Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம் தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குதிரைவாலி - 1 கப் நீர் - 3 கப் தயிர் - 1/2 கப் பால் - 2 கப் உப்பு - சிறிதளவு எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது செய்முறை : * கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். * வேக வைத்த சாதத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். * ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பின் பெருங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து, கிளறி வைத்த சதத்துடன் சேர்த்து பரிமாறவும். * சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம் ரெடி.
  2. சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா சப்பாத்தி, சாதம், புலாவ், பூரிக்கு தொட்டு கொள்ள இந்த புதினா இறால் மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 200 கிராம் புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 பூண்டு - 5 பற்கள் பச்சை மிளகாய் - 1-2 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - 1 1/2 கப் செய்முறை : * இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். * புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். * இன்னொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். * அடுத்து அதில் தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். * இப்போது ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்கவும். * அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். * இப்போது சுவையான புதினா இறால் மசாலா தயார்! * இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
  3. புத்துணர்ச்சி தரும் மாதுளை சப்போட்டா சாலட் வெயில் நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். இந்த வகையில் இன்று மாதுளை சப்போட்டா சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாதுளை முத்துக்கள் - 2 கப், சப்போட்டா - 3, ஆப்பிள் - 2 துண்டுகள், லெமன் சாறு - அரை ஸ்பூன் தேன் - 1 டீஸ்பூன். செய்முறை: * சப்போட்டாவின் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். * ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் அரைத்த சப்போட்டா விழுது, பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்து நன்றாக கலக்கவும். * கடைசியாக தேன், லெமன் சாறு கலந்து பரிமாறவும். * மாதுளை சப்போட்டா சாலட் ரெடி. * வித்தியாசமான இந்த சாலட், வெயில் நேரத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.
  4. நெல்லிக்காய் ரெசிப்பி நெல்லிக்காய் புலாவ் நெல்லிக்காய் ரசம் நெல்லிக்காய் கொத்சு ஹனி நெல்லி நெல்லிக்காய் பச்சடி நெல்லிக்காய் தொக்கு நெல்லிக்காய் ஜாம் நெல்லி-கொத்தமல்லி மோர் நெல்லி சூப் நெல்லிக்காய் மரப்பா பல்வேறு சத்துகளையும் மருத்துவக் குணங்களையும் கொண்ட பெரிய நெல்லிக்காயில்... நாவுக்கு ருசியான, விதவிதமான ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் சுதா செல்வகுமார். சமைத்து, ருசித்து, பரிமாறி மகிழுங்கள்; ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள். நெல்லிக்காய் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப் நெல்லிக்காய் - 15 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப) கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, உளுந்துப்பொடி – தலா ஒரு டேபிள்ஸ்பூன் பட்டை - அரை அங்குலத்துண்டு கிராம்பு - 2 அன்னாசிப்பூ - ஒன்று நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்துவிட்டு வெறும் வாணலியில் வறுக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பொலபொலவென்று சாதமாக வடிக்கவும். பாதி நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கித் துருவவும், மீதி நெல்லிக்காய்களைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி... கடுகு, சீரகம், வேர்க்கடலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து... பச்சை மிளகாய் விழுது, நெல்லிக்காய்த் துருவல், உப்பு, நெல்லிக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உளுந்துப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். குறிப்பு; முழு வெள்ளை உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொண்டால் உளுந்துப் பொடி ரெடி. நெல்லிக்காய் ரசம் தேவையானவை: நெல்லிக்காய் - 4 துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் பூண்டு – 2 பல் காய்ந்த மிளகாய் - 2 மிளகு – ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய், துவரம்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கிவிட்டு, வேகவைத்ததை மசிக்கவும். மிக்ஸியில் சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் மசித்த நெல்லி - பருப்பு விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். நெல்லிக்காய் கொத்சு தேவையானவை: நெல்லிக்காய் - 10 சின்ன வெங்காயம் - கால் கப் மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை தனியா, கடலைப்பருப்பு, சீரகம், கடுகு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி – தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: நெல்லிக்காயைத் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். ஆறிய பின் கொட்டையை நீக்கி சுளையை மசிக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த நீரை தனியாக எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுக்கவும். ஆறிய பின் ஒன்றாக சேர்த்துப் பொடித்தால் கொத்சு பொடி தயார். