Everything posted by உடையார்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இனிமேல் இப்படி டீ போட்டு பாருங்க|tea recipe in tamil|perfect tea recipe tamil|வீடே மணக்கும் மசாலா டீ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முத்து கணேசண் அவன் மோதகம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆரம்ப இசை பல்லவி ஆண்குழு : ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா ஒய் ஒய்யா ஒய்யா ஆண் : தந்தனத்தானா ஏஏஏஏ தய்யாரே ஏ தந்தனத்தானா ஆஆஆஆஆஆஆஆ ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா ஆண் : வேளை நகருக்கு நாங்கள் யாததிரைப் போறோமே அன்னை என் தாய்மரியே ஆறுதலைத் தா மரியே அன்னை என் தாய்மரியே ஆறுதலைத் தா மரியே ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா (இசை) சரணம் - 1 ஆண் : யாத்திரை செல்வதற்கு ஒருமனதாய் முடிவெடுத்தோம் சொந்தபந்தம் அனைவருக்கும் சேதியினை சொல்லிவிட்டோம் ஆண்குழு : தந்தனதந்தன தந்தனத்தானா தந்தனதந்தன தந்தனத்தானா ஆண் : யாத்திரை செல்வதற்கு ஒருமனதாய் முடிவெடுத்தோம் சொந்தபந்தம் அனைவருக்கும் சேதியினை சொல்லிவிட்டோம் சகாய அன்னையோட திருத்தலத்தில் கூடி நின்றோம் சகாய அன்னையோட திருத்தலத்தில் கூடி நின்றோம் சாந்தோமின் வழியாக அடையாறில் பூசை கண்டோம் சாந்தோமின் வழியாக அடையாறில் பூசை கண்டோம் ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா (இசை) சரணம் - 2 ஆண் : சொத்து சுகம் எனக்கு தேவையில்லை தாய்மரியே சென்று வரும் வரையில் காத்தருளும் மாமரியே ஆண்குழு : தந்தனதந்தன தந்தனத்தானா தந்தனதந்தன தந்தனத்தானா ஆண் : சொத்து சுகம் எனக்கு தேவையில்லை தாய்மரியே சென்று வரும் வரையில் கர்த்தருளும் மாமரியே கிண்டியின் வழியாக மீனம்பாக்கம் வந்தடைந்தோம் கிண்டியின் வழியாக மீனம்பாக்கம் வந்தடைந்தோம் மறைமலை நகருக்குள்ளே மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தோம் மறைமலை நகருக்குள்ளே மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தோம் ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தனா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா (இசை) சரணம் - 3 ஆண் : சூரியன் உதித்திடாத குளிரும் காலை நேரமமம்மா காவி அணிந்ததினால் குறையவில்லை வேகமம்மா ஆண்குழு : தந்தனதந்தன தந்தனத்தானா தந்தனதந்தன தந்தனத்தானா ஆண் : சூரியன் உதித்திடாத குளிரும் காலை நேரமம்மா காவி அணிந்ததினால் குறையவில்லை வேகமம்மா சென்னையை அடுத்திருந்த செங்கல்பட்டு வந்ததம்மா சென்னையை அடுத்திருந்த செங்கல்பட்டு வந்ததம்மா ஜெபம் சொல்லி நடந்து வந்தோம் மதுராந்தகம் தெரிந்ததம்மா ஜெபம் சொல்லி நடந்து வந்தோம் மதுராந்தகம் தெரிந்ததம்மா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா (இசை) சரணம் - 4 ஆண் : மாலை வரும் முன்னே மரக்காணம் வந்தடைந்தோம் மாமரி உன்னைக் காண மகிழ்ச்சியுடன் நடந்து வந்தோம் ஆண்குழு : தந்தனதந்தன தந்தனத்தானா தந்தனதந்தன தந்தனத்தானா ஆண் : மாலை வரும் முன்னே மரக்காணம் வந்தடைந்தோம் மாமரி உன்னைக் காண மகிழ்ச்சியுடன் நடந்து வந்தோம் கடற்கரை சாலை வழி வந்தவருடன் கலந்து விட்டோம் கடற்கரை சாலை வழி வந்தவருடன் கலந்து விட்டோம் காலையில் எழுந்து அந்த பாண்டி எல்லையை கடந்து விட்டோம் காலையில் எழுந்து அந்த பாண்டி எல்லையை கடந்து விட்டோம் ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரிய்ம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா (இசை) சரணம் - 5 ஆண் : அரியாங்குப்பத்திலே அளவில்லாத ஆனந்தமாம் கடலூரைக் கடந்ததினால் புவனகிரி வந்ததம்மா ஆண்குழு : தந்தனதந்தன தந்தனத்தானா தந்தனதந்தன தந்தனத்தானா ஆண் : அரியாங்குப்பத்திலே அளவில்லாத ஆனந்தமாம் கடலூரைக் கடந்ததினால் புவனகிரி வந்ததம்மா சிதம்பரம் ஊருக்குள்ளே சீக்கிரமா நுழைந்துவிட்டோம் சிதம்பரம் ஊருக்குள்ளே சீக்கிரமா நுழைந்துவிட்டோம் சிதம்பரம் அடுத்து வந்த சீர்காழியில் ஓய்வெடுத்தோம் சிதம்பரம் அடுத்து வந்த சீர்காழியில் ஓய்வெடுத்தோம் ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா (இசை) சரணம் - 6 ஆண் : நள்ளிரவு நேரத்திலே சீர்காழியில் கிளம்பிவிட்டோம் காரைக்கால் வழியாக நாகூரு வந்தடைந்தோம் ஆண்குழு: தந்தனதந்தன தந்தனத்தானா தந்தனதந்தன தந்தனத்தானா ஆண் : நள்ளிரவு நேரத்திலே சீர்காழியில் கிளம்பிவிட்டோம் காரைக்கால் வழியாக நாகூரு வந்தடைந்தோம் மாதரசி மாதாவை நாகையிலே வேண்டிக்கொண்டோம் மாதரசி மாதாவை நாகையிலே வேண்டிக்கொண்டோம் நீல வண்ணக் கடலோரம் வேளாங்கண்ணிக்கு நடந்துவந்தோம் நீல வண்ணக் கடலோரம் வேளாங்கண்ணிக்கு நடந்துவந்தோம் ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தனா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா (இசை) சரணம் - 7 ஆண் : அலைகளை கண்டதுமே அளவில்லாத ஆனந்தமாம் அன்னார்ந்து பார்த்ததினால் அன்னைக்கோயில் தெரிந்ததம்மா இசை ஆண் : அலைகளை கண்டதுமே அளவில்லாத ஆனந்தமாம் அன்னார்ந்து பார்த்ததினால் அன்னைக் கோயில் தெரிந்ததம்மா வியாகுல மாமரியை வணங்கி வந்த நேரம்மா வியாகுல மாமரியை வணங்கி வந்த நேரம்மா வெண்ணிறக்கொடி அந்த நீலவானில் பறந்ததம்மா அன்னையை கண்டதும் எங்கள் யாத்திரையோ முடிந்ததம்மா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : தந்தனத்தானா ஆண் : கேளம்மா தாய் மரியம்மா ஆண்குழு : ஒய் ஒய்யா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இணையில்லாத இறைவா எனக்கு கருணை புரிவாயே இம்மை வாழ்வில் இறைவா எனக்கு அருளை பொழிவாயே இறைவா அருளை பொழிவாயே மருளும் நரகை இறைவா எனக்கு மருள வைப்பாயே மறுமை வாழ்வில் இறைவா எனக்கு உன்னைத் தருவாயே இறைவா உன்னைத் தருவாயே பிறந்த உயிர்கள் சுவைக்கும் மனிதா இறப்பைப் படைத்தானே இறந்த உடல்கள் நடக்கும் மனிதா மறுமை திடல் தானே சுமந்த தாயின் சுமைகள் மனிதா இறங்கும் நாள் தானே நிறைந்த அமல்கள் சுமப்பாய் மனிதா மஹ்ஷர் வெளிதானே மனிதா மஹ்ஷர் வெளிதானே நபியின் வழியில் நடந்தால் மனமே வாழ்வு சிறந்திடுமே நபியின் ஸலவாத்ததனில் மனமே வளங்கள் பெருகிடுமே நபியை காண்பதற்கே மனமே கண்கள் ஏங்கிடுமே நபியை கண்ட உடனே மனமே கல்பும் குளிர்ந்திடுமே மனமே கல்பும் குளிர்ந்திடுமே உயிரை எடுக்கும் மலக்கே வருவீர் அழைக்க ஒருநாளே உதட்டில் ஒலிக்கும் மலக்கே கலிமா இறைவன் அருளாளே உவந்து வருவேன் மலக்கே இறையை காண அந்நாளே உவகை கொள்வேன் மலக்கே அந்நாள் எந்தன் மணநாளே மலக்கே எந்தன் மணநாளே இறுதித்தூதர் நபியே எனக்கு கருணை புரிவீரே இறையின் முன்பு நபியே எனக்கு பரிந்து உரைப்பீரே பானம் அருந்த நபியே எனக்கு அள்ளித் தருவீரே பாலம் கடக்க நபியே எனக்கு உதவி செய்வீரே நபியே உதவி செய்வீரே
-
நடனங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
