Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. மாவீரர் நீங்களே, மறப்போமா நாங்களே
  2. 2019ம் ஆண்டு ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல் 50 Views தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் மாவீரர் வணக்கப் பாடலொன்று கடந்த 2019ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு வெளியிடப்பட்டது. இப் பாடலை மீள் பதிவு செய்கின்றோம். https://www.ilakku.org/2019ம்-ஆண்டு-ஈழத்-தமிழர்-உரிம/
  3. எங்கிருந்தாலும் எங்களின் இதயம் ஒவ்வொரு தமிழனும் ஈழத்து பெண் புலி உறுமி மேளம் தலைமகனே எம் பிரபாகரனே
  4. அனித்தமான - திருப்புகழ் அகர முதலென - திருப்புகழ் பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
  5. ஏழிசை நாதனே எழுவாய் - இறை அருளை என்னில் நீ பொழிவாய் பல வரங்கள் தந்து எனைக் காப்பாய் வழிகாட்ட எழுந்து வருவாய் 1. வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து (2) உறவை வளக்கும் விருந்து -2 என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது பாடுவேன் பாடுவேன் பல சிந்து பாரினில் வாழுவேன் உனில் இணைந்து (2) 2. விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு (2) மனிதம் வாழும் தெய்வம் -2 என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம் பாடுவேன் பாடுவேன் ... ... உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா
  6. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வீரவணக்க நாள்/0 கருத்து எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை, உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள். அடக்கிவைத்து, எம்மை இனியும் ஆளமுடியாதென்று அந்நியருக்கு அறைகூவல் விடுத்த நாள். உயிர்கொடுத்தே உரிமையைப் பெறமுடியும் என்பதை முதற்சாவு மூலம் முரசறைந்த நாள். ஆம்! மாவீரர்நாள் – தமிழீழத்தின் தேசிய நாள். சத்தியநாதன் என்ற லெப். சங்கர், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் முதற்சாவை இன்றுதான் சந்தித்தான். ஒரு காலத்தில் எதிரி எட்டி எட்டி உதைக்கவும், உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்தது எங்கள் இனம். காலிமுகத்திடலிலும், கச்சேரி வாசலிலும் ஆயுதமற்று அறப்போர் செய்த எங்கள் இனத்தைக் குண்டாந்தடியாலும், துப்பாக்கிப்பிடியாலும் தாக்கித்தூக்கியெறிந்தது சிங்கள பேரினவாதம். யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குப் பஸ்சில் புறப்பட்டால் பத்து இடத்திலாவது தமிழரை இறக்கி நீங்கள் யார்? நீங்கள் யார்? என்று கேட்பதுபோல அடையாள அட்டை பார்ப்பார்கள். வரிசையிலே நிற்க வைத்துக் கேள்விகள் கேட்பார்கள். எங்கள் தங்கைகளைத் தடுத்து வைத்து குண்டு கொண்டு போகின்றாயா என்று இரட்டை அர்த்தத்தில் பரிகசிப்பார்கள். இத்தனையையும் கூனிக் குறுகிப் பொறுத்துக்கொண்டு என்ன செய்வதென்று வழிதெரியாது இருளில் கிடந்தது எங்கள் இனம். கார்த்திகை 26 ஆம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்யும் வழிகாட்டவென்று வல்வைக் கடற்கரையில் ஒரு பிள்ளை விழிதிறந்தது. கார்த்திக 27ஆம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்ய இரத்தம் சிந்தாமல், உயிரை விலைகொடுக்காமல் விடிவில்லை என்பதைக்கூறி ஒரு பிள்ளை விழி மூடியது. இங்கு ஜனனமும், மரணமும் விடுதலைக்கான விளைபொருட்களாயின. இன்று பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தமிழீழ விடுதலையென்னும் தங்கள் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில், சுதந்திரம் பெறும் நாளில் எங்கள் தலைவன் ஏற்றப்போகும் தேசியக்கொடி காற்றில் அசையும் காட்சியைக் காண்பதற்காகக் கல்லறைக்குள்ளே கண்மூடிக் காத்திருக்கிறார்கள். தாங்கள் ஒப்படைத்துவிட்டுவந்த பணியைத் தங்கள் தோழர்கள் தோழிகள், தாங்கள் நேசித்த மக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று இலக்கை அடைவார்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் குழிகளுக்குள்ளே குடியிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவீரர் நாட்களிலும் நள்ளிரவில் கேட்கும் நாதமணிச் சத்தம், ‘விடுதலை பெற்றது தமிழீழம்’ என்பதைத் தங்களுக்கு வந்து சொல்லுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், தங்கள் கல்லறையில் நாங்கள் ஏற்றும் நெய்விளக்குச் சுடரில் தமிழீழத்தின் வரைப்படத்தையே கண்டு களிப்படைந்து கொண்டுமிருக்கின்றனர். மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்கள் புதைந்த இடங்களாக நாம் எண்ணக்கூடாது, தமிழீழம் என்று கிடைக்குமென்று ஏங்குபவர்கள் தூங்குமிடங்களாகக் கொள்வோம். அந்தப்புனித இடத்தில் பூக்களை வைப்பது மட்டுமல்ல எங்கள் கடமை. கூப்பிய கரங்களுடன், விழிசொரிவது மட்டும்தான் எங்கள் பணியாகக் கொள்ளல் ஆகாது. தமிழீழத்தைப் பெற்று, மாவீரர்களின் தாளடியில் வைப்பதே நாங்கள் அவர்களுக்குச் செய்யும் வரலாற்றுக் கடமையாகும். அலங்கார வளைவுகள், அர்த்தராத்திரியில் நெய்விளக்குகள், கண்ணீர் மாலைகள் எல்லாம் சம்பிரதாயச் சடங்குகளாக மாறக்கூடாது. அடுத்த மாவீரர்நாள் விடுதலைபெற்ற மண்ணிலென்று, நாங்கள் ஒவ்வொருவரும் சபதமேற்றுக் கொள்ளவேண்டும். இதையே இலக்காகக் கொண்டு நாங்கள் நகரத் தொடங்கவேண்டும். “விடிகின்றபோதில் போதாகி மலர்வீர மடிந்தும் மடியாத மாவீரர் நீவிர்” நன்றி: மாவீரர் சிறப்பிதழ் (27.11.1995). காணிக்கை காணிக்கையான! மாணிக்கங்களே..! அஞ்சலிகள்… அன்பானவர்களே… ஆத்மார்த்த அஞ்சலிகள்… உங்கள் தியாகம் சொல்லுந்தரமற்றது, உங்கள் தியாக அருவியில் திளைக்கிறோம், உங்கள் நினைவுகள் உள்ளத்தை ஊடறுத்து ஆன்மாவை அசைக்கிறது. உங்கள் இழப்புக்கள் எங்களை மட்டுமல்ல எதிரிகளையும் கலங்கடிக்கிறது. ஆம்…. நாம் கலங்கிக் கதறுகிறோம்…. எதிரி கதி கலங்கிச் சிதறுகிறான்…. ஆனால் அதேவேளை கலங்கும் எதிரி நிலைகொள்ள முடியாது தடுமாறுகிறான். நாமோ….உங்கள் கனவுகளை… உங்கள் எண்ணங்களை…. நனவாக்க உங்கள் நினைவிலேயே உங்கள் கல்லறைகளிலே கலக்கமே உறுதியாக நிமிர்கிறோம். இனிய தோழர்களே! நீங்கள் எங்களைக் காக்கவென்றோ உயிர் போக்கினீர்கள் முன்சென்றீர், வழிசமைத்தீர்… இந்தத் தமிழ் மண்ணுக்காக உங்கள் இன்னுயிரை ஈந்தீர்கள் இளமை…. இது உங்களுக்காகவும் இயற்றப்பட்டதுதானே! திருமணம் உங்களுக்காகவும் உள்ளதுதானே… பாசம் உங்களிலும் பாசம் கொண்டதுதானே பந்தங்களைத் துறக்க உங்களுக்கு நிர்ப்பந்தம் என்ன? வாழ்வென்றால் உங்களுக்கு மட்டும் என்ன வேப்பங்காயா? ஏன் வாழ்வினைத் துறந்தீர்கள்…? தாழ்வெனப்படுவது தமிழைத் தாக்கியதால்த்தானே…! அன்பானவர்களே… கல்யாணம் கச்சேரி… பிள்ளை குட்டி… கடை காணி, படிப்பு உத்தியோகம், பரம்பரை கௌரவம், சாதிவெறி, பிரதேசப் பாகுபாடு என்று எல்லாமே ஊறிப்போன…சுயநலத்திலேயே தனது அடிப்படைகளைக் கட்டி எழுப்பும் தமிழினத்திலிருந்தா நீங்களும் பிறந்தீர்கள்…? ஆச்சரியமாக உள்ளது. மேற்சொன்னவெல்லாம் நிறையவிருந்த அந்த இனத்தையே விடுதலையென்றும், தமிழ் என்றும், பொது நலமென்றும் புரட்சியென்றும் தொன்மையின் சிறப்பென்றும் சிந்திக்க வைத்துவிட்டீர்களே. இதுதான் பெரியதோர் சகாப்தப் புரட்சி… இந்தப் புரட்சியினை நிகழ்த்த தங்களது உயிரே அர்ப்பணம் எனும் போதுதான் நெஞ்சு கனக்கிறது…. ஆத்மா அந்தரிக்கிறது. ஆனால்… இழப்பின்றி