Jump to content

பகலவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1904
 • Joined

 • Last visited

 • Days Won

  22

Everything posted by பகலவன்

 1. அய்யா பழ.நெடுமாறனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் பலகருத்துகளோடு ஒத்துப்போனாலும் அண்ணை (தம்பி) இருக்கிறார் விரைவில் வெளிப்படுவார் என்ற கருத்தியலோடு ஒத்துப்போக முடியவில்லை. கடைசி களநிலையை விரிவாக எடுத்துசொல்லியும் அவர் அந்த நம்பிக்கையில் இருந்து வெளியில் வரவில்லை/வர விரும்பவில்லை. அவரின் நிலையில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஜவான் ஒரு நெருங்கிய நண்பர்/உறவு. மனம்விட்டு பேசக்கூடிய ஒரு உறவு. என் முழுகுடும்பத்துடனும் பழகிய உறவு. கிளிநொச்சி தமிழீழ அரசறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த என் அப்பாவின் உடலுக்கும் அஞ்சலி செலுத்த தமிழ்செல்வனுடன் வந்திருந்தார். என் தம்பியின் வீரச்சாவுக்குப் பின் அவரின் வானொலி நிலையத்துக்கு சென்றபோது கட்டியணைத்து ஆறுதல் தந்தார். பிறிதொரு நாளில் நாங்கள் சுதந்திரபுரம் களத்திற்கு நகர்ந்து கொண்டிருதபோது அவரின் வாகனம் தேவிபுரம் பின் பாதையில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் ஒரு 10-15 நிமிடங்கள் பேசக்கிடைத்தன. அதுதான் கடைசி சந்திப்பு. ஒருமுறை மாவீரர் நாளன்று புலிகளின் குரல் விமானத்தாக்குதலுக்கு உள்ளான போது நான் தொலைதூரத்தில் இருந்தேன். தொலைத்தொடர்பெடுத்து ஜவான் எப்படி என்று கேட்டது தான் முதல் கேள்வி. ஒற்றைக்காலுடன் தேசத்துக்காக நடமாடிய ஒரு அன்பான உறவு. இணைப்புக்கு நன்றி நந்தன். ஞாபங்கள் கிளறிக்கொண்டே இருக்கின்றன.
 2. இணைப்புக்கு நன்றி நந்தன். மனோமாஸ்ரருடன் பழகியநாட்கள் இனிமையானவை. எளிமையான தோற்றமும் வாழ்வும் அவரிடம் கற்றுக்கொண்டவை. அணியுடன் தயாராக இருந்தவேளையில் கடைசியாக சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்ததை இன்றைக்கும் பாக்கியமாகவே கருதுகிறேன். அது காலம் தாழ்த்திய நகர்வு என்றாலும் உங்களால் முடிந்ததை செய்யும் ஓர்மத்துடன் இருந்தீர்கள். கெரில்லா, காடு என்றாலே உங்களைத்தவிர்த்து என்னால் எழுத முடிவதில்லை. வீரவணக்கம் மனோ மாஸ்ரர். உங்கள் அறிவுரைகளையும் அன்பான வார்த்தைகளையும் என்றும் மனசில் சுமந்திருப்போம்.
