Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. பழனிமலை ஆண்டவனே தண்டபாணி கஜானனா ஓம் கஜானனா
  2. உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம் பகிர்வின் பூக்கள் பலியாய் மலரும் நேரம் நம் இயேசுவுடன் அணியாய் வருவோம் - அவர் வார்த்தைகளை இனி வாழ்வாய் அணிவோம் வருக அன்பின் இறையாட்சியே வருக வருக எழுக மனித இறையுறவில் எழுக எழுக (2) 1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடுமுன் மத பேதங்கள் இனப் பிளவுகள் நம்மில் மாற்றிடுவோம் (2) மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உயர்வில் இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் (2) வருக... 2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் நிகழ்வாக்கிடுவோம் பெறும் மகிழ்வினைப் பிறர் வாழ்விலும் பகிர்வாக்கிடுவோம் (2) உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும் உறவின் சக்தியில் உரிமைக் கதிர் உதிக்கும் (2) வருக .
  3. ஹீரா குகையினிலே... சீராய்ப் பிறந்ததம்மா || S.P.பாலசுப்ரமணியம் | இஸ்லாமிய பாடல்கள் | ISLAMIC SONGS.
  4. முகமெல்லாம்... முகமது நபி போல் முகமாகுமா || நெல்லை அபுபக்கர் | ISLAMIC SONGS.
  5. விசுகுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
  6. பத்து தட்டு சாதம் கூட பத்தாது | கருவேப்பிலை குழம்பு கருவேப்பிலை மரத்தை மொட்டையடிக்க ஒரு வழி கண்டு பிடித்தாச்சு
  7. கிராமத்து மொறு மொறு முறுக்கு அதோடு எங்க ஊர் அண்ணனின் இனிமையான பாடல்களும் நம்மூரு உடையார் மாதிரி நல்லா பாடி ஆடுகின்றார்😂
  8. உருளைக்கிழங்கு இருந்தா இப்பவே இதுபோல ஸ்னாக் செஞ்சி பாருங்க 1 கேரட் வச்சு புதுசா இந்த ஸ்வீட் செய்ங்க ஒண்ணு கூட மிஞ்சாது
  9. சிக்கன் லாலிபாப் ஒரு கப் போதும், டீ குடிக்கும்போது இப்படி காரசாரமா செய்து பாருங்க
  10. ஓம் ஓம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் முரளி மோகனம் சாமி அசுரமர்தனம் கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் நளின தெய்வதம் சுவாமி மதனரூபகன் நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் பஞ்ச சேவகன் சுவாமி பாஞ்சசன்யன் கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் சம்யபங்கஜன் சுவாமி அம்யபுஷ்பகன் சர்வரட்சகன் சுவாமி தர்மதத்துவம் ராகபந்தணன் சுவாமி ராசலீலகன் கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
  11. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி இந்த வழியொன்று தான் எங்கள் வழியென்று நாம் நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம் நாளை வரலாறு நமக்காக உருவாகலாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
  12. ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே
  13. இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பல கோடி குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி 1. மறைபொருள் ஆனவனே - உன்னை மனங்களில் சிறை வைத்தோம் குறையுள்ள கோவிலிலே - உன்னை கொண்டு நாம் குடிவைத்தோம் 2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய அறிவென்றும் நாம் தெரிவோம் இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல இரக்கம் நீ என மொழிவோம் ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும் மாண்பைப் போற்றுவேன் ஆவே ஆவே ஆவே 1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா 2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் மாய உலகினில் காத்திடுவாய் அம்மா
