Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மக்கத்து மன்னர் தர்பார் வாசல்.... வேத வெளிச்சம் தெரிகிறது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாகாளியூர் கொல்லங்கோடு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பார்வை ஒன்றே போதுமே கள்ள பார்வை ஒன்றே போதுமே சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன || கார்முகில் போல் வண்ணன் கதிர் என்ன மதி என்ன கருவிழி கடலினை சற்றே திறந்து கருணை மழை பொழிந்தேன் அகம் குளிரும் கள்ள || அன்னை யேசொதை அருகினிலே சென்றிவன் வெண்ணை திருடி வந்து விந்தை சொல்ல போனான் அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று சொல்லாதே என்று கண்ணால் சொல்லிடும் ||
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வசனமிகவேற்றி - பழனி | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக் பாடல்வரிகள் : வசனமிகவேற்றி மறவாதே மனது துயராற்றி உழலாதே இசைபயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளபாக்யம் அருள்வாயே பசுபதி சிவாக்யம் உணர்வோனே பழநிமலை வீற்றருளும் வேலா அசுரர்கிளை வாட்டி மிகவாழ அமரர்சிறை மீட்ட பெருமாளே இகபர செளபாக்யம் அருள்வாயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உன்னை தேடுதே... உள்ளம் வாடுதே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அமிர்தலிங்கேசரின் ஆருயிர் நாயகி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம்.ச.ர.வ.ண.ப.வ மங்களம் - 'ஏறுமயில் ஏறி' ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே- இறைவனிடம் கையேந்துங்கள்
திருத்தொண்டத்தொகை பண் - கொல்லிக்கௌவாணம் திருச்சிற்றம்பலம் 393 தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 394 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 395 மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. 396 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 397 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 398 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 399 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.- இறைவனிடம் கையேந்துங்கள்
ஊர்ந்து வரும் நாகாத்தம்மா- இறைவனிடம் கையேந்துங்கள்
நிறை உறவொன்று எனக்கின்று வேண்டும்- இறைவனிடம் கையேந்துங்கள்
அகிலம் வாழ்ந்திட... மகிமை சிறந்திட... அகமது நபி பிறந்தார்- இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய் மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய் குயிலிசை குழலோசை உன் கொஞ்சுமொழிக்கு இணையாமோ கொண்ட மனசஞ்சலங்கள் பஞ்சாய் பறந்திடுமோ தேயாத என் நிதியே திகட்டா தெள்ளமுதே வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே- இறைவனிடம் கையேந்துங்கள்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே- இறைவனிடம் கையேந்துங்கள்
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.- இறைவனிடம் கையேந்துங்கள்
