Everything posted by உடையார்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பேரருளே... பேரிறையே... பெருமையாளனே || S.M.அபுல் பரக்காத்
-
கடற்கரும்புலி கப்டன் புலிமகள்
கடற்கரும்புலி கப்டன் புலிமகள் பூக்களுள் எழுந்த புயல் கடற்கரும்புலி கப்டன் புலிமகள். அது 1998 நடுப்பகுதி. கிளிநொச்சியின் நகரப்பகுதி இராணுவத்திடமிருந்தது. டிப்போச் சந்தியடி எங்களிடமிருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்ட தமிழீழ காவற்பணிமனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தேவாலயம், கருணா நிலையம் எல்லாம் எமதும் சிறீலங்காப் படையினரதும் காவல் நிலைகளுக்கிடையிலான சூனியப் பகுதிக்குள் அமைந்திருந்தன. நேர்வீதி. எமது நடமாட்டத்தைப் படையினரும் அவர்களை நாமும் இலகுவாக அவதானித்து, பதுங்கிச் சூடுகளை தாராளமாக மேற்கொள்ள வசதியான நேர்வீதி. இரு பகுதியுமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மறைப்புப் படங்குகளை வீதிக்குக்குறுக்கே கட்டித் தொங்கவிடுவோம். ஒருவரின் படங்கை மற்றவர் எரித்துக்கொண்டுமிருந்தோம். கதிரவன் உதிப்பதும் மறைவதும் போல, படங்கு கட்டுவதும் எரிப்பதும் கூட மாற்றமின்றி நடந்துகொண்டிருந்தது. தேவாலயத்தருகே எம்மவர்கள் இரவிரவாக ஏறிக் கட்டுகின்ற படங்கு, படையினரின் அடியில் விடிவதற்க்கிடையிலேயே கிழிந்து விழுந்துவிடும். சில நாட்களாக இது தொடர்ந்தது எங்களுக்குப் பெரிய சவாலாகப் போய்விட்டது. படங்கு எரிந்தால், அறுந்து விழுந்தால் நடமாடமுடியாது. காப்பரண்களுக்குள்ளேயே சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் முடங்கவேண்டியதுதான். அங்கு நிலைகொண்டிருந்த லெப். கேணல் செல்வியின் கொம்பனிக்கு வேவு பார்ப்பது லெப். தாமராவின் அணி. கப்டன் புலிமகள் அவர்களில் ஒருவர். தாமராவுடன் நெடுஞ்சாலை வேவுக்குப் பெரும்பாலும் இணைந்து போவது புலிமகள்தான். ‘படங்கை நான் கட்டிறன்’ புறப்பட்டால் புலிமகள். வெட்டப்பட்ட உரப்பைகளை இணைத்துத்தைத்து படங்கு தயாரிக்கப்பட்டது. இரவானதும் படங்கை இழுத்துக்கொண்டு தேவாலயத்தடிக்குப் போனார் புலிமகள். பகலில் படங்கு எரிந்துபோனதால், இரவு கட்டாயம் நாம் வருவோம் என்று எதிர்பார்த்திருந்த படையினர், இருள் சூழ்ந்ததுமே தேவாலயச் சூழலை நோக்கி எறிகணைகளை விசிறத் தொடங்கினர். புலிமகள் படங்கோடு பதுங்கிப் பதுங்கி போனார். அதுநேர்வீதி என்பதால், இரவில் ஒருவர் நின்றால்கூட வானவிளிம்பில் நிழலுருவமாகத் தெரியும். பகலைப் போலவே இரவும் ஆபத்தானதுதான். அச்சத்தைத் தரவல்ல, ஆபத்து நிறைந்த அந்த இரவில், கல்வாரிமலை நாயகனின்…… மெளன தவத்தைக் குழப்பியவாறு படிர் படிர் என எறிகணைகள் வெடித்து முழங்க , மரத்தில் ஏறிய புலிமகள் படங்கை இழுத்து வரி வரி என்று வரித்து கட்டிவிட்டு, வீதியின் மறுபுறமுள்ள மரத்திலும் இறுக்கு இறுக்கு என்று இறுக்கிக் கட்டிவிட்டு, காயங்கள் ஏதுவுமின்றி இரவு 9.00 மணிக்கே எமது முண்ணரங்குக்கு திரும்பிவிட்டார். காலையில் காற்றிலே படங்கு அசைந்தாடிக்கொண்டிருந்ததை நாங்களும் ஆச்சரியமாகத்தான் பார்த்தோம். நேற்றும் அதற்கும் முதல் நாளும் இவ்வளவு நேரம்வரை படங்கு தாக்கு பிடித்திருக்கவில்லை. அதிகாலையிலேயே அறுந்து விழுந்து எங்களுடைய எல்லா வேலைகளையும் பாழாக்கிவிட்டிருந்தது. இன்று விடிந்த பின்பும் காற்றிலே ஆடிக்கொண்டிருந்தது. படையினர் அடியை பலமாகத் தொடங்கினர். படங்கிலே ஓட்டைகள் விழுந்தனவேயன்றி, அறுந்து விழவில்லை. அடியோ விடாமல் தொடர்….ந்….தது. கடைசியில் படங்கு அறுந்து விழுந்தபோது மதியம் 12.00 மணி கடந்துவிட்டிருந்தது. அதற்குள் நாங்கள் எவ்வளவோ வேலைகளைச் செய்து முடித்துவிட்டிருந்தோம். ளானாள். பின்னொரு நாளில் கரும்புலியானவள்…. அன்று…… கடலிலே பகைக் கலமதை , பகைவரை வென்ற மகளும் ஆனாள். அன்று புலிமகள் வெற்றிமகளானாள். சில காலங்களின் பின் அவள் கடல்மகளானாள். பின்னொரு நாளில் கரும்புலியானவள்…… அன்று…… கடலிலே பகைக் கலமதை, பகைவரை வென்ற மகளும் ஆனாள். நினைவுப்பகிர்வு: மலைமகள். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, ஆடி 2004). https://thesakkatru.com/black-sea-tiger-captain-pulimahal/
