Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. நபிகளின் பொன்மொழி கேளாயோ நபிகளின் பொன்மொழி கேளாயோ கேளாயோ அன்பும் அறமும் கொண்ட இன்ப வாழ்வு தரும் -பொன்மொழி கேளாயோ (நபிகளின்) மானிடர் யாவருக்கும் தெய்வம் ஒன்றே எனும் மார்க்கமதே இஸ்லாம் . தேனினும் இனிமை தரும் மது வாயினும் தீண்டாதே என்றுரைத்தார் (நபிகளின்) வாழ்க்கையிலே ஒருபோதும் நீ வட்டி வாங்காதே என்றுரைத்தார். வீழ்ந்து சமாதிகள் பூஜைகள் செய்வதை விட்டொழி என்றுரைத்தார்.(நபிகளின்) விதவைக்கு மறுமணம் செய்திடல் -இங்கு வேண்டுமென்றே உரைத்தார் பொதுவாக ஆணுக்கும் கற்புண்டு என்பதை புதிதாகவே உரைத்தார்........(நபிகளின்) கல்விக்கு உயிர் த்தந்தோர் சாவதில்லை என்று காலமெல்லாம் உரைத்தார் நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை நம்புக வேன்றுரைத்தார்......(நபிகளின்) பாவத்தைப் போக்கிடும் தொழுகையை தவறாது பேணிடவே பகர்ந்தார் சோபிதமோங்கிடும் செம்மல் முஹம்மது சிந்தனை செய்துரைத்தார் (நபிகளின்)... அந்த அருமையான பாடல் தங்கள் செவிகளுக்கு....
  2. தமிழ் பாடும் இடமெல்லாம் உன் திருப்புகழ்
  3. தடங்கள் தொடர்கின்றன… தனது 50 கலிபர் சுடுகலன் அணியில் தான் உட்பட எல்லோருமே காயமடைந்து, சிலர் வீரச்சாவடைந்துவிட, அந்தக் கணத்தில் – 50 கலிபர் சுடுகலனைப் பாதுகாக்க வழியற்றுத் தவித்துப்போனார் கப்டன் இசைநிலா. நகரவே முடியாத காயம். எனினும் குற்ற உணர்வு உறுத்திக்கொண்டிருந்தது. அந்தச் சுடுகலனை நகர்த்துமாறு இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். 2006.08.11 அன்று யாழ் மாவட்டத்தின் முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியை முறியடித்து விடுதலைப்புலிகளின் அணிகள் முன்னேறிவிட்டிருந்தன. கிளாலிக் கரையோரப் பகுதியால் உள்நுழைந்த லெப்.கேணல் கலைவிழியோடு கப்டன் இசைநிலாவின் 50 கலிபர் சுடுகலன் அணியும் புகுந்துவிட்டிருந்தது. பல அணிகள் பல வழிகளால் நுழைந்திருந்தாலும், சமகாலத்தில் எல்லோராலும் சம தூரத்துக்கு நகரமுடியாததால், உட்புகுந்த புலி அணிகள் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாமல் தனித்தனியாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அணியிலுமிருந்த ஒவ்வொரு போராளியும் சிறிலங்காப் படையினரின் பலபக்கத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கரையோரமாகப் போன லெப். கேணல் கலைவிழியின் அணி மிகவேகமாக, சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்களை அண்மித்துவிட்டிருந்தது. எனினும் கடுமையான அந்தச்சண்டையில் பலர் காயமடைய நேரிட்டது. காயமடைந்தவர்கள் தாமாக நகர்ந்து வெளியேறுவதற்கிடையில் மறுபடி மறுபடி எதிர்த் தாக்குதல்களைச் சந்தித்தனர். இயலாத காயத்துடன் தனது சுடுகலனையே நினைத்தபடி “எடுத்துக்கொண்டு வா, எடுத்துக்கொண்டு வா” என்று போர்க்களத்தைவிட்டு வெளியேறிய பின்பும் இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். எடுத்துவரக்கூடிய நிலையில் களத்தில் எவருமில்லை. இதே முன்னரங்கில் இதற்கு முன்னரும் சிறிலங்காப் படையினரின் கடுமையான முன்னகர்வை இசைநிலா திறமையுடன் எதிர்கொண்டிருந்தார். அப்போது அவர் பிகே.எல்.எம்.ஜி சுடுகலனின் சுடுநராக இருந்தார். தீச்சுவாலை – 01 என்று பெயரிட்டு சிங்களப் படையினர் செய்த மூன்று நாள் முற்றுகைச் சமரில் முன்னரங்கக் காப்ரண்கள் இரு தரப்பிடமும் மாறி மாறி கைமாறிக்கொண்டிருந்தன. எஞ்சி நின்று போராடிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பின்னரங்கிலிருந்து உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை. முகமாலைப் பகுதியில் துண்டாடப்பட்ட நிலையில் களமாடிக்கொண்டிந்த இரு அணிகளில் ஒன்றில் இசைநிலா நின்றார். பிகே.எல்.எம்.ஜியின் பொறுப்பாளரும் உதவியாளருமில்லாமல் தனித்து நின்ற இசைநிலாவிடம் மூன்று நாட்களும் ரவைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. வீழ்ந்து கிடந்த சிங்களப் படையினரிடமிருந்து தேவையான ரவைகளை எடுத்துக்கொண்டிருந்தார். மேலதிகமான சுடுகுழல் ஒன்றைக்கூட சிங்களப் படையினரின் சுடுகலனிலிருந்து கழற்றிவைத்திருந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்த தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் மேலதிக ரவைக்கூட்டு அணியையும் கழற்றாமல் களைப்பை வென்று களமாடிய இசைநிலாவுக்கு இப்போது அதனிலும் பெரிய சுடுகலன் ஒன்றைவிட்டு வந்தது. நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்தது. காயத்தோடும் மனதோடும் போராடிய இசைநிலா 