Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எப்போ வருவாரோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தா தை என்றாடுவார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உள்ளம் உருகுதையா முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா எழை எந்தன் என் உள்ளம் நீ வா எங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா அன்பே அன்பே தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீறாட்டினாய் நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும் உன்பாதம் சேர வழிகாட்டினாய் நீயில்லை என்றால் நானும் இல்லையே நீயின்றிபோனால் வாழ்வும் இல்லையே நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமே வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும் எழுகின்ற நேரங்கள் புதுவாழ்வின் பாதைகள் வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2 அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேலை நிலமாக நின்று தாங்கிக்கொள்வாய் மலர்சோலை நானும் மலராது போனால் மழையாக என்னில் வளம் சேர்க்க வா நீயில்லை என்றால் இன்பம் சேருமா நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா நீயில்லை என்றால் கீதம் தோன்றுமா நீ என்னுள் சேர்ந்தால் பேதம் வேண்டுமா என் வாழ்வில் எல்லாமே நீ தந்த செல்வங்கள் என்வாழ்வில் துன்பங்கள் நீர் பூத்த வானங்கள் வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2 அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா நபி சலாம் அழைக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தந்தைக்கு மந்திரத்தை சாரப் பொருள் உரைத்து தகப்பன் சாமியென பெயர் பெற்ற முருகா மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமியென வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமிநாதா சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா (2) பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே (2) உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா (சொல்ல ) முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மனமொழிக் கூறும் (2) உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது(2) அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா (சொல்ல )
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாலாலே அபிஷேகம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
(நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) - 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும் ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர் மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம் நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும் நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 2. தளர்ந்திடாமல் தகர்ந்திடாமல் தேவரீர் என்னை காத்திடும் வீழ்ந்திடாமல் தாழ்ந்திடாமல் தேவரீர் என்னை பேணிடும் இதயம் நினைத்துப்பாடும், தயவு நிறைந்த தெய்வசிநேகம். நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். (நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) - 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.
-
பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம்
பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம் பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல் 03.09.1995 கடற்கரும்புலிகள் மேஜர் நகுலன், மேஜர் கண்ணாளன் பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம். கடல் தரையோடு கைகோர்க்கும் ஒரு நெய்தற் கிராமம். புரட்டாசி 3ம் நாளின் கருக்கல் பொழுது. நிலவற்ற வான் எதுவும் மின்னுதலற்ற ‘றாடார்‘ திரை. அலைகடல் கடந்து அரசாட்சி படர்ந்த சோழப் பேரரசனின் கொள்ளுப் பேரர்கள் நீலவரிப் படகுகளை நீருக்குள் இறக்கினர். சுடுநீர்ச் சுரப்பிகளை முடியில் தரித்து தேசத்திற்கு மகிமையளிக்கும் தலைநகர் கடந்து….. மீன்பாடுகின்ற ஒரு கரையோரக் கிராமத்தில் தரையேறும் பயணம். ‘கண்ணாளனின்’ தோள்களில் தட்டி ‘நகுலன்’ சிரத்தான். அணி புறப்பட்டது. அலை வழிவிட்டது. பயணம் விரைவுபட்டது. ஆழியில் கவிந்திருந்த காரிருள் பிரித்து விடுதலைப்புலிகளின் படகணி விரைந்து கொண்டிருக்க, இரவு 9:30 மணியை நேரம் கடந்து கொண்டிருக்க குச்சவெளியை அணி நெருங்கிக் கொடிருக்க…., எதிர்பட்டன ‘டோறா’க்கள், தடைப்பட்டது பயணம். இயக்கப்பட்டன துவக்குகள். கடுஞ்சண்டை….. சன்னங்கள் செய்த வர்ணஜாலம்….. இருள் வானில் கிழித்தன ஒளிக்கோடுகள். ஐந்து நாட்களுக்கு முன்னர்…. முல்லைத்தீவு ‘ஐரிஷ் மோனா‘ப் பிசகில்….. இரண்டு ‘டோறா’ க்களை இழந்த கணக்கை முடிக்கும் அவாவில் விரைந்து தாக்கினான் பகைவன். எதிர்த்து நின்று விடாமல் மோதிய