ஒரு பெறுபேறு இல்லையே… சுடச் சுடத்தான் தங்கம்…. படப்படத்தான் புரட்சி… எரிப்பதை மறுத்தால் காடு கழனியாகுமா? தெரிந்துகொண்டோம். தெளிந்துகொண்டோம். மாவீரர்களே! நீங்கள் இறக்கவில்லை இறவாத தமிழ் இரக்கக் கூடாது என்பதற்காய் உங்களையே ஆகுதியாக்கிக்கொண்டீர்களே…! என்று வாழும் சிரஞ்சீவிகள் நீவிர் தமிழீழத்தின் கடலும் காற்றும் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள் கடலும் காற்றுமே உங்கள் பெயர் சொல்லும்… நெஞ்சு கனக்கிறது. நினைத்தால் உங்கள் தியாகமே எங்கள் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. உங்கள் தியாக சிகரத்தைத் தொடுவதற்காகவே நாங்களும் விஸ்வரூபமெடுக்க எழுகிறோம்… நாம் எழுகின்ற வீச்சிலே ஆயிரமாயிரம் பகைவீச்சுக்கள் பொடிபடுகின்றன. விதையாகிப்போன வேங்கைகளே…! நாம் மனந் தளர்கின்ற போதெல்லாம் உங்கள் உருவங்களும்… உருவந்தெரியாது அருவமாகிப் போன உங்கள் பெயர்களும் எம்மைத் தட்டியெழுப்புகின்றன. எமது காயங்களுக்கு மருந்து தடவுகின்றன. ஆன்மாவுக்குள் ஆழ இறங்கி உசுப்பி விடுகின்றன. ஆயுதங்களை இறுகப்பற்றி எழுகின்றோம் உங்கள் எண்ணங்களை ஈடேற்றி முடிப்போம் என்ற உத்வேகத்துடன் எழுகின்றோம்… குருதி முழுதும் உடலெங்கும் ஊடறுத்துப்பாய… விழிகள் ஆக்ரோசத்துடன் விரிய… எம்மினிய தோழர்களே…. என்று கூவிக்கொண்டு எழுகிறோம் ஆத்மார்த்த தோழர்களே எழுகிறோம். விழ விழ எழுகிறோம். நீங்களே எமது எண்ணம், நீங்களே எமது வழிகாட்டி, நீங்களே எமது தீர்மானம்… நீங்கள் பதித்த சுவடுகள்… எம்மை வழி நடாத்தும் சுவடிகள்… நன்றி: மாவீரர் சிறப்பிதழ் (27.11.1995). தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 27.11.1982 தொடக்கம் 31.08.2007 வரை வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் விரிப்பை தேசக்காற்று இணையம் உறுதிபடுத்தி விரிப்பு செய்கிறது. 1982ம் ஆண்டு – 01 மாவீரர் 1983ம் ஆண்டு – 15 மாவீரர்கள் 1984ம் ஆண்டு – 50 மாவீரர்கள் 1985ம் ஆண்டு – 188 மாவீரர்கள் 1986ம் ஆண்டு – 320 மாவீரர்கள் 1987ம் ஆண்டு – 518 மாவீரர்கள் 1988ம் ஆண்டு – 382 மாவீரர்கள் 1989ம் ஆண்டு – 419 மாவீரர்கள் 1990ம் ஆண்டு – 965 மாவீரர்கள் 1991ம் ஆண்டு – 1622 மாவீரர்கள் 1992ம் ஆண்டு – 792 மாவீரர்கள் 1993ம் ஆண்டு – 928 மாவீரர்கள் 1994ம் ஆண்டு – 378 மாவீரர்கள் 1995ம் ஆண்டு – 1508 மாவீரர்கள் 1996ம் ஆண்டு – 1380 மாவீரர்கள் 1997ம் ஆண்டு – 2112 மாவீரர்கள் 1998ம் ஆண்டு – 1805 மாவீரர்கள் 1999ம் ஆண்டு – 1549 மாவீரர்கள் 2000ம் ஆண்டு – 1983 மாவீரர்கள் 2001ம் ஆண்டு – 761 மாவீரர்கள் 2002ம் ஆண்டு – 46 மாவீரர்கள் 2003ம் ஆண்டு – 72 மாவீரர்கள் 2004ம் ஆண்டு – 80 மாவீரர்கள் 2005ம் ஆண்டு – 55 மாவீரர்கள் 2006ம் ஆண்டு – 995 மாவீரர்கள் 2007ம் ஆண்டு – 615 மாவீரர்கள் மாவட்ட வாரியாக………. யாழ்ப்பாணம் மாவட்டம் – 7041 மாவீரர்கள் மட்டக்களப்பு, அம்மாறை மாவட்டங்கள் – 4966 மாவீரர்கள் வன்னி மாவட்டம் (வவுனியா, கிளிநொச்சி) – 2879 மாவீரர்கள் திருகோணமலை மாவட்டம் – 1763 மாவீரர்கள் முல்லைத்தீவு மாவட்டம் – 1449 மாவீரர்கள் மன்னார் மாவட்டம் – 1110 மாவீரர்கள் வெளி மாவட்டங்கள் – 331 மாவீரர்கள் மொத்த மாவீரர்கள் விரிப்பு – 19539 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பாக நீளும் பதிவுகள்… தாயக விடுதலையில் ஆகுதியான அனைத்து மாவீரச் செல்வங்களின் ஈகங்களின் உணர்வுத்தீயில் உருவான இசைப் பாமாலைகள் மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகின்றேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை; சரித்திரமாகி விட்டார்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். 1989ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை வெளியான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர்நாள் பேருரைகள். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் தமிழீழ மாவீரர் நாள் இன்று உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/tamil-eelam-national-maaveerar-naal/
  7. லெப்டினன்ட் சங்கர் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு வேங்கையின் மரணம்: முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ். சங்கர், சுரேஸ், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னைத் தானே அர்பணிக்கக் காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறான். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்து விடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புக்களிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரச படைகளின் தீவிரக்கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி அவன் கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்று கொண்டிருக்கும் விழிகள் சுற்றப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும் கூட ஒரு கொரில்லா வீரன் எள்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கையில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்தி விட்டு தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப் போராளிகள் எனப்படுபவர்கள் ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிகையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப் போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாகஇ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில்;; விடுதலைப் போராளிகளை ஆயுதங்களோடு அரசபடைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானதுஇ அரசபடைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விடுவதில் நம்பிக்கையை ஊட்டிஇ அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான். படுகாயமுற்ற நிலையிலும் கூட மதில் தாண்டிப் பாய்ந்து, தங்கள் கொரில்லாப்பிரிவின் மற்றொரு மறைவிடத்தை நோக்கித் தப்பிச் சென்றவன்இ பாதுகாப்பான இடம் வந்து சேர்ந்து விட்டோம் எனத் தெரிந்த பின்தான் இடுப்பிலிருந்து ரிவால் வரை எடுத்துக் கீழே வைக்கிறான். உயிரோடும் ஆயுதத்தோடும் எதிரியின் கைகளில் பிடிபடாத ஒரு வீரனின் சாவு அவனுடையது. இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கி விட முடியுமென்று பாசிஸ சர்வாதிகாரி ஜே.