Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன்? உன்னை எங்கு காண்பேன்? ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா அருணகிரி மனம் நொந்து தவித்தபோது – நீ அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா! (உன்னை… முருகா என்றழைக்கவா?) நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா – அந்தப் பாவினிலே மனமுருகி நின்றாயப்பா – உலகுக்குப் பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா (உன்னை… முருகா என்றழைக்கவா?) முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க – நீ முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா – நீ கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா (உன்னை… முருகா என்றழைக்கவா?) நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா – முருகா நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா என் காலமெல்லாம் என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா (உன்னை… முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருச்சி உச்சி பிள்ளையாரே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ? என்னையே நான் தருகின்றேன் (2) என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்.....அல்லாஹ் அல்லாஹ்...... யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்......அல்லாஹ் அல்லாஹ்...... தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா வெண்ணிலவே நீ கரைவதென்ன அதிகாலை நேரம் மறைவதென்ன என் காதல் ஹபீப் உலா வரும் நேரம் வெட்கம் தானாமல் ஒழிந்தாயோ அன்னை ஆயிஷாவின் சூரியன் எங்கே இப்புவி சூரியன் நிலவானதே அன்னையின் சூரியன் ஒளியாகவே உதித்திடும் இரவிலே அவர் வீட்டிலே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் எந்தன் பெருமான் வாட்டிடும் குளிரில் இதம் எந்தன் பெருமான் சொல்லிடும்போதே கொண்டாடும் இன்பம் அதை நெஞ்சே நீ என்றறிவாயோ உம்மீது நான் கொள்ளும் காதலும் தண்ணீரில் வரையும் ஓவியமா அதுவல்ல அழியாது எந்நாளுமே என் கண்ணில் கண்ணீரின் வடுவாகவே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா அன்பே உம்மைக் கானா வாழ்விலே பொழுதெல்லாம் கழிந்தோடும் கண்ணீரிலே வடிந்த கண்ணீர் காய்வதற்கு முன்பே அதில் பின்பமாய் வேண்டும் உம் முகமே வைகரையில் வேண்டும் உம் முகமே நித்திரையிலும் உம் முகமே ஒரு நொடியும் என் கண்கள் மாறாமலே உம் அழகை ரசிக்கனும் எந்நாளுமே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா தேன் சிந்திடும் மதினா......... உயிரே மதினா.......... மதினா மதினா........மதினா மதினா...... ஃபிதாக அபி வ உம்மீ யா ரஸூலல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம் விஸ்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம் வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் அதோ தெரியுது ஏழுமலை எங்கள் பெருமாள் வாழும் மலை இதோ இதோ என வேகம் வரும் என்றும் தணியாத தாகம் வரும் கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா மலையென்று சொன்னால் திருமலையே மனதில் நிற்பது திருமலையே பதியென்று சொன்னால் திருப்பதியே