Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசா பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மைதா மாவு - 1 1/2 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு வெங்காயம் - 1 பட்டன் காளான் - 300 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை : * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * காளாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கியவுடன் காளான், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும். * காளான் நன்றாக வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். * பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும். * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். * இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசா ரெடி!!
  2. மணக்கும் மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி மீன் குழம்பில் தேங்காய் பால் ஊற்றி செய்யும் போது சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் ஊற்றி மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வஞ்சிரம் மீன் - அரை கிலோ அல்லது துண்டு மீன் சின்னவெங்காயம் - 3 தக்காளி - 2 சின்னவெங்கா மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்) பச்சைமிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் வறுத்த வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன் முதலாவது (கெட்டியான) தேங்காய்ப்பால் - ஒரு கப் இரண்டாவது (தண்ணியான) தேங்காய்ப்பால் - ஒரு கப் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: * கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும். * அடுத்து அதில் இரண்டாவது தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். * மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதி வருவதற்குள் அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். * மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி.
  3. சூப்பரான சைடிஷ் பட்டர் சிக்கன் கிரேவி சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த பட்டர் சிக்கன் கிரேவி அருமையான சைடிஷ். இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ கெட்டியான தயிர் - 1 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சிவப்பு தந்தூரி கலர் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 4 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன் க்ரீம் - 1 கப் முந்திரி - சிறிது கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். * கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * முந்திரியை பேஸ்ட் செய்து கொள்ளவும். * தயிரில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சிவப்பு தந்தூரி கலர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * சிக்கனில் கலந்த மசாலாவை ஊற்றி நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * ஒரு மணிநேரம் ஆனப் பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். * பிறகு ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுத்து, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். * அடுத்து வெண்ணெயை போட்டு, தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும். * எண்ணெயானது தனியே பிரியும் போது, அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா, க்ரீம், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். * இறுதியில் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியாக அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். * இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி!!!
  4. சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் (அரை கிலோ) பெரியவெங்காயம் - 2 + ஒன்று தக்காளி - 3 பட்டை - ஒன்று ஏலக்காய் - 2 கிராம்பு - 2 அன்னாசிப்பூ - 2 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - பூண்டு விழுது - இரண்டரை டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி புதினா - ஒரு கைப்பிடி தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் தயிர் - அரை கப் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - கால் கப் நெய் - கால் கப் முந்திரி - 10 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை பால் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : * சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். * மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். * பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். * ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும். * ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். * இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும். * இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும். * அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும். * பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும். * மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும். * இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார். * சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி ரெடி.
