Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எனக்கும் இடம் உண்டு (எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு) அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு கார்த்திகை விளக்கு பெண்களுடன் திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2) தினம் பூத்திடும் ஞான மலர்களுடன் ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும் புல்லாய் முளைத்து தடுமாறும் (எனக்கும் … ) நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2) வரும் காற்றில் அணையா சுடர்போலும் இனி கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம் (எனக்கும் … ) ஆடும் மயிலே என்மேனி அதில் அழகிய தோகை என் உள்ளம் (2) நான் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால் உறவு கண்டேன் ஆகையினால் (எனக்கும் … ).
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2 பலிபீடமுமாய் அலங்கரித்தாயே பாவ நிழலே அணுகா பாதுகாத்தார் உன்னையே பரமன் பாவ நிழலே அணுகா தாய் உதரம் நீ தரித்திடவே - 2 தனதோர் அமல தலமெனக் கொண்டார் - 2 ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2 பலிபீடமுமாய் அலங்கரித்தாயே பாவ நிழலே அணுகா பாதுகாத்தார் உன்னையே பரமன் பாவ நிழலே அணுகா தாய் உதரம் நீ தரித்திடவே - 2 தனதோர் அமல தலமெனக் கொண்டார் - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திக்குத்திகந்தமும் கொண்டாடிய வந்து... தீன் கூறி நிற்பர் | இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
- நடனங்கள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
Hyderabadi Chicken Biriyani in Tamil | ஹைதராபாத் சிக்கன் வடி பிரியாணி | Jabbar Bhai
-
கடற்கரும்புலி மேஜர் புகழரசன்
கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடலன்னையின் புதல்வர்கள் புவீந்திரன் / புகழரசன். புவீந்திரன்! அவன் ஒரு குழந்தை. வயது தான் பதினெட்டேயன்றி மனதால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது. சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ – எவரோ – அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும் தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான். இரக்க சிந்தனையும் – உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள். பக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி, ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்?” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்து போய் விடுகின்றவன் அவன். ஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கெட்டது என்றால், அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருப்பன். சப்பாத்து கட்டாயம் அணிய வேண்டிய அவனது பள்ளக்கூடத்தில் – ஏழை நண்பனொருவன் “அம்மா காசுக்கு கஸ்டப்படுறா….” ஏன்று மனவேதனைப்பட்ட போது, அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தை கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன். குடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, “காலையில் கூடச் சாப்பிடேல மச்சான்….” என்று விம்மிய உற்ற நண்பனிடம் – அவன் அடியோடு மறுக்க மறுக்க – கையில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன் தான் புவீந்திரன். ஒரு மென்மையான உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறி கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கெட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்கூட நாங்கள் கேட்டதில்லை. வீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி, பிற்காலத்தில் – இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தால் கூட அவன் தன்னைத்தானே நொந்து கொள்வானே தவிர, மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும்; ஆனால்இ நியாயம் கதைக்க மாட்டான். போய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான். அது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான். குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான். அவனுக்குப் 12 வயதாய் இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்பி வரவில்லை. அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பி அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள். புவீந்திரன் அழுதான். அப்போது அவனுக்கு அது மட்டும் தான் தெரியும் – ஆனால், அம்மாவின் இழப்பு அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது. ஓய்வாக இருக்கும் கருக்கல் பொழுதுகளில், அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார். சுதந்திரத்தை நோக்கிய எழுச்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம், கியூபா, தென்னாபிரிக்கா என அது நீளும். புவித்திரன் மட்டும் ஆர்வத்துடன் இருந்து கேட்பான். ஏற்கெனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கப்படுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம்இ படக்கதைகளைக் கேட்கும் போது, ஒடுக்கப்படும் மக்களினங்களை நினைத்துப் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை மனத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்தப் போராட்டங்களின் நியாயத்தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டுப் பார்த்து விழிக்கும். எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமென இறுகும். அந்த விழிப்புணர்வோடும் – மனவுறுதியோடும், இதயத்தைப் பிழியச் செய்கின்ற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்து தான் – அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்கக்கூடும். புவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார். ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருக்கின்ற பிள்ளைப் பாசம் வெளிப்பாடு கண்ட போது – வந்தவர் அப்பாவிடம் சொன்னதை அப்பா மகனிடம் கேட்டார் – “தம்பி…. வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து…. வீட்டோட நிக்கலாம் தானே….” அப்பா இழுக்க மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான்; “இயக்கத்திற்குப் போனது விலத்திக் கொண்டு வாறதுக்கில்லை; நான் போனது நாட்டுக்காகப் போராட…. திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்தில் நான் சாகவும் கூடும். அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை….” வந்தவரும் அப்பாவும் மௌனித்துப் போனார்கள். கூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்த பின் பிரிகின்ற நேரத்தில், “நீ இப்ப நொண்டி தானேடா…. இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம்…. விட்டிட்டு வாவன்ரா….” கேலி செய்தார்களாம். ஒரு மணித்துளி திகைத்துப் போனவன் – நின்று, திரும்பி, நிதானமாகச் சொன்னானாம்; “எனக்குக் கால் தான் நொண்டி; என்ர மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாப் போச்சுதே இல்லாம, உள்ளம் எப்பவும் உறுதியாய்த் தான் இருக்கிறது. அங்கங்கள் போறதைப் பற்றி எனக்குக் கவலை இல்லையில்லையடா…… மனசில உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டன். பெரிய சாதனையொன்றைச் செய்து தான் சாவன்……” அந்த நண்பர்களுக்கு அப்போது அது புரியவில்லை; சிரித்துக் கொண்டு போனார்கள்; ஆனால், இப்போது விக்கித்து நின்றார்கள். “பிரபல கரும்புலி போறார்” – இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள்.ஆனையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால் – ‘பெல்ட்’ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து, இழுத்து ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான். அவனை ஒரு ‘கரும்புலிப் பைத்தியம்’ என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே, ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன. எவருமில்லாத தனியறையொன்றில் ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு, நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிப்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருவகப்படுத்திக் கொண்டு வரைபடத்தை தடியால் தொட்டுக்காட்டி, அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான். “……டோரா இதாலதான் வரும்……” “……உங்கட வண்டியள் இந்த மாதிரி வியூகத்துல அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும்……” “……அந்த நேரம் – இந்த விதமாகப் பக்கவாட்டில்இ உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்……” “……டோரா புக்கையாகும்……” ஒளித்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு, அவனைப் பார்க்க சிரிப்புத்தான் வரும். புவீந்திரன்! அவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல் வித்தியாசமான மனிதனும் கூட. அவன் அமைதியானவன்; ஆனால் சோம்பேறியல்ல. உற்சாகமானவன்; ஆனால் குளப்படிக்காரனல்ல. அவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம். அவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டும் தான் காண முடியும். இயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இரக்க குணம். அடுத்தவர்கள் அவனில் இரக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும். இயலாத காலோடும் கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும் விதமாக அவன் செயற்படுவான். கிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலையொன்றிற்கான அழைப்பின் பேரில் துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால் – அவன் திரும்பி வரும் போது அவனது உடுப்புக்கள் முற்றத்து வெயிலில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன் தான் புவீந்திரன். முகாமிற்கு யாராவது வெளி ஆட்கள் வந்துவிட்டால் அவர்களை உபசரிக்க, அன்றைய ‘முறைஆளை’த் தேடித்திரிந்து, பின் மூலையில் போய்ப் பிடித்து வந்து விடுவதற்கிடையில் வந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு அவன் பேணிகளைக் கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன். ஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ். மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சு பொறிப்பது பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக் கொண்டிருந்தவன் – கொஞ்ச நாட்களில் மற்றவர்கள் மெச்சக் கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான். அறிக்கைகள், கடிதங்கள், விபரக்கோவைகள், அது இது என்று நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்து போய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும் – கவிதை, கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்து, “இதையும் ஒருக்கால்……” என்று கெஞ்சுகிற நண்பர்களிடம் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப் பைக்குள் மடித்து வைப்பான். காலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1, 2 மணிவரை இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி அதன் பிறகும் விழித்திருந்து நண்பர்களுடையதையும் அடித்துக் கொடுக்கின்ற நண்பன். புவீந்திரன்! புலிவீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம். உன்னோடு வாழ்ந்த நாட்கள், எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள். சூம்பிக் கிடக்கும் காலோடும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம் – சிறுபிள்ளை