ஆர். ஜயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்த போது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கொரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும் வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஒழியாது என்பதை அரசுக்கு எடுத்துக் காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத் திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே எடுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்க்கும் வாலகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறி வைக்கும் அவனது சாதுரியம் அசலானது. நெல்லியடியில் அரசபடையினர் பீதியுற்ற நிலையில் சங்கர் கால்களை அகல விரித்து, பக்கவாட்டில் நின்று அரசபடையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது. சாவகச்சேரி போலீஸ் நிலையத்தின் மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கொரில்லாத் தாக்குதலின் வெற்றிக்குச் சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் போலிஸ் நிலையங்கள் உசார்படுத்தப்பட்டிருந்த நிலையில், மாடிக் கட்டிடத்தோடு பிரதான வீதியிலிருந்து சற்றுத் தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரி போலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலுக்கூடாகத் தாக்குதல் நடத்துவது எனபது விஷப் பரீட்சை தான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் ஆகிய போராளிகளின் முன்னே அபாயங்களும் தடைகளும் என்ன செய்து விட முடியும்? ஜி 3 துப்பாக்கி சகிதம் படுத்துக் கிடந்து சங்கர் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் அப்பகுதி அரசபடைகளை ஸ்தம்பிக்கச் செய்தது. பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தம்பாப்பிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகிக்கிறான். எந்த விதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கொரில்லாத் தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு. எதிரிப்படைகள் ஸ்தலத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடனும் அதிக நிதானத்துடனும் வாகனத்தை செலுத்துவதில் சங்கர் வல்லவன். சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத வி~யங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பண்போடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு சகித்து வந்தான். தமிழீழ விடுதலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேயே வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழு மூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனசு மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நின்கிறார்கள். தலைவர் பிரபாகரனின் அரசியல் வழிகாட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற – தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளினால் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான். சாகும் தறுவாயிற் கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவில்லை. ‘தம்பி தம்பி’ என்றதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப் போராளிகளும் கண் கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான். “ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற ரஷ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக் கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம் தான். எங்கள் மாவீரர்கள் சாவைச் சந்தித்த கடைசி மணித்துளி ஒருநொடிப் பொழுதா? இல்லை… அது தான் எங்கள் நீண்ட வரலாறு! நன்றிகள்: சூரியப் புதல்வர்கள் சஞ்சிகை (2004), விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, 1983). https://thesakkatru.com/first-maaveerar-lieutenant-sankar-suresh/ ஈழத்தின் முதல் வித்து லெப்டினன்ட் சங்கர் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வழித்தடங்கள்/0 கருத்து ஈழத்தின் முதல் வித்து லெப்டினன்ட் சங்கர். லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா…? தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். ‘ஏதோ அறியாதவன். சில நாட்;கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். 1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்…. சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது. இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான். 1982ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் ஏழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில்… எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமானத் தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர். 1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்… இதை மோப்பம் பிடித்துவிடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகையிடப்படுகிறது….. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக்கொள்கிறார்கள். முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது. 27.11.1982 அன்று … விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது. தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது. இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது. நன்றி: எரிமலை இதழ் (கார்த்திகை, 2000). https://thesakkatru.com/eelams-first-maaveerar-lieutenant-sankar/
  8. மாவீரர்கள் விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வழித்தடங்கள்/0 கருத்து மாவீரர்கள் – விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள்; மாவீரர் நாள் – தமிழீழத் தேசியத் திருநாள். எமது தேசம் விடுதலைபெற வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று. உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மNhகன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள். எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருகிறது. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். (1994ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து…) தழைக்க ஓங்கித் தமிழீழப் பொழில் முளைக்க நீயே முதல்விதை ஆனாய்! உலக விடுதலை வரலாறுகளில் உன்னதமானது நம் தமிழீழத் தேச விடுதலை வரலாறு. உலகே காணாத அளவுக்கு – பிரமிப்பு அடையும் அளவுக்கு தியாகங்களால் அர்ப்பணிப்புக்களால் நிறைந்து அசைக்கமுடியாத உறுதி கொண்டது நம் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம். “தத்துவங்கள், உண்மைகள் வனமுறைக்கு உள்ளாக்கப்படும் பொழுது தேசிய இயக்கங்கள் பிறக்கும்” என்ற எர்னஸ்ட் கில்னரின் தேசிய வாதங்கள் குறித்த ஆய்வுக்கு உதாரணமாகத் திகழ்வது நம் தமிழீழத் தேச வரலாறு. ஒரு மக்கள் இனம் தம்; தேசத்திற்காக தங்கள் உயிர்களையே கொடுக்கத் தயாராகும்பொழுது அதற்கு தேச இனமெனும் தகுதி தானாகவே வந்துவிடும் எனும் தோமஸ் கைலாண்ட் எரிக்சனின் கூற்றுப்படி, தமிழீழ மக்கள் தமது தியாகங்களினால் தாம் தமிழீழ தேச மக்கள் என்ற தகுதியை உலகுக்கு நிரூபித்து நிற்கின்றனர். “எங்களுக்கு வித்தே வேண்டாம். நாங்கள் வேரிலிருந்து முளைவிடும் சக்தி. எங்களைக் கூட்டிக்குவித்து தீயிலிடு. மறுநாள் சாம்பரிலிருந்து பிறப்போம். வெட்டிச் சரித்து புதைத்திடு. மூன்றாம் நாள் எங்கள் முகம் தெரியும்-இதுதான் தமிழ் இனம்” எனப் வீரப்பாட்டிசைத்து நிற்கும் உணர்ச்சிச் சமுதாயம் எம் தமிழீழச் சமுதாயம். இந்த வீர உரைக்கு, கவிதை வரிகளுக்கு சரித்திரச் சாட்சிகளாக விளங்குபவர்கள் நமது மாவீரர்கள். சந்ததி காக்க நடக்கும் சமரில் சந்ததிக்காக தம் உயிர் தந்து, மண்ணுக்காய் மண்ணை முத்தமிட்டு சாவையும் சரித்திரமாக்கியவர்கள். எங்கள் வாழ்வின் விளக்கொளிர மெழுகாய் உருகியவர்கள். இவர்களின் கல்லறைகளும் கருத்தரிக்கும். தேசத்தின் புதல்வியவள் தேடினாள் விடியலையே. தேசமே பெரிதென்றெண்ணி தானைத் தலைவன் அணி நின்றாள். புது நானூறு படைத்தளிக்க புலிப் பெண்ணாய் முன் எழுந்தாள். மாவீரர்கள் காலால் நடந்து, வாயால் மொழிந்து, கையால் தலைவாரிக் கொண்டு எம்மைப் போல் ஒருவராய் வாழ்ந்த தமிழீழக் குடிமக்கள். ஆனால், அவர்கள் நெஞ்சிலே