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு நெல்லிக்காய் விழுது, நெல்லிக்காய் வேகவைத்த நீர் ஊற்றி ஒரு கொதிவிடவும். பிறகு சாம்பார் பொடி, மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் கொத்சு பொடி, வெந்தயப்பொடி தூவி இறக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையால் அலங்கரித்துப் பரிமாறவும். ஹனி நெல்லி தேவையானவை: நெல்லிக்காய் – கால் கிலோ தேன் - அரை கிலோ குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (விரும்பினால்) செய்முறை: நெல்லிக்காயைச் சுத்தமான நீரில் அரை மணி நேரம் போட்டுவைக்கவும். பிறகு எடுத்து ஈரம் போக துடைக்கவும். வெயிலில் நன்கு காயவைக்கவும். தேனில் பாதியளவை கண்ணாடி ஜாரில் ஊற்றவும். அதன் மீது நெல்லிக்காயைப் போடவும். பிறகு மீதமுள்ள தேனை மேலே ஊற்றவும். கண்ணாடி ஜாரை சுத்தமான வெள்ளைத் துணியால் மூடவும். வெயில் படும் இடத்தில் இரண்டு நாள்கள் வைக்கவும். பிறகு, வெள்ளைத் துணியை எடுத்துவிட்டு மூடி போட்டு இறுக்கமாக மூடவும். ஜாரைக் குலுக்கவும். பிறகு, மீண்டும் வெயில் படும் இடத்தில் ஒரு நாள் வைக்கவும். நெல்லியில் தேன் இறங்கி, ஊறிவிடும். (விருப்பப்பட்டால் மேலே குங்குமப்பூ சேர்க்கலாம்). குறிப்பு; பாட்டிலில் நெல்லி - தேனை முக்கால்வாசி நிரப்பினால் போதும். தேன் ஊற ஊற நெல்லி பெரிதாகும். முழுவதும் தேன் - நெல்லி நிரப்பினால் அடுத்த இரு தினங்களில் நிரம்பி வழியும். நெல்லிக்காயின் கொட்டையை எடுத்துவிட்டு நறுக்கியும் தேனில் ஊறவைக்கலாம். நெல்லிக்காய் பச்சடி தேவையானவை: நெல்லிக்காய் - 2 பச்சை மிளகாய் - 2 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் தயிர் - ஒரு கப் கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: நெல்லிக்காயைத் துருவவும். சிறிதளவு நெல்லித் துருவலை தனியாக எடுத்து வைக்கவும். நெல்லிக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, இஞ்சித் துருவல் தாளித்து நெல்லிக்காய் விழுதில் சேர்க்கவும். பரிமாறும் முன் தயிருடன் கலந்து தனியாக எடுத்துவைத்த சிறிதளவு நெல்லித் துருவலை மேலே தூவி பரிமாறவும். நெல்லிக்காய் தொக்கு தேவையானவை: நெல்லிக்காய் துண்டுகள் - 2 கப் (கொட்டையை நீக்கவும்) கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: நெல்லித் துண்டுகளை ஆவியில் வேகவிடவும். ஆறிய பின் சுளைகளாக உதிர்க்கவும். மிக்ஸியில் நெல்லி சுளைகளைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நெல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். நன்கு வெந்து சுருள வரும்போது வெந்தயப்பொடி தூவி இறக்கவும். ஈரம் இல்லாத, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இது நீண்ட நாள்கள் நன்றாக இருக்கும். நெல்லிக்காய் ஜாம் தேவையானவை: நெல்லிக்காய் – அரை கிலோ சர்க்கரை (பொடித்தது) - 2 கப் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா டீஸ்பூன் ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை செய்முறை: நெல்லிக்காயை ஆவியில் வேகவிடவும். ஆறிய பின் கொட்டையை நீக்கி நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுது, பொடித்த சர்க்கரையை வாணலியில் சேர்த்துக் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், ஃபுட் கலர் சேர்த்துக் கிளறி இறக்கவும். குறிப்பு; சர்க்கரைக்குப் பதிலாக வெல்லப்பாகு பயன்படுத்தியும் செய்யலாம். நெல்லி - கொத்தமல்லி மோர் தேவையானவை: நெல்லிக்காய் - 5 மோர் - 3 கப் இஞ்சித் துருவல், ஓமம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை பச்சை மிளகாய் - 2 கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் ஓமம், இஞ்சித் துருவல், சிறிதளவு கொத்தமல்லித்தழை, சீரகம், பச்சை மிளகாய் ஒன்று, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மோருடன் அரைத்த விழுதைக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மோரில் சேர்க்கவும். மீதமுள்ள கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும். நெல்லி சூப் தேவையானவை: நெல்லிக்காய் - 2 வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், பாசிப்பருப்பு, வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் கிராம்பு - 2 பட்டைத்தூள் - அரை டீஸ்பூன் வெள்ளை வெங்காயத் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: நெல்லிக்காய், பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவைத்து ஆறிய பின் மசிக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு, சூடானதும், வெங்காயம், கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து வதக்கி... நெல்லி விழுது, தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும். நெல்லிக்காய் மரப்பா தேவையானவை: நெல்லிக்காய் - ஒரு கிலோ சர்க்கரை - அரை கிலோ ஏலக்காய்த்தூள், மிளகுத்தூள் கறுப்பு உப்பு - தலா ஒரு டீஸ்பூன் பூரா சர்க்கரை - கால் கப் செய்முறை: இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் நெல்லிக்காயைப் போட்டு பத்து நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு, கொட்டைகளை நீக்கி சுளைகளாக உதிர்த்துக்கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நெல்லி சுளைகள், சர்க்கரை சேர்த்து இரண்டு நாள்கள் மூடி வைக்கவும். நெல்லிக்காயில் சர்க்கரையின் இனிப்பு அதில் இறங்கி இருக்கும். சர்க்கரை தண்ணீரை வடிகட்டவும். இதை பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு இரண்டு நாட்கள் உலர்த்தவும். நன்கு உலர, உலர நெல்லி கடினமாகும். பிறகு இதனுடன் பூரா சர்க்கரை, மிளகுத்தூள், கறுப்பு உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். நெல்லி மரப்பாவை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம். குறிப்பு: பூரா சர்க்கரை செய்ய: ஒரு கப் சர்க்கரைக்கு 5 டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டு திக்கான பாகு காய்ச்சவும். இதில் அரை டீஸ்பூன் நெய் விடவும். இறக்கிவைத்து ஆறவிடவும், இந்த சர்க்கரைப் பாகு கட்டியை மிக்ஸியில் நைஸாக பொடித்துக்கொள்ளவும். இதுதான் பூரா சர்க்கரை.
  5. குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. மஞ்சூரியன் கிரேவிக்கு: கறிவேப்பிலை - சிறிது, சின்ன வெங்காயம் - 50 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: * சின்ன வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி அரைவேக்காடு பதத்துக்கு வேகவைக்கவும். * ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், பச்சரிசி மாவுடன் மிளகுத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாகக் கரைக்கவும். * இந்த மாவில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும். * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்துப் புரட்டவும். * அடுத்து வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டி வதக்கவும். * கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும். * சூப்பரான ஆலு மஞ்சூரியன் ரெடி.