2006.08.16 அன்று மருத்துவமனையில் விழிமூடிப்போனார். லெப். கேணல் கலைவிழி போன கரையோரப் பாதைவழியே லெப். தமிழ்ச்சுடர் தனது உந்துகணை செலுத்தியுடன் போயிருந்தார். தேவையான இடங்களில் எதிரிக் காப்பரண்களைத் தாக்கி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இடையில் அதைக் கண்டார். அது கப்டன் இசைநிலா அணியினரின் 50 கலிபர் சுடுகலன். அந்த அணியினர் இழப்பைச் சந்தித்துவிட்டனர் என்பதை தமிழ்சுடர் புரிந்துகொண்டார். தன்னால் தனித்து அதைத் தூக்கிச் செல்லவும் முடியாது என்பதால் தகர்த்துவிட்டார். எமக்கு இல்லாதது எதிரிக்கும் இல்லாது போகட்டும். கடற்கரைப் பாதைவழியே முன்னிலை நோக்குனராக கப்டன் இசைநிலா போனார். அவர் திரும்பிய திசையெல்லாம் சிறிலங்காப் படையினரே தென்பட்டனர். காப்பரண்கள், குறுக்கு அகழிகள், அங்கே, இங்கே என்று சிறிலங்காப் படையினரைத் தான் கண்ட இடங்களின் ஆள்கூறுகளைக் கணிப்பிட்டு, எறிகணைசெலுத்தும் அணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். சிங்களப் படையினரின் தலைகளில் இடியாக எறிகணைகள் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. எனினும் மழைக்குச் சற்றுமுன்னர் புற்றிலிருந்து புறுப்பட்டுவரும் ஈசல்கள் போல படையினர் வந்துகொண்டிருந்தனர். அங்கே, இங்கே என்று எறிகணைகளை விழுத்திக்கொண்டிருந்தவரைச் சூழ இப்போது படையினர்தான் நின்றனர். தான் நிற்குமிடத்தைக் குறிப்பிட்ட இசைநிலா நிலைமையை விளக்கி, தன்னைப் பார்க்காமல் தான் நிற்குமிடத்துக்கு எறிகணைகளை வீசுமாறு கேட்டார். ‘ஓயாத அலைகள் – 02’ நடவடிக்கையின் போது கிளிநொச்சிக் களமுனையிலே லெப். கேணல் செல்வி எடுத்த அதே முடிவு. இப்போது எவரும் சொல்லாமலே இசைநிலா எடுத்தார். பரம்பரை தொடர்கின்றது. சண்டை மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. கரையோரமாகச் சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்கள் அருகே கலைவிழி நின்றார். காயமடைந்த போராளிகளை உடனுக்குடனேயே பின்னரங்கிற்குப் போகுமாறு அனுப்பிக்கொண்டிருந்தார். நெருக்கடியான அந்தக் களத்தில் காவும் குழுவினர் வந்து காயக்காரரை அகற்ற வாய்பில்லை. இயலுமான காயக்காரர்கள், வீழ்ந்திருந்த தோழியரின் வித்துடல்களைச் சுமந்துபோனார்கள். கலைவிழியோடு கூடவே நகர்ந்த கப்டன் எழில்நிதிக்கு காயம் ஏற்பட்டது. மறுபடி மறுபடி காயம் ஏற்பட்டதால் அவரால் நடக்கமுடியவில்லை. நடந்துவரக்கூடிய எல்லோரையுமே கலைவிழி அனுப்பிவிட்டிருந்தார். களத்தைவிட்டுக் கலைவிழியையும் வெளியே வருமாறு கட்டளைமையம் பணித்தது. காயத்துடன் கிடந்த எழில்நிதியைத் தூக்கிக்கொண்டு தான் வருவதாகக் கூறிய கலைவிழி தன்னோடு நின்றவர்களையும் அனுப்பிவிட்டிருந்தார். சிங்களப் படையினரின் கடும் தாக்குதல் மத்தியில் எழில்நிதியை மீட்டுவர முயன்ற கலைவிழி வரவேயில்லை. ‘ஓயாத அலைகள் – 03’ நடவடிக்கையில் பரந்தன் களமுனையில் சூனியப் பகுதிக்குள் வீழ்ந்துகிடந்த மேஜர் மாதுரியின் வித்துடலை எடுக்காமல் வரமாட்டேன் என்று போய், வித்துடலாக வந்த லெப். கேணல் மைதிலியைப் போலவே லெப். கேணல் கலைவிழியும். தடங்கள்: மலைமகள். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (வைகாசி – ஆனி, 2007). https://thesakkatru.com/thadangkal-thodarkinrana/
  4. உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளி மலையான் மகனே வேலைய்யா.... என் வாழ்வு வளம்காண கடைக்கண் பாரய்யா உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா..என் வாழ்வு வளம்காண கடைகண் பாரய்யா.. பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள்படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்ந்துகொள்ள தேடுமே.. உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா.. என் வாழ்வு வளம் காண கடைகண் பாரய்யா தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண்குளிர கண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே... தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண்குளிர கண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே. .. உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா... என் வாழ்வு வளம் காண கடைகண் பாரய்யா... ஆடிவரும் மயில்மேலே அமர்ந்து வரும் பேரழகே நாடி உன்னை சரணடைந்தேன் கந்தைய்யா....வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா..... உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா ... என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா!!!!!!!!!
