Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Nathamuni

  1. சட்டப்படி pow செல்லும். ஆனால், வெளிநாட்டில் இருந்து அனுப்பும் நபர், தயாரிக்கும் புறக்கிராசியாரை, வாங்கும் பார்ட்டி புறக்கிறாசியார் தொடர்பு கொண்டு மேலதிக செக்கிங் செய்ய வேணடும். எங்கை இருக்குது?
  2. அப்புறம் நம்ம மட்டு ஒருவர், கந்தர்மடத்தில் இடம் வாங்கி விட்டுள்ளார். வீடு கட்டப்போறாராம். வெளியால சொல்லிப்போடாதீங்கோ... 😍🤪
  3. முன்பு சீராளன் கார் நிறுத்துமிடம் முன்பாக ஒரு பெற்றோல் நிலையம் புதிதாக உள்ளது. சீராளன் கார் நிறுத்துமிடம் வலதுபக்கம் இருப்பதாக நடந்து போனால், அரசடி, கந்தர்மடம் சந்தி மூலையில் உள்ள கடை தொகுதியை, கனடா இந்திரன், (ரம்பா புருசன் ) 6 கோடிக்கு வாங்கி, பெரிய கட்டிடம் உருவாகிறது. சின்னத்தம்பி தேத்தண்ணி கடை இருந்த இடத்தில ஒரு துணிக்கடை... சிறுபிள்ளைகளின் உடைகள் தொங்குகின்றன. முன்னால், சலூன் இருந்த இடத்தில், மட்டும் ஒரு பழைய கடை இருக்கிறது. போயிலை தொங்குகிறது. அது மட்டுமே பழைய நினைவை கொண்டுவரலாம்.
  4. யாழ்ப்பாணத்தில் கள்ளக்காணி, கள்ள உறுதி பிரச்சணை கூடிப்போச்சு! அரசாங்கமும், விற்பவர், வாங்குபவர் படம், கையெழுத்துக்கு மேலே கைநாட்டு என்று கேக்குது... கள்ளப் பிரக்கிராசிமாரா..... வேற..
  5. மீண்டும் சொல்கிறேன் உங்கள் விளக்க அலம்பறை யாருமே கேட்கவில்லை. புரிநது பதிலலியுங்கள். இல்லாவிடில் நகருங்கள். இது உங்கள் விளக்கத்துக்கான திரியல்ல! நன்றி!
  6. இரவு பார்ட்டீயோ? நான் கேட்டது, வெள்ளையம்மா, வெள்ளை என்று பலமுறை எழுதிய போது கண்டு கொள்ளாத நிர்வாகம், ஒரு கொலை குற்றவாளியை கறுவல் என்று எழுதிய போது திரியை தூக்கிய காரணம் என்ன என்று? இப்ப சொல்லுங்க, உங்களிடம் யாரும் தமிழில் டவுட் கேட்டதோ என்று?
  7. நான் எழுதியதை வாசிக்காமல் தமிழ் பிரசஙகம் செய்கிறீர்கள். நான் சொல்லவந்தது என்ன, நீங்கள் அலம்பல் பண்ணுவது என்ன? புரிந்தா குத்தி முறிகிறீர்கள்? கறுவல் பிழை, வெள்ளை, வெள்ளையம்மா சரியா என்று கேட்டால்... கறுப்பர், வெள்ளையினத்தவர் அல்லது வெள்ளையர் என்றுதான் எழுத்தில் வரும் என்கிறீர்கள்! இங்கே, இலக்கணத் தமிழா பாவிக்கிறோம்? ஞாயிறு காலை.... ?
  8. மேலேதிக இணைப்பு மேலே. உங்கள் தமிழ் வியாக்கியானம் விதண்டாவாதம்.
  9. அப்ப கறுப்பர்கள் யாழ் பார்க்கிறார்கள் என்று சொல்ல வாறீர்களா? நான் தெளிவாக சொல்லிவிட்டேன் மேலே. நிலைப்பாடு பக்கச்சார்பு இல்லாமல் பொதுவாக இருக்க வேண்டும். கறுவல் தாழ்வு, வெள்ளைஉயர்வு என்று சொல்கிறீர்களா? செய்தியை பாராக்காமல் எப்படி கருத்து சொல்ல முடியும். கமோன் கிருபன் அய்யா! சும்மா அந்த சொல் பாவிக்கவில்லை. தவறாக அப்பாவி ஆப்கன் அகதியை ஒரு தமிழன் உடன் சேர்ந்து கொலை செய்து, நீதிமன்றின் கடும் கண்டனத்தையும், 21 வருட பரோல் இல்லா தண்டணையும் பெற்ற குற்றவாளியை கறுவல் என்று சொல்லக்கூடாது, கறுப்பர் என்று சொல்லவேண்டும், சரியா? உங்களிடம் திருடுபவர், திருடனா? திருடரா?