  14. உலகம் தோன்றிட காரணமான உத்தம நபி மகள் யாரம்மா
  15. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் வீர வணக்கங்கள் ரஞ்சன். உங்கள் கனவு நனவாகும்🙏
  16. குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் 29.09.1993 அன்று நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில், எமது போராட்ட வரலாற்றில், முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை நாள். வெட்டவெளியூடாக நன்கு திட்டமிட்டு நகர்ந்த எதிரியின் கவச வாகனப்படையை, புலிகளின் கவச வாகனப்படையை, புலிகளின் மனிதக்கவசம் உடைத்தெறிந்து காவியம் படைத்த நாள். யாழ். குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாகத் தடுத்த இந்த இந்த வரலாற்றுச் சமரில், 125 படையினர் கொள்ளப்பட்டுள்ளனர்; 284 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, சிங்கள அரசே அறிவித்துள்ளது. அத்துடன் சிங்களப்படை இந்தச் சமரில் ரி-55 ரக டாங்கிகள் இரண்டையும் ‘பவல்’ கவச வாகனம் ஒன்றையும் முற்றாக இழந்துவிட்டது. அதேவேளை மேலும் இரண்டு கவச வாகனங்கள் சேதமடைந்துள்ளன. வெட்டவெளியில் நடந்துமுடிந்த இந்த புலோப்பளைச் சமர் புலிகள் இயக்கம் பெற்றுவரும் போரிடும் ஆற்றலின் ஒருபடி வளர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பதுடன் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு திருப்புமுனையையும் கொடுத்துள்ளது. இந்தச் சமரைச் சிங்களப் படைத்தரப்பில் நின்று வழி நடாத்திய – அதில் காயமடைந்த – கேணல் சரத் பொன்சேகா கூறினார்; ‘விடுதலைப்புலிகள் எம்மைச் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கினர்.’ இந்தச் சாதனைச் சமரில், புலிகளின் சேனைக்கு தலைமை தாங்கி வழிநடாத்திய படைத்துறைத் துணைத் தளபதி பால்ராஜ் விபரிக்கின்றார்…. இந்தச் சாதனைச் சமரில் மூன்று விடயங்கள் எதிரிக்குத் திகைப்பையும் – அச்சத்தையும் கொடுத்திருக்கும் ஒன்று, மிகக்குறைந்த நேரத்தில் சிங்களப்படை சந்தித்த பாரிய ஆள் – ஆயுத இழப்பு. இரண்டு, சிங்களச் சிப்பாய்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் கவசவாகனப்படை புலிவீரர்களால் சிதறடிக்கப்பட்டதுடன், அவர்களின் கண்முன்னாலேயே – பட்டப்பகலில் – டாங்கிகளையும் கவச வாகனங்களையும் இழந்தது. மூன்று, சிங்களப்படைக்குச் சாதகமான இந்த வெட்டவெளிச் சமரில் புலிகள் வெளிப்படுத்திய அபாரத்துணிச்சலும் தாக்குதல் தந்திரோபாயங்களும், இவ்வாறு இந்தச் சாதனைச் சமரைத்தளபதி பால்ராஜ் மதிப்பிடுகின்றார். ‘ஒப்பறேசன் யாழ்தேவி’ எனப்பெயரிட்டுவிட்டு – பெரியதொரு எதிர்பார்ப்புடன் 28.09.1993 அன்று ஆனையிறவில் இருந்து ஏறக்குறைய 5000 பேர்கொண்ட சிங்களப்படையணிகள் கிளாலி நோக்கி நகரத்தொடங்கின. புலிகளின் தந்திரோபாய விலகல் காரணமாக – ஆனையிறவிலிருந்து நீரேரிக்கரையோரமாகப் புலோப்பளை வீதிவரை உள்ள சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தைச் சிங்களப் படைகள் சுலபமாகக் கடந்து சென்றன. அன்றிரவு புலோப்பளையில் தரித்துநின்ற படையினர், 29ஆம் திகதி காலை 8.00 மணிக்கு எறிகணைகளைச் சரமாரியாக வீசிக்கொண்டு கவச வாகனப்படையின் உதவியுடன் அல்லிப்பளை நோக்கி நகரத்தொடங்கினர். சில நூறு மீற்றர்கள் கடந்தபின், அந்த