-
லெப். கேணல் சந்திரன்
லெப். கேணல் சந்திரன் வன்னியின் முழுநிலவு” வன்னிப் பிராந்திய அரசியல்த்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் சந்திரன். சந்தின், உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த் மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் காணாமல், உன்னை விழுங்கிய கடலலைகளைப் போலவே குமுறிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், நீ முல்லைத்தீவுக்கு வரும்பொழுது ஒரு சின்னப்போராளி. நீ கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பாய். கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் உனது கண்களில் அன்பும், கனிவும் இருக்கும் சில நேரங்களில் கோபமும் தெறிக்கும். சந்திரன் நீ அடிக்கடி சொல்வாய்: “நான் ஏழைக்குடும்பத்தில்தான் பிறந்தனான். வயலில் கூலிவேலை செய்துதான் நாங்கள் வாழ்ந்தனாங்கள்.” உண்மைதான். அதனால்தான் ஏழைகளை நேசிக்கும் இதயத்தைப் பெற்றுக்கொண்டாய். அதனால்தான் எப்பொழுதுமே ஏழை மக்களுடன் ஒன்றிக் கலந்துவிடுவாய். ஒருமுறை, புதரிகுடா என்ற கிராமத்திற்கு நாங்கள் போயிருந்தோம். வயற்கரை ஓரங்களில் சிறு கொட்டகைகளைக் கட்டி அங்கு சில குடும்பங்கள் இருந்தன. கூரைகள் பிய்ந்துபோயிருந்தன. மழையிலும் வெயிலிலும் அவர்கள் நனைந்துகொண்டுதான் இருந்தார்கள். விழிகளில் ஏக்கத்துடன், வெறும் மேனியுடன், நோயினால் வீங்கிய வயிறுகளுடன் இந்த மண்ணின் குழந்தைகள் எங்கள் முன்பு நின்றார்கள். நீ தவித்தாய்… அவர்கள், பல நாட்களாகக் குளிக்கவில்லை என்றார்கள். தண்ணீர் அள்ளவேண்டாம் என்று பக்கத்து வளவுக்காரன் தடுத்துவிட்டானாம். குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை என்றார்கள். அதைக்கேட்டு நீ பட்ட தவிப்பும், உன்னிடம் தோன்றிய கோபமும் எங்களுக்கு நன்றாகவே தெரிந்தன. அந்த ஏழை மக்கள் இந்த மண்ணில் மனிதர்களாக வாழவேண்டும். அவர்களுக்கென்று இந்த மண்ணில் சொந்த நிலம், தொழில், மகிழ்ச்சிக்குரிய வாழ்வு எல்லாமே தோற்றுவிக்கப்பட வேண்டும் என, நீ தீர்மானித்துக் கொண்டாய். உண்மையில் நீ கேலியாகச் சொல்வது மாதிரி ‘அதுவும் ஒரு போர்முனை’ தான். நீண்ட காலமாகக் கவனிக்கப்படாமல் ஊருக்குள் காடாய் இருந்த உடையார் ஒருவரின் பெரும் நிலம், அவர்களுக்குச் சிறிய பகுதிகளாகச் சொந்த நிலமானது. புதிய அழகான மண் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமானது. அந்தக் கிராமத்திற்கென்று பாலர் பாடசாலையை ஆரம்பித்தபோது, உன்னுடன் நாங்களும் அங்கே நின்றோம். நீ அவர்களுக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்திருந்தாய். ஆறு வயது தொடக்கம் பத்துப் பன்னிரண்டு வயதுவரை, எல்லாக் குழந்தைகளும் பாலர் வகுப்பில் படிப்பதற்கு வந்திருந்தார்கள். அது ஒரு மகிழ்ச்சிக்குரிய நாள். இனி அந்தக் கிராமம் தனக்கென்றொரு வாழ்வைக் காணும் என்பது அன்று வெளிப்பட்டது. சில நாட்கள் சென்றன. அந்தக் கிராமத்தவர்களுக்குப் புதரிகுடா என்ற பெயர் பிடிக்கவில்லையாம். அதனைச் சந்திரபுரம் என மாற்றிவ்ட்டார்கள். அதனைக்கேட்ட எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது. உனக்குக் கோபமாக இருந்தது. நீ எசினாய். இனி அப்படிச் சொல்லக்கூடாது என்றே. ஆனால் சந்திரன், நீ உயிரோடு இருக்கும் பொழுதும் உன் மரணத்தின் பின்பும் அந்தப் பெயர் மாறவே இல்லை. நீ அதற்குப் பின் எவ்வளவோ பெரிய பெரிய பொறுப்புக்களில் எல்லாம் இருந்திருப்பாய். ஆனால் நீ தடம்பதித்துச் சென்றது இங்குதான். உன் நினைவுகள் ஆழமாக