Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. பூங்காவின் காற்றே பூந்தென்றா ஊற்றே
  2. லெப். கேணல் சுபன் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் சுபன் 1989 இன் இறுதிக் காலம், இந்தியப் படைகள் ஆக்கிரமித்த நின்ற இருண்ட நாட்கள். முள்ளிக்குளத்தில் முகாம் இட்டிருந்த ‘புளொட்’ கும்பல் மீது 20.05.1989 அன்று நடாத்தப்பட்ட வெற்றிகரமான தாக்கதலின்போது, அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த பானு அண்ணன் படுகாயமடைந்து சிகிச்சைக்காகச் சென்றதை அடுத்து, சுபன் அண்ணன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டார். தளபதியாகப் பொறுப்பெடுத்து வந்த உடனேயே – இந்தியப் படைக்கு நல்லதொரு அடி கொடுக்க வேண்டும் என்று எண்ணங்கொண்ட சுபன் அண்ணன் அதற்காக மன்னார்த் தீவில் மருத்துவமனைக்கு அருகிலிருந்த இந்தியப் படைமுகாமைத் தேர்ந்தெடுத்தார். இத்தாக்குதலுக்கான திட்ட ஒழுங்குகளைச் செய்த அவர், அதனை நேரடியாகத் தலைமை ஏற்று நடாத்தும் பொறுப்பை மேஜர் சூட்டி அண்ணனிடம் ஒப்படைத்திருந்தார். எதிரி முகாமிட்டு காவல் புரிந்துகொண்டிருந்த ஒரே ஒரு தரைவழிப் பாதையைத் தவிர முற்றாகக் கடல் சூழ்ந்த தீவு. முழுமையாகவே இந்தியப்படை நிறைந்திருந்த அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம். ஒரு பக்கம் 500 யார் தூரத்தில் பி.எம்.சி கட்டட முகாம்; மறுபக்கம் 500 யார் தொலைவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலைய முகாமைக் கொண்டு, மிகுந்த பாதுகாப்புக்கு நடுவில் இருந்து மருத்துவமனை முகாம். 1989.06.17 அன்று சுபன் அண்ணன் வகுத்த தாக்குதல் திட்டம் செயற்படுத்தப்பட்டது. கடல்வழியாகத் தீவுக்குள் நுழைந்தது தாக்குதல் அணி, குறித்த நேரத்தில் மருத்துவமனை முகாம்மீது தாக்குதல் தொடங்க, அங்கிருந்த முகாமிலிருந்து உதவி கிடைப்பதைத் தடுப்பதற்காக அந்த முகாம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. குறைந்த நேரத்திற்குள் முகாம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டு, 26 படையினர் கொல்லப்பட்டதுடன் 4 பிறண் எல். ஏம் ஜி களுடன் 24 ஆயுதங்களும கைப்பற்றபட்டன. புலிகளின் தாக்குதலணி எவ்வித இழப்புகளுமின்றி வந்த வழியாகவே தீவிலிருந்து வெளியேறியது. இந்திய அரசையையும் அதன் படைத் தலைமையையும் அதிர்ச்சி அடையச் செய்த தாக்கதல் இது என்பதில், வியப்பில்லை. நூறுவீதம் பாதுகாப்பானது என அவர்கள் கருதியிருக்ககூடிய ஒரு வலையத்துக்குள் ஊடுருவி நடாத்தப்பட்ட தாக்குதல் என்பது ஒருபுறமிருக்க, தங்களது படையின் ஒரு முகாமையே தாக்கி அழித்துவிட்டு இழப்பேதமின்றிப் போய் விட்டார்களே என, தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த உலகின் நான்காவது பெரிய படை நிச்சயம் அதிர்ந்திருக்கும். தமிழீழத்தில் இந்தியப்படையின் பெரியதொரு முகாம் ஒன்று தாக்கப்பட்ட முதல் நிகழ்வும் கடைசி நிகழ்வும் அதுதான். இந்தியப்படையிடமிருந்து ஒரே தடைவையில் கூடிய தொகையில் எல்.ஏம்.ஜி கைப்பற்றபட்ட முதல் சம்பவமும் கடைசிக் சம்பவமும் இதுதான். ‘இன்னொரு விக்ரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக்கொள்ளத் துவங்கினார்கள். இந்தத் தாக்குதலோடுதான் சுபன் அண்ணின் சகாப்பதம் ஆரம்பித்தது. 1990 இன் ஆரம்பத்தில் இந்தியர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது இங்கேயே நிலைகொள்ள முயன்ற அவர்களுடைய எச்சசொச்சங்களைக் களையெடுக்கும் பணி நடந்தது. சுபன் அண்ணனும் மன்னார் மாவட்டத்தின் அணிக்குத் தளபதியாக வடதமிழீழத்தின் பலபகுதிகளிலும் அந்த பணியில் பங்கேற்றார். வவுனியா முசல்குத்தியில் புளொட் துரோகிகள் மீது கிளிநொச்சியில் ஈ.என்.டி.எல்.எவ் துரோகிகள் மீது குஞ்சுக்குளத்தில் தலைமன்னாரில் என எல்லா இடங்களிலும் சுபன் அண்ணையின் குழு களையெடுப்பை நடாத்தியது. இதற்கு பிற்பட்ட காலப்பகுதி, தமிழீழத்தில் போர் ஓய்ந்திருந்த ஓர் அமைதி நிலை தோன்றியிருந்தது. எங்களது போராளிகள் முழுமையாக மக்கள் அரங்கில் இறங்கி, அரசியல் வேலைகளில் ஈடுபட்ட வேளை, அரசியல் வேலைசெய்யும் போராளிகளை அடிக்கடி அழைத்து சுபன் அண்ணன் கதைத்துக்கொண்டிருப்பார். மக்களோடு எப்படிப் பழகுவது, மக்களை எவ்வாறு அணுகுவது என்பதை எல்லாம் தானே செய்துகாட்டிச் சொல்லிக்கொடுப்பார். “சிறிய ஊர்கள் குக்கிராமங்கள் எல்லாவற்றிக்கும் போகவேண்டும். தமிழீழத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான மன்னாரில் மக்கள் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். அவர்களுடைய குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்றெல்லாம் விளக்கிக் சொல்லுவார். “மாவட்டதிலுள்ள மூலைமுடுக்குகளுக்குள் எங்கள் செயலகங்களை அமைக்கவேண்டும். இந்திய ஆக்கிரமிப்பின் நெருக்கடியான சூழ்நிலைகளில் எங்களை இமைபோல காத்த கிராமப்புற மக்களிடமிருந்த நாம் அந்நியப்பட்டுப் போகக்ககூடாது. மக்கள் எங்களைத் தேடிவராமல், நாங்கள் மக்களிடம் செல்ல வேண்டும்” என சுபன் அண்ணன் எடுத்துக் கூறுவார். கிராமங்களுக்குள் அரசியல் வேலை செய்யும போராளிகளின் நடவடிக்கைகள் பற்றி வேறு ஆட்கள் மூலம் தகவல்கள் அறிகின்ற அவர், பின்னர், அதிலுள்ள குறைநிறைகள் தொடர்பாக போராளிகளுக்கு ஆலோசனை வழங்குவார். மாவட்டத்திலுள்ள இராணுவ செயலகங்களானாலும் சரி, அரசியல் செயலகங்களாலும் சரி, பண்டிவிரிச்சான், அடம்பன் போன்ற கிராமபுறங்களிலேயே அமைக்கப்பட்டன. மன்னார்த் தீவுப் பகுதியே நகரமாக இருந்ததால் அரச செயலகங்கள் எல்லாம் அங்கேயே அமைந்திருந்தன. இதன் காரணமாக மன்னார்ப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மிகப் பெரும்பலான மக்கள் அனுபவித்த அசௌகரியங்களை, சுபன் அண்ணன் நன்கு உணர்ந்திருந்தார். இதனாலாலே எமது இயக்கத்தின் அலுவலகங்களைத் தீவுக்கு வெளியே, கிராமப்புறங்களில் அவர் நிறுவினார். அடம்பனுக்கும் உயிலங்குளத்திற்கும் நடுவில்தான் மன்னார் மாவட்டத்தின் பெரிய நகரம் அமையவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தமிழீழத்தில் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொள்ளுவார். சண்டை அனுபவம் நிறைந்த ஒரு இராணுவத் தளபதியாக இருந்த அதே சமயம் – பெரிய அளவில் கல்வி அறிவைப் பெற்றிரக்காதபோதும் – அரசியல் வேலைத் திட்டங்களுக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி நெறிப்படுத்துகின்ற அறிவாளியாக இருந்தார். அவர் மக்களுடன் எவ்வளவு ஜக்கியமாக இருந்தார் என்பதை அவரது முகாமுக்கு செல்வதன் மூலம் அறியலாம். எந்த நேரத்திலும் ஒரு மக்கள் தொடர்பகம் போலவே அது காட்சி தரும். அதிகாலை 4.30 மணிக்கொல்லாம் சுபன் அண்ணன் எழுந்தவிடுவார். ஆனால், அதற்கு முன்னாலேயே அவரைச் சந்திக்க மக்கள் முகாமில் கூடியிருப்பார்கள். நித்திரை விட்டெழும்பினதிலிருந்து வந்திருப்பவர்களுடன் கதைப்பார். சண்டை முனைகிலிருந்து வந்து களைப்போடு இருக்கும் போது கூட சந்திப்பதற்காக யாராவது வந்திருந்தால் பொறுமையோடு அவர்களுடன் கதைத்து அனுப்பிவைப்பார். மக்களுக்குள் இருந்த பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தீர்த்துவைப்பதில் சுபன் அண்ணன் மிகுந்த கரிசனைகாட்டிச் செயற்படுவார். அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை சம்பவங்களாகச் சொல்லிமுடிக்க முடியாது. குடும்பங்கள் பிரிஞ்சிருக்கின்ற சிக்கல்கள் என்றால் நேரடியாக வீட்டைத் தேடிப்போய்விடுவார் சுபன் அண்ணன். எத்தனை குடும்பங்களை அப்படி அவர் சேர்த்துவைப்பார்… “இன்னொரு விக்ரரின் காலம்” என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். 