Jump to content

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33749
  • Joined

  • Days Won

    29

Everything posted by தமிழரசு

  1. சுப்பரமணியம் வடிவேல் வவுனியா தாயின் மடியில் - 12.7.1975 மண்ணின் மடியில் - 24.5.2006 சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டு விடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். மூத்த தளபதி கேணல் பால்ராஜ் சொல்கிறார், "புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி இராணுவத்தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் வீரமணிதான்" என்று. அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டவற்றில் மறக்க முடியாத கதையொன்று. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் இராணுவத்தின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல் வேலியைக் கண்டு பிடிப்பதே கடினமாயிருந்தது. இராணுவ அவதானிப்பு நிலையங்கள், தொடர் ரோந்துகள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக் கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் இராணுவச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டு பிடிப்பதே சிரமமான பணியாயிருந்தது. நெருங்க விடாது வெளியே செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவம் தாக்கிக் கொண்டிருந்தான். இந்த நிலமையில் இராணுவத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள் நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்வி கண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப் பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி (அதை இங்கே குறிப்பிடுவது வேவு இரகசியத்தை அம்பலமாக்கிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது) உள்ளே அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளே போக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்று விட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றி வளைக்கப் பட்டு அடி வாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை.செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவு வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் அடி வாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டு சென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு இராணுவத்தைப் பிடித்து விட்டதாகவும் அவர்கள் மயங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்த போது அந்த இராணுவத்தினர் என்பது எங்கள் வீரமணியும் சகவேவுவீரனும் என்பது தெரியவந்தது. வெளியே வேவுக்கு அனுப்பிய வீரமணி கிளிநொச்சியில் உள் நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் பெறுமதி வாய்ந்த தகவல்களோடும் சகிக்க முடியாத வாழ்வு அனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வெளி வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக் கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று. செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான். அவனைப் பெற்றவள் அறியக் கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இரு நாளும் தளத்தைச் சுற்றிப் பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்ற போது முடியாமல் போனதாம். ஒவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித் துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும், தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டு வந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான். ஐம்பதாவது இலங்கையின் சுதந்திர தினத்திற்கு கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பஸ் விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை - 02 இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத யுத்தகளமும் இல்லை, இவன் வேவுபார்க்காத இராணுவத் தளமும் இல்லை. ஒரு போராளி சொன்னான். "என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லி விட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப் போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு "அத்தஉசப்பாங்" என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்க வைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கு இடையில என்னையும் இழுத்துக் கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான். இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்த போது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் இராணுவம் அவனைச் சல்லடை போட்டுத் தேடியது. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒருபற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்க மாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று "குஷிக்" குணத்தோடு தளத்தைச் சல்லடை போட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான். " மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சு போய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்து கொண்டிருந்தம். ஆமி றோட்டால ஷரக்ரரில போனவங்கள், நிப்பாட்டிப் போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சு கொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப் பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் "அறுவார் நித்திரை கொள்ளவும் விடாங்கள் போல கிடக்கு." எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந்தடியள இழுத்துக் கொண்டு போய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான். "வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப் போட்டுத்தான் சாவான். சொல்லிப் போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் "ச்சா வீணா இழந்திட்டம். வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக் கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் யுத்தகளத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும். வேறொரு போராளி சொன்னான், "மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க் கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்று விட்டோம். இராணுவத்தின் தடைக்குள் போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போக வேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டு விட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டு விட்டு சுற்றி வளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டு விட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணிசுற்றி வளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒருமார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண ஓடுங்கடா தடைக்குள்ள" என்று விட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம் போய் புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்ல வேண்டியதாய் காலம் சபித்து விட்டது. "கேடு கெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் பலி கொள்ள முடியாமல் வெட்கம் கெட்ட தனமாய் கடற்கரையில் பலி கொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவு வரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடு போடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்து நிற்க. பிள்ளையார் தன்கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியது போன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன்குறிப்புப் புத்தகத்தில் வேவுத் தகவல் வரைந்து கொண்டு வருவான். எதையென்று சொல்வது. http://www.eeladhesa...=4977&Itemid=53 http://www.eeladhesa...chten&Itemid=50 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக வீரமணி உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  2. டண்ணிற்கும் எரிமலைக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  3. வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. என்னத்தை விதைத்தினமோ அதன் அறுவடை அனுபவியுங்கள், சிங்களம் என்ற இனவாத பூதத்தின் கீழ்நின்று எல்லா கொடுமைகளுக்கும் ஆம்மாம் போட்டிங்கள் இபொழுது அதற்க்கான பலனை அனுபவியுங்கள்.
  5. இப்போதெல்லாம் பிறசர் கூடிவிடும் என்று யாரும் உப்பு போட்டு சாப்பாட்டில் சாப்பிடுவதில்லையாம் அதனாலே ஸ்ரீலங்காவில சூடு சொரணை எதுவும் இல்லையாம், இப்போது ஒரு சீனவெடி கூட வெடிப்பதில்லைஎன்றால் பாருங்கோவேன்
  6. உன்னால் சீரழிக்க பட்ட குடும்பங்கள் நாடு ரோட்டில் பைத்தியமாக திரியுதுகள், உனக்கு மேசையில் குடும்பத்தோடு சாப்பாடு கேட்குதா ? எத்தனை பெண்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்டுவிட்டு உன் மனைவியுடன் மகிழ்சியான வாழ்க்கையா ? இடி விழுந்து சாவை தமிழர்களின் கண்ணீர் உன்னை சும்மா விடாது !
  7. வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள் வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும் எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்.