  5. சுவையான யாழ்ப்பாண ஒடியல் கூழ் செய்வது எப்படி என்று தெரியுமா? யாழ்ப்பாணம் என்றால் நினைவிற்கு வரும் உணவுகளில் பிரதானமானது ஒடியல் கூழ். நினைக்கும்போதே நாவில் சுவையூறும் யாழ் ஒடியல் கூழ் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம் தேவையான பொருட்கள் ஒடியல் மா : 1/2 கிலோ மீன் : 1 கிலோ ( சிறு மீன்கள் உங்கள் விருப்பம்போல்) நண்டு : 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் மிகவும் நல்லது) இறால் : 1/4 கிலோ சின்ன சின்ன கணவாய்கள். நெத்தலி மீன் கருவாடு 100 கிராம் பயிற்றங்காய் : 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்) பலாக்கொட்டைகள் : 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது) அரிசி : 50 கிராம் செத்தல் மிளகாய் : 15 அரைத்தது பழப்புளி : 100 கிராம் உப்பு – சுவைக்கேற்ப செய்முறை முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக பசை போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும். இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும். நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும். உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேசக் கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் சிக்கக் கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம், கூழின் காரத் தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும். https://news.ibctamil.com
  6. ஆரோக்கியமான சாலட் வகைகள் ``சாலட் என்பது இலையின் ஓர் ஓரத்தில் கொஞ்சமாக வைப்பது இல்லை. வெளிநாடுகளில் ஒரு பெரிய பவுல் நிறைய சாலட் மட்டும் சாப்பிடுவார்கள். அதிலேயே பழங்கள், நட்ஸ், சிறு தானியங்கள், ஸ்ப்ரவுட்ஸ், கொண்டைக்கடலை, ஆலிவ் ஆயில் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் ஒரு கம்ப்ளீட் உணவாகிவிடும். சாலட்டில் வெறும் காய்கறிகள் / பழங்கள் மட்டுமன்றி சாலட் டிரெஸ்ஸிங் என்று ஒன்றைச் செய்து கலப்பது வழக்கம். இதில் பொதுவாக ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, மயோனைஸ் ஆகியவை சேர்க்கப்படும் (ஆலிவ் ஆயிலுக்குப் பதிலாக ரிஃபைண்ட் ஆயிலை சேர்க்கலாம்). `டயட்’டை மேற்கொள்பவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு பவுல் சாலட்டை ஒருவேளை உணவுக்குப் பதில் சாப்பிட்டால் மிகவும் நல்லது’’ என்று சொல்லும் ஹெல்த்தி ஃபுட் எக்ஸ்பெர்ட் ஜானகி அஸாரியா, இங்கே சத்தான, சுவையான சாலட் வகைகளை வழங்குகிறார். வேர்க்கடலை சாலட் தேவையானவை: கேரட் - ஒன்று வெள்ளரிக்காய் - ஒன்று (தோல் சீவவும்) குடமிளகாய் - பாதியளவு வெங்காயம் - ஒன்று வேகவைத்த கார்ன் - அரை கப் வறுத்த வேர்க்கடலைப்பொடி - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி - ஒரு சிறிய துண்டு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கேரட், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைத் துருவிக்கொள்ளவும். வெங்காயம், குடமிளகாய், வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் வேகவைத்த கார்ன், உப்பு, வேர்க்கடலைப்பொடி, எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். ரஷ்யன் சாலட் தேவையானவை: பீன்ஸ் - 10 கேரட் - ஒன்று உருளைக்கிழங்கு - ஒன்று ஆப்பிள் - ஒன்று தயிர் - ஒரு கப் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் கடுகு பேஸ்ட் அல்லது கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். தயிரை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, வேகவைத்து நன்றாக ஆறவிடவும். பிறகு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், வடிகட்டிய தயிர், உப்பு, மிளகுத்தூள் கடுகு பேஸ்ட் (அ) பொடி ஆகியவற்றை ஆறவைத்த காய்கறிகளுடன்ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: பொதுவாக ரஷ்யன் சாலட்டில் மயோனைஸ் கலப்பது வழக்கம். அதைவிட தயிர் ஆரோக்கியமானது என்பதால் இங்கு தயிர் கொடுக்கப்பட்டுள்ளது. கொண்டைக்கடலை சாலட் தேவையானவை: கொண்டைக்கடலை - அரை கப் வெங்காயத்தாள் (ஸ்ப்ரிங் ஆனியன்) - 2 சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், பச்சை குடமிளகாய் - தலா பாதியளவு லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4 ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன் பூண்டு - ஒரு பல் (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கொண்டைக்கடலையை ஊறவைத்து லேசாக உப்பு போட்டு வேகவைக்கவும். வெங்காயத்தாளின் அடியிலுள்ள வெள்ளை வெங்காயம், மூன்று நிற குடமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். வெங்காயத்தாளின் பச்சை பாகத்தைப் பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி நன்றாக குலுக்கினால் சாலட் டிரெஸ்ஸிங் தயார். வேகவைத்த கொண்டைக்கடலை, நறுக்கிய காய்கறிகள், லெட்யூஸ் இலைகள், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு, சாலட் டிரெஸ்ஸிங்கைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் பச்சை பாகத்தை மேலே தூவிப் பரிமாறவும் கிரீக் சாலட் தேவையானவை: வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் - தலா