  5. அவிதிதவிஷயாந்தரச்சடாரே ருபநிஷதாமுபகாநமாத்ரபோக அபிசகுணவஸாத் ததேகஸேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள் வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை ஆள்வார் அவரே யரண் கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மை ஆகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல் வினை பாற்றி அருளினான் எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ் அரு மறையின் பொருள் அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே பயனன்று ஆகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குரு கூர்நம்பி முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
  6. ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே நிழலைப் போல் எந்தன் கூட நீர் வருவதடியேனின் புண்ணியமே ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே 1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே இருதயத்திற்குள் ஆனந்தம்) - 2 (திருவிலாவிலே குருதி சொரிந்து நீர் துயரமென்னும் இருள் நீக்கிடும்) - 2 எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும். ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே. 2. (இயேசுநாயகா சத்யரூபனே சுகம் கொடுப்பவனே சிநேகிதா) - 2 (கடலலைகளில் அலையும் என் தோணி கரையிலேற்றணுமே தெய்வமே) - 2 நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே நிழலைப் போல் எந்தன் கூட நீர் வருவதடியேனின் புண்ணியமே ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே
  7. யா நபியே.., எம் மாநபியே.., எங்கள் ரசூல் நன் நபியே
  8. வெண்ணை உண்ணும் என் வேணுகான
  9. (1) கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! . (2) தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா (3) அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வாஅல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா . (4)எங்கும் இன்பம் விளங்கவே........)எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதேஎங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே (5) எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா.எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா (6) பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும்பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் (7) கலையலங்கார பாண்டிய ராணி நேசாகலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! மங்கா மதியானவாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
  10. என்னப்பனே ... என் அய்யனே ... கந்தப்பனே கந்தக் காருண்யனே (x2) பன்னிருகை வேலவனே (x4) கன்னி வள்ளி மணவாளனே வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் ... வேல் வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2) பார்வதியாள் பாலகனே (x4) பக்தர்களுக்கு அனுகூலனே வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் (x2) வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2) எட்டுக்குடி வேலவனே (x4) சுட்டப் பழம் தந்தவனே ... ஔவைக்கு ... சுட்டப் பழம் தந்தவனே வேல் வேல் வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2) கால்களில் பொற் சிலம்பு ... முருகன் ... கைகளில் பொற் சதங்கை (x2) கல் கல் கல் ... என வருவான் வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்.
  11. நெஞ்சே நீ கலங்காதே; சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே; நான் என் செய்வேனென்று. வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே 1. வினைமேல் வினை வந்தாலும் - பெண்சாதிப் பிள்ளை மித்துரு சத்ரு ஆனாலும் மனையோடு கொள்ளை போனாலும் வானம் இடிந்து வீழ்ந்தாலும் - நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான பாடு நோவு மிகுந்தாலும், மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே 3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக் காவலில் வைத் தடித்தாலும், வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமொதினாலும் — நெஞ்சே
  12. கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது
  13. லெப். கேணல் வீரன் தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன். கிளிநொச்சி மாவட்டம் கந்தபுரம் தான் வீரனினசொந்த ஊர். க.பொ.த.சாதாரண தர கல்வியை 1995ல் முடித்த சோமசுந்தரம் மோகனசுந்தரம் என்ற பதினாறு வயது மாணவன் விடுதலைப் போராட்டத்தின்பால் கவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். “சரத்பாபு – 10” பயிற்சித் தளங்களில் அடிப்படை பயிற்சியை முடித்த வீரன் யாழ். மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். யாழ் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி வீரன் தொடர்ந்து வன்னிக் காடுகளில் கடமையாற்றினான். 1996ம் ஆணடு லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணியில் வீரன் இணைக்கப்பட்டான். தாக்குதல் அணியில் ஒரு போராளியாக தனது போராட்ட வாழ்க்கையை தொடர்ந்தான் வீரன். “ஓயாத அலைகள் – 01 “முல்லைத்தீவு மீட்புச் சமரில் படையணியின் தாக்குதல் அணியில் ஒரு போராளியாக செயற்பட்டான். இவனுடைய கல்வியறிவும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இவனை தளபதிகளின் விசேட பார்வைக்குள் கொண்டு சென்றன. இதனால் இவன்”ஓ.பி” போராளியாக சிறப்பு பயிற்சி பெற்று ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் திறன்பட செயற்பட்டான். இச்சமரில் வீரன் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இதனால் சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு வீரன் மீண்டும் தாக்குதல் அணியில் இணைந்து கொள்ள விரும்பினான். ஆனால் இவனுடைய உடல் நலன் கருதி படையணியின் தாக்குதல் தளபதியும் நிர்வாகப் பொறுப்பாளருமான மதன் அவர்கள் வீரனை ஆளுகைத் தளத்தில் அறிக்கைக்காரனாக கடமையில் ஈடுபடுத்தினார். “சேரா நவம்பர்” தளத்தில் வீரன் தனது சக தோழர்களான சேந்தன், தமிழரசன் முதலானோருடன் அறிக்கை பணிகளில் முழுமையாக ஈடுபட்டான். 1998ல் படையணியின் ஆளுகைத் தளம் வட்டக்கச்சிக்கு மாறிய போது வீரன் அங்கு அறிக்கை போராளியாகச் செயற்பட்டான். 1999ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள பொறுப்பேற்ற போது மீண்டும் தாக்குதல் அணிக்கு திரும்பிய வீரன் முதுநிலை அணித் தலைவன் நியூட்டன் அவர்களின் கொம்பனியில் ஒரு செக்சன் லீடராக களமிறங்கினான். இந்நாட்களில் முன்னரங்க வேலைகளிலும், காவற் கடமையிலும் முழுவீச்சுடன் வீரன் ஈடுபட்டிருந்தான். குழப்படிகளூம் முன்முயற்சிகளும் நிறைந்த இளம் அணித்தலைவனான வீரன் படையணியின் பிரபலமான அணித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தான். வீரன் திறமையான சண்டைக்காரன் மட்டுமின்றி விளையாட்டு கவிதை புனைதல், வாசித்தல், கலை நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்துவது முதலான பல்துறை சார்ந்த போராளிக் கலைஞனாகவும் விளங்கினான். சதுரங்க ஆட்டத்திலும் வீரன் வல்லவனாக இருந்தான். ஊரியான், பரந்தன், சுட்டதீவு களமுனைகளில் போராளிகளின் ஒன்றுகூடலின் போது வீரன் தயாரித்து நடத்தும் “மேஜர் பிரியக்கோண் இசைக்குழு” நிகழ்ச்சி போராளிகளிடையே மிகப் பிரபலமாக இருந்தது. போராளிக் கலைஞர்களை தனக்கேயுரிய துள்ளலான குரலில் வருணனையுடன் வீரன் அறிமுகப் படுத்தும் போது மிகு‌ந்த கரவொலி எழுப்பி போராளிகள் வரவேற்பர். இவனுடைய நகைச்சுவை ததும்பும் கதைகளாலும் அறிவிப்புகளாலும் ஒரு சிறந்த போராளிக் கலைஞனாக படையணி வட்டாரத்தில் வீரன் பெரிதும் மதிக்கப்பட்டான். வீரனின் திறன்களை மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக ராகவன் அவர்கள் இவனை கனரக ஆயுதப் பயிற்சிகளிலும் “ஓ.பி” பயிற்சியிலும் ஈடுபடுத்தினார். மேலும் தடையுடைப்பு அணியாக இவனுடைய செக்சனை தெரிவு செய்து பயிற்சியில் ஈடுபடுத்தினார். சிறந்த தடையுடைப்பு லீடராக வீரன் வளர்ந்தான். “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் அம்பகாமம், ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதிகளில் வீரன் திறமையாக களமாடினான். இதன் பின்னர் 2000ம் ஆணடு ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறங்க சமரில் வீரன் செக்சன் லீடராக களமிறங்கினான். யாழ் சாலையை ஒட்டி கிளாலி பக்க பகுதியில் “பெட்டி” வியூகப் பாதுகாப்பில் வீரன் தனது செக்சனை திறமையாக நடத்தினான். எதிரியின் மிகக் கடுமையான தாக்குதல்களையும் முனேற்ற முயற்சிகளையும் வீரன் தீவிரமாக எதிர்த்து போராடினான். தனது மூத்த லீடர்களான சிந்து, ஐயன், தேவன், இலக்கியன் முதலானோருடன் வீரன் சிறந்த ஒருங்கிணைப்பை கொண்டிருந்து கோபித்தின் கட்டளையின் கீழ் மிகச் சிறப்பாக களமாடினான். இச்சமரில் கையிலும் வயிற்றுப் பகுதியிலும் படுகாயமுற்ற வீரன் சக போராளிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். காயம் ஆறி குணமடைந்தவுடன் மீண்டும் தாக்குதல் அணிக்கு வந்து விட்டார் வீரன். போர்ப் பயிற்சிக் கல்லூரியில் பிளாட்டூன் இரண்டாம் லீடராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையிலும் களமாடினார். இச்சமரிலும் வீரன் காயமுற்றார். பொதுவாகவே வீரன் பங்கேற்ற எல்லாச் சண்டைகளிலும் காயம்பட்டு ஏராளமான வீரத்தழும்புகளை தன் உடலில் தங்கியிருந்தான். ஒரு கையில் மேல் எலும்பு முழுவதுமாக நொறுங்கி அகற்றப் பட்டிருந்தது. உள்ளங்கையும் பல காயங்களுக்கு உள்ளாகி சில விரல்கள் நீக்கப்பட்டவராக இருந்தார். அவருடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு பின்தள வேலைகளில கடமையாற்றும்படி தளபதிகள் அவரை பணித்த போதும் வீரன் பிடிவாதமாக தாக்குதல் அணியிலே தொடர்ந்து கடமையாற்றினார். 