Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எந்தன் இதயகானம் என்றும் உன்னை பாடும் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
-
ஒரு வீரனின் ஆசை
ஒரு வீரனின் ஆசை நவம்பர் 23, 2020/தேசக்காற்று/கரும்புலிகள் காவியங்கள்/0 கருத்து கரும்புலி லெப். கேணல் போர்க் மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் ஆறுமுகத்தான் புதுக்குளம், வவுனியா பிறப்பு: 11.11.1959 வீரச்சாவு: 23.11.1990 வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் – அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப் படைமுகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது. இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம் முகாம் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படைமுகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி அதைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமை தாங்கி வழிநடாத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது, “நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ‘மாங்குளம் முகாமைப் பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும்’ என, ‘போர்க்’ சொன்னான். அந்தக் குரலில் உறுதி தெரிஞ்சுது… போர்க் போராட்டத்திற்கு புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழி நடத்தியவர்.” தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில்…. “1990 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 23ஆம் நாள்… அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாப் போனவர். புறப்பட முன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு ‘நான் புறப்படுறன்… இதோட மாங்களம் முகாம் முடிஞ்சுது…’ என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில பெரிய வெடிச்சத்தம் கேட்டுது; முகாம் தகர்ந்தது… பிறகு சில மணி நேரத்தில முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார். இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார். அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயதுதொட்டு நடந்து திரிந்த அக்கிராமத்தில் குளம், வயல், காடு… என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை… அவற்றிடமிருந்து விடை பெற்றார். அந்த நாட்களில் ஒருநாள் பக்கத்துவீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார் – “தம்பியவை, மாவீரர் நாள் வருதல்லோ?, தற்செயலா நான் செத்துப் போனா அண்டைக்கு என்ன செய்வியள்?” “நீங்கள் ஏன் சாகப்போறியள்” எனக் கேலியாகப் பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி, “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன……?” அவர்கள் சிரித்தனா.; போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்தி விட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப் படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை.” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார். அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத்தங்கை… என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார். கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன், ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளைபோல் அவர் நடப்பது வழக்கம் என தாயாரும் கூறினார். சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார்… பின் போய்விட்டார். சிறிது நேரத்தின் பின்… “தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று, போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார். “பழசாக்கும், அதான் விட்டுட்டப்போட்டான் போலக் கிடக்க” என்றார் அம்மா. இன்று, போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார், “தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சு கொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாய்ச் செத்தபிறகுதான், அவன் பக்கத்தில படுக்கச் சொன்னது… பொட்டு வைக்கச் சொன்னது… உடுப்புகளை விட்டிட்டுப் போனது… ஏனெண்டு விளங்கது.” போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழுதழுத்தது…… நன்றிகள்: உயிராயுதம் – பாகம் 01, விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, 1993). https://thesakkatru.com/the-desire-of-the-black-tiger-warrior/ கரும்புலி லெப். கேணல் போர்க் நவம்பர் 23, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து இன்னொரு காவியம்: கரும்புலி லெப். கேணல் போர்க். 1986, முள்ளியவளைப் பகுதி அன்று இராணுவத்தினரால் நிரம்பி இருந்தது. தமது அட்டூழியங்களை நிகழ்த்திவிட்டு இராணுவத்தினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். அவர்கள் மூன்றாம் கட்டை வயல்வெளியை அண்மித்தபோது மேஜர் பசீலனின் தலைமையில் ஒரு தாக்குதற்பிரிவு தனது தாக்குதலை ஆரம்பித்தது. வயல்வெளி, ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அவர்களை நோக்கி ஏவப்பட்ட மோட்டார் செல்களிலும், ரவைகளிலும் அவர்கள் நனைந்தனர். இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு. போர்க் அன்றுதான் ஒரு போராளியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்திருந்தான். வந்த அன்றே ஒரு பெரும் போர் முனையில் அவன் பங்கு பற்றினான். அன்றுமுதல் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிரான பல போர் முனைகளில் போர்க் பங்கு பற்றிக்கொண்டிருந்தான். இந்தியப்படை எம் மண்ணை ஆக்கிரமித்தநேரம் சிறிது காலம் அமைதியும் பின் பலத்த போரும் ஆரம்பித்தது. அந்த யுத்தத்தின் மிகக் கடுமையான எதிர்ப்பை இந்தியப்படைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சந்தித்தன. ஒட்டிசுட்டானில், முள்ளியவளையில், தண்ணீரூற்றில், அளம்பிலில் என பல முனைகளில் இந்தியப் படையினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. எல்லாப் போர்முனைகளிலும் போர்க்கும் ஒரு போராளியாக கலந்து