Jump to content

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8892
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by துளசி

  1. இசை அண்ணா சொன்னது மதம் மாறும்படி கேட்பவர்களில் (மதம் மாற்றுபவர்களில்) பிழை என்று.
  2. யுவன் மதம் மாறுவது தொடர்பில் நான் இதுவரை கருத்து வைக்கவில்லை. ஆனால் கருத்து வைப்பவர்களை இந்திய இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவானவர்கள் என நீங்கள் கூற முடியாது. இந்திய இந்துத்துவ கொள்கையிலிருந்து இந்திய தமிழர்களும் தான் விலகி நிற்க விரும்புகிறார்கள். பா.ஜ.க போன்ற கட்சியை அவர்கள் எதிர்க்கிறார்கள். அதுபற்றி கதைத்து நீங்கள் திசை திருப்ப வேண்டாம். தமிழர்கள் தம்மை இந்து என கூறிக்கொண்டாலும் அவர்கள் தம்மை இந்திய இந்துத்துவ கொள்கையாளராக காண்பிக்கவில்லை. நீங்கள் இங்கு சாதிக்கதை கதைப்பதை நிறுத்துங்கள். அடுத்த வினாடி கூட எதிர்காலம் தான். நாளை கூட எதிர்காலம் தான். சைவ சமயத்தில் சாதி, சாக்கடை இருக்கு என்பதால் தான் மற்ற மதத்துக்கு மாறுகிறார்கள் என்று உங்களை போன்றோர் சொல்வதால் தான் மற்ற மதத்தில் சாதி, சாக்கடை இல்லையா என இங்கு கேட்கிறார்களே தவிர சைவ சமயத்தில் இல்லை என்று இங்கு யாரும் கூறவில்லையே?? இங்கு அடுத்தவன் முதுகை சொரிவது நீங்கள் தான். யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? எனது கத்தோலிக்க நண்பர்களே தமக்கு யஹோவாவை பிடிக்காது என கூறுவார்கள். உங்களிடம் நல்ல சட்டை உள்ளது என்றால் "உங்கள் கடவுள் தான் கடவுள் மற்றவர்களெல்லாம் கடவுளில்லை" அல்லது "உங்கள் மதம் தான் மதம் மற்ற மதங்கள் ஒன்றும் மதமில்லை" என்று மறைமுகமாக நீங்களும் கூற வெளிக்கிட்டிட்டீர்கள். சட்டை அழகாக இருந்தால் நாங்கள் வாங்கி அணியலாம் என்றால் வாங்கு வாங்கு என கட்டாயப்படுத்தி எதற்காக அணிய வைக்கிறார்கள்? அப்படியானால் உங்கள் சட்டை நல்லதில்லை என கூற வருகிறீர்களா? நீங்கள் இங்கு எதற்காக சைவ சமயத்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்து எழுதுகிறீர்கள்? உங்கள் சட்டையை நீங்கள் போட்டுள்ளீர்கள். அதில் சைவ சமயத்தவர் குறுக்கீடு செய்கிறார்களா? ஆனால் சைவ சமயத்தவரை இந்த சட்டையை போடு என மற்றைய மதத்தவர்கள் குறுக்கீடு செய்தால் நாம் அதுபற்றி குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது. எனக்கு மதம் மாறவும் பிடிக்காது. ஆனால் அடுத்தவன் தானே என்னை மாறு என கேட்கிறான். இங்கே மூக்கை நுழைப்பது நானா இல்லை அவர்களா? உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள் முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட ஒன்று.
