Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்.. பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்.. குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்.. பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே! திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக! குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! (திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம் நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம் அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம் அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம் (அலைமகளே வருக) மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம் ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம் அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்! சங்கு சக்ரதாரி நமஸ்காரம்! சகலவரம் தருவாய் நமஸ்காரம்! பத்ம பீட தேவி நமஸ்காரம்! பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!
  2. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள சண்டிகை ஸ்லோகம் இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் (ரக்க்ஷ ரக்க்ஷ) படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி (ரக்க்ஷ ரக்க்ஷ) கருணையில் ககை கண்ணணின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும் வருகின்ற யோகம் வளர்பிறை யாகும் அருள்மழை பொழிவாள் நாளும் நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திரிசூலம் எடுத்தவள் பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள் (ரக்க்ஷ ரக்க்ஷ)
  3. வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
  4. எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
  5. உதயமே நபி உதயமே... உங்கள் வரவாலே உலகம் சிறந்தது || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS.. இஸ்லாம் எனும் மாளிகைக்கு ஐந்து தூண்கள்
  6. 1 கப் சோயா , 2 முட்டை வைத்து ஒரு புதுமையான
  7. 2 உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ்
  8. அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
  9. ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய் முருகா வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரழுபி றப்பையும் அறுத்த உமை தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர் திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா . . . முருகா
  10. அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவை அடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணுவினின் மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம் நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும் நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி அயடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும் மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர் அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே நினதுவழி யடிமையும்வி ளங்கும் படி இனிது ணர்த்தியருள் வாயே அரச ளித்த பெருமாளே . . . இந்தி ரற்கரச ளித்த பெருமாளே . . .
  11. கிருஷ்ணா முகுந்த முரரே ... கிருஷ்ணா முகுந்தா முரரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே கருணா சாகரா கமலா-நாயகா கருணா சாகரா கமலா-நாயகா கனகாம்பர தரி கோபாலா கனகாம்பர தரி கோபாலா கிருஷன் முகுந்தா முரரே கலிங்க-நார்த்தனா கம்ச நிசுதானா கமலாயதா-நயன கோபால கிருஷ்ணா முகுந்தா முரரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே குட்டிலா-குந்தலம் குவலயா-தலனிலம் மதுரா முரளி தவலோலம் கோட்டி மதான லாவண்யம் கோபி புண்யம் பஜாமே கோபாலம் கோட்டி-ஜன மன மோகன் தியபகா கோட்டி-ஜன மன மோகன் தியபகா கோட்டி-ஜன மன மோகன் தியபகா குவலய தலனிலா கோபாலா குவலய தலனிலா கோபாலா குவலய தலனிலா கோபாலா கிருஷ்ணா முகுந்தா முரரே கிருஷ்ணா முகுந்தா முரரே முரரே
  12. என்னையே முழுவதும் உம்மிடம் தருகின்றேன் என் மனம் அறிந்து நீ உன் கையில் ஏற்றிடுவாய் 1. உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டு உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று என் நெஞ்சில் வாழ்பவன் நீதானே இனி அச்சம் கொள்வதும் வீண்தானே எந்தன் பணியில் ஆயிரம் தடைகள் வந்திடும் ஆயினும் இயேசுவே உனது வழியில் பயணம் தொடரும் 2. எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன் சுயநலத்தின் திரைகளை களைந்து என்னைத் தந்தேன் ஒரு ஜீவன் என்னாலே உயிர் வாழ்ந்தால் அதுதானே உன் முன்னால் பெரிதாகும் மகிழ்வைத் தேடும் மானிடர் மகிழ்ந்திட தந்திடும் என்னை இயேசுவே உனது கரத்தில் ஏற்க வேண்டி