கொண்டான். அப்போர்க்களங்களில் தன் திறமையை வெளிப்படுத்தினான். அந்நேரத்தில்தான், முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஒரு மலைக்கல்லில் முகாம் அமைக்கும் பொறுப்பு போர்க்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு மிகக் கடுமையான வேலை, வயல்வெளிகளிலும், காட்டுப்பாதைகளிலும் மழைநீர் நிறைந்து சேறும், சகதியுமாக இருக்கும். அப் பாதைகளினால் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு உழவு இயந்திரத்தில் செல்ல வேண்டும். அவைகள் புதையும்,வயல் வெளியில் சேற்று நிலத்தில் உழவு இயந்திரத்தை மீட்பதற்காக போராடவேண்டும். இந்திய வானூர்திகள் வந்து மிரட்டும், இடைக்கிடை தாக்குதலும் நடாத்தும். அவர்கள் தொடர்ந்து செல்வார்கள். உழவு இயந்திரத்திலிருந்து மூட்டைகளை இறக்கி மலையின் வேறு பகுதிக்கு தோள்களில் சுமக்க வேண்டும். மரங்களில் தங்கி நிற்கும் மழைநீர் அவர்களை நனைக்கும். மறுநாள் இருமலும் தடிமலும்தான் – ஆனாலும் வேலைகள் தொடரும். போர்க்கிற்கு ஏற்கனவே இடுப்பு முறிந்திருந்தது. பாரமான பொருட்களை தூக்க அவனால் இயலாது. அப்படித் தூக்கினால் மீண்டும் அவன் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்க வேண்டி வரும் என்பதை தெரிந்திருந்தும் அவன் வேலைகளைச் செய்தான். உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்ட ஒரு பலமான முகாமை உருவாக்கினான். ஆனால், அந்த முகாம் இந்தியப்படையினரின் தேடுதல் நடவடிக்கைக்கு உட்பட்டது. பலமான ஒரு சண்டை அந்தக் காட்டுப் பிரதேசத்திலும் நடந்தது. அப்போரில் கப்டன் வாதவூரான் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டான். போர்க் காலில் காயமடைந்தான். கானகச் சண்டைக்கு நாம் பழக்கப்படாத காலம் அது. காட்டின் எந்தப் பக்கம் சென்றாலும் எதிரி இருந்தான். பசி, களைப்பு, தண்ணீர் இருக்குமிடங்களில் எதிரி இருந்தான். தன்னைத் தூக்கிச் செல்லும் போராளிகளுக்குப் போர்க் கதைகளின் மூலம் உறுதியூட்டினான். அவர்கள் பின்வாங்கிச் சென்றார்கள். அதே காட்டின் மூலையில் – எமது புதிய முகாம். அங்கு போர்க் தனது காயத்திற்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தான். அதே நேரம் அங்கு எமது பயிற்சி முகாமும் ஆரம்பமாகியது. போர்க் முழுமையாக குணமடையும் முன்பே புதிய போராளிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டான். அங்கேதான் முதன் முதலாக இந்தியப்படைக்கெதிராகப் போராடும் புதிய அணி உருவாகியது. அதன் பின்பு போர்க்,முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவப் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அக் காலத்தில் போர்க்கின் தலைமையில் பல தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 4ம் கட்டையில் நடந்த தாக்குதல் நடவடிக்கை, தேர்தல் நேரத்தில் பரவலாக நடந்த தாக்குதல்கள் ஆகியவை குறிபிடத்தக்கவை. இதன் பின்பு, போர்க் முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அந்நேரத்தில் புலிகளின் முகாம்களை சீராக்கி எந்தவொரு தாக்குதலையும் எதிர் கொள்ளக்கூடியளவு பலமுள்ளதாக மாற்றி அமைத்துக் கொண்டான். அதேவேளை தாக்குதற் திட்டங்களை உருவாக்கி இந்தியப்படையினர் மீது நெடுங்கேணி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு என எல்லா இடங்களிலும் பரவலாகத் தாக்குதலை மேற்கொண்டான். பின்பு, வன்னிப் பிராந்திய தளபதியின் நேரடி கண்காணிப்பிலிருந்த படைப் பிரிவொன்றின் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் கிளிநொச்சி, முசல்குத்தி என சமூகவிரோதிகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். ஆனி 15, இரவு 12 மணி, இருளில் மூழ்கி இருந்த மாங்குளம் இராணுவ முகாம் புலிகளால் திடீரெனத் தாக்கப்பட்டது. பல முனைகளால் புலிகள் எதிரியின் காவலர ண்களை நோக்கி முன்னேறினார்கள். போர்க் ஒரு தாக்குதல் அணிக்கு தலைமை வகித்து முன்னேறினான். எதரியின் காவலரணுக்கு அருகில் அவனது பலமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு நடுவே எம்மவர்களின் ஆயுதங்கள் இயங்கின. கண்ணிவெடி அகற்றியை பிரயோகித்துவிட்டு எதிரியின் காவலரணை நோக்கி போர்க் சென்றான். ஆனால் அவன் தனி ஒருவனாகவே இருந்தான். அவனுடன் சென்ற தோழர்களில் பலர் வீரமரணமடைந்து விட்டனர். சிலர் காயமடைந்து விட்டனர். அந்தத் தாக்குதல் முழுமையடையவில்லை. தொடர்ந்து நாம் காப்பரண்களை அமைத்து முற்றுகையிலீடுபட்டோம். முற்றுகைக்குப் பொறுப்பாக போர்க் நியமிக்கப் பட்டான். பலமுனைகளில் பலமுறை போர் நடந்தது. போர்க்கும் அவனது தோழர்களும் கடுமையாகப் போரிட்டார்கள். சில வேளைகளில் பின்வாங்கினார்கள், சில வேளைகளில் முன்னேறினார்கள். ஆனால் தொடர்ந்து எங்கள் மண்ணைக் காப்பதற்காகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். பின்பு, மாங்குளம் இராணுவ முகாம் முற்றுகைக்கான பொறுப்பை மேஜர் திலீப்பிடம் ஒப்படைத்துவிட்டு போர்க் மீண்டும் தன் படைப்பிரிவின் பொறுப்பாளனாகச் செயற்பட்டான். மாங்குளம் இராணுவ முகாம் மீதான இரண்டாவது தாக்குதல், தளபதிகள் போர்த் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் போர்க்கும் ஒருவன். ஒரு தாக்குதற் பிரிவுக்கு தலைமையேற்று உள்ளே செல்லும்படி போர்க் கேட்கப்பட்டான். ஆனால் அதற்கு அவன் மறுத்து விட்டான். அக்கூட்டத்தில் “நான் வெடிமருந்து வண்டியை ஓட்டிச் செல்கின்றேன்” என்ற அவனது வார்த்தைகள் உறுதியாக வெளி வந்தது. மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஆனால் அவனது கண்களில் தெரிந்த ஆழமான உறுதி அவர்களை மௌனமாக்கியது. இறுதி மூன்று நாட்கள்……. போர்க் தன்னந்தனியாக எந்தவிதமான பொறுப்புக்களும் இல்லாமல் சுற்றித்திரிந்தான். தான் பிறந்த வீடு, தவழ்ந்த மண், பழகிய மக்கள், மரங்கள், குளம் எல்லாவற்றையுமே பார்த்தான். சேமமடுதான் அவனது கிராமம். சிங்கள எல்லை அருகில்தான். “நாங்கள் ஆயுதம் தூக்கியிராவிட்டால் இப்ப இங்க சிங்களவன்தான் திரிவான்” என்று அடிக்கடி அவன் சொல்லுவதுண்டு. போர்க் ஏற்கனவே இனிமையானவன், இறுதி மூன்று நாட்களும் அவன் சக போராளிகள் மீது அன்பையும் பாசத்தையும் கொட்டினான். அவன் என்ன செய்யப் போகிறான் என்பது எவருக்குமே தெரியாது…… அவர்கள் வழமை மாதிரி போர்க்கிடம் பழகினார்கள். ஆனால் அவன் தம்மீது ஒரு பெரும் சோகச்சுமையை சுமத்தப் போகிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது. வன்னி மண்ணில் போராட்ட வாழ்வின் போது தன்னை அரவணைத்து வளர்த்த கிராமத்து மக்களிடம் போர்க் சென்றான். அவன் நேசித்த மண், மக்கள், காடுகள், வயல்கள்……எல்லாமே அவனுக்கு விடை தந்தன. 23.11.1990….. திட்டமிட்டபடி மாங்குள இராணுவ முகாமைச் சுற்றி இருந்த காவலரண்கள் வீழ்ச்சியடைந்திருந்தன. அதுவரை நேரமும் தனது போராளிகளுடன் இருந்த போர்க் புறப்படுவதற்குத் தயாரானான். இறுதி நேர நிமிடங்கள், இருள், தன் போராளிகளின் முகங்களைத் தேடியபடியே – போர்க் சொன்னான். “பெடியள் கவனம்.