வேரூன்றிப் போனதும் இங்குதான். சந்தின், உன் நினைவுகளைச் சொன்னபடி சந்திரபுரம் மட்டும்தான் இருக்கிறதென்றில்லை. நீ உருவாக்கிய இன்னொரு கிராமமான பொன்னகர், நாவற்காடு, உன்னைத் தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட முள்ளியவளை, தண்ணீருற்று, முல்லைத்தீவு, பாண்டியன்குளம், பனங்காமம்… ஏன் வன்னி முழுவதுமே உன் நினைவுகளைச் சொன்னபடி நிற்கின்றன. சந்திரன், உனது உள்ளம் சிலவேளைகளில் தாயன்பைத் தேடி அழுவதுண்டு. நீ உந்து அம்மாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தாய் என்பது, எங்களுக்குத் தெரியும். உன்னுடைய சோகம் நிறைந்த இளமைக் காலத்தை நீ, வேலைகளினூடே சொல்வதுண்டு. அந்தக் காலங்களில் எங்கள் முன் கடுமையான வேலைகள் நின்றன. நீ முறிந்து, கஷ்டப்பட்டு வேலை செய்வாய். நாங்கள் வியந்து நிற்போம். “நான் சின்ன வயசிலேயே வயலுக்கை நிண்டனான்” என்பாய் நீ. உன் விழிகளில் ஏதோ ஒரு ஏக்கம் தெரியும். “அண்ணன்மாருக்கும் எனக்கும் சேர்த்து அம்மா பழஞ்சோறு உருட்டித்தருவா” என்பாய் நீ. உன் விழிகளை நாங்கள் பார்ப்போம். நீ வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பாய். சந்திரன், நீ கிளிநொச்சியில்தான் பிறந்தாய். ஆனால் உனது அம்மாவும், அப்பாவும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். உனது அப்பா சாகும்பொழுது உனக்கு இரண்டு வயதாம். உனது இரண்டு அண்ணன்மாரும் சின்னப்பிள்ளைகள். உங்கள் மூன்று போரையும் வைத்துக்கொண்டு உனது அம்மா எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பாள். இப்போதெல்லாம் உன்னுடைய அம்மா உனது படத்தை வைத்துக்கொண்டு விம்மிக் கொண்டிருக்கிறாளாம். சந்திரன், நீ முள்ளியவளையில் அரசியல் வேலை செய்யும்பொழுது, சில நேரங்களில்…… இரவில் உன்னைத் தேடி நாங்கள் வருவதுண்டு. இரவில் சோகமான பாடல் கேட்கும். வீட்டில் உன்னை நாங்கள் காணுவோம். நீ விழித்திருப்பாய். “இந்த விடயம் ஆமிக்காரனுக்குத் தெரிந்தால் பாட்டுக்கேட்கிற வீட்டில் வந்து உன்னைப் பிடிக்கப்போறாங்கள்” என்று, நாம் எசுவோம். நீ வீடு வீடாக வேலிகளுக்கு மேலாகப் பழைய சோறு தேடித் திரிவாய். அதற்காக நீ வெட்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அங்கிருக்கிற எல்லா வீட்டிற்கும் நீ பிள்ளை மாதிரித்தான். உனக்குச் சாப்பாடு தரவேண்டும் என்பதற்காகவே, அவர்கள் இரவில் சோற்றை மிச்சம் வைப்பதுண்டு. சந்திரன், இன்றைக்கு அந்தச் சனத்தினுடைய இதயத்தில் நீ இருக்கிறாயடா! சந்திரன், நீ அரசியல் பேசுவதை நாங்கள் கேட்பதில்லை. சில நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஏதாவதொரு வீட்டின் முற்றத்தில், ஒரு கல்லின்மேல் நீயிருப்பாய். தங்கள் வீட்டுக் கதைகளைச் சொல்லிக்கொண்டே அந்த வீட்டுகாரரும் முன்னாலிருப்பார்கள். அப்போதுதான் நீயும் இந்த மண்ணின் நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருப்பாய். அவர்கள் எவருக்குமே தெரியாது, அவர்களுக்கு நீ அரசியல் படிப்பிக்கிறாய் என்று. கதைத்து முடிந்த பின்பு, “இந்த மண்ணின் விடுதலைக்காக எல்லோரும் போராடத்தான் வேண்டும்” என்பார்கள். முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசத்திற்கு நீ அரசியல் வேலை செய்வதற்கு வந்து, இரண்டு வருடங்கள் சென்றன. இந்தக் கால இடைவெளியில் உன்னிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. எதற்கெடுத்தாலும் கோபப்படும் உனது இயல்பும் மாறி இருந்தது. முல்லைத்தீவு பிரதேசத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. உனதும் உனது தோழர்களதும் கடுமையான உழைப்பு, தேசவிரோத சத்திகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தன. தங்கள் மண்ணின் விடுதலையைப் பற்றி மக்களைச் சிந்திக்க வைத்தது. அந்த விடுதலைக்காக மக்களைப் போராடத் தூண்டியது. சந்திரன், உனக்குத் தெரியும்; அந்த நேரங்களில்த்தான், இந்தியப்படை