Jump to content

பகலவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1904
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பகலவன்

  1. உங்கள் உளமார்ந்த அன்பு கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த மல்லையூரான், வாதவூரான், இசைக்கலைஞன், இணையவன், நிழலி, விசுகு அண்ணா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பாசமிகு வாழ்த்துகளுக்கு என்றும் நான் கடமைபட்டுள்ளேன்.
  2. நன்றி சுபேஸ் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு. இன்று அவள் சாப்பாடு இல்லை, நானும் மனைவியும் மகனும் வெளியிலே சென்று நோர்வே சாப்பாடு சாப்பிடோம். தப்பித்தேன்
  3. இன்றைய நாளில், உங்கள் உள்ளன்பு வாழ்த்துக்களை கூறிய புங்கையூரான், உடையார், நுணாவிலான்,நெடுக்ஸ், தமிழரசு, ரதி, அபராஜிதன், தப்பிலி, நவரத்தினம், யாயினி, வல்வை அக்கா, காதல் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். புலவர் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பொருத்தமாக படம் போடுவதில் உங்கள் திறமையை காட்டி உள்ளீர்கள் வல்வை அக்கா.
  4. நிர்வாகிகளுக்கு, உங்கள் புதிய விதியில் உள்ள எழுத்து பிழைகளை கவனிக்கவும். தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும். **** முற்றாக தவிர்க்கபடல் வேண்டும். நன்றி, பகலவன்
  5. சரி நிழலி, அரிச்சுவடியை தாண்டி வந்து (மூன்று கருத்துகளை ஒழுங்காக தமிழில் எழுதிய பின்னர்), கருத்துகளத்தில் வந்து தமிழ் கொலை செய்பவர்களை (உதாரணமாக குண்டன்) ஏன் நீங்கள் மீண்டும் அரிச்சுவடிக்கு அனுப்பி வைக்க கூடாது. தமிழை கொலை செய்வதன் மூலம் நகைச்சுவை உருவாக்குபவர்கள், தங்கள் தாயை பழிப்பதற்கு சமன். எனவே தமிழ் பிழைகளை தவிர்த்து பெரும்பாலும் எல்லா கருத்துகளையும் தூய தமிழ், ஆக குறைந்தது இலகு தமிழில் எழுத முன்வர வேண்டும். இங்கு தங்களை கவிஞர் என்று கூறி கொள்வோரும், தம்மை படைப்பாளிகள் என்று பறை சாற்றுவோரும் தமிழை கொல்வதை தொழிலாகவே கொண்டுள்ளார்கள் போல உள்ளது. எனவே நிர்வாகிகளே, தமிழ் கொலைக்கும் எச்சரிக்கை புள்ளிகள் அமைத்து, அவர்களை மீண்டும் அரிச்சுவடிக்கு நகர்த்தும் படி கேட்டு கொள்கிறேன். தமிழால் வளர்வோம், தமிழை வளர்ப்போம்.
  6. நிர்வாகிகளுக்கு, இது எவ்வாறு சாத்தியம், தனது இரண்டாவது பதிவை கதை கதையாம் பகுதியில் இணைக்கும் சாத்தியம் எவ்வாறு, கொஞ்சம் இதை கவனிக்கவும்
  7. ஐந்தே கிலோமீட்டர் இல் உள்ள ஆனையிறவை முகாமலையில் இருந்து முன்னேறி பிடிக்கமுடியாமல், தொண்ணூறு கிலோமீட்டர் இல் (மன்னாரில் ) இருந்து பல்வேறு இடர்களுக்கு மத்தியில் இரண்டு வருடங்களுக்கு பிடித்தான் எதிரி. இது தீபனின் முகமாலை கிளாலி முன்னணி காவலரண்களில் இருந்த நெருப்பான போராளிகளின் தீரத்துக்கும் , கடைசி வரை G10 முகாமை விட்டு அசராமல் தலைமை தாங்கிய வட போர்முனை கட்டளை தளபதி தீபனின் வழிநடத்தலுக்கும் ஒரு உதாரணம். வெற்றிலைகேணியில் இருந்து அகலமாட்டேன் என்ற அந்த வீரனை தோழர்களின் வற்புறுத்தலால், கட்டாயமாக பின்னகர்த்தப்பட்டார். தலைவனை காக்க ஆனந்தபுர சமரின் ஒருமுனையின் கட்டளை தளபதியாக, விழுப்புண் அடைந்த நிலையிலும் தாக்குதல்களை வழிநடாத்தி, இறுதிவரை மண்ணுக்காக போராடிய மாவீரர்கள் வரிசையில் தன்னையும் இணைத்து கொண்டார். தீபனின் வீரச்சாவு, வன்னி மக்களின் இறுதி நம்பிக்கையையும் சேர்ந்தே தகர்த்துவிட்டது. இந்த மாவீரனுக்கு எனது வீர வணக்கங்கள்.
  8. யாழுக்கும் யாயினிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் இனிவரும் காலங்கள் இனிமையாக மட்டுமே இருக்க வாழ்த்துகிறேன்
  9. என்ன ரதி அக்கா, ஓரமாக இருந்திட்டு போக இது என்ன தும்புக்கட்டையா. ? இது யாழ் களம் எதிலும் ஒரு பூரணம்(perfect ) இருக்க வேண்டாம்.
  10. எனது யாழ் கருத்து கள முகப்பு பின்வருமாறு அமைகிறது . நெடுக்க்ஸ் இது பற்றி முன்னரும் குறிபிட்டு இருந்தார். இப்படி இரண்டு இடத்தில் வருவதை தவிர்க்க முடியுமா.
  11. நன்றி மின்னல் உங்களின் உடனடி நடவடிக்கைக்கு.
  12. மின்னல், உங்களுக்கு இந்த இணையத்தை நாடாத்துபவர் அறிந்தவராக இருந்தால், தயவு செய்து இந்த பதிவை சரிபார்க்க சொல்லவும். லெப்.கேணல் ராதா அண்ணா மே மாதம் 20 ம் திகதி 1987 ஆண்டு, கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற மோதலின் போது வீரச்சாவை தழுவி கொண்டார். ஆனால் இந்த இணைய பதிவில் ஜூன் 20 என்று குறிப்பிடபட்டுள்ளது. தயவு செய்து வரலாற்றை மாற்றாது பதிய சொல்லுங்கள்.  லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். பொறுப்பு: யாழ் மாவட்ட தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: ராதா இயற்பெயர்: கனகசபாபதி ஹரிச்சந்திரா பால்: ஆண் ஊர்: வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 22.12.1956 வீரச்சாவு: 20.06.1987 நிகழ்வு: யாழ். மாவட்டம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=103&cid=624
  13. அதை விடுங்கப்பா. உவருக்கு யாரப்பா பிரிகேடியர் கொடுத்தது. இயக்கமே கேணல் தானே கொடுத்தது.
  14. இணையவனிற்கும், அர்ஜுனின் தந்தையாருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.