1990 இன் நடுப்பகுதிவரையான இடைக்கால அமைதிப் காலம். தமிழீழததின் தென் பிராந்தியத்தில் சிங்களப் படைகளின் அத்தமீறிய செய்லகள் பற்றிய செய்திகள் தகவல் பரிவர்த்தனை சாதனங்களில் வரும். கொலைகள், கைதுகள், சிங்கள குடியேற்றங்கள் போன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் சுபன் அண்ணன் சொல்லுவார், “என்றாவது ஒரு நாள் பெரிய அளவிலான ஒரு இன அழிப்பு யுத்தத்தை சிங்களப் பேரினவாதம் எங்கள் மக்கள் மீது துவக்கும்” என்று. சுபன் அண்ணன் சொல்வதை மெய்ப்பிப்பதைப்போல, மன்னார் மாவட்டதிலிருந்த சிங்களப் படைமுகாம்களில் யுத்த ஆயத்த ஒழுங்குள் செய்யப்படுவதை எங்களால் நேரடியாக அவதானிக்க முடிந்தது. முகாம்களில் மேலதிகமாகத் துருப்புக்கள் குவிக்கப்பட்டனர். ஆயுத தளபாடங்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டன. காவலரண்கள் புனர் நிர்மானம் செய்யப்பட்டு, முகாம்கள் பலப்படுத்தப்பட்டன. இவை எல்லாம் எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்தன. யூன் 11ஆம் நாள், சுபன் அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தது நடந்தது. மட்டகளப்பு மாவட்டத்தில் வெடித்த போர், ஐந்து நாட்களில் தமிழீழமெங்கும் பரவியது. மன்னார் மாவட்டத்தின் முதல் நடடிவடிக்கையாக, தீவுப் பகுதியிலிருந்த கோட்டையில் அமைந்திருந்த பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது. அனைத்துப் பொலிசாரும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஆயுதங்களும் வாகனங்களும் ஏனைய பொருட்களும் எடுக்கப்பட்டன. கைதாகிய சிங்கள்க் காவல்துறையினரை பாதுகாப்பாக மதவாச்சி வரை அனுப்பிவைத்தார் சுபன் அண்ணன். அவரின் அடுத்த இலக்கு தலைமன்னாரிலிருந்த பழைய பாலம் இராணுவ முகாமாக இருந்தது. தற்போதைய மன்னார் மாவட்ட சிறப்பத் தளபதி ஜான் அண்ணன், மற்றும் லக்ஸ்மன் அண்ணன் ஆகியோரின் தலைமையில் 1/2 மணி நேரத்தில் அந்த முகாம் தாக்கி அழிக்கப்பட்டது. 16.06.1990 அன்று அதிகாலை நடந்த அந்தத் தாக்குதலில் 40 இற்கும் அதிகமான இராணுவத்தின் கொல்லப்பட்டனர்; 81 மி.மீ எறிகணை செலுத்தி உட்பட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பவை குறிப்பிடத்தக்கன. இந்தப் பெரு வெற்றிகளைத் தொடர்ந்து, மன்னார் மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்த ‘கஜுவத்தை’ இராணுவமுகாம் சுபன் அண்ணனின் இலக்காக அமைந்தது. அதுவொரு தமிழர்களின் பூர்வீகக் கிராமம், கொண்டச்சி என்பதுதான் அதன் பெயர். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை நடாத்தியதன் மூலம், சிறிலங்கா அரசு அதனை ஒரு சிங்களக் கிராமாக மாற்றியது. சிங்களத்தில், ‘கஜுவத்தை’ எனப் பெயரும் இட்டது. அங்கே இருந்த – பெருமளவில் வருமானத்தைத் தருகின்ற மரமுந்திரிகைப் பண்ணையில் சிங்களவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர். இந்த ‘ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை’ பாதுகாக்கவென ஒரு படைமுகாம் அமைக்கப்பட்டது. அனைத்து வசதிகளும் பொருந்தியதாகவும், எவ்வேளையில் அச்சுறுத்தல் வந்தாலும் உதவி வழங்கக்கூடிய முறையிலும் அந்த முகாம் நிறுவப்பட்டது. அந்த முகாமை நிர்மூலமாக்குவதற்கான தாக்குதல் திட்டத்தை சுபன் அண்ணன் வகுத்தார். அவர் வகுத்த திட்டதின் படி மேஜர் வசந்த் அண்ணன், கெக்குலர் அண்ணன் ஆகியோரின் தலைமையில் தாக்குதல் நடந்தது. இராணுவரீதியாக மட்டுமன்றி – அந்த முகாமின் அமைவிடம் காரணமாக – அரசியல்ரீதியாகவும் மிக முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வாக அந்தத் தாக்குதல் அமைந்தது. ஆக்கிரமிக்கபட்ட பிரதேசங்களைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வது என்பது ஒரு சாத்தியமற்ற விடயமே என்பதை, சிங்கள ஆட்சியாளர்களுக்குப் புரியவைத்த முதலாவது தாக்குதலாகவும் அது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் தளபதியாகப் பணியாற்ற வந்தவுடன் இந்தியப் படையின் முகாம் ஒன்றைப் தாக்கியதன் மூலம், இந்திய ஆக்கிமிப்புப் போர் வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த சுபன் அண்ணன், ‘கஜுவத்தை’ இராணுவ முகாம் தாக்குதலின்மூலம், விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார். ‘பவள்’ கவசவண்டி ஒன்று எவ்வித சேதமுமின்றி கைப்பற்றப்பட்டதுதான் அது. எங்கள் போராட்டத்தில் இது முதல் நிகழ்வு. தென்னாபிரிக்கா நாட்டின் தயாரிப்பான இந்த ‘பவள்’ வகைக் கவசவண்டிகள், கன்னிவெடிகளால் தகர்த்தப்பட முடியாதவை என பல இராணுவ பரிசோதனைகள் மூலம் முடிவு செய்யபப்ட்டவை ஆகும். ஆனால் இதே ‘பவள்’ கவச வண்டிகள் சில ஏற்கனவே புலிகளின் கன்னிவெடிகளால் நொருக்கப்பட்டுவிட்டன என்பது கூடப் பழைய கதையாகிவிட்டது. இந்த ‘கஜவத்தை’ தாக்குதலின் போது இன்னும் ஆறு போராளிகளுடன் மேஜர் வசந்த் அவர்கள் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். மன்னார் மாவட்டத்தில் சகல இராணுவ முகாம்களுக்கான வேவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த வசந்த் அண்ணன், தலைவரின் மெய்பாதுகாவலர் அணியில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னாரில் மக்கள் “இன்னொரு விக்ரரின் காலம்” என்று பேசிக்கொண்டார்கள். பரந்த வெளிகளையும், விரிந்த கடலையும் தனக்குரிய குறியீடாக கொண்டது மன்னார். இங்கே, பூநகரியிலிருந்து செல்லும் பிரதான வீதியில் இருக்கும் இலுப்பைக்கடவை என்ற இடத்திலுள்ள கள்ளியடி என்னும் கிராமத்தில்தான் சுபன் அண்ணன் பிறந்தார். 1965 ஆம் யூலை மாதம் 21ஆம் நாள், வினாசித்தம்பி சுந்தரலிங்களம் என்ற அந்தக் குழந்தை வசதிவாய்ப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தது. சின்ன வயதிலிருந்தே இலுப்பைக்கடவை பாடசாலையில் கல்விகற்றுவந்த அவர் உயர்வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது, விடுதலைப் போராட்டம் பற்றிய சிந்தனை அவரது நெஞ்சுக்குள் அலைமோத தொடங்கியது. விடுதலைப்பபுலிகள் இயக்கத்தின் தொடர்பு தேடித் திரியத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டில் அது கிடைத்தது. தமிழீழத் விடுதலைக்கான ஆயுதப்போர் வரலாற்றில், மன்னார் மாவட்டத்தில் நடந்த முதல் தாக்குதல் – இராணுவ வண்டித் தொடர் மீதான மூன்றாம்பிட்டி கன்னிவெடிப்புத்தான். 