மாதிரித் தத்தளித்து தத்தளித்து கைளைக் காலை விசுக்கி – ஓயாத முயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்தப் பழகினாய். “பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன்கூட சரியாய் அடிக்க மாட்டான்……” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டுஇ பயிற்சி முகாமிலிருந்த அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் ‘ரச்’ தந்த போது – வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டுஇ ரைபிள் பிடித்துச் சொல்லித்தர – நீ மட்டுமே ஒரு ‘புல்’லும், ஒரு ‘நைனும்’ அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய். எதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான உன்னிடம், நல்லதற்ற ஒரு வார்த்தையைச் சொல்லி “இன்னாரிட்டைக் கேட்டுப்பார் அர்த்தம் சொல்லுவார்……” என்று அனுப்பிவிட்டால் – அங்கு போய் நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய். கால் இயலாமல் இருந்தும், மெல்ல மெல்லப் படகோட்டப் பழகி – கிளாலிக் களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில், அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப் படகுகளுக்கு ஓட்டியாக இருந்தாய். இன்னும்… இன்னும் இவையெல்லாம், எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும். புவீந்திரன்! சாதனையொன்றைச் செய்து தான் சாவேன் என்றாயா? சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல் அது சாதனைகளின் ஒரு குவியல். ‘கனன்’ எடுத்தது சாதனை. அது இரண்டாக இருந்தததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு ‘பிப்ரி’ எடுத்தது இன்னொரு சாதனை. டோரா ஒன்றை முழுமையாக நொருக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொல்லப்பட்டது வேறொரு சாதனை. “ஆசிரில ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் எண்டு சாள்ஸ் அண்ணன் சொல்லறவர்……” என்று அடிக்கடி கூறும் நீ, “இப்ப நாங்கள் அடிக்கப் போறம். ஆனால், அதைப் பார்க்கிறதுக்கு அவர் தான் இல்லை” என்று கவலைப்படுவாய். அந்தத் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டது. கட்டைக்காட்டிலிருந்து, பலாலிக்கு ரோந்து செல்லும் டோராவை, பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும், காங்கேசன் துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்தத் தாக்குதல் மையம் இருந்தது. மணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள். உங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும். உள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக்கூடிய அந்த நாளில், எங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது. சோகம் பரவிய முகத்தோடு, உன்னைக் கைதொட்டுத் தடவி “எந்தக் காலிலையப்பன் வெடி பிடிச்சது?……” என்று, அக்கறையோடு தலைவர் விசாரித்த போது மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம். எல்லாமே தயார். சக்கை வண்டி; சண்டைப்படகுகள்; தாக்குதற் கருவிகள்; தாக்கும் வீரர்கள்; மணியரசன், நீ…… எல்லாமே. ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காகக் கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள். நள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விட வேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக் கொண்டிருக்கும். மறுநாள் மதியமோ, மாலை வரையோ அந்தத் தேடல் நீடிக்கும், எதிரி வரமாட்டான். ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள். உற்சாகம் குன்றாமல், உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள். 29.08.1993. நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன் கடலில் வந்தான். பொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா? காத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல். தனியறையில் வரைபடத்தை விரித்து வைத்து, நீ காற்றுக்கு விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம்; எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது. அப்போது நாங்கள் சிரித்தோம். இப்போது…… இரண்டு ‘கனன் பீரங்கி’களையும் 2 ‘பிப்ரி கலிபர்’களையும் மூழ்கிக்கொண்டிருந்த ‘டோரா’விலிருந்து தோழர்கள் எடுத்துக் கொண்டு வந்தார்கள். புவீந்திரன் வரமாட்டான்….! மணியரசனும் வரமாட்டான்….! நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி – ஐப்பசி 1993). https://thesakkatru.com/black-sea-tiger-mejor-pugazharasan/
-
கடற்கரும்புலி கப்டன் மணியரசன்
கடற்கரும்புலி கப்டன் மணியரசன் கடலன்னையின் புதல்வர்கள் மணியரசன். மணியரசன்! “பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தனையீந்த கரும்புலி; என் கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலை நிமிர்ந்து சொல்ல வைத்த அடலேறு அவன். அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் புதைத்து விட்டுப் போய்விட்டன. இந்தச் சின்ன வயதிலும் – பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு எற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஒர் உருண்டை முகம். நிமிர்ந்த – லாவகமான – திடகாத்திரமான உடல்வாகு. எங்கள் கண்ணெல்லாம் அந்த வண்ணக் கோலம். மணியரசன் குறுகுறுத்தவன். பஜரோவில் வருகின்றவர் வீட்டிற்குள் போய் அலுவல் முடித்து விட்டு, போன வேகத்திலேயே திரும்பி வந்தால் கூடஇ பஜரோ அடுத்த பக்கமாக திரும்பி நிற்கும். “ஆரடா தம்பி பஜரோவை திருப்பி விட்டது”?; வந்தவர் தேடினால் ஒதுக்குப் புறமாக மணியரசன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பான். அது