Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே கௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே வசுதேவ தவபால அசுர குல கால வசுதேவ தவபால அசுர குல கால சஷிவதனா ரூபிணி சத்யபாமா லோல சஷிவதனா ரூபிணி சத்யபாமா லோல கௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே கௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி கௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே கௌரி கல்யாண வைபோகமே கல்யாண வைபோகமே கௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே காணிக்கை யார் தந்தார் நீர்தானே நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2) காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2 ஆகாயம் மாறும் கடவுளின் மகனே ஆனாலும் உம் அன்பு மாறாது ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2) கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2 கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவன் தந்த அருட்கொடை
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இலை பஜ்ஜி || பாலக்கீரை பஜ்ஜி || இலை பஜ்ஜி Spinach Pakoda | Street Food கிராம் மாவு மற்றும் பாலாக் இலைகளால் செய்யப்பட்ட மாலை சிற்றுண்டி செய்முறை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிற்றுண்டி வடிவில் பரிமாறப்பட்டது. பாலாக் பஜ்ஜி தேவையான பொருட்கள்: பாலாக் - 1 கொத்து பெசன் - 1 கப் சோடா - பிஞ்ச் மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி கேரம் விதைகள் - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கேற்ப நீர் - தேவைக்கேற்ப உப்பு - சுவைக்க சட் மசாலா - பிஞ்ச் முறை: - ஒரு கலவை கிண்ணத்தை எடுத்து பெசன் சேர்க்கவும், ஒரு சிட்டிகை சமையல் சோடா, அஜ்வைன், மிளகாய் தூள் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும், தேவையான நிலைத்தன்மையில் தண்ணீர் சேர்க்கவும் .. இப்போது பாலக்கை நனைத்து சூடான எண்ணெயில் வறுக்கவும். அதன் மேல் சில அரட்டை மசாலாவை தெளித்து சூடாக பரிமாறவும். Evening snack recipe made of gram flour and Palak leaf. It boosts the immunity level in the body. Served in the form of snack. Palak Bhajji Ingredients: Palak - 1 Bunch Besan - 1 cup Soda - Pinch Chilli powder - 1/2 tsp Carom seeds - 1/4 tsp Oil - As required Water - As Required Salt - To Taste Chat masala - Pinch Method:- Take a mixing bowl add Besan , add a pinch cooking soda, ajwain, Chilli Powder , add salt and mix it well, add water to the required consistency.. Now dip the palak and fry it in hot oil. Sprinkle some chat masala on top of it and serve it hot.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவல் இருக்கா 10 நிமிடத்தில் முற்றிலும் புதுசா மசாலா அவல் செய்து பாருங்க||Instant 10 mins breakfast
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மீன் பிரியாணி Unity Basmati rice - 1kg Fish - 1/2 kg Oil - 250ml Shakthi Chilli powder - 1 1/2 tablespoon Salt - 2 tablespoon Cinnamon - 2grm Clove - 2grm Cardamom - 2grm Star anise - 2 piece Curd - 200ml Onion - 400grm Tomato - 300grm Lemon - 1 Corinder leaves -1/2 hand Mint leaves - 1/2 hand Green chilli - 3 Ginger paste - 100grm Garlic paste - 50grm Water - 1 1/2 half litre
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெறும் மூன்றே பொருளில் 😋 | வாயில் கரையும் ரம்ஜான் ஸ்பெசல் ஸ்வீட் | vattalappam recipe | eid 2020
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உங்களுக்கும் ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்🙏
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நமசிவாய வாழ்க - நால்வர் அருளிய நமசிவாய பதிகம் | சோலார் சாய் |சிவலோகம் | நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்த னடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈச னடி போற்றி எந்தை அடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந் தெல்லை இலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணிய வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே ஆக்கம் அளவிறுதியில்லாய், அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்ற மனங்கழிய நின்றமறை யோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள்ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான்… வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி, மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் கா அட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும்ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத்தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப்பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்எங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் பொருள்: மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகாரவிடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. …திருச்சிற்றம்பலம்…
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான ......... பாடல் ......... சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சிரித்தாடி மகிழ்வாக வா வா கண்ணா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தோணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன் 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில் தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல் 5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று என் கர்த்தர் சொன்னதினாலே தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு தயவாகப் பதிலளிப்பார் 6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என் கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார் எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலக மக்கள் யாவருக்கும்
-
இக்கோவில் எங்குள்ளது..?
மட்டக்களப்பு என தேடிப்பார்த்தேன் இந்த பெயரை, ஞாபகத்தில் வருவில்லை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எப்படி பாடினாரோ அடியார் அப்படிபாட நான் ஆசைகொண்டேன் சிவனே அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும் அருள்மணிவாசகரும் பொருளுணர்ந்து உன்னையே || குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும் அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும் கருணை கடல் பெருகி காதலினால் உருகி கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் ||
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு - என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே (ஆட்டுவித்தால் யாரொருவர்…) பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் - அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன் - இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் (ஆட்டுவித்தால் யாரொருவர்…) கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா - இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா (ஆட்டுவித்தால் யாரொருவர்…)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா நிரந்தரமானீரே நன்றி ஐயா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா 5. நீதி தேவனே நன்றி ஐயா வெற்றி வேந்தனே நன்றி ஐயா 6. அநாதி தேவனே நன்றி ஐயா அரசாளும் தெய்வமே நன்றி ஐயா 7. நித்திய ராஜாவே நன்றி ஐயா சத்திய தீபமே நன்றி ஐயா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லா புகழும் ............... ............. எல்லா புகழும் இறைவனுக்கே ....
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
3 பொருள் போதும் பத்தே நிமிடத்தில் No மைதா,சர்க்கரை 1 வாரம் ஆனாலும் கெடாத ஸ்வீட் அப்பம்|Instant sweet
-
சமையல் செய்முறைகள் சில
யாழ்ப்பாணத்து சரக்கு மீன் கறி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
443 B திருவருணை பகுதி 0428 பாடல் மற்றும் விளக்கம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே.. குளு-உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே.. சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன் துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன் குளு-சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன் துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன் அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன் அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன் எங்கள் ஆனை முகம் கொண்ட ஆதிநாதனாம் இறைவன் குளு- அந்த உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே.. பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும் உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும் குளு-பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும் உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும் கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம் கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம் வினை ஓடுவதும் பகை ஒடுங்குதலும் இனி திண்ணம் குளு- அருள் உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே.. உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே..