Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. முள்ளிவாய்க்காலோடு கருணாநிதி கருவறுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு ஜெயலலிதாவை வேரறுப்போம். -மாணவர்கள் சபதம். Joe Britto (facebook)
  2. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து, நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிக்கை அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெறாத இனப்படுகொலை இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசால், தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இலட்சக்ணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார்கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். தமிழ் ஈழத் தாயகத்தின் சுதந்திரத்தை மீட்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீரம் செறிந்த சமர்களை, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் விடுதலைப்புலிகள் நிகழ்த்தினர். சிங்களப் படைகளைச் சிதறடித்து வெற்றி கண்டனர். ஆனால், சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரÞ தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழர்களின் உயிர்க்கவசமான, புலிப்படையை அழிக்கும் குறிக்கோளோடு, சிங்கள அரசுக்கு, முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்து, இந்தியாவின் தளபதிகளை அனுப்பி, யுத்தத்தை பல வழிகளிலும் உதவி இயக்கியது. இந்தியா செய்த பண உதவியால், மேலும் ஆறு அணு ஆயுத வல்லரசுகளிடம் இருந்து, இராஜபக்சே அரசு, ஆயுதங்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பெற்று, தமிழர்களை அழிக்கப் பயன்படுத்தியது. இதனால், விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவு ஏற்பட்டது. உலகின் கொடுந் துயரமாக, முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில், 1,47,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், தாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்தியாதான் காரணம் என்று; இந்தியாவுக்காகத்தான் போரை நடத்தினோம் என்றும் மகிந்த ராஜபக்சே திமிரோடு சொன்னான். விடுதலைப்புலிகள் கட்டி எழுப்பிய மாவீரர் துயிலகங்கள், போரில் மடிந்த புலிகளின் கல்லறைகள் அனைத்தையும் இராஜபக்சே இடித்துத் தரை மட்டமாக்கினான். நெஞ்சை நடுங்கச் செய்யும் இந்தப் பேரழிவை, உலகத்துக்கு உணர்த்தவும், தாய்த் தமிழகத்தில் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தந்த தியாகிகளை நினைñட்டவும், தஞ்சைக்கு அருகில் விளார் சாலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று, அண்ணா தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதனைத் திறக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு தள் ளுபடி செய்யப்பட்டது. இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகÞட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. முற்றத்தின் வாயிலுக்கு உள்ளே, இரண்டு அழகான கருங்கல் நீரூற்றுகள், பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டு, அனுமதியைத் தொடர்ந்து நீட்டிக்கக் கோரியபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி வழக்கமாக வந்து விடும் என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது. ஆனால், 2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்றபிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்காவுக்குள் ஆடு மாடுகள் வர விடாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர். கருங்கள் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்புக் கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர். அப்போது முற்றத்தின் குடிலில் படுத்து இருந்த பழ.நெடுமாறன், ‘எதற்காக இடிக்கின்றீர்கள்?’ என்று காவல்துறையைக் கேட்டபோது, ‘வருவாய்த் துறை அதிகாரிகள்தான் இடிக்கிறார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்’ என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் எதுவும் சொல்ல மறுத்தனர். தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறன் அவர்களையும், கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 2011 ஆகÞட் மாதம் பூங்காவுக்குக் கொடுத்த அனுமதியை, அதே ஆண்டு டிசம்பர் மாதம் ரத்துச் செய்துவிட்டதாக, மோசடியாக இப்பொழுது ஒரு கோப்பை அரசு தயாரித்து உள்ளது. அப்படிச் செய்து இருந்தால், அதை பழ. நெடுமாறனுக்குத் தெரிவித்து இருக்க