மோட்டார் சைக்கிளானால்இ ஒரு “8” அடித்துவிட்டுத் திரும்பி நிற்கும். உள்ளே போனவர் வெளியே வந்தால் – ஏதோ முக்கிய வேலையில் மூழ்கியிருப்பவனைப் போல தூரத்திலிருந்து ஓரக்கண்ணால் பார்ப்பான். முகாமிற்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒரு பொருள், துண்டுகளாகப் பிரித்து மேசையில் வைக்கப்பட்டிருக்கும். யாருடைய வேலை இது என்று யாருமே கேட்பதில்லை. மணியரசன் குறுகுறுத்தவன் தான்; குளப்படிக்காரன் தான்;. ஆனால் எவருடைய கோபத்திற்கும் ஆளாகின்றவனல்ல. ஒருதடவை அவனோடு பழகியவர்களுக்கு, இன்னொரு தடவை அவனை நினைவுபடுத்தத் தேவையில்லை. எல்லோருடைய நினைவுகளிலும் நிலைத்துவிடும் வசீகரம் அவனிடமிருந்தது. மிகக் குறுகிய காலத் தொடர்பு சாதன வேலையில் – அவன் சேர்த்து வைத்திருந்த முகம் தெரியாத நண்பர்கள் பலர். எந்த நிலையத்தில் தகவல் பரிவர்த்தனை வேலை செய்பவராக இருந்தாலும், அவனோடு கதைக்காமல் அவர்கள் அலைவரிசையை மூடிக்கொண்ட நாட்கள் மிகக் குறைவு. மணியரசா! உனது அன்பின் வீச்சுத் தூரம், தமிழீழத்தின் எல்லைகளைத் தொட்டிருந்ததடா! மணியரசனுக்கு ஒரு பொழுது போக்கு, மற்றவர்களைக் கிண்டல் செய்துகொண்டிருப்பது. அவனிருக்குமிடத்தில் வாய் திறக்க அநேகமானவர்களுக்குப் பயம். ட்ரக் ஓடும் ஐம்பது வயது ஐயாவிலிருந்து, புதிதாக இயக்கத்திற்கு வரும் சின்னப்பையன்வரை – வயது வேறுபாடின்றி எல்லோருமே அவனுடைய அறுவைக்கு இலக்கு. ஆனாலும் மணியரசா! “இயக்கம் பொமர் வாங்கினா அதை இறக்க எங்களிட்ட ஒரு ‘றண்வே’ இருக்கு” என்று மயிரில்லாத உன் முன்பக்கத் தலை அறுவைக்கு உள்ளாகும் போது கூட மேல் மயிரைத் தட்டிவிட்டு ‘உருமறைப்புச்’ செய்து கொண்டு, புன்னகையோடு அந்தக் கிண்டலை ஏற்றுக்கொள்ளும் உனது நட்பின் பண்புஇ உயர்ந்தது. ஊரிலும், பள்ளிக்கூடத்திலும் கனியூட் என்று செல்லமாக அழைக்கப்பட்ட வேதநாயகம் ராஜரூபன் தான் எங்கள் மணியரசன்;. குடும்பத்தில் கடைசித் தங்கச்சிக்கு நேரே மூத்த இவன், 7 வது பிள்ளை. மணற்காடு றோமன் கத்தோலிக்க மகாலித்தியாலயத்தில் படிக்கும் போது, அதன் உதைபந்தாட்டக் குழுவொன்றில் சிறந்த ஒரு விளையாட்டு வீரனாக இருந்ததுடன், அவன் படிப்பிலும் கெட்டிக்காரானாம். அப்பா தொழிலுக்கு போகும் போது, இடைக்கிடை அவரோடு கடலுக்குப் போகிறவன், திறமையான நீச்சல்காரனாகவும் ஆகியிருந்தான். 1991 இன் நடுப்பகுதியில் இவன் இயக்கத்திற்கு வரும் போது 8ஆம் வகுப்போடு படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத்தான் வந்தான். அவன், எல்லாத் திறமைகளும் ஒருங்கிணைந்திருந்த ஒரு போராளி. இந்தத் தேசம் அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறையவே இருந்தது; அவற்றை வழங்கும் ஆற்றலையும் அவன் கொண்டிருந்தான். ஆனால், ஒரு கரும்புலித்தாக்குதல் தான் அவனுடைய பிரதான குறியாக இருந்தது. கடைசியிலும் அதைத்தான் அவன் செய்தான். கடற்புலிகளின் 1ஆவது பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுக்கும் போதே பயிற்சிகளில் ஆர்வம் நிறைந்தவனாகவும், பரீட்சைகளில் அதிக புள்ளிகள் பெறுபவனாகவும் திகழ்ந்தான்; சிறந்த ஒரு விடுதலை வீரனாக முளைவிட்டான். அவனுடைய தெளிவான பேச்சு வன்மையும், விடயங்களைக் கிரகித்துக் கொள்ளும் வேகமும் தான் அவனை தகவல் பரிவர்த்தனை வேலைக்கு ஏற்றவனாக இனம்காட்டின. தகவல் தொடர்புச்சாதனம் கற்பிக்கும் பாடத்திட்டமானது, பொதுவாக, ‘இவ்வளவு காலப்பயிற்சி’ என வரையறுக்கப்பட்டது. ஆனால், மணியரசன் அதனைக் கற்றுக்கொண்டுவிட்ட நாட்களை விரல் மடிப்பிற்குள் அடக்கிவிடலாம். இரண்டே வருடகால அவனுடைய போராட்ட வாழ்வின் மிகப் பெரும்பாலான நாட்கள், தொடர்பு சாதனம் இயக்கும் வேலையிலேயே அவனை ஈடுபடுத்தின. அந்தப் பணியின் முக்கியத்துவத்தையும் – இன்றியமையாமையையும் அவன் புரிந்து உணர்ந்திருந்த போதிலும் சண்டைக்குப் போகவேண்டும் என்ற ஆதங்கமே அவனிடம் மேலோங்கியிருந்தது. கங்கை அமரன் வன்னிக்குப் புறப்பட்டால் தானும் வரப்போவதாக நச்சரிப்பான்; பிருந்தன் மாஸ்ரர் கிளாலிக்கு வெளிக்கிட்டால் தன்னையும் கூட்டிச் செல்லுமாறு அடம் பிடிப்பான். தன்னோடு நிற்கும் போதே, சண்டைக்கு அனுப்பும் படி மணியரசன் தனக்கு எழுதும் கடிதங்களை வாசிக்க வேண்டிய வில்லங்கம் தளபதி சூசைக்கு இருந்தது. அவனது ஆசை ஓரளவு பூர்த்தியாகி வர – வடமராட்சியிலுள்ள தலைமைத் தளத்தில் பகல் முழுவதும் ‘செற்’ கதைத்துக் கொண்டிருப்பவன், இரவுகளில் – கிளாலியின் சண்டைமுனைகயில் ஒரு எல்.எம்.ஜியுடன் வலம் வரத் துவங்கினான். இறுதிக் காலத்தில் முழுமையாக, கிளாலியின் மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுதுகளிலும் – ஒரு கரும்புலித்தாக்குதலே மணியரசனுடைய பிரதான குறியாக இருந்தது. எங்களுக்குள் சுழன்று திரிந்த அந்த இனிய நண்பன்இ அதைத்தான் செய்து முடித்தான். அவனுடைய கடைசி நாட்களில் அவன் மிகுந்த உற்சாகமாக இருந்தான். தனது முகம் தெரியாத நண்பர்களிடம் வானலைகளினூடாக விடைபெற்றான்; அந்த தொடர்பு சாதனத்திடமிருந்தும் விடைபெற்றான். கிளாலிக் கடலில் சிதைந்து போன நிலையிலும் மதன் அதிசயமாய் மிதந்து வந்த போது, நாங்கள் பக்குவமாய் எடுத்து வந்து துயிலுமில்லத்தில் விதைக்கையில், கண்ணீரோடு மதனுக்கு மண் போட்டான். அந்த நேரத்தில் எனக்கு மண்போடும் பாக்கியம் ஒருவருக்கும் கிடைக்காது என்று நினைத்திருப்பானோ…….? தோரணம் கட்டி பந்தல் போட்டு மதனுக்கும், வரதனக்கும் அஞ்சலி செய்த போது, வீதி வீதியாகத் திரிந்து பார்த்தான். இன்னும் நாலு நாளில் தனக்கும் இப்டித்தான் செய்வினம் என்று நினைத்திருப்பானோ…….? இப்போது அவன் போய் விட்டான்; எங்களால் எட்ட முடியாத தொலைவுக்கு எங்களைக் கிண்டல் செய்துகொண்டிருந்த அந்த அறுவைக்காரன் இப்போது இல்லை. இயக்கம் ‘பொமர்’ வாங்கினால் இறக்கி ஓட அந்த ‘றண்வே’யும் இப்போது இல்லை! நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி – ஐப்பசி 1993). https://thesakkatru.com/black-sea-tiger-captain-maniyarasan/
