-
Posts
8892 -
Joined
-
Last visited
-
Days Won
11
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by துளசி
-
16.11.2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்ததற்கும், பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு கண்டனம்! - சீமான் !! தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், காங்கிரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இது குறித்து சீமான் பேசும் போது, தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர், நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்தப்படி பராமரித்து வந்த நிலையில், அதை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி நினைவுமுற்றத்தை அரசு அகற்றியுள்ளது. இதை சட்டப்படி எதிர்கொண்டு இழந்த நிலத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.இதில் சீமான் மனைவி கயல்விழி, இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீமான், மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன், மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். (facebook)
-
இணையவன் அண்ணா, twitter உள்ள படத்தை நேரடியாக யாழில் இணைக்க முடியவில்லையே ஏன்?
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதிகளை இடித்த அதிமுக அரசை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக முன்னணி தளபதிகளும் தோழர்களும் .. பல்வேறு இயக்க உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர் .. (facebook) முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ம.தி .மு.க. சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவரும் கைது.. (facebook) இராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் (facebook)
-
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், ஐயா.பழ.நெடுமாறன் காவல் துறையால் கைது செய்ததைக் கண்டித்தும், தமிழக அரசின் தமிழர் விரோத போக்கினை கண்டித்தும் 15/11/2013 அன்று சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. (facebook) முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டதையும் நெடுமாறன் ஐயாவின் கைதையும் கண்டித்து மயிலாடுதுறையில் 15/11/2013 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். (facebook) முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த மாநில அரசை கண்டித்து 15/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி,திருச்சி மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.பிரபு தலைமையில் நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட தோழர்கள் பின்பு மாலை விடுவிக்கப்பட்டனர். (facebook)
-
அண்ணா, நீங்கள் கூறுவது தவறு. யாழ் தளம் சீமான் அண்ணாவின் ஆதரவு தளம் என்று அர்த்தமல்ல. இந்த இணைப்பில் முன்னோக்கி சென்று பாருங்கள். எத்தனை பேர் பற்றிய போராட்ட செய்திகள் உள்ளது என தெரியும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&page=66 அதைவிட இதில் தியாகு ஐயாவின் போராட்ட செய்தி. http://www.yarl.com/forum3/index.php?showtopic=130671&page=1 இது வேல்முருகன் அவர்களின் போராட்ட செய்தி. http://www.yarl.com/forum3/index.php?showtopic=130804&page=1 எம் கண்ணில் படும் செய்திகளை பாரபட்சமற்று நாங்கள் இணைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் யாழில் அடிக்கடி சீமான் அண்ணாவுக்கு எதிரான கட்டுரைகள் முளைப்பது புதிதல்ல. நீங்களும் இணைக்கிறீர்கள். அதனால் தான் நாங்களும் அதிகளவில் சீமான் அண்ணா பற்றி கருத்து வைக்கிறோம். நீங்களே பல திரிகளை அவ்வாறு ஆரம்பித்து விட்டு இப்பொழுது புலம்பினால் என்ன செய்வது? இந்த திரியில் நாங்கள் எம்பாட்டுக்கு இருந்தோம். சீமான் அண்ணா பற்றி சீண்டி எழுதி தொடக்கியது மெசோ அக்கா. அதற்கு பிறகு அலை அக்கா, நீங்கள் என சீமான் அண்ணாக்கு எதிராக எழுதி இந்த திரியை இவ்வளவு நீட்டியதற்கு நாம் எவ்வாறு பொறுப்பாக முடியும். அத்துடன் ஏனையோர் பற்றிய செய்திகளை வேறு யாரையும் இணைக்க வேண்டாம் என்று சொன்னார்களா? நீங்கள்/மற்றவர்கள் இணைக்காமைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? இந்த திரியில் பல முக்கிய நபர்களின் கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. அதை விட வைகோ ஐயாவின் காணொளியையும் பையன் அண்ணா இணைத்திருந்தார். உங்கள் கண்ணிற்கு அவை படாதவை ஆச்சர்யம் தான். முகநூலிலிருந்து வருவன அனைத்தும் குப்பைகள் அல்ல. போராட்ட செய்திகள், முக்கியமான நபர்களின் கருத்துகள் போன்றன இடம்பிடிக்கின்றன. (நீங்கள் கூட முகநூல் செய்தியை இணைத்தீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்). மற்றவர்களை சுய ஆக்கம் எழுத வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா? எனக்கு எழுத தெரியாது எழுதவில்லை. எழுதக்கூடியவர்கள் எழுதட்டும். உங்களை சீமான் அண்ணா பற்றி பாட சொல்லி யாராவது கேட்டார்களா? பிறகு ஏன் பாட மாட்டீர்கள் என இங்கே சொல்லிக்காட்டுகிறீர்கள்? (அதுவும் மட்டம் தட்டலுடன்).