  13. அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2 நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2 அவரின்றி வேறில்லையே போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2 காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2 இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2 பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2
  14. பயப்பட வேண்டும் எல்லா உயிரினமும் அது இறைவனின் சந்நிதானம்
  15. பரம்பொருளே சிவ சிவா பணிந்திடுவோம் சிவ சிவா அண்ணாமலை தலமிருந்து அருள்வழங்கும் சிவ சிவா கரம் குவித்தோம் சிவ சிவா காக்கவேண்டும் சிவ சிவா இருள் விலக்கும் திருவிளக்கே ஏற்றம் தரும் சிவ சிவா அண்ணாமலைக்கு அரோகரா திருவடிக்கு அரோகரா தீபஜோதிக்கு அரோகரா சொல்லிடுவோம் அரோகரா திருவண்ணாமலை ஜோதிக்கு . . . அரோகரா . . . அன்புருவே சிவ சிவா ஆதரிக்கும் சிவ சிவா நன்மை தரும் நாயகனே நாடிவந்தோம் சிவ சிவா முக்தி தரும் சிவ சிவா மூத்தவனே சிவ சிவா பக்திகொண்டோம் உன்னிடத்தில் பதமளிப்பாய் சிவ சிவா பற்றிலனே சிவ சிவா பாம்பணிந்தாய் சிவ சிவா வெற்றிதரும் உன்னருளை வேண்டுகிறோம் சிவ சிவா நெற்றிக்கண்ணை சிவ சிவா நீ திறந்தால் சிவ சிவா குற்றமெல்லாம் குறைந்திடுமே குவளையத்தில் சிவ சிவா மன்மதனை சிவ சிவா எரித்தவனே சிவ சிவா உன்பதமே தினம்வணங்கி வாழுகிறோம் சிவ சிவா அன்பர்களை சிவ சிவா ஆட்கொள்ளும் சிவ சிவா உண்மையான மெய்ப்பொருளே உனைப்பணிந்தோம் சிவ சிவா கயிலையில் சிவ சிவா இருப்பவனே சிவ சிவா கனிவுடனே அன்பர்களைப் பார்ப்பவனே சிவ சிவா உயிரினங்கள் சிவ சிவா உன்படைப்பு சிவ சிவா அனைவரையும் அன்புடனே ஆதரிப்பாய் சிவ சிவா கேட்டவர்க்கு சிவ சிவா வரமளிக்கும் சிவ சிவா போற்றிடுவோம் உனையென்றும் ஈஸ்வரனே சிவ சிவா காற்றினிலே சிவ சிவா கலந்தவனே சிவ சிவா கவலையெல்லாம் தீர்த்திடுவாய் கயிலை வாழும் சிவ சிவா சங்கரனே சிவ சிவா சரணடைந்தோம் சிவ சிவா மங்களங்கள் வாழ்வினிலே தருபவனே சிவ சிவா கங்கையினை சிவ சிவா சுமந்தவனே சிவ சிவா உன்கருணை தரும் பலனை உலகறியும் சிவ சிவா ஆரமுதே சிவ சிவா அண்டிவந்தோம் சிவ சிவா பேரொளியே பிறையணிந்த பெம்மானே சிவ சிவா கார்முகிலே சிவ சிவா கருணைமழை சிவ சிவா சீர்பெறவே மண்ணுலகில் செய்திடுவாய் சிவ சிவா ஆரூரா சிவ சிவா அருந்தவமே சிவ சிவா பாராயோ எங்களை நீ பதம்பணிந்தோம் சிவ சிவா தீராயோ சிவ சிவா தீவினைகள் சிவ சிவா தாராயோ அனைவருக்கும் தக்கவரம் சிவ சிவா
  16. வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில் அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில் தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும் நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும் முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா மூன்று தமிழ்மலராலே தேன் சிந்தும் கவிமாலை நான் சூட்ட அவன் தந்தான் இசை பாடலே கனிவேண்டி மலை நின்றான் கனித்தந்து தமிழ் உண்டான் அவன் செய்யும் செயல்யாவும் விளையாடலே இலகாத கல்நெஞ்சும் இலகும்படி செய்து இளநீரில் அபிஷேகம் ஏற்கின்றவன் மலைதோறும் தேன்கொண்டு அபிஷேகம்தான் செய்ய நிறைவான அருளாசி புரிகின்றவன் வண்ணசேவல் கொடியாட காற்சலங்கை சுழன்றாட சிவசண்முக வேலனின் பொன்முகம் கண்டதும் வேலேந்தும் பெருமானை ஆராதனை செய்ய தீராத வினையெல்லாம் தீர்க்கின்றவன் திருநீறுதனை பூசி முருகா என்றழைப்போர்க்கு சீரான செல்வங்கள் சேர்கின்றவன் பழியொன்றும் வாராமல் மலர்ப்பாதம் பணிவோர்க்கு வழியெல்லாம் துணையாக வருகிறவன் படியேறி சிரம்தாழ்ந்து புகழ்பாடும் அடியார்க்கு மறவாமல்த் திருக்காட்சி தருகின்றவன் குளிர்பொய்கையில் நீராடி நறுசந்தனமே சூடி அந்த படைவேல் செம்மலை பணிவுடன் வணங்கி
  17. அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள் இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2) எளியவர் வாழ்வில் துணைநின்று இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2) மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம் மறைந்து ஒழிந்து போய்விடுமே (2) விண்ணில் பொருளை தினம் சேர்த்து இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.