வெட்டவெளிப் பகுதியில், திடீரென நிலத்துள் இருந்து முளைத்தெழுந்த புலிவீரர்கள், ஆச்சரியமூட்டும் வகையில் தாக்குதலைத் தொடுத்தார்கள். இந்தத் திடீர்த் தாக்குதலைத் தொடக்கிவைத்த அணிகளுக்குத் தலைமை வகித்த, வன்னிமாவட்ட சிறப்புத் தளபதி தீபன் கூறுகின்றார்…. ‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ (கவர்) அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்துகொண்டிருந்தது. எனவே வரப்போரங்களிலும் பற்றைக்கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும், உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்தோம்.’ இவ்வாறு தளபதி தீபன் தனது அனுபவத்தைக் கூறினார். இந்தச் சமரில் பங்குகொண்ட ஏனைய போராளிகள் சொல்லுகின்றார்கள்……… புலோப்பளை வீதியிலிருந்து அல்லிப்பளை நோக்கி முன்னேறிவந்த படையினர், அங்கிருந்த வீடுகள் எல்லாவற்றையும் தீமூட்டி எரித்தபடி முன்னேறிக்கொண்டிருந்தனர். எறிகணை வீச்சுகளுக்கு மத்தியில் எதிர்த் தாக்குதலுக்குத் தயாராக நிலத்தில் புதைந்து கிடந்த புலிகளின் அணி ஒன்றுக்கு மிக அருகில், 15-20 மீற்றர் தூரத்தில் – சிங்களப்படைகள் வந்ததும், புலிகளின் இலகு இயந்திரத் துப்பாக்கி ஒன்று இந்த வரலாற்றுச் சமரைத் தொடக்கி வைத்தது. இந்த நிலையில், சிங்களப்படையின் ‘சலாடின்’ ரக கவச வாகனம் ஒன்று, மிக அருகில் வைத்து போராளிகளின் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளான போது, அக்கவச வாகனம் பின் வாங்கிப் பாதுகாப்புத் தேடி ஓட, பின்னாலிருந்த டாங்கி சண்டையின் முன் முனைக்கு வந்தது. ரி-55 ரக டாங்கி தனது தாக்குதலைத் தொடங்கமுன்னர், புலிகளின் ஆர்.பி.ஜி ஒன்று டாங்கியைத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டாங்கி அணி சற்றுப்பின் வாங்கி, தன்னை நிலைப்படுத்தி மீண்டும் தாக்குதலைத் தொடங்க முயன்றது. ஆனால் இன்னொரு முனையிலிருந்து மீண்டும் புலிகளின் ஆர்.பி.ஜி ஒன்று டாங்கியைத் தாக்கிய அதேவேளை தத்தமது நிலைகளிலிருந்து எழுந்த புலிவீரர்கள் கவச வாகனப் படையுடன் நின்ற எதிரிப்படையைப் பாய்ந்து சென்று தாக்கத்தொடங்கினர். ஆச்சரியமூட்டும் விதத்தில் – வேகமாக நடந்த புலிகளின் படை நகர்த்தலைக்கண்ட சிங்களப்படை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த அதிர்ச்சியிலிருந்து சிங்களப்படை மீளமுன்னர் பல முனைகளிலிருந்து எதிரிப்படைக்குள் நுழைந்த புலிவீரர்கள் கவச வாகனங்களுடன் சேர்த்து சிங்களப் படையை வேட்டையாடத் தொடங்கினர். ‘சமர்முனையில் டாங்கிகள் பின்னோக்கி ஓட்டமெடுத்த காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன’ என ஒரு புலிவீரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். இந்தப் பலமுனைத் தாக்குதல்களில் வன்னி மாவட்டச் சிறப்புத் தளபதி தீபனது அணியுடன், மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி ஜானினது அணி ஒரு முனையூடாகவும், மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி ஜெனாவின் தலைமையிலான அணி இன்னொரு முனையாலும் உள்நுழைந்து, சிங்களப்படையைச் சிதைத்து அவர்களுக்கு பேரழிவை உண்டுபண்ணினார்கள். காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்தச்சமர் மதியம் 12.30 மணியளவில் ஓய்வுக்கு வந்தது. அப்போது சிங்களப்படைகள் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை புலோப்பளை வீதிவரை – பின்னோக்கி அடித்து விரட்டப்பட்டன. அதன்பின் மேலும் இரண்டு