2001ம் ஆணடு முகமாலை களமுனையில் பிளாட்டூன் லீடராக வீரன் கடமையாற்றினார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் முன்னணி கொமாண்டரான கப்டன் வான்மீகி அவர்கள் வீரச்சாவைத தழுவிக் கொண்ட போது, அவருடைய இடத்தில் வீரன் நின்றிருந்தது முதுநிலை அணித் தலைவன் அமுதாப்புடன இணைந்து தீவிரமாக களமாடினார். இச்சமரில் அதிரடி செக்சன் கொமாண்டர் கப்டன் மகேஷ் அவர்கள் வீரச்சாவைத தழுவிக் கொண்ட போது அவருடைய அணியையும் வீரன் பொறுப்பேற்று திறம்பட சமர் செய்தார். இச்சமரில் வீரனின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இதன் பின்னர் படையணி நாகர்கோவில் களமுனையில் கடமையில் இருந்த போது வீரன் பிளாட்டூன் லீடராக செயற்பட்டார். 2002ம் ஆணடு போர் நிறுத்த காலத்தில் படையணி போர்ப் பயிற்சிக் கல்லூரியில் நிலை கொண்டிருந்தது. அங்கு வீரன் நிர்வாகத்திலும், பயிற்சிகளிலும் கடமையாற்றினார். இக்காலத்தில் வீரன் மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பு பயிற்சி, கிளைமோர் பயிற்சி முதலான சிறப்புப பயிற்சிகளில் ஈடுபட்டார் புதிய போராளிகள் படையணிக்கு வந்தபோது வீரன் கொம்பனி லீடராக பொறுப்பேற்று இளம் போராளிகளின் சிறப்புப பயிற்சியில் ஒரு முன்னுதாரணமான அணித் தலைவனாக செயற்பட்டார். படையணியின் ஒரு பகுதி முகமாலை முன்னரங்கில் கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த போது வீரன் கொம்பனி லீடராக கடமையைத் தொடர்ந்தார். பின்னர் வீரன் நாகர்கோவில் களமுனையில் பகுதிப் பொறுப்பாளனாக சில மாதங்கள் கடமையாற்றினார். இக்காலத்தில் களமுனையில் நிலை கொண்டிருந்த மகளிர் தாக்குதலணி மற்றும் அரசியற்துறை தாக்குதலணி ஆகியவற்றோடு வீரன் சிறந்த ஒருங்கிணைப்பை கொண்டிருந்து பாதுகாப்பு கடமைகளைச் செவ்வனே செய்தார். 2005ல் மீணடும் போர்ப் பயிற்சிக் கல்லூரிக்கு திரும்பிய வீரன் கொம்பனி பொறுப்பாளராக பல்வேறு கடமைகளில் செயலாற்றினார். 2006ம் ஆணடு மன்னார் களமுனை பாதுகாப்பை உறுதிப்படுத்த இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் போது காடுகளூடாக நீண்ட முன்னரண் வரிசையை அமைக்கும் வகையில நிலைகளை தெரிவு செய்து தகடுகள் போட ஒரு கொமாண்டரை அனுப்புமாறு தேசியத் தலைவர் படையணியை பணித்த போது வீரன் இக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். சுமார் ஒரு கிழமைக்கும் மேலாக மன்னார் மாவட்டத்தின் பெரும் காடுகளில் வீரன் தனது குழுவுடன் சுற்றித் திரிந்து சுமார் முப்பது கிலோமீற்றர் தொலைவுக்கு நீண்ட முன்னரண் நிலைகளை தெரிவு செய்து தகடுகளை கட்டி வரைபடம் தயாரித்து தனது கடமையைச் சிறப்பாக செய்து முடித்தார். இந் நடவடிக்கையில் வீரனின் செயற்பாடு அளப்பரியதாக இருந்தது. மீண்டும் வட்டக்கச்சி தளத்திற்கு திரும்பிய வீரன் அங்கு பல்வேறு கடமைகளில் செயலாற்றினார். தமிழீழ தேசத்தின் கிழக்கு பகுதியில் சிங்கள ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பெரும் தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் வடக்கிலும் எதிரி பெரும் யுத்த முனைப்புக்களை செய்யத் துவங்கியிருந்தான். இதனால் அவசரமாக படையணி முகமாலை களமுனையில் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தப்பட்டது. இதன் போது வீரன் தாக்குதல் தளபதியாக நியமிக்கப்பட்டு கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். இந்நாட்களில் வீரன் எதிரியின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் பல்வேறு கடமைகளில் ஓய்வின்றி ஈடுபட்டார். 2006ம் ஆணடு ஆவணி மாதம் 11ம் நாள் திடீரென யுத்தம் வெடித்த போது வீரன் தீவிரமான முறியடிப்புத் தாக்குதல்களை நடத்தினார். தொடர்ந்து எதிரியின் முன்னரங்க நிலைகளை கைப்பற்ற தடையுடைப்பு அணிக்கு தலைமை ஏற்று தடையை உடைத்து வீரன் முன்னேறினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் ஆவணி மாதம் 13ம் நாள் வீரன் படுகாயமுற்றார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் வீரன் உறுதியாகவும் தெளிவாகவும் தன்னுடன் நின்ற மகளிர் போராளிகளுக்கு திட்டங்கள் வழங்கினார். பின்னர் தனது கைத்துப்பாக்கியை தனது சக அணித் தலைவியிடம் கொடுத்து தனது சிறப்புத் தளபதி கோபித்திடம் ஒப்படைக்க பணித்தார். பின்னர் களமுனை துணை மருத்துவ நிலையத்திற்கு தூக்கி வரப்பட்ட வீரன் அங்கு வீரச்சாவைத்தழுவிக் கொண்டார். எந்நேரமும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படும் வீரன் போராளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேணி அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். வீரன் மக்களை ஆழமாக நேசித்தார். மக்கள் மத்தியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்தினார். தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட உன்னதமான போராளியாக விளங்கினார். லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன் அவர்களின் போராட்ட வாழ்க்கை தமிழீழ வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன். நன்றி: லெப்.சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (முகபுத்தகம்). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-gobithan-veeran/