1984 ஆம் ஆண்டு பதின்மூன்று சிங்களச் சிப்பாய்களைக் கொன்ற அந்தத் தாக்குதல் நடந்தது. சுபன் அண்ணனின் போராட்டப்பணி அந்தக் கண்ணிவெடிப்பிலிருந்தே ஆரம்பிக்கின்றது. அப்போது அந்தத் தாக்கதலைத் தலைமையேற்று நடாத்திய லெப்.நிதியவர்கள், சுபன் அண்ணன் மூலமாகவே அந்த ரோந்து அணிபற்றிய தகபல்களைப் பெற்றார். ஒவ்வொரு தடவையும் அந்த ரோந்து தொடர் செல்கின்றபோது எத்தனை வாகனங்கள் செல்கின்றன? ஒவ்வொரு வண்டியிலும் எவ்வளவு துருப்புகள் இருக்கிறார்கள் போன்ற விபரங்களைப் பார்த்து சொல்வது, சுபன் அண்ணனின் பணி. ஒருநாள் லெப்.நிதி அவர்கள் சுபன் அண்ணனிடம், “இன்னும் ஒரு வாரத்தில் இந்த ரோந்து அணியை மறிக்றேன்; எதிர்பார்த்துக்கொண்டிருங்கள்.” என்று சொன்னராம்” வழமைபோல் மறுநாளும் இலுப்பைக்கடவைவரை பின் தொடர்ந்து சென்று வாகன ரோந்தை அவதானித்துவிட்டு சுபன் அண்ணன் திரும்பி வந்த 1/4 மணி நேரத்தில் அந்த மூன்றாம்பிட்டிக் கன்னிவெடியின் சத்தம் மன்னார் மாவட்டத்தையே அதிரச் செய்தது. நாட்கள் உருண்டோட, தகவலறிந்த சிங்களப் பொலிசார் சுபன் அண்ணனைத் தேடத் துவங்கினார்கள்; விடு தேடிவர ஆரம்பித்தார்கள், அவர் தலைமறைவாக வாழவேண்டிய சூழ்நிலை உருவாகியது. 1985 இன் ஆரம்பத்தில், அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பனான கப்டன் பெனா அவர்களுடன் இயக்கத்தில் முழுமையாக இணைந்துகொண்டார். (1989 ஆம் ஆண்டின் மே நாள் அன்று, வவுனியா நகரின் மத்தியில் பலத்த பாதுகாப்புக்கு நடுவில் – இந்தியப்படை முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த 42 போராளிகள் சிறச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியேறிய வெற்றிகரமான நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த கப்டன் பெனா அவர்கள் – பின்னர், இந்தியப் படையுடனான சண்டையொன்றின்போது வீரச்சாவடைந்தார்.) இந்தியாவில் நடந்த ஒன்பதாவது பயிற்சி முகாமில் திறம்பட தனது பயிற்சிகளை முடித்துக்கொண்டு – முழமையான ஒரு போர் வீரனாக – தமிழீழம் திரும்பிய சுபன் அண்ணன், அப்போது மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த எமது இயக்கத்தின் மந்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் விக்ரர் அவர்களின் அணியில ஒருவராக நின்றார். அக்காலப்பகுதியில் நடந்த பல தாக்குதல்களில் சுபன் அண்ணனின் பங்கும் நிறைய உண்டு. 1986 இன் நடுப் பகுதியில் அடம்பனில் நடந்த சண்டை ஒன்றில் காமடைந்து சிகிச்சைக்காகத் தமிழ்நாடு சென்ற சுபன் அண்ணன், காயம்மாறி தமிழீழம் திரும்பிவந்து தலைவரின் பாதுகாப்பு அணியில் ஒருவராக இருந்தார். 02.04.1987 அன்று, காங்கேசன்துறை ‘காபர்வியூ விடுதி’ இராணுவ மினி முகாம் மீதான தாக்குதலின்போது மீண்டும் ஒரு தடவை அவர் காயமடைந்தார். 1987 இன் பிற்பகுதி அமைதி என்று சொல்லிக்கொண்டு கபட நோக்கோடு நுழைந்த இந்திய ஆக்கிரமிப்புப் படை, தனது சுய உருவைக் காட்டியபோது வெடித்தது புலிகள் – இந்தியப் போர். ‘ஒப்பறேசன் பவான்’ எனப் பெயரிட்டு இந்தியப்படை யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும்வரை நடந்த சண்டைகளில் பங்கேற்ற சுபன் அண்ணன், பின்னர் மணலாற்றுக் காட்டில் தலைவரோடு நின்றார். மணலாறு; இந்திப்படைக்கு விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் மிகமுக்கிமானவைகளில் ஒன்றாகிவிட்ட தமிழீழத்தின் இதயபூமி. முப்பாதாயிரத்துக்கும் அதிகமான துருப்புக்கள், கனரக ஆயுதங்கள், ஆட்லறித் பீரங்கிகள், அதிவேக குண்டுவீச்சு விமானங்கள் உலகின் நான்காவது பெரிய வல்லரசின் தரை, வான்படைகளின் ஒருங்குதிரட்டிய பலம். ‘செக்மேற் – 01, செக்மேற் – 02, செக்மேற் – 03’ எனப் பெயர்களிட்டு தலைவரைக் கொல்ல நடாத்தப்பட்ட மூர்க்கத்தனமான படையெடுப்புகளைத் தனித்துநின்று முறியடித்தனர் புலிகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமரில் பங்கேற்ற சில நூறு புலிவீரர்களுள் ஒருவனாக நின்று, தாக்குதலணி ஒன்றுக்குத் தலைமைதாங்கினார் சுபன் அண்ணன் சிங்களப் படையுடான முதலாது போரில் புலிகள் நடாத்திய கடைசித்தாக்குதல் மணலாற்றிலேயே நடந்தது. 15.04.1989 அன்று நடந்த அந்தப் பதுங்கித் தாக்குதலில் சுபன் அண்ணன் முதன்மைப் பங்கு வகித்தார். 21 படையினர் கொல்வப்பட்டதுடன் அதே தொகையில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதன்பின்தான் 1989இன் நடுப்பகுதியில் சுபன் அண்ணன் மன்னார் மாவட்டத் தளபதியாக தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். “இன்னொரு விக்ரரின் காலம்” என்று மன்னார் மக்கள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். சிங்களத் படை தொடுத்த இரண்டாவத போர்க் காலம்; மன்னார் மாவட்டத்தில் சிங்களப்படை நிலைகொண்டிருந்த இடங்கள் எங்கும் பலமான காவல் அரண்களை நிறுவினார் சுபன் அண்ணன். தமிழீழத்திலிருந்த சிங்களப்படைகளன் முகாம்களில் பழமையானவற்றில் ஒன்றாகவும், பாரியவற்றில் ஒன்றாகவும் இருந்த தள்ளாடி முகாமைச் சுற்றி வயுகம் அமைத்தார் சுபன் அண்ணன். நான்க பக்கமும் பெருவெளிகளைக்கொண்டு மையத்தில் அமைந்த தள்ளாடிமுகாமின் சூழல் ஒரு சண்டைக்கேற்றதாக இல்லாமலிருந்த போதும், வெளியேறும் படையினரை வழிமறித்துத் தாக்குவதற்குச் சாதகமான நிலைகளை சுபன் அண்ணன் தீர்மானித்தார். தள்ளாடியிலிருந்த மாந்தை நோக்கி நகரமுனைந்த இராணுவத்தை பலதடவைகள் எங்களது வீரர்கள் திருப்பி அனுப்பிவைத்தனர். 1990 இன் இறுதிக்காலம். அனுராதபுரத்திலிருந்த பெரும் எடுப்பிலான ஒரு படை நகர்வை மனன்னார் நோக்கி ஆரம்பித்தது, சிங்கள் அரசு. குறைந்தது இரண்டாயிரம் துருப்புக்கள். டாங்கிகள், கவச வண்டிகள் என 46 இராணுவ வாகனங்கள், பீரங்கிகள் உட்பட கனரக ஆயுத தளபாடங்கள். லெப். கேணல் வேணு அண்ணன் தலைமையில் விலாச்சியில் வைத்து எதிர்கொண்டது புலிகளின் சேனை. அனுராதபுர மாவட்டத்தின் எல்லையிலுள்ளது அக்கிராமம். சுபன் அண்ணன் அந்தச் சண்டையை வழிநடாத்தினார். பெரும் உயிரிழப்பையும், தளபாட இழப்பையும் சந்தித்து மட்டுமன்றி, அந்த இராணுவ அணி தள்ளாடி முகாமை வந்தடைய ஒரு மாத காலம் எடுத்தது. மன்னார் மக்களின் மனங்களில் நிலைத்துவிட்ட ஒரு தளபதி சுபன் அண்ணன். மன்னாரின் வளர்ச்சியில் அவர் மிகுந்த அக்கறை காட்டினார். மக்களின் குறைகளைத் தீர்க்க அவர்களுக்கான – அவர்களின் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப் பாடுபட்டார்; விதைக்காத நெல் வயல்களை விதைப்பிக்க முயற்சி செய்தார். தமிழீழத்தில் ஒரு மாவட்டத்தில், அங்கு வீரச்சாவடைந்த எல்லா மாவீரர்களின் நிழற்படங்களைக் கொண்ட ஒரு வீடு முதன் முதலில் அமைக்கப்பட்டது என்றால் அது மன்னாரில்தான். மாவீர்ர துயிலும் இல்லத்தை மிகவும் சிறப்பாக்க சுபன் அண்ணன் அதிக கவனமெடுத்துச் செயற்பட்டார். அடிக்கடி சென்று பார்த்து வேலைகளைச் சொல்லுவார். கடைசியாகக்கூட பல வேலைகளைச் சொல்லிவிட்டுத்தான் போனார். ஆனால், பார்ப்பதற்கு அவர் திரும்பி வரவில்லை…. எந்த ஒரு சின்ன விடயமாக இருந்தாலும் அதனை அழகாக செய்யவேணும் என்று சொல்லுவார்; தானே செய்தும் காட்டுவார். அது தோரணம் கட்டுவதிலிருந்து எல்லா வேலைகளிலும்தான், போராளிகள் ஏதும் தவறிழைக்க நேர்ந்ததால் உடனடியாக அவ்களைக் கண்டிப்பார். பின்னர், அரவனைத்து வைத்துக் கதைப்பார். தலைவரோடு தானிருந்த காலத்தில் தலைவரிடமிருந்து கற்றவை, அறிந்தவை, தலைவருடைய உணர்வுகள் என்பவற்றை எப்போதும் போராளிகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களுக்க நல்வழி காட்டுவார். 