Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காதல் தீபம் காதில் கேளும் கருணை நபியே கல்பில் வாரும் [தேடித் தேடி பாடும் குரலோ] (2) பாலை மணலை தாண்டி வருதோ மதினா வரமாய் சுமக்கும் மேனியே! அழகும் தோற்க்கும் அற்புதம் வியக்கும் உங்கள் முகம் கண்டால் உலகம் சுழலும் உன்னத நபியின் அற்புதப் பேரொளியால் கண்ணில் வைத்துக் காத்திருப்பேன் கண்மணியின் காட்சியதை கல்பில் சுமக்க காத்திருப்பேன் என் மரணம் எய்தும் வரை சுந்தர நபியின் சந்திர முகத்தை ரசித்திட உயிர்த்திருப்பேன் உத்தம நபியின் வழிமுறை அதனை உயிராய் பற்றிடுவேன் எந்தன் உயிரே ! விண் மறைச்சுடரே ! என் கருவிழியே ! என் கல்பாளரே ! (அழகும் தோற்க்கும்) தோன்றிய உலகின் உயிர்கள் யாவும் நபி புகழ் பாடிடுமே நபியின் புகழை மறக்கா வரையில் உலகம் இயங்கிடுமே வாடிய மனமும் வாஞ்சை நபி முகம் கண்டால் மலர்ந்திடுமே உன்னத நபியின் சொற்கள் அனைத்தும் அற்புத சாஸ்த்திரமே (அழகும் தோற்க்கும்) உயிரின அலைகள் அனு தினமாக என் மனக் காதல் உயிலை தொடுத்திடுதே! உணர்வும் துடித்திட தடமாறிப்போகிடும் குழந்தை தாய்கரம் ஏற்றிடும் ... தாயென்றும் நீரே தவித்திடும் போதே! தெளிந்திட கரம் கொடுப்பீர் நபியே! இறையிடம் நானும் இறைஞ்சிடும் நேரம் ... பிழைத்திட பரிந்துரைப்பீர் நபியே! பிழையாக நான் செய்யும் பாவங்கள் என்னை சூழும்... உயிராக உம்மீதில் நான் கொள்ளும் அந்த நேசம் [உயிரே அந்த நேசம் உரையாய் வந்து பேசும்] (2) [என்னை காத்திட கரம் பிடிக்கும்] (2) ஜொலிக்கும் ஜோதியைக் கண்டிடுவோம் கண்மணியின் புகழ்படித்தே ஹவ்துல் கவ்ஸரில் பருகிடுவோம் நம் நாயகம் கரம் பிடித்தே ஜன்னத்தில் இடத்தை உன்னத நபியின் அருகினில் பெற்றிடுவோம் சுவனத்தில் யாவரும் சுகமாய் வாழ்ந்திட பொன்நபி உடன் வேண்டும்
-
ஈழத்தமிழர் அரசியல்
M.K.சிவாஜிலிங்கம் தமிழ்மக்கள் தேசிய கூட்டணி & க.சுகாஷ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பார்வதி மைந்தா பாலகுமாரா சிங்காரவேலா செந்தில்நாதா பைந்தமிழ் தந்த எங்களின் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா கூர்மதியோனே குன்றுறை தீரா சிங்காரவேலா செந்தில்நாதா குரவள்ளியோடு நின்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா மாமயிலேறி வந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா மங்களம் என்றும் சேர்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா சேவற்கொடியைத் தாங்கிய தேவா சிங்காரவேலா செந்தில்நாதா சிந்தையில் வந்து நின்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஓமென்றுரைத்த ஓங்கார நாதா சிங்காரவேலா செந்தில்நாதா அள்ளித்தருவாய் ஆனந்தம் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நீயிருந்தாலே நெஞ்சினில் வீரம் சிங்காரவேலா செந்தில்நாதா ஊரிடுமய்யா உமையின் பாலா சிங்காரவேலா செந்தில்நாதா ஞாயிறும் நீயே திங்களும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நாளும் உன்னை பணிந்திடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா வேலவன் நீயே வேண்டுதல் கேட்டு சிங்காரவேலா செந்தில்நாதா பேரருள் தன்னை தந்திடுவாய் சிங்காரவேலா செந்தில்நாதா மாலவன் மருகா மயில்வாகனனே சிங்காரவேலா செந்தில்நாதா சங்கடம் தீர்க்கும் சண்முகவேலா சிங்காரவேலா செந்தில்நாதா கண்டவர்ப் போற்றும் கதிர்வேலவனே சிங்காரவேலா செந்தில்நாதா உன்பதம்நாடி வந்தோமய்யா சிங்காரவேலா செந்தில்நாதா அறுமுகன் நீயே அழகனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் உள்ளம் அறிந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா திருமுகம் காட்டி அருள்செய்வாயே சிங்காரவேலா செந்தில்நாதா தீந்தமிழ் பாடல் நீ தருவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கரும்பாய் வாழ்வை மாற்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கருணை என்மேல் காட்டிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா பிரம்மனும் போற்றும் பிள்ளையும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பேரறிவாளன் செல்வனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா ஒளவையின் முன்னே வந்தான் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அருந்தமிழ் அள்ளித் தந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா கங்கையின் மைந்தா கார்த்திகை பாலா சிங்காரவேலா செந்தில்நாதா காத்தருள்வாயே செந்தமிழ் வேலா சிங்காரவேலா செந்தில்நாதா சங்கரன் ஈன்ற சரவணபவனே சிங்காரவேலா செந்தில்நாதா சகலரும் போற்றும் சண்முகநாதா சிங்காரவேலா செந்தில்நாதா பங்கயப் பூவில் கண்மலர்தோனே சிங்காரவேலா செந்தில்நாதா பக்தருக்கென்றும் அருள்செய்வோனே சிங்காரவேலா செந்தில்நாதா சுப்ரமணியன் சூரனை வென்றோன் சிங்காரவேலா செந்தில்நாதா சோதனையாவும் தீர்ப்பவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடவந்தோம் உந்தன் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடும்போதே செந்தேன் ஊரும் சிங்காரவேலா செந்தில்நாதா வேழவன் தம்பி வேலவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வேண்டியதெல்லாம் தந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா அறுபடையில் வீற்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் நெஞ்சில் வாழ்ந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா காரிருள் தன்னை நீக்கிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா காவல் தந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீறுடன் நின்ற வீரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றியளிக்கும் சூரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வைத்த தெய்வமும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கண்கள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாவம் தீர்க்கும் பாலனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கைகள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பணிந்தோமய்யா காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா எண்ணியதெல்லாம் ஈடேறவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா இதயம் தானே குளிர்ந்திடவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மண்ணிடை வாழ்க்கை சிறந்திட வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மால்மருகா உன் கருணை வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா உன்வடிவழகைப் பார்த்திருப்போமே சிங்காரவேலா செந்தில்நாதா உன்னடியென்றும் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா சேனாபதியே செவ்வேல் கோவே சிங்காரவேலா செந்தில்நாதா சீருடன் வாழ செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீணாய் போகும் வாழ்நாள் தன்னில் சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றிகள் காண செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தேனாய் எங்கள் நாவில் ஊறும் சிங்காரவேலா செந்தில்நாதா திருமுருகா உன் இனிக்கும் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா தானாய் வந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தயவுடன் எம்மைப் பார்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஏனோ இன்னும் மௌனம் அய்யா சிங்காரவேலா செந்தில்நாதா என்றும் உன்னைப் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா பிள்ளைத்தமிழில் வாழும் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா பிணிகள்த் தீர்க்கும் வல்லமையோனே சிங்காரவேலா செந்தில்நாதா கன்னித்தமிழில் கலந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா கதிராய் வந்து ஒளி தருவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தீவினையாவும் தீர்த்திடுவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தெள்ளுத் தமிழின் உள்ளிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா சோர்வினை நீக்கும் சுந்தர பாலா சிங்காரவேலா செந்தில்நாதா சொல்லிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா ஆறுமுகத்தோன் நீயிருந்தாதாலே சிங்காரவேலா செந்தில்நாதா
-
எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்
எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். மே.21.2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே! விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்துருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப்படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது. பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை: வேதனைகள் புரிவதில்லை: உடல் உபாதைகள் அழுத்துவதில்லை: இயற்கை கூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியார் பால்ராஜ்க்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்களங்களங்களையெல்லாம். அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான். தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப்பண்புகளும், போர்க்குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க. ஆளுமை மிக்க இலட்சியப்போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள் எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதே நேரம் எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதிகளையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன. பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்து கொண்டிருப்பான். ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ வே.பிரபாகரன் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள். நன்றி: சமர்கள் நாயகன் நூல். https://thesakkatru.com/my-love-commander-is-brigadier-balraj/
-
கடற்கரும்புலி மேஜர் அன்பு
கடற்கரும்புலி மேஜர் அன்பு கண்ணீரைக்கடந்து… ‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்…… இன்பருட்டி ‘வான்” அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த ‘வான்” அதிர்ந்து கொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலையில் விழுந்தது. பொறுப்பாளர் அன்புவை அழைத்தார். ‘அன்பு…. நீதான் அவர்கள எப்படியாவது அமைதிப்படுத்த வேணும்…..” அன்பு முதலில் தயங்கினாலும், நிலைமையைப் புரிந்தவனாய் தன் அம்மாவோடும், உறவுகளோடும் போய்க் கதைத்தான். அம்மா மகனைக் கட்டிப்பிடித்து அழுதா….. காலில விழுந்து கும்பிட்டா….. ‘தம்பி கரும்புலியாப் போகாதையடா….” உடன்பிறப்புக்களோ அவன் கையையும் காலையும் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அன்புவிடம். திருவள்ளுவர் சொன்ன கூற்று அவன் மனத்திரையில்… ‘பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” அவன் முடிவெடுத்தான். ‘நான் கரும்புலியாப் போகேல்லையெண….” அம்மா கேட்டபடி ஊர்க்கோயில்கள் எல்லாவற்றின் மீதும் ‘சத்தியம்” செய்தான். பொய்யே பேசாத அவன் பொய்ச் சத்தியம் செய்யுமளவிற்கு சூழ்நிலைக் கைதியானான். அம்மா நம்பிக்கொண்டு வீட்டுக்குப்போக முற்றுகையிட்ட உறவுகள் பின்னாலே… ஒருவாறாக அன்பு என்ற பெருமழை ஓய்ந்து போக அன்பு சிரித்தபடி போராளிகளிடம் வந்தான். போராளிகளின் விழிகள் கசிந்திருந்தன. உலகில் எந்தவொரு உயிரினமும் ஆழமாய் அன்பு செலுத்துவது ‘அம்மா” என்ற தாய்மையில்தான் எவ்வளவுதான் மனவுறுதி படைத்தவனாக இருந்தாலும், அம்மாவின் கண்ணீர் அவனை ஆட்டங்காணச் செய்துவிடும். ஆனால், அன்புவோ… தான் விரும்பித் தேர்ந்தெடுத்த கொள்கையில் இருந்து சற்றும் தளரவில்லை. தனது தாய், உறவுகள் என்ற குறுகிய வட்டத்திற்காக நமது தாய் மண்மீது அவன் வைத்த பற்றுதலைத் துறக்கத் துணியவில்லை. 20.09.1995, இன்பருட்டி வான் கலகலக்கத் தொடங்கியது. அன்புவை வேவு பார்த்துக் கொண்டிருந்த தம்பி தகவல் சொல்ல அம்மாவிடம் ஓடினான். ‘அம்மா… நேற்றைக்கு நிண்ட படகிலதான் அண்ணா நிக்கிறானெண….” அம்மாவுக்குள் எரிமலை…. இன்பருட்டி வானை நோக்கி அம்மா ஓடினாள். இன்பருட்டிக் கரையில் அம்மாவின் தலைக்கறுப்பைக் கண்ட அன்பு படகிற்குள் மறைவாக இருந்தபடி எல்லோரையும் பார்த்தான். தலையிலும் வயிற்றிலும் அடித்தடித்து அம்மா மண்ணில் புரண்டு அழுதாள். உடன்பிறப்புக்களும் ஏதேதோ சொல்லி அழுதார்கள். படகின் பொறி ஓசையை மீறி அவர்கள் சொல்லி அழுவது மட்டும் புரியவில்லை. ஆனால், அவர்கள் துடித்து அழுவது