Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா... தணிகாசலனே தவமா மணியே ... அரகரோகரா வானவர் போற்றும் தீனதயாளா ... அரகரோகரா கதிர்காமத்துரை கதிர்வேல் முருகா ... அரகரோகரா கந்தா கடம்பா கார்த்திகேயா ... அரகரோகரா செந்திலாண்டவா செங்கல்வராயா ... அரகரோகரா சிவஷண்முகனே சேனைத் தலைவா ... அரகரோகரா அக்கினிகர்பா ஆறுபடை வீடா ... அரகரோகரா ஆவினங்குடிவாழ் அழகிய வேலா ... அரகரோகரா மயில் வாகனனே மாதவக் கொழுந்தே ... அரகரோகரா பழனியம் பதிவாழ் பாலகுமாரா ... அரகரோகரா சேவற் கொடியோய் செங்கதிர் வேலா ... அரகரோகரா சிவனார் மகனே செந்திலாதிபா ... அரகரோகரா முருகா முருகா முருகா ... அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா சாமிநாதா சக்தி வேலா ... அரகரோகரா மூவர் முதல்வா முத்துக் குமாரா ... அரகரோகரா வள்ளி மணாளா வானவர் வேந்தே ... அரகரோகரா வடிவேல் முருகா திருமால் மருகா ... அரகரோகரா... முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி! சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி! இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி, தென்றல் போல நீ ஆடடி! மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, தெய்வ பாசுரம் பாடடி! (சீரங்க) கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்; மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்; செங்கனி மீதாடும் மாமரம் யாவும்; ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்; அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம் தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம் (சீரங்க) கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்! கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் மங்கல நீராட முன்வினை தீர்க்கும்! நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி (சீரங்க)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் 1. முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகிவிடு – நீ 2. கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா – நீ 3. காலமெல்லாம் உடனிருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் – உன்னை 4. உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே 5. உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும் 6. உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாமதீனா பேரரசே... மாநிலத்தின் தீன் முரசே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ மனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க கணபதியே வருவாய் ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட கணபதியே வருவாய் தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென கணீரென்றொலிக்க தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென கணீரென்றொலிக்க ஊத்துக நல்லிசை உள்ளம் களிக்க உண்மை ஞானம் செல்வம் கொழிக்க கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம் பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம் முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே ... அப்பப்பா முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே முருகா ...........முருகா ......முருகா.........முருகா....... தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம் பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம் சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம் சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம் மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் வேலனுக்கு ... அரோகரா முருகனுக்கு ... அரோகரா கந்தனுக்கு ... அரோகரா அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே அந்த விராலிமலையிலே மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம் விராலி மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம் முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வெற்றி தரும் காளி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே - 2 நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே அணையாத தீபமே இயேசுவே இயேசுவே - 2 1. ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ (2) தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் - 2 ஆனாலும் உன் வார்த்தை உண்டு எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2 2. இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ முடிவாக வெல்வதும் நன்மையன்றோ (2) தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்-2 என்றென்றும் உன் ஆசீர் கொண்டு வரும் நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு இயேசுவே இயேசுவே - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்ல பெரிய இரைதான் 👍- இறைவனிடம் கையேந்துங்கள்
