Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. இது செல்லாது செல்லாது..... "ஈழப்பிரியா" அக்காவை ஒரு கணக்கு திறக்க சொல்லுங்கள் 🙏
  2. கத்தரிக்காய் மற்றும் சுக்கினி கலந்து பால்கறி
  3. நெற்றித்தளம் விட்டுப்பரவிய
  4. ஒரு முறையேனும் காவடி ஏந்தி
  5. ஆடி கிருத்திகை திருத்தணி முருகன் கவசம் குரலிசை : வாணி ஜெயராம் இசை : சுரும்பியன் அருளியவர் : பாலதேவராய ஸ்வாமிகள் காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ண தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
  6. பல்லவி ஓடோடி வந்தேன் கண்ணா நான் உனக்கும் எனக்குமுள்ள உறவின்று அறிந்து அனுபல்லவி கோடானுகோடி தவம் செய்து உனைக்காண கோவிந்தா என்றழைத்து பிருந்தாவனத்திடை சரணம் குழலூதும் எழில் காணவே கூடும் கோபியர்கள் முகம் நாணவே காதல் விழியுன்றன் முகம் நாடவே முறுவல் இதழோரம் சுழித்தோடவே ஜகன்னாதன் இசை பாட நங்கை ஜதி போட கால காலமெல்லாம் ஸ்ருதியும் லயமுமென வேதப்-பொருள் உன்னில் ஒன்றி உறைந்திடவே போதம் மிகு காதல் பொன்னடி தனில் கொண்டு
  7. கலங்காதே மனமே திகையாதே மனமே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் 1.கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே கடைசிவரை உன்னை கைவிடமாட்டார் 2.அநாதி தேவனே உனது அடைக்கலம் அவரது புயங்கள் உந்தன் ஆதாரம் 3.அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே.
  8. நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
  9. விதம் விதமாக செய்து அசத்திவீட்டிர்கள் மனைவியை👍 சுரைக்காய் கடையல் || இது நம்ம ஊரு சமையல்
  10. குதம்பாய் அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் பார்க்கப் படாதானடி குதம்பாய் பார்க்கப்படா தானடி. வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் இட்டமாய்ப் பார்ப்பாயடி. தாவார மில்லை தனக்கொரு வீடில்லை தேவார மேதுக்கடி குதம்பாய் தேவார மேதுக்கடி. என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி நின்றது பிரமமடி குதம்பாய் நின்றது பிரமமடி.
  11. பண் :காந்தாரம் பாடல் எண் : 1 மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. பொழிப்புரை : சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது. பாடல் எண் : 2 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. பொழிப்புரை : குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது. பாடல் எண் : 3 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே. பொழிப்புரை : திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது. பாடல் எண் : 4 காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே. பொழிப்புரை : திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது. பாடல் எண் : 5 பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே. பொழிப்புரை : திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.
  12. பல்லவி பேகாக் கான மழை பொழிகின்றான் கண்ணன் யமுனா தீரத்தில் யாதவ குலம் செழிக்க அனுபல்லவி ஆனந்தமாகவே அருள் பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகன ரூபன் சரணம் 1 தேன்சுவை இதழில் வைங்குழல் வைத்தே திகட்டா அமுதாய் தேவரும் விரும்பும் வேணு- சரணம் 2 பெளளி குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழல் ஊதி சரணம் 3 மணிரங்கு அம்பரம் தனிலே தும்புரு நாரதர் அரம்பையரும் ஆடல் பாடல் மறந்திட அச்சுதன் அனந்தன் ஆயர்குல திலகன் அம்புஜனாபன் ஆர்வமுடன் முரளி
  13. என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே
  14. நான் குத்தரிசியில் தான் பழங்கச்சி குடிப்பது வழக்கம், மோர்மிளகாய் பொரித்து கசக்கி போட்டுவிட்டு கொஞ்ச ஊறுகாயும், தயிர், வெங்காயம் கலந்து விடிய பிள்ளைகளுக்கு கொடுப்பது வழக்கம் இடைக்கிடை, அவர்களுக்கும் நல்ல விருப்பம். ஊரிலை குடிக்காத நாளை எண்ணிப்பார்க்கலாம்🤔
  15. மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யாரஸூலுல்லா
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆகா கொடுத்து வைத்தனீர்கள்👍 அல்லது படமெடுக்க வெளிச்சம் கூடவென கை வைத்து மறைத்துவிட்டாரா😄
  17. பல்லவி ஓடோடி வந்தேன் கண்ணா நான் உனக்கும் எனக்குமுள்ள உறவின்று அறிந்து அனுபல்லவி கோடானுகோடி தவம் செய்து உனைக்காண கோவிந்தா என்றழைத்து பிருந்தாவனத்திடை (ஓடோடி) சரணம் குழலூதும் எழில் காணவே கூடும் கோபியர்கள் முகம் நாணவே காதல் விழியுன்றன் முகம் நாடவே முறுவல் இதழோரம் சுழித்தோடவே மத்யம காலம் ஜகன்னாதன் இசை பாட நங்கை ஜதி போட கால காலமெல்லாம் ஸ்ருதியும் லயமுமென வேதப்பொருள் உன்னில் -ஒன்றிஉறைந்திடவே போதம் மிகு காதல் பொன்னடி தனில் கொண்டு