  14. லெப். கேணல் நாகதேவன் பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன். “நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ். மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். க.பொ.த. சாதாரண தர கல்வியை முடித்துக் கொண்டு இயக்கத்தில் இணைந்த கெங்காரட்ணம் ரமேஸ் படைய தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு நாகதேவன் என்ற இளம் போராளியாக கேணல் கிட்டு படையணியில் சேர்க்கப்பட்டார். பூநகரியை மீட்ட “தவளை” சமரில் தனது முதலாவது களப்பணியில் கால் பதித்தான் இளம் போராளி நாகதேவன். தொடர்ந்து யாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடமையாற்றினான். பின்னர் மணலாற்றுக் காடுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான பல தாக்குதல்களில் தாக்குதலணியில் ஒரு போராளியாக நாகதேவன் களமாடினான். இவனுடைய கல்வியறிவு புதிய ஆயுதங்களை கையாளுவதில் இருந்த ஆர்வம் ஆகியவற்றால் பொறுப்பாளர்களால் பெரிதும் கவரப்பட்டு மோட்டார் அணியில் இவனை இணைத்தனர். 60 மி.மீ மோட்டார் சூட்டாளனாக திறம்பட செயல்பட நாகதேவன் விரைவிலேயே 81 மி.மீ. அணியில் இடம்பெற்றார். மோட்டாரை இயக்குவதில் தேர்ந்த சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் விளங்கிய நாகதேவன் தனது களப்பணியைத் தொடர்ந்தார். 1995 ல் நாகதேவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணி யில் இணைக்கப்பட்டார். “ஓயாத அலைகள் – 01” முல்லைத்தீவு மீட்புச் சமரில் படையணியின் கனரக ஆயுத அணியில் சூட்டாளனாக செயற்பட்டார். இவருடைய கள அனுபவங்களும் போராளிகளை வழிநடத்தும் திறனும் இவரை செக்சன் லீடராக உயர்த்தின. 1997ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் செக்சன் லீடராக மிகத் தீவிரமாக நாகதேவன் களமாடினார். இச்சமரில் தனது இடுப்புப் பகுதியில் படுகாயமுற்ற நாகதேவன் இறக்குந்தறுவாயில் சக போராளிகளால் மீட்கப்பட்டு மருத்துவப் பிரிவு போராளிகளின் தீவிர சிகிச்சைகளால் காப்பாற்றப்பட்டார். சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மோட்டார் அணியில் இணைந்து கொண்டார். “ஓயாத அலைகள் 02” கிளிநொச்சி மீட்புச் சமரில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக அயராது களமாடிய நாகதேவன் படையணி போராளிகளிடையே பிரபலமான அணித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தார். கிளிநொச்சி மீட்புச் சமருக்குப் பிறகு ஊரியான் பரந்தன் முன்னரங்கில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக நாகதேவன் தொடர்ந்து கடமையாற்றினார். படையணியின் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைப்பாளரும் இளம் தளபதியுமான மதன் அவர்களின் கட்டளையின் கீழ் எமது நீண்ட முன்னரண் வரிசையைப் பாதுகாப்பதில் நாகதேவன் மிகுந்த ஊக்கமுடன் செயற்பட்டார். படையினரின் புகழ்பூத்த கொம்பனிப் பொறுப்பாளர்கள் வீரமணி, நியூட்டன், இராசநாயகம், கோபித் முலானோருடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணிய நாகதேவன் முன்னரண் இளம் அணித் தலைவர்களை திறமான ஓ.பி போராளிகளாக வளர்ப்பதில் பெரும் முயற்சி எடுத்தார். இந்நாட்களில் ஈழவாசன், தாவீதின், நிலான், மதி உள்ளிட்ட பல இளம் போராளிகளை மோட்டாரை இயக்குவதில் தேர்ந்தவர்களாக வளர்த்தெடுத்தார். 1999ம் ஆண்டு 8ம் மாதம் எதிரி பரந்தன் ஊரியான் பகுதியில் மேற்கொண்ட பாரிய படை நகர்வுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் தளபதி விமலன் அவர்களின் கட்டளையில் நாகதேவன் சிறப்புடன் செயற்பட்டு சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் பாராட்டுக்களை பெற்றார். “ஓயாத அலைகள் 03” சமரில் ஒட்டுசுட்டான், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், பரந்தன் முதலான அனைத்து களமுனைகளிலும் மோட்டார் சூட்டாளனாக இடையறாது செயற்பட்டார். “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையில் “பாலா” மோட்டார் அணி லீடராக பொறுப்பேற்று கடமையாற்றினார். 2001ல் முகமாலை கிளாலி முன்னரங்கில் மோட்டார் அணி லீடராக கடமையைத் தொடர்ந்தார். இந்நாட்களில் படையணியில் 60 மி.மீ மோட்டார் அணிகளை உருவாக்கி பயிற்றுவித்ததில் நாகதேவன் பெரும் பங்காற்றினார். இளம் செக்சன் லீடர்களான சிலம்பரசன், வீரமறவன், இசைச்செல்வன், ஜெயசீலன், சாந்தீபன், யாழ்வேந்தன், கலைச்செல்வன், றமணன் முதலானோர் நாகதேவனுடன் இணைந்து சிறந்த சூட்டாளர்களாகவும் வரைபடக்காரர்களாகவும் “ஓ.பி.” போராளிகளாகவும் சிறப்புடன் செயற்பட்டனர். சக மோட்டார் அணிகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணுவதில் நாகதேவன் முக்கியத்துவம் அளித்தார். இவருடைய சக தோழன் வைத்தியை மோட்டாரில் பயிற்றுவித்து அவனை சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் நாகதேவன் உருவாக்கினார். 