பசீலன் செல் வெடிக்கேக்கை சத்தம் தாங்க முடியாமலிருக்கிறது.எதற்கும் பெடியளைத் தள்ளியே நிற்கச் சொல்லுங்கோ” தன் தோழர்கள் மீது அவன் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள் அவை. போராளிகள் விலகிச் சென்றார்கள். “எல்லாம் சரியாக இருக்கிறதா?” வோக்கியில் அவனது இறுதி வார்த்தை – தன் தோழர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டான். அந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட பார வண்டி, எதிரியின் வலயத்திற்குள் உறுமிக்கொண்டு நுழைந்தது. அந்த இறுதிக் கணங்களில் போர்க்கின் முகத்தில் என்ன எழுதி இருந்தது என்பது எவருக்குமே தெரியாது.ஆனால் எல்லாப் போராளிகளைப் போலவே அவனுக்கும் தெரியும், இந்த மண் நிச்சயம் மீட்சியடையும். அது ஒரு உன்னதமான செயல், அந்தக் கணத்தில் அவன் எடுத்த முடிவு. குறித்த இலக்கையும் தாண்டி அந்த வண்டி மேலும் பல எதிரிகளை தேடிச் சென்றது. முகாமின் மையப்பகுதி – மிகப் பெரிய சத்தம். அந்தப் பிராந்தியமே அதிர்ந்து மௌனமாகியது. இருள் கலையும் விடியலின் நேரம் துப்பாக்கிகள் ஓய்ந்து விட்டன. எமது போராளிகள் மாங்குளம் இராணுவ முகாமிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. போர்க் அண்ணை எங்கே? போர்க் எங்கே? போர்க்கின் வெடிமருந்து வண்டி வெடித்த இடத்தில் ஆழமான குழி ஒன்று இருந்தது. ஆக்கிரமிப்பாளனின் முகாமின் கட்டிடங்கள் இடிந்து – நொருங்கிக் கிடந்தது. அந்தக் குழிக்கு சற்றுத் தள்ளிப் போர்க்கின் உயிரற்ற உடல்…… போர்க் வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான் – அவன் வரலாற்றில் ஒருவனாக வாழவில்லை, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தவன். அவனது வாழ்வு அர்த்தமுள்ளது, உன்னதமானது – தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்த உயர்ந்த வீரன் அவன். தனது உயிருக்கும் மேலாக தனது நாட்டின் சுதந்திரத்தை நேசித்த மாவீரன் அவன். நாளையும் காற்றாக எங்கள் உயிர் மூச்சாக வாழ்வான் அவன். வன்னி மண்ணில் சேமமடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த போர்க் – முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், அதன் பின்பு, மாங்குளம் இராணுவ முகாம் முற்றுகைக்குப் பொறுப்பாளராகவும், பின்பு வன்னி நடமாடும் அணியின் பொறுப்பாளராகவும் இருந்தவர். இந்தியப் படைகளுக்கு எதிராகவும், சிறீலங்கா படைகளுக்கு எதிராகவும் பல தாக்குதல்களை திட்டமிட்டு, தலைமையேற்று வழி நடாத்தியவர். தன்னுயிரைத் தந்து மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர். நினைவுப்பகிர்வு: வசந்தன். நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (மார்கழி, 1990). https://thesakkatru.com/black-tiger-lieutenant-colonel-pork/
-
விடுதலைப்படைப்பாளி கப்டன் மலரவன் வீரவணக்க நாள்
விடுதலைப் படைப்பாளி கப்டன் மலரவன் நவம்பர் 23, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து விடுதலைப் படைப்பாளி கப்டன் மலரவன். போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 23ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகியிருந்தாலும் தனது களப்பணிகளிற்கு மத்தியில், தன்னுடைய அனுபவப் படைப்புகளினூடாக சிறந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல், மாங்குளம் முற்றுகைச் சமரின் அனுபவப் பார்வை கொண்ட சிறந்த பதிவையும் படைத்திருந்தார். அது போராளிகளுக்கான அனுபவத்தைக் கொடுத்தது. அவரது எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள், ‘நீ எழுத்துருவில் தந்துவிட்டுப் போன படைப்புகள் நிச்சயமாக எமது சந்ததியின் மனங்களிலே ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை’ என பதிவு செய்துள்ளார். எழுத்துக்களுடன் வாழ்ந்த மலரவனின் படைப்புகள், அவரது வீரச்சாவிற்குப்பின் வெளியீடுகளாக வெளிவந்தன. அவற்றில் போர் உலா என்னும் படைப்பு இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான தேர்வில் முதல் பரிசு பெற்றமை அவரது படைப்பாளுமையின் தரத்தைச் சான்று பகர்ந்து நிற்கின்றது. மேலும், எனது கல்லறையில் தூவுங்கள் (சிறுகதை,கவிதைகளின் தொகுப்பு), மலரவனின் ஹைக்கூ கவிதைகள் (இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பாகும்), புயல் பறவை (நாவல்-வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிவு பெற்றது) என படைப்புகள் பல. இவை அத்தனையும் தனது இருபது வயதிற்குள் எழுதி முடித்தவர். ஒவ்வொரு போராளியும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுகிறான், உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்படுகிறான் என்பதற்கு கப்டன் மலரவனின் வாழ்க்கையும் அதன் பின்னணியும் மிகச் சிறந்த சான்று. மலரவனின் தந்தை ஒரு வைத்தியர். கொழும்பில் வெடித்த 1958ம் ஆண்டு இனக்கலவரத்தில் சிக்குண்ட அவர் கடை ஒன்றுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியிருந்தார். அங்கும் வந்து அவரைத்தாக்க முற்பட்ட சிங்களக்காடையர்களை சோடாப்போத்தில்களால் தாக்கி விரட்டியடித்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். பின்னர் 1977ம் ஆண்டு கண்டி வைத்தியசாலையில் கடைமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது சிங்கள வைத்திய நிர்வாகம் தமிழ் வைத்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்துத் தனது வேலையை இராஐனாமா செய்துவிட்டு, மாங்குளத்தில் வந்து விவசாயம் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். 