  3. இலங்கையிலுள்ள சைவ சமயத்தவர்களை (இந்து என கூறிக்கொண்டாலும்) இந்திய இந்துத்துவத்துடன் எதற்காக ஒப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. அத்துடன் சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சாய்பாபா போன்று கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை எதற்காக புகுத்துகிறீர்கள்? இவர்களை எமக்கு தலைவர் என நாம் கூறினோமா? நான் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த போது கூட இப்படியானவர்களை நம்பியதில்லை. கிறிஸ்தவ மத தலைவர்களாக பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் விட்ட பிழைகளையும் கூற முடியும். அதற்காக கிறிஸ்தவ மதத்தையே கேவலப்படுத்துகிறோமா? மதத்தின் பெயரில் பிழைப்புவாதம் நடத்துவோர் அனைத்து மதத்திலும் உள்ளார்கள். ஒவ்வொரு மதத்திலும் சரி, பிழை பார்க்க போனால் அனைத்து மதங்களும் தம்மை திருத்திக்கொள்ள வேண்டியவையே. சாதிப்பிரிவுகள் நிச்சயம் எதிர்காலத்தில் களையப்பட வேண்டும். அதற்காக மதம் மாறினால் ஏனைய மதங்களில் இவ்வாறான பிரிவுகள் இல்லை என்பது போல் நீங்கள் வாதிடுவது நகைச்சுவையானது. இப்பொழுதெல்லாம் கிறிஸ்தவர்களும் சாதி பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். அதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்? கிறிஸ்தவத்தில் எத்தனை மதப்பிரிவுகள் உள்ளன? யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? நீங்கள் மதத்தை சட்டையுடன் ஒப்பிடுவதற்கு மதம் ஒன்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டை அணியக்கூடியது போன்றது அல்ல. ஆனாலும் உங்கள் பாசையில் சொல்லப்போனால் நீங்கள் எந்த சட்டை வேண்டுமானாலும் போடுங்கள். அதற்காக என்னை (அல்லது என்னை போன்றவர்களை) இந்த சட்டையை போடு என நீங்கள் கூற முடியாது. பிரான்ஸ் வந்ததிலிருந்து பலர் என்னை மதம் மாற கேட்டு விட்டார்கள். எனக்கு விருப்பமானால் நான் மாறுவது வேறு. என்னை மாற சொல்லி இவர்கள் கேட்பது நியாயமா? தானாக மதம் மாறுவதை விடுத்து மாறு என கேட்டு மதம் மாற்றுபவர்கள் பற்றி ஏன் உங்களால் ஒரு வார்த்தை கூட கதைக்க முடியவில்லை? உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள்ள முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டுள்ள மாதிரி உள்ளது.
  4. பனங்காய் அண்ணா, நீங்கள் இசை அண்ணாவுக்கு பதில் எழுதுவதானால் அவர் கருத்தை quote பண்ணுங்கோ. மாறி என்னுடைய கருத்தை quote பண்ணியுள்ளீர்கள்.
  5. அண்ணா, நீங்கள் கூறுவது கிட்டத்தட்ட science hall இல் குமரன் சேர் எமக்கு physics படிப்பிக்கும் போது சொன்னது போன்ற ஒரு கருத்து. அதாவது பூமியிலுள்ளவர்களுக்கு கிட்டத்தட்ட 70-100 ஆயுட்காலமாக இருப்பது போல் வேற்றுக்கிரகவாசிகளுக்கு (அங்கு யாரும் வசித்தால்) ஆயுட்காலம் அதிகமிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக. (இதற்கு விளக்கங்கள் கூறினார், மறந்து விட்டேன்.) எனவே அவர்கள் நீண்ட காலம் இளமையாக இருந்திருப்பார்கள். உதாரணத்துக்கு ஒரு சின்னப்பையன் பூமிக்கு வந்து விட்டு மீள சென்று விட்டு சில காலம் கழித்து திரும்பவும் பூமிக்கு வரும்போது அதே இளமையுடன் இருப்பதை பார்த்து விட்டு அவனை கடவுளென (முருகன் என) எம்மக்கள் நினைத்து வழிபட்டிருப்பார்கள் என ஒரு தடவை பகிடியாக கூறினார். (அல்லது அதை பகிடி என நான் நினைத்திருந்தேன்.) ஆனால் அவர் பகிடியில்லாமல் உண்மையிலேயே அப்படி நினைத்து கூறிய ஒன்றாக இருக்கலாம் என உங்கள் கருத்தை பார்க்கும் போது தெரிகிறது.