வேண்டும். முற்றத்தின் முகப்பை இடிப்பதற்கு முன்னால், தாக்கீது கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் சட்ட விரோதமாக, நீதிக்குப் புறம்பாக, முற்றத்தை இடித்து, உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஜெயலலிதா அரசு நெருப்பைக் கொட்டி உள்ளது. இந்த அராஜகத்தைக் கேள்விப்பட்டவுடன், நான் தோழர்களோடு மதுரையில் இருந்து விரைந்தேன். போலீÞ தடைகளை உடைத்துக்கொண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் சென்று, ‘இது தமிழர்களின் சொத்து; இதை உடைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, பகல் 12 மணி முதல், இரவு 9 மணி வரை அங்கேயே இருந்தேன். பழ. நெடுமாறனையும், உணர்வாளர்களையும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்புகிறார்கள் என்று அறிந்தபிறகு, அங்கிருந்து புறப்பட்டேன். ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முயலோடும் ஓடிக்கொண்டு, வேட்டை நாயோடும் சேர்ந்து துரத்துவது. Running with hare; hunting with the hound. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த மோசடிப் பித்தலாட்டத்தை, தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16 சனிக்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கு ஏற்க அழைக்கிறேன். ‘தாயகம்’ வைகோ சென்னை - 8 பொதுச்செயலாளர் 14.11.2013 மறுமலர்ச்சி தி.மு.க. (facebook)
  3. அவசர செய்தி...!!! முள்ளிவாய்க்கால் முற்றத்தை முழுவதுமாக இடிக்க ஜெயலலிதா அரசு முடிவுசெய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஐயா வைகோ, அண்ணன் சீமான் உட்பட 700 பேரை காவல்துறை அடைத்து வைத்துள்ளது. அவர்கள் வெளியே சென்றால் பல ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி விடுவார்கள் என்ற அச்சத்தால் அவர்கள் அனைவரையும் காவல்துறை கண்காணித்து வருகிறது. தள்ளாத வயதிலும் தமிழர்களுக்காக கோவிலை அய்யா பழநெடுமாறன் கட்டி கொடுத்ததோடு இல்லாமல் அதற்காக இன்று சிறையிலும் இருக்கிறார். தமிழ் உணர்வாளர்களே போராட்டத்தை உடனடியாக தொடருங்கள். இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். (facebook)
  4. இந்த petition ஐ தயார் செய்தவர் Kanata, Canada இல் உள்ளதாக இருக்கிறது. எனவே கனேடிய நண்பர்களுக்கும் விளங்கினால் அவர்களும் கையொப்பமிடுவார்கள் என நினைத்தும் இருக்கலாம். எனவே கையொப்பமிடுங்கள்.
  5. தோழர்களே நேற்று கொளத்தூர் மணி அண்ணன் கைது இன்று நெடுமாறன் அய்யா கைது, நாளை வைகோ ஐயாவும், சீமான் அண்ணனும் கைது செய்யப்படலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு நமக்கான ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே, நம் வீட்டிற்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதையெல்லாம் நாம் பிறகு பேசி தீர்த்துக்கொள்வோம், இல்லை பிறகு மோதிக்கொள்வோம், ஆனால் இன்றைய உடனடித்தேவை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய கட்சிகளை துடைத்தெறிவது தான். எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக எந்த தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும், சீமான் அண்ணன் அவர் ஏற்கனவே மதிமுக தனித்து நின்றால் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லியுள்ளது போல் இந்த கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை குறைந்தபட்சம் இந்த அணி மூன்றாவது இடமாவது பெறும், இதே கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளும்கட்சியோ எதிர்கட்சியோ அது நாமாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்காக இந்த தேர்தல் கூட்டணி அமைய வேண்டும். (facebook)
  6. உடனே கையெழுத்திடுங்கள் = பரப்புங்கள் நண்பர்களையும் கையெழுத்திட வையுங்கள்... Dr.J.Jayalalitha , Tamilnadu Cheif Minister : Please stop the destruction of Mullivaikkal Monument http://www.change.org/petitions/dr-j-jayalalitha-tamilnadu-cheif-minister-please-stop-the-destruction-of-mullivaikkal-monument (facebook)