எம் தேசத்தின் மீது ஒரு யுத்தத்தை நடாத்தியது. நாங்கள் தெருக்களில் நடக்க முடியாமலும், கிராமங்களில் நிற்க முடியாமலும், இருந்த நேரமது. இரவு நேரங்களில் காடுகளிற்குள்ளும், காட்டுக் கரையோரங்களிலும்தான் நாங்கள் படுப்போம். ஆபத்தை எதிர்பார்த்தபடியே இரவின் அச்சத்தில், பசித்த வயிற்ருடன் இருக்கும் எங்களை, நீதான் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாய். நாட்கள் செல்ல செல்ல ஆபத்து நிறைந்த அந்த இரவுகளே இனிமையான இரவுகளாக எங்களுக்கு மாறிவிட்டன. சந்திரன், எங்களின் எல்லாத் தோழர்களும் சொல்வார்கள் “கஸ்டமான அந்த நாட்களும் அந்த நினைவுகளும்தான், இன்னும் எங்களின் மனங்களில் பசுமையாய் படிந்து கிடக்கின்றது” என்று. சந்திரன் நீ அரசியல் வேளைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், தாக்குதற் களங்களுக்குச் செல்வதற்கும் தவறுவதில்லை. உன் கைகள் எதிரிக்கு எதிராகப் பலமுறை துப்பாக்கிகளை இயக்கியிருக்கும். இந்தியப் படைகளுடன் நெடுங்கேணியில் நடந்த சண்டை ஒன்றில் நீ, கழுத்திலும் கையிலும் காயமடைந்திருந்தாய். களத்தில் ஆயுதங்களைக் கைப்பற்ற முன்னேறியபோது நீ காயமடைந்ததாக, உன் தோழர்கள் சொன்னார்கள். நீ எமது முகாமில் சாய்மனைக் கட்டிலில் சாய்ந்திருத்தாய். உன் கழுத்தில் சிக்கிய துப்பாக்கி ரவை, உன்னை வேதனைப்படுத்தியது. நீ அதைவிட அதிகமாக பாவனை, நடிப்புச் செய்தாய். உன் பாவனைகளை எத்தனை தோழர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒரு தோழன் உன்னை அழைப்பான். நீ கழுத்தைத் திருப்ப முடியாமல் உடல் முழுவதையும் திருப்பி அவனைப் பார்ப்பாய். எங்கள் முகாம் முழுவதும் உன்னைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும். இந்தியப் படைகள் எங்களைச் சுற்றி ஒரு வலயத்தை அமைத்து எங்களை நெருங்கிய பொழுதும், நாங்கள் காடுகளிற்குள் மகிழ்ச்சியாக இருந்தோம். போராட்டத்தில் நம்பிக்கையோடு இருந்தோம் என்பது, இந்தியர்களுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது. உனது காயம் சுகமாகியது. அந்த நேரத்தில் முல்லைத்தீவு பிரதேசத்து மக்கள் இந்தியப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு, காடுகளிலும் வயல்களிலும் தஞ்சமடைந்து வாழ்ந்தனர். நீயும் அவர்களுடன் கலந்து நின்றாய். நீயும் உனது தோழர்களும் அந்த மக்களுக்குப் போராட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினீர்கள். போராட்டத்தின் தேவையைப்பற்றி, இந்த மண்ணின் விடுதலையைப்பற்றி, இந்திய ஆக்கிரமிப்பின் நோக்கத்தைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினீர்கள். அந்த நிலையை விளங்கிக்கொண்டு, மக்கள் எங்களை அரவணைத்ததால்தான், ஆக்கிரமிப்பாளனுக்கு இந்த மண் அடிபணியாது தலை நிமிர்ந்துகொண்டது. அந்த நாட்களில்தான், நீ கிளிநொச்சிக்கு அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிகப்பட்டாய். முல்லைத்தீவு மாவட்டத்து மக்களின் கண்கள் உன் பிரிவைத் தாங்காது தவித்தன. ஆனால் உன்முன் இருந்ததோ பெரும் கடமை. நீ கிளிநொச்சிக்குச் சென்ற பின்பு, அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி விஸ்தரித்திருந்தாய். உனது திறமையான செயற்பாடுகள் அந்த மாவட்டத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தின. அந்த நேரங்களில் இரண்டு மூன்று தடவைகள், இந்தியப் படைகளின் சுற்றிவளைப்புக்களிலிருந்தும் நீ தப்பிக்கொண்டாய். வன்னி மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த மாறன் அண்ணாவின் இழப்பின் பின்பு, நீ வன்னி மாவட்ட அரசியற் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாய். அந்த நேரத்தில்தான் இந்தியப் படை இந்த மண்ணை விட்டு வெளியேறியது. நீ வன்னி முழுவதும் அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி, வேலைத் திட்டங்களை வகுத்துக்கொண்டே. புதிதாய்ப் பிறப்பெடுத்த