திருமலைக் கோடி தங்கக் கோயில் நாராயணி அம்மா உன் குருவடி பாதம் சரணமடைந்தேன் குறைகள் இல்லையம்மா வேல்விழியாளே நானுனைக் காண வேலூர் வந்தேனே உன் காலடி கண்டே நீண்ட காலம் சுகமாய் வாழ்வேனே நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி தாமரைப்பூவில் வாழும் காமனின் தாயே தயை செய்ய நேரமில்லையோ பூ மகளே பொன்னருளே நானும் உன் மகள்தானம்மா ஸ்ரீ மஹா லக்ஷ்மியே கண் பாராயம்மா ஸ்ரீதர கேசவன் மாதவன் மார்பில் வாழும் ஸ்ரீமதியே உன் திருவிளக்கேற்றி வணங்குகின்றேன் நற்றாரும் மாநிதியே திருமகளே வரமருளே காலடியின் ஓரத்திலே நான் வாழ ஆனந்த யோகம் நாளும் அளித்திடும் மாயே அடியேனை மறந்தனையோ ஸ்ரீபுரமே வாழ்பவளே ஸ்ரீரங்கன் மகிழ் தேவியே நான் உன்னை பூஜித்தேன் மலர்த் தூவியே ஜோதி அண்ணாமலை ஆதி திருமலை இடையினில் வாழ்பவளே உன் திருமலைக் கோடி வருபவர் கோடி தருவாய்த் திருவருளே பொன்மகளே மண்மகளே யோகா சுப மங்களங்கள் எனை சேர- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்பு அன்பு இயேசு செய்த அறிமுகம் உலகை வெல்லும் ஆயுதம் அன்பு எனக்கில்லையேல் நான் ஒன்றும் இல்லை அன்பு இல்லையேல் பயன் ஒன்றும் இல்லை அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிரதானம் அன்பு ஒருபோதும் பொறாமைப்படாது அன்பு ஒருபோதும் இழிவானதைச் செய்யாது அன்பு ஒருபோதும் தன்னலம் நாடாது அன்பு ஒருபோதும் இறுமாப்பு அடையாது அன்பு ஒருபோதும் கோபம் கொள்ளாது அன்பு ஒருபோதும் தீங்கு நினையாது- இறைவனிடம் கையேந்துங்கள்
தொழுகையை மறந்த மனிதர்களே... தொழுதிட வாருங்கள்- சிரிக்க மட்டும் வாங்க
உண்மைதான்; அப்படியே பள்ளியில் மீண்டும் சேர அனுமதி தந்தால் ஓடிப்போய் பின் வாங்கில் இருந்திடுவேன்😊😊- விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்
விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் இந்தியர்களும், இந்தியக்கூலிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடி பாய்வார்கள் நெடுமாறனையும், அவன் சனோதரர்களையும் தேடி…… நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை; அவன் தான் கடைசி. “நெடுமாறன் இங்க வாறதில்லையா… நேற்று வந்து எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான்……” “அம்மாவில் அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே……” அம்மாவையும், அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே பதில் சொல்லி அனுப்புவாள். இது அம்மா கொடுத்து வளர்த்த உறுதி – துணிவு. ஆனால், அம்மா அமைதியானவள் – எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமலிருப்பாள். அவளது மனம் புழுங்கிக்கொண்டிருக்கும். வழமைபோல அன்றும் அவர்கள் வந்தார்கள். அம்மா வாசலில் இருந்தாள். அருகில் அக்கா. வீட்டுக்குள்ளே அக்காவின் பிள்ளைகள். அவர்கள் படலையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள்… “நேற்று மாவிட்டபுரத்தில் உன்ர மகனைச் சுட்டுப்போட்டம். உடம்பு இருக்கு வந்து எடு…” ஒருவன் வெற்றிக் களிப்போடு உறுமினான். தலையில் இடி விழுந்தது போல இருந்தது அம்மாவுக்கு. அக்கா அதிர்ந்து போனாள். அக்காவின் பிள்ளைகள்… அழுது குழறினார்கள். ஊர் அழுதது. ஆனால் அம்மா மௌனமாகவே இருந்தாள். அவளால் அழ முடிவதில்லை. அவள் அழமாட்டாள்; இழப்புக்களால் உறுதியான தாய். “எங்கட வீட்டிலதானே ஒரு ஆம்பிளையளையும் நீங்கள் இல்லாமல் செய்து போட்டியள்… வந்தெடுக்கிறதுக்கு இங்க ஆக்கள் இல்ல…” கண்ணீரோடு ஆனால் கடுமையாக அக்கா கூறி முடித்தபோது, அவர்கள் போய் விட்டார்கள். அக்கா அம்மாவின் இரண்டாவது பிள்ளை. ஆறு ஆண் சகோதரர்களுக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை. நெடுமாறனைக் கட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள் – அருகில் கதிரையிலிருந்து தன்வீரமகனின் உடலை அம்மா கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அழவில்லை. பிள்ளைகள் போராட்டத்தோடு கலந்தபோது அவர்கள் பிணமாகத்தான் வருவார்கள் என்பதை, அம்மா தெரிந்திருந்தாள். 