  7. முதலமைச்சர் செயலலிதா அரசின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பை வண்மையாகக் கண்டிக்கின்றேன் !- தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை. ======================================= தமிழக முதல்வர் செயலலிதாவின் கட்டளையைத் தலைமேற் கொண்டு இன்று (13.11.2013) விடியற்காலை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் 'திருப்பணி'யில், மாவட்ட வருவாய்த்துறையும், காவல்துறையும், தமிழக நெடுஞ்சாலைத்துறையும் கூட்டாக ஈடுபட்டன. சுற்றுச்சுவரை முற்றாக இடித்துத் தகர்த்துவிட்டனர். 60 அடி அகலத்திற்கு, சுற்றியிருந்த பூங்காவையும் நாசம் செய்து விட்டனர். கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நீருற்றை, அப்புறப்படுத்திவிட்டனர். இந்த அட்டூழியங்களுக்கு அவர் சொல்கின்ற காரணம், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கில் பூங்கா எழுப்பியிருக்கிறார்கள், எனவே இடித்தோம் என்கிறார்கள். இந்த பூங்காவையும் சுற்றுச்சுவரையும் அப்புறப்படுத்த வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு எதையும் செய்யவில்லை. சாலையோரம் உபரியாகக் கிடந்த இந்த புறம்போக்கு நிலத்தில், நெடுஞ்சாலைத்துறையின் எழுத்து வடிவிலான ஒப்புதலோடு தான், பூங்கா அமைக்கப்பட்டது. இப்பொழுது, அந்த உத்தரவை நாங்கள் நீக்கி விட்டோம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலையில் கூறினார்கள். சாலையோர பூங்கா அமைத்துக் கொள்ளத் தனியாருககு அனுமதி வழங்கும் விதிமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் இருக்கிறது. அவ்விதியின்படி, கொடுக்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இரத்து செய்வதற்கான விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி, இரத்து செய்தது பற்றிய செய்தியை எழுத்துவடிவில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வழங்கவில்லை. நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை அவர்களும், நானும் உரிமை இரத்து செய்து கொடுத்த நகலைக் காட்டுங்கள் என்று கேட்டபோது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, அவர்களாக எழுதிக் கொண்ட அறிக்கையைக் காட்டினார்களே தவிர, அந்த அறிக்கையை தொடர்புடையவரிடம் கொடுத்து பெற்றுக் கொண்டோம் என்பதற்கான கையொப்பமுள்ள நகலை அந்த அதிகாரி காட்டவில்லை. எனவே, நீங்கள் இப்பொழுது ஜோடனையாகத் தயாரித்துக் கொண்ட அறிக்கை இது என வாதிட்டோம். அடுத்து, மதுரை உயர்நீதிமன்றம், இப்பொழுதுள்ள ஒட்டுமொத்தக் கடடுமானத்தோடு முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் திறந்து கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. அத்துடன், ஆக்கிரமிப்புப் பற்றி தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற ஆணைக்குப் புறம்பாக இடிப்பது சட்டவிரோதம், நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக் காட்டினோம். அதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பதில் சொல்லவில்லை. அவர்கள் இடிப்பதிலேயே குறியாக இருந்தனர். சுற்றுச்சுவர்களை முழுமையாக இடித்த பிறகு, பூங்காவை நாசப்படுத்திய பிறகு, முற்றத்தில் உள்ள மண்டபங்களுக்குச் செல்லும் பாதையையும், கம்பி வேலிகட்டி அடைத்தார்கள். அந்த முற்றத்திற்குள் நுழைய எந்த வாசலும் அவர்கள் வைக்கவில்லை. முற்றத்தின் மண்டபங்கள் பட்டா நிலத்தில் உள்ளது. அது உலகத் தமிழர் பேரமைப்பினுடையத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களது பெயரில் உள்ளது. தனியாருக்குச் சொந்தமானது. அதற்குப் போவதற்குப் பாதை வேண்டும். அதுமட்டுமல்ல, அய்யா நெடுமாறன் குடியிருக்கும் வீடு அதிலுள்ளது. அவ்வீட்டில் மனைவி, மகள் ஆகியோருடன் நெடுமாறன் குடியிருந்து வருகிறார். அவர்களையும் சேர்த்து உள்ளே வைத்து கம்பி வேலி வைத்து அடைத்துவிட்டால்,எப்படி வெளியே வருவார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்தி நெடுமாறனை சுட்டுக் கொன்றால் பழி வரும் என்று அஞ்சி, கம்பி வேலி அடைப்புக்குள் பட்டினி கிடந்து சாகட்டும் என செயலலிதா இந்தத் திட்டம் போட்டிருக்கிறாரா? என்று கேட்டோம். ஒரு வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைப்பதற்கு, யாருக்கு உரிமை இருக்கிறது? எந்த சட்டத்தில் இடமிருக்கிறது? என்று கேட்டபிறகு, அதிகாரிகள் யோசித்து, வீட்டுக்கு செல்லும் பாதையை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் செல்லும் பாதையை கம்பி வேலி கட்டி அடைத்துள்ளார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் தமிழக அரசு அதிகாரிகள் இடிக்கிறார்கள் என்ற செய்திப் பரவியதும் மக்கள் திரண்டுவிட்டார்கள். அந்த மக்கள் ஆவேசத்தோடு அதிகாரிகள் போட்ட வேலியை அப்புறப்படுத்தினார்கள். காவல்துறையினர் அந்த மக்களைக் கைது செய்து, தஞ்சை நகரில் காவலில் வைத்துள்ளார்கள். அய்யா பழ.