருப்பார். ஆனால், வடக்கு முதலமைச்சர் பதவி போன்ற பதவிகளை வித்தியாதரன் எதிர்பார்ப்பது நியாயமல்ல. அதற்கு பொருத்தமானவர்களையே நியமிக்கலாம். தன்னை முதலமைச்சராக்கவில்லையென்றும், மாவையில் அவர் காய்வது நியாயமற்றது. ஆனால், இன்று சம்பந்தன் புராணம் பாடும் வித்தியாதரனின் கதிரை கனவை உண்மையில் கலைத்தவர் சம்பந்தன்தான். இந்த தேர்தலில் வித்தியாதரனை களமிறக்கலாமென, சீ.வீ.கேயும் மாவையும் திருகோணமலைக்கு சென்று சம்பந்தனிடம் சொன்னார்கள். “அவருக்கு அதற்கான தகுதியில்லை“ என சம்பந்தன் ஒரே வசனத்தில் கதையை முடித்தபோது, பக்கத்தில் எம்.ஏ.சுமந்திரனும், துரைராசசிங்கமும் மௌனமாக இருந்தார்கள். ஒரு வார்த்தை பேசவில்லை. 2010 நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை, 2013 மாகாணசபை தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை, 2015 நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை. இந்த துயர வரலாறு தொடர்ந்த கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் யாழ் மாநகரசபையிலும் ஆசனம் கிடைக்கவில்லை. இதைதவிர, அவர் ஆசனத்திற்காக ஒரே கட்சியில் போட்டியிட முயற்சித்தவருமல்ல. விக்னேஸ்வரன் அணியில் தலைகீழாக நின்று பார்த்தார். ரில்கோ விடுதியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு. விக்னேஸ்வரனிற்கு அருகில் காலியாக இருந்த கதிரையில் உட்கார்ந்த வித்தியாதரன், “ஐயா.. நாங்களும் இப்பிடியே எவ்வளவு நாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறது. இதுக்குள்ள (அரசியலுக்குள்) வர வேண்டாமா? ஏதாவது வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்“ என தெரிவித்தார். விக்னேஸ்வரன் சிரித்து சமாளித்து விட்டார். பின்னர், தனக்கு நெருக்கமானவர்களிடம், “ஐயாவை சந்தித்தேன். இப்படியே எழுதிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? அரசியலுக்கு வாருங்கள்“ என அழைத்தார் என சொல்லித்திரிந்தார். விக்னேஸ்வரனிடமிருந்து எந்த சமிக்கையும் வராததையடுத்து, விக்னேஸ்வரனிற்கு நெருக்கமான ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விக்னேஸ்வரன் தன்னை அரசியலுக்கு அழைத்தார், இப்பொழுது எனக்கு வாய்ப்பு தருவாரா என கேட்டுச் சொல்லுங்கள் என்றார். அந்த இடைத்தொடர்பாளரும் விக்னேஸ்வரனை அழைத்து, அவரை அரசியலுக்கு அழைத்தீர்களா?, அவர் காத்திருக்கிறார் என்றார். விக்னேஸ்வரன் பெரிதாக சிரித்துவிட்டு, “ஐயா.. நாங்களும் இப்பிடியே எவ்வளவு நாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறது. இதுக்குள்ள (அரசியலுக்குள்) வர வேண்டாமா? ஏதாவது வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்“ என வித்தியாதரன் கேட்டதை குறிப்பிட்டார். இதேவேளை, இன்னொரு தொடர்பாளர் மூலம் விக்னேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகவும், தான் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிடும் ஐடியாவையும் வித்தியாதரன் கொடுத்தனுப்பினா். ஆனால், விக்னேஸ்வரன் அணியில் வித்தியாதரனிற்கு கதவு திறக்கவில்லை. மீண்டும் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பில்- சுமந்திரன் அணியாக- செயற்பட்டு வருகிறார். இடையில் கோட்டாவின் சிலந்தியாக- ஜனநாயக போராளிகள்- செயற்பட்டது ஊரறிந்தது. இன்றைய பத்திரிகையில், ஈ.பி.டி.பி கொலைகளை புரிந்தது என நினைத்து சரா பேசியதாக, சரா சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் கண்டுபிடித்திருந்தார் வித்தியாதரன். ஈ.பி.டி.பி- வித்தியாதரன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களுமுள்ளது. காலைக்கதிர் அச்சிடப்பட்ட அச்சு இயந்திரம் ஈ.