எரிந்த விடுதலைக் கனல் மட்டும் அவர்களை மானிடத் தெய்வங்களாக உயர்த்தியது. இந்த விடுதலைக்கனல், அவர்களை உயிர்ப் பூவைக் கிள்ளி எடுத்து விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமான தெய்வப் பிறவிகளாக மாற்றியது. அவர்கள் தேவை அறிந்து போராடியவர்களே அன்றி, சாவை விரும்பிச் சந்தித்தவர்கள் அல்ல. இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ முகில்கள் முட்டாத முகடுகளோ அல்ல. இதயத்தால் இரும்பானவர்களும் அல்ல. பனியாய் உருகும் நெஞ்சுக்குள் பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும் இவர்களே உரிமையாளர். தடைகள் கோடியென்றாலும் படைகள் தேடி வந்தாலும் விடைகள் எங்கள் தோள்களில் உண்டு எனக் களம் புகுந்த வேங்கைகள் இவர்கள். வீரர்கள் என்றும் சாவதில்லை; வித்தியாசமான சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை என உணர்ந்த இவர்கள், தோல்வியைக் கண்டு துவள்வதில்லை. சலுகைகளுக்குத் தட்டேந்திய எமது தேச வரலாற்றை, உரிமை தேடும் திசையில் திருப்பிய காலத்தின் கல் அணையான தேசத்தலைவன் பிரபாகரன் தென்றலின் சிறு கால்களில் கூட புயலின் வேகத்தைப் பூட்டிய பிதாமகன் என்பதை உலகுக்கு நிரூபித்த சாதனையாளர்கள். தலைவர் பிரபாகரனின் கண்ணில் எழும் பொறிகள் ஆணையிடும் போதினிலே, தேசக் கடமைக்காய் தேகத்தை விடுத்து தேசிய ஆன்மாவாய் எழுந்தவர்களே நம் மாவீரர்கள். அழுவதும் தொழுவதும், அடுத்தவர் எமது உரிமையைப் பெற்றுத் தந்திடமாட்டாரா என ஏங்குவதுமாய் சலுகைகள் பெற்றும் சரணாகதி அடைந்தும் செத்துப் பிழைத்தும் மானிடராய் வாழ்ந்த மக்கள் வரலாறு மாவீரர்களின் எழுச்சியால் மாற்றப்பட்டது. இதனால், எம் தேச வரலாற்றில் ஒரு புது அத்தியாயமாக எங்கள் மாவீரர் நாள் எழுச்சி பெற்றது. மரணமில்லாத மனித குலம் ஒன்று இந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற கவிஞனின் கனவு என்ற காலத்தை மாற்றி, தமிழீழத் தேச சரித்திரத்தின் நனவுக் காட்சியாய் விளங்குகிறது மாவீரர் நாள். சதையைக் கிழித்து, சத்தியத்தை இலட்சியத்தை சிதைத்துவிடலாம் என்ற சின்னப் புத்தி சிங்களப் பேரினவாதிகளுக்கு சிதையிலிருந்தும் போராட்டத்துக்கான உயிர்ச் சக்தி ஊற்றெடுத்துப் பாயும் எனக்காட்டிய சாதனையாளர்கள் நம் மாவீரர்கள். தன்நலம் பேணும் சுயநல நெஞ்சங்கள் நிறைந்த இன்றைய உலகில் நிதம் உங்களதும் எங்களதும் நல்வாழ்வு நினைந்து சந்ததி வாழத் தம்முயிர் தந்த தன்னலம் பேணாப் பெருந்தகையாளர்களே மாவீரர்கள். அவர்களது ஆன்மா தேசத்தின் விடுதலைக்காய் விடுபட்ட காரணத்தால் – அவர்களின் சாவு எங்களின் வாழ்வாகியதன் காரணத்தால் – மாவீரர் நாள் தமிழீழத் தேசத்தின் தேசிய தினமாகி தமிழீழ மக்கள் எங்கு வாழ்ந்தாலம் அவர்கள் வாழ்வின் புனித நாளாக விளங்குகிறது. மாவீரர்கள்! நெஞ்சில் விடுதலைக் கனலைச் சுமந்தீர் நெருப்பினில் ஆடியும் தேகம் இழந்தீh உங்களின் நினைவுடன் பயணம் தொடரும ஒருநாள் வெற்றிக் கொடிகள் உயரும் இது தமிழீழ மக்களின் உறுதியின் வெளிப்பாட்டுத் தினம். எம் மாவீரர்களில், களமாடித் தாயக மீட்புக்காய் களத்திலே வித்தாகிய உத்தமர்கள் – தம் சாவுக்குத் தேதி குறித்து அந்தச் சாவையும் தமிழீழ விடுதலையின் வெற்றிச் சரித்திரமாய் மாற்றிவிடும் கரும்புலித் தியாகிகள். இவ் மாவீர மனிதர்கள் விளைகின்ற தமிழீழத் தேசம் வீரத் திருநாடாய் விளங்குகின்றது. கரி, பரி, தேர், காலாட்படை கொண்டு யாழ் – வன்னி அரசர்கள் ஆண்டமை நேற்றைய வரலாறு. ஆனால், உயிராயுதம் எனும் புதுப்படை கொண்டு சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக தன் தாயகத்தை மீள மீட்கப் போராடுவது இன்றைய வரலாறு. “காலம் எமக்கொரு கட்டளையிட்டது களத்தினில் வாவென்று – நஞ்சு மாலை தரித்தொரு தேதி குறித்தனர் – மானம் பெரிதென்று” என தமிழீழ மக்கள் மேல் சிறிலங்கா ஆக்கிரமிப்பாளன் போரைத் திணிப்பதையும் அதை உயிரைக் கொடுத்தேனும் முறியடித்து தேசத்தை மீட்க மக்கள் பூண்டுள்ள உறுதி நிலையையும் உலகு அறியும். இந்த உறுதிக்கு உயிரால் பலமூட்டி வடக்கும் – கிழக்கும் சிறிலங்காவின் எச்சங்கள் என்ற காலத்தை மலையேற்றி, புவி மீதில் அவை வரலாற்றுக்கு முன்பிருந்தே தமிழீழ மக்கள் தாயகம் என்ற உண்மையை எடுத்து விள்க்கிட தம் தேகத்தையே சிதைத்த உத்தமர்கள் நம் மாவீரத் தெய்வங்கள், எமது தேசத்தின் வீர புருசர்கள். இலங்கைத்தீவின் ஒரு பகுதியாக இருந்த எமது மண் இன்று, உலகத்தின் கண்களில் தமிழீழமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றது. இந்த மாற்றம், வெறும் ஒலிபெருக்கி முழக்கங்களினாலும், அச்சடித்த காகிதங்களாலும், வாய்ச்சவால்களாலும் கொண்டுவரப்பட்டதல்ல. ஒற்றைத் துப்பாக்கியோடு, உறுதியும், கட்டுப்பாட்டுடனும் ஆரம்பித்த எமது இயக்கத்தின் எண்ணற்ற வீரர்கள் செய்த தியாகங்களினாலும், சிந்திய இரத்தத்ததாலும், கண்ட சாதனைகளாலும் உருவானது தான் தமிழீழம். இதற்கு நாம் கொடுத்த விலை சொல்லில் அடங்காது வீட்டைப் பிரிந்து, படிப்பைத் துறந்து… கைகளில் துவக்கோடும், கழுத்தில் சனனைட்டோடும், களத்தில் இளம்புலிகள் எத்தனை பேர்! அவர்களது வேட்கையும், வீரமும், விவேகமும் தான் விடுதலைப்போரின் உயிர்மூச்சு. இவர்களது வெற்றிகளின் பின்னால் வேதனைகள், எத்தனையோ வீரமரணங்கள். மண்ணில் கலந்த குருதி நாளைய அரசியல் சாசனமாக உருமாறும். இவர்கள் களம் கண்ட கதையை தலைமுறைகளிற்கூடாக காலம் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும். உலக நாடுகளின் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் ஒவ்வொரு நாடும் தனது தேசத்து உயிர்த் தியாகிகளை தேச புருசர்களாகப் போற்றி தேசிய தினம் கொண்டாடுகின்றது. கனடா மற்றும் பிரித்தானியாவில் கார்த்திகை பிறந்தால் அம் மக்கள் ‘பொப்பி எனும் பூ அணிந்து தமது வாழ்வுக்காகப் போரில் உயிர்நீத்த தமது போர்வீரர்களை நினைவுகூர்வதைக் காணலாம். அதுபோல பிரான்சில் பிரெஞ்சுப் புரட்சியின் நினைவு ஆடி 14ஆம் நாள் தேசிய தினமாக மக்கள் பெருவிழாவாக சிறப்பிக்கப்படுகிறது. உலகின் எந்தத் தேசத்தை எடுத்து நோக்கினாலும் போர் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலகங்கள் தேசச் சொத்தாக பேணிப் பாதுகாக்கப்பட்டு பூசிக்கப்பட்டு வருகின்றன. மாவீரர் நாள்! கருமேகம் கூடக் கசிந்து, விழிசிந்தும மாலைநேரப் பொழுதில் நாதமணிச் சத்தம். கல்லறைக்கு முன்பாக நெய்விளக்குப் பந்தம நெஞ்சத்துணர்வினிலே…. நெக்குருகி, கண்களிலே எங்கும் நீர்க்கோலம். “மாவீரர்நாள்” எம் மண் திரும்பத் திரும்பத் தீக்குளிக்கும் தினம். “பிடரியில், தட்டி விரட்டி அடிக்கலாம் தராசுத் தட்டில் நிறுத்தும் வாங்கலாம்” இப்படி மாற்றான் எண்ணிய தமிழனை புலியென நினைத்து கிலிகொளவைத்த “பிள்ளைகள்” நினைவில் உருகிடும் நாளிது. கல்லறை தழுவும் காற்றே வருக! காவியநாயகர் மூச்சைத் தருக! இவ்வகையில், தமிழர் வரலாற்றிலும் சங்க காலம் முதலே “விழுந்தொடை – மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல்” என மாவீரர்களுக்கு நடுகல் நாட்டி போற்றப்பட்டமையை தமிழிலங்கியங்கள் எடுத்துரைக்கின்றன. எமது தமிழீழத் தேச வரலாற்றிலும் யாழ்ப்பாண அரசினதும் வன்னிமைகளதும் மாவீரர்களின் நடுகற்கள் திருவுருவச் சிலைகள் போற்றப்பட்டமையை சரித்திர சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் பண்டார வன்னியன், சங்கிலி