நெடுமாறன் அவர்களையும், அவரோடு முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில் உட்கார்ந்திருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை உள்ளிட்ட பலரையும் காவல்துறை கைது செய்து கொண்டுபோனது. இந்த அநீதியைக் கண்டித்து, த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட 17 தோழர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளார்கள். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழக இளைஞர் முன்னணித் தோழர் ரெ.ரெங்கராசு தலைமையில், மறியல் செய்த மகளிர் ஆயம் ஒன்றியப் பொறுப்பாளர் தோழர் மீனா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றும்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடந்து கொண்டுள்ளன. நேற்று மாலை, காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியா செல்லககூடாது என்று சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் போட்டு பரபரப்புக் காட்டிய முதலமைச்சர் செயலலிதா, இன்று காலை விடிவதற்குள் ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கச் செய்திருப்பது, இட்லரின் செயல்பாட்டை நினைவுட்டுகிறது. 1933ஆம் ஆண்டு மே முதல் நாள், இலட்சக்கணக்கான மக்களை, தொழிலாளர்களைத் திரட்டி மே நாள் கொண்டாடினார் இட்லர். அந்த பெருந்திரள் கூட்டத்தில் பேசிய இட்லர், இன்று முதல் ஜெர்மன் தேசமெங்கும் இரண்டு முழக்கங்கள் ஒலிக்க வேண்டும் என்றார். அது, "உழைப்பை மதிப்போம்! உழைப்பாளியை கவுரவிப்போம்!" என்ற முழக்கங்களாகும் என்றார். ஆனால் மறுநாள் விடிந்தவுடன், நாளேடுகளில் தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன, தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என செய்தி வந்தது. செயலலிதாவின் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு நிகழ்வு. இட்லரின் தந்திரத்தை ஒத்ததாக இருக்கிறது. இலங்கையில், ஈழ விடுதலைக்குப் போராடிய வீரர்களுக்கு, மக்களுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களையெல்லாம் இராசபக்சே இடித்தான். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை முதலமைச்சர் செயலலிதாவே இடிக்கிறார். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் இந்த சட்டவிரோதச் செயலுக்கு, நடுவண் அரசின் தூண்டுதல் இருக்கும் என்ற போதிலும், முதலமைச்சர் செயலலிதாவின் தீவிர முனைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழினத்தின் மீது இந்திய அரசுக்கு எந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ, அதே அளவுக்கு காழ்ப்புணர்ச்சி செயலலிதாவுக்கும் இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக அரசின், முள்ளிவாய்க்கால் முற்றத் தகர்ப்பு அழிவு வேலையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அய்யா பழ.நெடுமாறன் உட்பட கைது செய்யப்பட்ட தோழர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதே வேளை, தமிழக, இந்திய அரசுகளின் தமிழின விரோதச் செயல்களை தமிழ் மக்கள் எதிர் கொள்வார்கள், முறியடிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்! இப்படிக்கு, தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. ============================================ தலைமைச் செயலகம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (facebook)
  8. ஐயா பழ.நெடுமாறன் உட்பட 83 பேரும் திருச்சி சிறையில் அடைப்பு. 27ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க தஞ்சை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆணை. (facebook)
  9. காலையில் கைதுசெய்யப்பட்ட 61 பேர் மற்றும் ஐயா நெடுமாறன் உள்ளிடோர் ரிமாண்ட் செய்யப்படுட்டு திருச்சி மத்திய சிறை நோக்கிபயணம்.ஐயா உடன் கைது செய்யப்பட்ட தம்பி புவன் தகவல். (facebook)
  10. சண்டையை தொடக்கி வைத்ததில் உங்கள் பங்கும் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957765 அதென்ன மற்றவன் கோடிக்குள்ளை கட்டுறம். அது தமிழக மக்கள் தமது பிரதேசத்தில் தாம் நினைவுகூர கட்டுகிறார்கள். இல்லை எங்கட நாட்டுக்குள்ளை தான் கட்ட வேணும் என்றால் நீங்கள் எப்ப நாட்டை பிடிச்சு தருவீர்கள் என்று தெரியேல்லை. அதோட பிடிச்ச நாட்டிலை முள்ளிவாய்க்கால் முற்றம் அமைச்சு தமிழக மக்கள் எல்லோருக்கும் விசா கொடுத்து தமிழீழத்துக்கு வந்து மாவீரரை வணங்குங்கள் என்று சொல்லி அவர்களையும் தமிழீழத்தில் குடியமர்த்தி போட்டு சொல்லுங்கோ. (எல்லோருக்கும் இடம் வேணுமென்றால் சிங்களவர்கள் முழுப்பேரும் இலங்கையை விட்டு போக வேணும்). அதுவரைக்கும் அவர்கள் தஞ்சையில் நினைவு கூரட்டும்.