மட்டும் அன்புவின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. தாயின் மீதும், உடன்பிறப்புக்கள் மீதும் அன்பு வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாய் அன்புவின் கண்களிலும் நீர்த்திரை. எத்தனையோ மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான அவன் பயணம்… அன்பு உறவுகளின் கண்ணீரைக் கண்டு தடைப்பட்டுப் போகவில்லை. அவன் பயணம் கண்ணீரைக் கடந்துசென்று வென்றது. நினைவுப்பகிர்வு: பிரமிளா. நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (04.09.2008). https://thesakkatru.com/black-sea-tiger-mejor-anbu-anthamaan/
-
லெப். கேணல் ஜஸ்ரின்
லெப். கேணல் ஜஸ்ரின் எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின். போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. 1984ம் ஆண்டு காலத்திலிருந்து இந்த மண்ணை முத்தமிடும்வரை பல்வேறு வகைகளில் போராட்டத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவன் அவன். பயிற்றி முகாம் பொறுப்பாளராக – வெடி பொருட்கள் தயாரிக்கும் குழுவுக்குப் பொறுப்பாக – குழுத் தலைவனாக, இறுதியில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் 3வது தளபதியாக இவ்வாறு இவன் ஆற்றிய பங்கு அளப்பெரியது. பயிற்சி முகாமில் சிலர் தனித்துவமாக தெரிவார்கள். பல நூறு பேர்களுக்குள் அவர்களது ஆற்றல் தனித்து மின்னும். அவ்வாறு தமிழக மண்ணில் அமைந்திருந்த எமது ஐந்தாவது பயிற்சி முகாமில் இனங்காணப்பட்ட போராளிகளில் ஒருவன்தான் ஜஸ்ரின். இவனது திறமைகளை அவதானித்த அந்தப் பயிற்சிமுகாமை நடத்திய ராதா இவனைத் தன்னோடு மன்னாருக்குக் கூட்டிச் சென்றார். மன்னார் மண்ணில் பயிற்சி முகாமமைத்து போராளிகளை உருவாக்கும் பொறுப்பு இவனுக்கு வழங்கப்பட்டது. தலைவரிலிருந்து பொன்னம்மான் கற்றதை, பொன்னம்மானிலிருந்து ராதா கற்றதை, ராதாவிலிருந்து ஜஸ்ரின் கற்றதை மொத்தமாக மன்னார் மாவட்டப் போராளிகள் கற்றுக்கொண்டனர். மன்னார் மண்ணிலிருந்து 25 இராணுவம் பலி, 50 இராணுவம் பலி என்றெல்லாம் செய்தி வரும்போது இவன் தனது தோழர்களிடம் “பார் மச்சான், என்ரை பெடியள் எப்படிச் சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு” என்று சொல்லி மகிழ்ச்சியடைவான். ஒரு தந்தையின், ஒரு ஆசிரியனின் நிலையிலிருந்து பெரும் மகிழ்ச்சியல்லவா அது! வரண்ட பூமி என இனங்காணப்பட்ட மன்னார் தாக்குதலில் மட்டும் வளமான பூமி என இனங்காணப்பட்டது. விக்டரின் காலத்திலிருந்தே அந்தப் பெயர், அதைத் தொடரச் செய்ததில் கணிசமான பங்கு ஜஸ்ரினுக்கு உண்டு. போர்த் திட்டமிடுதல், பயிற்சி அழித்தலில் மட்டுமல்ல, பல்வேறு வகையான ஆற்றல்களும் மிக்கவனாகவே இனங்கானப்பட்டான். இவன் ஒரு சிறந்த நடிகன். பல்வேறு வகையான பாத்திரங்களில் தோன்றி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவன் இவன். இவனோடு பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தவர்கள் நத்தார் தாத்தாவாக இவன் துள்ளி ஆடிய அழகையும், ஒரு கலைநிகழ்ச்சியில் “ஏக் தோ தீன்” என்ற கிந்திப் பாடலுக்கு உடலை அசைத்து அசைத்து ஆடிய ஆட்டத்தையும் பசுமையான நினைவுகளாக நினைவுகூருகின்றனர். மாறுபட்ட முகவடிவங்க்களை வெளிப்படுத்துவதில் வல்லவன் இவன் என்பதில் இவனைத் தெரிந்த எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. அதே போலவே சமையல் செய்வதிலும் நளன்தான். அத்துடன் உணவு சமைக்கும் முறைபற்றி இவன் விபரிக்கும் பாங்கு — அது அலாதியானதுதான் — இப்படி — அப்படி —- என்று இவன் அபிநயத்தோடு சமையல் செய்யும் முறையைக் கேட்டவருக்கே நாவில் எச்சில் ஊறும். தான் தங்கியிருக்கும் முகாமில் கூட இருப்பவர்களுக்கு விசேடமான உணவுவகைகளை தயாரித்துக் கொடுப்பது இவன் வழக்கம். இவனுக்கு தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசும் ஆர்ரளுமிருன்தது. எப்போதும் மீசையில்லாமல் நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் காணப்படும் இவன் சிங்களம் பேசும்போது அசல் சிங்களவனே நம்பமாட்டான் இவன் தமிழனென்று. பயிற்சி முகாமில் இவன் ஏற்ற பாத்திரங்களிலொன்று சிறிலங்கா இராணுவ அதிகாரியாகத் தோன்றியமை. அதை