 3. உங்களின் இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். இவ்வளவும் தெரிஞ்சும் ஏன் சண்டைக்கு போனார்கள். 1. அரசுடனான சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுத கொள்வனவு உள்ளடக்கப்படவில்லை. மாறாக இருதரப்பும் ஆயுத வல்லமையை அதிகரிக்ககூடாது என்ற நிபந்தனையே இருந்தது. அரசு தனது ஆயுதவல்லமையை (அரசு என்ற ரீதியில்) அதிகரித்துக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் ஆயுத கப்பல்கள் (பதிவு செய்யப்படாத பெயர்களுடனும் கொடிகளுடனும்) இலங்கைக்கு பல மைல் தொலைவுகளில் ஆயுதங்களுடன் உள்ளே வரும் கட்டளைக்காக காத்திருந்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் கடற்புலிகளின் கையை கட்டிப்போட்டு இருக்க அமெரிக்க இந்திய உதவியுடன் இலங்கை கடற்படை ஆழ்கடல் வேட்டையை தொடங்கி இருந்தது. இது யுத்த நிறுத்த மீறலாக புலிகளால் வகைப்படுத்த முடியாமல் இருந்தது. 3-4 கப்பல்கள் அடிபட்ட பின்னர் தான் புலிகள் சுதாரிச்சு நிலத்தில ஒரு சண்டை தொடங்கினால் தான் மிச்ச கப்பல்களையும் அதிலிருந்த அனுபவம் வாய்ந்த கடலோடிகளையும் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டனர். இது ஒரு சர்வதேச புலனாய்வு நகர்வால் புலிகள் சண்டையை தொடங்க தூண்டப்பட்டனர். 2. பேச்சுவார்த்தையினை நிர்ணயிப்பது படைபல சமநிலை. புலிகளின் கை ஓங்கி இருந்தபோது பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருந்தது. புலிகளின் படைபல வலிமை, பாலா அண்ணாவின் பேச்சுவார்த்தை வலிமை எப்பவும் புலிகளின் கையே ஓங்கி இருந்தது. பாலா அண்ணையின் தலைமையில் பேச்சுவார்த்தை குழு நீக்கத்தின் பின் பொறுப்பேற்ற தமிழ்ச்செல்வனின் தலைமை, அரசை மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் பணியவைக்க அடி ஒன்று தான் தீர்வு என்று உள்ளக வெளியக அரசியலில் முழங்க, பொதுமக்களுக்கு ஒரு நாள் ஆயுத பயிற்சி, படையணிகள் தயார் நிலை, இராணுவக்கட்டுப்பாட்டு பகுதி இளைஞர்களுக்கு பயிற்சி, இடைக்கிடை கிளைமோர் தாக்குதல்கள் போன்றவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போக, ஒரு அடியைக்கொடுத்திட்டு நிறுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அது மட்டும் தான் அவர்களால் அப்போது செய்யகூடிய் வல்லமை. வெடிபொருட்களின் பற்றாக்குறையுடன் வெடிபொருட்களின் காலாவதியே மிகப்பெரும் பிரச்சனை. சில விமான எதிர்ப்பு ஏவுகணைகள் காலாவதி திகதிகளை நெருங்கி இருந்தன. புலிகளால் சைனைடுக்கு பயன்படுத்தும் நஞ்சு உட்பட. அந்த அடிக்கு அவர்கள் வேவு எடுத்த இடமும், வகுத்த திட்டமும் மாவிலாறோ அல்லது முகமாலை எழுதுமட்டுவாளோ அல்ல. அவர்கள் முழுமுடிவாக வலிந்த தாக்குதலுக்கு தேர்ந்த இடம் மன்னார். புத்தளம் வரை கைப்பற்றி கொழும்புக்கு ஒரு அழுத்தம் கொடுத்து மீண்டும் பேச்சுவார்த்தையில் கை ஓங்கவேண்டும் என்ற அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் வழி. புலிகள் தேர்ந்தெடுத்த இடம் தான் பின்னர் நீரோட்டம் என்று பெயரிடப்படாமல் வடக்கை கைப்பற்ற ராணுவம் தாக்குதலை ஆரம்பித்த இடம். @goshan_che இப்போது உங்களுக்கு சில தெளிவுகள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நான் ஒரு இராணுவ பத்தி எழுத்தாளன் அல்ல. எனக்கு தெரிஞ்சதை உங்களுடன் எனக்கு தெரிந்த மொழியில் பகிர்கிறேன். இதில் மறுக்கவும் எதிர்க்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
