Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. வெளிவிவகாரக் கொள்கை கட்சிகளுக்கானதல்ல. ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதனை உருவாக்குவது பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும் இலங்கைத்தீவு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறி விட்டது. அரசைக் கையாள்வது தான் பேரரசுகளின் முதல் தெரிவாக இருக்கும். இந்தியா உட்பட. முதலில் இலங்கை அரசாங்கத்தைக் கையாளும், அப்படி அரசாங்கத்தை கையாள முடியாமல் போகும் போது தமிழ்மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு இலங்கை அரசாங்கத்தைப் பணிய வைக்கும். இதைத்தான் இலங்கை இந்திய உடன்படிக்கை வரையிலும் இந்தியா செய்தது. திரும்பியும் அப்படியொரு நிலை தான் வரும். அரசைக் கையாள முடியாமல் போகும் போது அவர்கள் தமிழ்மக்களைக் கையாள்வார்கள். இந்த இடத்தில் தமிழ்மக்களை அவர்கள் கையாள முன் தமிழ் மக்கள் பொருத்தமான ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்பை உருவாக்க முன்வர வேண்டும். அப்படி உருவாக்கினால் தான் தமிழ்மக்கள் எப்படி புத்திசாலித்தனமாக வெளித்தரப்பைக் கையாளலாம் என யோசிக்கலாம். வெளிவிவகாரக் கொள்கை கட்சிகளுக்கானதல்ல. ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதனை உருவாக்குவது பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். அவர் மேலும் தெரிவித்த பல விடயங்கள் காணொளியில் வருமாறு,
  2. காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி காய்கனி துய்த்தும் காயமொ றுத்தும் காசினி முற்றும் திரியாதே சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பரஞான தீப விளக்கம் காண எனக்குன் சீதள பத்மம் தருவாயே பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரம் தருவீரா பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா சூரர் மிகக்கொண் டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே பன்னிரு கண்களில்
  3. அருட்பெரும் சுடரே தனிப்பெரும் கருணையே அமலோற்பவியே தாயே நீயே
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  5. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 கஸீதா முஹம்மதிய்யா திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து.
  6. மாவீரர் நாள்: ஈழத்தமிழர் பண்பாட்டு வழிபாட்டு உரிமைகளதும்; ஈழத்தேசிய அடையாளத்தினதும் நாள்- சூ.யோ. பற்றிமாகரன் 123 Views தேசியம் (Nationalism) என்பது ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவின் மகிமையை உணர்ந்து அந்த ஆன்மாவால் மக்கள் இயங்குகின்ற பொழுது அவர்கள் தேசஇனமாக (Nation) உயர்ச்சி காண்பர். இந்த தேசியம் என்னும் ஆன்மாவை உருவாக்குகின்றனவாக நேற்றும் இன்றும் திகழ்கிறது. நேற்று என்பது உயர்வான நினைவுகள் ஊடாக உயர்வான பாரம்பரியம் ஒன்றிக்கு மக்களைச் சொந்தக்காரர்கள் ஆக்குகின்ற பொழுது, அந்த உயர்வான பாரம்பரியத்தைப் பேணிடும் பொதுமை உணர்வு காரணமாக அம்மக்கள் இன்றும், என்றும் கூடிவாழும் விருப்புடையவர்களாக மாறுவர். தங்களுடைய முன்னோர்களின் உயிர்த் தியாகங்களினதும், உழைப்பினதும் தொடர்ச்சியாகத் தாங்கள் உள்ளதாகக் கருதி, அந்தத் தியாகத்தின் பலனை உழைப்பின் பெறுதியைத் தாங்கள் தொடர்ந்தும் போற்ற, முன்னெடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு என்கிற தேசியத்தால் தனியாட்கள் தங்களை மக்கள் (People) என்னும் தொகுதியாகப் பரிணாமம் அடையச் செய்கின்றனர். இந்தத் தேசிய உணர்வால் இணைந்த மக்கள், தாம் அந்தத் தேசியத்தைப் பேணி வளர்க்க உறுதி பூணுகின்ற பொழுது, அது அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்கிற; அவர்களில் இருந்து பிரிக்க இயலாத தன்னாட்சி (Self – determination) என்னும் அடிப்படை மக்கள் உரிமையாகித்; தேசத்தை அவர்களே கட்டியெழுப்பும் செயல்முறையாக (Nation building process) இயல்பாகி, அம்மக்கள் தேசமக்களாகப் (Nation) பரிணாமமடைகின்றனர். இவ்வாறு மக்களைத் தேசியத்தால் இணைய வைத்து, மண்ணையும், மக்களையும் காக்கும் உறுதியுள்ளவர்களாக மாற்றும் ஆற்றலாளர் தேசியத் தலைவராவார். ஆகத் தேசியத் தலைவர் மக்களின் ஆன்மாவாக இலங்குபவர். தேசியத் தலைவரின் தோற்றம் என்பது தேசத்தின் விழிப்பின் மானிடக் குறியீடு. ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் தேசியத்தலைவர் என்ற போற்றுதற்குரியவராக 26.11.1954இல் ஈழமண்ணில் மலர்ந்து 1972 முதல் 2009 வரை 37 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்களின் தேசிய சுதந்திரம் என்பதையே தனது இலட்சிய வேட்கையாகவும், தணியாத ஆன்மீகத் தாகமாகவும் கொண்ட விடுதலைப் போராட்டத்தை உருப்பெறவைத்து அந்த விடுதலைப் போராட்டத்தையே தனது வாழ்க்கையாகவும், தனது வாழ்க்கையையே விடுதலைப் போராட்டமாகவும் மாற்றிய தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழமக்களின் உரிமைகளை அடைய வைக்கும் விடுதலைப் பேரொளியாக ஈழமக்கள் வரலாற்றில் விளங்குகின்றார். இஸ்ரேலிய மக்களுடைய வரலாற்றில் “காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” என