நாட்கள் அதே இடத்தில் தரித்து நின்று காயமடைந்த, இறந்த சிப்பாய்களை அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக புதியவர்களைச் சேர்த்துப் படையை புனரமைத்துவிட்டு, கிளாலியை நோக்கி சிங்களப்படை முன்னேறியது. கிளாலியைச் சென்றடைந்ததும் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கிமேலும் இரண்டு வாகனங்களை சிங்களப்படை இழந்ததுடன் உயிர்ச் சேதத்தையும் சந்தித்தது. இந்த நிலையில், 04.10.1993 அன்று அதாவது ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டுப் பலத்த ஏமாற்றத்துடனும் – சோகத்துடனும் ஆனையிறவுத் தளத்திற்கே சிங்களப்படைகள் திரும்பிச் சென்று விட்டன. இந்த இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிங்களப் படைத்துறைத் தலைமை நகைப்பிற்கிடமான விளக்கங்களையும் – வியாக்கியானங்களையும் ஒன்றுக்கொன்று முரணாகக் கொடுத்தது. “இடத்தைக் கைப்பற்றுவதல்ல் புலிகளை இயன்றளவு கொல்லுவதே இந்த படை நகர்த்தலின் நோக்கம்” என ஒரு இராணுவ உயர் அதிகாரி கூறியிருந்தார். “வெட்ட வெளியில் சண்டை பிடித்தபடியால்தான் படையினர் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது” என ஒரு இராணுவ அதிகாரி சமாதானம் சொன்னார். ஆனால் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நளின் அங்கமண, “ வெட்டவெளிக்குப் புலிகளை இழுத்துவருவதுதான் எமது பிரதான குறிக்கோள். அப்போது தான் புலிகளைக் கொன்று இடங்களைக் கைப்பற்றமுடியும்” என விளக்கமளித்தார். இதேவேளை இப் பின்வாங்குகைக்குப் படைத்துறைத் தலைமை விளக்கமளித்து அறிக்கை விடுத்துள்ளது. கிளாலிப் போக்குவரத்துப் பாதையை மூடுவதுதான் இராணுவ நடவடிக்கையின் நோக்கம். அதைப்படையினர் சாதித்துவிட்டனர். கிளாலி இறங்குதுறையை அழித்து புலிகளின் முகாம்களைத் தகர்த்து கடற்பயணத்தைத் தடுத்துவிட்டதாக அந்த அறிக்கை கூறுகின்றது. கொழும்பு துறைமுகத்தைப் போன்றுதான் கிளாலி இறங்கு துறையும் இருக்கும் என்று நம்பும் சிங்கள மக்களை, படைத்துறைத் தலைமையின் அறிக்கை திருப்திப்படுத்தியிருக்கும். ஆனாலும் படைத்துறைத் தலைமை இந்த அறிக்கையை எழுதத்தொடங்க முன்னரே, புலிகளின் விசைப்படகுகள் கிளாலிக் கடல் நீரேரியில் நீரைக்கிழித்தபடி பயணம் போய்க்கொண்டிருந்த காட்சிகளை, நாகதேவன் துறையிலிருந்த கடற்படைத்தள ராடர்கள் அழகாகக் காட்டிக்கொண்டிருந்திருக்கும். ஆனால் அது சிங்கள தேசத்துக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தானே! அப்படித் தெரிந்திருந்தாலும் அது கிளாலிக் கடலில் செல்லும் படகல்ல் தொண்டமானாறு கடலேரியில் செல்லும் படகெனப் பதிலறிக்கைவிடச் சிங்களப் படைத்துறைத் தலைமைக்கு அதிக நேரமெடுக்காது. ஆனாலும் இந்த ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கையின் நோக்கம் விசாலமானது இது ஒரு பெருந்திட்டம். பலகட்டங்களாகப் பல்லாயிரம் படைவீரர்கள் பங்குகொண்டு, பாரிய நிலப்பகுதியைக் கைப்பற்றும் ஒரு நாசகாரத் திட்டம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆனையிறவு, பூநகரி, காரைநகர், பலாலி ஆகிய தளங்களில் சுமார் இருபதாயிரம் படையினர் காத்துக் கொண்டிருந்தனர். கிளாலி மட்டும் ஓடிவந்து திரும்பிச் செல்ல ‘யாழ்தேவி’ வரவில்லை. அது சாவகச்சேரி, யாழ்நகர் ஊடாக தெல்லிப்பளைவரை செல்வதுதான் திட்டம். இதேபோன்றுதான் கடந்த ஆண்டும் லெப்.