Jump to content

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8892
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by துளசி

  1. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  2. சுபேஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  4. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  5. சாதித்தவன் சொல்லும் பொய்க்கு முன் சாதிக்காதவன் சொல்லும் உண்மையை பெரும்பாலானோர் நம்புவதில்லை.

    1. யாயினி

      யாயினி

      முற்றிலும் உண்மை துளசி.:(

  6. phone இல் தானே கூறுகிறீர்கள்? நான் safari பயன்படுத்துவதுண்டு. உங்கள் கருத்தை பார்த்ததும் chrome ஐ தரவிறக்கி பார்த்தேன். அதிலும் படத்திற்கான இணைப்பு முதலில் உள்ளது போலவே பெறக்கூடியதாக உள்ளது. நான் இணைத்த url உம் நீங்கள் இணைத்த url உம் வேறு வேறாக உள்ளது. தனியாக பிரிப்பதற்கு வேறு ஏதும் முறையை பின்பற்ற வேண்டுமா? ஆம் எனின் எவ்வாறு என கூறுவீர்களா? நேரமிருந்தால் பதிலளியுங்கள்.
  7. ஓ நன்றி. எழுதும் பெட்டிக்குள் BBCode என்றிருப்பது தெரியும். சாதாரணமாக சென்று பார்க்கலாம் என தெரியாது. ஆனால் முகநூலிலுள்ள படத்தை இணைக்க பல தடவை முயன்றேன். இன்னும் சரிவரவில்லை. உதாரணமாக இந்த இணைப்பிலுள்ள படத்தை எவ்வாறு இணைப்பது? https://m.facebook.com/photo.php?fbid=702819569766992&id=100001168658305&set=a.154140464634908.28099.100001168658305&source=48
  8. தடித்த எழுத்துகளில் எழுதுவது எவ்வாறு என கண்டு பிடித்து விட்டேன். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். [ b ] வரிகள் [ /b ] என எழுதினால் தடித்த எழுத்தாக வரும். [ b ] ஆகியவற்றுக்கிடையில் இடைவெளி இருக்க கூடாது. முடிக்கும் போதும் [ / b ] ஆகியவற்றுக்கிடையில் இடைவெளி இருக்க கூடாது.
  9. படம் இணைப்பதற்கான கட்டளை என்ன என்று கூறுவீர்களா? [ img ] என ஆரம்பித்து [ / img ] என முடிவடைய வேண்டும். இடையில் link வர வேண்டும். (யாழில் பதிவதற்காக இடைவெளி விட்டுள்ளேன். சாதாரணமாக இடைவெளியில்லாமல் வர வேண்டும்.) ஆனால் phone ஐ பயன்படுத்தும் போது முகநூலில் உள்ள படங்களில் அழுத்தி copy image, copy image link என்று கொடுக்கும் option இல்லை. முகநூல் இணைப்பை copy பண்ணி அதில் எதை சேர்க்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும்?
  10. நான் என்ன நினைத்தேன் என்று நுணா அண்ணாக்கு விளங்கி விட்டது.
  11. ஓ... எனக்கும் அவ்வளவாக தெரியாது. இசை அண்ணா, சுண்டல் அண்ணா, நெடுக்ஸ் அண்ணா, ராஜன் விஷ்வா போன்றவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும்.
  12. மறைமுகமாக என்ன கூற வருகிறீர்கள் என விளங்கவில்லை. நான் ஒன்றை ஊகிக்கிறேன். சிலவேளை அதுவாகவும் இருக்கலாம்.
  13. ஆம். அப்படியும் பயன்படுத்தி பார்த்தேன். அதிலும் எழுதும் option ஒரே மாதிரி தான் உள்ளது.