1991 இன் பிறப்பு இப்போது சுபன் அண்ணன் தனது முகாமை சிலாவத்துறைப் பகுதிக்கு மாற்றிவிட்டு, அங்கேயே எந்நேரமும் தங்கியிருந்தார். சிலாவத்துறை சிங்களப் ப்டைமுகாம் மீதான தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. அந்த வேலைகளை நேரடியாகக் கவனித்துக் கொண்டிருந்தார் சுபன் அண்ணன். அக்காலத்திலேயே, கொண்டச்சி இராணுவ முகாமிலிருந்து சிலாவத்துறை இராணுவ முகாமுக்கு ரோந்து செல்லும் ஒரு இராணுவ அணியை வழிமறித்துத் தாக்க , சுபன் அண்ணன் திட்டமிட்டார். 17.02.1991 அன்று காலை, தற்போதைய மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதி ஜான் அண்ணன் மற்றும் லக்ஸ்மன் அண்ணன் ஆகியோரின் தலைமையில், அந்த இராணுவ அணிமீது புலிகள் பாய்ந்தார்கள். சுபன் அண்ணன் வகுத்த தாக்குதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 60 பேர் கொண்ட இந்த ரோந்து அணியில் ஜந்தே நிமிடங்களில் 54 சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன், 55 ஆயுதங்களும் கைப்பற்றபட்டன. இந்தச் சண்டையின்போது எங்களது ஜந்து போராளிகளை நாங்கள் விலையாகக் கொடுத்தோம். இத்தாக்குதல் மூலம் போராட்ட வரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார் சுபன் அண்ணன். தமிழீழத்தில் முதன்முதலில் நடத்த மிகப்பெரிய பதுங்கித் தாக்குதல் அதுவாகும். சிங்கள அரசின் பாதுகாப்பு வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாகிய இத்தாக்குதல், தங்களது பாதுகாப்பு நவடிக்கைகளை மறபரீசிலனை செய்யவேண்டுமென அவர்களை வாய்விட்டுச் சொல்லவைக்கும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. “இன்னொரு விக்கரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக் கொண்டார்கள். இதன்பின் சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்கதலுக்கான ஏற்பாடுகளில் முழுமையாக இறங்கிய சுபன் அண்ணன், அந்த வேளைகளில் இரவுபகலாக ஈடுபட்டார். எமது இயக்கத்தின் யாழ். மாவட்டப்பிரிவும், மன்னார் மாவட்டப்பிரிவும் கூட்டு நடவடிக்கையாக மேற்கொண்ட அத்தாக்குதல், 19.03.1991 அன்று ஆரம்பித்து நான்கு நாட்களாக நடந்தது. அப்போதைய யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த தமிழ்ச்செல்வன் அண்ணன், தற்போதைய மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி ஜான் அண்ணன் ஆகியோர் நேரடியாகத் தலைமை தாங்கி நடாத்திய இத்தாக்குலின் ஒட்டுமொத்தத் தளபதியாக சுபன் அண்ணன் இருந்தார். இந்தத் தாக்குதலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு. சிங்கள் அரசின் – வான், கடல், தரை – முப்படைகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் புலிகள் சமரிட்ட முதற்களம் இதுவாகும். 40 சிங்கள்ப் படையினர் கொல்லப்பட்டு, பெருமளவில் ஆயுதங்களும் கைப்பற்றபட்ட இத்தாக்கதலின்போது, எங்களது 82 தோழர்களை நாங்கள் இழந்தோம். சிலாவத்துறையில் எமக்கு ஏற்பட்ட இழப்பு சுபன் அண்ணனைய வெகுவாக பாதித்தது. இந்த துயரை ஆற்றவேண்டுமானால், சிங்களபடைமீது மூர்க்கத்தனமான ஒரு தாக்குதல் நடாத்த வேண்டும் என வேட்கைகொண்டார். சிலாவத்துறையில் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து விட்டார்கள் என, இறுமாந்து மார்தட்டிக் கொண்டிருந்தது. சிங்கள அரசு. சிலாவத்துறைத் தாக்குதல் முடிந்து சரியாக எட்டாவது நாள். அது 30.30.1991 இன் பகல்பொழுது. அதே சிலாவத்துறையிலிருந்து முருங்கன் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த இராணுவ அணியை வேப்பங்குளத்தில் வைத்து எதிர்கொண்டனர் புலிகள். களத்தில் நேரடியாக இறங்கியிருந்தார் சுபன் அண்ணன். சிங்கள இராணுவத்தின் தலைசிறந்த போர் அணியில் ஒன்றென புகழ்பெற்ற ‘கஜபாகு றெஜிமென்ற்’ அங்கு குதறப்பட்டது. 40 இற்கும் அதிகமான படையினர் பிணங்களாய்ச் சுருண்டார்கள். அதிநவீனரக ஆயுதங்கள் உட்பட பல இராணவ தளபாடங்களைப் புலிகள் கைப்பற்றினர். கொல்லப்பட்வர்களில் 24 படையினரின் உடல்களையும் புலிகள் எடுத்துவந்தனர். சிலாவத்துறை இழப்பிற்கு ஈடுசெய்து , சிங்களப்படைக்கு பதிலடிகொடுத்து ஆயுதங்களையும், உடல்களையும் எடுத்து கொண்டுதான் தனது முகாமிற்குத் திரும்பினார் சுபன் அண்ணன். இந்தத் தாக்குதிலின் மூலமும் போராட்டவரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார் சுபன் அண்ணன். சிங்கள படையிடம் முதற் தடவையாக, ஒரே தாக்கதலில் 6 மினி மினி எல்.எம்.ஜிகள் கைப்பற்றப்பட்டது என்பதுவே அதுவாகும. “இன்னொரு விக்ரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக்கொண்டனர். அதற்கடுத்த மாதத்தில் வங்காலையிலிருந்து நானாட்டான் முகாமுக்கப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவ வண்டிகள் அடிக்கடி நெருங்கத்தொடங்கின. சுபன் அண்ணனின் திட்டப்படி வீதி எங்கும் விதைக்கபப்ட்ட கன்னிவெடிகள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்தன. புதிதாகத் தோன்றிய இந்தச் சிக்கலைச் சமாளிக்க, கால் நடையாக பொருட்களை எடுத்துவருவதைத் தவிர சிங்கள்ப் படைக்கு வேறுவழி இருக்கவில்லை. சிலாவத்துறை இழப்பின் சோகத்திலிருந்து முழுமையாக விடுபட்டிருக்காத சுபன் அண்ணன். அந்த இராணுவ அணியைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டார். வங்காலையிலிருந்து பொருட்களுடன் வயல்வெளிகள் ஊடாக நடந்து நானாட்டான் செல்லும் படையினரைத் தாக்க வஞ்சியன் குளத்தைத் தேர்ந்தெடுத்தார் அவர். இந்தத் தாக்குதலுக்குச் செல்வதற்குமுன் போராளிகளோடு கதைக்கும்போத சுபன் அண்ணன் சொன்னார். “ஓமர்முக்தார் படத்தில், பெரு மணல் வெளியில் போராடுகின்ற போது தாங்கள் திரும்பி ஓடிவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கள் கால்களையே கட்டிபோட்டுவிடுகின்றார்கள். ஆனால் நாம் அப்படிக் கட்டிபோடுவதில்லை. திரும்பி ஓடுவதற்காக அல்ல; எதிரியைத் துரத்திப் பிடிக்கவேண்டும்; எனபதற்காக” பெருவெளியான அந் வயல் நிலப்பரப்பில் இயன்றளவுக்கு உருமறைப்புச் செய்து, எங்களது தாக்குதலிணி நிலை எடுத்தது. வழமைபோல பொருட்கள் எடுத்துக்ககொண்டு ரோந்த வந்த இராணுவ அணி எங்களது தாக்குதல் வலையத்துக்குள் முழுமையாக வந்ததன்பின், புலிகளின் துப்பாக்கிகள் ஒரே சமயத்தில் பேசத்துவங்கின. அது 29.04.1991 இன் பகல்வேளை சில நிமிடப்பொழுது கடந்து செல்ல, 60 பேர் கொண்ட அந்தப் படை அணியில், என்ன நடந்தது என்பதைத் திரும்பிப் போய்ச் சொல்வதற்குககூட ஒருவரும் மிஞ்சவில்லை. இந்தத் தாக்குதலின் மூலமும் போராட்ட வரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார் சுபன் அண்ணன். தமிழீழத்தில் மிகப்பெரிய அளவில் ரோந்து உலாவந்த