எமது கட்சி அமைப்பும் அந்த நேரங்களில் பலப்பட்டுக்கொண்டது. அந்த நேரங்களில் நாங்கள் நடாத்திய பேரணிகளில், கூட்டங்களில், உனது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பார்கள். உன்னால் எப்படி இவ்வளவு இலகுவாக, தெளிவாக எல்லா மக்களையும் கவரக்கூடியமாதிரிப் பேசமுடிகிறது என்பது, எங்களுக்கு வியப்பாகவே இருக்கும். சிறிலங்கா இராணுவத்தினருடனான சண்டை மீண்டும் தொடங்கியபோது, நீ எங்கேயோவொரு தாக்குதற் களத்தில்த்தான் நிற்பாய் என்பது, எலோருக்குமே தெரியும். அப்படித்தான் நீயும் நின்றாய். கொக்காவில் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் நீ கலந்துகொண்டாய். அந்த முகாமை நாங்கள் வெற்றிகொண்டோம். ஆனால், அங்குதான் உனது அடிவயிற்றில் துப்பாக்கிக் குண்டு தாக்கியது. சந்திரன், நீ எங்கள் வைத்தியசாலை ஒன்றில் கிடந்தாய். உன் விழிகள் நீ தப்பிக் கொள்வாய் என்ற நம்பிக்கையைத் தரவில்லை. உன் உறுதியான கறுத்தத் தேகம் வாடிப்போய்க் கிடந்தது; கலங்கிய விழிகளுடன் நாங்கள் காத்திருந்தோம். சில வாரங்கள் சென்றன. நீ கண் விழித்தாய். ஆனால், உன் கால்கள் இனி இயங்காது என்றார்கள். கால்கள் இல்லாத சந்திரனை எங்களால் கற்பனை கூடச் செய்யமுடியாது சந்திரன்! ஆடாமல், பாடாமல், ஓடாமல் நீ இருக்கவே மாட்டாய். நாங்கள் தவித்தோம். கலங்கி நின்றோம். ஆனால் நீ கலகலப்பாக இருந்தாய். உனது நிலை உனக்குத் தெரிந்த பின்பும் உற்சாகமாக இருந்தாய். சந்திரன், நீ வைத்தியசாலைக் கட்டிலிருந்துகொண்டெ “நான் இங்கையும் அரசியல் வேலை செய்யிறன். இங்கு வருகிற தாதிகளுக்கும், வைத்தியர்களுக்கும், ஏன் என்னை இந்தக் கதவுகளால் எட்டிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் ஒரு போராட்டம் ஏன் நடக்கிறது எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றாய். உண்மைதான்; நீயிருந்த – சோகம்பாடும் அந்த, வைத்தியசாலைகூட கலகலப்பாக மாறிப்போனது. சந்திரன் நடக்கத் தேவையில்லை, அவன் இருந்தாலே போதும் போராடுவான், போராட்டத்திற்குப் பங்களிப்பான் என எங்கள் மனங்கள் எண்ணிக்கொண்டன. அதன் பின்பு; நீயும் உனது தோழர்களும் வைத்திய வசதியைத் தேடிக் கடலில் பயணம் போனதாகக் கேள்விப்பட்டோம். உண்மையில் உங்களுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. கடலிற்குள் தோன்றிய சிங்கள மிருகங்கள் உங்களைக் கவிட்டிருக்கும். உனக்கு நீந்தத்தெரியும். நீ கைகளால் நீந்த முயன்றிருப்பாய். இயலாத உனது கால் உன்னைக் கீழே கீழே இழுத்திருக்கும். கடல் உன்னை மூட ஒரு கணம் தயங்கியிருக்கும். மூடிய பின்பும் ஏற்றுக்கொள்ள முடியாமல் குமுறி இருக்கும். வன்னி மக்களின் மனங்கள் கொந்தளித்ததைப் போலவே, கடலும் உன்னை அணைத்த பின்பு வேதனை தாளாது கொந்தளித்திருக்கும். நினைவுகளுடன் தோழர்கள். நன்றிகள்: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி 1991), களத்தில் இதழ் (09.10.1996). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-santhiran/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வா வா முருகா முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே ஆண்டவர் இல்லம் செல்வோம் (2) என்றும் அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர அருள் வேண்டி பலியிடுவோம் (2) 1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2) கானமும் காற்றும் வேறில்லையே - 2 நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே வேறில்லையே 2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உம் விடியலின் கனவை யாம் கண்டிடனும் (2) மனதினைக் காக்கும் மாண்புடனே (2) மனங்களைப் பலியிட வருகின்றோம் வருகின்றோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல -2 சமபந்தி விருந்தில் சங்கமிப்போம் 1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம் நிறைவாய் பெறுவதே அருளென்போம் இருப்பதைப் பகிர்வதே சமமென்போம் நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு -2 இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு 2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி இதயத்தைத் தேற்றும் இன்ப மொழி தன்னையே தருகின்ற தலைவன் வழி பகிர்வில் உயர்வு காணும் நெறி - இந்த உண்மையை நாளும் உணர்ந்திடவே -2 இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ரமலான் பிறையே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து, நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும், தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! நிச்சயதார்தம் நாளை வதுவை மணம் என்று நாளிட்டு, பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ், கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்! பெரியோர்களின் அனுமதி இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம், வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து, மந்திரக் கோடியுடுத்தி மண மாலை, அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! காப்பு கட்டுதல் நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி, பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி, பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை, காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! பிடி சுற்றுதல் கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி, சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள, மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்! பாணி க்ரஹணம் மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ், மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்! ஸப்தபதி வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து, காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி, தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்! அம்மி மிதித்தல் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான், நம்மை உடையவன் நாராயணன் நம்பி, செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி, அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்! பொறி இடுதல் வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி, அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து, பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! மஞ்சள் நீர் தெளித்தல் குங்குமம் அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து, மங்கல வீதி வலம் செய்து மணநீர், அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல், மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! பாராயண பலன் ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல், தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாசி படர்ந்த மாலை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தன்னன்ன நாதினோம் தன்னன்ன நாதினோம் தன்னன்ன நாதினோம் தன்னானே... தன்னன்ன நாதினோம் தன்னானே.... (2) ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவாம் ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன...... ரெண்டாம் படி எடுத்து ரத்தின கிளியாம் ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன..... மூனாம் படி எடுத்து முத்துப் பல்லக்காம் ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன..... நாளாம் படி எடுத்து நாக ரத்தினம் ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன...... அஞ்சாம் படி எடுத்து அஞ்சு வர்ணக்கிளி ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன...... ஆறாம் படி