திருமகள் வாழ்வது திருப்பதியே பூலோக வைகுந்தம் திருப்பதியே பொன்மழைபொழிவது திருப்பதியே வேதங்கள் போற்றிடும் திருப்பதியே விதியையும் மாற்றிடும் திருப்பதியே கருடன் கொணர்ந்தது கருடகிரி ருஷபாசுரனால் ருஷபாத்ரி நாராயணன் தரும் நாரணகிரி நரசிம்மன் பெயரால் சிம்மகிரி அஞ்சனை தவத்தால் அஞ்சனாத்ரி ஆதிசேஷனின் ஷேசாத்ரி ரிடபாசுரனால் ரிஷபகிரி ஏழுமலையானின் வேங்கடகிரி காண்பது ஒருகணம் என்றாலும் கடவுளை நேரில் காண்போமே மீண்டும் எப்போதும் இந்த பாக்யம் வேண்டும் வேண்டுமென வேண்டிடுவோம் எண்ணிலாத்தலங்கள் இருந்தாலும் அப்போதைக்கப்போது கூட்டம் வரும் ஏழுமலையானை பார்ப்பதற்கோ என்றும் எப்போதும் கூட்டம் வரும் மலைமேல் கடல் வந்து புகுந்ததுவோ அலைமேல் அலையாய் தலைதெரியும் திருநாள் எந்நாளும் திருநாள் தான் ஸ்ரீநிவாசன் புகழ் உலகெங்கும் நின்றத் திருக்கோலம் காண்கையிலே நேரம் போவது தெரியாது கண்டு கண்டு கண்ணில் நீர்பெருகும் திருப்ப மனமின்றி ஏங்கிடுமே மலையடிவாரம் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருப்பார் கபில தீர்த்தத்தில் குளித்திடுவோம் கலிகோபுரத்தைக் கண்டிடுவோம் மாலவன் மேனியை அலங்கரித்த மாலைகள் மலையெங்கும் கமகமக்கும் கோவிந்தன் நாமம் எதிரொலிக்கும் பக்தர்கள் வரிசை காத்திருக்கும் ஒரே வரிசையில் ஒழுங்காக நவகிரஹநாயகர் நிற்கின்ற அதிசயம் இங்கே நிகழ்ந்திடுமே ஆழ்வார் பாசுரம் இனித்திருக்கும் எட்டுதிக்கு பாலகரும் எம்பெருமானை எதிர்பார்ப்பார் அஷ்டலக்ஷ்மிகள் கூடிடுவார் கங்கை நீராட்ட வந்திருப்பார் அர்த்ததீர்த்தம் பஞ்சாயுதம் நாரத தீர்த்தம் கிருஷ்ண தீர்த்தம் பாண்டவர் தீர்த்தம் கோகற்பம் குமார தீர்த்தம் சுத்த தீர்த்தம் பார்கவ புராண திதிர் தீர்த்தம் பாபவிநாசம் பைரவம் கணேஷ தீர்த்தம் முதலாக கணக்கில் எண்ணி முடிந்திடுமோ வராக பெருமான் புஷ்கரணி நீராடியபின் வேங்கடவன் சந்நிதி காண சென்றிடலாம் சகலசௌபாக்யமும் பெற்றிடலாம் பறவைகள் பாடும் சங்கீதம் தேவர்கள் ஓதும் நால்வேதம் பள்ளியெழவே சுப்ரபாதம் கண்ணன் எழுந்தான் வேணுகானம் தங்கவாசல் தாண்டியபின் நவரத்ன குவியலோ நெடுமாலொ பச்சை கற்பூர வாசம் வரும் பார்க்க பார்க் மெய்சிலிர்க்கும் வைகுந்தம் இங்கே வந்ததுவோ சொர்க்கபோகம் தந்ததுவோ கருமாமணியைக் காண்பதற்கு கண்கள் கொடுத்து வைத்ததம்மா நெஞ்சில் ஒருபுறம் மஹாலக்ஷ்மி மறுபுறம் அமர்ந்தாள் பத்மாவதி இங்கே வந்தபின் வேறெதற்கும் அஞ்சேல் என்பான் திருமாலே ஆயிரம் நிலவுகள் சேர்ந்தனவோ தாயினும் இனியவன் கருணைமுகம் நம்விழி கூசும் என்றெண்ணி நாம் சற்றே மறைத்ததுவோ என்னை நானே இழந்துவிட்டேன் ஏகாந்த சேவையில் கரைந்துவிட்டேன் என்ன அதிசயம் இவன் தோற்றம் எங்கும் காணாத விந்தையம்மா பாலினில் விழுந்த கருவண்டாய் பார்வை வீசி சிரிக்கின்றான் வா என புன்னகை முகம் காட்டி ஸ்ரீநிவாசன் அழைக்கின்றான் விஸ்வரூப தரிசனமே துலங்கி சேவை அற்புதமே தோமாலை சேவை கண்டதுமே மாலை தொடுக்கச் சொல்லிடுமே நீலமணிபோல் நெடுமேனி கோலாகுழல்மேல் மணிமகுடம் வில்போல் புருவங்கள் நடுவினிலே ஸ்ரீபாதரேணு திருநாமம் சூரிய சந்திரர் விழிகளிலே மகர குண்டலம் செவிகளிலே வீணை நிமிர்ந்தது நாசியிலே முத்துக்கள் கொட்டின இதழ்களிலே வானவில்லோ கன்னங்கள் சங்கு கழுத்தில் பதக்கங்கள் பரந்த