  8. கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்... தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா வவுணதீவு போராளிகளின் காவலரணைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை எதிரியின் சதிச் சூட்டில் வீரச்சாவடைந்தார். இயற் பெயர் – கந்தையா உலகநாதன் இயக்கப் பெயர் – ரமணன் தாய் மடியில் – 14.10.1965 தாயக மடியில் – 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம். படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து, அந்தப் பாடசாலை உருவாவதற்கு அத்திவாரமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனை வருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு மைதானமும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் பரிசோதனைச் சாலையுமாக அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள். அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப் போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பாடசாலையை ஒரு உழவு இயந்திரம் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையா விட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழவு இயந்திரத்தை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் திருப்தி தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின் புறத்தில் பதுங்கிக் கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக்குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு. உழவு இயந்திரத்தின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்து கொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் சாதாரண உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்து கொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதே போல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒழித்தோடிக் கொண்டிருந்தார்கள். மனித வேட்டைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்து கொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழவு இயந்திரத்தைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல். தலை தெறிக்கத் தப்பி ஓடியோர் போக விழுந்து கிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்து கிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன். அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் வயது அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல வருடங்களை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாக இருந்து இப்போது காவற்றுறையில் பணியாற்றுபவர். போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் அனுபவித்த வேதனைகளும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்து கொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டியவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு. நியூட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் தொடக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல்களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப்பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்திரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று” . என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.vannionli.../2012/05/6.html தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக ரமணன் உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம் .
  9. ஐயோ ....... ஐயோ ! கொசு தொல்லை தாங்க முடியுதில்லை !!!
  10. ராதா அண்ணா நேர்த்தியான நடை நல்ல பண்பு இனிமையாக பேசுபவர் ஐந்தாவது பயிற்சி பாசறையின் பொறுப்பாளர் இவரைப்பற்றி பாசறையில் பயிற்சிபெற்ற அனைவருக்கும் நன்கு தெரியும் இவர் நடத்திய பாசறையில் இவர்க்கு சில சவால்களும் இருந்தது அவர்ரைஎல்லாம் சமாளித்து சிறந்த போராளிகள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர் எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும் இன்று அவர் எம்முடன் இல்லை ஆனால் அவரின் நினைவுகள் என்னும் எம்முடனே வாழ்கின்றன ...... தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக ராதா அண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  11. http://youtu.be/198bivUzFsg தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக பிரிகேடியர் பால்ராஜ் உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  12. மகிந்தரே ஸ்ரீலங்கா என்ற ஜெயிலுக்குள்தான் இருக்கின்றார் இவர் சரதத் பொன்சேகாவை திறந்து விட்டால்தான் சர்வதேசம் ........ ?!
  13. முக்கியசெய்த்தி : சரத் பொன்சேகா விடுவிக்கப்போகின்றாராம் மகிந்தர் அதை சொல்லுவதற்கு அமேரிக்கா பறந்தார் ஜி எல் பிரிஸ்
  14. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  15. செல்லப்பெருமாள்அருமைராசா கொக்குத்தொடுவாய்முல்லை 2.2.1961-15.5.1989 இராணுவப் பரிசோதனை ஒன்றின் போது கையை இழந்துஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றான். ஒரு போராளி.வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீபோராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. பாசத்தின்மேலீட்டால் இப்படியோரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பைஅதிகரிக்கினறது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச்சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான். எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனதுவார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது எண்ணிநாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை நட்சத்திரமாக,வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களைஇழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி. டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி.இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப்பிரதேசத்தில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை நேசித்த…. வன்னிக்களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில். பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகியஒரு போராளி கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சிலஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்தமதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும்ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான். அதிதியாக வந்தோரால் அகதியாக ஆக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு.இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன்நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமானபங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும்ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்தமண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்குஅடிக்கடி உணர்த்தினார்கள். அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் பிரதேசங்களைத் தன் ஆட்சியின் கீழ்வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனதுஇராணுவ முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது பிதேசத்து மக்களை அங்குகுடியேற்றுவதன் மூலம் சிப்பாகச் செய்யலாம். பாரண்ம் அங்கு குடியேறும் மக்கள் அங்குநிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர்கொள்ளவும் அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இதுஇளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியேநடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியேமுழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலைää மணலாறுஎன விஸ்தரித்;து வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லைபோட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது ஆக்கிரமிப்புஇராணுவத்தின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள்மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாதுதடுக்கப்பட்டது. நெருக்கடி மிகுந்த காலகட்டங்களாக எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்தநாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்டஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள்பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்றமாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவைபுதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும்ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவைசகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம்என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பைஉருவாக்கியவன் அவன். ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும்,இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையைஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்துநிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான்.ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்றுமண் மறந்து விடவில்லை. அவ்வப்போது மணலாறு பிரதேசத்தில் எதிரியிடமிருந்துஇவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும்சொல்லும் செய்தி இதுதான். தயா. http://www.vannionli...15-05-1989.html
  16. தமிழினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  17. தூங்க மறுக்கின்றது எனது இரு விழிகள் ஏனெனில் தூங்கினால் கனவு வருமே கனவு வந்தால் நான் எனக்குள் எடுத்த உறுதி மொழி ?! .......... என்னும் நிறைவேற்ற படவில்லையே என்ற குற்ற உணர்வு ! என் உள்ளத்தை கேள்விகள் துரத்துகின்றதே ஆண்டுகள் மூன்று ஆகியும் !!! இதற்க்கு கூட பதில் கொடுக்க முடியாத கையால்ஆகாத ஒருவனாகி விட்டேனே ! என்று மீண்டும் அடுத்த உறுதி மொழி எடுக்க முன்னர் .......... குற்ற உணர்வுடன் தலை குனிகின்றேன்.