உருவாக அருவாக உருஅருவாக. ஒவ்வொருவர்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் உளதினில் நினைத்த எல்லாம் உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே; உண்மை அறிவான பொருளே! பரிவாகவே அநந்தந் தரம் சரவண பவாவென்று நான் சொல்லியும், பாங்குமிகு காங்கேயா! அடியனேன் எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ? குருபரா! முருகையா! கந்தா! கடம்பா! சொல் குமரா! குகா! சண்முகா! கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள் கொடுத்(து)ஆள்வை முத்தையனே! மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி மணவனே! என் துணைவனே! வன்னமயில் வாகனா! பொன்னேரகப் பதியில் வளர் சாமிநாத குருவே. ========================================== சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால் முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.- இறைவனிடம் கையேந்துங்கள்
புல்லாங்குலலின் மீதியிலே இசை பல்லவி புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி இரு பொன்னிர விழியை இமை கொண்டு மூடி புது கதை கூருது என் தோழி மன்னன் செவியில் குண்டலம் ஆட மயக்கம் பெருகுது என் தோழி ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ மன்னன் செவியில் குண்டலம் ஆட மயக்கம் பெருகுது என் தோழி அவன் மங்கள கன்னத்தில் சங்கதி பேச மாயம் பெருகுது என் தோழி புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி இசை சரணம் - 1 நெற்றியில் ஆடுது இலவேனில் தலை நேரில் ஆடுது மயில் சீலி (இசை) நெற்றியில் ஆடுது இலவேனில் தலை நேரில் ஆடுது மயில் சீலி சிரு குற்றம் இல்லாதொரு முத்தாரம் அவன் கூந்தலில் ஆடுது என் தோழி சுற்றி இருக்குது பட்டாடை உயர் சுடர்விழி வீசுது கருமேனி அந்த கொற்றாமரயின் புன்னகைக்கு நான் பொங்கி எழுந்தேன் என் தோழி புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி இசை சரணம் - 2 எத்தனை பேருக்கு வசமானாய் அவன் இதயம் கடலடி என் தோழி (இசை) எத்தனை பேருக்கு வசமானாய் அவன் இதயம் கடலடி என் தோழி ஒளிர் முத்துமணி திரல்கள் தியது தவன் மோதனமார்பினன் என் தோழி தத்துவ,ம் நாயகன் கால் முதல் தலை வரை தனி நிறம் அன்றோ என் தோழி அடி இத்தனை கிழனம் எழிலும் படைத்தவன் இவனை போல் எவர் என் தோழி புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி இசை சரணம் - 3 நேற்று நடந்ததை நினைவினில் வைத்து நெஞ்சம் மகிழ்வது என்ன பிழை (இசை) நேற்று நடந்ததை நினைவினில் வைத்து நெஞ்சம் மகிழ்வது என்ன பிழை தினம் அற்றார் மனது ஆசை கனவுகள் ஆயிரம் வந்தது என்னவளே மாற்றம் ஏனடி மன்னன் எனை விட்டு மங்கையர் கலையுடன் நிலை செய்தான் அவன் தோற்றம் நின்றலை சுட்டு விட்டும் அதை சொல்லும் வகை ஏது என் தோழி புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி இரு பொன்னிர விழியை இமை கொண்டு மூடி புது கதை கூருது என் தோழி புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி- இறைவனிடம் கையேந்துங்கள்
இசை பல்லவி ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம் ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம் ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் அதில் ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும் ஓங்கார நாதமாம் சபரிமலை அதில் ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும் ஓங்கார நாதமாம் சபரிமலை இசை சரணம் - 1 நீலாகாசமும் மரகத பூமியும் ஆனந்த சங்கீத தாரையாக நீலாகாசமும் மரகத பூமியும் ஆனந்த சங்கீத தாரையாக அர்ச்சனை மந்திரமும் ஜீவ நாளங்களும் உன் முன்னால் கைகூப்பி தொழுதிடவே மனமுருகி மெய் மறந்து நின்றேனே நான் ஊமை அமுதம் ருசித்தது போல் ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம் ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் இசை சரணம் - 2 கோடி ஜென்மங்களில் இரவும் பகலும் சிந்திய கண்ணீர் உறைந்ததாவா கோடி ஜென்மங்களில் இரவும் பகலும் சிந்திய கண்ணீர் உறைந்ததாவா அருளொளி மணிகண்டன் பாதங்கள் அலங்கரிக்க துளசி இலை கண்ட பாக்கியம் தர்சன பாக்கியமாம் தீர்த்த முன்டேனே நான் ஊமை இனிப்பு உண்டது போல் ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம் ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் அதில் ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும் ஓங்கார நாதமாம் சபரிமலை அதில் ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும் ஓங்கார நாதமாம் சபரிமலை ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம் ஆயிரம் ஆயிரம் பல்லவிகள்- இறைவனிடம் கையேந்துங்கள்
குழு அ அ அ அ ஆ.... இசை பல்லவி ஆண் அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி குழு அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி ஆண் சாம வேதம் ஓதும் நீலகண்டன் வாம பாதம் வாழும் ஈஸ்வரி காமகோடி பீடம் ஆளுகின்ற நாமம் கோடி போற்றும் சங்கரி தீயசக்தி உன் தளத்தில் மாய தெய்வசக்தி மாநிலத்தில் வாழ வருகவருக வந்து வரமருளே அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி குழு அ அ அ ஆ.... அ அ அ ஆ.... அ அ அ அ ஆ.... அ அ அ அ ஆ.... ( இசை ) குழு ஆ....அ....ஆ....அ.... இசை சரணம் - 1 ஆண் பூங்காற்று தாலாட்டும் மாங்காட்டில் நீங்காத ஓம்காரி நீயே பாம்போடு வேம்பாடும் வேற்காட்டில் அருளாட்சி புரிகின்ற தாயே நான்கு வேதமும் பஞ்ச பூதமும் ஆறு காலங்கள் ( இசை ) ஏழு லோகமும் எட்டுத் திக்குமும் ஏற்கும் பாதங்கள் ( இசை ) தேவர் தம்மோடு மூவரும் இடைவிடாது பணியும் கருணைக் கடலே ( இசை ) பாவம் மேலோங்குமோ தருமம் கீழாகுமோ குழு ஒஓ....ஒஓ....ஒஓ.... ஒஓ....ஒஓ....ஒஓ.... ஆண் பூமி தடுமாறவே பேய்கள் நடமாடுமோ குழு ஒ ஒ ஒ ஓ.... ஒ ஒ ஒ ஓ.... ஆண் வினையில் விளையும் பகையும் துயரும் பொடிபட வருகவருக வந்து வரமருளே அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி குழு ஆ....ஆ....ஆ....ஆ.... அ....ஆ....அ....ஆ.... ஆ.... இசை சரணம் - 2 ஆண் காஞ்சி நகர் வாழும் காமாட்சியே ( இசை ) கையில் கிளி ஏந்தும் மீனாட்சியே ( இசை ) ஏழு உலகுனது அரசாட்சியே என்ன நடந்தாலும் நீ சாட்சியே மூடனுக்கும் வாழ்வளித்த தாயே ( இசை ) மூலமான ஆதி சக்தி நீயே ( இசை ) மகிஷாசுரன் செய்த வினை தீர்த்தவள் ( இசை ) முருகேசனின் கையில் வேல் சேர்த்தவள் ( இசை ) அபிராமி பட்டர்க்கும் நூல் தந்தவள் ( இசை ) சம்பந்தன் அழும் போது பால் தந்தவள் ( இசை ) வேண்டும் வரம் தர தேவி திருமுகம் மீண்டும் மலர்ந்திடுமோ ஈன இருளிடை ஞான ஒளிவர பொழுது புலர்ந்திடுமோ பத்ரகாளி வருக ருத்ரகாளி வருக சிம்மமேறி வருக சீற்றமோடு வருக சூலி நீலி அம்மா தாயே ஜனனி- இறைவனிடம் கையேந்துங்கள்
சகாயத்தாயின் சித்திரம் நோக்கு அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும் கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு - 2 தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ - 2 அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் - 2 இம்மாநிலத்தில் இவள் போல் - 2 இரங்கும் தாயும் உளரோ - 2- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னை அயீஷா ரலி- உணவு செய்முறையை ரசிப்போம் !