 4. மரியாதையுடன் கூடிய அன்பும் நன்றிகளும் @goshan_che. கிழக்கு பிடிபட்ட போது, கிழக்கு காடுகளை புலிகள் பயன்படுத்தி கெரில்லா தாகுதல்களை தொடுத்து இராணுவத்தை கிழக்கில் அலைய வைப்பதற்கு பதிலாக, கிழக்கு புலிகள் படையணிகள் காடுகள் வழியாகவும் கடலாலும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டனர். பெரும் ஆயுதங்கள் கூட வடக்கை நோக்கி நகர்த்தப்பட்டன. ராம் நகுலன் தலமையில் ஒரு சிறு அணி எந்த தொல்லையும் கொடுக்காமல் வாழாவிருந்தது. இதுவே வடக்கில் இராணுவத்துக்கு தேவையான ஆளணியை கிழக்கில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 2008 இல் கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடந்து பிள்ளையான் முதலமைச்சாராவது வரை கிழக்கு இராணுவ சாதாரண நிலை இருந்தது. மனோ மாஸ்ரர் தலைமையிலான காட்டு பயிற்சி பெற்ற அணி, அண்ணையின் அனுமதிக்காக காத்திருந்து காலம் கடந்து 2009 ஆரம்பத்தில் வன்னியில் இருந்து புறப்பட்டு இடைவழியில் அனைவரும் தாக்கி அழிக்கப்பட்டனர். நகர சண்டைக்கான பயிற்சியே கிளிநொச்சி கைப்பற்றபடுவதற்கு சில வாரங்கள் முன்னர் தான் தொடங்கப்பட்டிருந்தன. இராணுவம் அக்கராயனையும், புதுமுறிப்பையும், கோணாவில், முறுகண்டி தாண்டிய நிலையில் தான் மக்கள் வெளியேற்றப்பட்ட கிளிநொச்சி நகரில் புலிகளின் நகர்சார் தாக்குதல் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டன. அதை விட துன்பகரமான விடயம், ஒரு காலை இழந்த, கையை இழந்த போராளிகள், கரும்புலிகளாக புதுக்குடியிருப்பு நகரின் பதுங்கு குழிகளில் விடப்பட்டு, இராணுவம் மேவி வந்தவுடன், இரவு நேரங்களில் நகர்ந்து தனித்தனி ஆட்களாக இராணுவத்தின் மத்தியில் வெடித்தார்கள். இதுவே நான் அறிய நடந்த கெரில்லாத்தாக்குதல்கள். அவர்களிடம் 3-5 நாட்களுக்கு தேவையான உணவே இருந்தன.(பெண் போராளிகள் உட்பட). இருந்தாலும் அவர்கள் மக்கள் மீது வைத்த பாசம் 10 நாட்களுக்கும் மேலாக இரவில் இராணுவ பகுதில் பெரு வெடிப்புகள் கேட்டவண்ணமே இருந்தன. அது இராணுவத்துக்குள் பெரும் இழப்பை தோற்றுவித்ததோடு இராணுவ நகர்வுகளை தாமதப்படுத்தியது. மனது கனப்பதால் மேலும் எழுதுவதை தவிர்க்கிறேன்.
 5. @goshan_che இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம். எனக்குத்தெரிந்த வரையில் அப்போதிருந்த நிலமையை என்னால் சொல்ல முடியும். இப்போது எனக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியாது. உலகின் வெல்ல முடியாத, மிகச்சிறந்த கெரில்லா இயக்கமாக இருந்த விடுதலைப்புலிகள் மரபுவழி ராணுவமாக பரிமணித்ததில் இருந்து, கெரில்லா படையணி ஒன்று வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தை மனோ மாஸ்ரர் ஒவ்வொரு சந்திப்பிலும் வலியுறுத்தியே வந்தார். கவிஞர் ஜெயபாலன், மனோ மாஸ்ரர் போன்றோர் சொன்னது போல நாங்கள் எங்கள் பலமான காடுகளை தக்க வைக்க தவறிவிட்டோம். அதேவேளை சிங்கள ராணுவம் அந்த காடுகளை பரீட்சயமாக்கி கொண்டு வெற்றிகரமான தாக்குதல்களை திறம்பட செய்தன. சமாதானம் தொடங்க முதல் கேணல் சங்கர் அண்ணைக்கு அடித்த கிளைமோர் எங்கேயோ எல்லை கிராமத்தில் அல்ல, புலிகள் மிகவும் பலமாக இருந்தபோது அந்த வலயைத்தின் இருதயமான புதுக்குடியிருப்பை அண்மித்த மன்னாங்கண்டல் பகுதியில். அதை மையமாக வைத்தாவது சமாதான காலத்தில் ஒரு கெரில்லா படையணியை வளர்த்திருக்கவேண்டும் நடக்கவில்லை. பயிற்சி முகாம்களைத் தவிர்த்து அனைத்து முகாம்களும் மக்கள் மத்தியுலேயே இருந்தன.