Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. சுவையான இந்த உணவை தெரியுமா? - வேணாட்டு விருந்து | Episode 1 | சக்க வத்தல் |
  2. 1 கப் கோதுமைமாவு வச்சு புதிய சுவையில் மொறுமொறு கிரிஸ்பியான evening snacks/New easy healthy snacks ..
  3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் இந்த சூப் குடிங்க
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  5. அன்பனே விரைவில் வா - உன் அடியேனைத் தேற்ற வா 1. பாவச் சுமையால் பதறுகிறேன் பாதை அறியாது வருந்துகிறேன் பாதை காட்டிடும் உன்னையே நான் பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன் அருளை அளிக்க வேண்டுகிறேன் வாழ்வின் உணவே உன்னையே நான் வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் 3. இருளே வாழ்வில் பார்க்கிறேன் இதயம் நொந்து அழுகிறேன் ஒளியாய் விளங்கும் உன்னையே நான் வழியாய் ஏற்றுக் கொள்ளுகிறேன் 4. ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என்பு உருகிக் கிடக்கிறேன் வாழ்வின் விளக்கே உன்னையே நான் வாழ்வின் துணையாய் பெறுகிறேன்
  6. தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா (2) 1. எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது துணையாகி எனையாள்பவா (2) மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு -2 குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா 2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும் வழிகாட்டும் ஒளியானவா (2) நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே -2 நாதா உன் புகழ்பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
  7. குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று அடைவேனோ பகைகொள்துரி யோத னன்பி றந்து படைபொருத பார தந்தெ ரிந்து பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே பழுதறவி யாச னன்றி யம்ப எழுதியவி நாய கன்சி வந்த பவளமத யானை பின்பு வந்த முருகோனே மிகுதமர சாக ரங்க லங்க எழுசிகர பூத ரங்கு லுங்க விபரிதநி சாச ரன்தி யங்க அமராடி விபுதர்குல வேழ மங்கை துங்க பரிமளப டீர கும்ப விம்ப ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த பெருமாளே
  8. என்னை அனுப்பும் தெய்வமே உம் மக்களின் விடுதலைக்காய் (2) என்னைத் தேர்ந்ததுவும் நீதான் என்றாய் என்னை அழைத்ததுவும் நீ தான் என்றாய் (2) நான் சிறுவன் என்றேன் சொல்லாதே என்றாய் ஐயோ பயம் என்றேன் அஞ்சாதே என்றாய் (2) பேசவும் தெரியாது என்றேன் பேசுவதோ நீ என்றாய் அசுத்த உதடுகள் என்றேன் அன்பின் தீயினால் சுட்டு விட்டாய் என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன் பிடுங்கவும் தகர்க்கவும் அழிக்கவும் கவிழ்க்கவும் கட்டவும் நடவும் இன்று நான் உன்னைப் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் நான் கலங்கி நின்றேன் கலங்காதே என்றாய் நான் தயங்கி நின்றேன் ஏன் தயக்கமென்றாய் (2) பாதையும் தெரியாது என்றேன் பாதையுமே நீ என்றாய் தகுதிகள் எனக்கில்லை என்றேன் உந்தன் ஆவியால் என்னைத் தொட்டு விட்டாய் - என்னை அனுப்பும்..
