Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. எனை ஆளும் மேரி மாதா.....துணை நியே மேரி மாதா- எனை ஆளும் மேரி மாதா.....துணை நியே மேரி மாதா பரிசுத்த ஆவியாலே பர புத்திரன் ஈன்ற தாயே (2) பிரபு ஏசுநாதன் அருளால் புவியோரும் புனிதம் அடைந்தார் எனை  ஆளும் மேரி மாதா ......துணை நியே மேரி மாதா என்றும் துணை நியே மேரி மாதா நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே (2) கணமேனும் சாந்தி இலையே ......அனு தினமும் சோதியாதே எனை ஆளும் மேரி மாதா........துணை நியே மேரி மாதா என்றும் துணை நியே மேரி மாதா
  2. இறைவன் அழைத்தான் திருநபியை ... சங்கீதவித்வான் S M A காதிர்
  3. 2 முட்டை 2 உருளைக்கிழங்கு இருந்தா இப்பவே இந்த ஸ்னாக் செஞ்சி பாருங்க
  4. மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தியென் கின்றமடு விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் அடிசேராய்! பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி பவர்சேயே! பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் வயலூரா! சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை பெருமாளே!
  5. நிதம் நிதம் நினைந்து உன்னை
  6. கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி |
  7. ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்... ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2) அருள்வாய் ஈஸ்வரனே ... அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம் ...ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய் (2 மலையென எழுந்தவனே எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2 அணிவாய் அவசியமே! எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர வன்புலி தோலினை பொன்னிடை மீதினில் போற்றிய பரமேசா! அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2 அணிந்திரு அரவிந்தமே எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர அண்டம் இருந்திட கண்டம் கருத்திட நஞ்சினை சுவைதவனே! அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2 அதை நீ அருந்திடுமே எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம் தினம் செல்லும் குருமணியே ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2 ஏறிட மனதில்லையோ! எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வசிககும் விமலேசா! எண்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2 நேரம் உம்மக்கில்லையோ! சொல்வாய் அருணாச்சல சிவமே(ஹர ஹர சந்தனம் கனலென கையெனில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே! அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2 ஆடிடுவாய் உடனே! எங்கள் அருணாச்சல சிவனே!(ஹர ஹர பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே உன் திரு வாசலில் 1000 கங்கையை (2 கண்களில் ஊரிடுமே! அதில் குளி அருணாச்சல சிவமே (ஹர ஹர மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2 நியாயமோ ஈஸ்வரனே? ஏற்பாய் அருணாச்சல சிவனே!(ஹர ஹர சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம் அறிவாய் அமரேசா! உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2 வரமதை உடன் தருமே எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே அய்யா!அழைத்திடுக சிவமே! சிவமே!தருவாய் நலமே! அபயம் தா அரனே! எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர
  8. திருவேகம்பமாலை வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம் நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ எரிக்கோஇரையெதுக்கோ இறைவாகச்சி ஏகம்பனே. காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே. ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே. சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால் பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே. பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந் தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில் இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே. பருத்திப்பொதியினைப் போலவேவயிறு பருக்கத்தங்கள் துறுத்திக் கறுசுவை போடுகின்றார் துறந் தோர்தமக்கு வருத்திஅமுதிட மாட்டாரவரை இம்மானிலத்தில் இருத்திக்கொண் டேனிருந்தா இறைவாகச்சி ஏகம்பனே. பொல்லாஇருளகற் றுங்கதிர்கூகையென் புட்கண்ணினுக்கு அல்லாயிருந்திடும் ஆறொக்குமேஅறி வோருள்ளத்தில் வல்லாரறிவார் அறியார்தமக்கு மயக்கங்கண்டாய் எல்லாம் விழிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே. வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார் தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும் மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும் ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே. ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள் ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.