  14. நன்றி இசை அண்ணா. எனக்கு ஒரு சில முகக்குறிகள் மட்டும் தான் போட தெரியும். எனது laptop இல் wifi வேலை செய்ய மாட்டுதாம். connected with limited access என்று வருகிறது. கேபிள் மூலம் internet ஐ connect பண்ணினால் hotfix ஐ download பண்ணி பார்த்திருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் உள்ளது. எனவே நான் phone ஐ பயன்படுத்தினாலும் இடைக்கிட எனது வகுப்பறையில் அல்லது library இல் உள்ள கணணியை பயன்படுத்த முயற்சிக்கிறேன் என முன்கூட்டியே நிர்வாகத்தினருக்கு கூறிக்கொள்கிறேன்.
  15. phone இல் யாழை பயன்படுத்தும் போது எழுத பயன்படுத்தும் பெட்டி வெற்றிடமாக உள்ளது. (எழுத்தை தடிப்பாக்குதல், வேறு நிறங்களில் எழுதுதல் போன்ற option எதையும் காணவில்லை) படங்களையும் இணைக்க முடியவில்லை. பொதுவாகவே அவ்வாறு தானா அல்லது எனக்கு மட்டும் தான் அவ்வாறு உள்ளதா?
  16. மோகன் அண்ணாவுக்கும் நிர்வாகத்துக்கும் என்னுடன் இதுவரை காலமும் பாசமாக பழகிய யாழ்கள உறவுகளுக்கும் நன்றி. :) அன்புடன் துளசி.

  17. நெடுக்ஸ் அண்ணாவுக்கும் புலவர் அண்ணாவின் மகனுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. தமிழ் சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஐ லவ் யு தமிழ் சிறி அண்ணா.
  19. உங்களுக்கு தான் என்ன பிரச்சினை என எமக்கு புரியவில்லை. மற்றவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்ற கருப்பொருளை தான் இந்த திரி கொண்டுள்ளதே தவிர இந்து சமயம் நல்லதா கெட்டதா என்ற கருப்பொருளில் ஆரம்பிக்கப்படவில்லை. உங்களுக்கு இந்து சமயம் நல்லதா கெட்டதா என விவாதிக்க வேண்டுமானால் அதற்கு வேறு திரி ஆரம்பித்து அங்கு விவாதியுங்கள். உங்களுக்கு இந்து மதம் பிடிக்காவிட்டால் (நீங்கள் எந்த சமயத்தவராக இருந்தாலும்) விலகியிருங்கள். அதற்காக இந்து மதத்தை பின்பற்றும் மற்றவர்களை வேறு சமயத்தினர் மதம் மாற்றி அவர்கள் வாழ்வில் தலையிடும் நடவடிக்கையை பிழை என நாம் வாதாடுவதை எதிர்த்து எழுதாதீர்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனாலும் சைவ சமயத்திலேயே இருக்க விரும்புகிறேன். காரணம் கடவுளை வணங்காமல் இருப்பதற்கு பூரண சுதந்திரம் எனக்கு இந்த சமயத்தில் கிடைக்கிறது. ஆனால் எனக்கு மதம் மாறுவது விருப்பமில்லை என தெரிந்த பின்னரும் என்னை மதம் மாறு மாறு என வேறு சமயத்தவர்கள் கேட்பது எனக்கு தொல்லையாக உள்ளது. அதே போல் பலர் சில சூழ்நிலைகளை காட்டி மதம் மாற்றப்பட்ட பின்னர் அவர்கள் அனுபவித்த பிரச்சினைகள் பற்றியும் தெரிந்ததால் இத்திரியில் எழுதுகிறேன். இவ்வாறு நீங்கள் நினைத்தால் இந்த திரியில் நீங்கள் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்த திரியில் பேசப்படுவதே மதம் மாறுவது, மாற்றுவது பற்றி தான். பி.கு: சண்டை முடியும் வரை நான் நாட்டில் தான் இருந்தேன். எனவே இங்கிருந்து நான் விசிலடிக்கவில்லை. (ஆனால் அங்கும் போராடியிருக்கவில்லை)