  11. நீங்கள் பொதுவாக கேட்டீர்களோ இல்லையோ, நீங்கள் எனது கருத்தை quote பண்ணி எழுதிய கேள்வி, "மெசோ அக்கா கேட்டதில் என்ன தவறு?" என்பது போல் அர்த்தம் கொடுக்கிறது. அத்துடன் இத்திரியில் தனியே சீமான் அண்ணா என்ன பண்ணினார் என்று தான் கேட்கப்பட்டிருக்கு. வைகோ ஐயா என்ன பண்ணினார் என்றோ அல்லது ஏனையோர் என்ன பண்ணினார் என்றோ கேட்கப்படவில்லை. திரும்ப வாசித்து பாருங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957588 http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957593 http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957812 நீங்கள் திரும்ப திரும்ப எழுதினாலும் எழுதியதை மாற்ற முடியாது.
  12. நான் மெசோ அக்கா சீமான் அண்ணா பற்றி கேட்டதற்கு எழுதிய பதில் கருத்தை நீங்கள் quote பண்ணியதனால் நானும் அதுபற்றி குறிப்பிட்டேன். மறைமுகமாக அவர் கேள்விக்கு உங்கள் கருத்து ஆதரவை வேண்டி நின்றது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது நான் அல்ல. நீங்கள் எனது பதிலை quote பண்ணியது உங்கள் பிழை.
  13. ஆர்ப்பரித்தது புதுச்சேரி இலங்கையில் நடைபெற இருக்கும் பொது நலவாய மாநாட்டை எதிர்த்து புதுவையில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். நமது கோரிக்கைகள் ஆட்சியாளர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ மக்கள் மன்றத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே நமது குறிக்கோள். நேற்று மிக நீண்ட தூரம் மிக எழுச்சியாய் நடைபெற்ற பேரணியும்அதை தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டமும் அதை சாத்தியமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. -நாம் தமிழர்- (facebook)
  14. சீமான் அண்ணா ஈழ தமிழர்கள் மேல் சவாரி விடுபவர் என்று நினைத்தால் சீமான் அண்ணா எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கேள்வியை அவரிடம் தானே கேட்க வேண்டும்? யாழில் எழுதினால் அவர் பதில் தருவார் என்ற நினைப்போ? இல்லை அவர் என்ன செய்தார் என்று அறிய வேண்டும் என நினைத்தால் செய்திகளை தேடிப்பிடித்து யார் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதை கொண்டு வந்து இங்கு இணைக்க சொல்லுங்கோ. அல்லது மற்றவர்கள் இணைக்கும் வரையாவது பொறுமையா இருக்க சொல்லுங்கோ. அதை விடுத்து முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டு கொஞ்ச நேரத்திற்குள் அங்கு என்ன நடக்கிறது என்று செய்திகளே வருவதற்கு முன்னம் சீமான் அண்ணா என்ன செய்தார் என்று கேட்பது, சீமான் அண்ணா மீதான காழ்ப்புணர்வையே காட்டுகிறது. இவ்வளவுக்கும் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. தனியே சீமான் அண்ணா தான் இலக்கு. இங்குள்ள கருத்துகளை பார்த்தால் அது புரியும்.