1985ம் ஆண்டு கொக்கிளாய் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளான போது போராளிகளுக்கான வைத்தியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கை, வவுனியாவில் எல் 3 எடுத்த தாக்குதல் என பல தாக்குதல்களின் போது களமுனை வைத்தியராக, காயமடைந்து வந்த போராளிகளிற்குக் களத்திற்கு நெருக்கமாக நின்று சிகிச்சையளித்த ஒரு சிறந்த தேசப்பற்றாளர். மலரவனின் மற்றுமொரு அண்ணன்; மருத்துவபீடத்தில் படித்துக்கொண்டு, தியாகி திலீபன் அவர்களுடன் தொடங்கி விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தார். தேசப்பற்றுக் கொண்ட அக்குடும்பத்தின் புறச்சூழல்கள் சிறுவயதிலிருந்தே மலரவனுக்குள் விடுதலைத்தீயை வளர்க்கத்தொடங்கின. யாழ்ப்பாணத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான சென் ஜோன்ஸ் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட மாணவனாக விளங்கிய அவர், உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் முதலாவது வருடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் முதல் மாணவனாகத் தேர்வாகியிருந்தார். அந்த வேளையில்தான், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிங்கள அரசுடனான போர் முழு வீச்சில் தொடங்கியது. மலரவன், தனது கல்வியைத் துறந்துவிட்டு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார். மணியந்தோட்டம் பயிற்சி முகாமில் தனக்கான அடிப்படைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். பயிற்சியை முடித்த பின், பசீலன் மோட்டார் பிரிவில் ஒரு மோட்டார் அணியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டு மீண்டும் அதற்கான பயிற்சியை தொடங்குகின்றார். 1990களில் சண்டையின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான பணி பசீலன் அணியையே சார்ந்திருந்தது. அந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை. அவற்றைக் கையாளுவதற்கும்; துல்லியமான சூட்டை வழங்குவதற்கும் துல்லியமான கணிப்பீடுகள் மிகமுக்கியமானவை. அந்தப் கணிப்பீட்டுப் பணியிலும் அதனை நேர்த்தியாக இயக்குவதிலும் பெரும்பங்கு மலரவனுக்கு உண்டு. அதற்காகக் கடுமையாக உழைத்தார். பீரங்கிகளின் வேகத்தையும் தூரத்தையும் கணிப்பது தொடர்பில் கணிதத்தில் உள்ள விதிமுறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு செல்லின் நிறையையும் கணித்து ஒவ்வொன்றும் என்ன வாசிப்பில் விட்டு செலுத்தினால் அது இலக்கைத் தாக்கும் என்பதைப்பற்றிய கணிப்பீடுகளில் தனது நேரத்தை செலவிட்டுத் துல்லியமாகக் கணித்தார். அதற்கும் மேலாக, ஏனைய மோட்டார் அணியின், எத்தரத்திலுள்ள வீரர்களிற்கும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தது. தனக்கு தரப்படும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அதை புதிய பரிமாணத்தில் அல்லது கோணத்தல் பார்க்கும் திறனும் அதைப்பற்றி மென்மேலும் சுயமாக அறிந்து மெருகேற்றும் திறனும் அவரை சிறந்த செயல்திறன்மிக்க போராளியாக இனங்காட்டியது. அதுவே குறுகிய காலத்தில் பசீலன் மோட்டார் பிரிவின் உதவிப் பொறுப்பாளர் என்னும் நிலைக்கு அவரை உயர வைத்தது. யாழ்கோட்டையில் இருந்து இராணுவம் தப்பியோடியது என்றால் அதன்பின்னணியில் பிரதானமான பங்கை வகித்தது பசீலன் படையணி. அந்தக்களமுனை தொடக்கம் மாங்குளம், சிலாவத்துறை, காரைநகர், ஆனையிறவு, மின்னல் என பல களமுனைகளில் வெற்றிகளில் பசீலன் மோட்டாருடன் பங்கு கொண்ட மலரவனின் பங்குகள் பெறுமதியானவை. சிங்களப்படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் சிங்களப்படைக்கு புளியைக் கரைப்பது பசீலன் செல்கள் என்பதனால் பசீலன் செல் அடிக்கப்படும் போது வெளிவரும் வெளிச்சத்தை கணிப்பிட்டு அப்பகுதியை நோக்கி கடுமையான செல்தாக்குதலை நடாத்தி பசீலன் தாக்குதலைக் கட்டுப்படுத்த சிங்களப்படை முயற்சிப்பது வழமை. அவ்வாறான சமயங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான செல்த்தாக்குதல்களின் மத்தியிலும் இயல்பாகவும் தெளிவாகவும் செயற்படும் அவரது துணிச்சல் மற்றைய போராளிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்றைக்கும் சோர்ந்து போனதில்லை. சிலாவத்துறை முகாம் தாக்குதலின் போது வெட்டவெளியில் விமானக் குண்டு வீச்சுக்களின் மத்தியில் எவ்வித தடையரண்களும் இல்லாமல் முகாமிற்கு நேருக்கு நேரே பசீலனை வைத்துப் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த அவர், செல் தாக்குதலில் காயப்பட்டு மரணத்தின் வாசல் வரை எட்டிப்பார்த்து, களமருத்துவமனையில் கடமையாற்றிக்கொண்டிருந்த அவரது அண்ணனின் கரங்களுக்குச் சென்று மீண்டுவந்தார். ஆ.க.வெ சமரில் ஆனையிறவு பிரதான முகாம் தாக்கியழிப்பில் பசீலன் மோட்டார் அணிக்குத் தலைமைதாங்கி, முகாமின் மையத்திலிருந்த கோபுரத்தைத் தனது துல்லியமான கணிப்பால் தகர்த்து விழுத்தி தனிமுத்திரையைப் பதித்தார். இத்தாக்குதலில் இவரது தந்தையும் அண்ணனும் களமுனை மருத்துவர்களாகப் பணியாற்றினார்கள். இத்தாக்குதல் மட்டுமன்றி, மணலாற்றில் நடைபெற்ற மின்னல் எதிர்த்தாக்குதலிலும் குடும்பத்தில் மூன்று பேரும் பங்காற்றியது என்பது விடுதலைப் போராட்டத்தில் இக்குடும்பத்தின் பங்களிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். பசீலன் படையணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தபின்னர் யாழ்மாவட்டத்தின் மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்து தனது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தயிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி முந்நகர்த்தியதில் பெரும் பங்கு மலரவனுக்குண்டு. அவை, சமூகத்தின் மீதும் அதன் இளம் தலைமுறையின் கல்வி மீதும் அவர் கொண்ட தாகத்தின் வெளிப்பாடாக விளங்கின. பின்னர் யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பணியாற்றினார். குறிப்பாக