  6. அருமையான கருத்து. மதம் மாறுவது, மாற்றுவது பற்றி கதைத்தால் உடனே சாதீயத்தை கொண்டு வந்து புகுத்தி சைவ சமயத்தை கேவலப்படுத்துகிறார்கள். (மற்றைய மதத்தில் சாதீய, வர்க்க முறைகள் இல்லாத மாதிரி..) அதே போல் தமிழீழத்தை விட்டு கிறிஸ்தவர்களை விரட்ட போகிறீர்களா என நாம் நினைக்காத ஒன்றை கொண்டு வந்து புகுத்தி திசை திருப்புகிறார்கள். இது சைவ சமயத்தவர்களை மற்றவர்கள் மதமாற்றுவது தொடர்பான கருத்துக்களை பேச விடாமல் செய்வதற்கும் அரசியல் ரீதியாக மக்களை குழப்பி விடுவதற்கும் பயன்படுத்தும் உத்தி. சைவ சமயத்தவர் முழுக்க வேறு மதங்களை தழுவிக்கொண்டு சென்றால் காலப்போக்கில் சைவ சமயம் இல்லாமலேயே போய் விடும். அவ்வாறு நடந்தால் அது பற்றி இவர்கள் கவலைப்பட போவதில்லை. மதம் மாற்றுகிறார்கள் என்றால் மதமாற்றாத நிலையை கொண்டு வர நினைப்பதை விடுத்து அது பற்றி யாராவது பேசினால் அவர்களை கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்கள் போல் காட்டுகிறார்கள். கடவுள் இருக்கிறார் என நம்புபவன் இந்த சமயத்தில் கடவுள் இல்லை, மற்ற சமயத்தில் தான் கடவுள் இருக்கிறான் என கூற மாட்டான். அவ்வாறு கூறினால் அவன் ஏதோ ஒரு தேவைக்காக அவ்வாறு கூறுகிறான் அல்லது மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளான் என்றே அர்த்தம். ஒவ்வொரு மதத்தினரையும் (அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ) அவரவர் மதத்தில் சுயாதீனமாக இருக்க விடுவதே சிறந்தது. வேற்று மதத்தினரை காதலிப்பவரோ அல்லது பேசி திருமணம் செய்ய முயற்சிப்பவரோ தனது காதலன்/காதலியை மதமாற்ற கூடாது. அவ்வாறில்லாமல் மதம் மாற்றியே திருமணம் செய்வேன் என்ற கொள்கை இருந்தால் வேற்று மதத்தவரை காதலிக்கவோ பேசவோ கூடாது. எனது கடவுள் தான் கடவுள் உனது கடவுள் கடவுளில்லை என்று கூறி பணத்துக்காகவும் பதவிக்காகவும் அடுத்தவனை மதம் மாற்றுவதும் தவறு. இல்லை மதங்களே வேண்டாம் என்றால் மத சார்பற்ற தன்மையை உருவாக்க வேண்டும். மதசார்பற்ற முறையில் திருமணங்களை நடத்த வழிவகுக்க வேண்டும். ஆனால் என்ன ஒன்று, மதசார்பற்ற பிரான்சில் கூட எமது தமிழர்கள் மதம் மாற்றுவித்து திருமணம் செய்விக்கிறார்கள். தமிழனுக்கு ஒரு சரியான தலைவன் இருந்தால் தான் அனைத்து வழிகளிலும் மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றுவோருக்கு (சைவ சமயத்தவர்கள் உட்பட) முடிவு வரும். எனது கடவுள் உனது கடவுள் என சண்டை பிடிக்கும் யாரும் எமது மக்கள் அழியும் போது எந்த கடவுளும் காப்பாற்ற வரவில்லை என்பதை மறந்து விடாதீர்கள். என்னை பொறுத்தவரை கடவுள் என்பதே பொய். ஒவ்வொரு மதத்தவருக்கும் உள்ள புராணக்கதைகள் கட்டுக்கதைகளாக இருக்கும். அல்லது உண்மை சம்பவத்தை திரித்து எழுதிய புனைவு கதைகளாக இருக்கும். ஆனால் கடவுளை நம்புவோர் கடவுள் ஒன்று, அதை வணங்குவோர் முறை வேறு என ஓர் புரிதல் நிலையை உருவாக்கி ஒவ்வொரு மதத்தவரையும் சுயாதீனமாக இயங்க விடுங்கள்.