2001 தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் இவருடைய” பாலா ” அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு தாக்குதலணி போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இச்சமரில் மகளிர் போராளிகளின் மோட்டார் அணியொன்று எதிரியின் சுற்றிவளைப்புக்கு உள்ளான போது, நாகதேவன் உடனடியாக துணைத் தளபதி கோபித் அவர்களின் கட்டளையைப் பெற்று தனது மோட்டாரை பின்பக்கமாக திருப்பி மகளிர் போராளிகளுக்கு ஆதரவாக செறிவான சூடுகளை வழங்கினார். சிங்கள இராணுவத்தினரின் முற்றுகையை உடைத்து மகளிர் போராளிகளை பாதுகாப்பாக வெளியேற்றிய இம் முக்கிய சமரில் நாகதேவனின் செயற்பாடு அளப்பரியதாக இருந்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் இவருடைய சக தோழர்களான றமணனையும் வைத்தியையும் நாகதேவன் சிறப்பாக வழிநடத்தினார். இவருடைய அணியிலிருந்த பல போராளிகள் காயமடைந்த நிலையில் இவருக்கு உதவுவதற்காக வந்த மகளிர் போராளிகளை சிறப்பாக நெறிப்படுத்தி தொடர்ந்து களமாடி இச்சமரின் வெற்றிக்கு வழிகோலினார். இதற்காக தேசியத் தலைவரிடம் பாராட்டையும் சிறப்புச் சான்றிதழையும் வைத்தியும் நாகதேவனும் பெற்றுக் கொண்டனர். 2002ம் ஆணடு போர் நிறுத்த காலத்தில் நாகதேவன் பயிற்சித் தளங்களில் செயற்பட்டார். பல இளம் போராளிகளை மோட்டார் அணியில் பயிற்றுவித்த நாகதேவன், தொடர்ந்து தாக்குதல் அணியில் பிளாட்டூன் லீடராக கடமையேற்றுச் செயற்பட்டார். மட்டக்களப்பில் துரோகி கருணாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி கோபித் அவர்களின் பொறுப்பின் கீழ் நாகதேவன் பிளாட்டூன் லீடராக தீரமுடன் களமாடினார். இவருடைய சக தோழர்களான செங்கோலன், தென்னரசன் ஆகியோரும் இந்நடவடிக்கையில் பிளாட்டூன் லீடர்களாக களமிறங்கி போராடினர். மட்டக்களப்பு நடவடிக்கைக்கு பிறகு வன்னிக்கு திரும்பிய நாகதேவன் மீண்டும் பயிற்சி தளங்களில் நின்று தாக்குதல் தளபதியாக பல்வேறு கடமைகளில் செயலாற்றினார். 2006ம் ஆணடு 8ம் மாதம் முகமாலை களமுனையில் எமக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையே போர் மூண்ட போது நாகதேவன் தாக்குதல் தளபதியாக சிறப்புத் தளபதி கோபித்தின் கீழ் நின்றிருந்தது தாக்குதலணிகளுக்கு தளங்களை அமைப்பதிலும் கனரக ஆயுத போராளிகளை பயிற்றுவித்து ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டார். இச்சமரில் ஓகஸ்ட் மாதம் 13ம் நாள் எதிரியின் தொடர் காவலரண்களை தாக்கிக் கைப்பற்ற நாகதேவன் கடுமையாக சமராடினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் எதிரியின் பகுதிக்குள் முன்னேறிய நாகதேவன் அங்கே படுகாயமுற்று வீரச்சாவைத தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடிய லெப். கேணல் நாகதேவன் அமைதியான இயல்பும் தொலை நோக்கும் பொறுப்புணர்வும் மிக்க போராளியாக, தனது போராட்ட வாழ்க்கை முழுவதும் களமுனைகளிலேயே செயற்பட்ட ஒப்பற்ற போராளியாக திகழ்ந்தார். போராளிகளிடையே சகோதரத்துவ உறவைப் பேணி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். இயக்கத்தில் பல்துறை சார்ந்த செயற்பாடுகளில் அவர் முன்னோடியாக ஊக்கமுடன் செயற்பட்டார். தனது சிறப்பான செயற்பாடுகளுக்காக தளபதிகளாலும் எமது தேசியத் தலைவராலும் பலமுறை பாராட்டுக்களைப் பெற்ற போராளியாக நாகதேவன் விளங்கினார். “நவம்பர்” என்று போராளி களால் அன்போடு அழைக்கப்பட்ட லெப். கேணல் நாகதேவன் அவர்களின் துணிவும் பொறுப்புணர்வும் வீரமும் தமிழீழ வரலாற்றில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன். நன்றி: லெப்.சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (முகபுத்தகம்). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-nagathevan/
  15. லெப். கேணல் தியாகன் தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய ‘கடற்புலிகளின் சாள்ஸ் படையணி பொறுப்பாளன்’ லெப். கேணல் தியாகன். 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். அத்தோடு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்பில் அதன் ஆசிரியர்மாரை கேள்விகள் கேட்டு தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வான். தொலைத்தொடர்பு சம்பந்தமாக இவனுக்குள்ள ஆர்வத்தை அறிந்த கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் இவனை சண்டையாகிலும் சரி, விநியோக நடவடிக்கையாகிலும் சரி கடற் கண்காணிப்புக்காகிலும் தொலைத்தொடர்பு நிலையத்திற்க்கு இவனையும் அழைத்துச் செல்வார். அங்கு ராடரில் படகுகளை எவ்வாறு துல்லியமாக இணங்கானுவது அதாவது எதிரியின் படகு எது கடற்புலிகளின் படகு எது என்பது போன்ற இப்படியாக தொலைத்தொடர்பு சம்பந்தமான அறிவைப் பெற்ற தியாகன் பின்னர் தொலைத்தொடர்பு நிலையத்தில் நின்று செயற்பட்டான். தொடர்ந்து விநியோக மற்றும் கடற்சண்டைகளில் தொலைத்தொடர்பாளனாக சென்று வந்துகொண்டிருந்தான். பின்னர் ஒரு சண்டைப்படகின் கட்டளை அதிகாரியானான். தொடர்ந்து மன்னார் மாவட்ட