மன்னன் இவர்களினது திருவருவச் சிலைகள் இன்றும் (சிதைவுபட்டாலும்) இருப்பதைக் காணலாம். ஆனால், தமிழீழ மாவீரர்கள் நாள் வெறுமனே கடந்தகாலத் தியாகிகளை நினைவுகூரும் ஒரு தினமல்ல. மாறாக, நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அவசியமான பல்லாயிரக்கணக்கான போர்த் தியாகிகள் உருவாவதற்கு அவசியமான சமூக சூழலை உருவாக்கும் துரிதப்படுத்தும் ஒரு தினமுமாகும். இத்தினத்தில், வாயளவு வணக்கம் செய்து செயலளவில் தேசம் மீட்க எதுவும் செய்யாது, நாளை செய்வோம் எனப் பிற்போட்டால் அவர்கள் செய்வார்களென ஒதுங்கிவிட்டால் மாவீரர் ஆன்மாக்கள் எம்மை ஒருபோதும் மன்னிக்காது. தேசக்கடமை செய்ய எழுகவென மாவீரர் அணையா தீபங்கள் காற்றில் அசைந்து எமை அழைக்கின்றன. இது வெறுமனே அரசியல் அழைப்பு அல்ல – சதையால் இரத்தத்தால் உயிரால் கையொப்பமிட்ட புனித அழைப்பு. இந்த அழைப்புக்கு தலைவணங்குவதன் மூலம் மட்டுமே, எமது மானிடத் தெய்வங்களாம் மாவீரருக்கு உண்மையான வீரவணக்கம் செய்ய முடியும். விடிவெள்ளிகள் இளவயது கனவுகளை இதயத்தில் புதைத்து மண்மீட்புப் போரில் மரணித்துப் போனவர்களே! மரணம் கூட உங்களால் மகத்துவம் பெற்றது. காலத்தின் தேவைக்காய் களம் பல சென்று விடிவுக்காய் வீழ்ந்த வீரத்தின் விழுதுகளே! விடுதலை வரலாற்றின் விடிவெள்ளிகள் நீங்களே. “தன்நாட்டை தான் பெறான் உலகில் எந்நாட்டான் ஆயினும் இழிந்தான்” என்பது புரட்சிக் கவி பாரதிதாசனின் கவிதைவரி. எனவே நாம் தமிழீழத்துக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நம் நாட்டைப பெறாவிடில் நம்மை இழிந்தவர் என்றுதான் இவ்வுலகு பழிக்கும். “எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாளெனக்குத் “திருநாளாகும்” என்ற பாரதிதாசனின் கனவினை நனவாக்கிய பெருமை தமிழீழ மக்களுக்கே உண்டு. “உள்ள உயிர் ஒன்றுதான் அது போகப் போவதும் ஒருமுறைதான் தாய்நாட்டு விடுதலைக்குப் போவதிலே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது” என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்களும் தமிழீழ மக்கள்தான். “பூக்களும் நாமே புலிகளும் நாமே” என நட்புக்கு மென்மனதும், பகைக்கு புலி வலிமை எதிர்ப்புளமும் காட்டுபவர்கள் தமிழீழ மக்கள். ஆதலால், விடுதலைக்காக உயிரையே விலைகொடுத்து நிற்பவர்களிடம், சலுகைகளை கிள்ளி எறிந்து, ஈகைச் சுடரேற்றும் எங்கள் மண்ணை இனிமேலும் ஏமாற்றலாமென்றும் நினையாதீர். “மானத்தோடு தமிழன் வாழ்ந்தான்” என்ற ஒரு வரலாறே வேண்டும் – “வீரத்தோடு போராடி வீழ்ந்தான்” என்ற சரித்திரம் இனி ஒருபொழுதும் இடம்பெறாத வகையில் அனைத்துச் செயற்பாடுகளும் இருக்க வேண்டும். மாவீரர்களே! உங்களைப் புதைத்த மண் உறங்காது உரிமைகள் பெறும் வரை கலங்காது எங்களின் தாயகம் விடிவுபெறும் – புலி ஏற்றிய கொடியுடன் ஆட்சி வரும். ஆகவே, படைவிலக்கி வாருங்கள் – பகை முடிக்க வழி உண்டு – சர்வதேச மத்தியத்துடன் பேசித் தீர்க்கவும் இடமுண்டு. இல்லையேல் மாவீரர் வித்துடல் சுமக்கும் குறுமண்ணும் சிங்களப் படையினரை விழுங்கி தன்னைத்தானே விடுவிப்பதை வரலாறு உலகுக்கு உணர்த்தும். இதுவே மாவீரர் நாள் கூறும் செய்தி! நன்றி: களத்தில் இதழ் (19.11.1997). https://thesakkatru.com/maaveerarkal-uttamas-who-gave-their-lives-for-liberation/
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 அல்லாவை நாம் தொழுதால்... சுகம் எல்லாமே ஓடிவரும்
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
  11. மாவீரர் நாளும் தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி 54 Views தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர். 27.11.1982 அன்று… விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது. தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே தமிழகத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது. இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் நினைவு கூறப்பட்டுவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர் நாள் தொடங்கப்பட்ட 1989 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்டேன். தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அதன் பிறகு புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்று சுடரேற்றி உரையாற்றியிருக்கிறேன். 2005 ஆம் ஆண்டு தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொள்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். நவம்பர் மாதம் முழுவதும் போராளிகளுக்கான ஓவியப் பயிற்சிக்காக தமிழீழத்தில் இருந்தேன். தினந்தோறும் என்னை சந்திக்கும் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஒருநாள், “மாவீரர் நாளுக்கு முன்பு ஒரு வாரம் முழுவதும் ‘மாவீரர் வாரம்’ என்று கடைபிடிக்கப் படும். நீங்களும் அதில் கலந்துகொள்ளுங்கள் அண்ணா” என்று கூறிவிட்டு அரசியல் துறையை சேர்ந்த சிலரை அழைத்து புகழேந்தி அண்ணனையும் ‘மாவீரர் பெற்றோர்கள் கவுரவிப்பு’ நிகழ்வுக்கு அழைத்துச் செல்லுங்கள் உத்தரவிட்டார். அந்த வாரம் தமிழீழம் முழுவதும் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. மாவீரர்களின் பெற்றோர்கள் கவுரவிக்கப் பட்டார்கள். பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகள், மக்கள் என அனைவரும் அந் நிகழ்வுகளில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நானும் அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டது என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியா உணர்வு பூர்வமான அனுபவம். நான் தமிழீழத்தில் நிற்கின்ற காலங்களில் உறங்குகின்ற நேரம் மிகக் குறைவு. ஓய்வெடுக்கின்ற நேரம் இல்லை என்றே சொல்லலாம். பயிற்சி வகுப்புகள் இல்லாத நேரங்களில் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகள். பத்திரிகையாளர்களோடு சந்திப்பு என்று உறங்குகின்ற நேரத்தையும் ஓய்வெடுக்கின்ற நேரத்தையும் குறைத்து அதற்காக செலவிடுவதையே விரும்பி செய்தேன். 26.11.2005 அன்றும் அப்படித்தான். முதல் இரவு 11.00 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் அதன் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்), அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு என்னோடு நிகழ்த்திய உரையாடல் முடிவதற்கு நள்ளிரவைக் கடந்துவிட்டது. அதன் பிறகு புலிகளின் குரல் நண்பர்களுடன் கலந்துரையாடிவிட்டு நான் தங்கவைக்கப் பட்டிருந்த ‘டாங்க் வியூ’ விடுதிக்கு வந்து உறங்கச் செல்லும் போது அதிகாலை மூன்று மணியை நெருங்கியிருந்தது. சில மணிநேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து, வழக்கமான நடைபயிற்சியை முடித்து, புதுக் குடியிருப்பிலும் முல்லைத் தீவிலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்பிற்கும், நிகழ்விற்கும் ‘டாங்க் வியு’ விடுதியை விட்டு எனக்கான பசுரோ வாகனத்தில் புறப்பட்டேன். வாகனத்தில் ஏறியதும் கவனித்தேன் என்றும் இல்லாத வாறு ஓட்டுனர் போராளியிடம் துப்பாக்கி இருந்தது. கூடுதலாக ஒரு போராளியும் துப்பாக்கியுடன் வந்தார். வாகனம் டாங்க் வியுவிலிருந்து மாலதி சிலையைக் கடந்து ஏ9 சாலையில் பயணித்து கொண்டிருக்கும் போதே சாலைகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் இளைஞகர்களும் குழந்தைகளும் திரளாக