  10. 30 வருடத்துக்கு முன்னம்! இப்பவும் நீக்ரோ என்பதே இனஅவமதிப்புச் சொல். தமிழ் சொல்லாடல்களான கறுப்பர், கறுவல் குறித்த தங்கள் ஆபூர்வ விளக்கத்துக்கு மிக்க நன்றி. அப்படி அழைக்கக் கூடாது என்று கறுப்பர்கள் ஆதங்கம் பட்டது போல சொல்வது போலல்லவா இருக்கிறது. இனஅவமதிப்பு என்பது சொல்லப்படுபவருக்கு புரிந்து காயமேற்படுத்தினால் மட்டுமே தவறானது. பிரிட்டனில் கூட வீட்டில் இவ்வாறு காயப்படுத்தக் கூடிய சொற்களை பிள்ளைகள் முன் பேசாதீர்கள். புரியாமல் பாடசாலைகளில் பிள்ளகள் பயன்படுத்தலாம் என்கிறார்கள். அப்படியானால், மோட்டுச் சிங்களவன், கெட்ட சிங்களவன், சோனகன், சொல்லாடல்கள் சரியானதா? அது இனஅவமதிப்புச் சொல் இல்லையா? ஆகவேதான் அதீத political correctness என்றேன். எனது கரிசனை, இதே நிலைப்பாடு, கறுவலின் எதிர்ப்பதமான வெள்ளை, வெள்ளையம்மா என்று எழுதிய போது இருக்கவில்லை என்பதே! கெட்ட நாய் என்று ஒருவரை திட்டினால், நாயுடன் ஒப்பீடா என்று கோபமடைவார். அதையே நாய்கே சொன்னால் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும் அல்லவா! அதனைத்தான் சுட்டிக் காட்டினேன். பிழை பிடிக்கவல்ல. பாவித்த சொல் தவறாயின், திருத்தலாமே அல்லது திருத்த அறிவுறுத்தலாம். திரியையே பூட்டினால், எழுதவே ஆர்வம் வராது. அந்த திரி, பாடசாலை bullying ஆல் பாதிக்கப்பட்ட இரு அகதி மாணவர்கள் கொலை செய்தார்கள்.ஒருவர் சோமாலி, ஒருவர் இலங்கையர். கோவத்தில் தவறாக இன்னும் ஒரு தொடர்பில்லாத ஆப்கன் அகதி கொலையானார். தந்தையை தலிபான் கொல்ல, தாயுடன் இங்கே வந்தவர் கொலையாகினார். எனது வழக்கப்படி, திரியை திறந்து விட்டு, bullying என்றால் என்ன? பிள்ளைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நீண்ட கட்டுரை எழுதிக் கொண்டு வர, திரியில்லை!!
  11. நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கு அல்லது ஓரிருவருக்கு Political Correctness விடயத்தில் ஆர்வம் போல.
  12. கறுவல் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டதால், கறுவலுடன் சேர்ந்து கொலையில் தமிழ் இளைஞர் திரி பூட்டப்பட்டது. அதேவேளை, வெள்ளை, வெள்ளயம்மா என்று சொற்பதம் பாவித்த போது கண்டு கொள்ளாத நிர்வாகம் கறுவல் சொற்பதம் குறித்த விசனமுறும் நிலைப்பாட்டை அறியத் தர முடியுமா? நன்றி 🙏 பிரிட்டனில் தேசிய பத்திரிகைகள், பிபிசி போன்றவை கறுப்பு என்ற சொல்லை black என பாவிக்கும் நிலையில், நிர்வாகத்தில் உள்ள யாரோ ஒருவருக்கு சரியான புரிதல் இல்லை என்று கருதுவதால் இது குறித்த விளக்கம் தர வேண்டும். தகுந்த விளக்கம் தந்தால் இந்த சொல்லை தவிர்ப்போம்.
  13. நான் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். மண்ணெண்ணய் மகேஸ்வரன் தம்பி பரமேஸ்வரன் நடாத்தும் கோட்டல் ரிசப்சனிஸ்ட் 35 வயது அநுராதபுர இளைஞர். டுபாய் ரிட்டேன். அங்க எடுத்ததிலும் பார்க்க அதிக சம்பளத்தில் ஊரோட வேலை.... ஒரு வருசமா இருக்கிறார். நல்ல ஆங்கிலம்... தமிழ் படிப்பதாக சொன்னார். ரூம் பையன் சொன்னார், இதுக்கு முந்தி இருந்த இரண்டு பேர் ஆறு, ஆறு மாசம் இருந்துட்டு வெளில போட்டினம். ஆக... உந்த வெளிநாட்டுக்கனவு இருக்கும் வரை நம்பி முதலிட முடியாது. அதே வேளை, பொருளாதாரம் சிங்களவரை தமிழ் கற்று வேலைக்கு வர வைக்கும்.
  14. பொருளாதாரம் இருந்தாலும், அதிகாரம் நம்மிடம் இல்லை. எமது மோசமான தலைமைத்துவத்துக்கு உதாரணம்: தையிட்டி விவகாரத்தில், சித்தார்த்தன் கருத்து. வித்தவரில் பிழை பிடிக்கிறார். பிரதேச சபையிடம் அனுமதி கேட்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. அதுவே இலங்கை உச்ச நீதிமன்று வரை போகக் கூடிய சட்ட நிலை. இராணுவம் முதல், நீதித்துறை வரை சட்டமீறலில்....என்று உலகத்துக்கு புரிய வைக்கலாமே.... பிரிட்டனில், அரச திணைக்களங்களில், மிகவும் பலமிக்கதாக சொல்லப்படுவது, உள்ளூர், கட்டட அனுமதி துறை. Regional Planning Permission. கட்டு என்றால் கட்டு, இடி எண்டால் இடி தான். யாரும் மூக்கை நுழைக்க முடியாது.