  7. உங்கள் மனைவிக்கு சைவ சமயம் தான் பிடிக்கும், தொடர்ந்து கோவிலுக்கு செல்வதையே விரும்புகிறார் எனும் போது அவரை மதம் மாற வேண்டாம் என நீங்கள் கூறியிருந்தால் உங்கள் மேல் எனக்கு அதிகம் மதிப்பிருந்திருக்கும். அவர் தானாக மதம் மாறியது கூட உங்களை திருமணம் செய்வதற்காக தான். ஆக மொத்தத்தில் திருமணம் என்ற ஒன்று தான் அவரை மதம் மாற்றியுள்ளது. அவர் மாறா விட்டாலும் நீங்கள் அவரை திருமணம் செய்வதாக கூறியது பாராட்டத்தக்கது. அதுதான் உங்களை ஆயிரத்தில் ஒருவர் என கூறி விட்டாயிற்றே. நீங்கள் இப்படி என்பதற்காக அனைத்து கத்தோலிக்க மதத்தினரும் இப்படி என கூற முடியாது. மதம் மாறாவிட்டால் திருமணம் செய்ய மாட்டாதவர்கள் தான் அதிகம்.
  8. சைவ சமயத்தவர் மட்டும் திறமில்லை. ஐயர் மார் எல்லாம் மக்களின் பணத்தை வாருவதிலேயே குறியாக நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆக மொத்தத்தில் இங்கு மதமாற்றம் தொடர்பாகவே கிறிஸ்தவர்களில் நான் விமர்சனம் வைத்தேனே தவிர பொதுவாக என பார்த்தால் அனைத்து சமயத்திலும் கடவுளின் பெயரால் மனிதன் மக்களை ஏமாற்றுகிறான். இங்கு தமிழ் கிறிஸ்தவர்களோ சைவ சமயத்தவர்களோ ஈழத்தமிழர்கள் என்ற நிலையில் தமிழீழத்துக்கு ஆதரவாகவே உள்ளார்கள். எனவே யாரையும் தமிழீழத்தை விட்டு விரட்ட வேண்டிய தேவை இல்லை.
  9. கிறிஸ்தவர்கள் கெட்டவர்கள் என நாங்கள் யாரும் கூறவில்லை. மதம் மாற்றுவது தொடர்பில் மட்டுமே அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோம். மற்றபடி ஏற்கனவே நான் கூறியது போல் எனது நண்பர்களில் முக்கால்வாசி பேர் கத்தோலிக்க சமயத்தவர்கள். ஒரு சில முக்கிய தருணங்களில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். நல்லவர்கள். மதம் மாற்றுவது தொடர்பில் அது யார் செய்தாலும் தவறு. மாறுபவன் தானாக மாறுவது வேறு. (அப்படி மாறுபவனும் தன்னை தானே ஏமாற்றுகிறான்.) திருமணத்தை காரணம் காட்டியோ அல்லது மூளைசலவை செய்தோ, பண ஆசை காட்டியோ மதம் மாற்றுவது தவறு. கிறிஸ்தவம் என்றால் தனியே நீங்கள் மட்டுமல்ல. யஹோவா போன்ற மதமாற்றும் பிரிவினரும் உள்ளார்கள். அதை நானே பார்த்துள்ளேன். சிலர் ரோட்டில் போகும் போது மறித்து தமது மதத்துக்கு மாற சொல்லி கேட்பார்கள். இயேசு தான் கடவுள், மற்றவர்கள் எல்லாம் கடவுள் இல்லையாம் என கூறுவார்கள். வலுக்கட்டாயமாக தாம் வைத்துள்ள புத்தகத்தை திணிப்பார்கள். பிரான்சிலும் நடக்கிறது. (ஒரு புத்தகத்தின் தலைப்பு "ஆவிகளுடன் பேசுவது எப்படி". அதை நான் திறந்து உள்ளே வாசிக்கவில்லை.) முன்னர் இவர்களுக்கு பதில் சொல்வதுண்டு பின்னர் அவர்களை கண்டால் எஸ்கேப்பாகி விடுவதுண்டு. ஆனால் இன்னொரு நாள் ஒருவரிடம் மாட்டுப்பட்டு விட்டேன். அங்கிருந்து எஸ்கேப்பாக முடியவில்லை. அதனால் ஏதும் பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. எனக்கு இதில் நம்பிக்கையில்லை. எனக்கு எதுவும் கூறாதீர்கள் என்ற பின்னரும் கூறிக்கொண்டே இருந்தார். இயேசு சாத்தான்களை தான் அழித்தாராம். நல்லவர்களை உயிருடன் விட்டு வைத்துள்ளாராம் என்றார். ஆனால் இவற்றை உண்மை என