தோளில் ஆரங்கள் சங்கு சக்கர வண்ணங்கள் விரிந்த மார்பில் கௌஸ்துபமும் சஹஸ்ரநாம சங்கிலியும் மணமகள் பத்மாவதியோடு மஹாலக்ஷ்மியும் கொஞ்சிடுமே சுந்தர சூழலோ உன்மேலே காஞ்சி மேகலை இடையினிலே தசாவதார கச்சையிலே சூர்யகட்டாரித் தொங்கிடுமே உதரபந்தனம் அணிவயிற்றில் வீரக்கழலணி சாரதியோ வலக்கரம் பாதம் காட்டிடுமே இடக்கரம் அவனிடம் சேர்த்திடுமே காலைப்பிடித்தால் மேல்வரலாம் காலகாலம் அருகிருந்து கூடிக்கலந்து குலவிடலாம் குறிப்பை அறிந்துகொள் என்பானோ தோளைப்பார்த்தவர் தோளே கண்டார் தாழைக் கண்டவர் தாழே கண்டார் அங்கம் முழுதும் ரசிப்பதற்கு கண்களிரண்டு போதாதே வானும் மண்ணும் அளந்த அடி பூமாதேவி வருடும் அடி பெரிய சிறியத் திருவடிகள் இருவரின் சேவைகள் ஏற்றிடுவாய் ஞாயிறு திங்கள் மங்கள நாள் செவ்வாய் தோறும் தெப்ப உலா புதனன்று போக ஸ்ரீநிவாசன் கலசாபிஷேகம் ஏற்றிடுவான் குருநாள் பாவாடை சேவை உண்டு வெள்ளியில் பூரா அபிஷேகம் சனிநாள் விளக்குகள் ஏற்றிவைத்தால் வினைகள் விலகும் வெற்றிவரும் அலர்மேல்மங்கை அன்புக்கரம் பற்றியத் திருக்கரம் ஆனந்தம் ஊஞ்சல் கண்ணாடி சேவைகளே யாவும் அவனின் லீலைகளே ஆவணி கார்த்திகை தை திங்களில் அழகனுக்கு ப்ரம்மோக்ஷபம் சித்திரை கோயில் கணக்கர் விழா நரசிங்க யாதவர் பங்குனி விழா ஸ்ரீஜெயந்தி உரியடி தீபாவளி யுகாதி ஏகாதசி ஸ்ரீராமநவமி மோஹினி பவனி வைகாசியில் கோயிலையும் ஆழ்வாராய் கொண்டாடுவார் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் அதன்மேலும் ஸ்ரீநிவாசன் புகழ் செழிக்கட்டும் கோவிந்தராஜன் அருள் கொழிக்கட்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அண்டர்பதி குடியேற
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலை தீருமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் (2) 1.பாவங்கள்போக்கிமன்னிப்பைஅருளும் இயேசுவின் திருவடி சரணாலயம்(2) மனம்மாறினோரை மகிழ்வுடன் ஏற்கும் இயேசுவின் திருவடி சரணாலயம் (2) 2. களைத்தவர் மனதை இளைப்பாறச் செய்யும் இயேசுவின் திருவடி சரணாலயம்(2) குருவினைத்தொடரும்சீஷருக்கெல்லாம் இயேசுவின் திருவடி சரணாலயம் (2) 3. திவ்விய வாடிநவினை திருவாடீநு மலர்ந்த இயேசுவின் திருவடி சரணாலயம் (2) தூடீநுமையின்வாடிநவிற்குதூயாவிஅருளும் இயேசுவின் திருவடி சரணாலயம் (2) 4. பாவத்தைவென்று உலகினை ஜெயிக்க இயேசுவின் திருவடி சரணாலயம் (2) தீமையைநன்மையால்ஜெயித்திடச்செடீநுத இயேசுவின் திருவடி சரணாலயம் (2)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தொடுகிற யாவிலும் வெற்றியை தருகிற வள்ளலே யா அல்லா
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ருசியான கொத்தமல்லி உருளை கிழங்கு சாதம் செய்து பாருங்க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மசாலா டீ 😂; இங்கு மலேசியர் ஒருவர் இந்த டீ போட்டு சிறப்பு வைபவகளுக்கு விற்கின்றவர், அந்த மாதிரி சுவை, நானும் நின்று விற்கின்றனான், சனம் திரும்ப திரும்ப வந்து வாங்குவார்கள் விரைவில் முடித்துவிடும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெள்ளை பூசணி அல்வா
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