மாவட்ட இராணுவ அறிக்கைப் பொறுப்பாளராக இருந்தார். இதன்போது ஒவ்வொரு சண்டையிலும் பங்குபற்றுபவர்களிடம் சண்டையில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து சண்டை எவ்வாறு நடந்தது, அதில் திறமையாக செயற்பட்டவர்கள், திட்டத்தில் ஏற்பட்ட சரி பிழைகள், அடுத்த சண்டையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்ற ஒரு மதிப்பீட்டு இராணுவ அறிக்கையை செய்து, தளபதிக்கு சரியான நிலவரத்தைப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார். அக்காலப்பகுதியில், தெல்லிப்பளையில் வேவு நடவடிக்கை ஒன்றிற்காக பணியாற்றிக் கொண்டிருந்தவேளை எதிரியின் பதுங்கித்தாக்குதலில் வேவுப் பொறுப்பாளர் காயமடைந்தபோதும் தொடர்ந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு காயமடைந்தவரை கொண்டுவந்து சேர்த்தார். இது அவரது ஓர்மத்திற்கு எடுத்துக்காட்டு. அந்தநேரத்தில்தான் 1992ம் ஆண்டு பலாலி வளலாய் தாக்குதலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் சு.ப.தமிழ்க்செல்வன் அவர்களின் பகுதித் தாக்குதல் தொடர்பான சகலவிடயங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி, அதுதொடர்பான விடயங்களை தளபதியுடன் பரிமாறும் வேலைகள் உட்பட தாக்குதலுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வேலைகளில் தளபதிக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டார். எப்போதும் சண்டை நேரங்களில் மலரவணை கட்டுப்படுத்துவது கடினம். சண்டை தொடங்கினால் உடனே அங்கு செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோலத்தான், அன்றைக்கும் சண்டை தொடங்கும்வரை தளபதியுடன் நின்ற மலரவனை திடீரெனக் காணவில்லை. தளபதி கோபத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில், களமுனைப்பகுதிக்குச் சென்று நிலமைகளை அவதானித்துவிட்டு தன்னால் இயன்றளவு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்த சேர்ந்த மலரவனைப் பார்த்த தளபதி, அவரது குணாதிசயத்தைக் கண்டு பொறுமையானார். நெகிழ்வாக, தன்னுடன் நின்று சிலவேலைகளை ஒழுங்குபடுத்துமாறு கூறினார். மேலும் சீற்றத்திற்கு ஆளாகக்கூடாது என்று நினைத்த மலரவன் அவர் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். தாக்குதலில் பலத்த இழப்புகளைச் சந்தித்த இராணுவம், புலிகளுக்கு இழப்புகளைக் கொடுக்கும் நோக்குடன் பின்தளப்பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து வெடித்த மூன்று செல்களில் மலரவன் படுகாயமடைந்தார். அந்த இறுக்கமான நிமிடங்களை நினைவு கூர்ந்த தளபதி ‘காயப்பட்டவுடன் களமருத்துவனைக்கு அவசரமாக அனுப்பினோம். என்னோடு நின்ற ஒருவர் வந்து மலரவனுக்கு கொஞ்சம் கடுமையாக உள்ளது, கால்துண்டாடப்பட்டுவிட்டது என்று கூறினார். கால் கழற்றினாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் அவன் இன்னும் எவ்வளவோ சாதனைகளைப் படைப்பான என்;று என் உள்ளுணர்வு அடிக்கடி வேண்டிக்கொள்கின்றது. ஏனெனில் பல நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருசிலர், இப்படியான நிலையிலும் அபரிமிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நிற்பார்கள். அந்த வரிசையில் மலரவனும் ஒருவன் என்று நன்றாகத் தெரியும். இவ்வேளையில் எமக்கு அடுத்த களமுனையில் மலரவனது அண்ணன் – அவர் மேல் உயிரையே வைத்திருந்த சகோதரன் – வைத்திய கலாநிதியும் போராளியுமான அவர், எமது மருத்துவமனையில் நின்று பல போராளிகளின் உயிர்களைக் காக்கும் கடமையில் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால்……. தாக்குதல்கள் முடிந்து எம் நிலைகளுக்கு நாம் வருகின்றபொழுது எங்கள் உள்ளத்தை உருகவைக்கும் பேரதிர்ச்சி தரும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள்’ என்று அந்தக் கணங்களை விவரித்தார். போர்க்களத்தில் ஆயுதங்களுடன் மட்டுமன்றி பேனாவுடனும் சுழன்று கொண்டிருந்த அந்த வீரன் மண்ணுக்காக வித்தாகி விட்டான். அதேவேளை, அவரது அண்ணன் அதிகாலை மூன்று மணிக்கு தம்பியின் வீரச்சாவுச் செய்தியை அறிந்திருந்த வேளையிலும் தொடர்ந்து அங்கு காயமடைந்து வந்துகொண்டிருந்த போராளிகளிற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார். மலரவன் என்னும் ஒரு போராளியை தமிழன்னை அவரைப் பெற்ற மலரன்னையிடம் இருந்து பறித்து எடுத்துவிட்டாள். அந்தப் போராளியை, படைப்பாளியை சுமந்த தாயின் கரங்கள் போராட்டம் தொடர்பான பல பதிவுகளை செய்தது. தனது பிள்ளைக்கும் வீரமகனுக்கு தாயின் கவிதை அஞ்சலி! என்ற தலைப்பில் கவிதைகளைக் கண்ணீரோடு வரைந்தார் வீரத்தாய் மலரன்னை. அக்கவிதையின் இறுதி வரிகளில் மண்ணில் உதிர்த்திட்ட மைந்தனே! – இன்று விண்ணில் உயர்ந்திட்டாய் மா வீரனாய் விதையாய் வீழ்ந்திட்டாய் மண்ணிலே – இன்று கதையாகி விட்டதே உன் சரிதை. இருபதே வருடங்கள் வாழ்ந்தாலும் அர்த்தமாய் வாழ்ந்திட்டாய் வல்லமையால் – இந்த மண்ணின் விடியலே உன் கனவு – நீ விண்ணிலிருந்து நோக்குவாய் மலரும் தமிழீழமதை! மேலும் ‘மலரவனிடத்தில் குறுகியகால அனுபவத்திற்குள்ளேயே அவனிடம் ஓர் தளபதிக்கே உரித்தான திட்டமிடும் ஆற்றலைப் பார்த்தேன். அவன் கதைப்பது மிகவும் குறைவு. இதை செயல் வடிவம் நிறைவுபடுத்திற்று. இது எங்கள் தலைவரிடம் இருக்கும் தனித்துவமான ஒர் உயர்ந்த தன்மை’ என சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிவு செய்கின்றார். ஒற்றைவரியில் மலரவன் – போர்வீரன், வேவுப்போராளி, சிந்தனையாளன், தனக்குத் தரும் பணியை மெருகேற்றும் முயற்சியாளன், களத்தின் தேவையை விளங்கிச் சுயமாகச் செயற்படும் ஒருவன், சண்டையை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளன், படைப்பாளி, தீவிர உழைப்பாளி, என நீண்டு செல்லும் அவரது ஆளுமை பன்முகத்தன்மை வாய்ந்தது. இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மலவரன் உட்பட 57 பேருக்கும் மற்றும் வீரச்சாவடைந்த அத்தனை மாவீரர்களிற்கும் நாட்டுப்பற்றாளார்களிற்கும் நினைவஞ்சலியை செலுத்துவோம். விடுதலை வீரர்களின் சுவாசமான சுதந்திர விடுதலை என்னும் அடைவை நோக்கி தளர்வில்லாமல் ஒன்றாகப் பயணிப்போம். ‘ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது’ – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். நினைவுப்பகிர்வு:- அபிஷேகா. https://thesakkatru.com/liberator-creator-captain-malaravan/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 கருணைக்கடல் நாகூரா... உம்மை நம்பி வந்தேன் தெய்வீகரே பூ வானுலகாழ்பவனே