  6. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
  7. உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 10 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை வெந்தயம் - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்றவாறு செய்முறை : * ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். * சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும். * நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும். * வெறும் கடாயில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். * அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும். * சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி. * இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  8. குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ் இன்று சிக்கனைக் கொண்டு ஃப்ரைடு ரைஸ் செய்கிறோமோ, அதேப் போன்று இறாலைக் கொண்டு எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்வதென்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உதிரியாக வடித்த சாதம் - 2 கப் இறால் - 250 கிராம் (சிறியது) கேரட் - 3 பீன்ஸ் - 10 குடமிளகாய் - 1 வெங்காயத்தாள் - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - சிறிது செய்முறை: * கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். * இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு அதே வாணலியில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய, பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். * பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். * கடைசியாக அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான இறால் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!!
  9. மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, அவல் சேர்த்து போண்டா செய்து கொடுக்கலாம். இந்த அவல் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தட்டை அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு. செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். * அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். * கடாயை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும். * சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா ரெடி.
  10. சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா சில்லி முட்டை மசாலா சிறிது கிரேவி போல் இருப்பதால் மசாலாவின் சுவை தான் தனி சிறப்பு. இந்த ரெசிபியை செய்வது மிக சுலபம். இந்த முட்டை மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.. தேவையான பொருட்கள் : வேக வைத்த முட்டை - 2 பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் கிராம்பு, பூண்டு - 2 உப்பு - சுவைக்கேற்ப சோயா சாஸ் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் புளிக்கரைசல் - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். * அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும். * வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும். * அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். * இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம். * சில்லி முட்டை மசாலா ரெடி! * சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்.
  11. மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப் உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது மிக சுலபம். இதை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 200 கிராம் பிரட் - 6 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லி இலை - சிறிதளவு சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு கேரட் - 1 பச்சை மிளகாய் - 3 சோள மாவு - 2 டீஸ்பூன் சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப செய்முறை : * பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விடவும். * கேரட், உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்துக் கொள்ளவும். * இஞ்சி தோலை உரித்து விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மைய இடித்துக் கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட், இடித்து வைத்த இஞ்சி மசாலா, சீரகப் பொடி, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். * நன்கு பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீர் பிழிந்து விட்டு சேர்த்து கார்ன் ஃபிளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். * பிறகு உருளைக்கிழங்கு மாவை பந்து போல் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக தேய்த்து பிடித்துக் கொள்ளவும். * அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டையாக பிடித்து வைத்த உருளைக்கிழங்கு உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். * பொரித்த உருளைக்கிழங்கில் லாலிபாப் ஸ்டிக்கை சொருகி வைத்து பரிமாறவும். * சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி!
  12. லண்டனில் இல்லாததா.. தமிழ், இந்தியன் கடைகளில் கேட்டு பாருங்கள்.
  13. சரும நோய்களைப் போக்கும் புளிச்சகீரை ஆந்திராவின் கோங்குரா சட்னி மிகவும் பிரசித்தம். அதன் காரத்தை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்துவிடும். நம் ஊரில் புளிச்சகீரை என்று அழைக்கப்படுவதுதான் ஆந்திராவில் கோங்குரா. இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய கீரைகளில் முதன்மையானது புளிச்சகீரை. எனினும், தென் இந்தியாவில்தான் இந்தக் கீரையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் இந்தக் கீரைக்கு உள்ளன. புளிச்சகீரையைக் கடைந்து, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். சிலர், புளிச்சகீரையை ஊறுகாயாகவும் பயன்படுத்துகிறார்கள். பெயருக்கு ஏற்றார்போல புளிப்புச்சுவைகொண்ட இந்தக் கீரைக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உண்டு. பித்தம் உடலில் அதிகமாகி, சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். மந்தம், இருமல், காய்ச்சல், கரப்பான், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை சிறந்த தீர்வு. இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் அளவாகச் சாப்பிட்டுவர, உடலில் ஏற்படும் வறட்சித்தன்மை நீங்கும். சொறி, சிரங்கு முதலிய சருமப் பிரச்னைகளும் நீங்கும். புளிச்சகீரை, காமப்பெருக்கியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. புளிச்சகீரை இலைகளை நசித்து, உடலில் உள்ள பெருங்கட்டிகளின் மீதுவைத்துக் கட்ட, வீக்கம் குறைந்து, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. உடல் வலுவின்றி இருக்கும் குழந்தைகளுக்குப் புளிச்சகீரையை கொடுத்துவந்தால், உடல் புஷ்டி அடையும். புளிச்சகீரையை, மிளகாய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால், குடற்புண்கள் ஆறும்; சிறுநீரக நோய்கள் நீங்கும். உப்பு சேர்க்காமல் புளிச்சகீரையை உணவில் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். http://www.vikatan.com/doctorvikatan/2016-feb-01/food/114731-health-benefits-of-spinach.html புளிச்ச கீரை கடைசல் என்னென்ன தேவை? புளிச்ச கீரை - 1 கட்டு, பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவைக்கு, தனியா - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, எண்ணெய் - தேவைக்கு, வெந்தயம் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1. எப்படிச் செய்வது? கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி, ஆறவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, அரிந்த வெங்காயம், வெந்தயம், தனியா, பச்சை மிளகாய், மிளகாய் தூள் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். அதை ஆறவிட்டு மிக்ஸி யில் போட்டு, சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாதி அரைத்த பின் வதக்கிய புளிச்ச கீரையைப் போட்டு அரைக்கவும். அரைத்ததை இறக்கி வைக்கவும். பூண்டு, காய்ந்த மிளகாயை வதக்கி, பொடித்து புளிச்ச கீரை கடைசலில் போட்டுப் பிரட்டவும். இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ். சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். 1 வாரம் வரை கெடாது.