சிங்களப் படையணி ஒன்றின்மீது தாக்குதல் நடாத்தி அப்படையணி முற்றாக அழிக்கப்பட்ட நிகழ்ச்சி, வஞ்சியன்குளத் தாக்குதல் ஆகும். “இன்னொரு விக்ரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக்கொண்டார்கள். இப்போது 1991 இனட மையப்பகுதி. ஆரம்பித்தது ஆனையிறவுப் பெரும் சமர். உலகத்தினை தமிழீழத்தை வியந்து பார்க்க வைத்த அந்தச் சமரில், புலிகளின் படைகளை வழிநடாத்திய முக்கிய தளபதிகளில் ஒருவராகக் களத்தில் நின்றார் சுபன் அண்ணன். அங்கு சண்டையில் ஈடுபட்டிருந்த மன்னார் மாவட்ட அணிக்கு அவர் தலைமை வகித்தார். ஆனையிறவுச் சமரின் பின் மன்னார் திரும்பியிருந்தபோது 22.10.1991 அன்று பூநகரிப் பகுதியில் இராணுவம் தரையிறக்கப்பட்டு ஒரு படை நகர்வு செய்யதன்மூலம் சிங்களப்படை அப்பகுதியைக் கைப்பற்றியது. எதிர்த்துச் சண்டையிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழ்நிலையற்ற ஒரு இடமாக அது இருந்ததால், அங்கு சண்டையை நாங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டி நேர்ந்தது. சுபன் அண்ணனைப் பொறுத்தவரை, சிங்களப்படையின் அந்த நடவடிக்கை அவருக்குப் பெரும் சவாலான ஒன்றாகவே அமைந்தது. எப்படியாவது இந்த இராணுவ வேலியை ஊடறுத்துத் தாக்கவேண்டுமென, அவர் அன்றிலிருந்தே செயற்படத்தொடங்கினார். காலம் மெல்ல மெல்ல அசைந்து உருண்டு கொண்டிருந்தது. இந்த இடைக்காலத்தில், சிறிய அளவுகளிலான வெற்றிகரத் தாக்குதல்கள் மன்னார் மாவட்டமெங்கும் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தன. 1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பிற்பட்ட நாட்கள்; யாழ். குடாநாட்டை முழுமையாக முற்றுகையிட்டு தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த சிங்களப் படையெடுப்பொன்றை நடாத்தத் திட்டமிட்டது. அப்போது வடபிராந்திய தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ தலைமையில் இந்தப் படையெடுப்பக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. இந்தப் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடிக்கும் ஏறபாடுகளிலும் புலிகள் இயக்கம் முழுமூச்சாக ஈடுபட்டது. இதன் ஓர் அங்கமாக மன்னார் மாவட்த்திலிருந்து ஒரு சண்டை அணியுடன் யாழ்ப்பாணம் சென்ற சுபன் அண்ணன், அராலிப் பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். எந்த முனையிலும், எந்த வேளையிலும், எந்த வகையிலும் எதிரியை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் அங்கு தாக்குதலணிகளை நிறுத்திக் காவலிருந்தார் அவர். ஆனால், அராலித்துறையில் எமது வீரர்களால் புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் இராணுவ வண்டி ஒன்று சிக்கியபோது, யாழ். குடாநாடு மீதான படையெடுப்புக்குத் தலைமைதாங்கிய சிங்களப் படைத்துறையின் வடபிராந்திய ஆணைப்பீடமே அதில் அழிந்துபோனது. இதன் பின்னர், அந்த யாழ்ப்பாணச் சமரை சிங்கள அரசு கைவிட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து மன்னார் திரும்பிய சுபன் அண்ணன் பூநகரியில் அமைக்கப்பட்டிருந்த சிங்களப் படைத்தளத்தின் ஒரு பகுதியைத் தாக்கி அழிக்க முடிவுசெய்து, அதற்கான ஏற்பாடுகளில் முழுமையாக ஈடுபடத்தொடங்கினார். மாவட்டத்தின் நிர்வாக வேலைகள் அனைத்தையும் தனது மற்றைய தளபதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, பூநகரிப் பகுதிக்கு வந்து அங்கேயே தங்கியிருந்து, தாக்குதல் ஒழுங்குகளைப் பார்க்கத் துவங்கினார். அப்போதெல்லாம் சொல்லுவார்; “நான் செத்தாலும் பரவாயில்லை இவனுக்கு நல்ல அடி குடுக்கவேணும்” தோழர்களோடு கதைத்துக்கொண்டிருக்கும்போது பகிடியாகச் சொல்லுவார். “சவப்பெட்டி அடிக்கிற வேலை நடந்துகொண்டிருக்கிறதா? இந்தமுறை எனக்கும் சேர்த்து ஒரு பெட்டியடிங்கோ. அளவு தேவையெண்டால் இப்பவே எடுத்துக்கொண்டு போங்கோ…” “இந்தமுறை இவன்களை நான் ரெண்டில ஒண்டு பார்க்கிற தெண்டுதான் இருக்கிறன்” என்று அடிக்கடி சொல்லுவார். அந்த நாள் வந்தது. 25.09.1992 பூநகரி சிங்களப் படைத்தளத்தின் பள்ளிக்குடாப் பகுதி மினி முகாமையையும், அதனோடு சேர்ந்திருக்கும் 2 1/2 மைல் நீள இராணுவ வேலியின் காவலரண்களையும் அழித்துவிடுவதுதான் தாக்குதல் திட்டம். எமது இயக்கத்தின் படைத்துறைத் துணைத் தளபதி பால்ராஜ் அண்ணன் தலைமையில் நடந்த இத்தாக்குதலில், அவருக்கு உறுதுணையாக நின்று சண்டையை வழி நடாத்தினார் சுபன் அண்ணன். புலிகளின் வீரமோசமான பாய்ச்சல். சுபன் அண்ணனின் கையிலிருந்து முழங்கிய எம்.16 ரைபிள் பொழிந்த ரவைகளை கூட எதிரிகளைத் துளைத்துச் சென்றன. நின்று பார்க்கமுடியாமல், தளத்தின் மையப்பகுதியிலிருந்த பிரதான முகாமை நோக்கி ஓட்டமெடுத்தான் எதிரி. 2 1/2 மைல் தூரத்திற்கு இருந்த 60 இற்கும் அதிகமான காவலரண்களுடன், மினிமுகாம் ஒன்றும் அழிக்கப்பட்டது. 25 இற்கும் அதிகமான படையினர் கொல்லபப்பட்டதுடன் அதைவிட அதிகதொகையில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. வீழ்த்தப்பட்ட எதிரிகளின் நிலைக்குள் நுழைந்துகொண்டிருந்தனர் புலிகள். எங்கோ காயமடைந்த நிலையில் கிடந்த எதிரிப் படையாளன் ஒருவன் துப்பாக்கியைத் தூக்கி எங்கள் தளபதியை இலக்க வைத்து… ஓ…… எங்கள் சுபன் அண்ணன…. எங்களை இடியெனத் தாக்கிய அந்த நேரத்தை வார்த்தைகளால் சித்திரிக்கமுடியாது. “மன்னார்… மன்னார்…” என்று மன்னாருக்கு ஒளி கொடுக்க வென்றே, தன்னையே உருக்கி ஓய்வில்லாமல் எரிந்துகொண்டிருந்த அந்த மெழுகுவர்த்தி அணைந்துபோனதா…? அம்மாவாக…. அப்பாவாக…. ஆசானாக…. நண்பனாக…. தளபதியாக எல்லாமாகவும் நின்று, எங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லித்தந்து கொண்டிருந்தாரே.. சுபன் அண்ணன், இனி வரமாட்டாரா? அந்நதத் துயரத்தை எங்களால் தாங்கமுடியவில்லை. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த மன்னார் மாவட்ட மக்களை முன்னேற்றகரமான வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்து கொண்டு திரிந்தாரே…. இனி அவரை நாங்கள் காணமுடியாதா…? அந்த மக்கள் தாங்கொணத்த துயரத்தில் ஆழ்ந்து போனார்கள். “இன்னொரு விக்ரரரின் காலம் “ என்று மகிழ்ந்து கொண்டிருந்த அவர்கள் “மீண்டும் ஒரு விக்ரரை இழந்துவிட்டோமே” என்று துயரத்தில் அமிழ்ந்து போனார்கள். சாகும்போது கூட அந்தச் சாதனையாளன், போராட்ட வரலாற்றில் ஒரு முத்திரை பததித்தான். தமிழீழத்தின் சிங்கள்ப் படையின் மிகப்பெரிய பிரதேசம் தாக்கப்பட்டு – மிக நீண்ட தூர இராணுவ வேலி ஒன்று அழிக்கப்பட்ட முதல் சம்பவம், பூநகரியில்தான் நடந்தது! ஓ… எங்கள் சுபன் அண்ணன்…! தூங்குங்கள். உங்களது கைகளில் வளர்ந்தவர்கள் நாங்கள்…. உங்களது இலட்சியத்தை அடையும்வரை ஓயமாட்டோம்! நினைவுப்பகிர்வு: எஸ்.பிரதீபன். மூலம்: லெப். கேணல் சுபன் நினைவாக நூலிலிருந்து… https://thesakkatru.com/commander-lieutenant-colonel-suban/
  3. குழலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன் மயிலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் மயிர்க்காலில் ...