கானமழை பொழிகின்றான்-கண்ணன் யமுனாதீரத்தில் யாதவகுலம் செழிக்க (கானமழை) ஆனந்தமாகவே அருள்பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகனரூபன் (கானமழை) குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழலூதி (கானமழை)- இறைவனிடம் கையேந்துங்கள்
உன் பாதம் நான் பணிவேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணி தெய்வத்துக்கு அரோகரா வள்ளிக்குறத்தியின் உள்ளம் கவர்ந்தவா வாராயோ வேல் முருகா மனக்குன்றிலேறும் பரங்குன்றநாதா வேலேறி வா முருகா புள்ளிக் கலாபமயில் துள்ளி அமர்ந்தவா புகழாளும் வேல் முருகா புறம் வென்ற நாதன் முகம் வந்த பாலா கொடியோடு வா முருகா ராஜாதி ராஜனே சந்யாசி கோலனே நீராடும் வேல் முருகா பழம் தந்தநாதா பழம் கண்டநாதா உன் பாதங்கள் தா முருகா செந்தூரில் மண்ணிலே நின்றாடி வென்றவா சீரலைவாய் வேல் முருகா உன் மந்தகாசம் அதில் நெஞ்சமாரும் நிலை என்றும் வேணும் முருகா வண்டாடும் சோலையும் கொண்டாடும் வேலவா வாராயோ வேல் முருகா வரம் தந்து ஆள மலை நின்ற தேவா உன் நாமங்கள் தேன் முருகா- இறைவனிடம் கையேந்துங்கள்
மலையனூரு அங்காளம்மா- இறைவனிடம் கையேந்துங்கள்
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம்விலகும் - உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையாய் சாய்வதில்லை என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2) -நீ ஒளியாகும் விடியலைத் தேடிடும் விழிகளிலே புது விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ பால்நினைந்தூட்டும் தாயும் என் பால்வழி பயணத்தின் பாதையும் நீ அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ என் மீட்பரும் நேசரும் நீயாகும் (2) -நீ ஒளியாகும்- இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா உன்னை தேடுகிறேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
தில்லைவாழ்அந்தணர்தம் அடியார்க்குமடியேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் எனும் பிரணவ உரு அமைத்தாய் ஞான விநாயகா வரம் தருவாய் நாவினில் நல்லிசை அருள்வாய். முன்னவா மூத்தவா முழுமுதலே மூண்டிடும் வினைகளை தீர்த்தருளே அண்ணலே நின்மலரடி பணிந்தேன் அனுதினம் பாடியே மனமகிழ்ந்தேன். அடியாரைக் காக்கும் சண்முக சோதரனே ஆதி அந்தப் ப்ரபுவாக அவதரித்தாய் தாயும் நீ தந்தை நீ சகலமும் நீ சரணம் உன்சரணமே சரணம் ஐயா- இறைவனிடம் கையேந்துங்கள்
கந்தன் குமரன் வள்ளி குறத்தி மானை துரத்தி வந்தானே- இறைவனிடம் கையேந்துங்கள்
திருக்கடையூரினில் திகழ்ந்திடும்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆடினயே கண்ணா பிருந்தாவனம் தனில் ஆனந்த ரசமய அற்புத நடனம் (ஆடினயே) ஈடிலா அழகிய கோபியர் உனைத்தேடி நாடி வந்தார் நதிக்கரை நிலவொளியில் (ஆடினயே) மயில் பீலி சற்றே கொண்டைதனில் அசைய நவரத்ன மகுடம் சிரம்தனில் ஒளிர மகர குண்டலங்கள் இருசெவி இலங்க மதிமுகம் தனிலே முறுவல் விளையாட மணம் கமழ் மாலைகள் மார்பில் அசைந்தாட மயங்கும் அந்திவண்ண ஆடை இடையாட மதுர மோகன குழலிசை கூட்ட மங்கையர் கண்கள் மையல் காட்ட மலர்கழல் சதங்கை ஜதிலயம் கூட்ட மனமறிந்து அருள்சொறிந்து இணைந்து ஒன்றாய் (ஆடினயே)- இறைவனிடம் கையேந்துங்கள்
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..! அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் நாளைய உலகின் விடியலாகவே ! பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே- இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம் எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம் ! அவர் இல்லாமல் இல்லை இந்த நாநிலம்! கோத்திரம் குலங்களும் தேசமும் மொழிகளும் மாறிய போதிலும் மண்ணகமெங்கிலும் ! ரஹ்மத்துன்லில் ஆலமீன் ! ராஹத்துல் ஆஷிக்கீன் ! சொர்க்கத்தின் ஜோதியாம் ! சைய்யிதுன் முர்ஸலீன் !!- உணவு செய்முறையை ரசிப்போம் !
அப்படியா... கவனமாக போங்கள்🙏.. கொரோணா வாட்டி எடுக்குது - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.