செட்டிநாடு சிக்கன் கிரேவி || Chettinad Chicken Gravy Cinnamon stick- 1/2 inch Black Cardamom - 1 Star anise - 1 Stone Flower - 1 Green cardamom - 2 Cloves - 4 Mace - 1/2 Marathi Moggu/ Kapok Buds - 1 Coriander seeds - 2 tb spn Peppercorns - 1 tsp Fennel seeds - 1 tsp Cumin seeds - 1 tsp Chana dal - 1 tsp Bay leaf - 1 Red chillies - 15 Dry Coconut - 1/2 Poppy seeds - 1 tsp Curry leaves - 2 sprigs
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து, இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து, பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து, துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க, வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த, கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த, பெருமாளே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்? சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்? கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பலவாணனே! ஆடிய பாதனே அம்பலவாணனே உன் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? உன் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பிட்டுக்கு மண் சுமந்து கங்கை தலை சுமந்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சர்வேசா விநாயகா சர்வேசா விநாயகா பாசத்தின் அமுதே விநாயகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா என் இதயத்தில் எழுந்திட வா என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு சொந்தம் சுற்றம் சூழ்ந்திடா பயன் என்னவோ மெழுகாகினேன் திரியாக வா மலரகினேன் மணமாக வா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்பான நெஞ்சே உணர்வாயே நீ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து, தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து, பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று, தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப, தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து, திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று, தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து, எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற, பெருமாளே
-
கப்டன் விக்னம்
கப்டன் விக்னம் இயக்கப் பெயர்: கப்டன் விக்னம் இயற்பெயர்: கந்தையா தவராசா முகவரி: உடுத்துறை வடக்கு, தாளையடி, வடமராட்சிக் கிழக்கு, யாழ்ப்பாணம். ஈழமண்ணில்: 07.08.1968. ஈழவர் மனங்களில்: 05.08.1990. 1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத்தில் ஒருநாள் இரவு கடற்கரையில்வாடியில் (மீன்பிடி உபகரணங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் கூடாரம்) படுக்கப்போறன் என்று வீட்டில் கூறிவிட்டுச்சென்றவர் காணாமல்ப்போனார். ஆனால் அவர் வேறெங்கும் செல்லவில்லை. விடுதலை வேட்கையை இதயத்தில்ச்சுமந்தபடி வெற்றிலைக்கேணிக்குச்சென்று அங்கு இன்னும்பல இளைஞர்களுடன் படகேறி இந்தியாவிற்குச்சென்றார். இந்தியாவில் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் 06-வது பயிற்சிப்பகாசறையில் தனது