11.08.1984 சுன்னாகம் ஊரிலிருந்த மக்களைப் பிடித்து வந்து காவல் நிலையத்தினுள் அடைத்து வாசல் கதவுடன் வெடிகுண்டை இணைத்துவிட்டு சிங்களப் படையினர் போய்விட்டனர். செய்தியை அறிந்த புலிகள் மக்களை மீட்பதற்காக அங்கு விரைந்தனர். சஞ்சீவியும் நிக்கியும் இன்னும் சில தோழர்களும், வாசல் கதவிற்கு பின்னாலிருந்த வெடிகுண்டின் அபாயத்தைத் தெரிந்திருக்காத நிலையில் உள்ளே புக முயன்ற போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களுடன், சஞ்சீவியும், நிக்கியும் வீரச்சாவை அணைத்துக் கொண்டார்கள். சிதைந்துபோன சஞ்சீவியின் உடலைச் சேர்த்து எடுத்து – ஒன்றாக்கி அம்மாவிடம் கொண்டு வந்தனர் தோழர்கள். தனது செல்வங்களில் ஒன்றை அம்மா முதலில் இழந்து விட்டாள். அம்மா அழுதாள். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன்தான் அம்மாவின் செல்லப்பிள்ளை. சஞ்சீவியின் அக்கா கதறினாள். உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சுற்றத்தார், தோழர்கள் எல்லோருமே துயரைத் தாங்கிய விழிகளில் கண்ணீரோடு நின்றார்கள். 1982, 1983 காலங்களில் இயக்கத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தி, விடுதலைப்பணியை ஆற்றத் துவங்கினான் சஞ்சீவி. ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான்; “ஆறு ஆம்பிளையள் இருக்கிறமம்மா…… ஒரு ஆள் எண்டாலும் போராடப் போகலாம் தானே……” என்று. அம்மா ஏற்றுக்கொள்ள முடியாமலும், ஆனால் மறுக்காமலும் சமாளித்துக் கொண்டாள். 1983 யூலை நிகழ்வுகளுக்குப் பின் இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து, புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பிரிவில் பயிற்சி பெற்றான். சஞ்சீவி, அம்மாவின் ஆறாவது பிள்ளை. நெடுமாறனுக்கு நேரே மூத்தவன். அண்ணனின் உடலைக் கண்ட போது, அண்ணன் மரணித்த அதே இலட்சியத்திற்காக தானும் போராடுவேன் என்ற உறுதியுடன்தான் நெடுமாறன் போராடப் புறப்பட்டான். இயக்கத்தின் ஆறாவது பயிற்சிப் பிரிவில் பயிற்சியை முடித்த நெடுமாறன், கடற்புலிகளின் பிரிவில் சேர்க்கப்பட்டான். கடற்சண்டைகளுக்கான அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட முதலாவது குழுவில் ஒருவனாக இருந்து – கடற்புலிகளின் முதலாவது பயிற்சிப்பிரிவில் – பயிற்சி பெற்றான். சிங்களப்படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் எதிரான போர்களின் போது – பலமுக்கிய சமர்க்களங்களில், ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நெடுமாறன் இருந்திருக்கின்றான். மயிலிட்டிப் பகுதியில், இந்தியர்களும் அடிவருடிகளும் நிலைகொண்டிருந்த சுமார் பத்து முகாம்களுக்கு நடுவில் அவன் புயலாக வீசினான். இந்தியப் படையினரையும், அவர்களுக்குத் துணைபோய் தேசத்திற்குத் துரோகம் இழைத்தவர்களையும் அவனது துப்பாக்கி தண்டித்தது. 30.08.1989 அன்று மாவிட்டபுரத்தில் நடந்த ஒரு வெற்றிகரமான தாக்குதலின்போது கப்டன் நெடுமாறன் எம்மைப் பிரிந்தான். ஒருவர் அல்லது இருவர் போராளியாக இருக்கின்ற குடும்பங்களை நாம் பார்க்கிறோம். எமது தேசத்தின் எல்லா இடங்களிலும், இவ்வாறான குடும்பங்களை நாம் பார்க்க முடியும். ஆனால், ஒரு குடும்பமே போராளிகளாக நிற்கிற நிகழ்வுகளை, சில இடங்களில் மட்டுமே நாம் காண முடியும். அவ்வாறான குடும்பங்களில் ஒன்றுதான் அம்மாவின் குடும்பம். அம்மா தன் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலோடு வீரத்தையும், துணிவையும் ஊட்டித்தான் வளர்த்திருக்கின்றாள். தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் அவர்களுக்கு அம்மா