3 முட்டை இருந்தா உடனே இந்த சாதம் செய்து பாருங்க- உணவு செய்முறையை ரசிப்போம் !
பத்தே நிமிடத்தில் இந்த சாதம் செஞ்சு கொடுங்க உடனே தட்டு காலியாகும்|- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான வஞ்சரம் மீன் வறுவல்- இறைவனிடம் கையேந்துங்கள்
ராகம்: கானடா ஶ்ரீ கோமதி உனையே நம்பினேன் எனையாளும் அம்மா ஈஸ்வரி நீயே ஶ்ரீ கோமதி உனையே நம்பினேன் அம்மா மகிமை என்ன சொல்வேன் மாயா ஸ்வரூபிணி மங்களமாகவே மனதில் வாரும் அம்மா (ஶ்ரீ கோமதி ) பங்கஜாட்சி நீயே பரமதயாளு நீயே எங்கும் நீதி பெற்ற எந்தன் பிரியாய் நீயே கோமதிதாய் என்றுகூறிய பேர்களுக்கு குலதெய்வமாய் வந்து குறைகளைத் தீர்ப்பாயே ஶ்ரீ கோமதி ( ஶ்ரீ கோமதி )- இறைவனிடம் கையேந்துங்கள்
ஜக மாயை - திருப்புகழ் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | அருளியவர் : அருணகிரிநாதர் | இசை : ராஜ்குமார் பாரதி | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக் பாடல் வரிகள் : முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும் இடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் திரு நாமம் புகல்பவரே நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே ஜகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறி தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே தனியேர கத்தின் முருகோனே சமர்வேலெ டுத்த பெருமாளே அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் . இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் ,தாயார் பெயர் முத்தம்மை . இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார். அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது. அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன. முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.- கப்டன் திலகா
கப்டன் திலகா சிட்டுக்குருவி கப்டன் திலகா குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம், அமைதியான் சுபாவம். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து, பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனங்களில் ஒரு உருவம் தெரிகின்றதல்லவா? நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அதோ, அந்த உருவம் ஓடுவதைப் பாருங்கள். பாதங்கள் தரையில் படாதது போல் தோன்றுகிறதல்லவா, உடற்பயிற்சி செய்வதைப் பாருங்கள், எப்படி இவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் உடலை வளைக்க முடிகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவள் தான் திலகா. சிட்டுக்குருவி போல் துருதுருவென்ற இயல்புடன் எப்போதுமே உற்சாகமாகத்தான் ஓடித்திரிவாள். திலகாவிடம் பயிற்சி பெற்ற பெண் புலிகள் “திலகாக்கா மாத்திரம் எப்படி சோர்வேயில்லாமல் இப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார்?” என்று ஆச்சரியப்படுவார்கள். “பயிற்சிப் பாசறையில் நாம் பயிற்சி எடுக்கிறோமா அல்லது திலகாக்கா பயிற்சி எடுக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கும். ஏனென்றால் அவர் எந்நேரமும் ஓடித்திரிந்து கொண்டே இருப்பார்” என்று அவர்கள் சொல்வார்கள். களத்தில் கூட அவளது உற்சாகம் சிறிதும் குறையவில்லை. 