  9. கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
  10. யோகநாதனே || பாடியவர் :S P பாலசுப்ரமணியம் || இசை : வீரமணி கண்ணன் || வரிகள்: வாரஸ்ரீ || ராகு பெயர்ச்சி பாடல்
  11. அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே நிலையான சொந்தம் நீங்காத பந்தம் நிலையான சொந்தம் நீங்காத பந்தம் அவரன்றி வேறில்லையே அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேபோற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஇறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே நிலையான சொந்தம் நீங்காத பந்தம் நிலையான சொந்தம் நீங்காத பந்தம் அவரன்றி வேறில்லையேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
  12. மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 ) தாயென்று உன்னைத்தான் (2 ) பிள்ளைக்கு காட்டினேன் மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 ) மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 ) தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 ) அன்னை இல்லாத மகனை தாலாட்டுது கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் தாயென்று உன்னைத்தான் (2 ) பிள்ளைக்கு காட்டினேன் மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் ம்ம்...ம்ம்..ம்ம்ம்........
  13. ராகம் வராளி தாளம் ஆதி பல்லவி கா வாவா கந்தா வாவா எனைக் கா வா வேலா வா பழநிமலை யுறையு முரு (கா) அனுபல்லவி தேவாதிதேவன் மகனே வா - பர தேவி மடியி லமரும் குஹனே வா வள்ளி - தெய்வயானை மணவாளா வா - சர வணபவ பரமதயாள ஷண்மு (கா) சரணம் ஆபத்திருளற அருளொளி தரும் அப்பனே அண்ணலே ஐயா வா பாபத் திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணைமழையே வா தாப த்ரய வெயிலற நிழல்தரும் வான் தருவே என் குலகுருவே வா ஸ்ரீபத்மநாபன் மருகா ராமதாஸன் வணங்கும் முத்தய்யா விரைவொடு (கா
  14. முருகா ! முருகா ! முருகா ! முருகா! முருகா ! முருகா ! என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்க வில்லை! இன்னும் என்ன சோதனையா ? முருகா ! முருகா ! அன்னையும் அறிய வில்லை ! தந்தையோ நினைப்பதில்லை ! மாமியும் பார்ப்பதில்லை ! மாமனோ கேட்பதில்லை ! ( என்ன கவி ) அட்சர லட்சம் ! அட்சர லட்சம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை ! பட்ச முடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை ! இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறைவில்லை ! லட்சியமோ உனக்கு ! முருகா ! உன்னை நான் விடுவதில்லை !
  15. சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்! பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்! பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்! பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்! திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்! திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்! விரலுக்கு மோதிரம் பவளத்திலே! கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே! முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே! கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே! தங்கத் திருப்பாதம் வணங்கும்போது, தங்கத் திருப்பாதம் வணங்கும்போது, பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! மயில்மீது மன்னனை இருக்கவைத்து ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி மயில்மீது மன்னனை இருக்கவைத்து ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து, வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து, இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! நன்மையெல்லாம் நடக்குது..! நன்மையெல்லாம் நடக்குது..!
  16. உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு -4 என் இயேசையா அல்லேலூயா -4 இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே -2 எவ்வேளையும் ஐயா நீர் தானே -2 - உம்மை அல்லாமல் என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2 என் எல்லாமே ஐயா நீர் தானே -2 - உம்மை அல்லாமல் இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே -2 எந்நாளுமே ஐயா நீர்தானே -2 - உம்மை அல்லாமல்
  17. தூயோன் அல்லாஹ் திருப்பெயர் கூறி
  18. சிவ ஷக்திய தூயது பவதி .. சத்தியப் பிரபிவிதும் .. நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ .. அகஸ்த்மாம் ..ஆராத்யாம் .. ஹரிஹர விரிஞ்சாதி பிறவி . ப்ரனம்தும் ஸ்தோதும் ம .. கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஒரு மான் மழுவும் கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜனனி .... சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே அலை மாமகள் நீ கலை மாமகள் நீ. ஜனனி .... ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள் சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
  19. ஓடி வா முருகா நீ ஆடி வா முருகா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.