இவனுடன் பயிர்சிஎடுத்த போராளிகள் மறக்கவே மாட்டார்கள். மிக இளகிய மனம், இறக்க சுபாவமுடைய இவன் தோழர்களுடன் முரண்டு பிடிப்பதுமுண்டு. பின்னர் தானே தணிவான், கண்ணீர் விட்டு அழுவான். சண்டை பிடித்தவர்களுடன் முன்னதைய விட இன்னும் நன்றாகப் பழகுவான். “இதுதான் ஜஸ்ரின்” என்று அவர்களுக்குத் தெரியுமாதலால் அவர்களும் ஒன்றும் பேசுவதில்லை. போர் இவனுக்குப் பிரியமானது. மன்னாரில் விக்ரரைக் குறிவைத்து 1986ம் ஆண்டு நாயாற்று வெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து அந்த மோதலை எமக்குச் சாதகமான சண்டையாக மாற்றியவர்களில் இவனும் ஒருவன். அந்த மோதலில் இவனது காலிற் பட்ட காயம் ஏதோ ஒரு வகையில் புதுப்பித்துப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தது. இவனது மரணம் வரை ஓடும் போதும் நடக்கும் போதும் அது இவனுக்கு வேதனையைக் கொடுத்தது. ஆனால் அதை இவன் கவனத்திலெடுக்கவில்லை. சிறிலங்காவுடனான போர், பின்னர் இந்தியப் படைகள் தொடுத்துக் கொண்ட புலிகளின் போர், தற்போது மீண்டும் சிறிலங்கா இராணுவத்துடன் நடைபெறும் போர், அனைத்தையும் இந்தக் காயத்துடனேயே இவன் எதிர்கொண்டான். வன்னிப் பிராந்தியமே இவனது போர்த்திறனை அறிந்து கொண்டது. கட்டைக்காட்டில் சடலங்கலாகச் சென்ற பல இராணுவத்தினர் இவனது திறமைக்குச் சாட்சிகளாயினர். இறுதியில் எமது த்தாயகப் பூமியைப் பிரிக்கும் நோக்கில் மணலாற்றில் சிறிலங்காப் படைகள் நடாத்திய போரை முறியடித்தான். அந்தப் போரிலேதான் இவன் வீரமரணமடைந்தான். எல்லையில் நின்று எதிரியை விரட்டிய இவன் பூரணமான மனநிறைவுடன் வீரமரணமெய்தினான், தான் உருவாக்கிய போராளிகள் நாளை தான் பிறந்த காங்கேசன்துறை உட்பட தமிழீழ மண் முழுவதையும் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன். நினைவுப்பகிர்வு: மனோ. நன்றி – களத்தில் இதழ் (01.05.1992). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-justin/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே – அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே – பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் – பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்) உபாயமாய் நீங்கிவிடும் – என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே – தேன் 4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் – நீயும் அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார் ஆசை கொள் நீ மனமே – தேன் 5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம் – அதைப் பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே – தேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யாஅல்லாஹ் யாரசூல்லாஹ்(ஸல்)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாடல்களைப் பாடியவர்கள் திருமதி மும்பை ஜெயஸ்ரீ மற்றும் திருமதி.வித்யாவும். இருவருமே வயலின் மேதை திரு லால்குடி ஜெயராமனின் சீடர்கள். ராகம் :தன்யாசி தாளம் : ரூபகம் பல்லவி பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கு இடரில்லை வரகுண பாலகிருஷ்ணன் பாதமலர்..... அனுபல்லவி நீலமுகில்போலழகன் நிறைமதி வதனமதனில் இளநகை நிலவருள் ஒளி தவழும்....... (பாலகிருஷ்ணன்) சரணம் கோகுலம் பிருந்தாவனம் யமுனாவிஹாரி கோபாலன் கோபிஜன மன மோஹன முரளி கான விலோலன் வியாகுலம் தவிர்த்து அன்பர் மனதில் வாழ் கருணாளால பாலன் மழை தடுக்க கோவர்தனமலை எடுத்த திண்தோளன் பிழைபொறுத்தருள் தயாளன் பிரமன் பணி மலர்த்தாளன்...(பாலகிருஷ்னன்)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனி பூவானாலும் சரவணப்பொய்கை பூவவேன் பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனி பூவானாலும் சரவணப்பொய்கை பூவவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ்விளக்க பேச்சாவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ்விளக்க பேச்சாவேன் மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானலும் பஞ்சாமிர்தச் சுவையாவேன் சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானலும் பஞ்சாமிர்தச் சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் முருகா முருகா முருகா முருகா முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா பாசம் அகன்றதய்யா-பந்த.... உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா வீரமிகும் தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் – இந்த தாரணி மீதினில் ஆளுகை செய்திட சடுதி வாருமேன் 2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன செல்வக் குமாரனே – இந்த சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற சேதி கேளீரோ? 