  15. ஈழத்தமிழருக்கான இன்றைய தேவை, சுஜநலமில்லாத, உறுதி, துணிச்சல் மிக்க தலைமை. இரண்டாம் யுத்த காலத்தில் பிரிட்டனுக்கு வின்ஸ்டன் சேர்ச்சிலும், விடுதலைப் போராட்டத்தில் இந்தியர்களுக்கு காந்தியும், தென்னாபிரிக்கர்களுக்கு மண்டேலாவும் வழங்கியது தான் சுஜநலமற்ற தலைமைத்துவம். இன்றைய தலைவர்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம், தையிட்டியில் மக்கள் இல்லாத போராட்டம்...
  16. பலருக்கு சட்டம் புரிவதில்லை. தாறு மாறான புரிதல்.... யுத்தகாலத்தில் ஆட்சி உரித்து செல்லாது என்பது சரி....: ஆனால் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்து விட்டன என்பதை மறக்கக் கூடாது.... யுத்தகாலத்தில் கூட, நீங்கள் இடம் பெயர்ந்ததை, வெளிநாடாடில் இருந்ததை உறுதி செய்ய வேண்டும். ஊரில் இருந்து கொண்டே, ஒருவரை குடி வைத்து, சும்மா இருக்க விட்டால், ஆட்சி உரித்து கிடைத்துவிடும் என்பதை மறக்கக் கூடாது. அதாவது, ஆட்சி உரித்து ரகசியமாக கோருவதில்லை. கோட் போய் தான் கேட்பது. கோட் கடதாசி போடும் போது பதில் கொடாவிடில் அவருக்கு ஆட்சி உருத்தாகும். முன்னொரு காலத்த்தில், தபாலை கடாத்திக் கூட மோசடி செய்துள்ளனர்.
  17. சொந்தபந்தம் எண்டாலும் பரவாயில்லை. வாடகைக்கு இருந்த ஆக்களுக்கும் ஆசை வருதே.
  18. கோவிலில் அக்காவின் செயல், இங்கே வந்த புதிதில், பஸ் ஏறப்போய், முண்டியடிக்க கிளம்பி, வெள்ளையம்மாக்களிடம் பேச்சு வாங்கி, ஜென்மத்துக்கும் மறக்காத பாடம் எடுக்கும், நம்மவர் நினைவே வந்தது. நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கள்.
  19. அந்தாளுக்கு விசர்தான். (பிரபா) அக்கா, தீடீரெண்டு, ரெயிடு போகேல்ல. சொல்லிப்போட்டுத்தானே போனவ. நான் எண்டா, இன்னொரு பாமில கைமாத்தா வாங்கி, ஐநூறு, ஆயீரம் கோழியலை காட்டி, 10 மாடுகளை கட்டி, 5 பன்டியள ஓடவிட்டு, 30 ஆடுகள காலுக்க கையுக்க ஓட விட்டு, அத்தாரை கடைக்கண்ணால ஒரு புன்சிரிப்போட பார்க்க வைத்து, அடுத்த புறயக்டுக்கு, £10,000 க்கு அங்கினயே அலுவல் பார்த்திருப்பன்.
  20. உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை எண்டது பழசு. இப்ப ஒரு மைல். எனது உறவினர் நல்லூரில காணி வீடு. இவர் வெளில வர, தகப்பன் சாக, மர வேலை செய்ய வார ஒருவரை வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார். வீட்டு முன்புறம் இருந்த பூட்டக்கிடந்த கடையினுள் அவர் குடியேறி, கலியாணமும் செய்து பல வருடங்களின் பின் பொம்பிளைப்பிள்ளை ஒன்றைப் பெத்துப் போட்டார். இவர் வீட்ட திருத்துவம் எண்டு போக, அவர் அங்க பிறந்த மகளுக்கு ஒரு பரப்பு தரட்டுமாம். சொந்தமும் இல்லை, கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. மயிரை கட்டி, மலையை இழுத்தால், வந்தா மலை, வராட்டி மயிர் தான் இழப்பு என்ற ரீதியில் கேட்கிறார்கள். இப்படி கோரிக்கைகள் வரும் என பதிலை தயாராக்கிக் கொண்டு போங்கோ என்கிறார்.
  21. பின்ன, 6 மாசம் இருக்கப்போறம், இந்த லப்ரொப் நிண்டு பிடியாதென்டு, டெஸ்க்ரொப்பை தூக்கி, bin பாக்குக்குள்ள போட்டுக்கொண்டு வெளிக்கிட்டாச்சு. அதில என்ன பிரச்சனை எண்டு அக்கா சார்பா கேக்கிறன் 😜🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.