நம்பி யஹோவாவுக்கு மாறி கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிலரையும் எனக்கு தெரியும். இன்னும் பலர் பற்றி கேள்விப்பட்டுமிருக்கிறேன். இவை மூளைசலவை செய்து மதம் மாற்றுதல். அதே போல் இலங்கையிலிருந்து ஒருவரை ஏஜென்சி மூலம் வெளிநாடு வருவதற்கு உதவி செய்வதாகவும் அதற்கு பதிலாக அந்நபர் வெளிநாடு வந்ததும் தமது மதத்துக்கு ஆட்கள் சேர்த்து விட வேண்டும் எனவும் சிலர் கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு நபர் அதற்கு மறுத்து விட்டிருந்தார். ஆம் என கூறி வருபவர்களும் இருக்கலாம். இது பணம் கொடுத்து அல்லது உதவி செய்து மதமாற்றும் முறை.
  10. நாந்தான் அண்ணா மதம் மாற சொல்லி கேட்பது தொடர்பாகவே 999 பேருடன் தமிழ்சூரியன் அண்ணாவை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இங்கு நல்லவர், கெட்டவர், தமிழர், தமிழரில்லை என எழுதவில்லை. நீங்கள் தவறான அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளாதீர்கள்.
  11. இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு? எனது தோற்றம் உங்களுக்கு தெரியாது.
  12. சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்கு ஏன் செல்கிறான் என்பதில் சில காரணங்களை தான் நாங்களும் எழுதியுள்ளோம். உடனே எமக்கெதிராக கருத்து வைக்கிறீர்கள். இங்கு யார் கத்தோலிக்கர்களை தமிழர்கள் இல்லை என்றோ அவர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவோ கூறியது? மதமாற்றுதல் தொடர்பில் இங்கு விமர்சன கருத்து வைத்துள்ளோமே தவிர கிறிஸ்தவர்களை எதிரி என கூறவில்லை.
  13. திருமணம் நடந்தாலும் வேறு முறைப்படி தான் நடந்திருக்கும். ஒத்துக்கொள்ளுங்கோ. ஞானஸ்நானம் பெறாத ஒருவரை தேவாலயத்தில் கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்ய முடியுமா? இல்லை தானே?
  14. அப்ப எதை நன்றாக விளங்கவில்லை? / விளக்கவில்லை? என்ன கேட்கிறீர்கள்? தமிழ்சூரியன் அண்ணாவின் மனைவி பற்றி என்றால் அவர் தமிழ்சூரியன் அண்ணாவின் அனுமதி கேட்காமலும் கோவிலுக்கு போகலாம் என நினைக்கிறேன். அந்த சுதந்திரம் அவர் வீட்டில் உள்ளதாம்.
  15. எனக்கு விளங்கியதன் படி தமிழ்சூரியன் அண்ணாவின் மனைவி கிறிஸ்தவமாக மாறிய பின்னர் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பொழுதும் தனது மனைவியை கோவில்களுக்கு செல்ல அனுமதிக்கிறாராம். ஆனாலும் மனைவி இப்பொழுதும் கிறிஸ்தவர். எனவே பிள்ளைகளும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். ஒருவேளை அவர் மனைவி கிறிஸ்தவராக மாற விரும்பியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பது எனது கேள்வி..
  16. இங்கு நாம் தான் விவாதிக்கிறோமே தவிர அங்குள்ள மக்கள் இந்த துண்டுப்பிரசுரம் பற்றி கருத்தில் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். எனினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
  17. வாங்கோ வாங்கோ, மனைவியுடன் வந்தால் உங்களுடன் நீண்ட நேரம் மினக்கடுவன். தனியாக வந்தால் கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போய்விடுவேன்.