கிறிஸ்துவின் வருகையைப் பற்றி எசயா இறைவாக்கினர் கிறிஸ்து பிறப்பதற்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறிய வார்த்தைகள் ஈழமக்கள் வரலாற்றிலும் மெய்மையானது. கடவுள் மனிதன் வாழும் வாழ்வின் வளி வெளிப்படும் பேராற்றலாக மனித இல்வாழ்க்கை வழி உணரப்படுமொன்றாக அல்லாது கல்லைக் கும்பிட்டு அடையும்; பொருள் அல்ல என்கிற தமிழர் ஆன்மீகத்தை வள்ளுவர் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டார். இத்தகைய தெய்வமாதலுக்காக வாழும் முயற்சியே தவம் என்பதை வள்ளுவர் “தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும்” என எடுத்தியம்பினர். “உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு” என ஏற்பட்டுள்ள துன்பங்களை மாற்றவும், உயிர்கள் துன்பமுறாதவாறு தடுப்பதும் ஆகிய மனித முயற்சியே தவம் எனவும் இந்தத் தவமுடையோரே தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்றும், இவர்களே தம்நிலையில் தாழா பெருவாழ்வு வாழ்ந்து தெய்வத்தால் தாழ்வு வந்த விடத்தில் உயிர்வாழா மானமுடைமையால் மக்களுக்கு வழிகாட்டும் ஒளியாக மாறுவார் என்பதும் வள்ளுவ சிந்தனை. இந்த ஒளி வாழ்வுடையோரோ “இளிவரின் வாழாத மானமுடையார் – ஒளி தொழுதேத்து முலகு” என உலகினரால் வணங்கப்படும் ஒளியாவார், அவ் ஒளிக்குரியோர் திருவுருவே தெய்வ உருவாகக் கொண்டாடப்படும் என அழகாகத் தமிழரின் முதல் நூலாக இன்று கிடைக்கும்; எண்ணாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்காப்பியமும் எடுத்துரைக்கிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம் 63ஆவது நூற்பாவாகவும் புறத்திணை இயல் 5ஆவது நூற்பாவாகவும் உள்ள வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” எனத் தொடங்கும் நூற்பாவின் இறுதியில் வரும், “காட்சி கல்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று” என்னும் வரிகள் தமிழரின் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து வரும் தங்கள் மாவீரர்களுக்கு நடுகல் நட்டு வாழ்த்திப் போற்றும் தமிழர் பண்பாட்டைப் பதிவு செய்துள்ளது. இங்கு காட்சி என்பது போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் புகழைக் கல்லில் நிலைத்து நிற்குமாறு எழுதி வழிபடுவதற்காக, அதற்கு ஏற்புடைய நடுகல்லைக் கண்ணில் தேடிக் காணுதல் காட்சியாகும். இது கல்கோளின் முதல் நிலையாகும். அவ்வாறு தேடிக்கண்ட கல்லினை மறவர்கள் தம்முயற்சியால் எடுத்து வருதல் கல்கோள் எனப்படும். இது கல்கோளின் இரண்டாவது நிலையாக உள்ளது. கண்டு கொண்டு வந்த கல்லை நீரினால் மாசு கழுவித் தூய்மை செய்தல் நீர்ப்படை என்னும் மூன்றாவது கல்கோள் ஆகிறது. அடுத்து கழுவித் தூய்மை செய்த கல்லை வேந்தன் முன்னிலையில் நட்டுவைத்தல் நடுகல் என்னும் சிறப்புப் பெயரைப் பெறுகிறது. இது கல்கோளின் நாலாவது நிலையாகிறது. அவ்வாறு நட்ட கல்லுக்குக் கோயில் எடுத்துச் சிறப்பித்தல் ‘பெரும்படை’ எனப்பட்டது. இது ஐந்தாவது கல்கோள் நிலையாகும். இறுதியாக ஆறாவது கல்கோள் நிலையில் அந்த நடுகல்லை வணங்கி வாழ்த்தி வழிபடுதல் ‘வாழ்த்தல்’ என அழைக்கப்பட்டது. இதன்வழி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவரை வானுறையும் தெய்வமாக வைத்து வழிபடும் வழிபாட்டுரிமையாக மாவீரர் துயிலக நடுகல் முறைமை அமைகிறது. இந்த தமிழரின் தொன்மையும் தொடர்ச்சியுமான வழிபாட்டு வளர்ச்சியே கந்தழி வழிபாடெனவும் சிவலிங்க வழிபாடெனவும் சைவசமய வழிபாடாகியது என்பதும் ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது. இந்தத் தமிழர் பண்பாட்டு வழி வந்த ஈழமக்களின் சமகால வீர்களைப் போற்றும் ‘மாவீரர் நாள்’ அவர்களின் பண்பாட்டுச் சுதந்திரமாக மட்டுமல்ல வழிபாட்டு உரிமையாகவும் உள்ளதால் இலங்கையின் அரசியலமைப்புக்கு கீழும் அனைத்துலகச் சட்டங்கள், வழமைகள், மரபுகள், ஒழுக்கலாறுகளின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்களின் பிரிக்கப்பட முடியாத மனித உரிமையாகவே போற்றப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தப் பண்பாடு பேணும் வழிபாடு போற்றும் மரபே இன்று ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது வீரச்சாவடைந்த மாவீரர் சங்கரின் நினைவேந்தல் நாளாகிய கார்த்திகை 27ஆம் திகதியை ஒளியேற்றி ஈழமண்ணையே ஒளிப்பிரபையாக ஒளிரவைத்தும், ஆலய மணிகளை ஒலித்து, ஈழத்து வானை மாவீர்கள் புகழ்பாடும் தங்கள் வாழ்த்தொலியுடன் சேர்த்துப் பரவும் வீரமுழக்கமாக மாற்றியும், ஈழமக்களினதும், ஈழமண்ணினதும் விடுதலைக்காகத் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர் வணக்க நாளாக ஈழத்தாயகத்தின் தேசிய நினைவெழுச்சி நாளாக ஈழத்தமிழர்களைக் கொண்டாடச் செய்கிறது. உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும் தமிழகத்திலும் கூட இந்தக் கார்த்திகை 27 இனமானத் தமிழர்களால் தேசிய நினைவெழுச்சி நாளாகவும் மாவீரரைப் போற்றும் மாவீரர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இது வலிசுமந்த நினைவுகளைத் தரும் நாளாக இருந்தாலும் அதற்கும் அப்பால் உறுதியின் உறைவிடமாகிய