  14. கிட்ஸ் பார்ட்டி தீம் ரெசிப்பி ஹாட் சாக்லேட் ஃபளோட் வரகு க்ரோக்கெட்ஸ் நூடுல்ஸ் ஸ்பிரிங்ரோல் தாபேலி டோனட்ஸ் வித் சாக்லேட் டிப் & ஐசிங் கிளேஸ் சாக்லேட் ஸ்ப்ரெட் - பீனட் பட்டர் ஃபட்ஜ் ட்ரை கலர் ஃப்ரூட்ஸ் பாப்சிகல் பிஸ்கட் மில்க் ஷேக் கார்லிக் புல்-அபார்ட் சீஸ் பாப்பர்ஸ் ஃப்ரைடு மஷ்ரூம் மோமோஸ் கேரட் அல்வா பார்ஃபை குழந்தைகள் விரும்பும் வகையில் புதுமையான, வண்ணமயமான, சுவையான கிட்ஸ் பார்ட்டி தீம் உணவுகளை அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், இனி பிரமாதமாகட்டும்! ஹாட் சாக்லேட் ஃபளோட் தேவையானவை: பால் - 3 கப் சோள மாவு - ஒரு டீஸ்பூன் சாக்கோ சிப்ஸ் / ரெடிமேட் மில்க் சாக்லேட் பார் - 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 4 டீஸ்பூன் கோகோ பவுடர் - 2 டீஸ்பூன் வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப் (அலங்கரிக்க) செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலுடன், சோள மாவைச் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சோள மாவு கலந்த பாலை ஊற்றிச் சூடேற்றவும். அதனுடன் சாக்கோ சிப்ஸை சேர்த்துக் கிளறவும். சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, ஆறவைத்து கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றவும். அதன் மேலே ஒரு கரண்டி வெனிலா ஐஸ்கிரீம் வைக்கவும். குறிப்பு: ஹாட் சாக்லேட்டை குறைவான தீயில்தான் செய்ய வேண்டும். வரகு க்ரோக்கெட்ஸ் தேவையானவை: வரகு அரிசி - அரை கப் உருளைக்கிழங்கு – அரை கப் (வேகவைத்து மசித்தது) சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன் சீஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கார்ன் - தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: வரகு அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து வேகவைக்கவும். இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து... மசித்த கார்ன், உருளைக்கிழங்கு, சோள மாவு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதன் நடுவில் குழியாக்கி அரை டீஸ்பூன் சீஸ் துருவல் வைத்து மூடவும். ஓவல் வடிவில் உருண்டைகளை உருட்டி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். க்ரோக்கெட்ஸை சுடச்சுட சாஸுடன் பரிமாறவும். நூடுல்ஸ் ஸ்பிரிங்ரோல் தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா - ஒரு கப் சோள மாவு – அரை கப் தண்ணீர் - ஒன்றரை கப் உப்பு - தேவையான அளவு பூரணத்துக்கு: வேகவைத்து வடிகட்டிய நூடுல்ஸ் – அரை கப் கேரட் - கால் கப் (துருவியது) கோஸ் - கால் கப் (துருவியது) வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) வெங்காயத்தாள் - கால் கப் (மிகப்பொடியாக நறுக்கியது) சர்க்கரை - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: ஸ்பிரிங் ரோல் ஷீட்ஸ் செய்ய: ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், சோள மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும். ஒரு கரண்டி மாவை எடுத்து மிக மெல்லிய தோசையாக வார்க்கவும். மேல் பக்கம் லேசாக வெந்ததும் திருப்பிப் போட்டு உடனே எடுத்து தட்டில் வைக்கவும். அதிக நேரம் வேகவைக்க வேண்டாம். தோசையின் ஈரத்தன்மை போனால் போதும். இதேபோல் மீதம் உள்ள மாவை தோசைகளாக வார்க்கவும். ஸ்பிரிங் ரோல்ஸ் செய்ய: ஒரு கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம், கோஸ், கேரட், பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த நூடுல்ஸ், உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து வதக்கி இறுதியில் வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி ஆறவிடவும். சிறிய பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் மைதாவுடன், தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட் பதத்துக்கு கலந்து கொள்ளவும். நூடுல்ஸ் கலவையை ஒரு கரண்டி எடுத்து, தயார் செய்த தோசையின் ஒரு ஓரத்தில் நீளவாக்கில் வைத்து ஒரு முறை சுருட்டிக்கொள்ளவும். பின்னர், இரண்டு பக்கங்களிலிருந்தும் மடித்து, மீண்டும் சுருட்டி மைதா பேஸ்ட்டை தடவி ஓரத்தை ஒட்டிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, சுருட்டிய தோசைகளை ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு பொரித்து எடுத்தால், ருசியான ஸ்பிரிங் ரோல்ஸ் தயார். தாபேலி தேவையானவை: பாவ் – 12 உருளைக்கிழங்கு – 2 கப் (வேகவைத்து, தோலுரித்து, மசித்தது) மாதுளை முத்துகள் – அரை கப் எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன் சேவ் – அரை கப் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் வேர்க்கடலை (வறுத்தது) – கால் கப் வெண்ணெய் – கால் கப் வெங்காயம் (நறுக்கியது) – 2 கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு (நறுக்கவும்) புதினா சட்னி - அரை கப் மிளகாய் சாஸ் - அரை கப் உப்பு – தேவையான அளவு தாபேலி மசாலா செய்வதற்கு: காய்ந்த மிளகாய் – 8 தனியா – 4 டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் லவங்கம் – 4 பட்டை (பெரியது) – ஒன்று மிளகு – அரை டீஸ்பூன் கொப்பரைத் தேங்காய் (துருவியது) - ஒரு டேபிள்ஸ்பூன் ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) – அரை டேபிள்ஸ்பூன் செய்முறை: தாபேலி மசாலா செய்ய... காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், லவங்கம், பட்டை, மிளகு, கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை வாணலியில் வறுக்கவும். அதனுடன் ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும். தாபேலி செய்ய... ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் வறுத்த வேர்க்கடலை, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வைத்துக்கொள்ளவும். மீண்டும் எண்ணெயைச் சூடாக்கி, அரைத்த மசாலா பொடியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு பாத்திரத்தில், மாதுளை முத்துகள், சேவ், வறுத்த வேர்க்கடலை, வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான சூட்டில் சூடாக்கிக்கொள்ளவும். பாவ்-வின் நடுவில் வெண்ணெய், புதினா சட்னி மற்றும் மிளகாய் சாஸ் தடவி தோசைக் கல்லில் சுட வைக்கவும். பாவ்-வின் நடுவே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, அதன் மேலே மாதுளை முத்துகள் கலவையைத் தூவி புதினா சட்னி மற்றும் மிளகாய் சாஸுடன் பரிமாறவும். டோனட்ஸ் வித் சாக்லேட் டிப் & ஐசிங் கிளேஸ் தேவையானவை: டோனட்ஸ் செய்ய... மைதா – ஒரு கப் சர்க்கரை - கால் கப் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் (உருக்கவும்) டிரை ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் பால் - கால் கப் முட்டை – ஒன்று எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு 4 இன்ச் அளவில் வட்டமான பாட்டில் மூடி - ஒன்று வட்டமான பிஸ்கட் கட்டர் - ஒன்று சாக்லேட் டிப்பிங் செய்யவதற்கு: கோகோ பவுடர் - கால் கப் சர்க்கரை – கால் கப் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் ஐசிங் கிளேஸ் செய்வதற்கு: ஐசிங் சுகர் – 2 கப் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன் ஃபுட் கலர் - (பிங்க் அல்லது க்ரீன் அல்லது ஆரஞ்ச்) - சிறிதளவு வெனிலா அல்லது ஏதாவது ஃப்ரூட் எசன்ஸ் - சிறிதளவு செய்முறை: கால் கப் வெதுவெதுப்பான (கைபொறுக்கும் அளவு சூடு) பாலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஈஸ்டை கலந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். மைதாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்த்து சலித்துக்கொள்ளவும். மீதமுள்ள சர்க்கரையை மிக்ஸியில் பொடியாக்கவும். பொடித்த சர்க்கரை, வெண்ணெய் இரண்டையும் ஒரு மரக்கரண்டி கொண்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். வெண்ணெய் கலவையில் மைதா, ஈஸ்ட் கலவையைச் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து, ஒரு தடவை பிசைந்துகொள்ளவும். சாத்துகுடி அளவில் மாவை எடுத்து சப்பாத்திக் கல்லில் வைத்து ஒரு இன்ச் உயரம் இருக்கும்படி மெதுவாகத் திரட்டி பெரிய வட்டமான மூடியினால் வெட்டிக்கொள்ளவும். நடுவில் சிறிய மூடியினால் வெட்டிவிட்டு, ஒரு தட்டில் வைக்கவும். இப்போது உளுந்துவடை போன்ற வடிவத்தில் இருக்கும். இதுபோல எல்லா மாவிலும் செய்துகொண்டு, மீண்டும் 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். டோனட் அழகாக பொங்கி வரும். சூடாக இருக்கும்போதே மேலே பொடித்த சர்க்கரையைத் தூவிவிடவும். சாக்லேட் டிப்பிங் செய்ய... சர்க்கரையை அரை கப் தண்ணீர்விட்டு, கோகோ பவுடர், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும். சாஸ் போல திக்காக இருக்க வேண்டும். ஒரு டோனட்டை எடுத்து சாக்லேட் சாஸில் பாதி அளவுக்கு டிப் செய்து சாக்லேட் கோட்டிங் மேலே இருக்குமாறு ஒரு தட்டில் வைத்து ஆறவிட்டு உபயோகிக்கலாம். ஐசிங் கிளேஸ் டிப்பிங் செய்ய... அடிகனமான பாத்திரத்தில் ஐசிங் சுகர், வெண்ணெய், தண்ணீர் (மிதமான சூட்டில்) கலக்கவும். சுற்றி ஓரங்களில் குமிழிகள் வரும். பார்க்க மென்மையாகவும் பளபளவென வருவதையும் கவனிக்கலாம். சூடாக இருக்கும்போதே எசன்ஸ், கலர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு டோனட்டை எடுத்து ஐசிங் கிளேஸைப் பாதி அளவுக்கு டிப் செய்து கிளேஸ் கோட்டிங் மேலே இருக்குமாறு ஒரு தட்டில் வைத்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் ஐசிங் செட் ஆகிவிடும். சாக்லேட் ஸ்ப்ரெட் - பீனட் பட்டர் ஃபட்ஜ் தேவையானவை: சாக்லேட் ஸ்ப்ரெட் ஹேசல்நட் (நியூட்டெல்லா) - 2 கப் ரெடிமேட் டார்க் சாக்லேட் பார் – 150 கிராம் சர்க்கரை – அரை கப் வெண்ணெய் – அரை கப் சிலிக்கான் மஃபின் மோல்ட் - தேவையான அளவு பீனட் பட்டர் - 2 கப் சர்க்கரை (பொடித்தது) – முக்கால் கப் வெண்ணெய் – அரை கப் செய்முறை: அடிகனமான பாத்திரம் ஒன்றில் பார் சாக்லேட்டுகளை சிறிய துண்டுகளாக உடைத்துப் போடவும். நியூட்டெல்லா, சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து சாக்லேட்டை உருக்கவும். இந்தக் கலவையை மோல்டில் ஒரு சிறிய ஸ்பூனால் ஊற்றி நிரப்பவும். இந்த மோல்டை ஃப்ரிட்ஜில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் வேர்க்கடலை வெண்ணெய் (பீனட் பட்டர்), சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து கலவை சேர்ந்து வரும் வரை கிளறவும். மோல்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து, பீனட் பட்டர் கலவையை மோல்டில் ஒரு சிறிய ஸ்பூனால் ஊற்றவும். இந்த மோல்டை ஃப்ரிட்ஜில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். மீண்டும் மோல்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அதன் மேல் சாக்லேட் - நியூட்டெல்லா கலவையை ஊற்றவும். ஃப்ரிட்ஜில் 40 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். மோல்டில் இருந்து ஃபட்ஜ்ஜை வெளியே எடுக்கவும். ட்ரை கலர் ஃப்ரூட்ஸ் பாப்சிகல் தேவையானவை: நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி – அரை கப் கொட்டை, தோல் நீக்கி, நறுக்கிய கிவி பழம் – அரை கப் தோல் நீக்கி, நறுக்கிய மாம்பழம் - அரை கப் சர்க்கரை - தேவையான அளவு தண்ணீர் - ஒரு கப் பாப்சிகல் மோல்டுகள் - 4 அல்லது 5 செய்முறை: மூன்று பழங்களையும் தனித்தனியாக சிறிது சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜூஸரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். பாப்சிகல் மோல்டுகளில் அரைத்த ஜூஸ்களில் ஒன்றை 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி, 2 மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும். பிறகு அதன் மேல் மற்றொரு ஜூஸை ஊற்றி 2 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து எடுக்கவும். பிறகு அதன் மேல் மூன்றாவது ஜூஸை ஊற்றி, பாப்சிகல் ஸ்டிக்குகள் எடுத்து சொருகி 4 மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும். பின்பு மோல்ட்டுகளில் இருந்து பாப்சிகல்களைப் பிரித்தெடுக்க... கிச்சன் சிங்க் குழாயைத் திறந்து வைத்து ஓடும் நீரில் மோல்டுகளை பின்புறவாக்கில் காட்டினால் பாப்சிகல் தனியாகப் பிரிந்து வந்துவிடும். குறிப்பு: இந்தப் பழங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்கள் விரும்பும், அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களையும் பயன்படுத்தலாம். பிஸ்கட் மில்க்‌ஷேக் தேவையானவை: பிஸ்கட் (ஒரியோ) – 4-5 வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப் குளிர்ச்சியான பால் – 2 கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் சாக்லேட் சிரப் – 2 டீஸ்பூன் குளிரவைக்கப்பட்ட க்ரீம் (விப்பிங் க்ரீம்) – அரை கப் அலங்கரிக்க: பிஸ்கட் (ஒரியோ) துகள் – ஒன்றரை டீஸ்பூன் செய்முறை: முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் சர்க்கரை, பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின்னர், அதில் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக்கொள்ளவும். மில்க்‌ஷேக்கை கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றவும். பின்னர் அதன் மேல் விப்பிங் க்ரீம், சாக்லேட் சிரப், பிஸ்கட் ‌ துகள்களைச் சேர்த்து ஸ்ட்ரா போட்டு பரிமாறவும். கார்லிக் புல்-அபார்ட் சீஸ் பாப்பர்ஸ் தேவையானவை: வெட்டப்படாத முழு பிரெட் (பெரியது) – ஒன்று உருக்கிய வெண்ணெய் - அரை கப் குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) ஆலிவ் - ஒன்று மிகப்பொடியாக நறுக்கிய பூண்டு – 4 டேபிள்ஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் செஷ்வான் பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் சீஸ் – அரை கப் செய்முறை: பிரெட்டை முக்கால் பாகம் வரை சிறிய சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும். உருகிய வெண்ணெய், நறுக்கிய குடமிளகாய், ஆலிவ், பூண்டு மற்றும் சில்லி ஃபிளேக்ஸ், செஷ்வான் பேஸ்ட், தக்காளி சாஸ் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை பிரெட்டில் ஸ்டஃப் செய்யவும். சீஸை மேலே தூவி அலுமினிய காகிதத்தால் மூடவும். 180° பாரன்ஹீட் செட் செய்த அவனில் வைத்து 10 நிமிடஙகள் பேக் செய்து பரிமாறவும். ஃப்ரைடு மஷ்ரூம் மோமோஸ் தேவையானவை: மேல் மாவுக்கு... மைதா / கோதுமை மாவு - ஒரு கப் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பூரணத்துக்கு... பட்டன் காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) கோஸ் - கால் கப் (துருவியது) வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) வெங்காயத்தாள் - கால் கப் (மிகப்பொடியாக நறுக்கியது) சர்க்கரை - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டு சிறிது கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். மேலே ஓர் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும் (இது மாவு உலர்ந்து போவதைத் தடுக்கும்). ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும், வெங்காயம், கோஸ், காளான், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து வதக்கி, இறுதியில் வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி ஆறவிடவும். ஒரு சப்பாத்தி செய்யும் அளவு மாவு எடுத்து சிறிது தட்டையாக்கி நடுவில் பூரணம் வைத்து, கொசுவம் வைத்து மடிக்கவும். கொழுக்கட்டை வடிவிலும் மடிக்கலாம். பிறகு, ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, இரண்டிரண்டாக போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ருசியான மஷ்ரூம் மோமோஸ் தயார். சூடான மோமோஸை காரமான சாஸுடன் பரிமாறவும். சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்: தக்காளி - ஒன்று காய்ந்த மிளகாய் - 8 பூண்டு - 6 பல் வினிகர் – ஒரு டீஸ்பூன் வெண்ணெய், உப்பு - தேவையான அளவு சாஸ் செய்முறை: குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர், முழுத் தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். பிறகு இவற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அரைத்த விழுது, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். வினிகர் சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதைச் சூடான மோமோஸுடன் பரிமாறவும். கேரட் அல்வா பார்ஃபை (Carrot halwa Parfait) தேவையானவை: கேரட் அல்வா தயாரிக்க... துருவிய கேரட் - 4 கப் பால் - 2 கப் சர்க்கரை – ஒன்றரை கப் நெய் - 3 டேபிள்ஸ்பூன் முந்திரி - 12 துருவிய பாதாம் மற்றும் பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் ஊற்றி, 2 விசில்விட்டு இறக்கவும். அதேசமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு பிரஷர் குக்கரைத் திறந்து, அதை அப்படியே அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து, கலவை சற்று கெட்டியாகும் வரை தீயைக் குறைவாக வைத்துக் கிளறவும். பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, நெய் சேர்த்து நன்கு கிளறிவிடவும். கலவை நன்கு அல்வா பதத்துக்கு வந்த பின்னரே, அதை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். க்ரீம் சீஸ் கலவை தயாரிக்க... தேவையான பொருட்கள்: விப்பிங் கிரீம் - ஒரு கப் வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன் சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன் க்ரீம் சீஸ் – ஒரு கப் செய்முறை: விப்பிங் கிரீம்மை நன்கு விப் செய்து, அத்துடன் இதரப் பொருள்களை கலந்துகொள்ளவும். அலங்கரிக்கும் முறை: சிறிய கண்ணாடி கப்பில் கால் இன்ச் அளவுக்கு கேரட் அல்வாவை சரிசமமாகப் பரப்பவும். அதன் மேல் கால் இன்ச் அளவு க்ரீம் சீஸ் கலவையைச் சரிசமமாகப் பரப்பிவிடவும். மறுபடியும் கேரட் அல்வாவைச் சமமாகப் பரப்பிவிடவும். இதன் மேலே மறுபடியும் க்ரீம் சீஸ் கலவையை பரப்பலாம். இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். துருவிய பாதாம் மற்றும் பிஸ்தாவை மேலே தூவி அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.