கடற்புலிகளின் படகுகள் திடீரெனத் திரும்பியோடத் தொடங்கிவிட்டன. பகைவன் பூரித்துப் போனான். தலைகால் புரியாத மகிழ்வில் அவன் தன்னிலை மறந்தான்! உற்சாகம் கரைபுரண்டோட “டோறா”க்கள் கலைத்துக்கொண்டோடின. ஆனால்… அது ஒரு தந்திரோபாயப் பின்வாங்கல்…. பொறிக்குள் விழ வைக்க விடுதலைப்புலிகள் செய்த ஒரு யுத்த உத்தி! மதிநுட்பத்தோடு நகர்த்திய வியூக வளைவு…. உவகை பொங்கியதால் பகைவன் ஊகிக்கத் தவறினான். ஆத்திரத்திலும், ஆனந்தத்திலும் அவன் நிதானமிழந்தான். துரத்தி….. துரத்தி…. அடித்தான். குச்சவெளியிலிருந்து புல்மோட்டை வரை இருபது நிமிட நேர மரண ஓட்டம். கடற்புலிகளின் படகுகளை ‘டோறா’க்கள் மிக வேகமாக நெருங்கின. படகுகளை முந்திக்கொண்டு சன்னங்கள் சீறின. ஆகக் கடைசிப்பதிவு 280 மீற்றர் இடைவெளி, கடற்புலிகளையே கலைத்தடித்தவர்கள் என்ற பதக்கமொன்றைப் பெற அந்த ‘டோறா’க்களின் கட்டளை அதிகாரிகள் ஆசைப்பட்டிருக்கலாம். ஆசை மோசம் செய்துவிட்டது பகைவனுக்கு. கலைத்தடிப்பதில் கவனமாயிருந்தவன், அக்கம் பக்கத்தை அவதானிக்கத் தவறினான். அது ஒரு ‘போரியல் தவறு.’ சுற்றிவரக் கருமை; கருமையோடு கடற்கரும்புலிகள்; கடற்கரும்புலிகளோடு வெடிகள்! நகுலனும், கண்ணாளனும் அசுரவேகத்தில் அண்மித்தார்கள். அலையன்னை ஆராதித்தாள். ஏமாற்றப்பட்டதால் ஏதுமறியாத பகைவன் எதிர்பார்த்திருக்கவே மாட்டான். பக்கவாட்டாக ‘டோறா’வின் பின் மூலையில் விழுந்தது இடி. அதைக் காற்றிலே ஊதினார்கள் கடற்கரும்புலிகள். புல்மோட்டைக் கடலிலே எழுதினார்கள் வரலாற்றை. இருளைக் கலைத்த பேரொளியோடு, செவியில் முழங்கியது பேரொலி. கடலதிர்ந்த அந்தக் கணப்போழுதிற்க்குப் பிறகு ‘டோறா’வைக் கடல் விழுங்கத் தொடங்கியது. கடற்புலிகளின் ‘றடார்’ திரையில் மின்னி மின்னி மறைந்த ‘டோறா’ மெல்ல மெல்ல இல்லாமலே போய்விட்டது. ஆனால்….., சந்திரிக்கா அரசு சங்கதியை மறைத்து; முழ்கடித்த தேதியை இருட்டித்தது. தங்களது தப்பிவிட்டதாக தப்படமடித்தது. ஆயினும்…, மறுநாள் பகல் முழுவதும் உலங்கு வானூர்த்தி ஒன்று கடலைத் தடவியதே ஏனாம்! பதிந்து பதிந்து கண்களால் துலாவியதே எதற்காம்…. மீன்களை ஊடறுத்து அடிமண்ணில் தேடியதே எதையாம்…? மூலம்: உயிராயுதம் பாகம் 01 நூல். https://thesakkatru.com/black-sea-tigers-mejor-nagulan-mejor-kannalan/
-
லெப்டினன்ட் அபிநயா
லெப்டினன்ட் அபிநயா துள்ளித் திரிந்த சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா. அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள் பயிற்சியிலும் இதே ஆர்வத்துடன் செயற்படுவாள். அந்த அணியிலேயே சிறியவள் என்பதால் எல்லோருக்கும் விருப்பமுள்ளவளாக இருந்ததுடன், தனது குழந்தைத்தமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவாள் 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அபிநயா சிறுவயதிலேயே சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருந்தாள். சிலவேளைகளில் தனக்குத் தெரிந்த சிங்களப் பாடல்களைப் பாடி எல்லோரையும் சிரிக்க வைப்பாள். இவளுக்குக் கோபம் வந்தால் சிங்களத்தில்தான் ஏசுவாள். எதுவுமே விளங்காத மற்றவர்கள் கொல் என்று சிரிப்பதுடன் அவளது கோபமும் பறந்து விடும். தாக்குதல் பயிற்சிகளின்போது சிங்களத்தில் கத்திச் சண்டைப் பயிற்சி செய்வாள். தான் நன்றாகச் சண்டை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவளிடம் நிறையவே உண்டு. எதிரியை ஓடஓட விரட்டிய ஓயாத அலைகள் -03 சமரில் இவள் இரு காலிலும் காயமுற்றாள். எப்போதும் தான் ஒரு வேவு நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் என பொறுப்பாளரிடம் அடம்பிடிப்பாள். இறுதியில் அவளின் திறமையும், ஆர்வமும் அப்பணிக்கு அவளைத் தெரிவாக்கியது தரையிறக்கச் சமரின் ஒரு கட்டமான இத்தாவில் பகுதி தாக்குதல் நடவடிக்கையில் வேவு அணியில் ஒருவராகச் செயற்படும் சந்தர்ப்பம் இவளுக்குக் கிடைத்தது. இறுதியில் 5 பேர் கொண்ட அணிக்குரிய வேவுப் பொறுப்பாளராக உயர வைத்தது. சாவகச்சேரிப் பகுதியில் நின்ற அபிநயா வேவுக்குச் சென்று வந்த பின்பு தான் பார்த்தவற்றை துல்லியமாக குறிப்பிடுவதுடன் எதிரியின் உரையாடலையும் கேட்டு வந்து எமக்குத் தமிழாக்கம் செய்வாள். கேட்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கும். அதே நேரம் அவளது திறமையை எண்ணி மனம் வியக்கும் தனித் துணிவு என்பது அபிநயாவுடன் கூடப் பிறந்த ஒன்று. சில நாட்களின் பின்னர் இவள் அரியாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டாள் . அதுவே அவளது இறுதிக் களமாகவும் அமைந்தது. நல்ல துணிச்சல்காரியாக, ஒரு நல்ல வேவுப்புலியாக, எல்லோருக்கும் நல்லவளாய், வல்லவளாய் மண்ணுக்காய் வாழ்ந்து வரலாறாகிப் போன அபிநயாவின் நினைவுடனும் நடக்கின்றோம் விடியலை நோக்கி. நினைவுப்பகிர்வு: புரட்சி. நன்றி – எரிமலை இதழ் (ஆடி, 2003). https://thesakkatru.com/lieutenant-abinaya/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