ஒன்று தக்காளி (கெட்டியானது) - 2 லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4 பனீர் - 100 கிராம் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன் ஓரிகானோ - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் பூண்டு பவுடர் - அரை டீஸ்பூன் (அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்) உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: குடமிளகாய்கள், தக்காளி ஆகியவற்றை விதைகளை எடுத்துவிட்டு சதுரங்களாக வெட்டவும். வெங்காயம், வெள்ளரிக்காய், பனீர் ஆகியவற்றையும் சதுரமான துண்டுகளாக வெட்டவும். லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். இவை எல்லாவற்றையும் ஒரு பெரிய பவுலில் சேர்க்கவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், ஓரிகானோ, பூண்டுப் பொடி அல்லது நறுக்கிய பூண்டு எல்லாவற்றையும் போட்டு மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். நறுக்கிய காய்கறி கலவையுடன் சாலட் டிரெஸ்ஸிங்கை நன்றாகக் கலந்து பரிமாறவும். குறிப்பு: வெளிநாடுகளில் கிரீக் சாலடில் ஃபெட்டா சீஸ் என்னும் சீஸ் வகையைச் சேர்ப்பது வழக்கம். இதற்குப் பதில் நம் நாட்டில் பனீர் சேர்க்கலாம்). ஆப்பிள் சாலட் தேவையானவை: சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் - தலா ஒன்று வால்நட் - கால் கப் உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன் லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4 வெங்காயத்தாள் (ஸ்ப்ரிங் ஆனியன்) - 3 ஆரஞ்சு ஸ்க்வாஷ் - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் கடுகு பேஸ்ட் அல்லது கடுகு பவுடர் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் இரண்டையும் ஒரு மெலன் ஸ்கூப்பர் வைத்து உருண்டை உருண்டையாக வெட்டிக்கொள்ளவும் (மெலன் ஸ்கூப்பர் இல்லையென்றால் கத்தியால் மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டிக்கொள்ளவும்). லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்க்கவும். வெங்காயத்தாளில் பச்சை பாகத்தைப் பொடியாக நறுக்கவும். அதன் அடியில் உள்ள வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயைச் சூடாக்கி வால்நட்டைப் போட்டு லேசாக ரோஸ்ட் செய்யவும். கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், ஆரஞ்சு ஸ்க்வாஷ், எலுமிச்சைச் சாறு, உப்பு, சில்லி ஃபிளேக்ஸ், கடுகு பேஸ்ட் அல்லது கடுகு பவுடர் ஆகியவற்றைப் போட்டு, மூடி கொண்டு மூடியை நன்றாக குலுக்கினால், சாலட் டிரெஸ்ஸிங் தயார். சாலட் டிரெஸ்ஸிங் உடன் (வெங்காயத்தாளின் பச்சை பாகம் தவிர) மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் பச்சை பாகத்தை மேலே தூவி அலங்கரிக்கவும். பச்சை பப்பாளி சாலட் தேவையானவை: பப்பாளிக்காய் - ஒன்று (சிறியது) கேரட், வெங்காயம் - தலா ஒன்று சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு பவுடர் - ஒரு டீஸ்பூன் (அல்லது நறுக்கிய பூண்டு - 2 பல்) மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலைப்பொடி, - 2 டேபிள்ஸ்பூன் வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: பப்பாளிக்காய், கேரட், வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லிய குச்சி போல வெட்டி ஒரு பெரிய பவுலில் போடவும். ஒரு பாட்டிலில் வேர்க்கடலைப் பொடி, ஆலிவ் ஆயில், சோயா சாஸ், பூண்டுப் பொடி அல்லது நறுக்கிய பூண்டு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். இந்த டிரெஸ்ஸிங்கை நறுக்கிய காய்கறிகளுடன் கலந்து, வறுத்த வெள்ளை எள்ளை அதன் மேலே தூவிப் பரிமாறவும் கேபேஜ் கோல்ஸ்லா தேவையானவை: நறுக்கிய பச்சை கோஸ், நறுக்கிய சிவப்பு கோஸ் - தலா ஒரு கப் வெங்காயம் - ஒன்று தயிர் - ஒரு கப் சர்க்கரை - அரை டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் கடுகு பேஸ்ட் அல்லது கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: பச்சை கோஸ், சிவப்பு கோஸ், வெங்காயம் ஆகிய காய்கறிகளை நன்றாகக் கழுவி துடைத்து, நீள நீளமாக மெல்லிய குச்சியைப் போல நறுக்கவும். கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். வடிகட்டிய தயிருடன் சர்க்கரை, உப்பு, கடுகு பேஸ்ட் (அ) பொடி, மிளகுத்தூள், வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு ஆகிவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் டிரெஸ்ஸிங் தயார். நறுக்கிய காய்கறிகளை ஒரு பெரிய பவுலில் போடவும். இதனுடன் டிரெஸ்ஸிங்கை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். குறிப்பு: பொதுவாக கோஸ் கோல்ஸ்லாவில் மயோனைஸ் கலப்பது வழக்கம். அதைவிட தயிர் ஆரோக்கியமானது என்பதால் இங்கு தயிர் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்மா சாலட் தேவையானவை: ஊறவைத்து, வேகவைத்த ராஜ்மா, வேகவைத்த கார்ன் - தலா அரை கப் அவகாடோ, வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், பச்சை மிளகாய், கெட்டியான பெரிய தக்காளி - தலா ஒன்று பூண்டு - 2 பல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: பச்சை குடமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கவும். வெள்ளரிக்காய், அவகாடோ இரண்டையும் தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும் (அவகாடோ கிடைக்கவில்லை என்றால் அதை சேர்க்கத் தேவையில்லை). வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வேகவைத்த ராஜ்மா, வேகவைத்த கார்ன், நறுக்கிய பச்சை குடமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய், அவகாடோ, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, எலுமிச்சைச் சாறு, உப்பு, ஆலிவ் ஆயில் எல்லாவற்றையும் ஒரு பவுலில் போட்டு கலந்து பரிமாறவும். ரோஸ்டட் வெஜிடபிள் கோதுமை ரவை சாலட் தேவையானவை: கோதுமை ரவை - கால் கப் வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய் - தலா ஒன்று புரோக்கோலி - பாதியளவு கெட்டியான தக்காளி - 2 ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன் பூண்டு - 2 பல் எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் வறுத்த பாதாம்பருப்பு - 7 அல்லது 8 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். மூன்று கலர் குடமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். புரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும். ‘அவன்’ ட்ரேயில் ஆலிவ் ஆயிலை ஊற்றி நறுக்கிய கலர் குடமிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றைப் போட்டு 15 - 20 நிமிடங்கள் நிறம் மாறாமல் ரோஸ்ட் செய்யவும் (இல்லையென்றால் ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய கலர் குடமிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும்). பிறகு, வதக்கிய குடமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (புரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை). வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம், அல்லது வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்.. ஸ்ப்ரவுட்ஸ் சாலட் தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப் வேகவைத்து, தோல் உரித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று வேகவைத்த வேர்க்கடலை - அரை கப் கேரட் - ஒன்று (துருவவும்) கிளிமூக்கு மாங்காய் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்) வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்) தோல் சீவி வேகவைத்த பீட்ரூட் (சிறியது) - ஒன்று சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். தோல் சீவி வேகவைத்த பீட்ரூட்டை நீள மெல்லிய குச்சிகளாக வெட்டிக்கொள்ளவும். முளைகட்டிய பச்சைப் பயறை லேசாக ஆவியில் வேகவைத்து நன்றாக ஆறவைக்கவும். பச்சை பயறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகள், வேகவைத்த வேர்க்கடலை, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, உப்பு, சில்லி ஃபிளேக்ஸ், எலுமிச்சைச் சாறு எல்லாவற்றையும் ஒரு பெரிய பவுலில் போட்டு நன்றாகக் கலக்கவும். நீளமாக நறுக்கிய பீட்ரூட்டை மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
  7. சூப்பரான சைடிஷ் ஆந்திரா குண்டூர் சிக்கன் ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று குண்டூர் சிக்கன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ காய்ந்த சிவப்பு மிளகாய் - 6 (காரம் அவரவர் விருப்பம்) தனியா - 3 தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - 1 1/2 தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - 4 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை) வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 150 கிராம் புளிக்காத தயிர் - 2 மேசைக்கரண்டி கொத்தமல்லி இலை - சிறிது உப்பு - தேவைக்கு. செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். * வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். * வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். * ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். * வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். * நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும். * கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும். * சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். * சூப்பரான குண்டூர் சிக்கன் ரெடி.
  8. புதைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாறு: கீழடி அகழாய்வு முகாம் கல் தோன்றி, மண் தோன்ற காலத்தில் காலத்தின் முன்தோன்றிய முத்தக்குடி தமிழ்குடி. மதுரை அருகே உள்ள கீழடி கிராமத்தில் பல தமிழ், சம்ஸ்கிருத எழுத்துகள் கிடைத்துள்ளன, அதுமட்டும் அல்லாமல் முன்னோர்கள் வாழ்ந்த அடையாளமாக அவர்கள் நேரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதை பாதுகாக்க தமிழக அரசு முடிவு எடுக்குமா? இல்லை எதுவும் அப்பிடியே கிடப்பில் விடப்படுமா?
  9. முட்டை மிளகு மசாலா !!! வேகவைத்த முட்டை-12 நறுக்கிய பெரிய வெங்காயம்- 4 தக்காளி-3 பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது) மிளகு-2டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு இஞ்சி- சிறிதளவு தக்காளி சாஸ்-1/4 கப் எப்படிச் செய்வது? கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும். முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி.. Übersetzung anzeigen

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.