எடுத்து அரும்பு உதிர ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன..... ஏழாம் படி எடுத்து எசந்த பூவாம் ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன...... எட்டாம் படி எடுத்து பட்டுச்சேலயாம் ஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், சித்திர கோபுரம் கட்டவே(2) ஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன...... கொட்டிய கையும் வலிச்சுப்போச்சு நல்ல கோடி வலவிகள் விட்டுப் போச்சு (2) நித்திரம் வந்து நிலாபம் மறைக்கனும் உத்தரவு கொடு காளித் தாயே (2) தன்ன......
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆலயத்தில் நாம் நுழைகையிலே புது நினைவுகள் எழுகின்றன அந்த நினைவுகளின் புது வருகையிலே நம் நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ... (2) 1. அன்பான மகனைப் பலிகொடுத்த ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2) பண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார் 2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன் இயேசுவும் அங்கே மொழிந்தாரே (2) என் வீடு இது செப வீடு வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வருக வருக இனைந்து வருக
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாசி பட்டினம் சிமானே வலியோரின் கோமான்னே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏகன் உண்மை தூதரே
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னால் 8 ) யை பதியமுடியாமல் இருக்கு இடைவெளி இல்லாமல். 8 யும் ) யும்தட்டச்சு செய்தபின் SPACE BAR யை தட்ட 😎 இப்படி வருகின்றது
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெறும் 10 நிமிடத்தில் சுவையான
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
காமாட்சி அம்மன் விருத்தம்- இறைவனிடம் கையேந்துங்கள்
அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜபமாலை தந்தசற் குருநாதா திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே பெருமாளே . . . பெருமாளே . . .- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே எழுவோம் ஒரு மனதாய் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய் (2) இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம் மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் (2) 1. இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று நிகழ்ந்த பலியை நினைப்போம் இறைவன் மைந்தனே பலிப்பொருளாய் தன்னை இழந்த தியாகம் உரைப்போம் (2) சுயநலம் மறைய சமத்துவம் மலர அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம் 2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த இனிய பலியில் இணைவோம் உறவு விருந்தினை பரிமாறும் திருவிருந்து பகிர்வில் மகிழ்வோம் (2) வலிமையில் வளர வாஞ்சையில் திகழ வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்- இறைவனிடம் கையேந்துங்கள்
அற்புத அன்பனின் அடிதொழவே அவரின் பாதம் அணி திரள்வோம் இத்தனை இகம் வாழ் உயிர்களுமே இயேசுவை வணங்கிடுமே (2) 1. ஆலயமணியின் ஓசையைக் கேட்போம் ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் (2) ஆவியின் அருளால் அறவழி நடப்போம் அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் (2) அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம் ஆனந்தமாய் வாழ்வோம் (நாம்) - (2) 2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம் ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம் (2) அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம் அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் (2) அன்பினில் ... ... - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.