பி.டி.பியினுடையது. தினமுரசு பத்திரிகை நிறுத்தப்பட்ட பின்னர், அந்த அச்சு இயந்திரம் சும்மா இருந்தது. வித்தியாரன் அதை வாங்குவதாகவும், குறிப்பிட்ட தவணையில் பணம் தருவதாகவும் கூறி, சுமார் 75 இலட்சம் ரூபா மதிப்புள்ள காசோலையை கொடுத்தார். இது நடந்து வருடங்கள் கழிந்து விட்டது. ஒரு சதம் பணம் கொடுக்கப்படவில்லை. டக்ளஸ் தேவானந்தா கேட்கவுமில்லை. அந்த காசோலை இன்னமும் டக்ளசிடமே உள்ளது. எல்லா தமிழ் அரசியல்வாதிகள் மீதும் ஏதோவொரு விமர்சனமுள்ளது. டக்களஸ் தேவானந்தா மீதும் உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகளில் ஆயுத இயக்கங்களின் வழிவந்த அரசியல் தலைவர்களிடம் மட்டுமே உள்ள இயல்பு- உதவி தேவைப்படுபவர்களிற்கு பிரதியுபகாரம் பாராமல் வழங்குவது. அது டக்ளசிடமும் உள்ளது. சித்தார்த்தனிடமும் உள்ளது. பலருக்கு கசப்பென்பதால், உண்மை இல்லாமலாகி விடாதல்லவா. இன்றைய வலம்புரி பத்திரிகைக்கும் டக்ளஸ் உதவினார். அதேபோல, வித்தியாதரனிற்கு பிறிதொரு உதவியும் செய்தார். தனக்கு வாழ்க்கை நெருக்கடியாக இருப்பதாக இன்னொரு சந்தர்ப்பத்தில் டக்ளசை அணுகினார் வித்தியாதரன். அப்போது டக்ளஸ் ஆளுந்தரப்பில் இல்லை. தனது கையறு நிலையை சொன்னார். அதைவிட சோகக்கதையை வித்தியாதரன் சொன்னார். யாழ் நகரத்தில் கஸ்தூரியார் வீதியில் கட்டப்பட்ட மாடிக்கட்டட தொகுதியில் ஒரு கடையை வித்தியாதரனிற்கு டக்ளஸ் வழங்கினார். அதை வேறு யாரும் வெளியாருக்கு நீண்ட வாடகைக்கு வழங்காமல், குறுகிய வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தை வாழ்க்கைச் செலவிற்கு பயன்படுத்தும்படி. அவ்வளவுதான். டக்ளஸ் அதன்பின்னர் அந்த விடயத்தில் தலையிடவில்லை. ஓரிரு மாதத்தில், வித்தியாதரன் அந்த கடையை 99 வருட குத்தகைக்கு வழங்கிய தகவல்தான் டக்ளசிற்கு வந்தது! இப்படி நீண்ட கதைகள் உள்ளன. அண்மையில் வடக்கு ஆளுனர் பதவியை பெற முயன்றது லேட்டஸ்ட் தகவல். ஜனாதிபதி தேர்தல் வரை கோட்டா புரளியை பத்திரிகையில் செய்து கொண்டிருந்து விட்டு, தேர்தல் முடிவு வெளியான ஓரிரு நாளில் வடக்கு ஆளுனர் பதவியை குறிவைத்தார். ஆளுனர் பட்டியலில் தனது பெயரும் உள்ளதாக ஒரு செய்தியை அவரே உலாவவிட்டு, அதை மஹிந்தரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதற்காக கோட்டாவை சந்திக்க முயன்றது, கூட்டமைப்பு பிரமுகர் தூது சென்றதெல்லாம் பெரிய கதைகள். இன்னும் சுவாரஸ்யமாக, ஹால்டனிலிருந்து மாதாந்தம் வந்த பணம் தொடக்கம் இப்போது பாயும் பணம் வரையான தகவல்களும் உள்ளன. சரவணபவனின் பெயர் குறிப்பிடாமல் ஊடக வியாபாரியென வித்தியாதரன் குறிப்பிடுவதுண்டு. ஆனால், உண்மையான ஊடக வியாபாரி யார்? http://www.pagetamil.com/137537/
 8. வாழ்த்துக்கள் விவசாயி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
 9. மிக சிறப்பாக கதை கருவை நகர்த்தி இருக்கிறீங்கள். ஒரு குறும்படம் பார்த்த உணர்வை உங்கள் எழுத்துகளால் வடிவமைத்து இருக்கிறீங்கள். வசன நடையும் காட்சி விபரிப்பும் அருமை.
 10. சொல்லத்தயங்கும் கதை கருவை துணிவாக தனக்கே உரித்தான பாணியில் எழுதிய சுமேயை பாராட்டியே ஆக வேண்டும். இன்னும் எங்கள் சமூகத்தில் ஒளிந்திருக்கும் கயவர்களை கதைகள் மூலம் அடையாளப்படுத்துங்கள்.
 11. மகளிர் படையணிகளின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிறுத்தியே இந்த தாக்குதல் கட்டமைக்கப்பட்டது. இத்தாக்குதல் நிறைவில் சிங்கள ராணுவம் தனது கோர முகத்தை வித்துடல்களில் காட்டி இருந்தது. இதற்கான பதில் முல்லைத்தீவில் அடுத்த வருடமே வழங்கப்பட்டது.