நின்று சாலையில் செல்வோரை வழிமறித்து சர்க்கரை பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய வாகனத்தையும் நிறுத்தக் கைக் காட்டினார்கள். ஆனால் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்த போராளி நிறுத்தவில்லை. நான் அந்தப் போராளியைத் பார்த்தேன், “தலைவருடைய பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகின்றார்கள் மாஸ்டர்” என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிளிநொச்சியைக் கடந்த போது அங்கிருக்கும் முருகன் கோயிலடியில் மக்கள் திரள் இன்னும் அதிகமாக இருந்தது. அங்கேயும் மக்கள் என் வாகனத்தை நிறுத்த முயற்சித்தார்கள்… வாகனம் நிற்கவில்லை. எனக்கு முன்னால் சென்ற வாகனங்கள் அனைத்தும் நின்று மக்களால் வழங்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அதில் சில இயக்க வாகனங்களும் உண்டு. பரந்தன் சந்தியை நெருங்கியபோது மக்கள் திரள் இன்னும் அதிகமாகவே இருந்தது. யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து வருகின்றவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வருகின்றவர்கள் அல்லது அந்த பகுதிகளுக்குச் செல்கின்றவர்கள் என்று அனைவருடைய வாகனங்களும் நின்று சென்றதால் என் வாகனம் யாரும் நிறுத்தாமலே நிற்கவேண்டிவந்தது. என் வாகனத்தை நோக்கி கையில் சர்க்கரைப் பொங்கலோடு சிலர் ஓடி வந்தார்கள்….. அதற்குள் ஓட்டுனர் போராளி கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தினார், முன் நின்ற வாகனத்தைக் கடந்து வலது புறம் திரும்பி புதுக்குடியிருப்பு சாலையில் வேகமெடுத்தது வாகனம். எனக்கு வருத்தமாக இருந்தது. மக்கள் எவ்வளவு அன்போடும் மகிழ்வோடும் ஓடிவருகிறார்கள்… அதை நாம் மதிக்க வேண்டாமா….. என்ற உணர்வோடு ஓட்டுனர் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன்…. என் உணர்வை புரிந்துகொண்டவராக “மாஸ்டர் இன்றும் நாளையும் நாம் உங்களை கவனமாக பாதுகாக்க வேண்டியிருக்கிறது மாஸ்டர்” என்றார். கூடுதலாக போராளி வந்தபோதே நான் புரிந்து கொண்டேன் என்றேன். வழிநெடுகிலும் இதுபோன்றக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டே சென்றேன். வழியில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் சென்றேன். மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில நிமிடங்கள் இருந்து விட்டு புறப்பட்டேன். விசுவமடுவைக் கடந்து புதுக்குடியிருப்பின் நுழைவு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மக்கள் நின்று வாகனங்களை நிறுத்தி பொங்கல் வழங்கிக் கொண்டிருந்தார்கள். இயக்க வாகனங்களும் சில நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றிரண்டு முக்கியப் பொறுப்பாளர்கள் தளபதிகளுக்குரியது என்று புரிந்தது. தளபதிகள் பொறுப்பாளர்கள் கூட நிறுத்தியிருக்கிறார்களே… என்றேன். “ஆம் மாஸ்டர் அது அவர்கள் பொறுப்பு. உங்களுக்கு ஏதாவது என்றால் நாங்கள் தான் பொறுப்பு” என்றார் கூடுதல் பாதுகாப்பிற்கு வந்த போராளி. உண்மைதான். வழியெங்கும், மக்கள் மிகவும் உணர்வோடும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் ஈடுபாட்டோடும் எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் அமைதியோடும் கட்டுப்பாட்டோடும் தாங்கள் மிகவும் நேசிக்கும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். மக்களின் விடுதலையை மட்டுமே நேசிகின்ற ஒரு தலைவனை மக்கள் எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண்பதற்கும் உணர்வதற்கும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு அது. அவர் பிறந்த நாளை அவர் ஒருபோதும் கொண்டாடியதில்லை. தமிழீழ மண்ணில் அவர் பிறந்தநாள் மக்களால் கொண்டாடப்பட்டது. அடுத்த நாள் மாவீரர் நாள். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டேன். என்னுடைய முந்தைய பல பயணங்களில் பெரும்பாலும் அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கும் சென்றிருக்கிறேன். அவற்றில் விசுவமடு துயிலுமில்லத்திற்கும் கோப்பாய் துயிலுமில்லத்திற்கும் அதிக முறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எதோ இனம் புரியாத உணர்வும் அமைதியும் எழுச்சியும் மனதில் மட்டுமல்ல உடலிலும் ஏற்படும். மாவீரர் துயிலும் இல்லத்தில் சமாதி ஒருபுறமும், நடு கற்கள் ஒரு புறமுமாக வைத்திருக்கிறார்கள். சமாதி என்பது உடல்கள் விதைக்கப்பட்டது. நடுகற்கள் என்பது உடல் கிடைக்காதவர்களுக்கு நடுவது. இரண்டிலுமே அவர்களுடைய இயற்பெயர், இயக்கப் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், எந்த சமரில் எந்த தேதியில் வீரச் சாவு என்பது உட்பட அனைத்து விபரங்களும் கல்வெட்டில் பதியப்பட்டிருக்கும். மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைப்போடு கட்டமைக்கப்பட்டிருக்கும். துயிலுமில்லங்கள் அளவில் சிறியது பெரியது என்று வேறுபடுமே தவிர வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான தோற்றப் பொழிவைக் கொண்டிருக்கும். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் காலையிலிருந்தே மாவீரர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சகப் போராளிகள் எனப் பலரும் வருகை தந்து அவரவர்களின் மாவீரர் சொந்தங்களுக்கு பூமாலையிட்டு கண்ணீரோடு வீர வணக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து கட்டிப் பிடித்துக் கதறியழும் காட்சி கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைப்பதாக இருந்தது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மன உணர்வை அன்று நான் பெற்றேன். தலைவர் பிரபாகரன் அவர்களின் பதிவுசெய்யப் பட்ட உரை ஒலிபரப்பப்பட்டு முடிந்து சரியாக 06.05 மணிக்கு மணி ஒலிக்கும். குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவிற்கு துயிலுமில்லமே அமைதியில் மூழ்கியது. 06.06 மணிக்கு மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 06.07 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்ட அதேநேரத்தில் பெற்றோர்கள், போராளிகள், நண்பர்கள், உறவினர்கள், மாவீரர்களின் கல்லறைகளில் சுடர் ஏற்றினார்கள். அந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக ஏற்றப்பட்ட ஆயிரக்கணக்கான சுடர்களோடு நான் ஏற்றிய சுடரும் ஒளிர்ந்தது. சுடறேற்றும் சமநேரத்தில்.. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! என்ற மாவீரர் துயிலுமில்ல உறுதிப் பாடல் ஒலித்தது. அது வலியைக் கடந்து வலிமையையும் உறுதியையும் தருகின்ற உணர்வை விதைத்தது. நிகழ்வு முடிந்து துயிலுமில்லத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு துயிலுமில்ல பகுதியில் வைத்து, ஆலய நிர்வாகத்தினர், விளையாட்டுக் கழகங்கள், பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் போன்ற மக்கள் அமைப்புகள் சூடான தேநீர், காபி, சிற்றுண்டிகள் வழங்கினார்கள். மாவீரர் நாளிலும் தலைவர் அண்ணன் பிரபாகரன் பிறந்த நாளிலும் தமிழகத்தில் இருந்ததற்கும், புலத்தில் இருந்ததற்கும், களத்தில் நின்றதற்கும் நிறைய வேறுபாட்டை என்னால் உணர முடிந்தது. https://www.ilakku.org/மாவீரர்-நாளும்-தலைவர்-பி/
  12. வேலுபிள்ளை பெத்த பிள்ளை எங்க மகராசன் அது யார் அழுகையோ காலையிலே அதிகாலையிலே