  4. கோவிந்த கரி நாம சங்கீர்த்தனம்
  5. ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும் யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
  6. பொன்னழகு திருமார்பில் பூமாலை திருப்புகழோடு ஓம் என்னும் இசைமாலை கண்குளிர தாங்கிநின்றாய் வடிவேலை உன்னை கைகூப்பித் தொழுவதுதான் என் வேலை தேவானை வள்ளியுடன் திருக்காட்சி எழில்திருச்செந்தூர் கோவிலில் உன் அருளாட்சி நாவார உனைப்பாட எனக்காசை இசை நலம்கூட்டும் உன்கோவில் மணியோசை கற்பூரம் உன்வீட்டில் சுடராகும் மனம் கமழ்கின்ற சந்தனம் உன் பரிசாகும் நற்பேறு எல்லாமும் தருவோனே எங்கள் நாயகனே கதிர்வேலா முருகோனே குமரா உன்திருநீறு மருந்தல்லவோ உன் குங்குமமே மங்களமாம் விருந்தல்லவோ அமையும் ஓம் மந்திரமே உனதல்லவோ நின் அருளொன்றே இவ்வுலகில் பெரிதல்லவோ
  7. தாயின் கருவில் என்னை அன்பு தேவன் அறிந்திருந்தார் வாழ்வில் உறவு தந்து எந்த நாளும் வளர்த்து வந்தார் என்னென்ன ஆனந்தம் என் நெஞ்சில் கண்டேனே உன்..னோடு நா..ன் கண்ட சொந்தங்கள் எந்நாளும் வா..ழ்க அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது வந்து போ..கும் இந்த நாட்கள் இனிதா.னவை கா..ணுதே என் மனம் வராது வ..ந்த வாழ்வினில் நான் காணும் வாலிபம் வாழ்வாங்கு வா..ழ நீயுமே சொன்ன யாவும் ஞாபகம்(2) ஒரு வழியில் ஆசைகள் மனிதத் துயர் ஓ..சைகள்(2) இன்பங்களால் என் உலகம் எழுவதை நான் காணவேண்டும். நெஞ்சோடு செய்..த வேள்வியில் நான் காணும் கேள்விகள்(2) அஞ்சாத அன்று நீ..யுமே சென்ற பாதையின் தெளிவுகள்(2) அறநெறியில் ஆட்சியும், அன்பு வழி வா..ழ்க்கையும்(2) ஓ தேவனே! என்னுலகினில் எழுவதை நா..ன் காணவேண்டும்
  8. படைத்தவனை நினைத்து நினைத்து அழுகின்றேன்
  9. ஹாத்தமுன் நபி தோட்டத்திலே... ஹதீஜா மலர்க் கொடியினிலே || ஆழ்வை M.A.உஸ்மான் | ISLAMIC SONGS.
  10. சங்கரன் மகனே - பழமுதிர்ச்சோலை | அறுபடை கந்த சஷ்டி கவசம்
  11. மாதவிவனேஸ்வரர் அருகினில்
  12. இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலே இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே இந்த அன்பென்னும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே இந்த சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள் இனிது வரைந்த கவிதையே 1. வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே 2. கற்றவையோ பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை சத்தியமும் சந்ததியும் சாட்சியமும் தேவையில்லை கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே
  13. இதயங்கள் மலரட்டுமே இங்கு இன்னிசை முழங்கட்டுமே நம்மில் இறையருள் வளரட்டுமே அது இகமெல்லாம் பரவட்டுமே 1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம் மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் வரையில்லா வரங்களை நமக்களித்தார் - தம் கரையில்லா கருணையால் நமை மீட்டார் 2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் நீதியும் உண்மையும் அதன் சுடராம் - அவை தீதில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்
  14. கீழடி அகழாய்வில் அகரத்தில் 20 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6ஆம் கட்ட கீழடி அகழாய்வில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள அகரம் என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை 20 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி அகழாய்வில் கீழடியின் அருகிலுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள், கட்டிட அமைப்புகள், சுவர்கள், வடிகால் வசதி, மனிதர்களின் எலும்புகள், விலங்கு வகை எலும்புகள் மற்றும் குறைந்த அடுக்குக் கொண்ட உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் இந்த அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்கு கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது. இந்த உறைகிணறு கிடைத்த இடத்தில் தோண்டப்பட்டு வரும் குழியில் ஆழத்தின் அளவு அதிகரிக்கப்படும் போது, உறைகிணறின் அடுக்குகளும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். http://www.ilakku.org/கீழடி-அகழாய்வில்-அகரத்தி/
  15. லெப். கேணல் பிறையாளன் அவன் ஒரு புதுமையான மனிதன் ‘லெப். கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பிறையாளன் / சுட்டா 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது? போராளிகளின் முகங்கள் இருண்டு கிடந்தன. சுட்டா அப்பா வீரச்சாவாம். அந்த வார்த்தைகள் உள்நுழையும் முன்னரே அடுத்து எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்பாவைப் பிரிந்த பிள்ளைகளைப்போல எல்லோரும் தவித்துப்போனோம். ஏனென்றால் எங்களுக் கெல்லாம் அப்பாவாகவே அவன் இருந்தான். அந்த நினைவுகளைத்தான் இந்தக் குறிப்பு சொல்ல முனைகின்றது. சுட்டாவின் தொடக்ககால வாழ்க்கையே துயரமானது. திருகோணமலை சாம்பல்தீவிலே அவனது குடும்பம் வாழ்ந்து வந்தது. அது சிங்களம் எங்கள் ஊர்களை வல்வளைத்த காலம். சிறிலங்கா படைகளால் தமிழ் உயிர்கள் காரணமில்லாமல் சித்திரவதை செய்து பறிக்கப்பட்ட காலம். இந்த கொடூரத்திற்குள் சுட்டாவின் மூத்த சகோதரனும் பலியாக நேர்ந்தது. சுட்டாவிற்கு மூன்று பெண் சகோதரிகளும் ஒரு தம்பியும் இருந்தனர். தந்தையின் உழைப்பில் இயங்கியது குடும்பம். கொஞ்ச நாளில் தந்தையும் ஊர்தி விபத்தொன்றில் காயமடைந்து வேலைசெய்ய முடியாமற்போக குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு சுட்டாவிற்கு. சின்ன வயதிலேயே தச்சுத்தொழில் பழகி குடும்பத்தை பராமரித்தான் சுட்டா. இந்த நாட்களில்தான் சுட்டா திருகோணமலையிலிருந்து வேலையின் காரணமாக யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தான். அவனுக்கு தையல் வேலையிலும் நாட்டமிருந்தது. இதனால் இம்ரான் பாண்டியன் படையணியின் தையல் பகுதியில் அவனுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைக்க அதை ஏற்றுக்கொண்டு ஒரு தையலாளனாகச் செயற்பட்டான். இந்த வேலையின் போது சுட்டாவிற்கு பல போராளிகளின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இந்தத் தேசவிடுதலைப் போராட்டத்தில் தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு 1992இல் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டான் சுட்டா. சரத்பாபு-7 என்ற பயிற்சி அணியில் பயிற்சி பெற்ற சுட்டா ஒரு விடுதலைப்போராளி ஆகியபோது தையல் பணியில் அவனிற்கிருந்த திறமையின் நிமிர்த்தம் இம்ரான் பாண்டியன் தையல்கூடப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். இயக்கத்தின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சுட்டா, பயிற்சிபெற்ற பின்பும் ஏனைய போராளிகளைப்போல் சண்டைக்களம் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு படையணியில் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் சண்டைக் களங்களுக்கு புறப்பட்டான். 