அடிப்படைப்பயிற்சியை நிறைவுசெய்திருந்த இவரை மீண்டுமொரு பயிற்சிக்களம் அழைத்தது. அதாவது விடுதலைப்புலிகளின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பயிற்சிப்பாசறைகளில் பயிற்சிபெற்ற கடல்சார்ந்த அனுபவங்களைக்கொண்ட 45 போராளிகள் தேர்வுசெய்யப்பட்டு கேணல் சங்கர்அவர்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் சென்னையில் கடல்க்கொமாண்டஸ்ப்பயிற்சியான நீரடிநீச்சல்ப்பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டது. குறித்த இந்த 45 போராளிகளுள் இவரும் உள்வாங்கப்பட்டிருந்தார். இந்த அணிதான் கடற்புறாவாகவும் பின்னையநாட்களில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளாகவும் பரிணமித்திருந்தது. கடற்கொமாண்டஸ்ப்பயிற்சிகளையும் செவ்வனேநிறைவுசெய்த இவர் தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே தங்கிநின்று தேசவிடுதலைப்பணிகளை முன்னெடுத்தார். அன்றையநாட்களில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களுமே தமிழ்நாட்டை தளமாகக்கொண்டுதான் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்குமான போக்குவரத்தை படகுகளில் கடல்மார்க்கமாகவே மேற்கொண்டிருந்தார்கள். அன்றையநாட்களில் இந்தப்படகுகளை வண்டி என்றுதான் போராளிகளும் பொதுமக்களும் குறிப்பிடுவார்கள். இவ்வாறுவரும்வண்டிகளில் இவர் அவ்வவ்ப்போது கடிதங்கள் வீட்டிற்கு கொடுத்துவிடுவார். சிலகடிதங்களுக்குள் போட்டோக்களும் வைத்து அனுப்பிவிடுவார். போராளிகளுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி எடுத்திருந்த அந்தப்படங்களை போராயுதங்களை நேரில்ப்பார்த்திராத அந்தக்காலங்களில் நாம் ஆர்வமாகவும் அதிசயமாகவும் அந்தப்படங்களைப்பார்த்ததுண்டு. சிலசந்தர்ப்பங்களில் தபால்மூலமும் கடிதங்கள் வந்தது நினைவிருக்கின்றது. அவர் விடுதலைப்போராட்டத்தில் இணைந்து மூன்று வருடங்கள் கடந்தநிலையில் 1987-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதமென நினைக்கின்றேன். தியாகதீபம் திலீபன்அண்ணா உண்ணாநோன்பிருந்த நாட்களென நினைவிருக்கிறது. அன்றையநாட்களில் ஒருநாளில் தமிழ்நாட்டிலிருந்து தாயகம்வந்தவண்டியில்; தாயகத்திற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து சிலநாட்கள் விடுமுறையில் தங்கிநின்றார். பின்னர் மீண்டும் தேசக்கடமைக்காகச்சென்றுவிட்டார். இதன்பின்னரான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப்படையினருக்குமான யுத்தம் தொடங்கி தீவிரம்பெற்றிருந்தது. இந்தக்காலப்பகுதிகளில் இவரது கடிதங்கள் மிகமிகஅரிதாகவே வீட்டிற்கு கிடைத்தன. கடிதங்களில் தான் இந்தியாவில் நிற்பதாக குறிப்பிட்டிருந்தார். அரிதாகவந்தகடிதங்களும் பின்னர் வராதுவிட்டன. காலங்கள் உருண்டோடின. 1989-ம்ஆண்டின்நடுப்பகுதி என நினைவிருக்கிறது. இந்தக்காலப்பகுதியில் எமது பகுதிக்கு அண்மையாக தாளையடியிலும் கட்டைக்காட்டிலும் இந்தியப்படையினர் முகாம் அமைத்திருந்தனர். இந்த இரண்டு முகாம்களிலுமுள்ள படையினர் ரோந்துசெல்கின்ற சுற்றிவளைக்கின்ற தேடுதல் நடாத்துகின்ற இடங்களாக மருதங்கேணிமுதல் வெற்றிலைக்கேணிவரையான பகுதிகள் அமைந்திருந்தன. எப்போது வருவார்கள் தேடுதல் நடாத்துவார்கள் என்று