ஜெனரல் கொப்பேகடுவ அராலி வழியாக மானிப்பாயை அடைந்து, அங்கிருந்து யாழ். நகரைக் கைப்பற்றும் திட்டமொன்றை அமுல்படுத்த முயன்றார். அந்த இராணுவ நடவடிக்கை தொடங்க ஒருநாள் இருக்க அராலித்துறையில் நடந்த கண்ணிவெடியில் அவரும் அவரது குழுவினரும் கொல்லப்பட அப்படையெடுப்புத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. அப்படையெடுப்புத் திட்டத்திற்கு, ‘ஒப்பறேஷன் பைனல் கவுண்ட் டவுண்’ எனப் பெயரிட்டிருந்தனர். இப்போது கொப்பேகடுவவின் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு கிளாலி, சாவகச்சேரிப் பகுதிகளையும் உள்ளடக்கி பாரிய திட்டமாக வரையப்பட்டிருந்தது என்பது தான் உண்மை. லெப். ஜெனரல் கொப்பேகடுவ குழுவினரின் மரணத்துடன் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த படையெடுப்புத் திட்டத்தை, இப்போது புலோப்பளைச் சமரில் படையினர் சந்தித்த பேரிழப்புக் காரணமாக, மேலும் ஒருமுறை அரசு பிற்போட்டுள்ளது. ஆனாலும், முன்னரைப்போல நீண்டகாலம் தாமதித்திருக்காது இம்மறை விரைவில் அடுத்த படையெடுப்பை வேறொரு முனையிலிருந்து தொடுக்க ஆயத்தங்களைச் செய்கின்றது. இவ்விதமானதொரு பெரும் படையெடுப்பை விரைவில் செய்யவேண்டிய தேவை சிறீலங்காவின் ஜனாதிபதி விஜேதுங்காவுக்கு உண்டு; படைத்துறைத் தலைமைக்கும் அது அவசியம். இராணுவ வழிமுறைகள் மூலம் தான் இனப்பிரச்சினையை அணுகவேண்டும் என்ற கடும்போக்கை கூறி சிங்கள மக்களின் ஆதரவைப்பெற்ற விஜேதுங்கா இந்த இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஏற்றுச்சும்மா இருப்பார் என்று கூறமுடியாது. அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் வருகின்றது. அத்துடன், ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கையில் பங்குகொள்ள வந்த சுமார் இருபதாயிரம் துருப்புக்கள், குடா நாட்டைச் சூழ உள்ள முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே மிகவிரைவில் மீண்டுமொரு படையெடுப்பை குடாநாடு மீது நடாத்த வேண்டும் என்பதில், படைகளும் அரசும் உறுதியாகவே இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டிற்கு சிங்கள தேசமும் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது. நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி, ஐப்பசி 1993). https://thesakkatru.com/puloppalai-battle-1993/
  17. சூடான, சுவை நிறைந்த மீன் பிரியாணி தேவையான பொருள்கள்: வஞ்சிரம் மீன் துண்டுகள் - 1 கிலோ பாஸ்மதி அரிசி - கிலோ (20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்) மசாலா பேஸ்ட் செய்யத் தேவையானவை: இஞ்சி - பெரிய துண்டு பூண்டு - 8 பல் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - 3 துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி தக்காளி - 3 மஞ்சள் பொடி - தேக்கரண்டி காரப்பொடி - 1 தேக்கரண்டி தனியாப்பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி, புதினா - 1 கட்டு தேங்காய் பால் - லிட்டர் மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்கள்: மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி காரப்பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வதக்கத் தேவையான பொருள்கள்: நெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி பிரிஞ்சு இலை - 3 பட்டை - 2 துண்டுகள் கிராம்பு - 10 ஏலக்காய் - 4 வெங்காயம் (நடுத்தர அளவு) - 5 செய்முறை: தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் இவற்றைப் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து மையாக அரைக்க வேண்டும். மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்களுடன் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். வாய் அகலமாக உள்ள குக்கரை பிரியாணி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் நெய் இரண்டு தேக்கரண்டி, எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி அது காய்ந்ததும் அதில் பிரிஞ்சு இலை, பட்டை, கிராம்பு மற்றும் லேசாகத் தட்டிய ஏலக்காயை போட்டு அவை பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு அவை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை வெங்காயத்துடன் சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை அடிப்பிடிக்காமல் வதக்க வேண்டும். அடுத்து இத்துடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் பொடி, காரப்பொடி, தனியாப்பொடி, உப்பு இவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் கழுவி நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் இத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாவானது தயாரானவுடன் வஞ்சிர மீன் துண்டுகளை மசாலாவின் மீது வைத்து மிகவும் கவனமாக மீன் துண்டுகள் உடையாமல் கிளற வேண்டும். பிரியாணி செய்வதற்கு மீன் துண்டுகளை கனமான துண்டுகளாக வாங்கினால் அவை உடையாது. அதேபோல் அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கக் கூடாது. ஊற வைத்த பாஸ்மதி அரிசியை முக்கால் வேக்காடு வேகவைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசியை வேகவைக்கும் பொழுது 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றினால் சாதமானது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும். முக்கால் பாகம் வெந்த அரிசியை மீன் துண்டுகளின் மீது பரவலாகப் போட்டு தேங்காய்ப் பாலை ஊற்றி மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் கிளற வேண்டும். பின்பு குக்கர் மூடியை மூடி மேலே ஆவி வந்தபின் குக்கர் வெயிட்டைப் போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைக்க வேண்டும். பின்பு தீயை அணைத்து விட்டு ஆவி இறங்கிய பிறகு குக்கர் மூடியைத் திறந்து பிரியாணியை வேறு ஒரு அகலமான பாத்திரத்திலோ அல்லது ஹாட் பாக்ஸிலோ மாற்றி விட வேண்டும். இப்பொழுது சூடான, சுவையான மீன் பிரியாணி தயார். மீன் பிரியாணிக்கு வெங்காயத் தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி மற்றும் கத்தரிக்காய் குழம்பு போன்றவை தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/09/29150008/1930927/Fish-Biryani.vpf
  18. குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம் முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகா முருகா முருகா முருகா பரிமலத்திருநீறும் உடல் மணக்கும் ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும் சிரகிரிவேலவன் சன்னிதியே நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி தேடினார் முருகனை கவசம் பாடி ஆடினார் காவடி உன் பாதம் நாடி நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி சென்னிமலை மகிமை அற்புதங்கன் அவை சொல்லி மாளாத அதிசயங்கள் கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள் கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.