  18. லெப். கேணல் விக்கீஸ்வரன் ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். லெப். கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் செ.யோ.யோகி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்தார். மீள இணைந்தோரின் படையணி, சோதியா படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து கைதடி, தச்சன்காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் தாக்குதல்களிலும் 4.1 படையணி, மாலதி படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து சாவகச்சேரியைக் கைப்பற்றும் தாக்குதலிலும் பங்குகொண்டார். 2001 இல் 82 மி.மீ மோட்டார் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதேவேளை தீச்சுவாலை நடவடிக்கையின்போது முறியடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தார். 23.04.2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முறியடிப்பு அணிக்கும் 02 ஆம் கோட்டில் நின்ற அணிக்கும் பொறுப்பாக இருந்தார். 08.05.1971 இல் வவுனியா மாவட்டத்தில் பிறந்த சதாசிவம் சதானந்தன் (விக்கீசு) ஜீவனா (போராளி) மண இணையருக்கு பவித்திரன், யாழன்பன், கோவரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளன. கீழே தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. குடாரப்பில் கரையிறங்கிய அணியோடு பளையூடாகச் சென்று இணைவதில் தடையேற்பட்டபோது கேணல் தீபனின் பணிப்புக்கமைய மிகக் குறைந்தளவு போராளிகளுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்திடையே உறுதியாக நின்று பளையில் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து அணிகளின் இணைவுக்கு வழிசமைத்தார். 25.04.2001 தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்பாக அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவற்றுள் ஒன்றான வலுவான காப்பரண்களைக் குறுகிய காலத்தில் பணியாளர்களைக்கொண்டு சிறப்பாக அமைத்து முடித்தார். மேலும் அவரோடு நின்ற பணியாளர்கள் அவரின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சமரில் நேரடியாகக் கலந்து குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினர். இது அவரது பொறியாண்மை ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியாகும். 11.08.2006 முகமாலையில் இடம்பெற்ற சமரில் கிளாலிக் கரையூடு முன்னேறிய எமது அணியினரை எதிரி சுற்றிவளைத்து எமது உடைப்புப் பகுதியை மூடும் நிலை உருவாகியது. அப்போது கேணல் தீபனின் பணிப்புக்கமைய அணியோடு சென்ற விக்கீசு அவர்களோடு இணைந்து கிளாலி உடைப்பு மூலையில் 150 மீற்றர் கரைப்பக்கமும் கிளாலி முகமாலைக் கோட்டிலும் நிலையமைத்து நின்றார். எதிரியின் தாக்குதலால் இந்த நிலையின் நீளம் குறுகியபோதும் அணியினர் எல்லோரும் வெளியேறும் வரை எதிரி அந்தப் பகுதியை மூடாது தடுத்து நின்றார். 11.10.2006 முகமாலையில் இடம்பெற்ற எதிரியின் வலிந்த தாக்குதலின்போது களநிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து இரண்டாவது கோட்டிற்கான காப்பரண்களை விரைவாக அமைத்ததுடன் சமரின் ஒரு கட்டத்தில் இரண்டாவது கோட்டுச் சமரையும் வழிநடத்தி எதிரிக்குப் பாரிய இழப்பினை ஏற்படுத்தினார். 23.04.2008 அன்று முகமாலையில் இடம்பெற்ற வலிந்ததாக்குதல் முறியடிப்புச் சமரின்போது, இறுதியாக மீட்டகப்பட்ட NP08 நிலைக்கு அவரோடு நின்ற வடிவரசனுடன் ஆறு போராளிகளை அனுப்பி பின்பு அங்கு வந்த நித்திலனின் அணியுடன் இணைந்து அந்தக் காப்பரணை மீட்கும் பணியை நிறைவாகச் செய்தார். லெப்.கேணல் விக்கீசு ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். 10.08.2008 அன்று வீரச்சாவடைந்தார். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” தகவல்: பிரிகேடியர் தீபன் நினைவுரை: செ.யோ.யோகி (2008). தொகுப்பு: சமராய்வு மையம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://thesakkatru.com/commander-lieutenant-colonel-vickieswaran/
  19. பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 1 நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 2 மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 3 முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 4 பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்மது பணியாய் ஆதன்பொருள் ஆனேன்அறி வில்லேன் அருளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே 5 தண்ணார்மதி சூடீதழல் போலும்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி உண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே 6 ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 7 ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 8 மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 9 காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே. 10
  20. அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண, பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு, மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள், முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி, களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர, வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர, முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி, லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு, பெருமாளே
  21. ஆநிரை மேய்த்த தாமரை கண்ணனே
  22. இஸ்ரவேலே நீ பாக்கியவான் அனாதி தேவன் உன் அடைக்கலமே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.