  13. பதுங்குகுழி நீ உறங்குமிடம்… நவம்பர் 25, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து பதுங்குகுழி நீ உறங்குமிடம்… தலை நிமிரமுடியாமல் எதிரி ஏவிய எறிகணைகளால் காடு அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. ஒன்று வெடித்த நொடிப் பொழுதுக்குள் அடுத்தது, அடுத்தது என இடைவிடாதபடி சில ஒரே இடத்திலும் சில தூரப்போயும் வெடித்துச் சிதறின. பச்சைமரங்கள் வெம்மையுடன் அவிந்து கருகிய மணம் அப்பிரதேசமெங்கும் நிறைந்தது. பசுமையாகப் படர்;ந்திருந்த புற்கள் கருகியும், கருகிய புற்களின் மேல் சுழலாய் எழுந்த புகை மண்டலத்தின் கரிபடர்ந்தும் அவ்விடம் சுடுகாடுபோலக் கிடந்தது. முறிந்த மரங்கள் ஒரு புறம். எறிகணைத் துண்டுகளாற் குத்திக் கிழிக்கப்பட்ட பச்சை மரங்கள் இன்னொரு புறமாக அவ்விடம் கொடூரக் காட்சி ஒன்றின் உச்சநிலைக்குச் சாட்சியாய் விளங்கியது. மண் மூட்டைகள் கொண்டு மூடப்பட்ட பதுங்கு குழிகளின் மேல் அதன் அருகில் வெடித்த எறிகணைகள் மண்வாரிக் கொட்டியிருந்தன. சில நாட்களுக்கு முன் அவ்விடத்தில் பெரியதொரு சண்டை நடந்ததற்கான அடையாளங்களாக வெற்று ரவைக்கோதுகளும், எறிகணைகள் வீழ்ந்து குழி தோண்டிய பள்ளங்களும், இரத்தக்கறை படிந்து காய்ந்துபோன சுவடுகளும் அவ்விடத்தின் அசாதாரணமான பயங்கர நிலையினைக் காட்டியது. தாறுமாறாய் முறிந்து சரிந்தபடி கிடக்கும் பச்சை மரங்களைப் பார்க்கும் போது ஆரபிக்கு மிகுந்த கவலையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வளங்கள், வயல்கள், பூத்துக் குலுங்கி காய் பிஞ்சாய் இருக்கின்ற தோட்டங்கள் என்பனவற்றையெல்லாம் எதிரி சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்ற அவலத்தைக் காணும்போது ஆரபிக்கு மனதைப் பிசைந்தது. வன்னி மண்ணின் ஆழ வேரோடிய காட்டுமரங்கள் பாதை நீளமும் குடைபிடிக்கும். அதற்குள்ளால் எப்பக்கமும் எதிரி ஊடுருவுவான் என்று கண்கொத்துப் பாம்பாய் காவலிருந்து இரவின் நீண்ட பொழுதுகளில் அவர்கள் விழிகள் சிவந்து கொள்ளும். பொழுது மங்கும் போது ஓயாமல் சிணுங்கும் நுளம்புகளை விரட்டினாலும், சுற்றிச் சுற்றி வந்து மாயவித்தை காட்டி ஊசியாகக் குத்தும் அவைகளிடமிருந்து தப்பிச் சொற்ப நேரம் நித்திரைக்காகப் போராடி, அரைகுறைத் தூக்கத்தில் விழித்து, தலைமாட்டில் வைத்திருந்த துப்பாக்கியைத் தடவிச் சரிபார்த்து…. அந்தக் கணங்களிலெல்லாம் அவர்களின், ‘அவள்’ அவர்களுடன் இருந்தாள். பதுங்குகுழிக்குள் மழை வெள்ளம் நிரம்பியிருந்தது. ‘க்ளக், க்ளக்’ என்றவாறு தவளைகளும் பேத்தைகளும் இன்னும் பெயர் தெரியாத பூச்சிகளும் மிதந்து சிக்குண்டு வந்து முழுங்காலுக்கு மேலாக வெள்ளம் நிறைந்தபோதும், அந்த நாட்களில் ‘அவள்’ அவர்களுடன் தான் இருந்தாள். எல்லோருக்கும் விருப்பமுடைய ஒருத்தியாக இருந்தாள். “கலவாய்க்குருவி” என்ற அவர்கள் அவளுக்குப் பொருத்தமாகவே பெயரையும் வைத்திருந்தனர். எந்தநேரமும் ஓயாமல் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாள். அமைதியாக, எதுவித ஆரவாரங்களும் காட்டாது இருக்கவேண்டிய நேரங்களில் அவள் தனது சிரிப்பினையும், கதைக்கவேண்டிய உதடுகள் வரை வருகின்ற வார்த்தைகளையும் அடக்குவதற்குப் படுகின்ற பாட்டை நினைக்க அவர்களுக்கு அடங்காத சிரிப்பு வரும். கைகளால் வாயைப் பொத்திச் சிரிப்பை அடக்கி, மூச்சுமுட்டி நிற்கையில் சிரிப்பில் கண்களில் நீர் முட்டும். வியர்வை வழியப் பதுங்குகுழி வெட்டி மண்மூட்டை அடுக்கி ஓயாத வேலையிலும் வருகின்ற களைப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். காணுகின்ற, பேசுகின்ற நேரமெல்லாம் அவள் ஓயாமல் சிரித்தபடி மற்றவர்களையும் சிரிக்க வைத்தாள். அவளுக்குள் எப்படித்தான் சிரிக்க வைக்கக்கூடிய கதைகள் குறையாமல் ஏராளமாக இருந்தனவோ? அந்தக் கணங்களிலெல்லாம் ஓயாமல் ஒவ்வொரு நாட்களும் எறிகணைகள வந்து வீழ்;ந்தன. எதிரி முன்னேறுவதும் பின்வாங்குவதும் அவர்கள் முற்றுகையிட்டுத் தாக்குவதுமாக சண்டைகள் நடைபெற்றன. அவள் இருக்கும் போது எதுவுமே கடினமாகத் தெரிவதில்லை. எங்கேயோ எல்லாம் திரிந்து, எதிரிக்கு அண்மையாகவுள்ள இடங்களுக்கெல்லாம் சென்று மணம் பிடித்து, மாங்காய் பிடுங்கி வருவாள், இன்னொருநாள் மரவள்ளிக் கிழங்கு கிண்டி வேர்களில் முற்றிய கிழங்குகள் தொங்க குலைபோலக் கொண்டு வந்து போட்டு வெட்டி அவிப்பாள். எல்லோரும் அடித்துப் பறித்து உண்டு மகிழ்ந்த அந்த நிமிடங்களிலெல்லாம் எதிரி ஏவிய எறிகணைகள் இடைக்கிடை வந்து விழுந்தன. மரவள்ளித் தோட்டங்களும், கத்திரிப் பாத்திகளும் கருகிப்போயின. யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை திறப்புக்கான போர்க்களம் கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலுமே ஜெயசிக்குறு பற்றிய விமர்சனங்களை உண்டு பண்ணியிருந்தது. அது இரண்டாம்கட்ட இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள், அவர்களெல்லோரும் ஆயத்தமாகவே இருந்தார்கள். அமாவாசை நாட்களும், நிலவு நாட்களும் தேய்பிறை வளர்பிறை நாட்களும் மாறி மாறி வந்தன. அது ஒரு முன்நிலவு நாளாகத்தான் இருக்க வேண்டும். குடை பிடிக்கும் மரங்களின் கீழே இலைப் பொட்டுக்களாக நிலவுக் கதிர்கள் ஊடுருவின. காட்டில் எறித்த நிலவு அழகாக இருந்தது. ஆங்காங்கே நீர் தேங்கிய குட்டைகளிலும் நீர் நிரம்பிய பதுங்குகுழிகளிலும் நிலவின் விம்பம் சலனப்பட்டுத் தெரிந்தது. அவர்களின் கலவாய்க்குருவி காவற்கடமை முடித்துவிட்டு வந்துவிட்டாள். “இனிப் பாட்டும் கூத்தும்தான்”. தோழி ஒருத்தி கூறினாள். காவற்கடமை நேரங்களில் எப்படித் தான் வாயை அடக்கி வைத்திருந்தாளோ? அது அவளுக்குத்தான் வெளிச்சம். நிலவு இரவின் அமைதியைக் கலைத்தது. அவள் பாடல் மெல்லக் கலகலப்பை ஊட்டியது. போராட்டப் பாடல்களுள் அவளுக்குத் துள்ளல் இசையில் அமைந்த பாடல்கள் தான் பிடிக்கும். அவை அவளது வாயில் சுலபமாக நுழைந்து கையின் தாளத்துக்கமைய ஒலிக்கும். இடையிடையே ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாளர் ஒலிபரப்புவதுபோல் தானே ஒலிபரப்புச் செய்து, வாயினால் வாத்திய இசைபோட்டு அவர்களைச் சிரிக்கவைத்த நாட்களும், அந்த நாட்களிலும் முன்நிலவின் குளிர்ந்த ஒளிக்கதிர்கள் பொட்டுப் பொட்டாய் தரையைத் தொட்டன. அது நெருப்பள்ளித் தின்ற களமாக இருந்தது. அந்தப் பின்னிரவில் எதிரிவிட்ட தேடொளி ஒளிப்பந்தாக உயரத்தோன்றி கீழே வந்து அந்தக் கரிய இரவையும் பகலாக்கியது. கருமை நிழலாகக் குவிந்திருந்த காடுகள் ஒளிபெற்று மீண்டும் பழைய நிலைக்கு வந்தன. காட்டில் வெளியே உலாவிய விலங்குகள் பற்றைகளுக்குள் ஓடி ஒளிந்தன. அவற்றினது கண்கள் வெளிச்சம்பட்டு நெருப்புக் கோளங்களாக மினுமினுத்தன. அதனைத் தொடர்ந்து அவ்விடம் எறிகணையால் அதிர்ந்தது. மண்துகள்கள் அள்ளுண்டு சிதறின. எறிகணைகள் அடுக்கடுக்காய் வீழ்ந்து குழிகளைத் தோண்டின. அடுத்த நாள் அசாதாரண நிலமையாகத் தான் இருக்கப் போகிறதோ! அவைகள் எச்சரிக்கை ஒலிகளாகப்பட்டன. “நாளைக்கு அவன் முன்னேறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கு. எல்லோரும் கவனமாய்த் தயாராய் இருங்கோ”. கட்டளைகள் வந்தன. நிலம் விடிகையிலேயே வேவு விமானம் சுற்றத் தொடங்கியது. “முன்னுக்கு முழுவியளம் மாதிரி உது வந்திட்டுது. எங்கட பிளான் எல்லாம் பிழைச்சுப்போட்டுது”. கலவாய்க் குருவி புறுபுறுத்தாள். சில நாட்களுக்குப் பின்னர் நிலமை நன்றாக