மாவீரர் துயிலகங்களில் தமிழ் வாழ, தமிழர் வாழ உறுதி எடுக்கும் ஈழமக்கள் உரிமைகள் மீட்புக்கான புத்தெழுச்சி நாளாகவும் அமைகிறது. ஈழத்தமிழர்கள் தேசமாக எழுந்ததையும் – உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தேசங்கடந்துறை ஈழமக்களைத் தங்கள் ஈழத்தாயகத்துடன் பெருமைப்படுத்தும் நாளாகவும் திகழ்கிறது. இந்த தன் இனத்தின் மானமனிதரைக் கொண்டாடும் தன்மையைப் பழங்குடித்தன்மைக்கு வீழ்ச்சி வருகின்ற நேரத்திலும் கூட மறவாது கொண்டாடும் பண்பினை “வழங்குவ துள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி – பண்பிற் றலைப்பிரித லின்று” எனக் குடிமைக் கடனாகவே வள்ளுவர் சிறப்பித்துரைப்பதைக் காண்கிறோம். இதனால் மாவீரரைப் போற்றுதல் என்பது ஈழத்திலும் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களிடையிலும் குடிமைக் கடமையாகவும் திகழ்கிறது. இவ்வாறு குடிமைக் கடமையாக மாவீரரைப் போற்றும் பண்பாட்டை முடியாட்சிக் காலம் முதல் இன்று வரை உலக அரசுக்களும், உலக அமைப்புக்களும் மக்கள் உரிமையாகவும் தேசக் கடமையாகவும் கருதுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக 1920 இல் 1ஆம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்களைப் போற்றுவதற்கு பிரித்தானியாவின் 5ஆவது ஜோர்ஜ் மன்னர் தொடக்கி வைத்த பதினோராம் மாதம் பதினோராம் நாள் பதினோராவது மணி பதினோராவது நிமிடம் பிரித்தானியாவிலும் பொதுநலவாய நாடுகளிலும் இருநிமிட அமைதி வணக்கம் செய்யும் முறைமை இன்று வரை தொடர்வது சிறந்த உதாரணமாகிறது. 1ஆம் உலகப் போர்நடந்த புல்வெளிகளில் கொல்லப்பட்டவர் நினைவாக அந்த புல்வெளிகளில் மலரும் சிவப்புநிறப் பொப்பி மலரை கனடியக் கவிஞர் மாவீரர் குறியீடாக்கியது முதல் இன்று வரை சிவப்பு பொப்பி மலர் அணிந்து தங்கள் இதய நன்றியை மக்களும் தலைவர்களும் வெளிப்படுத்திக் கொள்ளும் வழமையும் கார்த்திகை மாதத்தில் தொடர்கிறது.. இவ்வாண்டு இந்த 1ஆவது உலகப் போரில் உயிர்நீத்த மாவீரர்க்கு அமைதி வணக்கம் தெரிவிக்கும் முறைமைக்கு நூற்றாண்டு நிறைவு என்பதனால் பிரித்தானியாவின் மாட்சிமைக்குரிய மகாராணி அவர்கள் தனது முதுவயதையும் கோவிட் -19 தொற்று அச்சத்தையும் பொருட்படுத்தாது, முதற்தடவையாத் தொற்று தாக்காது முகக்கவசம் அணிந்து வெஸ்ட்மினிஸ்டர் குருமட ஆலயத்தில் உள்ள பெயர் தெரியாத மாவீர்கள் துயிலகத்திற்குச் சென்று, அங்கு தான் முடிசூடிய 1952ஆம் ஆண்டு தனக்களிக்கப்பட்ட பூங்கொத்தையொத்த மலர்க்கொத்தை, அந்த மாவீர்கள் துயிலகத்தில் வைத்து, நினைவேந்தல் செய்தமை உலகம் எந்த அளவுக்குத் தன் மாவீர்களைப் போற்றுதலைத் தன் தலையாய கடமையாகக் கொள்கிறது என்பதற்கு மிகச்சிறந்த வெளிப்பாடாக அமைந்தது. இந்த உலகப் பொதுமைக்கேற்பவே தங்கள் மாவீர்களுக்கு ஈழத்தமிழர்கள் கார்த்திகை 27 இல் துயிலகம் சென்று ஒளித்தீபம் ஏற்றித் தொழும் மாவீரர் நாளை ஈழத்தமிழர் தேசியப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் இளையோர்க்கு அவர்களின் ஈழத்தேசியத்தலைவர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தவும் அவர்களின் ஈழத்தமிழர் இனத்துவத்தை நிலைப்படுத்தவும் அவர்கள் உடைய தனித்துவத்தைப் பேணவும் உதவும் மிக முக்கிய நாளாக ஈழத்தமிழர் ‘மாவீரர் நாள்’ வரலாற்றில் தொடரும். https://www.ilakku.org/மாவீரர்-நாள்-ஈழத்தமிழர்/
  7. தாயக கனவுடன் - மாவீரர் நாள் பாடல்... திரான்சி / சேர்ஜி தமிழ்ச்சோலை மாணவர்கள் இணைந்து வழங்கும் நடனம்.. மண்னுள் உறங்கும் வீரர் நினைவை
  8. ஜனனமும் மரணமும் விடுதலைக்காக! நவம்பர் 27, 2020/தேசக்காற்று/தியாகிகள்/0 கருத்து ஜனனமும் மரணமும் விடுதலைக்காக! கார்த்திகை 27 மாவீரர் நாள் எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள். அடக்கி வைத்து, எம்மை இனியும் ஆள முடியாதென்று அந்நியருக்கு அறைகூவல் விடுத்த நாள். ஊயிர் கொடுத்தே உரிமையைப் பெறமுடியும் என்பதை முதற் சாவு மூலம் முரசறைந்த நாள். ஆம்! மாவீரர் நாள் தமிழீழத்தின் தேசிய நாள். சத்தியநாதன் என்ற லெப். சங்கர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் முதற் சாவை இன்றுதான் சந்தித்தான். ஓரு காலத்தில் எதிரி எட்டி எட்டி உதைக்கவும், காலுக்கு முத்தமிட்டுக் கிடந்துத எங்கள் இனம். காலிமுகத் திடலிலும், கச்சேரி வாசலிலும் ஆயுதமற்று அறப்போர் செய்த எங்கள் இனத்தை குண்டாத் தடியாலும், துப்பாக்கிப் பிடியாலும் தாக்கித் தூக்கியெறிந்தது சிங்களப் பேரினவாதம். யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு பேருந்தில் புறப்பட்டால் பத்து இடத்திலாவது தமிழரை இறக்கி ‘நீங்கள் யார்?’ என்று கேட்புத போல அடையாள அட்டை பார்ப்பார்கள். வுரிசையில் நிற்கவைத்து கேள்விகள் கேட்பார்கள். எங்கள் தங்கைகளைத் தடுத்து வைத்து, ‘குண்டு கொண்டு போகின்றாயா?’ என்று இரட்டை அர்த்தத்தில் பரிகசிப்பார்கள். இத்தனையையும் கூனிக்குறுகிப் பொறுத்துக் கொண்டு என்ன செய்வது என்று வழி தெரியாது இருளில் கிடந்துத எங்கள் இனம். கார்த்திகை 26ம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமல் செய்யும் வழி காட்டவென்று வல்வைக் கடற்கரையில் ஒரு பிள்ளை விழி திறந்தது. கார்த்திகை 27ம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்ய இரத்தம் சிந்தாமல், உயிரை விலைகொடுக்காமல் விடிவில்லை என்பதைக்கூறி ஒரு பிள்ளை விழி முடியது. இங்கு ஜனனமும், மரணமும் விடுதலைக்கான விளைபொருட்களாயின. இன்று பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தமிழீழ விடுதலையென்னும் தங்கள் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில், சுதந்திரம் பெறும் நாளில் எங்கள் தலைவன் ஏற்றப் போகும் தேசியக் கொடி காற்றில் அசையும் காட்சியைக் காண்பதற்காக கல்லறைக்குள்ளே கண்மூடிக் காத்திருக்கின்றார்கள். ஓவ்வொரு மாவீரர் நாட்களிலும், மாலைப் பொழுதில் கேட்கும் நாதமணிச் சத்தம், ‘விடுதலை பெற்றுது தமிழீழம்’ என்பதை தங்களுக்கு வந்து சொல்லுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், தங்கள் கல்லறையில் நாங்கள் ஏற்றும் நெய்விளக்குச் சுடரில் தமிழீழத்தின் வரைபடத்தையே கண்டு களிப்படைந்து கொண்டுமிருக்கின்றனர். மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்கள் புதைத்த இடங்களாக நாம் எண்ணக்கூடாது. தமிழீழம் என்று கிடைக்குமென்று ஏங்குபவர்கள் தூங்குமிடங்களாகக் கொள்ளுவோம். அந்தப் புனித இடத்தில் பூக்களை வைப்பது மட்டுமல்ல எங்கள் கடமை. கூப்பிய கரங்களுடன், விழி சொரிவது மட்டும்தான் எங்கள் பணியாகக் கொள்ளல் ஆகாது. தமிழீழத்தைப் பெற்று, மாவீரர்களின் தாளடியில் வைப்பதே நாங்கள் அவர்களுக்குச் செய்யும் வரலாற்றுக் கடமையாகும். அலங்கார வளைவுகள், அந்த பொழுதில் நெய்விளக்குகள், கண்ணீர் மாலைகள் எல்லாம் சம்பிரதாயச் சடங்குகளாக மாறக்கூடாது. அடுத்த மாவீரர்நாள் விடுதலை பெற்ற மண்ணில் என்று நாங்கள் ஒவ்வொருவரும் சபதமேற்றுக் கொள்ளவேண்டும். இதையே இலக்காகக் கொண்டு நாங்கள் நகரத் தொடங்க வேண்டும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நன்றி: சூரியப் புதல்வர்கள் (வருடாந்த சஞ்சிகை 1995). https://thesakkatru.com/birth-and-death-for-liberation/
  9. அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜபமாலை தந்தசற் குருநாதா திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே பெருமாளே . . . பெருமாளே . . . கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி |
  10. இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ. தேவா நான் எதினால் விசேஷித்தவன்
  11. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  12. ஒளியின் கண்ணீரும் கதையின் கதையும்… நவம்பர் 27, 2020/தேசக்காற்று/தியாகிகள்/0 கருத்து கார்த்திகை மாத மழையில் கல்லும் விறைத்து விடும் ஆனால் எம் காவல் தெய்வங்கள் உறங்கும் கல்லறைகள் மட்டும் கம்பீரமாக எழுந்து நிற்கும். பசுமைநிறைந்த மாதத்தில் மாவீரர்களின் தியாகங்கள் பசுமரத்தாணியாய் எல்லோர் நெஞ்சங்களிலும் நிழலாடும். எம் சரித்திர நாயகருக்கென்றே மண்ணில் இருந்து கிளர்த்தெழுந்த கார்த்திகைச்செடி தமிழீழ தேசிய மலரை பிரசவிக்கும். தமிழீழத்தின் அத்திவாரங்களாய் ஆறடி நிலத்தில் புதைந்து போயுள்ள ஆன்ம விடுதலையின் வித்துக்கள் ஒருகணம் சிலிர்க்கும். எம் தேசத்துத் தலைவனின் மடிமீது உயிர் துறந்து ஈகவரலாற்றை தொடங்கி வைத்த அந்த முதல் வித்தின் நினைவு நாளில் இப்புனித இல்லங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வீரர்களின் திருமுகங்களையும் சரித்திரமாகிவிட்ட அவர்களின் சாதனையின் உச்சங்களையும் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒவ்வொரு தீபங்களிலும் காணமுடியும். தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் கூறிச் சென்ற சங்க காலம் இன்று மீண்டும் தமிழீழத்தில் மறு பிரப்பெடுத்திருக்கின்றது. கால மாற்றங்களாலும் அன்னியப் படையெடுப்புக்களாலும் உறைநிலைக்கு போன சங்ககாலம் எம் தலைவன் மேதகு வே. பிரபாகரனின் விழிச்சுட்டெரிக்கும் பார்வியினாலும் எம் மாவீரர்களின் வீரத் தியாகங்களினாலும் உருகி இன்று தமிழீழத்தில் ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அவ் ஆற்றிலே காதலும் வீரமும் மீண்டும் முக்குளித்து எழுகிறது வீட்டுக்கொருவர் நாட்டைக் காக்க விரைந்ததும் தந்தை போர்க்களத்தில் மடிந்திட பிள்ளை போர்க்கோலம் பூண்ட மரபும், மார்பில் அம்பேந்திய மகனின் வித்துடல் கண்டு மகிழ்ந்த தாயும் என்ற வரலாறு இன்று தமிழீழத்திலேதான் தோன்றியிருக்கிறது. அடுத்த நாள் கனவுகளை முதல்நாள் உறங்கமுன் சிந்திக்கும் எம்மவர்களிடையே அடுத்தநாள் என் தேசத்திற்காக வெடிக்கப் போகின்றேன் என்று தெரிந்தும் முதல் நாள் கூட முகத்தில் வெண் தாமைரையோடு உறுதிபூணும் நெருப்புக்குழந்தைகள். விடுதலைப்பசிக்கு தன் பசியை மறந்து தன்னையே ஆகாரமாக்கிய எம் தேசத்தின் அகிம்சைப்புலிமறவன். கழுத்திலிட்ட திருமண மாலைகளில் உள்ள மலர்கள் உதிரும் முன்னரே உதிர்ந்து போன வீரபுருசர்கள். கெரில்லாப்படையாக எழுந்து எமது படையணியை ஒரு புதிய திருப்புமுனையோடு மரபுப்படையாக மாற்றிய வீரத்தளபதிகள். விடுதலைப்போராட்டம் தவழ்ந்து எடுத்தடி வைக்க வழிகோலிய மூத்த உறுப்பினர்கள். உறுதியான