  18. நீங்கள் சொல்வது தான் ஒரு சில. நான் சொல்வது தான் யதார்த்தம். எப்படியோ மதம் மாறி விட்டார் தானே? இதை தான் இங்கு பலரும் கூறுகிறோம். ஒருவேளை அவர் மதம் மாற விரும்பியிருக்காவிட்டால்? ஊரிலும் சரி இங்கும் சரி எனக்கு நண்பர்களாக வருபவர்களில் முக்கால்வாசி பேர் கத்தோலிக்க சமயத்தவர்கள். அவர்கள் வீடுகளில் நடைபெறும் திருமண நடவடிக்கைகள் பல எனக்கு தெரியும். இன்னும் பலவும் நான் கேள்விப்பட்டுள்ளேன். காதலித்து விட்டு திருமணத்துக்காக மதம் மாறியவர்கள் கூட நான் பழகுவோரில் அடங்கும். அதில் வேறு.... தமது திருமணத்துக்கு வீட்டில் மதம் பிரச்சினையாகி விடக்கூடாது என கூறி தனது காதலன்/காதலி தனது மதத்துக்கு மாற வேண்டுமென தாங்கள் யேசுவிடம் பிரார்த்தனை செய்ததாக கூட சிலர் கூறியுள்ளார்கள். அதை விட தனது காதலன்/காதலியை மதம் மாறும்படி தொடர்ந்து கேட்டு மாற சம்மதித்த பின்னர் திருமணம் செய்ததாகவும் கூறி கேள்விப்பட்டுள்ளேன்.
  19. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் இதை இங்கு எழுதுகிறேன். சில சைவ சமயத்தவர்கள் கிறிஸ்தவர்களை திருமணம் செய்யும் போது திருமணத்துக்காக மதம் மாறியுள்ளார்கள். (மாற்ற வைக்கப்பட்டுள்ளார்கள்). அதிகளவில் காதல் திருமணத்தில் தான் இது நடைபெறும். காதலித்து விட்டு மதம் மாறினால் தான் திருமணம் செய்வேன் என கூறி மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் பலர் உள்ளார்கள். அண்மையில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு பெண் பார்த்தார்கள். பெண் சைவ சமயம். இருவருக்கும் திருமணம் செய்வதற்கு எல்லாம் பேசி ஓகே என்றாகி விட்டது. உறவினர்களுக்கும் சொல்லியாயிற்று. கடைசியில் அப்பெண்ணை கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறு கேட்டார்கள். அதற்கு பெண் மறுத்து விட்டார். கிறிஸ்தவரை திருமணம் செய்வதில் தனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் மதம் மாற மாட்டேன் என குறிப்பிட்டார். பின்னர் அப்பெண்ணை வேண்டாம் என கூறி விட்டு வேறு பெண்ணை பார்க்கிறார்கள். அவர்கள் கூறிய காரணம் தாம் கத்தோலிக்க மதமாம். அதனால் வேறு மதத்தவர் என்றால் தமது மதத்துக்கு மாற வேண்டுமாம். (ஆண் பிரான்சிலுள்ளார். பெண் இலங்கையிலா பிரான்சிலா என தெரியவில்லை.) இது சரியான செயலா? (இந்த பெண் மதம் மாற மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் பேசியாயிற்று. உறவினர்கள் பலருக்கு கூறியாயிற்று. இனி என்ன செய்வது, திருமணத்தை குழப்ப கூடாது என்பதற்காக வேறு வழியில்லாமல் மதம் மாறுபவர்களும் உண்டு.) பத்தாக்குறைக்கு இன்னுமொரு வீட்டில் தமது சொந்தத்திலுள்ள ஒரு ஆணை நான் தமது மதத்துக்கு மாறி திருமணம் செய்வேனா என என்னிடம் கேட்டார்கள். (கொடுமை ) எனக்கு தான் கடவுள் பக்தியே இல்லையே. மதம் மாறுவதில் பிரச்சினை இல்லை தானே எனவும் கூறி கேட்டார்கள். நான் அந்த நபரை திருமணம் செய்ய போறதில்லை. ஆனால் அவர்கள் கேட்டது பிழை என்பதை குறிப்பிடவே இங்கு இச்சம்பவத்தை கூறுகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட மதம் மாற வேண்டும் என கேட்பது சரியா? இஸ்லாமியர்களும் திருமணம் செய்வதானால் தமது மதத்துக்கு மாற வேண்டும் என கூறுவதுண்டு. மத ஒற்றுமையை குலைப்பது போலிருந்தால் நிர்வாகம் இக்கருத்தை நீக்கி விடுங்கள்.