கொடுத்தாள். ஆனாலும் எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் இயல்பைப் போலவே, சஞ்சீவியும் நெடுமாறனும் போராடப் புறப்பட்ட போது, அம்மாவின் மனம் கவலை கொண்டது; அழுதும்கூட இருக்கிறாள். ஆனால், அம்மா தடுக்கவில்லை. திரும்பி வாங்கோ என்று கேட்கவில்லை. சோதி அண்ணன், அம்மாவின் மூன்றாவது பிள்ளை. இந்தியப் படை வளைத்து நின்ற நாட்களில் புலிகளை தகவற் தொடர்பாளராகச் செயற்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப் பகுதிக்குச் சென்று வந்து – புலிகளுக்கிடையில் முக்கியமான தகவல்களைப் பரிமாறினார். புலிகளின் உற்ற துணையாக நின்று இவர் செயற்படுகின்றார் என்பது, துரோகிகளுக்குத் தெரிந்திருந்தது. இந்த விடயம் அவர்களுக்குத் தெரியும் என்பது சோதி அண்ணனுக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும், அவர் துணிவோடு இயங்கினார். 01.10.1988 அன்று, சோதி அண்ணனின் வீடு. சாவு அவரின் கதவைத் தட்டியது. “சோதி அண்ண…… சோதி அண்ண……” “எங்கட பொடியள் போலக் கிடக்கு…” என்று தனக்குள் எண்ணிக்கொண்டு, “ஆரது தம்பி… உள்ளுக்கை வாங்கோவன்…” என்றபடி படலையை எட்டிப் பார்த்தார்; அதிர்ந்தார். நெஞ்சு விறைத்தது – அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். “அண்ணை…… உங்களில் ஒரு விசாரணை…… எங்களோட வாங்கோ திருப்பிக் கொண்டு வந்து விடுறம்” – ஒரு தாடிக்காரன் சொன்னான். மனைவி ஓடி வந்து தடுத்தாள் – கதறினாள். பிள்ளைகள் அழுதார்கள்; ஆனாலும் அவர்கள் கூட்டிச் சென்றார்கள். சில மணித்துளிகள் கழிந்தன. நடு வீதியிலேயே…… துப்பாக்கி வேட்டோசை ஊரெங்கும் எதிரொலித்தது. அம்மாவின் நாலாவது பிள்ளை குட்டி அண்ணன். புலிகளோடு சேர்ந்து நின்றதால் இந்தியப் படையும், துரோகிகளும் அவரைக் குறிபார்த்துத் திரிந்தார்கள். அடிக்கடி அவரின் வீட்டுக்குப் போனார்கள்; கேள்விகளால் துளைத்தார்கள். அவர்களின் தொடர்ச்சியான தொல்லைகள், அவருக்கு ஏற்கெனவே இருந்த இருதய நோயை இன்னும் அதிகரித்தது. ஒருநாள் கடலில் தொழிலுக்குப் போயிருந்த குட்டி அண்ணனுக்கு மாரடைப்பு வந்து, அம்மாவிடமிருந்தும் எம்மிடமிருந்தும் பிரித்து விட்டது. இப்போது குட்டி அண்ணனின் மகள் துப்பாக்கியோடு களத்தில் நிற்கிறாள். அக்காவின் கணவர் சிறீதரன். இந்தியப் படையினரும், கூடித் திரிந்த கும்பல்களும் அவரை அடிக்கடி பிடித்துச் சென்றார்கள். அப்போதெல்லாம் அவர்களது இரும்புக்கம்பிகளும், எஸ்லோன் குழாய்களும் தான் அவருடன் பேசின. 1989 இன் நடுப்பகுதியில் ஒரு இரவு வழமைபோல அவர்கள் அவரைப் பிடித்துச் சென்றார்கள். மறுநாள் அவர் திரும்பி வரும்போது உடலில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய உட்காயங்களோடு வந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனாலும்…… அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எம்மைப் பிரிந்து திரும்பி வரமுடியாத தொலைவுக்குச் சென்றுவிட்டார். அதன்பின்பு அவரினதும், அக்காவினதும் பிள்ளை சுபாஜினி, பதுமநிதியாகி சண்டைக்களங்களில் நின்றாள். அம்மா கட்டிலில் இருந்து கொண்டே, முன்னால் தொங்கிக் கொண்டிருக்கும் பதுமநிதியின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பதுமநிதி அம்மாவின் பேரப்பிள்ளை. ஆனையிறவுப் பெருஞ் சமரில் ஒரு நாள் சண்டையில் – அவள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டாள். அம்மாவுக்கு ஏற்பட்ட இந்தத் தொடர் இழப்புக்கள், அவளை வேதனையில் ஆழ்த்தின. ஆனாலும் அவள் உறுதியோடும், நம்பிக்கையோடும் வாழ்கிறாள். அம்மாவின் மற்றைய மூன்று பிள்ளைகள் இப்போதும் புலிகளோடு