இருந்தமையால் நேற்றுப் பின்னேரம் பின்னுக்குச் சென்று அவளும் இன்னும் சிலரும் குளித்துவிட்டு வந்திருந்தனர். அவள் அணிந்திருந்த புதிய சீருடை அவளுக்கு அழகாகவே இருந்தது. உடுப்புத் தனக்கு நன்றாக அளவாக இருப்பதாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டாள். உடுப்பைக் கசங்காமல் காப்பதற்குப் பெரும் பிரயத்தனப்பட்டாள். உடுப்பு அழுக்குப் படியாதவாறு பதுங்குகுழிக்குள் அவதானமாகவே சென்றாள். அவர்களுக்கு அவளைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. அவளது கலகலப்பும் பகிடிகளும் வழமைபோலவே இருந்தன. ஆனால் வெளியில் சத்தம் போட்டு ஓடித் திரிகின்ற நிலமையில் அப்போதைய சூழ்நிலை இருக்கவில்லை. வேவு விமானத்தைத் தொடர்ந்து, எந்தப் பக்கமாக வந்து சேர்ந்தது என்று யோசிக்க முன்னரே “கிபிர்” குண்டுகளைப் போடத் தொடங்கியது. எல்லோரும் நிலையெடுத்தவாறு இருந்தனர். பலத்த அதிர்வுடன் புகைமண்டலம் மேலேழுந்து, எந்த இடம், எந்தத் திசை எனத் தெரியாதவாறு இடத்தை மறைத்தது. இது, எதிரி முன்னேறப் போகிறான் என்ற அபாய அறிவிப்பை உணர்த்தியது. எதிரியின் பீரங்கிகள் இரையத் தொடங்கின. அவை பேரிரைச்சலாக ஊழிக்காற்றின் ஊளையாக நெருங்கின. எல்லோரும் தயார் நிலையில் நின்றனர். ஆயுதங்கள் பேசத் தொடங்கின. அவ்விடம் ஓர்மமும் வேகமுமே முன்னின்றன. தொலைத் தொடர்புக் கருவிகள் இரையத் தொடங்கின. கட்டளைகள் கணத்துக்குக் கணம் வந்து கொண்டிருந்தன. “ எங்கட குருவி எங்கே? அட அங்க தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருக்குது” அவளது கனரக ஆயுதம் முழங்கிக் கொண்டிருந்தது. எதிரியின் கனரக ஆயுதங்கள் நெருப்பு மழை பொழிந்தன. ஏட்டிக்குப் போட்டியாய் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. ஒன்றுக்குப் பத்தாக பத்துக்கு நூறாகப் பல்கிப் பெருகின. ஒருபுறம் கிபீர் விமானங்கள் இலக்கின்றி எழுந்தமானத்துக்கு குண்டுகளைத் தள்ளிச் சென்றன. காடுகளின் நீண்ட இடைவெளிக்கு ஒருவராக, இருவராக நிலையெடுத்து நடந்த சண்டை உக்கிரமானதாக, தலைநிமிர்த்த முடியாததாக இருந்தது. மோட்டார் எறிகணை ஒன்று அவளது காலைப் பதம்பார்த்துவிட்டது. ஆ! அவர்களின் கலவாய்க் குருவியின் ஒரு கால் சிதைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இரத்தம் ஆறாக ஓடியது. அவளுக்குப் பக்கத்தில் நின்றவள் தொடர்ந்து சண்டை பிடித்துக்கொண்டேயிருந்தாள். சற்று தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தபோது, சடார் என்று வந்து வீழ்ந்த எறிணை ஒன்றினால் தோழி வீழ்ந்தாள். எரிகுண்டு பட்டதோ…? ஒரு கைப்பிரதேசம் கருகி அப்படியே அவ்விடத்திலேயே கிடந்தாள். உந்த நிலையிலும் அவ்விடத்துக் காட்டுப் பாதை வழியாக இராணுவம் வரலாம். ஒருபக்கம் அவளுக்குக் கால் வலித்தது. அது தொங்கிக்கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்தவாறே அவளது தோழி வீழ்ந்து கிடக்கும் இடத்துக்கு வந்தாள். தொங்கிக் கொண்டிருந்ந்த கால் மிகுந்த வேதனையைக் கொடுத்தது. தனது கோல்சருக்குள் அவள் எப்போதுமே கத்தி வைத்திருப்பாள். மாங்காய் மற்றும் மரக்கறிகள், இளநீர் வெட்டுவதற்குப் பயன்படுத்தும் அவளது கத்தி அது. இப்போது ஒரு கணம் நிதானித்து மறுகணம் தொங்கிக் கொண்டிருந்த காலைத் துண்டாக வெட்டினாள். ஒழுகிய இரத்தததைக் கட்டுப்படுத்த சாரத்தைக் கிழித்துக் கட்டுப்போட்டாள். “எப்படி? என்ர கால் வெள்ளையாய் இருக்குது” என்று தோழிக்குக் காட்ட, தோழி “கறுப்புக் காலில் குதிமட்டும் ஜொலிக்குது” என்று கேலிபண்ண. அவளது காலிலே மண் பூச தான் ஓடிக்கலைத்தது ஒரு கணம் குருவியின் மனக்கண்முன் வந்து மறைந்தது. மறுபடி ஊர்ந்தபடி கிட்டவந்து தோழியின் உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ஒரு கையால் அவளை இழுத்தபடியும் மறுகையில் துப்பாக்கியுடனும் ஊரத்தொடங்கினாள். தோழியின் உடல் மிகுந்த கனமாய் இருந்தது அவளுக்கு நிழல் பிடிக்கும் காடுகள் ஊடே முட்கள் சிராய்த்தன. இன்னும் நிறையத் தூரம் போகவேண்டும். கால்கள் வலித்தன. பசியால் எழுந்த களைப்பு இன்னொருபுறமாக வாட்டியது. அடியடியாக ஊர்ந்துகொண்டே இருந்தாள். ஊர்ந்து ஊர்ந்து போய் அவர்களின் எல்லையில் தோழியின் உடலைச் சேர்ந்தபின், குருவியின் முகத்தில் தோன்றிய சிரிப்பும் வெற்றிப் பெருமிதமும் மூன்று நாட்கள் வரை அப்படியே இருந்தன. அவளது இறுதிக் கணப்பொழுதுகளிலும் அதுவே நிரந்தரமாக…. அழியாத சிரிப்பாக…. இப்போது அந்த இடம் நெருப்பெரிந்த நிலமாக, நினைவகலாத இடமாக இருந்தது. இந்த வெற்று ரவைக்கோதுகள் குருவியினது துப்பாக்கி, எதிரிக்கு எதிராக நின்றபோது துப்பியவையாக இருக்கவேண்டும் என்று ஆரபி நினைத்தாள். அப்பகுதியின் பதுங்குகுழி மழை வெள்ளத்தில் நிறைந்திருந்தது. சேறும் அதற்குள் நின்று கத்தும் தவளைகளும் அந்த இடத்துக்கே நிரந்தரமானவை. ஆரபியின் கைகள் அந்தப் பதுங்குகுழி மண்ணை ஆசையோடு துழாவின. சில கடதாசித் துண்டுகள் பிய்ந்து வந்தன. என்ன இது? பிசுபிசுத்தபடி ஒரு பாண் துண்டு. இரண்டு மூன்றாய் பிய்ந்து நனைந்தவாறிருந்தது. அது அவர்களுக்கு இறுதியாக வந்த உணவாகத்தான் இருக்கவேண்டும். கடைசி நாள் கறிப்பாண் வந்ததாக ஆரபிக்கு ஞாபகம். அதேதான். குருவி அரைகுறையில் சாப்பிட்ட நிலையில் சண்டை பிடித்திருப்பாள். அல்லது எல்லாம் முடிந்து ஓய்ந்த பின்னர் வந்து சாப்பிடலாம் என்று வைத்திருப்பாளோ? இப்போது மழைத்துளிகள் பெரிதாக விழத்தொடங்கின. மழை நீர் கரைந்து, மேலும் மேலும் சிவப்பாகி, பதுங்கு குழியின் நீர் மட்டம் உயர்ந்தது. தவளைகளும் தேரைகளும் ‘க்ளக் க்ளக்’ என்றபடி துள்ளித் திரிந்து விழுந்தன. அது அவர்களின் கலவாய்க் குருவியின் சிரிப்பொலிபோல ஆரபிக்குத் தோன்றியது. காட்டுமரங்களின் இலைகள், மெல்ல மெல்ல விழும் மழை நீர் பட்டுச் சிலிர்த்தன. நன்றி: களத்தில் இதழ் (22.04.1998). https://thesakkatru.com/the-bunker-is-where-you-sleep/
  14. வானம் திறந்து வெண் புறா போல இறங்கி வரவேண்டும். விண்மீன் முடியென அணிந்தவளே எங்கள் மரியே நீ வாழ்க விண்ணக மண்ணக காவலியே எங்கள் மாதா நீ வாழ்க - (2) அம்மா நீ வாழ்க அமலியே நீ வாழ்க அடைக்கலமே வாழ்க - எங்கள் ஆறுதலே வாழ்க - (2) விண்மீன்..... 1. ஏழை மகனாம் இயேசுவுக்கு நீ எண்ணும் எழுத்தும் போதித்தாய் எல்லாம் அறிந்த இறைவனுக்கே உறைவிடம் ஆனவளே - (2) பிள்ளைகள் எம்மை கண்பாரும் அறிவில் கரை சேரும் - (2) கண்மணிபோல் காத்திடம்மா வழித்துணையும் நீயம்மா 2. வேளை நகரில் அமர்ந்தவளே நீ வேண்டும் வரங்கள் அருள்வாயே தேவையில் தேடி வருவோரை தேற்றிடும் தாரகையே - (2) கருணை மழையே கார்முகிலே கனிவே கனியமுதே - 2 கரம்பிடித்தே எமை நடத்தும் ஒளியின் வழியே நீயம்மா - 2
  15. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  16. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் மதீனா மணல்வெளியில்.🙏 அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே
  17. நித்திய வாழ்வினில் நித்திரை நெருப்போடு என்னடா விளையாட்டு ஒரு கூட்டு கிளியாக ஆணையிறவுக்கு சேலைகள் கட்டி
  18. முருகனே ஜக மாயை - திருப்புகழ் முருகன் சுப்ரபாதம் லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு லக்ஷ்மி வாராய் என் இல்லமே ஓம் நமோ நாராயண சிறந்த திருப்பதி பெருமாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.