எம் போராட்டத்தில் எம் ஒருவரால் வரும் பாதிப்பை முன்னுணர்ந்து உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற மன வைராக்கியத்துடன் தம்மையே அழித்துக்கொண்ட இலட்சியவாதிகள். ஓங்கி அடிக்கின்ற அலைகளின் நடுவே ஓடி விளையாடிய கடற்புலி மறவர்கள். ஆணுக்கு பெண் சரிநிகர் என ஆழக்கடலடியில் பல மைல்களைக் கடந்து சரித்திரம் படைத்த உத்தமிகளின் உயிர்மூச்சுக்கள். எதிரியின் சிங்கக் குகையினுள்ளே சென்று சிங்கத்தின் பற்களையே எண்ணிப்பார்த்த வேவுப்புலி வீரர்கள். தன் பிள்ளையின் வாழ்வும் அவர்போன்ற சிறார்களின் எதிர்காலமும் போர் என்ற அரக்கனின் கால்களில் நசிபடக்கூடாது என்பதற்காக எல்லைப்படையாகி மாவீரராகிவிட்ட மறத்தமிழர்கள். தன் பிஞ்சு மழலையின் கையில் எதிர்காலம் இயந்திரத்துப்பாக்கியை திணிக்காமல் இருக்க அக்குழந்தையின் கையால் அஞ்சலி பெற்று விதையாகிப் போன தாயும் என்று இன்னும் சொல்லிலடங்கா சாதனையோடு இங்கு விழுமூடித் தூங்குகிறார்கள். அமைதியாகுங்கள் இவர்கள் எங்கள் உள் மனதுகளில் நிறைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒலிக்கும் ஆலய மணிகளே நாளை எம் ஈழத்தை சிதைக்கவரும் ஈனர்களுக்கான சாவு மணியாகும். இவர்களுக்கு நாம் ஏற்றும் ஒளி தீபங்களே பெரும் தீயாகி எதிரி படையைச் சுட்டெரிக்கும் எம் தேசியத் தலைவனின் ஆணை ஏற்று அவன் சுட்டு விரல் காட்டும் திசையில் எம்தேச விடியலினைத் தரிசிப்போம். நன்றி – களத்தில் இதழ். https://thesakkatru.com/the-tears-of-light-and-the-story-of-the-story/ விடுதலைக்கான அடையாளம் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/தியாகிகள்/0 கருத்து பனங்கூடல்கள், தரவைகள், தோட்டவெளிகள், ஊர்மனைகள், ஒழுங்கைகள், கோவில்கள், குளங்கள், வயல்வெளிகள், கடற்கரை இப்படித்தான் அநேகமாக எங்கள் ஊர்களும் நகரங்களும் இருக்கின்றன. இவற்றோடு சில இடங்களில் அன்னியர்கள் அல்லது ஐரோப்பியர்கள் கட்டிய கோட்டைகள் இருக்கின்றன. நகரங்களில் குருட்டு மணிக்கோபுரங்கள் இருக்கும் இவைதான் பொதுவாக எங்கள் ஊர்களினதும் நகரங்களினதும் பொது அடையாளங்களாக இருக்கின்றன. அமெரிக்காவை அடையாளப்படுத்துவதற்கு அமெரிக்காவின் சுதந்திர சிலையும் வெள்ளை மாளிகையும் இரட்டைக் கோபுரமும் இருக்கின்றன. பிரான்சுக்கு ஈபிள் கோபுரமும், இத்தாலிக்கு ரோமபுரி நகரின் மாடங்கள், சீனாவுக்கு பெருஞ்சுவர், இந்தியாவிற்குத் தாஜ்மஹாலும் இந்தியா கேட் என்ற பெரிய கட்டியமும் இருக்கன்றன. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொன்றோ பலவோ சிறப்பு அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் கூட இப்படிச் சிறப்படையாளங்கள் இருக்கின்றன. இந்த அடையாளங்கள் சிலது இயற்கையாக அமைந்து விடுகின்றன. சிலவேளை மனிதர்களின் வியக்கத்தக்க சாதனைகளாலும், கடுமையான உழைப்பாலும் உருவாகிவிடுகின்றன. யாழ்ப்பாணம் என்றால் யாருக்கும் உடனே பனைமரங்களும் யாழ்ப்பாண நூலகமும் நல்லூர் முருகன் கோவிலும் குருட்டு மணிக்கூட்டுக் கோபுரமும் தான் ஞாபகத்திற்கு வரும். இன்னும் கொஞ்சம் கண்ணை மூடி யோசித்தால் செம்பாட்டு மன்தொட்டங்களில் மரவள்ளியும் வெங்காயமும் புகையிலையும் மிளகாய்ச் செடியும் நிற்பது நினைவுக்குவரும். தோட்ட வெளிகளில் நிலமட்டத்திற்கு இருக்கும் கிணறுகள் கடற்கரையோரங்களில் இப்போது கவிழ்க்கப்பட்ட படகுகளும் கோடிப் புறத்தில் தொங்கும் வலைகளும் முட்கம்பி வேலிகளும் காவலரண்களும் தான் காட்சியாகியுள்ளது. ஒழுங்கைகளும் சிறுதெருக்களும் நிரம்பிய ஊர்களில் அங்கங்கே உயரமாக இருப்பவை பணிகளும் கோவில் கோபுரங்களும் தான். இதைவிட்டு இன்னும் யோசித்தால் வல்வைவெளி, முள்ளிவெளி, கப்பூதுவெளி, உயனை வெளி, கல்லுண்டாய் வெளி, கைதடி வெளி, நாவற்குழி வெளி, செம்மணி வெளி, மண்டைதீவு வெளி, வேலணை வெளி, வளலாய் வெளி, மாவிலங்கை வெளி என்ற தரவைகள் நினைவில் எழும். இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்றால் நாற்சார் வீடுகளும் கேணிகளும் ஆவுரஞ்சிக் கற்களும் துலாக் கிணறுகளும் பெரிய சங்கடப் படலைகளும் நினைவில் வரலாம். சங்கிலியன் தோப்பு, கந்தரோடைச் சின்னங்கள், புத்தூர் மழவராயனின் மேடம் அல்லது சத்திரம் போன்றவை ஞாபகத்திற்கு வரும் அதையும் கடந்து இன்னும் யோசித்தால் நீர்வேலிப் பக்கத்து வாழைத்தோட்டங்க்களும் அளவெட்டி தொடக்கம் பலாலி வரையுமான மரவள்ளித் தோட்டங்களும் நிலாவரைக் கிணறும் தோன்றும். வேம்பிராய், கோப்பாய், கைதடி, ஆவரங்கால், புத்தூர் பக்கத்தில் கற்குவாறிகள் இருப்பது நினைவில் வரும். நெடுந்தீவென்றால் குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும் கல்வெளிகளும் இருக்கும். அந்தப் பெரிய தரவை வெளிகளில் குதிரைகள் நிற்கும் காட்சியை யாராலும் எப்போதும் மறக்கமுடியாது. இதைப்போல இயக்கச்சி, பளை பச்சிலைப் பள்ளிப் பகுதியில் பனங்கூடல்களும் தென்னந்தோப்புகளும் கலந்திருக்கின்றன. தென்னையும் பனையும் இங்கு கலந்திருப்பது போல வேறெங்கும் காண்பது அரிது. இப்படித்தான் பொதுவாக எங்கள் ஊர்களின் அடையாளங்களும் நகரங்களின் முகமும் இருந்தன. இன்றும் அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் அவை