-
மேஜர் தமிழரசன்
மேஜர் தமிழரசன் நவம்பர் 23, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் / டொச்சன். வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது. தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :- புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குலம் (குலம்மாமா) அவர்களது. 80களில் இராணுவ கெடுபிடிகளின் அலைச்சலும் அச்சுறுத்தலும் நிறைந்த காலப்பகுதியில் குலம்மாமா தனது வீட்டில் தலைவரை காத்து கவனித்தது பற்றி தலைவர் அடிக்கடி நினைவு கூருவாராம். வசதிகள் குறைந்த தனது வீட்டில் தனது 3 தங்கைகளையும் வீட்டின் வெளியே இராணுவ நடமாட்டத்தை அவதானிக்க விட்டு தலைவரை வீட்டினுள் நித்திரை கொள்ள இடம் கொடுத்து தலைவனைக் காக்க தான் உறங்காமல் குலம்மாமா விழித்திருப்பாராம். அவரைப் போல அவரது தங்கைகளும் தலைவரைக் கண்ணாகக் கவனித்துப் பாதுகாத்து அனுப்புவதாக கூறுவாராம். தனது ஆரம்பகால வாழ்வு பற்றி தலைவரின் நினைவுகளில் அடிக்கடி நினைவு கொள்ளப்படும் மனிதராக குலம்மாமா இருந்தார். தலைவரால் நினைவு கொள்ளப்படும் உயர்ந்தவர்களுள் தலைவரின் மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்த குலம்மாமா பிறந்ததும் இதே புன்னாலைக்கட்டுவன்தான். 80களில் அவ்ரோ விமானம் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதலின் சந்தேகத்தின் பெயரால் அரச படைகளால் கைது செய்யப்பட்டு குலம்மாமா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு சிறந்த முன்னுதாரணமான போராளியும் கூட. இயக்கம் நாடு இவ்விரண்டையும் தன்வாழ்வாக வாழ்ந்து இன்று கடனாளியாக ஆனாலும் தேசத்தின் இழப்பின் முன்னால் தனது இழப்பொன்றும் பெரிதில்லையென வாழும் அற்புதமனிதன். இவரைப் பற்றி இவரது ஆரம்பம் இயக்கம் விசுவாசம் நேர்மை பற்றி அறியாதவர்கள் சிலர் சிலகாலங்கள் முதல் துரோகிப்பட்டம் வழங்கியது இங்கு நினiவுகூரத்தக்கது. எவர் எத்தகைய விமர்சனத்தை குலம்மாமா மீது கொண்டிருந்தாலும் இன்றும் தான்நேசித்த தலைவனை , தேசத்தை இதயபூர்வமாக நேசித்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் குலம் என்ற மனிதனை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து யாராலும் விலக்கிவிட முடியாது. இந்த ஊரில் குறிப்பிடத்தக்க போராளிகளில் முதல் வீரச்சாவடைந்த போராளி லெப்.குவிசாசன். 85 காலமென நினைவு. யாழ் நகரப்பகுதியில் இராணுவத்துடனான நேரடி மோதலொன்றில் வீரச்சாவடைந்த மாவீரர். இவரது குடும்பமும் முழுமையாகத் தங்களை ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தியாகங்களைப் புரிந்த குடும்பங்களில் ஒன்று. லெப்.குவிவாசன் மாமாவின் அம்மா புனிதமன்ரி. எங்கள் தலைவனின் குழந்தைகளான துவாரகா , சாள்ஸ் இருவரையும் குழந்தைகளாய் இருந்த காலத்தில் பராமரித்து வளர்த்தது எல்லோராலும் வீரத்தாய் என 80களில் மதிக்கப்பட்ட புனிதமன்ரி என்பதனை வரலாறு ஒரு போதும் மறந்துவிடாது. இவர்கள் வரிசையில் புன்னாலைக்கட்டுவனில் இருந்து போராளிகளாக புறப்பட்ட பலரில் வீரச்சாவடைந்தவர்கள் வரிசையில் கப்டன் லோலோ (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு) , கப்டன் றங்கன் (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு) வரிசையில் 1992இல் வீரச்சாவடைந்து தனது இலட்சியத்தில் உறுதியோடு பயணித் மாவீரர் மேஜர் டொச்சண்ணாவும் ஒருவர். குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்த டொச்சரண்ணாவின் இயற்பெயர் ஜெயக்குமார். ஊரில் ஜெயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட இளைஞன். புன்னாலைக்கட்டுவன் தொடக்கம் குப்பிளான் , ஏழாலை , குரும்பசிட்டி , வசாவிளான், பலாலி என அயல் ஊர்களெங்கும் அறியப்பட்ட ஜெயாண்ணா இராணுத்தின் கெடுபிடிகள் அதிகரித்த காலங்களில் அந்தக் கொடுமைகளைத் தானும் அனுபவித்தான். ஊரைச் சுற்றிவளைக்கும் இராணுவத்தினரால் ஊரிலிருந்து இழுத்துச் செல்லப்படும் இளைஞர்களின் துயரில் அலையும் அம்மாக்களின் கண்ணீரின் கனதியும் பள்ளிமாணவனாக இருந்த ஜெயாண்ணாவையும் போராட்டம் பற்றிச் சிந்திக்க வைத்தது. எல்லாக் கொடுமைகளுக்குமான தீர்வு தானும் விடுதலைப் போராட்டத்தில் இணைவதே தீர்வென்றெண்ணித் தன்னையும் விடுதலைப்புலிகளுடன் இணைத்து தனது பிரதேசத்துக்கே ஆயுதம் தரித்துத் திரும்பி வந்தார். 1986களில் இராணுவத்தினர் முழுமையாக முகாம்களில் அடக்கப்பட்ட காலம். அப்போது பலாலி முகாமிலிருந்த இராணுவத்தினர் வசாவிளான் நோக்கி முன்னேற முயன்ற காலம். திடீரென காணாமற்போன ஜெயாண்ணா போராளியாக ஊரில் வந்திறங்கினார். இரவுகளில் வசாவிளான் பகுதியில் சென்றியிருக்கும் போராளிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கேணியடியில் அமைந்த எங்கள் கடைக்கு வந்து போவார். அப்பாவோடு அதிக நெருக்கத்தைக் கொண்ட போராளிகளில் டொச்சண்ணாவும் ஒருவர். டொச்சண்ணாவுக்கு அப்பாவின் பிரத்தியேக கவனிப்பு எப்போதுமே காத்திருக்கும். எங்களோடு அடிபட்டு எங்கள் வீட்டிலும் ஒருவனாக வந்து போன போராளி. அம்மா இல்லாத பிள்ளையென்றதால் அதிகம் அன்பை எங்களிடத்திலும் பெற்றுக் கொண்டார். பதின்ம வயதுகளில் தனது வீட்டிற்காகவும் தன்னை வளர்த்த அம்மம்மாவுக்காகவும் உழைத்த பொறுப்புள்ள பிள்ளை. விவரிக்க முடியாத துயரையும் வெளியில் தெரிவிக்க முடியாத இழப்பின் கனத்தையும் இதயத்தில் சுமந்து திரிந்த தென்றல் அது. மெல்லிய உயர்ந்த உருவமான டொச்சண்ணா அன்றைய காலத்து நினைவுகளில் எப்போதுமே சிரித்தபடி சயிக்கிளில் வந்திறங்கும் இனிமையான போராளி. நாய்க்குட்டியென டொச்சண்ணாவை சொல்வார்கள். நாய்க்குட்டியென்ற அடைமொழி ஏன் அவரது பெயருக்குப் பின்னால் வந்ததெனத் தெரியாத வயது