-
அண்ணா, இதை பலர் பல தடவை சொல்லியாயிற்று. ஆனால் அவர்கள் திரும்ப திரும்ப நாங்கள் சீமான் அண்ணா தமிழீழம் வாங்கி தருவார் என்று சொல்லி தான் அவருக்கு ஆதரவு கொடுக்கிறம் என்று சொல்லினம். அது அவர்களே கற்பனையில் நினைத்து கூறுவது. அதற்கு நாங்கள் என்ன செய்வது? அவர்களுக்கும் எங்களோட சண்டை பிடிக்கிறதுக்கு ஒரு கருத்து வேணுமெல்லோ?
-
http://www.youtube.com/watch?v=2ej02Kd5HJs காங்கிரஸ், பா.ஜ.க ஆகியன தமிழர்களுக்காக செயற்படுவதில்லை என்று கூறியதாகவே உள்ளது. ஜெயலலிதா பற்றி கதைத்த பதிவு இல்லை. கதைத்திருந்தால் இதே செய்தியில் வந்திருக்கும் அல்லவா? அல்லது கதைத்திருந்து முழுமையாக அந்த வீடியோ இணைக்கப்படாவிட்டால் தேடி இணையுங்கள். ஏனென்றால் எந்த பத்திரிக்கை, எத்தனையாம் திகதிக்கு உரியது போன்ற தகவல்கள் அற்று நீங்கள் இணைத்தது நாங்களே ஒரு பத்திரிகையில் செய்தியை போட்டு விட்டு இணைப்பது போன்றது. (உங்களை சொல்லவில்லை). சாதாரணமாக செய்திகளை இணைக்கலாம். ஆனால் விமர்சனம் வைப்பதானால் ஆதாரத்துடன் வைக்க வேண்டும். ஒருவேளை சீமான் அண்ணா கதைத்திருந்தால் கூட மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டது 13 ஆம் திகதி.
-
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பதை கண்டித்து வக்கீல்கள் ரயில் மறியல் செய்தனர்.இடம்: கோவை. (facebook) முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிப்பு, மற்றும் அது தொடர்பான போராட்ட செய்திகள் இந்த திரியில் இணைக்கப்படுகிறது. (தமிழக உறவுகள் கோபப்படாமல் வாசியுங்கள்.) http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&page=1
-
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டால் ஈழத்தில் நடந்த கொடுரம் யாருக்கும் தெரியாமல் செய்துவிடலாம் என்று இந்தியாவின் நண்பன் இலங்கை சொன்னதற்காக இந்திய அரசு தமிழக அரசுடன் சேர்ந்து கொண்டு இடித்துவிட்டது. ஆனால் நேற்று நான் கண்ட காட்சி உங்கள் எண்ணத்தில் மண் அள்ளி போட்டுவிட்டது. குடும்பம் குடும்பமாக, இடித்துவிட்ட பொழுதும் மக்கள் வெள்ளம், குறிப்பாக நிறைய அதிமுக கரைவேட்டிகள் தெரிந்தது. அவர்கள் சொன்னது இதை போய் யாரவது இடிப்பாங்களா? இதை இடிப்பதற்கு யாருக்காவது மனது வருமா? என்று. நீங்கள் இதை இடித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவின் துரோகத்தை மறைத்திருக்கலாம்.ஆனால் ஒன்று உங்கள் அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர 2009ல் தமிழக மக்கள் துவக்க புள்ளியை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். Kondal Samy (facebook)
-
நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. எங்களின் வரலாற்று சின்னம்....ஒவ்வொரு தமிழர்களின் அடையாளம்.. அய்யா பெருமகனார் பழ.நெடுமாறன் எழுப்பிய " தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை மத்திய மாநில அரசுகளின் கூட்டு சதியால் இடிக்கப்பட்டதை கண்டித்தும் அய்யா பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இடம்:சீர்காழி பேருந்து நிலையம் அருகில் நேரம்:மாலை 4 மணி, நாள்: 15/11/2013(இன்று) (facebook)