எவருக்குமே தெரியாது. இவ்வாறு நெருக்கடியானசூழ்நிலை நிலவிய நாட்களில் எவருமே எதிர்பார்க்காத ஒருஇரவுப்பொழுதில் கடல்ப்பயணம் சென்றுகொண்டிருந்த வண்டி இவரை கரையில் இறக்கிவிட்டுச்சென்றது. நீண்டநாட்களுக்குப்பிறகு அவரை பார்த்ததில் அனைவரும் சந்தோசமடைந்தாலும் மனதளவில் பயந்துதான்போனார்கள். இந்தமுறை அவர் துப்பாக்கியுடன் வந்திருந்தார். இந்தச்சந்தர்ப்பத்தில் இந்தியப்படையினர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொண்டால் விளைவுகள் விபரீதமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நிற்கும் சமயத்தில் இந்தியப்படையினரது தேடுதல்கள் இடம்பெறக்கூடாது என அனைவரும் உள்ளுரஇறைவனை வேண்டினார்கள். மறுநாள் பகல்ப்பொழுதுகழிய அடுத்துவந்த இரவுப்பொழுதில் அதேவண்டிவந்து அவரை ஏற்றிச்சென்றது. அதன்பிறகுதான் அனைவரும் நின்மதிப்பெருமூச்சுவிட்டார்கள். அதன்பிறகு குறிப்பிட்டகாலம் அவரது தொடர்புகள் எதுவும் இல்லாமலிருந்தது. 1990ம் ஆண்டின் முற்பகுதி. இந்தியப்படையினர் தாயக மண்ணைவிட்டு வெளியேறத் தொடங்கிய நாட்கள். விடுதலைப்புலிகள் வரிச்சீருடையுடன் மக்கள்மத்தியில் வலம்வரத்தொடங்கியகாலமது. அந்தநாட்களில் ஒருநாளில் அவரும் வரிச்சீருடையுடன் துப்பாக்கி தொலைத்தொடர்பு சாதனத்துடன் வந்தார். இந்தமுறை தனியாக வரவில்லை. இன்னும் பல போராளிகளுடன் வந்தார். அனைவரும் ஆயுதம் தரித்திருந்தனர். அவர் வந்துமறுநாள் மீண்டும் சென்றுவிட்டார். இந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல்ப்பிரிவான விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி தமது செயற்பாடுகளை மக்கள்மத்தியில் விரிவாக்கம் செய்திருந்தனர். இவர் போராளிகளுடன் வீட்டிற்கு வந்துசென்று ஓரிருவாரங்கள்தான் கடந்திருக்குமென நினைக்கின்றேன். அவர் விடுதலைப் புலிகளின் வடமராட்சிக்கிழக்குப் பிரதேச மக்கள் முன்னணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தாளையடி அரசியல்ச் செயலகத்திற்கு அவர் வந்திருப்பதாக தகவல் கேள்வியுற்றோம். வடமராட்சிக்கிழக்குப் பிரதேசப் பொறுப்பை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை ஒன்றுகூட்டி கருத்தரங்குகளை நிகழ்த்தினார். அவரது கருத்தரங்குகள் மக்கள்மத்தியில் பெரிதும் எழுச்சியை ஏற்படுத்தியது. அன்றையநாட்களில் தமிழீழ காவல்த்துறைக் கட்டமைப்பு இருக்கவில்லை. (தமிழீழ காவல்த்துறை உருவாக்கப்பட்டது 1991 நவம்பர்) ஆதலால் பொதுமக்களிடமிருந்து வருகின்ற குடும்பப்பிரச்சினை காணிப்பிரச்சினை பணக் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட இதரபிரச்சினைகள் அனைத்தையும் பிரதேச அரசியல்ப்பிரிவே கையாளவேண்டியிருந்தது. நாளாந்தம் அவரது செயலகத்தில் மக்கள் குவிந்தார்கள். ஒவ்வொருவரது பிரச்சினைகளையும் நிதானமாகக்கையாண்டு தீர்வுகளை வழங்கினார். மக்கள்மத்தியில் அவருக்கான நன்மதிப்பு உயர்ந்தது. தவறுசெய்பவர்களை திருத்துவதற்காக அவர் வழங்கும் தண்டனையென்றால் அவரது செயலகத்தில் ஒரு இருட்டறை இருந்தது. அந்த இருட்டறையில் தண்டனைக்குரியவரை தங்கவைத்து மூன்றுநேரஉணவு மற்றும் தேனீர் என்பன நேரம் தவறாமல் வழங்கப்படும். இதுவே அவர் வழங்குகின்ற அதிஉச்சதண்டனையாகும். அவரிடம் தண்டனைபெற்றவர்கள்கூட