1993இல் தவளை நடவடிக்கை, 1995இல் புலிப்பாய்ச்சல், 1996ல் ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை, அளம்பிலில் தரையிறங்கிய படையினருக்கெதிரான நடவடிக்கை, சத்ஜெய நடவடிக்கைக்கெதிரான தாக்குதல் என படிப்படியாக பல களங்களையும் கண்டு சண்டைகளிலும் ஒரு தேர்ச்சியாளனாக சுட்டா மாறியிருந்தான். இதற்குச் சாட்சிகளாக பல விழுப்புண்களை தன் உடலில் தாங்கியிருந்தான். அதன் தளும்புகள் அவன் உடலெங் கும் இருந்தன. இந்த காலகட்டத்தில்தான் சிங்களதேசம் எங்கள் பகுதிகள் மீது பாரிய படை நகர்வுக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தப் படைநகர்விற்கு கவசப் படைக்கலங்களையே பெரிதும் நம்பி திட்டம் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சம காலத்தில் சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகரமான திட்டங்களை முறியடிக்க எமது தலைவரும் போராளிகளைத் தயார்ப்படுத்தினார். சிங்களம் பெரிதும் நம்பிய கவசங்களை தகர்த்தழிக்கவென புதிய படையணி ஒன்றை உருவாக்கி அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பயிற்சிகள் மிகக் கடுமையானவையாக இருந்தன. ஆயுதங்களுடன் நீண்டதூர ஓட்டம், தடை தாண்டும் பயிற்சிகள், மதியவேளையில் கொழுத்தும் வெயிலில் உடற்பயிற்சி என எல்லா கடின பயிற்சிகளையும் சுட்டா மேற்கொண்டான். ஏற்கனவே சண்டைக் களங்களில் விழும்புண் தாங்கிய உடல். இதனால் பயிற்சிகளைச் செய்ய சிரமமாக இருந்த போதும் இனிவரும் சமர்களில் தானும் ஆயுதமேந்தி சமர்புரியவேண்டும் என்ற உந்துதல் அவன் இந்தப் பயிற்சிகளில் சித்தியடையக் காரணமாய் இருந்தது. எல்லாப் பயிற்சிகளும் முடிந்து லெப். கேணல் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணி என்ற பெயரில் எதிரியின் கவசப்படையை எதிர் கொள்ளும் அணி தயாராகவிருந்தது. வவுனியா, ஓமந்தைப் பகுதிகளில் அமைந்திருந்த எங்களின் தடுப்பரண் பகுதிகளுக்குச் சென்று அணிகள் நிலை கொண்டன. இவற்றில் ஒரு அணிக்குப் பொறுப்பாக சுட்டாவும் களமிறங்கினான். எதிரியின் வருகைக்காகக் காத்திருந்ததோடு எதிரியின் முன்னரங்க நிலைகள் அவதானிக்கப்பட்டு எதிரியின் காவலரண் ஒன்றை R.P.G எறிகணை மூலம் தாக்கி அழிப்பதென முடிவு செய்யப்பட்டது. 08.03.1997 அன்றைய நாளின் பகற் பொழுதில், சுட்டாவின் தலைமையிலான அணி வேவு வீரரின் வழிகாட்டலுடன் எதிரியின் காவலரணை அண்மித்து நிலைகொள்கிறது. R.P.G எறிகணைகள் அனலைக் கக்கியபடி எதிரியின் காப்பரணை நோக்கிச்சென்று மோதி வெடிக்கிறது. அடுத்தடுத்த இரு எறிகணைகள் வெடித்துச்சிதறி அடங்க, அந்தக் காப்பரண் முற்றாக அழிந்துபோய்க் கிடந்தது. போராளிகள் அவ்விடத்திலிருந்து பின்வாங்கினர். ஏழு படையினர் பலியாகியும் சில படையினர் காயமடைந்ததுமான இத்தாக்குதலில் எமது தரப்பில் இழப்பு எதுவுமிருக்கவில்லை . புதிய அணியின் உருவாக்கத்தின் முதலாவது தாக்குதல் சுட்டாவின் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறியது. 13.05.1997 அன்று எதிர்பார்த்தபடி “ஜெயசிக்குறு” என்ற பெயரில் பாரிய படைநகர்வை தொடங்கியது சிங்கள படை. பெரும் மோதல் வெடித்தது. அந்த ஊரெங்கும் போர்ச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிலங்கா படைகள் முன்னேற முன்னேற போராளிகள் புதிய புதிய வியூகங்களில் எதிரியை எதிர்கொண்டு சண்டையிட்டனர். முன்னேறிவந்த கவச ஊர்திகள் சிறப்பு அணியால் தாக்கி அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் இருந்தன. சண்டை நீண்ட நாட்களாகத் தொடர்ந்தது. ஓமந்தை, தாண்டிக்குளம், இறம்பைக்குளம், பெரியமடு, புளியங்குளம் என சமர்க்களம் விரிந்துகொண்டு சென்றது. இந்த நீண்ட சமர்களுக்குள் போராளிகளுக்கு ஓய்வு கிடைப்பதென்பது மிகக் குறைவாகவே இருந்தது. கிடைக்கும் ஓய்விலும் எதைச் செய்வது? சுட்டா வைப் பொறுத்தவரை போராளிகள் எப்போதும் மகழ்ச்சியாகவே இருக்கவேண்டும். அவர்களின் மகிழ்ச்சிக்காக எதைச் செய்யவும் அவன் தயாராகவே இருப்பான். கிடைக்கும் நேரங்களில் தனது அணியி லுள்ள போராளிகளுக்குக் கதை சொல்லுவான். பழைய சண்டைகளை எடுத்துச்சொல்லி போராளிகளுக்கு அறிவூட்டுவான். போராளிகளுக்கு கிடைப்பவற்றைக் கொண்டு ஏதாவது உண்பதற்கு செய்து கொடுக்க முடியுமானால் அதையும் தானே நின்று செய்துகொடுப்பான். அவன் எதைக் கதைத்தாலும் அதில் நகைச்சுவை இருக்கும், நல்ல அறிவுரையிருக்கும். அதுமட்டுமல்ல போராளிகளுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க வேண்டியிருந்தால் யாருடனாவது கதைத்து அவற்றை பெற்றுக் கொடுப்பான். சுட்டாவுடன் இருந்தால் தாங்கள் சண்டைக்களத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு கொஞ்சநேரம் மறந்துபோகும். அவன் வார்த்தைகள் உடலுக்கும் மனதுக்கும் உற்சாக மூட்டுபவையாக இருக்கும். இதனால் சுட்டா இருக் கும் காப்பரண் தேடி போராளிகள் ஒன்றுகூடுவார்கள். அவன் முகாமில் நிற்கும் நாட்களில்கூட அப்படித்தான். சுட்டாவின் விடுதி எப்போதும் கலகலப் பாகவே இருக்கும். பக்கத்து விடுதியில் உள்ள போராளிகள்கூட அவனுடன் இருப்பார்கள். சுட்டாவின் இந்தத் திறமையை யாராலும் மிஞ்சிவிட முடியாது. அது அவனுக்கே உரியது. இனி போராளிகளுக்கு சுவையான உணவு செய்து கொடுப்பதில் சுட்டா முன்னணியில் நிற்பான். இவற்றோடு மற்றப் போராளிகள் எடுக்கும் அத்தனை பயிற்சிக்கும் தானும் செல்வான். இரவு பயிற்சிகள் முடிந்து போராளிகள் படுக்கைக்குப் போவார்கள். சுட்டாவின் விடுதியில் மட்டும் வெளிச்சம் தெரியும். சுட்டாவிற்கு நன்றாக தைக்கத் தெரியும் என்பதால் போராளிகள் சுட்டாவை சூழ்ந்துகொள்வார்கள். அந்த வேளையில் அவர்கள் சுட்டாவை பொறுப்பாளனாகப் பார்ப்பதில்லை. சுட்டாவும் அப்படித்தான். தனக்கேன் இந்த வேலை என ஒதுங்கிக்கொள்வதுமில்லை. முழு மனதோடு ஆசையாக கண் தூங்கத்தூங்க விழித்திருந்து ஆயுதங்களுக்கான ‘கோல்சர்கள்’ தைத்துக் கொடுப்பான். போராளிகளுக்கு இதற்கென தனியிடமிருந்தாலும் சுட்டாவின் தையலில் அவர்களுக்கு விருப்பம். சண்டைக் களத்திலிருந்து சுட்டா முகாம் திரும்பிவிட்டால் அங்கு நிற்கும் பொறுப்பாளரை போராளிகள் கரைச்சல் படுத்துவார்கள். சுட்டா அண்ணை எப்ப வருவார்? சுட்டாண்ண வந்திட்டாராம் என்றால் போராளிகள் மீண்டும் கூடிவிடுவார்கள். சுட்டாவின் இந்த அற்புதமான இயல்பு தான் சமர்க்களத்தில் நின்ற அவனை தொடக்க பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்ப வழிவகுத்தது. அது புதிதாக போராட்டத்தில் தங்களை இணைத்தவர்கள் பயிற்சிபெறும் இடம். அவர்கள் இந்தத் தேசத்தின் தேவையை உணர்ந்து போராளியானாலும் நீண்டகாலம் குடும்பச் சூழலுக்குள் வாழ்ந்ததால் அந்தப் பிரிவும் புதிய வாழ்க்கை முறையும் தொடக்கத்தில் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். இது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நாட்களில் இவர்களை வழிநடத்தும் போராளிகள்தான் இதை சரிவரப் புரிந்து செயற்படவேண்டும். சுட்டா இதற்கு மிகவும் பொருத்தமானவன். அவனிற்கு இதைப்பற்றி சொல்லிக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. அவன் இயல்பே அப்படித்தான். போராளிகளுக்குத் தாய் தந்தையரைப் பிரிந்திருந்த இடைவெளி சுட்டாவினால் இல்லாமல் போனது. சுட்டா போராளிகள் தங்கும் ஒவ்வொரு விடுதியாகச் சென்று போராளிகளுடன் கதைத்து அவர்களின் தேவையைக் கேட்டறிந்து நிறைவு செய்வான். புதிய போராளிகளுக்கு இயக்கம் பற்றிய பழைய வரலாற்றுச் சம்பவங்களை சொல்லிக் கொடுப்பான். எங்காவது ஒரு விடுதியில் கலகலப்புச் சத்தம் கேட்டால் சுட்டா அங்கேதான் நிற்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நாட்களில்தான் சுட்டாவிற்கு திருமணம் நடந்தது. ஆனால் சுட்டா வீட்டில் நிற்பது குறைவு. சுட்டாவிடம் குடும்பம் என்ற அன்பு உணர்வு நிறையவே இருந்தபோதும், அவன் தன் குடும்பமான போராளிகளுடனேயே அதிக நேரத்தை செலவிடுவான். எப்போதும் தனக்குக் கீழ் இருக்கும் போராளிகளுக்காக, இந்தத் தேசத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் அவனிடம் மேலோங்கியிருந்தது. இதனால் சுட்டாவிற்கும் போராளிகளிற்குமான உறவு மிக நெருக்கமானதாக இருந்தது. தொடக்கத்தில் ஒரு பயிற்சி முகாமின் பொறுப்பாளனாக இருந்து செயற்பட்ட சுட்டா பின்னர் தொடக்க படைய பயிற்சி முகாம்கள் அனைத்திற்கும் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். இந்தக்காலம் வன்னியின் சமர்களமெங்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். சுட்டாவிற்கு ஊர்திகூட இருக்கவில்லை . அவன் எதையும் எதிர்பார்க்கவுமில்லை. அப்போது அவனிற்கு கொடுக்கக்கூடியவாறு இயக்கத்திடம் ஒரு பச்சைநிற மதிவண்டியே இருந்தது. அவன் மகிழ்ச்சியாகவே அந்த மதிவண்டியில் வன்னியில் வெவ்வேறு இடங்களில் இருந்த முகாம்களுக் கெல்லாம் சென்றுவருவான். சிலவேளை மதிவண்டி பழுதென்றால் நடையில் கூட போய்விடுவான். எப்போதும் இயல்பாகவே இருக்க விரும்புபவன். இயக்கத்திடம் இருந்து தனக்காக எதிர்பார்ப்பதை விட எங்கள் தலைவர் எதிர்பார்ப்பதைச் செய்ய வேண்டும் என்பதே அவனது கொள்கையாக இருந்தது. அதனால் மிகுந்த ஆர்வத்தோடு சண்டைக் களங்களில் நின்று ஈடுபட்ட அவன் இயக்கத்தின் வேண்டுதலை ஏற்று மனப்பூர்வமாகவே இந்தப் பணியை மேற்கொண்டான். சுட்டாவின் இந்த அரவணைப்பான வளர்ப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் உருவாகினார்கள். சுட்டா நின்ற பயிற்சி முகாம்களில் போராளிகள் விலகுவதென்பது மிகவும் குறைவாகவே இருந்தது. ஏனென்றால் போராளிகள் அவனுடன் ஒன்றித்துப் போனார்கள். இப்போது சண்டை நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. இந்த நாட்களில்தான் சுட்டாவிற்கு புதிய பணிக்கான அழைப்பு வந்தது. அது லெப்.