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண் பூத்துப் போகுதே;- நீர் சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே 4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை நாடித் தேடுதே ; – இந்த நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள் தேடிவாடுதே 5. சாட்சியாக சுபவிசேஷம் தாரணிமேவுதே; – உந்தன் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மை தேடியே வந்த நாதனை ஸ்தோத்தரிப்போம் 2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தங்கியே விட்டாரே 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளினதாலே நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி பகர வேண்டியதே 4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில் ஜெயக் கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற மன்னனை ஸ்தோத்தரிப்போம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
லைலதுல் கத்ர் தௌபாவும் துஆவும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாகூர் தர்கா கந்தூரி
-
களைத்த மனசு களிப்புற ......!
பூநகரியில் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டிச் சவாரி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ இருக்க எனக்கு பயமேது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓசை ஒலியெலாமானாய்.. அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : ஆறாம் திருமுறை பண் : திருத்தாண்டகம் நாடு : சோழநாடு காவிரி வடகரை தலம் : திரு ஐயாறு ஓசை ஒலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிது மினியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
இயற்கை சீற்றத்தால் கீழடி அழிவுற்றிருக்குமா? – ஆய்வுகள் தொடங்கின சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல்துறையினர் சார்பில் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வில் பல பழமையான பொருட்கள் பல மீட்கப்பட்டன. பானைகள், வடிகால் அமைப்பு குழாய்கள், தங்க நாணயங்கள், எடைக் கற்கள், மனித எச்சங்கள் போன்ற பல பொருட்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளன. இவை 2600 ஆண்டுகள் பழமை வாய்தவை என கண்டறியப்பட்டுள்ளதுடன், இவற்றை உறுதிப்படுத்தும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு கிடைத்த பொருட்கள் சங்ககால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் எங்கு சென்றார்கள், இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் என்ன என அறிவதற்காக, நிலவியல் துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வுப் பணிகள் நேற்றுத் தொடங்கியுள்ளன. டேராடூன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையில் இரு ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்களுடன் நேற்று ஆய்வுப் பணிகள் தொடங்கின. இதற்காக கீழடியிலுள்ள நிலப்பரப்பிலிருந்து 13 மீற்றர் ஆழம் வரை பல்வேறு இடங்களில் மண் அடுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வைத்து கீழடி நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின் மூலம் இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், கீழடி பகுதி கடல் உள்வாங்கியதால் அழிந்திருக்குமா, அல்லது சுனாமி போன்றவற்றால் அழிந்திருக்குமா, மக்கள் இடம்பெயர்ந்ததால் அழிந்திருக்குமா என ஆய்வு செய்யவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக கீழடியில் சர்ஃபேஸ் ஸ்கானர் என்ற நவீன லேசர் கருவி