  15. அவர்கள் தமிழகத்தில் போராடுகிறார்கள். அவர்களை போராட வேண்டாம் என்று சொல்ல எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. அவர்கள் போராட்டத்தால் எந்த மாற்றமும் வராது என்றால் ஈழ தமிழனுக்கு மட்டும் என்ன பிரச்சினை வந்து விடப்போகுது? பிறகென்ன அவர்கள் ஈழ தமிழனை வாழ விட்டா காணும் என்று புலம்பல்? அவர்கள் போராட்டம் நடத்தினால் சாப்பாடு இறங்குதில்லையோ? அவர்கள் போராட்டம் பிடிக்கலையோ, ஒதுங்குங்கள். பிடித்தவர்கள் ஆதரவு தெரிவித்துக்கொள்வார்கள். நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் வரும் அமைப்பே தவிர வளர்ந்து விட்ட அமைப்பு கிடையாது. அப்படியிருந்தும் ஈழ மக்கள் பிரச்சினை பற்றி தமிழகத்தில் மக்களை திரட்டி அவர்களுக்கு சீமான் அண்ணா விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை சீமான் அண்ணா உட்பட ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்படுத்திய விழிப்புணர்வு தான் இப்பொழுது இவ்வளவு போராட்டங்களுக்கும் ஆதரவை திரட்டி வருகிறது. அன்று ஏன் எதுவும் பண்ணேல்லை என்று கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் கேளுங்கள். போராடியவர்களை எதற்காக அடக்கினீர்கள் என்று கருணாநிதியை கேளுங்கள். மொத்தமா எல்லாரும் ஓடி வரவில்லை. சண்டை நடக்கும் போது நானும் இலங்கையில் தான் இருந்தேன். நானும் போராடவில்லை. என்னை போல் பலரும் போராடவில்லை. அதே போல் போராடாமல் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் பலர். அவர்கள் வெளிநாட்டில் என்ன முயற்சி எடுத்தாலும் உங்கள் கூற்றுப்படி அவர்கள் களத்தில் போராடாதவர்கள் தான். ஆனால் தமிழக தமிழர்கள் ஏதும் போராடினால் உடனே சொல்வது நாங்கள் பார்த்துக்கொள்வம். அன்று போராடாத நீங்கள் இனியும் போராட வேணாம் என்று. ஆனால் அன்று போராடாத நீங்கள் மட்டும் எப்பிடி இனி போராட முடியும்? குற்றம் சொல்வது தனியே தமிழக தமிழர்களுக்கு மட்டும்.
  16. 13 நவ அதிகாலை இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம். அரசின் தமிழ் தமிழர் விரோதப்போக்கினை கண்டித்து மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலையருகில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழ்ர் கட்சியினர் 15 கைது செய்யப்பட்டனர். (facebook)
  17. ஈழ தமிழன் அனைவரும் போராடினானா. போராடினால் இப்படி தோற்றிருப்பானா. நீங்கள் களத்தில் நின்றீர்களா? இல்லை ஓடி வந்தீர்களா? வசவுகள் எமக்கு இல்லையா? தனியே தமிழக தமிழனுக்கா? நாங்கள் எதையும் செய்ய மாட்டோமா? செய்பவனையும் திட்டி தீர்ப்போமா? சும்மா அடுத்தனவை குறை சொல்ல முன்னம் நாங்கள் என்ன பண்ணினோம் என்பதையும் பார்த்தால் நல்லது. உங்களை யார் அழ சொன்னது?
  18. முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் செயலலிதாவின் தமிழர் விரோத வன்செயலை கண்டித்து புதுவை நாம் தமிழர் கட்சியின் திடீர் சாலை மறியல் (facebook)
  19. முள்ளிவாய்க்கால் முற்றம் தற்போதய நேரடி நிலவரம்......... முற்றத்தின் உள்ளே ம.தி.மு.கபொது செயலாளர் திரு வைகோ அவர்களுடன் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கட்சி பேதமின்றி திரண்டுள்ளனர். இவர்களோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானும் அவரது துணைவியாரும் பங்கேற்றுள்ளார்..... முற்றத்தின் வெளியே ஆயிரக்கணக்கில் போலிசார் திரண்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தடுத்து வைத்துள்ளனர். பல்வேறு திசைகளில் இருந்து உணர்வாளர்கள் திரள்வதால் பரபரப்பு நிலவுகிறது....... (facebook)
  20. சீமான் அண்ணாவின் மனைவியும் ஈழ ஆதரவு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதுவும் ஈழம் மற்றும் தமிழகம் சம்பந்தப்பட்ட ஒன்று. அவர் மனைவி என்பதற்காக இங்கு வரக்கூடாது என்று சட்டமா என்ன? சும்மா நக்கலடிக்காமல் போட்டு வாங்கோ. நாமும் எதுவும் செய்ய மாட்டோம். மற்றவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருப்போம்.
  21. அதுக்காக தொடர்ந்து அடிமையாக இருக்க முடியாது தானே. அவர்கள் தமது அடிமைத்தனத்தை விட்டு வெளிவர முயற்சி செய்யட்டும். அந்த முயற்சி எமக்கும் ஆதரவாக இருக்கட்டும். முடியாது முடியாது என்று எங்களை மாதிரி சொல்லிக்கொண்டிருக்காமல் சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
  22. கொஞ்ச பேர் சந்தடி சாக்கில் வந்து சீமான் எதிர்ப்பு புராணம் பாடுவதில் நிற்கிறார்கள். பாவம் அவங்களுக்கும் தூக்கம் வரணும் ல..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.