-
மேஜர் செல்வராசா மாஸ்டர்
மேஜர் செல்வராசா மாஸ்டர் மேஜர் செல்வராசா மாஸ்டர் / அன்பு செல்வராசா மாஸ்டர்… எமதியக்கத்திலுள்ள கூடுதலான போராளிகளுக்குப் பரிச்சயமான ஒருவர். காரணம் பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவராலேயே உருவாக்கப்பட்டனர். அவரிடம் நான் பயிற்சி பெறவில்லையே என்தொரு ஏக்கம் அவரிடம் பயிற்சி பெறாதோருக்கு இருந்ததுண்டு. அவரிடம் பயிற்சி பெறாது விட்டாலும் பரவாயில்லை. சில மாதங்கள் அவருடன் கூட இருந்தாலே போதும் என்று கருதும் போராளிகளும் உண்டு. அவர்களில் நானும் ஒருவன். 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளுடன் சண்டை ஆரம்பமாகி சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் வன்னியிலுள்ள விசுவமடுக் காட்டுக்குள் இருந்த முகாம் ஒன்றுக்குள் அவருடன் இருந்தேன். 1987ம் ஆண்டுக்கு முன்னர் சிறீலங்கா இராணுவத்துடனான சண்டைகளிலோ அல்லது முகாம் தாக்குதல்களிலோ அதிகளவில் தான் கலந்துகொள்ளவில்லை என்று செல்வராசா மாஸ்ரர் சிறிது கவலையுடன் கூறுவார். அதற்குக் காரணம் போராளிகளை உருவாக்கும் பயிற்சியாளனாக செல்வராசா மாஸ்ரர் தலைவரால் நியமிக்கப்பட்டதுதான். ஆனால், இந்திய இராணுவததுடனான சண்டைகளில் வட்டியும் முதலுமாக சேர்த்து மாஸ்ரர் பல சண்டைகளில் கலந்துகொண்டருந்தார். அதில் யாழ்ப்பாணத்தில் உள்ள குளப்பிட்டிச் சந்தியில் இந்தியப் படைகளுடன் நடந்த சண்டையொன்றும் இணுவில் நடந்த சண்டையான்றும் மாஸ்ரரின் திறமையைப் பறைசாற்றிய தாக்கதல் சம்பவங்களாகும். குளப்பிட்டிச்சண்டை நடைபெற்ற நேரம் இரண்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் யாழ்ப்பாணத்திலேயே நின்றிருந்தனர் ஒருவர் இந்தியாடுடே நிருபர், மற்றவர் பிரான்ஸ் பத்திரிகையொன்றின் நிருபர். இவர்களிருவரும் தாக்குதல் நடந்த இடத்திற்கு எமது போராளிகளால் கூட்டிச் சென்று காட்டப்பட்டனர். கொல்லப்பட்ட இராணுவத்தினரது உடல்களும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் அவர்களுக்குக் காட்டப்பட்டது. இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் எவ்விதம் சண்டைகள் நடைபெறுகின்றன என்பதை உலகம் முதலில் அறிந்தது இந்தச் சம்பவத்தின் மூலம் தான். இதை ஆதாரங்களுடன், படங்களுடன் வெளிநாட்டு நிருபர்களே கொடுத்தபோது உலகம் மூக்கில் விரலை வைத்தது. இந்தத் தாக்குதலை எவ்விதம் தான் எதிரியுடன் சண்டை செய்ய வேண்டும் என்று எமக்குக் கற்பிப்பார். இதில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். எமது தரப்பில் எவருமெ இறக்கவில்லை. அடுத்ததாக இணுவிலில் நடந்த ஒரு சண்டை அதில் இந்திய அரசால் “வீரசர்க்கார்” என்ற உயர்ந்த இராணுவ விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட்ட இந்திய அதிகாரியான மேஜர் பரமேஸ்வரன் கொல்லப்பட்ட சம்பவமாகும். இந்தச் சண்டையைப் பற்றி மாஸ்டர் சொல்லும்போது கூறுவார்; இணுவிலில் ஒரு இடத்தால் இராணுவ அணியொன்று முன்னேறிக்கொண்டிருந்தது. சுமார் 50 பேர்வரை அந்த அணியில் இருந்தனர். இவர்கள் ஒரு பனங்கூடலுக்கால் வரும்போது எமது போராளிகள் தாக்கதலைத் தொடங்கினர். சண்டை நீண்ட நேரம் வரும்போது எமது போராளிகள் தாக்குதலைத் தொடங்கினார். சண்டை நீண்ட நேரம் நடந்தது, எமது பக்கத்தில் சண்டை செய்ய தகுந்த காப்பிடங்கள் இருக்கவில்லை. அப்படியிருந்தும் மாஸ்டரின் தலைமையில் தந்திரோபாயமும், துணிச்சலும் மிக்கவர்கள் மூலம் எதிரிகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதியில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அதில் பரமேஸ்வரனும் ஒருவர். எமது பக்கத்தில் ஒரு போராளி வீரமரணமடைந்தார். இத்தகைய வெற்றிகரமான சண்டைகளில் ஈடுபட்டபின்னர் வன்னிக் காட்டுக்குள் முகாம் அமைத்துத் தங்கினார். காட்டுக்குள் இருக்கும்போது மாஸ்டர் சும்மா இருக்கமாட்டார். எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டிருப்பார். அப்படியான நேரங்களில் மாஸ்டர் சொன்னார்… “இயக்கத்திலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டிருக்க வேண்டும். அது இயக்கத்திற்குப் பயன் உள்ளதாக இருக்கவேண்டும்”. உடற்பயிற்சிப் போட்டியொன்று வைத்தால் இயக்கத்தில் மாஸ்டருக்குதான் முதலிடம் கிடைக்குமென்று எமது போராளிகள் சொல்வார்கள். காட்டுமுகாமில் இருக்கும்போது அடிக்கடி எமக்கெல்லாம் அறிவுரைகள் கூறுவார். பொன்னம்மான், ராதா அண்ணையைப் பற்றி அடிக்கடி கூறுவார். குழப்படி செய்யும் போராளிகளைத் திருத்துவதில் மாஸ்டர் தனக்கே உரிய பாணிகளை வைத்திருக்கின்றார். ஒருமுறை இரண்டு போராளிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டு கதைக்காது இருந்தனர். அவர்கள் இருவரையும் அழைத்து ஒரு கோப்பையில் சாப்பாட்டை எடுத்தவந்து ஒருவர் மாறி ஒருவருக்கு ஊட்டுவித்தார். “நாங்கள் எல்லோரும் சகோதரங்கள் போல இருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது” என்று கூறி அனுப்பினார். காட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் உணவுகளுக்கப் பெருத்த தட்டுப்பாடு இருந்தது. அதுவும் இராணுவம் காடுகளுக்குள் இறங்கிய நேரங்களில் பட்டணியுடன் கிடந்திருக்கின்றோம். இந்த நிலையில் எந்த ஒரு உணவையும் உண்ணாது வீசுவதை மாஸ்டர் அங்கீகரிக்கமாட்டார். சிலவேளைகளில் இரவு உணவு அடுத்த நாள் காலையில் மிஞ்சியிருக்கும். அத்துடன் சேர்த்து ஏதோ ஒரு காலை உணவும் சிறிது சமைக்கப்படும். அந்தப் புது உணவுக்காக எமது மனங்கள் ஏங்கும். ஆனால், அது எல்லோருக்கும் போதாது என்பதால் பழைய உணவையும், புதிய