1989ம் ஆண்டின் நடுப்பகுதியில் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்ட திலகா இதுவரை காலமும் பயிற்சி கொடுத்து படையணிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் களம் செல்லும் சர்ந்தப்பம் அவளுக்கு கிடைக்கவில்லை. ஆனையிறவு மோதலே அவளது அவாவை நிறைவேற்றியது. வழமை போல் படு உற்சாகமாகவே தன் குழுவை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு மோதலின் கடைசிக் கட்டம், திலகா தனது அணியுடன் களம் புகுந்தாள். அகிலன் வெட்டையில் நின்ற இராணுவம் ஆனையிறவை நோக்கி முன்னேறத் தொடங்கியது. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. இராணுவம் அங்குலம் அங்குலமாக முன்னேற முயன்றது, இராணுவத்தினரின் நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் திலகா தனது அணியின் வியூகங்களை மாற்றி – மாற்றியமைத்து போரிட்டுக் கொண்டிருந்தாள். இராணுவத் தரப்பில் பலரை நாம் விழ்த்திய போதும் எம் பக்கமும் இழப்புகள் அதிகமாகவே இருந்தது. களத்தில் நிற்கும் எம்மவர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் இராணுவத்தினது நகர்வு தடுக்கப்பட வேண்டும். திலகா உடனேயே தொலைத் தொடர்பு சாதனம் முலம் தனது குழுவின் அணித்தலைவர்களை அழைத்தாள். “முன்னுக்குப் போங்கோ. சளைக்காமல் அடிபடுங்கோ. வீரமரணமடைந்த ஒவ்வொரு போராளியையும் மனதில நினைத்துக்கொண்டு போங்கோ – போய் அடிபடுங்கோ.” என்று திரும்பத் திரும்பச் சொல்லி தன் குழுவை உற்சாகப்படுத்திக் கொண்டு சண்டைக்குத் தலைமை தாங்கினாள். சண்டையும் தீவிரமடைந்தது. இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்றிலிருந்து புறப்பட்ட ரவை திலகாவை துளைத்துச் சென்றது. தரையில் படாமல் பறப்பது போல் ஓடுகின்ற திருமலை மண் பெற்ற அந்தத் தவப்புதல்வி அந்தப் பெருமணல் வெளியிலே சாய்ந்தாள். அரை மயக்கத்திலிருந்த போதும் அவள் வாய், “செத்த ஒவ்வொரு, போராளிகளையும் நினையுங்கோ. போய் அடியுங்கோ” என்றே கட்டளையிட்டுக் கொண்டிருந்தது. வைத்தியசாலைக்கு அவள் கொண்டு வரப்படும் வழியிலும் எதோ சொல்ல விரும்புவது போல் அவள் வாய் திறந்து, திறந்து முடியது. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. வைத்தியசாலைக்கு அவள் கொண்டுவரப்பட்ட பின்னர் உயிர் பிரியும் இறுதி நேரத்தில் கூட அவள் வாய் எதையோ முணுமுணுத்தது. நான் நினைக்கின்றேன் கடைசி நேரத்தில் கூட “செத்த ஒவ்வொரு போராளிகளையும் நினைத்துக் கொண்டு அடிபடுங்கோ. ” என்று சொல்லத்தான் அவள் விரும்பியிருப்பாள். நினைவுப்பகிர்வு: மலைமகள். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி 1991). https://thesakkatru.com/captain-thilaga/- லெப். கேணல் தட்சாயினி
லெப். கேணல் தட்சாயினி நெஞ்சை விட்டகலா நினைவுகளில் நீங்கள் என்றும்… கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாயினியும் பெரிய பழுவேட்டையரைப் போலதான் என்றால் தாட்சாயினியின் தோழி ஒருத்தி சற்றுப் பெருமையாக, உண்மைதான். தாட்சாயினியின் உடலிலுள்ள வீரத்தழும்புகளை நின்று நிதானமாக எண்ணினால் அறுபத்துநான்குக்கும் அதிகமாகவே இருக்கும். தட்சாயினி! அந்த வயதுக்கேயுரிய முதிர்ச்சி. களங்களில் அவள் காட்டிய உக்கிரம், தன்னோடு நிற்கும் போராளிகளில் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, அவளது வளர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக தவறு விடுகின்ற கணங்களில் அவளது தண்டிப்பு எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து இவளை எங்களுள் ஆளுமையுடையவளாக நிலைநிறுத்தியது. விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெரும்பாலான சண்டைக் களங்களில் கம்பீரமாக ஒலித்த கட்டளைக் குரலுக்குரியவளை 1997.08.04 அன்று