  20. இந்த திரியில் மதவாதம் பற்றி கதைப்பது யார்? நீங்கள் உட்பட இந்து சமயத்தை தூற்றுபவர்கள் தான் மதவாதம் பேசுகிறீர்கள். (நீங்கள் உங்களை இந்து என கூறிக்கொண்டாலும் அது உண்மையா பொய்யா என தெரியாததால் இந்து சமயத்தை தூற்றி மதவாதத்தை திணிக்கும் உங்களையும் மதவாதியாக உள்ளடக்கியுள்ளேன்.) நான் மதவாதம் பற்றி கதைக்கவில்லை. மதம் மாற்றுவது சரியா பிழையா என மட்டும் தான் கதைத்துள்ளேன். அப்படி தான் "மதம் மாற்றுவது பிழை" என இங்கு கருத்திட்ட ஏனையோரும். மதவாதத்துக்கும் இதற்குமான அடிப்படை வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆக மொத்தத்தில் மதவாதம் பற்றி பேசும் நீங்களே உங்களை கருணாவை விட மோசமான துரோகி என கூறுகிறீர்கள். நீங்கள் தானே சட்டை கதையை கூறியது. சட்டை அழகாக இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று. அதே நீங்கள் தான் "சைவ சமயம்" என்ற சட்டை போட்டவர்கள் பற்றி தூற்றி எழுதுகிறீர்கள்.
  21. இல்லை. இதை இவ்வாறு எழுதினால் நன்றாக இருக்கும். நான் குளித்து சுத்தமாக இல்லை. அதற்காக அடுத்த வீட்டுக்கு போனால் குளிப்பேன் என மற்றவர்களுக்கு கூறுதல். ஆனால் அடுத்த வீட்டிலும் தண்ணி இல்லை, குளிக்க முடியாது. அங்குள்ளவர்களும் குளிக்காமல் அசுத்தமாக தான் உள்ளார்கள். அங்கும் இங்குள்ள அதே பிரச்சினை. எனவே எதற்காக போக வேண்டும்? அடுத்த வீட்டுக்கு போனால் குளிக்கலாம் என்பது பொய் தானே?
  22. :lol: உங்களால் நியாயமாக பதில் சொல்ல முடியாததால் சாதீயத்தை இழுத்தீர்கள். இப்பொழுது இந்துத்துவம் என கூறுகிறீர்கள். மற்றவர்கள் மதம் மாற்றுவது பிழை என வாதிடுகிறோம். அது பிழை என தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் அது தொடர்பான கருத்து வைப்பதை தவிர்ப்பதற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் சாதீயம், இந்துத்துவம் என திரியை திசை திருப்புகிறீர்கள். மற்றவர்கள் மதம் மாறும்படி கேட்கிறார்கள் என்பதற்குள் சாதீயமும் இந்துத்துவமும் எங்கே உள்ளது? இந்திய இந்துத்துவவாதத்தை காட்டி ஈழத்தில் சைவ சமயத்தை பின்பற்றுபவர்களை எதிரி போல் காட்டுவதானது இலங்கையில் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களை காட்டிக்கொடுத்தார்கள் (போராட்டத்தில் பங்கெடுத்த சில முஸ்லிம்கள் விதிவிலக்கு) என்பதற்காக தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக செயற்படும் இஸ்லாமியர்களையும் எமக்கு எதிரானவர்களாக காட்டுவது போன்றது. உங்களை பொறுத்தவரை இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட முஸ்லிம்களை தமிழீழ மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் விடுதலைப்போராட்டத்தில் கிறிஸ்தவர்களுடன் இணைந்து பங்குபற்றிய சைவ சமயத்தவர்கள் தம்மை தமிழர்கள் என கூற முடியாது. தமிழீழம் கேட்பதற்கு அவர்களுக்கு உரிமையும் இல்லை. சைவ சமயத்தவர்கள் தமிழனாக இருக்க முடியாது என்றால் எப்படி போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டான்? போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளான்? சைவ சமயத்தில் இருந்த பலர் தம்மை தமிழர்களாகவே நினைத்து கிறிஸ்தவர்களுடன் இணைந்து நாட்டுக்காக போராட சென்றார்கள். உயிரிழந்தும் உள்ளார்கள். தமிழீழம் தொடர்பில் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவ சமயத்தவரும் ஒற்றுமையாக தான் உள்ளார்கள். உங்களுக்கு விளங்கியும் விளங்காதமாதிரி நடிக்கிறீர்கள்.