அது. கோபம் வந்தால் நாய்க்குட்டியென்று சொல்லிச் சினத்தாலும் சிரிப்போடு ஏற்றுக் கொண்டு போய்விடும் மனிதன். ஒருமுறை நாய்க்குட்டியென்ற பெயருக்கான காரணத்தை அந்த வீரனின் தோழன் ஒருவனிடமிருந்து அறிந்த போது அந்த இனிமையான போராளி மீதான மதிப்பு மேலுயர்ந்தது. வீதியில் கண்டெடுத்த நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து அந்த நாய்க்குட்டியைத் தன்னோடு கொண்டு திரிந்து அன்பைப் பொழிந்த இளைஞனின் கருணையை காலம் ஒரு போதும் தனது நன்றியால் நினைவு வைத்திருக்கும். பலாலியிலிருந்த இராணுவத்தினரால் ஏவப்படும் எறிகணைகள் புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் ஏழாலையென நீண்டது. உலங்குவானூர்தியின் தாக்குதல் தொடர் மரணத்தின் கொடிய கையால் பலரது உயிர்கள் இடுங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வாசவிளான் மத்தியமகா வித்தியாலயம் மாணவர்களின் நடமாட்டம் கலகலப்பு எதுவுமின்றி அனாதையானது. டொச்சண்ணாவையும் சிறந்த மாணவனாக உருவாக்கியதும் அதே பாடசாலைதான். இரவிரவாக தொடர் தாக்குதல். வெடிச்சத்தங்கள் இரவை அறுத்து எங்கள் அமைதியைக் கொன்றது. வசாவிளான் மத்தியமகாவித்தியாலத்தைக் கைப்பற்றும் கனவோடு இராணுவத்தின் இலக்கும் நகர்வும் ஆரம்பித்தது. டொச்சண்ணா படித்த பாடசாலையான வசாவிளான் மத்தியமகா வித்தியாலயத்தினைக் கைப்பற்றும் முயற்சியில் புறப்பட்ட இராணுவத்தினரோடு சமராட எங்களது டொச்சண்ணாவும் இணைந்து கொண்டது வரலாறு. எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சியோடு தனது பாடசாலையை தான் நேசித்த ஊர்களைக் காக்கும் கனவோடு களமாடிய வேங்கை. வசாவிளான் மத்தியமகா வித்தியாலயம் இராணுவத்தினரிடம் பிடிபடுகிற போது அவர்களுக்கான வசதிகள் எதையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் போராளிகள் ஈடுபட்டார்கள். மெல்ல மெல்ல இராணுவத்தின் முன்னேற்றம் தொடர் எறிகணைகள் விமானத்தாக்குதல் ஒரு கட்டத்தில் வசாவிளான் பகுதி இராணுவத்தினரிடம் பறிபோக வேண்டிய நிலமை வந்தது. புலிகள் பின்வாங்கி நின்று வசாவிளானில் தங்கியிருந்த இராணுவத்திற்குப் பெரும் தலையிடியாகினர். சமரொன்றின் போது களத்தில் நின்று கழுத்துப் பகுதியில் காயமடைந்து டொச்சண்ணா விழுப்புண்ணடைந்தார். என்றும் மாறாத இலட்சியக்கனவோடு காயமென்ன கடுமையென்ன எதுவும் அந்த இரும்பின் உறுதியின் முன் வெறும் துகள்களாக….! 1987 அமைதி காக்க வந்தார்கள். ஆயுதங்கள் கையளிப்பு நிறைவாகி. நிராயுதபாணிகளாய் புலிகள் நின்ற நேரம் தியாகி திலீபனண்ணா உண்ணாவிரத காலத்தில் ஓயாமல் ஓடித்திரிந்து இயங்கிய புலியாய் டொச்சண்ணா. 10.10.1987 அமைதிகாக்க வந்தபடையுடனான யுத்தம் ஆரம்பம். ஆறாத விழுப்புண்ணோடு அலைந்து களங்களில் விழியுறக்கம் மறந்த வேங்கை இந்தியப்படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையென்ன பெரிதென்ற எங்கள் புலி எல்லா வதைகளையும் தாங்கியபடி காங்கேசன்துறை தடுப்பு முகாமில் சிறைவாசத்தை அனுபவித்தது. தான் கொண்ட கொள்கைளில் கறையில்லாமல் புனிதத்தோடே டொச்சண்ணா சிறை வாழ்வை ஒரு போராளியின் உறுதியோடு வாழ்ந்து காட்டினார். இந்தியப்படைகள் ஈழத்தைவிட்டு வெளியேறிய போது சாரத்தோடு எங்கள் முன் சாறக்கட்டுப்புலியாகாத் திரிந்த புலி வரிச்சீருடையோடு எங்கள் ஊருக்குள் வந்திறங்கிய போது யாராலும் நினைக்காத வளர்த்தியும் மாற்றமும் ஆனாலும் நாங்கள் அன்று பார்த்த பழகிய பழைய அதே டொச்சண்ணாவாக எங்களோடு மீண்டும்….! ஒவ்வொரு போராளியும் தனது மரணத்தின் நாளை தனது மனவேட்டில் பதிவு செய்து கொண்டேயிருப்பார்கள். ஆனால் அவர்களது பயணத்தில் எவ்வித பயமும் இல்லாது தொடர்வார்கள். அப்படியே டொச்சண்ணாவும்…! குப்பிளான் பிரதேசப் பொறுப்பாளனாக பதவியேற்று வந்த டொச்சண்ணா தான் பழகிய வீடுகளை மறக்காமல் எங்கும் வந்து போவார். 1990மேமாதம் புன்னாலைக்கட்டுவன் பெற்ற வீரப்புதல்வர்களுக்கான நினைவுநாள் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி அந்த நினைவு நாளில் அந்த ஊரில் புலியாகி வீரச்சாவடைந்த லெப்.குவிவாசன் , கப்டன் லோலோ, கப்டன் ரங்கன் ஆகியோரின் திருவுருவப்படங்கள் தாங்கிய மேடையில் நடந்த நிகழ்வில் டொச்சண்ணா தனது தோழர்கள் பற்றி நினைவு கூர்ந்த போது ஒரு சிறந்த பேச்சாளனாகவும் எங்களது மதிப்பைப் பெற்றார். 1990யூன் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம். எங்கள் ஊரில் முகாமிட்டிருந்து தனது அரசியல் பணியை அக்காலத்தின் தேவையையெல்லாம் டொச்சன் என்ற இளம் போராளியின் வேகத்திலும் விவேகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம். தனது அலுவலகத்திற்கு அண்மையில் அமைந்திருந்த வெளியில் பந்தலிட்டு கோட்டை இராணுவத்தினரை துரத்திய கோட்டை வெற்றி விழாவை தியாகி திலீபண்ணாவின் நினைவு நாளன்று நடாத்திய பெருமையும் எங்கள் டொச்சண்ணாவையே சாரும். காலமாற்றம் எங்கள் ஊரில் திரிந்த டொச்சண்ணாவை போர்வல்லுனராய் தளபதியாய் மாற்றியது. அரசியல் பணியிலிருந்து விடுபட்டு களத்தில் மீண்டும் சண்டைக்காரனாக…! களமே வாழ்வாக அவரது களங்கள் எங்கும் விரிந்து பரந்தது. ஊர்கள் வெறிச்சோடி மனிதர்களை இழந்தது ஆனாலும் தான் ஓடித்திரிந்த ஊர்களைக் காக்கும் பணியில் டொச்சண்ணா மீண்டும்….! தமிழரசன் என்ற பெயர் யாருக்கும் நினைவில்லை ஆனால் டொச்சன் என்ற பெயரை அப்போது தெரியாத குழந்தையே இருக்கவில்லை. அவ்வளவுக்கு அந்தப் பெயர் யாழ்மாவட்டத்தின் அனேக இடங்களில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு படையணியை வழிநடத்தும் திறன் மிக்க தளபதியாய் மாற்றம் கொண்ட வீரன். வலிகாமம் தாக்குதல் தளபதியாய் உயர்ந்து நின்ற போர்த்தளபதி. பலாலி,கோட்டை,மின்னல் (மணலாறு) என களங்கள் கண்ட ஓயாதபேரலை. 