பொது அடையாளங்கள். ஆனால் இந்த அடையாளங்களுடன் கடந்த 20 ஆண்டுகளில் எங்கள் தாயகத்தில் வேறு புதிய அடையாளங்கள் வந்து விட்டன. மாவீரர் நினைவு தூபிகள், அவர்களுடைய நினைவு மண்டபங்கள், சிலைகள், எனப் புதிய அடையாளங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் வந்துவிட்டன. வல்வெட்டித்துறையில் தீருவிலில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப்புலி மாவீரர்களின் நினைவுத்தூபி கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றது. இதேபோல போராளிகளின் போராட்ட உறுதிப்பாட்டைச் சித்தரிக்கும் சிலை ஒன்றும் அங்கே இருந்தது. படையினர் அதை உடைத்து விட்டார்கள். இதைப் போல நல்லூருக்கு வரும் போது திலீபனின் நினைவு தூபியை பார்க்காமல் யாரும் போக முடியுமா, அல்லது திலீபன் உன்னாவிரதமிருந்து உயிர் நீத்த அந்த இடத்தை நல்லூர் வீதியை மறக்கத்தான் முடியுமா, கொடிகாமத்தில் ஆனையிறவுப் போர்க்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட அந்த அழகிய பெரிய நினைவு மட்டபம் இருந்தது. ஆனால் படையினர் அதனையும் இடித்தழித்து விட்டார்கள். நெல்லியடியில் கரும்புலி மில்லரின் சிலையும் இடித்தழிந்த நெல்லியடி மகாவித்தியாலயமும் புதிய அடையாளங்களாகிவிட்டன. முத்திரைச் சந்தியில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா. பருத்தித்துறையில் சித்தப்பா பூங்கா. இப்படி ஏராளம் புதிய அடையாளங்கள். இதெல்லாத்தையும் விடவும் பெரிய புதிய அடையாளங்களாக எங்கள் மண்ணில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்று கண்ணில் தோன்றுகின்றன. நினைவில் பெரும் சுவடுகளாக விரிந்து நிற்கின்றன. இந்தத் துயிலுமில்லங்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல. தமிழீழ தேசமெங்கும் புதிய அடையாளமாக இவை இன்று ஆகிவிட்டன. இவைதான் விடுதலைக்கான அடையாளங்களாகவும் ஆகியுள்ளன. எழுத்துருவாக்கம்: மக்ஸ்வெல் மனோகரன். நன்றி: எரிமலை இதழ் (நவம்பர், 2008). https://thesakkatru.com/monuments-to-liberation/
  13. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 குத்புல் அக்தாபே குருமணியே குறைகள் அகன்றிட வாரீர் தக்வா நெறிகள் தளர்ந்துவிடாமல் தளைத்திடவே முகம் பாரீர் (2) 1. பயகம்பர் குலப் பேரரே பொங்கும் பக்தாதில் வாழ்வோரே பக்தி நிலையினில் உயர்ந்தவரே தனிப் பரங் குதுபே வருவீரே 2. ஹஸன் ஹுஸைனாரின் பரம்பரையோரே ஹகீகத்தை அறிந்தோரே மகத்துவ நகரும் மலக்குடன் ஜின்னும் மதித்திடும் மாண்பு கொண்டோரே 3. உபய பாதங்களை உயர் வலிமார்களின் தோள்களில் பதிய வைத்தோரே தேவாதி தேவன் கற்பனையும் ஏற்புறமாக்கி வித்தோரே 4.வனிதையர் எழுபது பேருடன் ஒருவர் ஓரிரவில் விபச்சாரம் செய்திடும் கற்பனையை கனவாக்கிய காரணர் முஹிய்யத்தீனே (குத்புல்) 5. யா முஹியித்தீன் யாருமில்லை எம்மைக் காத்திடவே வருவீரே என்றொரு கூச்சல் கேட்டதும் கள்வரை மிதிவடி வீசிக் கொன்றோரே 6. சூரியன் சந்திரன் வருடங்கள் மாதங்கள் வள்ளலே உங்கள் மீதிலே வரிசை ஸலாத்தினை வழங்கிடும் கடமை வழமையிலே தவறாதே... நஹ்மதுஹு வனுஸல்லி வனுசல்லிமு அலா ரஸூலிஹில் கரீம்.... குத்புல் அக்தாப் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹு உரூஸ் முபாரக் ரபீயுல் ஆகிர் 11 ஜீலானி மீறா தன் ஜீனத்துள்ள மாலைதனை மயலாகக் கேட்பவர்க்கு வாழ்வு மிகவுண்டாகும் நாட்டமுடன் கேட்பவர்க்கு நன்மை மிகவுண்டாகும் கூட்டமுடன் கேட்பவர்க்கு ஹுதா பறக்கத்துண்டாகும் பொல்லாங்கு நோயகலும் புண்ணியங்களுண்டாகும் நல்லார் நபியுடைய நாட்டமவிர்க்குண்டாகும் மறுமைதனிற் ஷெய்குடனே மஹ்ஷறிலேயாயிருப்பார் வெறுமையல்லா மகன்றிருக்கும் வீறுடையோர் பறக்கத்தினால் யா ரப்பி ஸல்லி வசல்லிம் அலா ஹைரின்னபி வல் ஆலி வஸ்ஸஹ்பி வ கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் மௌலாய ஸல்லி வசல்லிம் தாயிமன் அபதா அலா ஹபீபிக ஹைரில் ஹல்கி குல்லிஹிமி
  14. மாவீரர் நீங்களே, மறப்போமா நாங்களே
  15. 2019ம் ஆண்டு ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல் 50 Views தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் மாவீரர் வணக்கப் பாடலொன்று கடந்த 2019ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு வெளியிடப்பட்டது. இப் பாடலை மீள் பதிவு செய்கின்றோம். https://www.ilakku.org/2019ம்-ஆண்டு-ஈழத்-தமிழர்-உரிம/
  16. எங்கிருந்தாலும் எங்களின் இதயம் ஒவ்வொரு தமிழனும் ஈழத்து பெண் புலி உறுமி மேளம் தலைமகனே எம் பிரபாகரனே
  17. அனித்தமான - திருப்புகழ் அகர முதலென - திருப்புகழ் பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
  18. ஏழிசை நாதனே எழுவாய் - இறை அருளை என்னில் நீ பொழிவாய் பல வரங்கள் தந்து எனைக் காப்பாய் வழிகாட்ட எழுந்து வருவாய் 1. வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து (2) உறவை வளக்கும் விருந்து -2 என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது பாடுவேன் பாடுவேன் பல சிந்து பாரினில் வாழுவேன் உனில் இணைந்து (2) 2. விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு (2) மனிதம் வாழும் தெய்வம் -2 என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம் பாடுவேன் பாடுவேன் ... ... உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா
  19. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வீரவணக்க நாள்/0 கருத்து எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை, உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள். அடக்கிவைத்து, எம்மை இனியும் ஆளமுடியாதென்று அந்நியருக்கு அறைகூவல் விடுத்த நாள். உயிர்கொடுத்தே உரிமையைப் பெறமுடியும் என்பதை முதற்சாவு மூலம் முரசறைந்த நாள். ஆம்! மாவீரர்நாள் – தமிழீழத்தின் தேசிய நாள். சத்தியநாதன் என்ற லெப். சங்கர், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் முதற்சாவை இன்றுதான் சந்தித்தான். ஒரு காலத்தில் எதிரி எட்டி எட்டி உதைக்கவும், உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்தது எங்கள் இனம். காலிமுகத்திடலிலும், கச்சேரி வாசலிலும் ஆயுதமற்று அறப்போர் செய்த எங்கள் இனத்தைக் குண்டாந்தடியாலும், துப்பாக்கிப்பிடியாலும் தாக்கித்தூக்கியெறிந்தது சிங்கள பேரினவாதம். யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குப் பஸ்சில் புறப்பட்டால் பத்து இடத்திலாவது தமிழரை இறக்கி நீங்கள் யார்? நீங்கள் யார்? என்று கேட்பதுபோல அடையாள அட்டை பார்ப்பார்கள். வரிசையிலே நிற்க வைத்துக் கேள்விகள் கேட்பார்கள். எங்கள் தங்கைகளைத் தடுத்து வைத்து குண்டு கொண்டு போகின்றாயா என்று இரட்டை அர்த்தத்தில் பரிகசிப்பார்கள். இத்தனையையும் கூனிக் குறுகிப் பொறுத்துக்கொண்டு என்ன செய்வதென்று வழிதெரியாது இருளில் கிடந்தது எங்கள் இனம். கார்த்திகை 26 ஆம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்யும் வழிகாட்டவென்று வல்வைக் கடற்கரையில் ஒரு பிள்ளை விழிதிறந்தது. கார்த்திக 27ஆம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்ய இரத்தம் சிந்தாமல், உயிரை விலைகொடுக்காமல் விடிவில்லை என்பதைக்கூறி ஒரு பிள்ளை விழி மூடியது. இங்கு ஜனனமும், மரணமும் விடுதலைக்கான விளைபொருட்களாயின. இன்று பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தமிழீழ விடுதலையென்னும் தங்கள் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில், சுதந்திரம் பெறும் நாளில் எங்கள் தலைவன் ஏற்றப்போகும் தேசியக்கொடி காற்றில் அசையும் காட்சியைக் காண்பதற்காகக் கல்லறைக்குள்ளே கண்மூடிக் காத்திருக்கிறார்கள். தாங்கள் ஒப்படைத்துவிட்டுவந்த பணியைத் தங்கள் தோழர்கள் தோழிகள், தாங்கள் நேசித்த மக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று இலக்கை அடைவார்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் குழிகளுக்குள்ளே குடியிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவீரர் நாட்களிலும் நள்ளிரவில் கேட்கும் நாதமணிச் சத்தம், ‘விடுதலை பெற்றது தமிழீழம்’ என்பதைத் தங்களுக்கு வந்து சொல்லுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், தங்கள் கல்லறையில் நாங்கள் ஏற்றும் நெய்விளக்குச் சுடரில் தமிழீழத்தின் வரைப்படத்தையே கண்டு களிப்படைந்து கொண்டுமிருக்கின்றனர். மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்கள் புதைந்த இடங்களாக நாம் எண்ணக்கூடாது, தமிழீழம் என்று கிடைக்குமென்று ஏங்குபவர்கள் தூங்குமிடங்களாகக் கொள்வோம். அந்தப்புனித இடத்தில் பூக்களை வைப்பது மட்டுமல்ல எங்கள் கடமை. கூப்பிய கரங்களுடன், விழிசொரிவது மட்டும்தான் எங்கள் பணியாகக் கொள்ளல் ஆகாது. தமிழீழத்தைப் பெற்று, மாவீரர்களின் தாளடியில் வைப்பதே நாங்கள் அவர்களுக்குச் செய்யும் வரலாற்றுக் கடமையாகும். அலங்கார வளைவுகள், அர்த்தராத்திரியில் நெய்விளக்குகள், கண்ணீர் மாலைகள் எல்லாம் சம்பிரதாயச் சடங்குகளாக மாறக்கூடாது. அடுத்த மாவீரர்நாள் விடுதலைபெற்ற மண்ணிலென்று, நாங்கள் ஒவ்வொருவரும் சபதமேற்றுக் கொள்ளவேண்டும். இதையே இலக்காகக் கொண்டு நாங்கள் நகரத் தொடங்கவேண்டும். “விடிகின்றபோதில் போதாகி மலர்வீர மடிந்தும் மடியாத மாவீரர் நீவிர்” நன்றி: மாவீரர் சிறப்பிதழ் (27.11.1995). காணிக்கை காணிக்கையான! மாணிக்கங்களே..! அஞ்சலிகள்… அன்பானவர்களே… ஆத்மார்த்த அஞ்சலிகள்… உங்கள் தியாகம் சொல்லுந்தரமற்றது, உங்கள் தியாக அருவியில் திளைக்கிறோம், உங்கள் நினைவுகள் உள்ளத்தை ஊடறுத்து ஆன்மாவை அசைக்கிறது. உங்கள் இழப்புக்கள் எங்களை மட்டுமல்ல எதிரிகளையும் கலங்கடிக்கிறது. ஆம்…. நாம் கலங்கிக் கதறுகிறோம்…. எதிரி கதி கலங்கிச் சிதறுகிறான்…. ஆனால் அதேவேளை கலங்கும் எதிரி நிலைகொள்ள முடியாது தடுமாறுகிறான். நாமோ….