  18. இருவருக்கும் கரட் அல்வா செய்வதற்கு கரட் கொடுத்திருக்கின்றார் மகிந்தர்
  19. தமிழர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத துயர நாட்கள்
  20. தங்கத் தலைவனின் அடிச்சுவட்டில் உன் பாதம்பதித்து,கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரனே! இன்று உன் வீரவணக்க நாள். மூத்த புலியொன்றின் மூச்சடங்கிய நாள். அண்ணை அண்ணை என உச்சரித்த உன் நாவின் பேச்சிழந்த நாள். இன்று தமிழீழ மக்கள் நாம்,கண்ணீர் சிந்திக் காணிக்கைசெலுத்தி, வண்ணமலர் கொண்டுவந்து உன்பாதம் பணிகின்றோம். புல்லர்கள் அழிந்திடப் புனிதப்போர் புரிந்தவனே,வல்ல உன் துணிவுதனை வரலாறு சொல்லும். நாம் பெறும் வெற்றியின் வேரே,வீரத்தின் விளைநிலமே, வீழ்ந்தாலும் நீ விதையாகிப்போனாய். ஈழதேசத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றவனே உன் உயிரின் துடிப்பு அடங்கும்போதும்,எங்கள் உரிமைகேட்டல்லவோ அடங்கியது. சோதனை பல சந்தித்து சாதனை படைத்தவனே,துணிவு உன் காலடியில் துவண்டுகிடந்தது. அச்சத்திற்கு உன்னை அண்டுவதற்கே அச்சம்,அதனால் உன்னிடம் அச்சமில்லை. உன் செயலில் உயிர்ப்பிருந்தது,அதனால் உன் கடமையில் துடிப்பிருந்தது. விடுதலை எனும் இலட்சியப் பசி உனக்குள்ளே தீயாய் எரிந்ததால், மரணம் உன் காலடியை மண்டியிட்டது. மலையென உயர்ந்து தமிழர் மனங்களில் நிறைந்து,மலரும் நினைவாய் வாழும் மூத்த தளபதியே,எங்கள் தலைவன் புன்முறுவலுடன் உச்சரிக்கும் பெயர் உன் பெயர்தானே. அந்த சொர்ணத்தை எங்கள் நெஞ்சத்து நினைவுக்கருவறையிலிருந்து மறப்போமா?அல்லது மறைப்போமா? இல்லவே இல்லை. அது எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட சரித்திரம். என்றென்றும் தமிழீழ தேசத்தில் ஒலிக்கப்படும் வேதம். உறங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிய ஈழத்தின் வெற்றிச் சங்கொலியே, மீட்கப்படும் எம் தேசத்தில் உன் கல்லறை நிமிர்ந்து நிற்கும். அது எங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ,அன்றேல் மலர்வளைய மரியாதைக்காகவோ அல்ல,மாறாக எங்கள் மண்ணின் நிலைவாழ்விற்கு உனது மனவுறுதி மகுடம் சூட்டவேண்டும் என்பதற்காகவே. நீ சுமந்த விடியலின் கனவுகளும்,எங்கள் தேசத்திற்காக வெகுண்டெழுந்த உணர்வுகளும்,தமிழீழ வரலாற்றில் என்றென்றும் நிலைத்துநிற்கும். என்றென்றும் தமிழீழ தேசம் உன் நினைவைச் சுமந்திருக்கும். http://youtu.be/zSnbczLspq8 http://www.eeladhesa...=4798&Itemid=53 http://youtu.be/w3BoSLWR-xo தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். யேர்மன் திருமலைச்செல்வன். http://www.eeladhesa...chten&Itemid=50 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  21. தொடர்சியான விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்க்கை சுமை அதிகரித்து எப்படி வாழ்வது என்ற ஏக்கத்தில் !?
  22. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.