கடல் நடவடிக்கை மற்றும் கடல் சண்டைக்காக ஒரு தொகுதி படகுகள் அங்கே அனுப்பப்பட்டபோது இவனது படப்படியான வளர்ச்சிகளை நன்கு அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்களால் சண்டைப் படகுகளின் தொகுதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுகிறான். “ஒயாத அலைகள் 03” நடவடிக்கையில் யாழ். கிளாலி நீரேரியில் கடற்படையினருக்கெதிரான தாக்குதலில் பெரும்பங்காற்றி ஆனையிறவு மீட்புச் சமருக்கு பலம் சேர்த்தான். அத்தோடு நின்று விடாமல் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை மீட்கும் சமருக்கு தரைத்தாக்குதலனிக்கு உதவியாக பெரும் பங்காற்றினான். அதன் பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் 16.09.2001 அன்று இடம்பெற்ற வலிந்த தாக்குதலில் நிலமையை மாற்றி அமைத்த பெருமை தியாகனையே சாரும். கடலில் இடம் பெற்ற பெரும்பாலான விநியோகப் பாதுகாப்புச்மராகிலும் சரி வலிந்த கடற்சமராகிலும் சரி தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே பணியாற்றினான். ஈழப்போர் நான்கில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் தளபதியாக நியமிக்கப்படுகிறான். அதன் பின்னர் கடற்தாக்குதலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணியவன் சிறப்புத் தளபதி மற்றும் கடற்சண்டை அநுபவமுள்ள போராளிகளோடு ஆலோசித்து சிறிய படகுகளைக் கொண்ட தொகுதியை உருவாக்கி கடற்கரும்புலிகளையும் அழைத்துச் சென்று எதிரியை அவனது இடத்திற்கே பலநாட்களாகச் தேடிச்சென்று அவனது நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தவன் . பலவெற்றிகரத் தாக்குதல்களை செவ்வனவே வழிநடாத்தியவன். பல இக்கட்டான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் அவர்களை தனது அநுபவங்களைக் கொண்டும் கடற்தாக்குதல் தளபதிகள் எவ்வாறு இக்கட்டான நேரங்களில் செயற்பட்டார்களோ அப்படிச் செயற்பட்டு அவ் இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டு எதிரிக்கு எதிராக பழைய வேகத்துடன் படகுகளை ஒன்றாக்கி தாக்குதல் நடாத்திய ஒருதளபதி. மூத்த போராளிகளுக்கு மரியாதை கொடுத்து கதைக்கிற பன்பு அவர்களின் அநுபவங்களைக் கேட்டறிவதில் இருந்த ஆர்வம். போராளிகளுடன் பழகுகிற விதம்.இப்படியாக தியாகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான ஒரு தொகை போராளிகளை திருகோணமலையிலிருந்து வன்னிக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனுடன் ஒரு அறிவித்தலும் வழங்கப்பட்டது அதாவது ஒரு பாரிய அணி திருகோணமலையிலிருந்து வன்னிக்கு செல்லப் போகிறது. என எதிரியானவன் தனது அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியதை விடுதலைப் புலிகளின் ஒட்டுக் கேட்கும் அணியினரால் தெரிவிக்கப்பட்டது. அப்படியான சூழலில் தான் இவ்விநியோக நடவடிக்கை இடம்பெற்றது இவ் விநியோகப் பாதுகாப்புச் சமர் லெப். கேணல் தியாகன் தலைமையிலேயே இடம்பெற்றது விநியோகத்தில் வருபவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் கருத்திற்கிணங்க விநியோக அணிகளுக்கு பாதுகாப்பு வழங்கி எதிரியின் பாரியதொரு கடற்கலங்களுக்கெதிரான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் கடற்படையின் கலங்களை விநியோபடகுகளிற்க்குச் செல்லவிடாமல் கட்டளைகளை தெளிவாக வழங்கி இறுதிவரை போராடி 13.08.2007 வீரச்சாவடைகிறான். கடற்புலிகளைப் பொறுத்தளவில் தியாகனின் இழப்பென்பது ஒரு பாரிய இழப்பாகுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. தியாகனின் சகோதரியும் இவ்விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்திருந்தார். நீள்வானம் போன்று இவர்களது தியாகம் என்றும் எங்கள் மண்ணில் நிலைத்திருக்கும். என்றும் நினைவுகளுடன் அலையரசி. https://thesakkatru.com/sea-tigers-lieutenant-colonel-thiyakan/
  16. 😂🤣; ஓ அப்படியா, என்னால முடியாதப்பா இப்படி படுத்து எழும்ப நல்ல குறட்டைவிட்டு 8 மணித்தியாலத்துக்கு மேல் படுத்திருப்பேன்
  17. வானனை(ம்), மதி சூடிய மைந்தனை, தேனனை, திரு அண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ? பாடல் எண் :1108 வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்- தீரனை, திரு அண்ணாமலையனை, ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ? எத்தனை மணிக்கு படுக்கின்றனீர்கள்.. இவ்வளவு விடிய எழும்பிவிட்டீர்கள்
  18. ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன் கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன் அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன் வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன் கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே விளையாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் ஆறுமுகம் கொண்ட சரவண முருகன் கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன் கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.