  20. இலங்கையில் நடைபெற்றது "திட்டமிட்ட தமிழினப் படுகொலையே" எனும் அடிப்படையில் அம்மக்களுக்கு விடியலை உண்டாக்கும் வகையில் அமெரிக்கா தீர்மானம் முன்மொழிய வேண்டும் என இன்று மாணவர்கள் அமைப்பு பிரதிநிதிகள் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது(மண்டல அலுவலர்,அமெரிக்க தூதரகம் ,சென்னை). அதன் விவரம்: To, U.S. Consul General Jennifer McIntyre Consulate of Unites State of America Chennai Tamil Nadu From Students of Tamil Nadu Dear Madam , Sub: Request to take a clear and firm stand on Sri Lanka in the forthcoming UNHCR Meet in Geneva You must be aware of Tamil Genocide which took place in Sri Lanka in the year 2009. Sri Lankan army ended the brutal war with the LTTE by killing more than 150,000 innocent people. In name of combating terrorism Sri Lanka actually massacred thousands of innocent Tamils. Even after the war was over, Sri Lankan Government did'nt stop it's atrocities over the Tamil people. Women are periodically raped, Tamil activists / journalists are abducted or murdered, people are threatened at gun point , Tamil lands been grabbed by the Sri Lankan army, forcible abortions / contraception are made and Tamil people are compelled to live in fear. Sri Lanka deceived the whole world, promising to give equal status for the Tamils by sharing powers with the Tamils. But this never happened. Sri Lanka promised to probe on it's own war crimes but failed to do so. Probing on war crimes committed by Sri lankan army by it's own Government will not yield any justice . What was committed by the army cannot be limited to war crimes but it amounts to Genocide. We Tamils all over the world cry for justice. We demand for Independent International inquiry on Tamil Genocide. Sri Lankan President, his Government and his army has to be inquired and punished for this Genocide and war crimes . We do not want just Peace. We want Justice and Peace. What we expect from the United States of America? As India was an active partner in the Tamil Genocide which took place in Sri Lanka, we Tamils do not believe in the Indian Government. We firmly believe that Indian government will not initiate any process for inquiring into the charges of Genocide on Sri Lanka. Therefore we seek the help and assistance of United States of America to pass a resolution against Sri Lanka in the forthcoming UNHCR meet to be held at Geneva. We request the USA take a firm stand on Sri Lanka by seeking Independent International inquiry on Tamil Genocide committed by the Sri Lankan army under the guidance of Sri Lankan Government. Also USA should come up with a plan to conduct a Independent referendum among the Srilankan Tamils living in Srilanka and also all over the world. Hence by this referendum the world could come to know the decision and wish of the lankan tamil people whether they want to be united or to be separated from srilanka. We students of Tamil Nadu request U.S. Consul General Jennifer McIntyre , to take this message to the President of United States of America to bring long pending justice to the Tamils. We assure that we will always be grateful to America and yourself . We appreciate all your efforts in this regard. With Bleeding Hearts Yours in Tears Students of Tamil Nadu. Joe Britto (facebook)
  21. டெல்லியில் ஐநா அலுவலகம் முற்றுகை 14.02.14 - மே 17 இயக்கம். இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகோரியும், பொதுவாக்கெடுப்பை உடனே நடத்துவேண்டியும், இனப்படுகொலைக்கு துணைபோன ஐ.நா அதிகாரிகளை தண்டிக்கக் கோரியும் மே 17 இயக்கம் SDPI,SIKH YOUTH FORM ஆகியவை இணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டம் இன்று டெல்லியில் நடந்தது.பின்னர் ஐ.நா அலுவலகத்தில் மனுக்கொடுக்கப்பட்டது. (facebook)