  23. கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று யார் சொன்னது? எதற்காக மதம் மாற்றுவான் என்று தான் கேட்கிறேன். அந்த பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக இருப்பதால் விரும்பி மதம் மாறியிருக்க மாட்டார்கள். கட்டாய மதமாற்றம் என்பது அந்த பிள்ளைகளை உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடியது. ஒரு மதத்தை தலைமையாக கொண்டு தான் உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களை நீ சைவமா கோவிலுக்கு போ கிறிஸ்தவமா தேவாலயத்துக்கு போ என்று கூறி உதவி செய்வதென்பது மதத்தை பிரதிநிதிப்படுத்துவது போன்றது. அந்த பிள்ளையை யார் தேவாலாயத்தில் கொண்டு போய் விட்டார்களோ தெரியாது. அழைத்து சென்றவர்கள் அந்த பிள்ளையை சைவமா கிறிஸ்தவமா என கேட்டு விட்டு அழைத்து சென்றிருப்பார்கள் என்றுமில்லை. அல்லது தேவாலயத்தினரே அந்த பிள்ளையை அழைத்து சென்றும் இருக்கலாம். என்னமோ தேவாலயத்தில் தனிய கிறிஸ்தவர்களின் பணத்தில் உதவி செய்வது போல் கதைக்கிறீர்கள். வெளிநாட்டிலுள்ள சைவ சமயத்தவர் பலர் தேவாலயங்களின் மூலம் பண உதவி செய்கிறார்கள். அதை வாங்குகிறார்கள் தானே? இங்கு ஒரு மதம் நல்லதா கெட்டதா என்பதல்ல விவாதம். மதமாற்றுவது சரியா பிழையா என்பது தான் விவாதம். கட்டாய மதமாற்றல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதால் தான் அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோமே தவிர. இயேசு நல்லவரா கெட்டவரா என்று அவர்கள் மதத்தை பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை.
  24. இங்கு நீங்கள் எழுதிய கருத்து மூலம் உதவி செய்து விட்டு மதம் மாற்றுவதில் தவறில்லை என்கிறீர்கள். போரில் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் எனும் போது அவர்கள் தாமாக சென்று தேவாலயத்தின் முன் நின்றிருக்க மாட்டார்கள். அவர்களை இவர்களாக கண்டெடுத்திருப்பார்கள் அல்லது யாராவது தேவாலயத்தில் ஒப்படைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். சைவ சமயத்தவர்கள் தமது சமயம் சார்ந்த அமைப்பினூடாக உதவி செய்கிறார்களா இல்லையா என்பது இரண்டாவது விடையம். ஆனால் தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். அதற்காக மதம் மாற்றி விட்டு உதவி வழங்கவில்லை. தூயவன் அண்ணாவும் அப்பிள்ளைகளுக்கு உதவி செய்திருக்கிறார். அதை விட வேறு நபர்கள் மூலம் அப்பிள்ளைகளை பொறுப்பேற்று பார்க்க சம்மதித்திருக்கிறார். உண்மையில் தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது தான் நோக்கமாக இருந்தால் அவரவர் மதத்திலேயே இருக்கத்தக்கதாக உதவியை செய்ய வேண்டும். அப்பிள்ளைகளை மதம் மாற்றியது பிழை. மதம் தான் மாற்றி விட்டார்கள் என்றால் அவர்களை வேறு நபர்கள் பொறுப்பேற்க வரும்போது தர முடியாது என கூறுவது உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா? ஆக மொத்தத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலையிலும் பார்க்க அவர்களை மதம் மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் தான் அவர்கள் உள்ளார்கள். (எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை. இப்படி நடப்பவர்களை குற்றம் சாட்டுகிறேன்.) இன்று வடகிழக்கில் விகாரைகள் அமைக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. நாளைக்கு கிறிஸ்தவ சிறுவர்களை பௌத்த சமயமாக மாற்றி விட்டு இவர்கள் எமது விகாரைக்கு முன் வந்து நின்றார்கள். அதனால் மதம் மாற்றினோம் என்று சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் ஆச்சர்யமில்லை.