 12. இன்று தான் இந்த திரியை வாசிக்கிறேன். பிரபாவின் பதிலில் சொன்ன படத்தை பார்க்க வந்தேன். தமிழினி சொன்னதைப்போல உங்களின் மகளின் மனசைப்போலவே ஓவியமும் மிக அழகு. உங்கள் பணி தொடர்க.
 13. புலிக்கு பிறந்தது பூனையாகாது. உங்கள் இருவரையும் சேர்த்து தான் சொல்கிறேன். தொடர்க உங்கள் பணி. (உள்ளம்)
 14. உண்மைதான் @தோழி வரைதலில் உருவப்பரிமாணங்கள், முப்பரிமாண தோற்றப்பாடு அவ்வளவு இலகுவானதல்ல. அதைவிட கண்களுக்கு கொடுத்திருக்கும் உயிர்ப்புத்தன்மை. அதை @உடையார் மகள் மிக இலகுவாக கையாண்டிருக்கிறார். வரைதல், கவிதை, சமையல் , சங்கீதம், நடனம், நிர்வாகம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறமை,.... எல்லாமே கலைகளுக்குள் அமையும். அது எல்லாருக்குமே அமைவதில்லை. அடிப்படையை அனைவரும் கற்றாலும் ஒரு சிலருக்கு தானாகவே அமைந்துவிடுகிறது. அவர்கள் அதற்குள் வாழ்கிறார்கள். அதன் மூலம் மன அமைதியையும் திருப்தியையும் கட்டமைத்து கொள்கிறார்கள். ஊக்கப்படுத்தி கலையை வாழவையுங்கள்.
 15. மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள். யாழில் மகள் வரையும் படங்களை ஒரு திரியில் இணையுங்கள்.
 16. வீர வணக்கங்கள் செல்லக்கிளி அம்மான்.
 17. நான் தேவராஜா ஆசானிடம் சித்திரம் கற்றேன். பின்னர் நவீன சித்திரம் படிப்பதற்காக மார்க் ஆசானின் வீட்டில் பல பொழுதுகளை கழித்து இருக்கிறேன். வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன். ஒரு காலத்தில் மனித முகங்களை அப்படியே வரையும் பழக்கம் இருந்தது. கால ஓட்டத்தில் எல்லாம் மாறி போய்விட்டது. இருந்தாலும் இற்றைவரை சித்திரத்தை ரசிப்பதை கைவிடவில்லை. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்" மீண்டும் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் @பிரபா சிதம்பரநாதன் மற்றும் @உடையார் நன்றிகள். @தோழி உங்கள் வசன நடையும் கருத்தியலும் கதையை கண் முன்னே விம்பங்களாக காட்டுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.
 18. பாலா மாஸ்ரர், உங்களை அறிமுகப்படுத்திய ரவி (மருத்துவபிரிவு ரேகாவின் சாரதி) முதல் இங்கிலாந்தில் இருக்கும் தமிழீழ ஆய்வு நிறுவன ரவி (றூட் ரவி) வரை எல்லாம் சொன்னால் இன்னும் அதிக புரிதல் வர வாய்ப்புகள் அதிகம்.
 19. அழகான வரிகள். வலிகளை வரிகளாக்கி இருக்கிறீர்கள். நல்ல குரலும் நல்ல உச்சரிப்பும். வாழ்த்துக்கள். ஆழமான அழுத்தமான வரிகளை இருமுறை வாசித்தால் இன்னும் அழகு. சில உணர்வுகளையும் குரலில் சேருங்கள் அழகு.
 20. அப்பாவுக்காக செய்யும் கடமையாக நினைத்து பல ஆண்டுகளாக பிடிக்கிறேன். இடையில் சில வருடங்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் விட்டுப்போனாலும் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்கிறேன். எனது அப்பாவுக்கும் பாவற்காய் நிறைய பிடிக்கும். அவருக்காக அம்மா சமைச்சாலும் எனக்கு சிறுவயதில் பாகற்காய் பிடிக்காது. சாப்பாட்டை கூட தூக்கி எறிந்து இருக்கிறேன். அப்படி எறிந்தபோது அம்மா விட்ட சாபமோ என்னமோ பின்னைய நாட்களில் சாப்பாடே இல்லாமல் கழிந்த நாட்கள் பல. இப்போ பாகற்காய் பிடித்த உணவுகளில் ஒன்றாகிவிட்டது அப்பாவைபோல. (ஆனாலும் என் மகனுக்கு இப்போ பாகற்காய் பிடிக்காது என்னைபோல) அப்பாவை பற்றி எங்கும் பதியவில்லை என்றாலும் எனது நாயகனும், பின் தொடர் மாதிரியும் அவர் தான். அவராக வாழ முயற்சி செய்கிறேன்.
 21. மேற்கிந்திய தீவுகள் இன்றைய மிகுதி 60 இற்கு மேற்பட்ட ஓவர்களை தாக்குப்பிடிப்பது கடினம். பார்க்கலாம். Blackwood and Holder கைகளில் தான் இருக்கிறது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.