படைத்தவனை நினைத்து நினைத்து அழுது நனைகிறேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருவேகம்பமாலை அறந்தான் இயற்றும் அவனிலுங்கோடி அதிகமில்லம் துறந்தான் அவனிற் சதகோடிஉள்ளத் துறவுடையோன் மறந்தான் அறக்கற் றறிவோடிருந்திரு வாதனையற்று இருந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியேகம்பனே. கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால் எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே. கைப்பிடிநாயகன் தூங்கையிலேயவன் கையையெடுத்து அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்தயல் வளவில் ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை எப்படி நானம்புவேன் இறைவாகச்சி யேகம்பனே. நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால் தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல் உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால் என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே நல்லரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே. பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால் செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே. பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே. அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற் சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப் பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே. கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி நல்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. மாயநட்போரையும் மாயமலமெனும் மாதரையும் வீயவிட்டோட்டி வெளியேபுறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்று பின்தாதையைக் கூடிப்பின்தாயைமறந்து ஏயுமதேநிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தணிகை மலை படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தமிழான உருவம்தான் தண்டபாணி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
லிங்கபைரவி ஆர்த்தி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தாயின் கருவில் என்னை அன்பு தேவன் அறிந்திருந்தார் வாழ்வில் உறவு தந்து எந்த நாளும் வளர்த்து வந்தார் என்னென்ன ஆனந்தம் என் நெஞ்சில் கண்டேனே உன்..னோடு நா..ன் கண்ட சொந்தங்கள் எந்நாளும் வா..ழ்க அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது வந்து போ..கும் இந்த நாட்கள் இனிதா.னவை கா..ணுதே என் மனம் வராது வ..ந்த வாழ்வினில் நான் காணும் வாலிபம் வாழ்வாங்கு வா..ழ நீயுமே சொன்ன யாவும் ஞாபகம்(2) ஒரு வழியில் ஆசைகள் மனிதத் துயர் ஓ..சைகள்(2) இன்பங்களால் என் உலகம் எழுவதை நான் காணவேண்டும். நெஞ்சோடு செய்..த வேள்வியில் நான் காணும் கேள்விகள்(2) அஞ்சாத அன்று நீ..யுமே சென்ற பாதையின் தெளிவுகள்(2) அறநெறியில் ஆட்சியும், அன்பு வழி வா..ழ்க்கையும்(2) ஓ தேவனே! என்னுலகினில் எழுவதை நா..ன் காணவேண்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மமதை கொள்ளாதே மவுத்தை மறக்காதே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் உள்ள அல்லா
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
"ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீக" 😂😂👍 அட நம்மைபோல் பலர் நொந்து போயிருக்கின்றார்கள் போல. தனி சங்கம் தொடங்கலாம் 🤔
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மல்லிகை மாலை போட்டு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா உன் பாட்டெல்லாம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உனைப் பாடும் பணி ஒன்று போதும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு) பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு) மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள் பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு) இராகம்: சிந்து பைரவி தாளம்: ஆதி இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ராகம்: ராகமாலிகா தாளம்: ஆதி பாடியவர்: அனந்தலக்ஷ்மி சடகோபன் இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா பல்லவி (பெஹாக்) கான மழை பொழிகின்றான் கண்ணன் யமுனா தீரத்தில் யாதவ குலம் செழிக்க அனுபல்லவி ஆனந்தமாகவே அருள் பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகன ரூபன் சரணம் 1 தேன்சுவை இதழில் வைங்குழல் வைத்தே திகட்டா அமுதாய் தேவரும் விரும்பும் வேணு- சரணம் 2 (பெளளி) குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழல் ஊதி சரணம் 3 (மணிரங்கு) அம்பரம் தனிலே தும்புரு நாரதர் அரம்பையரும் ஆடல் பாடல் மறந்திட அச்சுதன் அனந்தன் ஆயர்குல திலகன் அம்புஜநாபன் ஆர்வமுடன் முரளி