மூலம் அகழாய்வுப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இந்த லேசர் கருவிகள் தரை மட்டத்திலிருந்து 500 மீற்றர் ஆழத்திற்கு ஊடுருவி, கீழே பழங்கால கட்டிடங்கள், பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் திறன் கொண்டவை. இதேவேளை வரும் செப்டெம்பர் இறுதியுடன் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று, எதிர்வரும் ஜனவரியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.ilakku.org/இயற்கை-சீற்றத்தால்-கீழடி/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனின் வானக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார் இறைவனின் படியேறீ… என்னை தந்தேன் விருந்துண்டேன் உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன் இறைவனின் வா…னக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார் இறைவனின் படியேறீ… என்னை தந்தேன் விருந்துண்டேன் உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன் எந்தன் நாவில் தினம் வந்திடுவா..ர் எந்தன் நெஞ்சில் என்றும் தங்கிடுவா..ர் உந்தன் அன்பில் தினம் வளர்ந்திடுவே..ன் உன்னில் இன்பம் என்றும் நிலைத்திடுவே..ன் திருவிருந்தே… தேனமுதே… திருவடி பணிகின்றே…..ன் திருவிருந்தே… தேனமுதே… திருவடி பணிகின்றே….ன் மலராக மலர்ந்து வந்தேன் மனதினிலே.. பூஜை செய்வேன் பூஜை செய்வேன் பூஜை செய்வேன் இறைவனின் வானக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார் இறைவனின் படியேறீ…. என்னை தந்தேன் விருந்துண்டேன் உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன் விண்ணின் அருள் என்னில் பொழிந்திடுவா..ர் கண்ணின் மணி என்னை காத்திடுவா..ர் அன்பின் பாடல் என்றும் இசைத்திடுவே…ன் என்னில் தெய்வம் என்றும் மகிழ்ந்திடுவே.ன் தினம் தினம் நா….ன் வருகின்றேன் விருந்தினில் மகிழ்கின்றே…ன் தினம் தினம் நா….ன் வருகின்றேன் விருந்தினில் மகிழ்கின்றே…ன் மலரோ டு மகிழ்ந்து வந்தேன் மனதினிலே.. பூஜை செய்வேன் பூஜை செய்வேன் பூஜை செய்வேன் இறைவனின் வா..னக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார் இறைவனின் படியேறீ… என்னை தந்தேன் விருந்துண்டேன் உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன் இறைவனின் வா…னக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார் இறைவனின் படியேறீ… என்னை தந்தேன் விருந்துண்டேன் உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடிப் பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா 1. என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைப்பேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாய்மடி சேரும் சேய் போல ஓடிவருவேன் எனையன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான் எனையென்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான் நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான் நான் தேடும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான் 2. என் நிலை பாதை மாறும் வேளை வாசல் தேடிவருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாகம் கொண்ட மான் போல ஓடிவருவேன் என் வழித்துணையாய் ஆன தெய்வம் நீதான் எனையென்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான் நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான் நான் பேசும் மொழியில் அகர னகரம் நீதான் நான் வேண்டும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லா அல்ஹம்துலில்லா... எல்லா புகழும் அல்லா || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS | ALLAH
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருமால் பெருமைக்கு நிகர் ஏது ?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி யார் தருவார் இந்த அரியாசனம்? யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்? பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ.. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வரம் தருவாய் அம்மா நாதர்முடி மேல் அமர்ந்திருக்கும் நல்ல பாம்பே