நிற்கிறார்கள்; தமது உடன் பிறந்தவர்களின் நினைவுகளோடு, தேசத்திற்காக உழைக்கின்றார்கள். அம்மா கதிரையில் வாழத் தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அதில் இருந்துகொண்டுதான் துயரங்களை தாங்கிக் கொண்டாள். உண்மைதான்……, அம்மாவால் நடக்க முடியாது. அவனை அந்தக் கொடிய நோய் முடக்கி விட்டது. அசையாமல் இருந்து இரவுகளில் மட்டும் மனதிற்குள் அழும் அம்மாவின் மனதிற்குள்ளும், நிறைவான சம்பவங்கள் உண்டு. ஒரு இரவு, அம்மா வழமை போலவே இருளுக்குள் தன் பிள்ளைகளை இதயத்தால் தேடிக் கொண்டிருந்தபோது, கதவு தட்டப்பட்டது. விழித்தாள். யாரோ ஓடிச்சென்று கதவைத் திறந்தனர்; வெளிச்சம் பரவியது. தலைவர் பிரபாகரன் வந்தார். அம்மாவால் நம்பமுடியவில்லை. ஏதோவொரு பரவசத்தில் அம்மா…… தன்னுடைய கட்டிலின் அருகில் வந்திருந்த அவரை, வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தாள். “அம்மா! உங்கட கையால நான் சாப்பிட்டிருக்கிறன்” அவர் சொன்னார். உண்மைதான். போராட்டத்தின் ஆரம்பநாட்களில், தலைவரை சிறீலங்கா காவல் படை கடுமையாகத் தேடிக்கொண்டிருந்தபோது – பலாலி படைத்தளத்தின் எல்லையோடு இருந்த பாழடைந்த ஒரு பாடசாலைக் கட்டிடத்தினுள் மறைந்து வாழ நேரிட்டபோது – அம்மாவின் மகன்களில் ஒருவர்தான் தலைவருக்கு உணவு, தண்ணீர் கொடுத்தார். இக்கட்டான காலப்பகுதிகளில், போராட்டப் பயிருக்கு கவசமாக நின்று பேணி வளர்த்த தேச பக்தர்கள் அவர்கள். தனது வாழ்வில் மிகப் பெரிய மகிழ்ச்சியை, அம்மா அந்த நாளில் கண்டாள். தலைவர் வந்து தன்னைப் பார்த்துக் கதைத்து விட்டுச் சென்ற அந்த நாளை, அவள் எப்போதுமே நினைவுகூர்ந்து பெருமைப்படுவாள். அக்காவின் வீட்டில்தான் அம்மா இப்போதும் இருக்கிறாள். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. கட்டிலில் இருப்பாள். அவளைப் பார்க்க, அவளுடன் கதைக்க; எமது தோழர்கள் எப்போதும் அங்கே போவார்கள். எங்களை அருகில் இருத்தி – அணைத்துக் கதைப்பாள். பெற்ற தாயின் அரவணைப்பை – பாசத்தை – நாங்கள் அதில் உணர்வோம். அந்த வீட்டில் எப்போதுமே புலிகளுக்காக அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். அங்கு போகின்ற எந்தப் போராளியும் ஏதாவது சாப்பிட்டே ஆக வேண்டும். இது அம்மாவின் கட்டளை. அம்மா எங்களிடம் அடிக்கடி சொல்லுவாள்; “நீங்கள் எல்லாரும் தான்ரா என்ர பிள்ளையள்” – அதில் ஒரு பெருமிதமும் திருப்தியும் இருக்கும். நினைவுப்பகிர்வு: பொபி நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை, 1992), களத்தில் இதழ் (08.01.1993). https://thesakkatru.com/a-family-celebration-for-the-liberation-of-tamil-eelam/- இறைவனிடம் கையேந்துங்கள்
பூவாடை கட்டிக்கிட்டு தாழம்பூ சூட்டிகிட்டு பூவாடை கட்டிக்கிட்டு தாழம்பூ சூட்டிகிட்டு பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா பூப்போல சிரிச்சிகிட்டு தீச்சட்டி எடுத்துக்கிட்டு பூப்போல சிரிச்சிகிட்டு தீச்சட்டி எடுத்துக்கிட்டு ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம் கொடுக்க வந்தா மாரியாத்தா ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம் கொடுக்க வந்தா மாரியாத்தா கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா பாம்பு படைசூழ்ந்திடவே வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா பம்பை மேளம் முழங்கிடவே பவனி வரும் முப்பாத்தா பாம்பு படைசூழ்ந்திடவே வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா பம்பை மேளம் முழங்கிடவே பவனி வரும் முப்பாத்தா