  15. ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி கோங்குரா சிக்கன் குழம்பு. இன்று இந்த கோங்குரா சிக்கன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புளிச்சக்கீரை - 1 கப் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - 3 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 வேகவைத்த கோழிக்கறி - 250 கிராம் வெங்காயம் - 2 காய்ந்த மிளகாய் - 3 நெய் -1 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் செய்முறை : * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். * கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும். * அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும். * வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். * பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும். * அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். * ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும். * சூப்பரான கோங்குரா சிக்கன் குழம்பு ரெடி!
  16. மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி மும்பையில் மிகவும் பிரபலமானது இந்த தவா புலாவ். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த தவா புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி ( அ) புழுங்கலரிசி - 1 கப் குடமிளகாய் - 1 தக்காளி - 2 வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன் வெண்ணெய் - 2 டீஸ்பூன் கேரட் - 1 பீன்ஸ் - 10 பச்சை பட்டாணி - 1/2 கப் எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - சுவைக்கேற்ப தாளிக்க : பட்டை, ஏலக்காய், கிராம்பு. செய்முறை : * வெங்காயம், குடமிளகாய், கேரட், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். * நறுக்கிய கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும். * சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும். * அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். * அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளியை போட்டு வதக்கவும். * அடுத்து அதில் குடமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகப் பொடி, தனியா தூள், பாவ் பாஜி தூள் சேர்த்து வதக்கி மிதமான தீயில் வேக விடவும். * மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த கேரட், பீன்ஸ் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். * பிறகு அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி காய்கறி, மசாலாவுடன் கலக்கும்மாறு கிளறி விடவும். * கடைசியாக அதன் மேலாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலையைத்தூவி விட்டு பரிமாறலாம். * சூப்பரான தவா புலாவ் ரெடி. * இதனுடன், வெள்ளரிக்காய் ரைத்தா, வெங்காயம், தக்காளி ரைத்தா, அப்பளம், ஊறுகாய், தயிர் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
  17. முனிவருக்கும், கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  18. ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி பால் பாயசம் வாழைப்பூ வடை பாலக்காட்டு பொரித்த குழம்பு கதம்பக் கூட்டு கத்திரிக்காய் ரோஸ்ட் மைசூர் ரசம் இஞ்சி - கறிவேப்பிலை துவையல் மசாலா மோர்க்குழம்பு வெண்டைக்காய் புளிப்பச்சடி வத்தல் குழம்பு நம் பாரம்பர்ய உணவை ரசனையோடு சமைத்து, தலைவாழை இலை விருந்தாக அளிக்கும் வகையில் ருசியான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.மரகதம். பால் பாயசம் தேவையானவை: பச்சரிசி - கைப்பிடி அளவு சர்க்கரை - ஒரு கப் நெய் - 2 டீஸ்பூன் சாரைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் பால் - அரை லிட்டர் ஏலக்காய் - 4 செய்முறை: பச்சரிசியைக் குழைவான சாதமாக வடிக்கவும். பாலைத் தண்ணீர் விடாமல் காய்ச்சவும். சாதத்துடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். காய்ச்சிய பாலில் பாதியைத் தனியாக எடுத்துவைக்கவும். மீதிப் பாலில் அரைத்த சாதத்தைப் போட்டு சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து ஒரு கொதிவிடவும். பிறகு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சுண்ட ஆரம்பித்தவுடன் தனியாக எடுத்துவைத்த பாலை ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு சாரைப்பருப்பை வறுத்து, நெய்யுடன் பாயசத்தில் சேர்க்கவும். வாழைப்பூ வடை தேவையானவை: வாழைப்பூ – ஒன்று கடலைப்பருப்பு - ஒரு கப் உளுத்தம்பருப்பு - கால் கப் தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 இஞ்சி - சிறிய துண்டு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பைத் தனியாக ஊறவைக்கவும். வாழைப்பூவை ஆய்ந்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். பருப்புகளைக் களைந்து... காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு, வாழைப்பூ சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும். பாலக்காட்டு பொரித்த குழம்பு தேவையானவை: புளி - நெல்லிக்காய் அளவு பறங்கிக்காய் துண்டுகள் - அரை கப் குடமிளகாய் துண்டுகள், சௌசௌ துண்டுகள் - தலா கால் கப் வெள்ளைக் காராமணி - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 மிளகு - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு கப் கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை முந்திரிப்பருப்பு – 2 கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் மல்லி (தனியா) - அரை டீஸ்பூன் கடுகு - சிறிதளவு தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். வெள்ளைக் காராமணி, காய்கறிகளைத் தனித்தனியாக உப்பு போட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு... காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு ஆகியவற்றை வறுக்கவும். ஆறியபின் தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர்விட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பிறகு காய்கறிகள், காராமணி, அரைத்த விழுது சேர்த்து கொஞ்சம் கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும். கதம்பக் கூட்டு தேவையானவை: புடலங்காய் – ஒன்று கேரட் – 2 பீன்ஸ் – 10 பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு தேங்காய்த் துருவல் - அரை கப் பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை சீரகம் - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்பு, காய்கறிகள் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவிடவும். பச்சைப் பட்டாணியை தனியாக வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். காய்கறி - பருப்பு கலவையோடு அரைத்த விழுது, வேகவைத்த பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். கத்திரிக்காய் ரோஸ்ட் தேவையானவை: கத்திரிக்காய் - அரை கிலோ மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப) கிராம்பு – 4 பொட்டுக்கடலை - அரை டேபிள்ஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் கடுகு – சிறிதளவு அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் உப்பை வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கிராம்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் இவற்றுடன் பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். கத்திரிக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கத்திரிக்காய் துண்டுகள், அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மிக்ஸியில் அரைத்த பொடி சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் கலவையைச் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் நன்கு ரோஸ்ட் ஆன பிறகு இறக்கவும். மைசூர் ரசம் தேவையானவை: தக்காளி – 2 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை புளி - நெல்லிக்காய் அளவு துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - முக்கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 மல்லி (தனியா) - ஒன்றரை டீஸ்பூன் மிளகு – 8 கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு சீரகம் - கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம்பருப்பை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு... மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். ஆறியதும் தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து அரைக்கவும். தக்காளியை சுடுநீரில் போட்டு எடுத்து தோல் உரிக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி விழுது, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு, தண்ணீர் சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கவும். நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இஞ்சி - கறிவேப்பிலை துவையல் தேவையானவை: இஞ்சி - 100 கிராம் கறிவேப்பிலை - ஒரு கப் புளி - கொட்டைப்பாக்கு அளவு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 5 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 மிளகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலையை அலசி, ஈரம் போக வடிய வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து... உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைக்கவும். மசாலா மோர்க்குழம்பு தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் – 2 டீஸ்பூன் புளித்த மோர் - 4 கப் தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்) பச்சை மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப) காய்ந்த மிளகாய் – 2 மல்லி (தனியா), கடலை மாவு - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு பூண்டுப் பல், சின்ன வெங்காயம் - தலா 4 இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை கடுகு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளித்த மோர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்த் துருவலுடன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலை மாவு, பூண்டு, தோலுரித்த சின்ன வெங்காயம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும் (கொரகொரப்பாகவோ, மிகவும் நைஸாகவோ இல்லாமல் மீடியமான விழுதாக அரைக்கவும்). அடிகனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்விட்டு... கடுகு, கறிவேப்பிலை, சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மோர் கலவையைச் சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். வெண்டைக்காய் புளிப்பச்சடி தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ புளி - நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிதளவு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை கடலை மாவு - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: கடலை மாவை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். வெண்டைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, கடலை மாவு கரைசலை ஊற்றி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். வற்றல் குழம்பு தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - ஒன்றரை டீஸ்பூன் கடுகு – கால் டீஸ்பூன் துவரம்பருப்பு - அரை டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை சாம்பார் பொடி - இரண்டே முக்கால் டீஸ்பூன் புளி - எலுமிச்சைப் பழ அளவு நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: சுடுநீரில் புளி, உப்பு சேர்த்து ஊறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். பிறகு, சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
  19. தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : திருக்கை மீன் - 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்) தேங்காய் துருவல் - அரை கப் மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 1 புளி - சிறிய எலுமிச்சை அளவு சின்ன வெங்காயம் - 3 கடுகு - ½ தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை : * இஞ்சியை துருவிக்கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். * தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். * கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். * குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும். * சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.