உணவையும் கலந்துவிட்டு “சரி இனிச் சாப்பிடுவம்” என்பார். இரண்டையும் கலந்தபின் அது இரவு சமைத்த உணவுவகையாகவும் இராது, காலை சமைத்த உணவுவகையாகவும் இராது. ஏதோவொரு புதியவொரு உணாவகவும் புதியதொரு சுவையாகவும் இருக்கும். பெருமூச்சு விட்டபடி அதை உண்போம். ஒருமுறை “ஒப்பறேசன் திரிசூலம்” என்ற பெயரில் நாம் இருந்த காட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் தேடுதலை நடாத்தினார்கள். அப்போது நடந்த சண்டையில் எமது இருப்பிடம் இராணுவத்துக்குத் தெரியவர புதிய இருப்பிடத்தைத் தேடினோம். அந்தச் சமயங்களில் எம்மிடம் உண்பதற்கு எதுவுமே இருக்கவில்லை: குடிக்க நீரும் இருக்கவில்லை. அப்போது எமது ஒருநேர சாப்பாடு மூன்று ‘கிறீம் கிறேக்கர்’ பிஸ்கற்றும், அரைக்குவளை (கப்) தண்ணீரும் தான் அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை தான் உண்போம். அந்த நேரத்தில் எமது உடல் சோர்வடையும், ஆனால் உள்ளத்தில் சோர்வு ஏற்படாதவாறு மாஸ்டர் ஒவ்வொரு போராளிகளையும் ஊக்குவித்தார். மாஸ்ரரின் வீரமரணத்துக்கு நான்கு வாரத்துக்கு முன்னர்தான் ஒரு பயிற்சி முகாமை நடாத்தி முடித்திருந்தார். அப்போது மாஸ்டர் சொன்னார்.. “நான் பலாலிப்பக்கம் போகிறேன். இனி நான் இறந்தாலும் பறவாயில்லை. ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை நான் உருவாக்கிவிட்டேன். இதற்கெல்லாம் காரணம் பொன்னம்மான்தான் அவர்தான் என்னை உருவாக்கினார்.” மாஸ்டர் வீரமரணமடைந்த அன்று கூட திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்த எமது போராளியின் குடும்பத்தவர்களில் ஒருவர் “செல்வராசா மாஸ்டர் இப்போது எங்கே நிற்கின்றார்? எனக்க அவரை நன்றாகத் தெரியும்” என்றார். இப்படி போராளிகளுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் மாஸ்டரை நன்கு தெரியும். அந்த செல்வராசா மாஸ்டர் இன்று எம்மோடு இல்லை. நினைவுப்பகிர்வு: ஆனந். செல்வராசா மாஸ்டர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சொந்த இடம் காங்கேசன்துறை, தந்தையின் பெயர் சின்னத்துரை. அவருக்கு இரண்டு கண்களும் தெரியாது. அந்த நிலையில் தான் மாஸ்டர் தன்னை போராட்டத்துக்கு அர்பணித்ததார். இவரது இயற்பெயர் செல்வராசா, இயக்கம் இவருக்கு இட்டபெயர் அன்பு. மாஸ்டருடன் சேர்ந்து இயக்கத்திற்கு வந்த அவரது ஊர் நண்பர்களால் செல்வராசா அண்ணை என அழைக்கப்ட்டவர். காலகதியில் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியனாக வந்த பின்னர் அவரது மாணவர்கள் இட்ட பெயர் தான் செல்வராசா மாஸ்டர் என்பதாகும். 1983ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மாஸ்டர் எமது இயக்கத்தில் 3வது பயிற்சி முகாமில் பயிற்சியைப் பெற்றிருந்தார். இவரது பயிற்சி முகாமினது பொறுப்பாளராக லெப். கேணல் பொன்னம்மான் இருக்க பயிற்சியாளாராக லெப். கேணல் புலேந்தி அம்மான் இருந்தார். பயிற்சி காலகட்டத்தில் போதே செல்வராசா மாஸ்டர் திறமைபெற்று சக தோழர்கள் மத்தியில் முதன்மையான இடத்தை பெற்றிருந்தார். பயிற்சி நேரத்தின்போதே இவரது திறமையை, முயற்சியை, கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தன்மையை அவதானித்த புலேந்தி அம்மான் 3வது பயிற்சி முகாமின் மாணவனாக இருந்த செல்வராசா மாஸ்டரை அதே பயிற்சி முகாமின் பகுதி நேரப் பயிற்சியாளனாக மாற்றிவைத்திருந்தார். அந்த அளவுக்கு மாஸ்டர் உடற்பயிற்சியில் ஒரு புலியாக இருந்தார். பின்னர் நான்காவது பயிற்சி முகாமின் இறுதி காலகட்டத்தில் செல்வராசா மாஸ்டரே பயிற்சியாளனாக இருந்தார். எமது இயக்கத்தில் பொன்னம்மானுக்கு அடுத்தபடியாக ஏராளமான போராளிகளை உருவாக்கியது செல்வராசா மாஸ்டர்தான். பலாலியில்… அன்று செல்வராசா மாஸ்டர் வீரமரணமடைந்துவிட்டார். செம்மண்ணான கட்டுவன் பகுதி மாஸ்டரின் குருதிபட்டு மேலும் செம்மையடைந்து விட்டது. செல்வராசா மாஸ்டரின் கரத்தால் இனித்துப்பாக்கியை இயக்கமுடியாதுதான். ஆனால், மாஸ்டர் உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் போராளிகளின் கரத்திலிருந்து துப்பாக்கிகள் ஆக்கிரமிப்பாளனின் அரண்களை நோக்கி முழங்கிக்கொண்டேயிருக்கும். அந்த்த துப்பாக்கி வெடிச்சத்தங்கள் தான் மாஸ்டருக்கு கிடைக்கும் அஞ்சலிக்கீதமாம். நினைவுப்பகிர்வு: தினேஸ். செல்வராசா மாஸ்டரின் பயிற்சி மாணவர்கள் சொல்கிறார்கள்: பயிற்சிக் காலகட்டத்தின் போது கட்டுப்பாடுகளைக் கருத்திலெடுக்காது குழப்படிகள் செய்து சிறுபிள்ளைத்தனமாகத் திரிபவர்களைப் பார்த்து அடிக்கடி மாஸ்டர் சொல்லவார்: “முதலில் உன்னை மனிதனாக்குகிறேன், பிறகு போராளியாக்குகிறேன்…” நாம் காட்டு வாழ்க்கையைச் சந்திக்கப் போகின்றோம். காட்டின் சூழலுக்கு ஏற்ற விதத்தில் நாம் வாழவேண்டும். பசி எடுக்கும், பட்டினி கிடக்க நேரிடும், களைப்பு எடுக்கும் , தண்ணீர் கிடைக்காது, இவற்றுக்கு மத்தியில் எதிரி வருவான். நாம் உற்சாகத்துடனும் உறுதியுடனும் சண்டையிட வேண்டும். நாம் சமையலுக்கு என்று வைத்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் சாக்கினால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும், அல்லது உருமறைப்பு வர்ணம் தீட்டப்பட்டிருக்கும். இருமல், தும்மல், பலமாக சிரித்தல், சத்தம் போட்டுக் கதைத்தல் தவிர்க்கப்படும். அல்லது அந்த இடத்துக்கு மாஸ்டர் வந்துவிடுவார். பானையும், கரண்டியும் மிக அவதானமாக கையாளப்பட வேண்டும். ஒரு சத்தமும் எழக்கூடாது. சத்தத்தையும், மணத்தையும் எழுப்பகூடிய வறுவல், துவையல் இருக்காது. குளிக்கத் தண்ணீர் இல்லை. குடிப்பதற்கே ஒரு கோப்பைதான் தண்ணீர். ஆனால் துப்பாக்கிகள் எந்தநேரமும் துப்பரவாக இருக்கவேண்டும். காட்டுக்குள் மாஸ்டர் அடிக்கடி கூறுவார்: “சத்தமும், வெளிச்சமும், மணமும் இங்கே எமது எதிரி” பல