நோன்பு கொண்டு தொழுபவரின் நோய் தீர்க்கும் மாரியாத்தா நோன்பு கொண்டு தொழுபவரின் நோய் தீர்க்கும் மாரியாத்தா வேண்டும் வரம் தந்து நம்மை எப்போதும் காத்திடும் ஆத்தா வேண்டும் வரம் தந்து நம்மை எப்போதும் காத்திடும் ஆத்தா சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா பட்டு சேலை பளபளக்க குங்குமப்பொட்டு சொலிசொலிக்க வெட்டருவாளுடன் மாகாளி வினைகளை விரட்டிட ஓடி வந்தா பட்டு சேலை பளபளக்க குங்குமப்பொட்டு சொலிசொலிக்க வெட்டருவாளுடன் மாகாளி வினைகளை விரட்டிட ஓடி வந்தா எட்டுதிக்குகள் புகழ்மணக்க கொட்டு வாத்தியம் இசையொலிக்க எட்டுதிக்குகள் புகழ்மணக்க கொட்டு வாத்தியம் இசையொலிக்க பொட்டழகி பூமாயி பூவும் பொட்டும் தந்து நிற்பா பொட்டழகி பூமாயி பூவும் பொட்டும் தந்து நிற்பா எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா வீராத்தா மேகாத்தா காளியாத்தா எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா வீராத்தா மேகாத்தா காளியாத்தா பூவாடை கட்டிக்கிட்டு தாழம்பூ சூட்டிகிட்டு பூவாடை கட்டிக்கிட்டு தாழம்பூ சூட்டிகிட்டு பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா பூப்போல சிரிச்சிகிட்டு தீச்சட்டி எடுத்துக்கிட்டு பூப்போல சிரிச்சிகிட்டு தீச்சட்டி எடுத்துக்கிட்டு ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம் கொடுக்க வந்தா மாரியாத்தா ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம் கொடுக்க வந்தா மாரியாத்தா கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா- இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்ரீ முருக வேல்முருக சரணம்- இறைவனிடம் கையேந்துங்கள்
பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலே குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ... நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன் என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா - 2 நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய் உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிது கயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமே கையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா - 2 எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்ல நான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் காணும் வரையில் தாகமில்லை எனக்கந்த தண்ணீர் ஐயா தாரும் ஐயா பெருந்தாகம் தீர்ந்துவிடும் என்றால் ஐயா இடுப்பொடிய வேலை இல்லை - 2 தருகின்றேன் பெண்ணே நீயும் உன் கணவன் இங்கு வரவே அழைத்து வந்து காண வேண்டும் அக்கணமே நான் தருவேன் மனம் திறந்து சொல்கின்றேன் எனக்கோ கணவனும் இல்லை உம்மிடம் நான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஐயா - 2 எல்லாம் சரிதான் பெண்ணே ஐந்து கணவர் வாழ்ந்தார் இருப்பவனும் கணவன் அல்ல ஏதுமில்லா பெண்தான் நீ தலைவா நீர் ஞானி ஐயா நற்றொழுகை புரிந்திடவே நீங்கள் சொல்லும் எருசலேமே நிலையான இடமா ஐயா - 2 தலைவனையே தொழுவதற்கு இடமா வேண்டும் பெண்ணே ஓங்கிவரும் ஆவியிலும் உத்தமனை தொழுதிடலாம் பாவத்தை தீர்ப்பதற்கு இயேசுபிரான் வருகின்றார் நேசமகன் வருகின்றபோது அனைத்தையுமே சொல்லிடுவார் - 2 நேசமகன் அந்த இயேசு நாயகன் நானே பெண்ணே பாவங்கள் தீர்க்கவல்ல பாசமகன் நான் பெண்ணே வியக்கின்றேன் வியக்கின்றேன் ஐயா விந்தைமிகு இயேசுதேவ ஊருக்குள்ளே விரைகின்றேன் நான் உன்மையை சொல்லிடவே - 2 - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.