-
நான் யாழ்களத்திற்கு வந்ததிலிருந்தே சீமான் அண்ணா என்று துதி பாடியவள் கிடையாது. எனக்கு சீமான் அண்ணா மேல் மதிப்பு இருந்தும் யாழில் பெரிதாக எழுதியது கிடையாது. என்று சீமான் அண்ணாவுக்கு எதிராக அனாவசிய கட்டுரைகள் யாழில் உருவெடுத்ததோ அன்றிலிருந்து தான் நான் அவர்கள் கருத்துக்கு விமர்சனம் வைக்க சென்று அது இன்று வரை தொடர்கிறது. சாத்திரி அண்ணா எழுதிய கட்டுரையில் தான் ஆரம்பித்தது. பின்னர் யாசீன் மாலிக் அழைப்பு பற்றிய திரி. அதன்பின் இப்பொழுது அஞ்சரன் அண்ணாவின் கருத்துக்கு எதிராக கருத்து வைக்கிறேன். எனவே திருந்த வேண்டியது சீமான் எதிர்ப்பாளர்கள் தான். (அதற்குள் நீங்களும் அடங்கும்).
-
பொதுநலவாய மாநாடு ஏற்கனவே ஆரம்ப விழா எல்லாம் நடத்தி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. எனவே இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த கூடாது என்ற கோரிக்கையை இனி வைத்து பிரயோசனம் இல்லை. அதே போல் சல்மான் குர்ஷித்தும் ஏற்கனவே இலங்கைக்கு போயாச்சு. (twitter இல் அது தொடர்பான பதிவை பார்த்திருந்தேன். மதியம் உங்களுக்கு பதில் போடுவதற்காக தேடிய போது கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவுக்கு அதற்கு பின்னான twitter பதிவுகள் குவிந்து விட்டது. பின்னர் class க்கு நேரமாகி விட்டதால் அதற்கு சென்று விட்டேன். இப்பொழுது இந்த திரியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..http://www.yarl.com/forum3/index.php?showtopic=132116 ) எனவே இனி இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று போராட்டம் நடத்தியும் பிரயோசனம் இல்லை.
-
அஞ்சரன் அண்ணா, நாம் தமிழர் கட்சி முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கு. போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த வண்ணமும் உள்ளது. நீங்கள் என்ன தான் இங்கு புலம்பினாலும் 2016 இல் ஜெயலலிதா ஒருபுறம், கருணாநிதி ஒருபுறம் தேர்தலுக்கு நிற்க அவர்கள் இருவருக்கும் எதிராக தான் சீமான் அண்ணா தேர்தலில் நிற்பார். வைகோ ஐயா இன்னொரு புறம் கேட்பார். (சீமான் அண்ணா வைகோ ஐயா ஆகியோர் ஒன்று சேர்கிறார்களா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒன்று சேர்ந்தால் கூட ஜெயலலிதா கருணாநிதிக்கு எதிராக தான் தேர்தலில் இந்த கூட்டணி நிற்கும்.)
-
பத்திரிக்கையாளர் சந்திப்பின் சுருக்கம் 14.11.13 ***************************************** 1.முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடிக்கப்பட்ட பகுதிகளை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டும். 2.அய்யா பழ.நெடுமாறன் மீதும் உடன் கைது செய்யப்பட்ட 83 போராட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் மாணவர் போராட்டம் வீரியமடையும். வென்றுவிட்டோம் என்போரின் செருக்கை வீழ்த்துவோம். ஒன்றுபட்டோம் என்றுரைப்போம்;உலகதிரக் கூடுவோம்! -தமிழக மாணவர்கள். Joe Britto (facebook)