  25. நீங்கள் எந்த மதத்தவர் என்பது எனக்கு தேவையில்லாதது. ஆனால் நீங்கள் தான் மதம் மாற்றுதலுக்குள் சாதீயத்தை கொண்டு வந்து திணித்து குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். மற்றவர்கள் எம்மை மதம் மாறும்படி கேட்பதற்குள் சாதீயம் எங்கே வருகிறது என்ற கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதிலில்லை. திட்டமிட்டு பதில் எழுதுவதை தவிர்க்கிறீர்கள். அல்லது உங்களிடம் பதில் இல்லை. சாதீயம் பற்றி கதைப்பதற்கு இது தலைப்பு அல்ல. நான் சைவ சமயத்தவர் செய்வதை எங்கும் நியாயப்படுத்தி கூறவில்லை. அதற்காக மற்றவர்கள் மதம் மாறு என கேட்டால் அது பற்றி கதைக்கவோ விழிப்புணர்வூட்டவோ கூடாது என நீங்கள் கூற முடியாது. என்னை நேரடியாக பலர் கேட்டிருக்கிறார்கள். எனது உறவினர்கள் சிலர் இதனால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். ஒரு உறவினர் மனநிலை பாதிக்கப்பட்டுமிருக்கிறார். எனவே அது பற்றி கதைக்க எனக்கு உரிமை உள்ளது. அதே போல் சைவ சமயத்தவர் மற்றவர்களை மதம் மாறும்படி கேட்டால் அதுவும் பிழை தான். எனது சகோதரர் ஒருவர் கிறிஸ்தவ மதத்தவரை தான் காதலிக்கிறார். (எனவே எனது குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தினர் மேல் பகையில்லை.) மதம் மாற மாட்டேன் என ஏற்கனவே கூறியுள்ளார். திருமணம் என்று வரும் போது மதம் மாறும்படி கேட்கிறார்களோ தெரியாது. பார்ப்பம். கிறிஸ்தவர்களை எதிரியாக நோக்கும் எண்ணம் அறவே கிடையாது. அப்படி எதிரியாக நினைத்திருந்தால் எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். நான் இங்கு கோவிலுக்கு சென்றது 2 தடவை தான். அதுவும் பிரான்ஸ் வந்த புதிதில். ஆனால் எனது கத்தோலிக்க நண்பர்களுடன் church க்கு ஒரு 50 தடவைக்கு மேல் சென்றிருக்கிறேன். கடவுளை வணங்குவதில்லை. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருக்கிறேன். தமிழ் பூசைகளுக்கு செல்வதில்லை. அவர்கள் நிமிடத்துக்கு நிமிடம் இயேசு மட்டும் தான் கடவுள் என்ற ரீதியில் சொல்வதை கேட்க விருப்பமில்லை. தமிழ் சூரியன் அண்ணா பிரான்ஸ் வந்தால் அவரும் மனைவியும் church க்கு செல்ல விரும்பினால் அவர்களை அழைத்து செல்வதற்கு தயாராகவே உள்ளேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.