  9. எந்நாளும் உம்மை மறவேன்... யாரஸூலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா உலகம் தோன்றிட காரணமான... உத்தம நபி மகள் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகே
  11. கற்பூர நாயகியே .! கனகவல்லி , காலி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே ---- கற்பூர நாயகியே புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி உன்னடிமைச் சிறியோனை நீ ஆதரி ---- கற்பூர நாயகியே உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே..! எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா கண்ணீரை துடைத்துவிட ஒடிவாம்மா காத்திருக்க வைத்திருத்தல் சரியோ அம்மா சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு ---- கற்பூர நாயகியே கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும் காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும் பண்ணமைக்கும் நா உன்னையே பாட வேண்டும் பக்தியோடு கை உன்னையே கூட வேண்டும் எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும் இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும் மண்ணளக்கும் சமயபுரம் மாரியம்மா மக்களுடைய குறைகளையும் தீருமம்மா ---- கற்பூர நாயகியே நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும் நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும் கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும் சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும் ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும் மற்றதெல்லாம் நான் உனக்குச் சொல்லலாமா.. மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா ---- கற்பூர நாயகியே அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டா அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டா கண்ணுக்கு இமையின்று காவலுண்டோ கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ எண்ணைக்கும் விளக்குக்கும் பேத முண்டோ என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ ---- கற்பூர நாயகியே அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும் அறிவுக்கே என் காத்து கேட்க வேண்டும் வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும் வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும் பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும் பரிவுக்கே நானென்றும் வாழ வேண்டும் ---- கற்பூர நாயகியே கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை செம்பவள வாயழகி உன் எழிலோ சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை அம்பளவு விழியாளே உன்னை என்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை ---- கற்பூர நாயகியே காற்றாகி கனலாகி கடலாகினாய் கருவாகி உயிராகி உடலாகினாய் நேற்றாகி இன்றாகி நாளாகினாய் நிலமாகி பயிராகி உணவாகினாய் தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய் போற்றாத நாளில்லை தாயே உன்னை பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை ---- கற்பூர நாயகியே
  12. குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று அடைவேனோ பகைகொள்துரி யோத னன்பி றந்து படைபொருத பார தந்தெ ரிந்து பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே பழுதறவி யாச னன்றி யம்ப எழுதியவி நாய கன்சி வந்த பவளமத யானை பின்பு வந்த முருகோனே மிகுதமர சாக ரங்க லங்க எழுசிகர பூத ரங்கு லுங்க விபரிதநி சாச ரன்தி யங்க அமராடி விபுதர்குல வேழ மங்கை துங்க பரிமளப டீர கும்ப விம்ப ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த பெருமாளே
  13. சின்ன சின்ன பூக்கள் சிரிக்குது எங்கும் சிங்காரமாய் வண்டு பாடுது (2) என்ன நினைத்து இந்த இன்ப அலையோ - 2 மன்னன் இன்று வந்த இரவில் நெஞ்சில் உனக்கோர் இடம் தந்து ரசிப்பேன் பூபாளம் உனக்காய் நான் பாடுவேன் (2) எந்தன் விழி வாசலிலே நான் உனக்காய் காத்திருப்பேன் (2) என் வாழ்வின் செல்வம் நீயாகுவாய் இந்த ஏழையின் கனவும் நீயாகுவாய் மன்னன் இன்று வந்த இரவில் உந்தன் வரவால் மனம் பொங்கி மகிழும் ஓயாத துன்பங்கள் எனை நீங்கிடும் (2) நிலையான என் சொந்தமே மனம் நிறைவான என் பந்தமே (2) என் மனக் கோட்டையில் பூவாகுவாய் என் வாழ்வு மலர்ந்திட வழியாகுவாய் மன்னன் இன்று வந்த இரவில்
  14. உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம் உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2) உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் - 4 1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம் பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் - 2 மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள் மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள் நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள் உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள் எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2 2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் - 2 காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் - 2 விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும் கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும் நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள் நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள் எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2
  15. அல்லாஹு அக்குபர் |Allahu Akbar | நாகூர் ஹனிபா | தமிழ் முஸ்லீம் பாட்டு
  16. உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என் வாழ்வு வலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என் வாழ்வு வலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா. பள்ளம் நோக்கி பாய்ந்துவரும் வெள்ளம் என அருள்படைத்த வல்லலே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே பள்ளம் நோக்கி பாய்ந்துவரும் வெள்ளம் என அருள்படைத்த வல்லலே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என் வாழ்வு வலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா. தென் பழனி மலைமேலேன தண்டபாணி கோலத்திலே கண்குளிரகண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் இன்னும் அருள்படைத்த வடிவம் தோன்றுமே தென் பழனி மலைமேலேன தண்டபாணி கோலத்திலே கண்குளிரகண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் உந்தன் அருள் வடிவம் தோன்றுமே. உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என் வாழ்வு வலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா ஆடி வரும் மயில் மேலே அமர்ந்துவரும் பேரலகே நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா வாழ்வில் நலம்அனைத்து. பெறஅருல்வா முருகையா ஆடி வரும் மயில் மேலே அமர்ந்துவரும் பேரலகே நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா வாழ்வில் நலம்அனைத்து பெறஅருல்வா முருகையா உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என்வாழ்வுவலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா
  17. நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை முருகா முருகா முருகா தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய் தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய் தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய் தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய் குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் ஞான குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய் திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய் நாயேனை நாளும் நல்லவனாக்க நாயேனை நாளும் நல்லவனாக்க ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய் ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய் நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நெஞ்சே நீ வாழும் எல்லை வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம் வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம் தூயா முருகா மாயோன் மருகா தூயா முருகா மாயோன் மருகா தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம் உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம் நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை முருகா முருகா முருகா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.