  22. அமெரிக்காவில் மே17 இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைத்த ஐ.நா தலைமை அலுவலக முற்றுகை போராட்டம்.. இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை .... நியூயார்க் ஐ நா தலைமை செயலகம் மற்றும் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் (விஜய் நம்பியார் ) அலுவலகம் முன்னே மே17 மற்றும் இன உணர்வாளர்கள் போராட்டம்.... பிப்ரவரி 12 முருகதாசன் நினைவுநாளில் தமிழின படுகொலைக்கு துணை போன ஐ நா மற்றும் அதன் பிரதிநிதிகளை கண்டித்து மற்றும் வெறுமனே ஒரு இனபடுகொலையை சாதாரணமாக போர்குற்றம் என்ற சிறு வட்டத்தில் சுருக்கி தனி ஈழ கோரிக்கையை நீர்த்து போக செய்யும் ஐ நாவின் அய்யோகியதனத்தை கண்டித்து உலகம் முழுவதும் மே 17 இயக்கம் ஐ நா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ நா தலைமை செயலகத்தை நம் தோழர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கடும் குளிர் மற்றும் உறை பணியை பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே முற்றுகையிட ஆரம்பித்தனர்.. USTPAC, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மே 17, நாம் தமிழர் மற்றும் பல தமிழின உணர்வாளர்கள் பலர் இம்முற்றுகை போராட்டத்தில் பங்கு பெற்றனர்... " We want referendum , We want Tamil Eelam" என்ற நமது கோரிக்கையை விண்ணை தொட முழுக்க மிட ஏற்கனவே அங்கு இருந்த திபெத், மற்றும் ஆப்ரிக்க இளைஞர்கள் ஆதரவு கொடுத்து உற்சாக படுத்தினர்.... ஈழ விடயத்தில் ஐ ந வின் துரோகத்தை வெளியிட்ட Pertrie ரிப்போர்ட் Inner city press ன் ஊடகவியலாளர் Matthew Russell Lee நம் போராட்டத்திற்கு வந்தது நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது... அவரிடம் நம்முடைய கோரிக்கைகள் மற்றும் மே 17 இயக்கத்தின் அறிக்கை கையளிக்கப்பட்டது. "இலங்கையில் நடைபெற்ற இனபடுகொலையை வெறும் போர்குற்றம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதை விட அது ஒரு இன படுகொலை என்பதை பதிவு செய்து அதற்க்கு இலங்கையில் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் மக்களிடயே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும்" என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திர குமாரன் கூறினார்... பிறகு நம் தோழர்கள் அருகாமையில் அமைந்துள்ள ஐ நா பாதுகாப்பு தலைமை அலுவலகமான விஜய் நம்பியாரின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.. (facebook)
  23. இன்று அடையார் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்களும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் பங்கு கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பொது வாக்கெடுப்பு கோரியும், இலங்கையில் சர்வதேச விசாரணை கோரியும் ஐ.நா அதிகாரிகளான பான் கீ மூன் , விஜய் நம்பியார் , ஜான் ஹோல்ம்ஸ் மற்றும் ஐ.நா விற்கு எதிராக முழக்கங்களும் ஐ.நா மன்ற கொடியை எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கைதாகினர். நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சாகுல் ஹமீது , மதிமுக சார்பாக அண்ணன் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி அண்ணன் குடந்தை அரசன் , மே 17 இயக்க தோழர் திருமுருகன், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத் தோழர் உமர்கயான்,அய்யா பொழிலன் .இன்னும் பல இயக்கங்கள்(விடுபட்ட இயக்கங்கள் இருந்தால் மன்னிக்கவும்) ஒன்றாக இணைந்தது பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கொள்கை அளவில் முரண்பட்டாலும் தமிழர் பிரச்சினைகளுக்காக நாம் அனைவரும் ஒரே அணியில் திரண்டால் எதிரிகளை எளிதாக வீழ்த்திவிடலாம் . இது போன்ற ஒருங்கிணைந்த போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் . போராட்டத்தை ஒருங்கிணைத்த மே 17 இயக்கத்திற்கும் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் கட்சிகள் மற்றும் உணர்வாளர்களுக்கும் எனது நன்றிகளும் புரட்சி வாழ்த்துக்களும். (facebook)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.