சந்தர்ப்பங்களில் நாம் நோயால் அவதியுற்றோம். காய்ச்சல் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், மருத்து வசதி இருக்காது. வேதனை அதிகமாக இருக்கும் . அந்த வேளைகளில் மாஸ்டர் அவர்களுக்க அருகில் சென்றுவிடுவார். மனதுக்கு உற்சாகமூட்டும் கதைகளைக் கூறுவார். தாக்குதல் சம்பவங்களைக் கூறுவார். உடல்வேதனைக்கு இதமாக சதைகளைப் பிடித்தவிடுவார். இவ்விதமாக யாரும் படுக்கையில் சத்தமிட்டு முனகாதவாறு செய்துவிடுவார். நன்றிகள்: விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி, 1990), தாய்நிலத்து வீரர் – மாவீரர் நினைவுகள் 02 நூல். https://thesakkatru.com/commander-mejor-selvarasa-master/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பொன்னழகு திருமார்பில் பூமாலை திருப்புகழோடு ஓம் என்னும் இசைமாலை கண்குளிர தாங்கிநின்றாய் வடிவேலை உன்னை கைகூப்பித் தொழுவதுதான் என் வேலை தேவானை வள்ளியுடன் திருக்காட்சி எழில்திருச்செந்தூர் கோவிலில் உன் அருளாட்சி நாவார உனைப்பாட எனக்காசை இசை நலம்கூட்டும் உன்கோவில் மணியோசை கற்பூரம் உன்வீட்டில் சுடராகும் மனம் கமழ்கின்ற சந்தனம் உன் பரிசாகும் நற்பேறு எல்லாமும் தருவோனே எங்கள் நாயகனே கதிர்வேலா முருகோனே குமரா உன்திருநீறு மருந்தல்லவோ உன் குங்குமமே மங்களமாம் விருந்தல்லவோ அமையும் ஓம் மந்திரமே உனதல்லவோ நின் அருளொன்றே இவ்வுலகில் பெரிதல்லவோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் குங்கும பூவாய் பங்கயப் பாவை வேங்கடரமனின் பூங்கொடி வாராய் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எப்படி உமை துதிப்பேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | இசை நிகழ்ச்சி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கச்சித் திரு அகவல் திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக் குலவிய சிவபதங் குறுகாது அவமே மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும் மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன் விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்; முள்ளும் கல்லும் முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும், வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும், தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை இசையுங் கதலித் தண்டென இயம்பியும் நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத் துடிபிடி யென்று சொல்லித் துதித்தும், மலமும் சலமும் வழும்புந் திரையும் அலையும் வயிற்றை ஆலிலை யென்றும், சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும் முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும், குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்; நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும் ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும் அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும், வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப் பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும், வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத் துப்பு முருக்கின் தூய்மலர் என்றும், அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும் முன்னிய பல்லை முத்தென மொழிந்தும் நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும் கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும் தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும் உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும் கையும் எண்ணெயும் கலவாது ஒழியில் வெய்ய அதரும் பேனும் விளையத் தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும் சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சிச் செல்லும் நரக வாயில் தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும் காமப் பாழி; கருவிளை கழனி; தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்; எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி! மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்; நச்சிக் காமுக நாய்தான் என்றும் இச்சித் திருக்கும் இடைகழி வாயில்; திங்கள் சடையோன் திருவருள் இல்லார் தங்கித் திரியும் சவலைப் பெருவழி; புண் இது என்று புடவையை மூடி உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண் மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி; நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி; தருக்கிய காமுகர் சாரும் படுகுழி; செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி; பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி; மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்; இத்தை நீங்கள் இனிது என வேண்டா; பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி மெச்சிச் சிவபத வீடருள் பவனை முத்தி நாதனை மூவா முதல்வனை அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும் கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின் போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உத்ரா உன்னிகிருஷ்ணனின் தேனான குரலில் மஹாலக்ஷ்மி வருவாயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமாந் காம காமா ய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோத தாது குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம: வருக வருக திருமகளே வருக தனம் தருக தருக மங்களங்கள் பெருக குபேர லக்ஷ்மியே வருக எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக யக்ஷ ராஜன் மெச்சும் மோஹினி பக்ஷி ராணி எனை ரக்ஷிப்பாய் நீ கட்சி வரதனின் கனகவல்லியே கச்சவ கர்வநிதி தாரும் அன்னையே மட்சயவதாரனின் பாற்கடல் தன்னையே துளியும் பிரியாத மட்சியகன்னியே குறையா செல்வமே கோடி உண்டு உன்வசம் வருகை தருவதற்கு அன்பு உண்டு என்னிடம் அளிக்க சுமங்கலியே வா மஹா பத்மநிதி பதுமநிதி தா கோலக் கண்ணனின் கோதை ராதையே குந்தமுகுந்தநிதி சிந்து பாவையே எழவர் குழலே அலர்மேல் மங்கையே ஏழு பிறவிக்கும் நீங்காது என்னையே கோசை சங்கநிதி மஹாலக்ஷ்மி சீதனம் ஆச குழந்தை மீது பார்வை வீசு சீக்கிரம் நீல நிதியும் நீயே நித்தய ஸ்ரீநிதியே சிந்தாமணியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருமலைக் கோடி தங்கக் கோயில் நாராயணி அம்மா உன் குருவடி பாதம் சரணமடைந்தேன் குறைகள் இல்லையம்மா வேல்விழியாளே நானுனைக் காண வேலூர் வந்தேனே உன் காலடி கண்டே நீண்ட காலம் சுகமாய் வாழ்வேனே நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி தாமரைப்பூவில் வாழும் காமனின் தாயே தயை செய்ய நேரமில்லையோ பூ மகளே பொன்னருளே நானும் உன் மகள்தானம்மா ஸ்ரீ மஹா லக்ஷ்மியே கண் பாராயம்மா ஸ்ரீதர கேசவன் மாதவன் மார்பில் வாழும் ஸ்ரீமதியே உன் திருவிளக்கேற்றி வணங்குகின்றேன் நற்றாரும் மாநிதியே திருமகளே வரமருளே காலடியின் ஓரத்திலே நான் வாழ ஆனந்த யோகம் நாளும் அளித்திடும் மாயே அடியேனை மறந்தனையோ ஸ்ரீபுரமே வாழ்பவளே ஸ்ரீரங்கன் மகிழ் தேவியே நான் உன்னை பூஜித்தேன் மலர்த் தூவியே ஜோதி அண்ணாமலை ஆதி திருமலை இடையினில் வாழ்பவளே உன் திருமலைக் கோடி வருபவர் கோடி தருவாய்த் திருவருளே பொன்மகளே மண்மகளே யோகா சுப மங்களங்கள் எனை சேர
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா முருகா வேல் அழகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் சீதா மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் துளசி மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் ராகம்: சங்கராபரணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருவிருந்து பாடல் உன்னை நாடி நாடி வரும் நேரம் உயிர் நாடி உருகிப்பாடும் சொந்தம் தேடித்தேடி வரும் வேளை சொல்லாமல் சோகம் போகும் உன்னில் என்னை என்னில் உன்னை என்றும் அன்பில் ஒன்றி வாழ வாழ்த்தும் உந்தன் வார்த்தை வாழ்வில் ஒளி உன் வார்த்தை வழியை விலக விழுந்தேன் வாழ்வே உன்னில் சரணாக வரங்கள் சுரந்தாய் மழையாக வானம்போன்ற உந்தன் அன்பில் வாழும் ஜீவன் நான் உன் வள்ளல் உள்ளம் வார்த்தை வளமை தந்தது தனிமை இருளில் சிறையில் தவித்து என்னை இழந்தேன் இறையே உன்னை உயிராக இதயம் தந்தாய் உணர்வாக எந்தன் வாழ்வு உந்தன் உறவில் சொந்தம் காண்கிறதே என் நெஞ்சில் என்றும் சந்தோசந்தான் சந்தோசந்தானே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இருளில் நிலவாக பிறந்தார்...|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட மலையினிலே . . . சென்னிமலையினிலே . . . முருகா முருகா முருகையா உருகாதோ உந்தன் மனமய்யா கண்களில் நீரும் கசியுதய்யா என் கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்டதும் கவலைகள் பறந்தய்யா மலையினிலே . . . ஆதி பழநியிலே . . . காலடி ஓசையை கேட்டேனம்மா வருவது குகனென்று அறிந்தேனம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா நினைவும் அவன் பின்னே சென்றதம்மா அலங்கார தீபம் அழைக்கின்றதே அந்த சிங்கார சென்னிமலையினிலே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆனந்த கொலு இருப்பாள் அஷ்ட லக்ஷ்மியே அன்னலக்ஷ்மி ஸ்வர்ணலட்சுமி ஆதிலக்ஷ்மியே கன்றோடு கறவை தரும் கருடவாஹினி ஸ்ரீதரன் தேவியே ஸ்ரீதேவியே அம்மா ஸ்ரீதரன் தேவியே ஸ்ரீ தேவியே ஒன்பது நாளும் ஒவ்வொரு கோலத் திருக்காட்சியே மங்கையர் நாங்கள் கண்டுமகிழ்ந்தோம் பங்கஜமாலினியே ஆனந்தம் . . . ஆனந்தம் . . . இந்திரன் வழிபடவே இளமையைத் தந்தாய் ஆதி பாற்கடல் தேவி சந்திரன் சோதரியே என்மனை வாராய் முந்தி பொன்மழைத் தூவ கொஞ்சம் பார்த்திடம்மா குசேலன் கூட செல்வா குபேரன் ஆக கோமள வள்ளியே ஆசிகள் போட கோவிந்த மாதவன் கூட ஆந்த ஊஞ்சலில் ஆட வேதங்கள் வழிகாட்ட இல்லம் வரணும் ராஜ கஜலக்ஷ்மிதேவி தாழை விளக்கேற்ற தயவினைத் தரணும் தான்ய தனலக்ஷ்மிதேவி பேதைக்குதவிடம்மா வீரலக்ஷ்மியே என்னை ஊரார் மெச்சவே மேதையாக்கிடம்மா வித்யாலக்ஷ்மியே சீதாலக்ஷ்மியே ஸ்ரீவரலக்ஷ்மியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும் காலம் காலமாக என்னைக்காக்கும் திருக்குமரா. தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா நாளும் பொழுதும் உம் நினைவோடுதான் வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே.. கபதகரி ரிகநிகச பதபதசபதசகா.. ரிகநிகச தததப கரிபம நிசகரி ரிதபரி சகமா.. நாளும் பொழுதும் உம் நினைவோடுதான் வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே தேனின் சுவையோடு..ஆ..ஆ..ஆ..ஆ -இயெசையா தேனின் சுவையோடு கீதம் பாடிடுமே ராக தாள பாவ தாள நயமுடனே நயமுடனே தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா வானும் வின்மீனும் உலகோடுதான் யாவும் உம் சாயல் தெளிவாகுதே ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ வானும் வின்மீனும் உலகோடுதான் யாவும் உம் சாயல் தெளிவாகுதே பாரில் எமக்காக தேவசுதனாக பாரில் எமக்காக தேவசுதனாக நாதர் கனிவோடு ஆ..ஆ..ஆ..ஆ….ஆ -இயெசையா நாதர் கனிவோடு தாமே நாடினீரே பாவ நாச தேவ பாலன் தயவுடனே தயவுடனே தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும் காலம் காலமாக என்னைக்காக்கும் திருக்குமரா. தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க 😋 | 100 % ஆரோக்கியத்திற்கு நான் கேரண்டி 💪 | Healthy Drink