8தடவைகளுக்கு மேல் விழுப்புண்ணடைந்தும் இலட்சியத்தில் தனது இலக்கில் பின்னடைவைக் காணாத புன்னகைமாறாத போர்வீரன். களமும் காயமடைதலும் அந்தப்புலி வீரனுக்குப் புதியதில்லை. சமரொன்றில் காயமடைந்து (மின்னல் சமரென நினைவு) முழுமையாக குணமடையாத நிலமையிலும் பலாலி இராணுவத்தின் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதலில் தானும் கூடவே சண்டையில் நின்றார். அச்சண்டையின் தேவையை உணர்ந்து களத்தில் நின்றவர்களோடு தானும் ஒரு வீரனாகி நின்றார். அத்தாக்குதலில் புலிகளணி பெரும் வெற்றியைப் பெற்றது. பெற்ற வெற்றியில் மகிழ்ந்து ஆரவாரித்த போராளிகளின் மகிழ்ச்சியின் தருணம் அது. டொச்சண்ணாவும் இன்னும் தளபதிகள் போராளிகள் கூடி திசையெங்கும் நின்ற வேளையது. தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரி பலாலியிலிருந்து தலைநிமிர முடியாத அளவுக்கு எறிகணைகளை ஏவிக் கொண்டிருந்தான். இதே களத்தில் நின்ற கப்டன் மலரவன் என்ற உன்னதமான போராளியின் உயிர் மூச்சும் வளலாய் பகுதிமீது எதிரி ஏவிய எறிகணையில் தனது மூச்சை நிறுத்தி கப்டன் மலரவனாக தன்னை வரலாற்றில் பதிவு செய்து கொண்டது. 23.11.1992 ஈழவிடுதலைப் போராட்டத்தின் போர் இலக்கியமாக போற்றப்படும் ‘போர்உலா’ என்ற இலக்கியப் பொக்கிசத்தை எங்களுக்குத் தந்த போராளி. எத்தனையோ களங்களில் தனது கள அனுபவங்களை எழுத்தாக்கிய வீரன். ஒரு கையில் பேனாவோடும் மறுகையில் துப்பாக்கியோடும் களமெங்கும் திரிந்த கப்டன் மலரவன் அவர்களின் இழப்பு பேரிழப்பாக அமைந்தது. அன்று மலரவனோடு மண்மீட்பில் 57மாவீரர்கள் தங்கள் இன்னுயிர்களை ஈகம் தந்து தங்கள் இறுதி மூச்சை பலாலிப்பகுதியில் கரைத்துக் காவியமானார்கள். அதேபோல எங்கள் டொச்சண்ணாவும் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று 24.11.1992 அன்று வீரச்சாவடைந்து மேஜர் தமிழரசனாக (டொச்சன்) தான் நேசித்த இலட்சியத்தின் பாதையில் தனது கடமையை நிறைத்த மகிழ்வோடு மாவீரனாக….! முதல் சண்டையனுபவம் கண்ட பலாலிப்பகுதியே அந்த இனிய போராளியின் இறுதிக்களமாகி எங்கள் நெஞ்சங்களில் ஆறாத துயரைத் தந்து சிரித்தபடியே நினைவுகளில் இன்றும் ஞாபகமாய்….கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் உறங்கிப் போனார். சிறுவனாக பின்னர் இளைஞனாக இருந்த காலத்தில் அந்தப்புலிவீரன் சயிக்கிளில் சுற்றிய மயிலிட்டி , பலாலி , வசாவிளான் , ஒட்டகப்புலம் , அச்சுவேலி , வளலாய் என ஊர்களைக் கொள்ளையிட்டு வைத்திருந்த படைகள் மீது தாக்குதல் தொடுக்கும் போர் வீரனாய் டொச்சனென எல்லாராலும் நேசிக்கப்பட்ட வீரன் இறுதி மூச்சுக் கரைந்ததும் அந்த வீரன் திரிந்த பழகிய இடங்களில் ஒன்றான வளலாய் தான் என்பது வரலாற்றின் அதிசயம் தான். ஒவ்வொரு போராளியின் இறுகிய இதயங்களுக்குள்ளும் ஈரமான ஒவ்வொரு காதல் நினைவும் காதலும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. மெல்லிய , நெடிய அந்தச் சிரித்தபடி திரியும் வீரனின் இதயத்திற்குள்ளும் ஒருத்தி குடியேறியிருந்தாள் என்பதனைப் பின்னாளில் கூடவிருந்த ஒரு போராளி நினைவு கூர்ந்திருந்த போது நாங்கள் நேசித்த எங்கள் அயல் ஊரவனாகப் பிறந்து எங்கள் ஊரையும் காத்த பெருமைக்குரிய அந்தப்புலி வீரனை என்றென்றும் பெருமையோடே நினைவு கூரும் வகையில் அவனது வாழ்வும் வரலாறும் உயர்ந்து நிற்கிறது. காதலைவிடவும் கடமையை தாயகத்தின் மீதான பாசத்தை தனது ஒவ்வொரு செயலாலும் வெளிப்படுத்தி தனது சொல் ஒவ்வொன்றின் முன்னாலும் செயலாய் வாழ்ந்து காட்டிய விடுதலைப் போராளிகளில் ஒருவராக எங்கள் நினைவுகளோடு சேர்ந்தே பயணிக்கும் தமிழரசன் அல்லது டொச்சன் என்ற மாவீரனின் நினைவுகளையும் சுமந்தபடி…. அவர்களது கனவுகளை எட்டும் காலமொன்றின் வரவிற்காய்….! நினைவுப்பகிர்வு: சாந்தி நேசக்கரம். (18வருட நினைவு நாளில் வரையப்பட்டது) https://thesakkatru.com/mejor-tamilarasan-dozen/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கார்த்திகை மாதத்தின் மழை துளி வேங்கை அணி தளபதியாய் ஓடுதையா தமிழீழத்தில் கண்ணீர் ஆறு தளபதி தீபன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சிங்கார வடிவேலன் சேவர்கொடி அழகா கல்யாண முருகன் கையில் ஒரு வேலுடன் எங்க முத்தாரம்மா
- மல்லிகை வாசம்.gif
- தனிக்காட்டு ராஜா.jpg
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்கு சொல்லிடுவேன் ஆயிரம் நன்றி சொல்வேன் உனக்கு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 யா ரஸூலல்லாஹ் என்றழைப்பீர் நபியே... நான் என்றும் உங்கள் அன்பன் அல்லவா
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்படியொரு விதியில்லை😀, நிர்வாகம்தான் இதற்கு பதில் தரவேண்டும், ஏன் உங்களுக்கு தெரியவில்லையென்று திண்ணை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை தடை நீக்கியாச்சே உங்களுக்கு, ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இருவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எல்லாரும் சுகம்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கல்லறை மேனியர் கண் அன்னைத் தமிழீழ மண்னே தேழன் நவநீதன்
- வாதவூரான்.jpg
- theeya.gif
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருவுந்தியார் | வளைந்தது வில்லு ... வாழ்வே பொய்யப்பா மந்திர முதலே கந்தையா அழகு வடிவேலவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2) 1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன் உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல் களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2 2. என் சிறு இதய வயலுமே செழிக்க இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2 அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும் அனுதினம் என்னை வளர வைத்தாய் -2 3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர் அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 கதீஜா எம் தாயே... மாறாதே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் சுவிஸ் செங்காளன் கதிர் வேலாயுத சுவாமியின் புகழ் பாடும் “ஆனந்த அருட்கோலம்”எனும் எட்டு பாடல்கள் அடங்கிய எமது இசைத்தொகுப்பில் இருந்து மற்றும் ஒரு பாடலாகிய இப்பாடலை வெளியீடு செய்கின்றோம் பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடலாசிரியர் -விஸ்வசீதா அட்சரநாதன் பாடல் குரல் வடிவம் -பிரதா கந்தப்பு வெளியீடு -செங்காளன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் (சுவிஸ் )