Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே... மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே... வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!! பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா... அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குரு நீயே.... தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா... தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா... நீரோடையாய் நடந்தாய்... பார் முழுவதும் கலந்தாய்... ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்... கார்மேகமாய் படர்ந்தாய்... கருணை மழையென பொழிந்தாய்... தூயவா... துறவு கொண்ட பாலசேகரா.... சங்கரா.. ஜெய சங்கரா தண்டம் ஏந்திய தாண்டவா.... குருவாய் வருவாய் நடராஜ ரூபனே திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே... சங்கரா...சங்கரா... சங்கரா.. ஜெய சங்கரா .. உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே... மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி) கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன் நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது உனை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி) நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் உன் அடியில் வைத்தேன் உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா (விழி)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே மன சாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே எங்களுக்கு அன்பு செய்ய யாருமில்லையா இதை அறியாமலோ முருகா முருகா உன் கருணையில்லையா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அம்மாவும் நீயே அப்பாவும் நீய பூே ணை நாயும் கிழியும் கூட மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அரியாயோ முருகா உன் கருணை இல்லையா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான் என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும் அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல் இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே. நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும் வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன் உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன் பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் நமச்சிவாய
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முந்து தமிழ் மாலை சிந்துபைரவியில் முருகா நான் உனக்கு தர வேண்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓடிவா முருகா நீ ஓடிவா கந்தா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே - (2) இறைவழி நின்று விரைந்தெம்மை காக்கும் சுகம் த௫ம் சுந்தாியே தாயே சுகம் த௫ம் சுந்தாியே மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(4) வேளாநகர் போற்றும் காவியமே வேளையில் துணை நிற்கும் காவலியே - (2) வரங்களை பொழியும் வான் மழையே வ௫முன் காத்திட வ௫பவளே - (2) மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(2) இறைவுளம் விளங்கிட உனை தந்தாய் மகனையே தந்திட எமை மீட்டாய் - (2) வழிகளை காட்டியே முன் சென்றாய் அவர் வழி நடப்பது முறை என்றாய் - (2) மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே - (2) இறைவழி நின்று விரைந்தெம்மை காக்கும் சுகம் த௫ம் சுந்தாியே தாயே சுகம் த௫ம் சுந்தாியே மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(4)
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- நடனங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஊட்டச்சத்து நிறைந்த கொத்தமல்லி கார பால்ஸ் தேவையான பொருட்கள் :அரிசி ரவா - 1 கப் பச்சை மிளகாய் - 2தேங்காய்த் துருவல் - கால் கப்புளி - நெல்லிக்காய் அளவுஉளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் வீதம்பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்நெய் - 1 டீஸ்பூன்கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை:ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றவும்.அதில் அரைத்த விழுதை கொட்டவும்.அதுபோல் நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து அரிசி ரவாவை கொட்டி லேசாக கிளறி, கால் மணி நேரம் மூடி வைத்து வேகவிட்டு இறக்கவும்.ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவி ஏற்றி ருசிக்கலாம். சூப்பரான கொத்தமல்லி கார பால்ஸ் ரெடி. https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/09/12111746/1876719/Rice-Kara-Urundai.vpf- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் சென்னிமலையினிலே சந்தனம் பன்னீரில் தினம் குளிப்பான் வேலவனே குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான் ஆ... ஆ... ஆ... சென்னிமலை குமரா சிரகிரி வேலவனே முருகா. . . குமரா. . . கந்தா. . . முருகா . . . பங்குனி உத்திரத்தில் பால்குடம் ஆ... ஆ... ஆ... பாங்குடன் ஏந்துவர் பல்லாயிரம் ஆ... ஆ... ஆ... வாடாத பூமாலை அலங்காரம் பாடாத நாவும் திருப்புகழ் பாடும் கொக்கரக்கோ சேவலும் குன்றினில் கூவும் சென்னிமலை மேலே மயிலாடும் தேவியரின் திருக்கோயில் மலையிலே ஆ... ஆ... ஆ... தீபங்கள் ஏற்றினால் குறைவில்லையே ஆ... ஆ... ஆ... வேலும் மயிலும் துணையிருக்க ஆ... ஆ... ஆ... வேதனைகள் தீர்க்க குகனிருக்க ஆ... ஆ... ஆ... நம்பினோர் வாழ்வில் நலம்பல பெருக முருகாவெனும் நாமம் எதிரொலிக்க- இறைவனிடம் கையேந்துங்கள்
நிலை இல்லா உலகு நிஜம் இல்லா உறவு- இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா உன்னை தேடுகிறேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆக்கும் தொழில்- இறைவனிடம் கையேந்துங்கள்
சண்முக நதியோரம்- இறைவனிடம் கையேந்துங்கள்
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து புவிமீதே எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து எலாவறுமை தீர அன்று னருள்பேணேன் சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல் கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து கிலாதவுட லாவி நொந்து மடியாமுன் தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல் சொலேழுலக மீனு மம்பை யருள்பாலா! நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப நபோமணி சமான துங்க வடிவேலா! படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து பசேலெனவு மேத ழைந்து தினமேதான் விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு விராலிமலை மீது கந்த பெருமாளே!- இறைவனிடம் கையேந்துங்கள்
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே- இறைவனிடம் கையேந்துங்கள்
மௌலா வா சல்லிம்- இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணன் மனநிலையை- இறைவனிடம் கையேந்துங்கள்
கந்தன் ஒரு மந்திரத்தை - நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.