உங்கள் கனவுகளை… உங்கள் எண்ணங்களை…. நனவாக்க உங்கள் நினைவிலேயே உங்கள் கல்லறைகளிலே கலக்கமே உறுதியாக நிமிர்கிறோம். இனிய தோழர்களே! நீங்கள் எங்களைக் காக்கவென்றோ உயிர் போக்கினீர்கள் முன்சென்றீர், வழிசமைத்தீர்… இந்தத் தமிழ் மண்ணுக்காக உங்கள் இன்னுயிரை ஈந்தீர்கள் இளமை…. இது உங்களுக்காகவும் இயற்றப்பட்டதுதானே! திருமணம் உங்களுக்காகவும் உள்ளதுதானே… பாசம் உங்களிலும் பாசம் கொண்டதுதானே பந்தங்களைத் துறக்க உங்களுக்கு நிர்ப்பந்தம் என்ன? வாழ்வென்றால் உங்களுக்கு மட்டும் என்ன வேப்பங்காயா? ஏன் வாழ்வினைத் துறந்தீர்கள்…? தாழ்வெனப்படுவது தமிழைத் தாக்கியதால்த்தானே…! அன்பானவர்களே… கல்யாணம் கச்சேரி… பிள்ளை குட்டி… கடை காணி, படிப்பு உத்தியோகம், பரம்பரை கௌரவம், சாதிவெறி, பிரதேசப் பாகுபாடு என்று எல்லாமே ஊறிப்போன…சுயநலத்திலேயே தனது அடிப்படைகளைக் கட்டி எழுப்பும் தமிழினத்திலிருந்தா நீங்களும் பிறந்தீர்கள்…? ஆச்சரியமாக உள்ளது. மேற்சொன்னவெல்லாம் நிறையவிருந்த அந்த இனத்தையே விடுதலையென்றும், தமிழ் என்றும், பொது நலமென்றும் புரட்சியென்றும் தொன்மையின் சிறப்பென்றும் சிந்திக்க வைத்துவிட்டீர்களே. இதுதான் பெரியதோர் சகாப்தப் புரட்சி… இந்தப் புரட்சியினை நிகழ்த்த தங்களது உயிரே அர்ப்பணம் எனும் போதுதான் நெஞ்சு கனக்கிறது…. ஆத்மா அந்தரிக்கிறது. ஆனால்… இழப்பின்றி ஒரு பெறுபேறு இல்லையே… சுடச் சுடத்தான் தங்கம்…. படப்படத்தான் புரட்சி… எரிப்பதை மறுத்தால் காடு கழனியாகுமா? தெரிந்துகொண்டோம். தெளிந்துகொண்டோம். மாவீரர்களே! நீங்கள் இறக்கவில்லை இறவாத தமிழ் இரக்கக் கூடாது என்பதற்காய் உங்களையே ஆகுதியாக்கிக்கொண்டீர்களே…! என்று வாழும் சிரஞ்சீவிகள் நீவிர் தமிழீழத்தின் கடலும் காற்றும் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள் கடலும் காற்றுமே உங்கள் பெயர் சொல்லும்… நெஞ்சு கனக்கிறது. நினைத்தால் உங்கள் தியாகமே எங்கள் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. உங்கள் தியாக சிகரத்தைத் தொடுவதற்காகவே நாங்களும் விஸ்வரூபமெடுக்க எழுகிறோம்… நாம் எழுகின்ற வீச்சிலே ஆயிரமாயிரம் பகைவீச்சுக்கள் பொடிபடுகின்றன. விதையாகிப்போன வேங்கைகளே…! நாம் மனந் தளர்கின்ற போதெல்லாம் உங்கள் உருவங்களும்… உருவந்தெரியாது அருவமாகிப் போன உங்கள் பெயர்களும் எம்மைத் தட்டியெழுப்புகின்றன. எமது காயங்களுக்கு மருந்து தடவுகின்றன. ஆன்மாவுக்குள் ஆழ இறங்கி உசுப்பி விடுகின்றன. ஆயுதங்களை இறுகப்பற்றி எழுகின்றோம் உங்கள் எண்ணங்களை ஈடேற்றி முடிப்போம் என்ற உத்வேகத்துடன் எழுகின்றோம்… குருதி முழுதும் உடலெங்கும் ஊடறுத்துப்பாய… விழிகள் ஆக்ரோசத்துடன் விரிய… எம்மினிய தோழர்களே…. என்று கூவிக்கொண்டு எழுகிறோம் ஆத்மார்த்த தோழர்களே எழுகிறோம். விழ விழ எழுகிறோம். நீங்களே எமது எண்ணம், நீங்களே எமது வழிகாட்டி, நீங்களே எமது தீர்மானம்… நீங்கள் பதித்த சுவடுகள்… எம்மை வழி நடாத்தும் சுவடிகள்… நன்றி: மாவீரர் சிறப்பிதழ் (27.11.1995). தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 27.11.1982 தொடக்கம் 31.08.2007 வரை வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் விரிப்பை தேசக்காற்று இணையம் உறுதிபடுத்தி விரிப்பு செய்கிறது. 1982ம் ஆண்டு – 01 மாவீரர் 1983ம் ஆண்டு – 15 மாவீரர்கள் 1984ம் ஆண்டு – 50 மாவீரர்கள் 1985ம் ஆண்டு – 188 மாவீரர்கள் 1986ம் ஆண்டு – 320 மாவீரர்கள் 1987ம் ஆண்டு – 518 மாவீரர்கள் 1988ம் ஆண்டு – 382 மாவீரர்கள் 1989ம் ஆண்டு – 419 மாவீரர்கள் 1990ம் ஆண்டு – 965 மாவீரர்கள் 1991ம் ஆண்டு – 1622 மாவீரர்கள் 1992ம் ஆண்டு – 792 மாவீரர்கள் 1993ம் ஆண்டு – 928 மாவீரர்கள் 1994ம் ஆண்டு – 378 மாவீரர்கள் 1995ம் ஆண்டு – 1508 மாவீரர்கள் 1996ம் ஆண்டு – 1380 மாவீரர்கள் 1997ம் ஆண்டு – 2112 மாவீரர்கள் 1998ம் ஆண்டு – 1805 மாவீரர்கள் 1999ம் ஆண்டு – 1549 மாவீரர்கள் 2000ம் ஆண்டு – 1983 மாவீரர்கள் 2001ம் ஆண்டு – 761 மாவீரர்கள் 2002ம் ஆண்டு – 46 மாவீரர்கள் 2003ம் ஆண்டு – 72 மாவீரர்கள் 2004ம் ஆண்டு – 80 மாவீரர்கள் 2005ம் ஆண்டு – 55 மாவீரர்கள் 2006ம் ஆண்டு – 995 மாவீரர்கள் 2007ம் ஆண்டு – 615 மாவீரர்கள் மாவட்ட வாரியாக………. யாழ்ப்பாணம் மாவட்டம் – 7041 மாவீரர்கள் மட்டக்களப்பு, அம்மாறை மாவட்டங்கள் – 4966 மாவீரர்கள் வன்னி மாவட்டம் (வவுனியா, கிளிநொச்சி) – 2879 மாவீரர்கள் திருகோணமலை மாவட்டம் – 1763 மாவீரர்கள் முல்லைத்தீவு மாவட்டம் – 1449 மாவீரர்கள் மன்னார் மாவட்டம் – 1110 மாவீரர்கள் வெளி மாவட்டங்கள் – 331 மாவீரர்கள் மொத்த மாவீரர்கள் விரிப்பு – 19539 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பாக நீளும் பதிவுகள்… தாயக விடுதலையில் ஆகுதியான அனைத்து மாவீரச் செல்வங்களின் ஈகங்களின் உணர்வுத்தீயில் உருவான இசைப் பாமாலைகள் மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகின்றேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை; சரித்திரமாகி விட்டார்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். 1989ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை வெளியான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர்நாள் பேருரைகள். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் தமிழீழ மாவீரர் நாள் இன்று உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/tamil-eelam-national-maaveerar-naal/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.