காலையின் பின் நெருப்பள்ளிவீசும் களம் இழந்திருந்தது. பல் சண்டைக்களங்களில் உடல் நிறையக் காயங்களைப் பெற்றுவந்து, தப்பிப்பிழைத்து, இனிக் காயப்படுவதற்கே இடமில்லை என்ற நிலையில் கூட களத்தைவிட்டு போகமாட்டேன் என்று அடம்பிடிப்பவள். பலாலி காவல் நிலைகள், மணலாறுகளம், மண்டைதீவு, சூரியக்கதிர், பூநகரி, தொண்டைமானாறு ஒட்டகப்புலம் வரையான காவலரண் அழிப்பு என்ற நீண்ட பட்டியல் அவளுக்குரியது. திறமையான சண்டைக்காரி. பூநகரிச் சண்டையின் அவளுக்கு இடுப்பிலும் தோள்மூட்டிலும் பெரிய காயம். “இந்தக்காயங்க்களோடு உங்களாலை தொடர்ந்தும் பயிற்சி எடுத்து சண்டைபிடிக்க ஏலாது: வெளி நிர்வாக வேலைகளைச் செய்யுங்கோ” என்று கூறப்பட்டும் கேளாமல், ‘தன்னால் முடியும், தான் தொடர்ந்து சண்டையிலே நிற்பேன்’ என்று விடாப்பிடியாய் நின்று செய்து காட்டியவள். மணலாறு மின்னல் சண்டையின்போது அவளுக்கு வயிற்றில் பெரிய காயம் ஏற்பட்டு, வெளிவந்து விழுந்த குடலை எடுத்து உள்ளே வைத்துப் பொத்தியபடி, இரத்தம் இழுக்க ஒருவரின் உதவியுமின்றி அரை மணித்தியாலம் நடந்தே மருத்துவ ஒழுங்குசெய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அவளது மனுருதியைக்காட்ட இதைப்போல் இன்னும் எத்தனையோ சம்பவங்கள்……….. ஓரளவு பதட்டமில்லாத காவல்நிலைப் பகுதிகளில் அவள் நிற்கும்போது அவள் அங்கு நடத்துகின்ற தடபுடலுக்குக் கணக்கில்லை. அதுவும் கடற்கரையோரக் காவல்நிலைப் பகுதியாயின் தாட்சாயினி நண்டு பிடித்து, வாய்க்கு ருசியாய் சமைத்துக் கொடுப்பாள். தனது குழுவிலுள்ள வயதில் சின்னப் போராளிகளுக்கு தானே உணவு குழைத்துக் கொடுப்பாள். ஒரு அம்மாவுக்குரிய பொறுமையும் பண்பும் கண்டிப்பும் அவளிடம் உண்டு. ஆள் சரியான தேத்தண்ணிச்சாமி, விடாக்குடியன், மொடாக்குடியன் மாதிரி காலம் நேரமில்லாமல் தேநீர் தயாரித்து, தானும் குடித்து எல்லோருக்கும் கொடுப்பாள்.தேனீயைப் போலவே அவளும் சரியான சுறுசுறுப்புத்தான். சூரியக்கதிர் 01ல் அவளுக்குப் பெரிய காயம். எறிகணை அவளின் காதோடு சேர்த்து கன்னத்தசைகளையும் பிய்த்துச் சென்றதோடு, மார்பிலும் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை அவளது குழு ஒரு காவற்பகுதியில் நின்றது. அப்போது அவள் குழுவிலுள்ள ஒரு போராளிக்குக் காய்ச்சல், ஆறியும் ஆராமலும் இருந்த வயிற்ருக்காயத்தைப் பொருட்படுத்தாது தானே மரத்தில் ஏறி இளநீர் பிடுங்கிக் கொடுத்துவிட்டு, வயிற்றுநோவேடுக்க, ஒருவருமறியாது தனியாகப் போயிருந்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுதாள். எப்போதும் இயக்கத்தின் நலன், கட்டுக்கோப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக எமது தலைவர் என்று தீவிரமான பற்றுவைத்த போராளி. மிகத் திறமையான சண்டைக்காரி. அவளோடு நின்ற நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராளிக்கும் உயிர்த்துடிப்பானவை. நெஞ்சை விட்டு அகலாதவை. நன்றி – களத்தில் இதழ் (17 மார்கழி 1997). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-thadsayini/- இறைவனிடம் கையேந்துங்கள்
விண்ணப்பம் பண்ண ஆள் இல்லையே- இறைவனிடம் கையேந்துங்கள்
எனக்கும் தான், நல்ல பாடல் அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே- இறைவனிடம் கையேந்துங்கள்
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் குங்கும பூவாய் பங்கயப் பாவை வேங்கடரமனின் பூங்கொடி வாராய் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..- இறைவனிடம் கையேந்துங்கள்
திருசெந்தூர் இது திருசெந்தூர் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.