இது நீங்கள் குறிப்பிட்ட 87-90 காலப்பகுதியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுதி நாட்களில் கூட கடைசி சமர்க்களமாக விசுவமடு, உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் பகுதியை தேர்வு செய்ய வலியுறுத்தியபோதும் கடல் வழங்கலையும் வெளிநாட்டு வாக்குறுதிகளையும் நம்பி முள்ளிவாய்க்காலில் முடிந்தது இன்றும் போரியல் ஆய்வாளர்களால் நியாயப்படுத்த முடியவில்லை. இதில் இருந்து ஓரளவுக்கு உங்களால் ஊகிக்க முடியும் கள நிலவரம் எப்படிப்பட்டது என்பதை. சரி உங்கள் கேள்வியின் சில பகுதிக்கு விடையளிக்க முற்படுகிறேன். கெரில்லா யுத்தத்திற்கு தேவையானது மக்கள் ஆதரவு, நகரங்களில் இரகசிய மறைவிடங்கள், கெரில்லா பயிற்சி பெற்ற சாதாரண மக்கள் போன்ற தோற்றம் கொண்ட போராளிகள், குறைந்த வளங்களுடன் போராடக்கூடிய, தொடர்பாடல் இல்லாமல் / நெறிப்படுத்தல் இல்லாமல் முடிவெடுக்க கூடிய போராட்ட முறை. இதில் கைப்பற்றிய இடங்களில் மக்களை இல்லாமல் புனர்வாழ்வு முகாம்களில் மக்களை அடைத்துவைத்து மக்களை இல்லாமல் செய்தார்கள். ஏனைய இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நீண்ட கால ஊடுருவலில் எண்ணற்ற முகவர்களும் சவால்களும். 2006 ஆகஸ்டில் முகமாலை நோக்கிய புலிகளின் வலிந்த தாக்குதலுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று பளை எரிமலையில் 15 நாள் பயிற்சி எடுத்து அனுப்பிய எவருமே யாழ்ப்பாணத்தில் ஒரு புல்லைக்கூட புடுங்கமுடியவில்லை( மன்னிகவும் ஒரு இனம் புரியாத கோபத்தில் எழுதுகிறேன்) அது ஒரு மாயை என்று உணரவே நாட்கள் எடுத்தன. கைத்தொலைபேசி அலைவரிசைகள் யாவும் முடக்கப்பட்டு ஊரடங்கும் அமுலில் உள்ளே இருந்த புலனாய்வுபோராளிகள் கூட அசைய முடியாத நிலை. மக்களாதரவு உங்களிடமே விடுகிறேன். 87-90 ? 2006-2009? மிகுதி அடுத்த பதிவில் எழுதுகிறேன் நீங்கள் விரும்பினால். வேலை அழைக்கிறது.
 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன். (சங்க செயலாளர்). வாழிய வாழிய பல்லாண்டுகள்.
 7. நல்லா எழுதி இருக்கிறீங்கள்.
 8. ஒரு பொருளாதார சமமின்மையை (Economic unbalance) ஏற்படுத்துவதன் மூலம் நாங்கள் இலகுவாக எங்கள் தேசியத்தை தக்கவைக்க முடியும். எந்த விதத்திலையும் பொருளாதார அபிவிருத்தியை அடையவிடாமல் தடுப்பதில் தான் அரசாங்கம் முனைப்புகளை எடுக்கும். வீதி, கடற்தொழில், சிறு கைத்தொழில், விவசாயம், தகவல் தொழினுட்பம் போன்றவிடயங்களில் பாரிய அபிவிருத்தி அடைவதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும்.
 9. 4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. கொலை வழக்கு 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கை ஐ.நா தீர்ப்பாயம் விசாரித்தது. இதன் தீர்ப்பு வர இருக்கும் சூழலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் இரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர். இரண்டாம் வெடிப்பு ஹரீரி வீடு அருகே நிகழ்ந்திருக்கலாம். பலர் காயம் அடைந்துள்ளதாக, மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் லெபனான் சுகாதார துறை அமைச்சர். https://www.bbc.com/tamil/global-53657095
 10. மிக சிறப்பாக கதை கருவை நகர்த்தி இருக்கிறீங்கள். ஒரு குறும்படம் பார்த்த உணர்வை உங்கள் எழுத்துகளால் வடிவமைத்து இருக்கிறீங்கள். வசன நடையும் காட்சி விபரிப்பும் அருமை.
 11. இன்று தான் இந்த திரியை வாசிக்கிறேன். பிரபாவின் பதிலில் சொன்ன படத்தை பார்க்க வந்தேன். தமிழினி சொன்னதைப்போல உங்களின் மகளின் மனசைப்போலவே ஓவியமும் மிக அழகு. உங்கள் பணி தொடர்க.
 12. வீர வணக்கங்கள் செல்லக்கிளி அம்மான்.
 13. யாழ் இணையம் Dark Theme தரக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா.?
 14. இந்த சண்டையை வழி நடாத்திய இன்னொரு தளபதி முதல்வனுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேச கிடைத்தது. இந்த சண்டையின் உக்கிரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் புலிப்பாச்சலுக்கு மிகவும் தேவையான சண்டையாக இது அமைந்தது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.