அவரை உயர்வாகவே மதித்தார்கள். இவ்வாறு அரசியல்ப்பணி செய்த அவரை மீண்டும் இராணுவக் கடமை அழைத்தது. அவர் அரசியல்ப் பணியிலிருந்து மாற்றலாகிச் செல்லப் போகிறார் என்றதைக் கேள்வியுற்றதும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசமக்கள் மற்றும் பொது அமைப்புக்களிடமிருந்து நிறையக்கடிதங்கள் இவரை மாற்றவேண்டாமெனக்கோரி அப்போதைய வடமராட்சிப் பொறுப்பாளர் சூசை அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மக்களது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்த சூசை அவர்கள் இரண்டு மூன்று வாரங்கள் தாமதித்து அவரது தேவையின் முக்கியத்துவம்பற்றி மக்களுக்கு விளக்கி மாவீரர் ராஜீவை வடமராட்சிக் கிழக்குப் பிரதேசப் பொறுப்பாளராக நியமித்து இவர் வடமராட்சிக்கு அழைக்கப்பட்டார். இதன்பின்னர் சிறிலங்காப் படைகளுடன் இரண்டாவதுகட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது. இந்தநாட்களில் இவரது பணிகள் புதிய போராளிகளுக்கான பயிற்சித்திட்டங்களை நெறிப்படுத்துதல் மற்றும் அணிகளை வழிநடத்துதல் முதலான இராணுவரீதியான கடமைகளையே முன்னெடுத்திருந்தார். 10.07.1990 அன்று வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையினரின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் விநோத் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டபோது அந்தத் தாக்குதலில் இவரது வகிபாகமும் முதன்மையாகவிருந்தது. இதன்பிற்பாடு அடிப்படைப்பயிற்சி முடித்த போராளிகளைக் கொண்ட அணிகளுக்கு முதன்மைப்பொறுப்பேற்று ஆழியவளையில் அவர்களுக்கான தளம் அமைத்து அணிகளை நிலைப்படுத்திவிட்டுச் சென்றவரை மீண்டும் போர்க்களம் அழைத்தது. 05.08.1990 ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை யாழ். கோட்டை இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். இந்தத் தாக்குதலுக்கும் ஒரு அணிக்குப் பொறுப்பாகச் சென்ற இவர் கோட்டை முன்வாயிற் பகுதியில் நடைபெற்ற சண்டையில் இவர் வீரச்சாவைத்தழுவிக் கொண்டார். இவரது வித்துடலை மீட்பதற்காக பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இவர் வீரச்சாவடைந்து இரண்டாம்நாள் அதாவது 06.ம்திகதி இரவுதான் வித்துடல் மீட்கப்பட்டு இராணுவ மரியாதைகளுடன் அன்றைய விதிமுறைகளுக்கேற்றவாறு மானிப்பாய் பிப்பிலிமயானத்தில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்த்தி அவரது சொந்த இடமான உடுத்துறைக் கடலில் கரைக்கப்பட்டது. அவர் விடுதலைக் கனவுடன் விழிமூடி இன்றுடன் 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவரது நாமம் தமிழீழக் காற்றில் ஓயாத புயலாக வீசிக்கொண்டிருப்பதோடு வடமராட்சிக்கிழக்கு மக்களின் மனங்களில் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: கொற்றவன். https://thesakkatru.com/captain-vikanam/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யார் பிள்ளை யார் பிள்ளை என்ற போது பிள்ளையார் என்று பெயர் கொண்டு வந்த பிள்ளை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லா ஹூ ஹூ ஹூ
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுட சுட தீரும் மொறுமொறு மாலை உணவு இப்பவே செய்து பாருங்க