கேணல் நவம் அறிவுக் கூடம். சமராடி விழுப்புண்பட்ட போராளிகளுக்கான கல்விக்கூடம். அவர்களிற்கு முக்கியம் தேவையானது அன்பும் அரவணைப்பும்தான். சுட்டா இதில் நன்கு கைதேர்ந்தவன். ஏற்கனவே சமர்க்களத்தில் விழுப்புண் பட்டவன். அதைவிட தனக்கு மிச்சமாயிருந்த ஒரு ஆண் சகோதரனையும் சண்டைக்களத்திலே பிரிந்தவன். தன் சகோதரனான கப்டன் இனியவனின் நினைவுகளும், அந்த இழப்பின் வேதனையும் அவனிடம் இருந்தது. அவனால் இவர்களின் மனதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுக்கும் இந்தப் பணி விருப்பமானதாக இருந்தது. லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத்தின் நிர்வாகப் பொறுப்பாளனாக சுட்டா நியமிக்கப்பட்டான். இங்கு சுட்டாவிற்கு நிறையப்பணிகள் இருந்தன. ஒவ்வொரு விழுப்புண்பட்ட போராளியும் ஒவ்வொரு விதமான தாக்கங்களுக்கு உள்ளானவர்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவம், உணவு என எந்த விடயத்திலும் கண்ணும் கருத்து மாகச் செயற்படவேண்டும். சுட்டாவிற்கு இது புதுமையான விடயமல்ல. தன் நீண்டகால பட்டறிவு வாழ்வினை வைத்துக்கொண்டு இந்த விழுப்புண் பட்ட போராளிகளுக்காக கடினப்பட்டு உழைத்தான். எல்லா வேலைகளிலும் அவனும் ஒருவனாகவே நின்று செயற்படுவான். போராளிகளின் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து அவர்களுக்கு நல்ல உணவு வழங்குவது, அவர்களுடன் சென்றிருந்து கதைப்பது என அவன் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருப்பான். முகாமில் சுட்டாவிற்கென்று ஒரு இடமே இருக்காது. ஒன்றில் சமயற்கூடத்தில் நிற்பான் அல்லது போராளிகளுடன் நிற்பான் அல்லது போராளி களின் உணவுத் தேவைக்காக போடப்பட்டிருந்த பண்ணையில் நிற்பான். இப்படி எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பான். அவனது முகம் எப்போதும் கலகலப் பாகவே இருக்கும். அவனது முகத்தில் கடுமையைக் காணமுடியாது. அதனால் போராளிகள் அவனுடன் ஒன்றித்துப் போனார்கள். ஆண், பெண் என்ற பேதமின்றி எல்லோரும் அவனை செல்லமாக ‘சுட்டா அப்பா’ என்றே அழைப்பார்கள். சுட்டா போராளிகள் யாராவது தவறிழைத்து பேசினால்கூட அவனது பேச்சைக்கேட்டு திருந்துவார்களே தவிர, அவனில் யாருக்குமே கோபம் வராது. அவனது அன்பான அரவணைப்பில் அவனது தண்டிப்பு மறந்துபோகும். எந்தப் போராளிகளும் மனம் தயங்காது சுட்டாவிடம் எதுவானாலும் கேட்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவன் அப்பாதானே. இப்படி எதையும் பார்க்காது செயற்படும் அவன், கொஞ்ச நாளாய் சுகயீனமுற்றிருந்தான். மருத்துவமனையில் அவனை உடலை ஆய்வு செய்ததில் அவனது சிறு நீரகங்கள் செயலற்றுக்கொண்டிருந்தன. எல்லோர் மனதிலும் ஏக்கம். சுட்டா அண்ணை எப்ப சுகப்பட்டு வருவார்? அவரின் சிறுநீரகங்கள் மாற்றப்பட வேண்டும். அவரின் மூத்த சகோதரி முன்வந்தார். தன் ஒரு சிறுநீரகத்தை தன் சகோதரனுக்கு கொடுத்தார். சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சுட்டாவிற்கு ஓய்வு தேவைப் பட்டது. சுட்டா இனி முன்னர்போல் வேலைசெய்ய முடியாது. அவன் ஓய்வாக இருக்கவேண்டும். அவனுக்கென்று குடும்பம் இருந்தது. பிள்ளை இருந்தது. அவன் முன்னர்கூட வீட்டில் நிற்பது மிகவும் அரிது. அப்படி அரிதாக அங்கு நிற்கும் நாட்களில்கூட சும்மா இருந்ததில்லை. தனது வீட்டுவளவைப் பண்படுத்தி பயன்தரும் கன்றுகள் வைப்பான், நிலத்திற்கு சீமெந்து போடுவான், கதிரை பின்னுவான். எஞ்சிய நேரத்தில் பிள்ளையையும் பார்த்துக்கொள்வான். சுட்டா வீட்டில் நிற்கும் நாட்களில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது சுட்டாதான். ஏனென்றால் அவனுக்கு அவ்வளவு பொறுமையிருந்தது. அயலவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால்கூட நிற்கும் நேரங்களில் தன்னால் தீர்க்கக் கூடியவற்றை தீர்த்து வைப்பான். தனது வீட்டிற்கு அயலில் இருந்த சிறுவர் பள்ளியின் நிலம் சீமெந்து போடப்படாமல் உள்ளதை அறிந்து அங்கு கற்கும் சிறுவர்களுக்காக, ஒருநாள் அந்த சிறுவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு அதைப்பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை நிதி சேர்க்கவைத்து தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து அந்த சிறுவர் பள்ளியின் நிலத்திற்கு சீமெந்து போட்டுக் கொடுக்கவும் சுட்டா காரணமாய் இருந்தான். கொஞ்சநாள் ஓய்வில் இருந்த சுட்டா தன்னால் இயங்கக்கூடிய நிலை வந்ததும் மீண்டும் நவம் அறிவுக்கூடம் வந்துவிட்டான். போராளிகள் எல்லோருடைய மனதிலும் மகிழ்ச்சி. ஆனால் சுட்டா முன்புபோல் இயங்கமுடியாது. அவன் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவனை கடினவேலைகள் செய்யவேண்டாமென பொறுப்பாளர் சொல்லியிருந்தார். ஆனால் கொஞ்சம் கொஞ்ச மாகவே சுட்டா முன்புபோல இயங்கத் தொடங்கினான். எப்போதுமே போராளிகளுள் ஒருவனாக நின்று தன்னை மறந்து வேலைகள் செய்தவன், அவனால் ஏனைய விழுப்புண்பட்ட போராளிகள் வேலை செய்யும்போது பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை . போராளிகள் அவனைத் தடுப்பார்கள். ஆனால் “எனக்குப் பிரச்சினையில்லை என்னால செய்யமுடியும்” என்ற வார்த்தைதான் அவன் வாயிலிருந்து வரும். அவன் மீண்டும் பழைய சுட்டா வாகவே மாறியிருந்தான். அவன் எப்போதுமே தன் உடலின் வேதனையை மற்றவர் களுக்குக் காட்டியதில்லை. தான் இந்தத் தேசத்திற்காக நிறையச் செய்யவேண்டும் என்றே சொல்லிக்கொண்டிருப்பான். 24.09.2005 அன்றய நாளின் காலைப்பொழுதில் லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத்தின் அப்பா எங்களை விட்டுப் பிரிந்த நாள். எல்லோரும் துடி துடித்துப் போனோம். சுட்டா அப்பா இனி வரமாட்டாரா என்று எல்லாப் போராளிகளும் அழுதார்கள். அவனது வித்துடல் நவம் அறிவுக்கூடத்தில் வைக்கப்பட்டது. சுட்டா அப்பா, சுட்டா அப்பா என்று எல்லோர் வாய்களும் அவன் பெயரை உச்சரித்தபடி அழுதது. அவன் இல்லாதபோதுதான் அவனின் பெருமை புரிந்தது. அதனால்தான் அவன் பத்து ஆண்டு காலமாகப் பணிபுரிந்த இம்ரான் பாண்டியன் படையணியின் அன்றைய நாள் சிறப்புத் தளபதியாக இருந்த பிரிகேடியர் ஆதவன் அவரது நினைவுகளைச் சொல்லும்போது “இக்கட்டான சூழ்நிலைகளில் கடும் கஸ்ரங்களை எதிர்நோக்கி திறமையாக உழைத்த நல்லதொரு அணித்தலைவன்” என்று குறிப்பிட்டார். உண்மையும் அதுவே. அவன் நல்லதொரு வழிநடத்துனன், போராளிகளை மகிழ்விக்கும் திறன் வாய்ந்த கலைஞன், வீரம்மிக்க போர்வீரன், நல்ல தையலாளன், சிறந்த சமையலாளன், அன்பு செலுத்துவதில் வல்லவன். நிச்சயமாக அவன் ஒரு புதுமையான மனிதன். சாவு அவனது உயிரைப்பறித்தது உண்மைதான். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் அவன் உணர்வாய் என்றைக்குமே வாழ்ந்துகொண்டிருப்பான். நினைவுப்பகிர்வு: ச.புரட்சிமாறன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி, ஐப்பசி 2005). https://thesakkatru.com/lieutenant-colonel-piraiyazhan/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.